Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கமல்ஹாசனின் கானமழை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசனின் கானமழை

தேடிச் சோறுநிதந் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ? – இனி

என்னைப் புதிய உயிராக்கி – எனக்

கேதுங் கவலையறச் செய்து – மதி

தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

மகாகவி பாரதியின் கவிதை வரிகளை கமல்ஹாசனின் குரலில் கேட்கும்போது மனதில் உற்சாகம் பிறக்கும். என்னுடைய அலைபேசியின் அழையோசையே இந்தக்கவிதைதான். கமல்ஹாசன் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். அவரது திரைப்படங்கள், பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்!

பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்!

எனக்கு பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்தரராஜனைப் பிடிக்கும். இசைஞானி இளையராஜாவும், கலைஞானி கமல்ஹாசனும் பாடிய பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பள்ளியில் படிக்கையில் பாட்டுப்புத்தகம் வாங்கி வைத்து படிப்பது வழக்கம். பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஆளவந்தான் பாட்டு புத்தகம் வைத்து படித்துக் கொண்டிருந்தோம். அதைப்பார்த்த ஆசிரியை பாட்டுப்புத்தகத்தை வாங்கி கிழித்துப்போட்டு விட்டார். மனப்பாடப்பகுதி பாடல்களைவிட ஆளவந்தான் பாடல்கள் எங்களுக்கு மனப்பாடம் என்று அவங்களுக்கு தெரியாது.

கடவுள் பாதி மிருகம் பாதி

கலந்து செய்த கலவை நான்!

வெளியே மிருகம் உள்ளே கடவுள்

விளங்க முடியா கவிதை நான்!

kamalsong.jpg?w=300&h=198

கமல்ஹாசனின் குரலின் மீது எனக்கு தனி ஈர்ப்பு உள்ளது. மனதிற்கு மிகவும் நெருக்கமான காந்தக்குரல். கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எல்லாமே தனித்துவமானவை. கமல்ஹாசன் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த 50 பாடல்களை தொகுத்துள்ளேன்.

  1. நினைவோ ஒரு பறவை – சிகப்பு ரோஜாக்கள்
  2. நரிக்கதை – மூன்றாம் பிறை
  3. விக்ரம், விக்ரம் – விக்ரம்
  4. கண்ணே தொட்டுக்கவா – விக்ரம்
  5. அம்மம்மா வந்ததிங்கு – பேர் சொல்லும் பிள்ளை
  6. தென்பாண்டிச்சீமையிலே – நாயகன்
  7. போட்டா மடியுது – சத்யா
  8. ராஜா கையவச்சா – அபூர்வ சகோதரர்கள்
  9. சுந்தரி நீயும் – மைக்கேல் மதன காமராஜன்
  10. கண்மனி அன்போடு – குணா
  11. போட்டுவைத்த காதல் திட்டம் – சிங்காரவேலன்
  12. சொன்னபடிகேளு – சிங்காரவேலன்
  13. சாந்துப்பொட்டு – தேவர்மகன்
  14. இஞ்சி இடுப்பழகி – தேவர்மகன்
  15. கொக்கரக்கோ – கலைஞன்
  16. தன்மானம் உள்ள நெஞ்சம் – மகாநதி
  17. எங்கேயோ – மகாநதி
  18. பேய்களை நம்பாத – மகாநதி
  19. எதிலேயும் வல்லவன்டா – நம்மவர்
  20. ருக்கு ருக்கு – அவ்வை சண்முகி
  21. காசுமேலே காசுவந்து – காதலா காதலா
  22. மெடோனா மாடலா நீ – காதலா காதலா
  23. ராம்…ராம்… – ஹேராம்
  24. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி – ஹேராம்
  25. ராமரானாலும் பாபரானாலும் – ஹேராம்
  26. கடவுள்பாதி மிருகம்பாதி – ஆளவந்தான்
  27. சிரி…சிரி…சிரி – ஆளவந்தான்
  28. ஆழங்கட்டி மழை – தெனாலி
  29. இஞ்சிருங்கோ – தெனாலி
  30. கந்தசாமி மாடசாமி – பம்மல் கே சம்மந்தம்
  31. ஏண்டி சூடாமணி – பம்மல் கே சம்மந்தம்
  32. வந்தேன் வந்தேன் – பஞ்சதந்திரம்
  33. காதல்பிரியாமல் – பஞ்சதந்திரம்
  34. ஏலே மச்சி மச்சி – அன்பே சிவம்
  35. யார்யார் சிவம் – அன்பே சிவம்
  36. நாட்டுக்கொரு சேதி சொல்ல – அன்பே சிவம்
  37. உன்னவிட இந்த உலகத்தில் – விருமாண்டி
  38. மாடவிளக்க – விருமாண்டி
  39. கொம்புலபூவசுத்தி – விருமாண்டி
  40. அன்னலட்சுமி – விருமாண்டி
  41. பாண்டி மலையாளம் – விருமாண்டி
  42. ஆழ்வார்பேட்டை ஆளுடா – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
  43. கலக்கப்போவது யாரு – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
  44. ஏலேய் நீ எட்டிப்போ – மும்பை எக்ஸ்பிரஸ்
  45. குரங்கு கையில் மாலை – மும்பை எக்ஸ்பிரஸ்
  46. ஓஹோசனம் ஓஹோசனம் – தசாவதாரம்
  47. அல்லா ஜானே – உன்னைப்போல் ஒருவன்
  48. தகிடுதத்தம் – மன்மதன் அம்பு
  49. கண்ணோடு கண்ணை – மன்மதன் அம்பு
  50. நீலவானம் – மன்மதன் அம்பு

kamal.jpg?w=150&h=203

இந்த 50 பாடல்களையும் பார்க்கும் போது ஆச்சர்யமாகயிருக்கிறது. சில பாடல்களை கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் பாடியிருந்தால் இவ்வளவு நன்றாக வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களின் இசையிலும், முண்ணனி பாடகர் – பாடகிகளோடும் இணைந்து பாடல்கள் பாடியிருக்கிறார். கமல்ஹாசன் சிறந்த பாடகர் என்று இசையாளுமைகள் பலரும் சொல்கிறார்கள். கமல்ஹாசன் பாலமுரளி கிருஷ்ணாவிடம் சங்கீதம் பயின்றவர்.

அன்று சொன்னான் பாரதி

சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி

எந்தன் எண்ணம் என்றைக்கும்

தோல்வி என்பதை ஏற்றதில்லையடி!

மகாகவி பாரதியாரின் வசனகவிதை மேல் கமல்ஹாசனுக்கு காதல் அதிகமென நினைக்கிறேன். கமலின் நிறையப் பாடல்களில் வசனநடையைக் காணலாம். வசனநடையில் வந்த பாடல்களை எல்லாம் படிக்கும்போதே மனதில் உற்சாகம் பிறக்கும். கமல்ஹாசனின் பாடல்களுக்கிடையே உரையாடல்களும் அதிகம் வரும். சென்னைவட்டார வழக்கில் ‘ராஜா கையவச்சா, காசுமேலே, ஆழ்வார்பேட்டை ஆளுடா’ போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை!

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!

ஓடிஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை!

anbesivam.jpg?w=85&h=109

அன்பேசிவம் படத்தில் ‘நாட்டுக்கொரு சேதி சொல்ல’ பாடலில் வரும் ‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற வரிகளை அலைபேசியில் எனது குரலில் பதிந்து அழையோசையாக வைத்திருந்தேன். நிறையப்பேர் அது கமல்ஹாசனின் குரல் என்றெண்ணியதாகச் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. கமல்ஹாசன் பிற நடிகர்களுக்காக பாடிய பாடல்களும் சிறப்பானவை. அஜித்திற்காக உல்லாசம் படத்தில் ‘முத்தே முத்தம்மா’, தனுஷின் புதுப்பேட்டை படத்தில் ‘நெருப்புவாயினில்’ பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

துடிக்குது புஜம்! ஜெயிப்பது நிஜம்!

விரைவில் விஸ்வரூபம் படப்பாடல்கள் மதுரையிலிருந்து முதலில் ஒலிக்கப் போகிறது. கமல்ஹாசன் நம்ம வைகைகரையைச் சேர்ந்தவர் எனும்போது பெருமையாய் இருக்கிறது. நவம்பர் 7 அன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசன் பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா!

அபூர்வசகோதரர் கமல்ஹாசன்

நன்றிவிகடன்.காம்

http://maduraivaasagan.wordpress.com/2012/11/07/%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b9%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் முதல் பாடல் "பன்னீர் புஷ்பங்களே.. கானம் பாடு.." இது "அவள் அப்படித்தான்" படத்தில் வந்தது. மிக நல்ல பாடல்.. பட்டியலில் விடுபட்டுள்ளது..!

அந்தரங்கம் படத்தில் வரும் 'ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்' முதல் பாடலும் விடுபட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தரங்கம் படத்தில் வரும் 'ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்' முதல் பாடலும் விடுபட்டுள்ளது.

ஓம் தப்பிலி.. இந்தப் பாடல்தான் முதல் பாடலாக இருக்க வேண்டும்..!

ஞாயிறு ஒளிமழையில் -இதுதான் முதல் பாட்டு என நினைக்கின்றேன் .முதல் கதாநாயகனாக நடித்த படமும் இதுதான் .

முதன் நாள் முதல்காட்சி ராணி தியேட்டரில் பார்த்தேன்.கதாநாயகி தீபா .போஸ்டரில் இருந்ததை பார்த்து படத்திற்கு போனால் அதில் ஒன்றும் இல்லை . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]கமல்ஹாசனை முதலில் பின்னணி பாடவைத்தவர் தேவராஜன் மாஸ்டர்.[/size]

[size=5]'அந்தரங்கம்' படத்தில் இடம்பெறும் 'ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்கவந்தாள்'[/size]

[size=5]என்ற பாடல்தான் கமல்ஹாசனைப் பாடகராக்கியது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கமல்ஹாசனை முதலில் பின்னணி பாடவைத்தவர் தேவராஜன் மாஸ்டர்.[/size]

[size=5]'அந்தரங்கம்' படத்தில் இடம்பெறும் 'ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்கவந்தாள்'[/size]

[size=5]என்ற பாடல்தான் கமல்ஹாசனைப் பாடகராக்கியது.[/size]

பழைய ஆட்கள் சொன்னால் உண்மைதான்

உல்லாசம் படத்தில் வரும் "முத்தே முத்தம்மா" பாடலும், சதிலீலாவதியில் வரும் "மாருகோ, மாருகோ" பாடலும் தொகுப்பில் இல்லை.

ஆனால் தனக்குப் பிடித்த 50 பாடல்கள் என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். இவை கட்டுரை எழுதியவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கமலஹாசனின் பிறந்தநாள்.. நல்ல நடிகன், நன்றாகப் பாடுவார். கடவுள் நம்பிக்கை கிடையாது. திருமணத்தில் நம்பிக்கையற்றவர்!

இதுக்கெல்லாம் மேலாக ஸ்ருதியின் தகப்பன் :icon_mrgreen:

அவரது விஸ்வரூபம் படம் பார்ப்பதற்காக காத்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கமலஹாசனின் பிறந்தநாள்.. நல்ல நடிகன், நன்றாகப் பாடுவார். கடவுள் நம்பிக்கை கிடையாது. திருமணத்தில் நம்பிக்கையற்றவர்!

இதுக்கெல்லாம் மேலாக ஸ்ருதியின் தகப்பன் :icon_mrgreen:

அவரது விஸ்வரூபம் படம் பார்ப்பதற்காக காத்திருக்கின்றேன்.

கிருபனின் விஸ்வரூபம் விமர்சனத்துகாக காத்திருப்பு.

  • 1 month later...

சூப்பர் சிங்கர் 20/20 இற்கு கமலஹாசன் விரைவில் வரவுள்ளார் .ஆவலுடன் பார்த்திருக்கின்றேன் .

கமலின் நாயகன் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்திய படம் அந்த படமும் அதில் வந்த ஒரு பாடலும்தான் .

 

 

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கமலின் நாயகன் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்திய படம் அந்த படமும் அதில் வந்த ஒரு பாடலும்தான் .

 

"நீ சிரித்தால் தீபாவளி" பாடலா?

  • கருத்துக்கள உறவுகள்

கமலகாசன் இத்தனை பாடல்கள் பாடியிருப்பது எனக்குப் புதிய செய்தி. நன்றி கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.