Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிக்கடை கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

welikade-09112-150-seithy.jpg

வெலிக்கடைச் சிறையில் நேற்று மாலை ஏற்பட்ட கலவரத்தில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அறியவரகிறது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, நேற்றிரவு சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருந்த போதும், அதற்குப் பின்னரும் அவ்வப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

நேற்றையதினம் சிறைக்கைதிகள் மேற்கொண்ட உள்ளக கலவரத்துக்கு பாதாள உலகத் தலைவர்களான களு துசார மற்றும் தொட்டலங்க கபில ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். மோதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 27 கைதிகளின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் காயமுற்ற 6 கைதிகளும், ஆறு சிறைச்சாலை அதிகாரிகளும் தற்பொதும் உள்ளுக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சிறைக்குள் இருந்த இரண்டு ஆயுதக்களஞ்சியங்களை உடைத்த கைதிகள் அங்கிருந்த 250 இலகுரக துப்பாக்கிகள் மற்றும் 90 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

எனினும் அவற்றுக்குரிய ரவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அங்கு இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மோதலில் படுகாயமடைந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை தளபதி ரணவானவுக்கு நேற்றிரவு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவரது வயிற்றில் துப்பாக்கி ரவை பாய்ந்திருந்ததால், அதை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். எனினும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோதலின் போது சிறையில் இருந்து தப்பி, முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த கைதிகள் மீது சிறிலங்காப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.co...&language=tamil

  • Replies 60
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் பலியான 27 பேரில் வெளிநாட்டவர்கள் எவரும் பலியாகவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை தமிழ், முஸ்லிம் கைதிகள் எவரும் பலியாகவில்லை எனவும் தெரிவித்தார்.

முன்னதாக இச்சம்பவத்தில் பலியானவர்களில் இரு வெளிநாட்டவர்களும் 3 தமிழ் கைதிகளும் உயிரிழந்ததாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பலியான 27 பேரில் மிகுதி 16 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்த ஒருவர் பலியானதாக கூறப்பட்ட போதிலும் அவருடைய முகச் சாயலை ஒத்த வேறு நபர் ஒருவரே பலியானதாகவும் பின்னர் இனம்காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.[/size]

[size=4]முன்னைய செய்தி[/size][/size]

[size=5]வெலிக்கடைச் சம்பவம்: இரு வெளிநாட்டவர் உட்பட 3 தமிழ் கைதிகள் பலி[/size]

[size=4]வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் பலியான 27 பேரில் இருவர் வெளிநாட்டவராவர். மேலும் 3 தமிழ் கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.[/size]

[size=4]சிங்கபூர் நாட்டைச் சேர்ந்த இந்திய பிரஜை ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மற்றும் ஒரு வெளிநாட்டு பிரஜை உயிரிழந்துள்ளதோடு குறித்த நபரின் பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 43 பேரில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.[/size] [size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=1547[/size]

[size=1]

[size=4]இதுவும் ஒரு படுகொலை சம்பவம் தான். இந்தப்படுகொலைக்கும் கூட சிங்கள அரசே பொறுப்பேற்கவேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சிங்கள அரசுதான் பொறுப்பு கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

V07(5).jpg

[size=2][size=4]கொமாண்டோ படைப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுமார் ஒரு மணித்தியால விசேட இராணுவ நடவடிக்கையின் மூலம் வெலிக்கடை சிறைச்சாலையின் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று சிரேஷ் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கா தெரிவித்தார்.

இந்த இராணுவ முன்னெடுப்பில் ஈடுபட்ட இராணுவ விசேட கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த ஆறு வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேற்படி கலவரத்தைத் தூண்டி அதற்கு தலைமை வகித்ததுடன் படையினருடன் நேருக்கு நேர் மோதிய 11 கைதிகள், இந்த இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர். மேலம் 20பேர் காயங்களுக்கு உள்ளாகினர் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு முழுமையான விளக்கத்தை அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில்,

'வெலிக்கடை சிறைக்கைதிகள் சட்டவிரோதமாக தொலைபேசிகளை உபயோகித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், போதைப்பொருள் விற்பனை மேற்கொள்வதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 500பேர் கொண்ட குழுவினர், சிறைச்சாலைக்குள் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறைக் கைதிகள் அதிரடிப்படையினருக்கு எதிராக செயற்பட முற்பட்டனர்.

சிறைச்சாலைகளுக்குள் சோதனை மேற்கொள்ளப்படுவதென்பது சாதாரண விடயமே. இதற்கமைய நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முதலில், மகசின் சிறைச்சாலையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து நண்பகல் 12 மணியளவில் வெலிக்கடை பிரதான சிறைச்சாலையில் சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், வெலிக்கடை பிரதான சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இந்த சோதனை நடவடிக்கையை விரும்பவில்லை. அதனால், அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு குழுவாக செயற்பட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் படையினரின் சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்டனர். இதனடிப்படையில், சோதனைக்குச் சென்ற அதிரடிப்படையினரை இடையூறு செய்ய ஆரம்பித்தனர்.

இதற்கமைய அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையினை அடுத்து, சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் வந்த கைதிகள், குழு அடிப்படையில் படையினருக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தனர். அத்துடன், சிறைச்சாலைக்குள் இருந்த ஆயுத களஞ்சியசாலையையும் உடைத்து அங்கிருந்த 70இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கொள்ளையிட்டனர்.

இதனையடுத்து அதிரடிப்படையினர் அனைவரும் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினர். இதன்போது சிறைச்சாலைக்குள் எவ்விதமான ஒழுக்க நடவடிக்கையும் பேணப்படவில்லை. கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழ்நிலையும் காணப்படவில்லை.

காரணம், ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து கொள்ளையிடப்பட்ட 70இற்கும் மேற்பட்ட ஆயுதங்களை ஏந்தியவாறு அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் படையினருக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மாலை 6 மணிக்கு பிறகு, பாதுகாப்பு அதிரடிப்படையினர் மீது கைதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளத் தொடங்கினர். இதற்கிடையில், பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சிறைச்சாலைப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில், மாலை 6.30 மணியளவில், சிறைச்சாலைக்குள்ளிருந்து பிரதான வீதியை நோக்கி முச்சக்கரவண்டியொன்று வந்தது. அதில் சிறைக்கைதிகள் பலர் காணப்பட்டனர். அத்துடன் அவ்வண்டிக்கு பின்னால், மேலுமொரு தொகுதி கைதிகள் வந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியை வழிமறிக்க பாதுகாப்பு தரப்பினர் முற்பட்டதை அடுத்து, அதிலிருந்த கைதிகளில் சிலர் பாதுகாப்பு தரப்பினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.

இதனையடுத்து அதிரடிப்படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து கைதிகளில் 11பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 20பேர் காயங்களுக்கு உள்ளாகினர். இச்சம்பவத்தை அடுத்து, சிறைச்சாலைக்குள்ளிருந்த கைதிகள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களுடன் மிகவும் அமைதியற்ற விதத்தில் செயற்பட ஆரம்பித்தனர்.

அதன்போது, அவர்களுக்குள் எந்தவொரு கட்டுப்பாடும் இருக்கவில்லை. சிறைச்சாலையின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு சிறைச்சாலை அதிகாரிகளுக்கே உள்ளது. இருப்பினும், அவர்களால்கூட சிறைச்சாலைக்குள் செல்ல முடியாத நிலைமை அப்போது ஏற்பட்டிருந்தது. இருப்பினும், நாம் இந்த பிரச்சினையை பேசித் தீர்க்க முற்பட்டோம்.

சிறைச்சாலைகள் அமைச்சர் கஜதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். எவ்வாறேனும், கைதிகளை சமாதானப்படுத்தி அவர்கள் வசமுள்ள துப்பாக்கிகளை மீளப் பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாக இருந்தது.

இருப்பினும் நள்ளிரவு 12.30 மணியாகியும் எமது முயற்சி பயனளிக்கவில்லை. இதனையடுத்து இராணுவத்தின் விசேட கொமாண்டோ படைப்பிரிவினர் மற்றும் இராணுவத்தின் உயரதிகாரிகள் இவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

காரணம், இங்கிருந்த எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கும், சிறைச்சாலைக்குள் அப்போதைக்கு எவ்வாறானதொரு சூழ்நிலை காணப்படுகிறது என்பது தெரிந்திருக்கவில்லை. 70இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஏந்தியுள்ள கைதிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று திட்டமிட முடியாமல் இருந்தது.

அதனால், அவர்களை எதிர்க்கொள்ள பயற்சிபெற்ற எதிர்கொள்ளக்கூடியவர்கள் தேவைப்பட்டார்கள். அதனாலேயே கொமாண்டோ படைப்பிரிவினர் இவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதன்போது, சிறைச்சாலைக்குள் இருக்கும் மற்றுமொரு ஆயுத களஞ்சியசாலையை உடைத்து அங்கிருக்கும் ஆயுதங்களையும் கொள்ளையிடும் முயற்சியில் கைதிகளில் ஈடுபட்டு வருவதாக எமக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அத்துடன், தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த பிரதான வாயிலினூடாக தப்பிச் செல்லும் முயற்சியிலும் 200இற்கும் அதிகமான கைதிகள் குழுவொன்று ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது.

அவர்களின் திட்டப்படி அக்குழுவினர் வெளியில் வந்திருந்தால், பாரியதொரு அழிவு ஏற்பட்டிருக்கும். இப்பகுதி இரத்த ஆறாக ஓடியிருக்கும். இதனைத் தடுப்பதற்கு முற்பட்ட இராணுவ கொமாண்டோ படையினர், சிறைச்சாலைக்குள் அதிரடியாக உட்புகுந்து விசேட இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள், சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி சிறைச்சாலையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கொமாண்டோ படைப்பிரிவினர் சிறைச்சாலைக்குள் நுழைந்து தங்களது விசேட இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த போதும், ஆயுதங்களுடன் இருந்த கைதிகள் பின்வாங்கவில்லை.

அவர்களும், இராணுவத்தினரை எதிர்த்து துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டவாறு முன்னேறவே முயற்சித்தனர். இருப்பினும், சிறைச்சாலையின் அனைத்துப் பகுதிகளுக்கும் வியாபித்த கொமாண்டோப் படையினரின் தீவிர நடவடிக்கை நிலைமையை கட்டுப்படுத்தியது.

இதன்போது, கொமாண்டோப் படையைச் சேர்ந்த ஆறு வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், படையினருடன் பரஸ்பர மோதலில் ஈடுபட்ட கைதிகளில் 11பேர் உயிரிழந்தனர். இந்த 11பேருமே இந்த கலவரத்துக்கு தலைமை தாங்கியவர்களாவர். இவர்களே, ஆயுத களஞ்சியசாலை உடைப்பு, படையினர் மீது தாக்குதல் மற்றும் தப்பிச்செல்ல முற்பட்ட குழுவினராவர்.

இந்த 11பேர் கொண்ட குழுவில், மரண தண்டனைக் கைதிகள் மூவர் அடங்குகின்றனர். இவர்களில் படுகொலைகள் பலவற்றுக்கு காரணகர்த்தாக்களான மரணதண்டனைக் கைதிகளான அசுவப்புலிகே ஜோதிபால (கபில), கங்கானம்லாகே மலிந்த நிலேந்திர பெல்பொல (மாலன்) மற்றும் சில்வா ஆகிய மூவருமாவர்.

ஆயுள் தண்டனைக் கைதிகளான மஞ்சு ஸ்ரீ ஹர்ஷ (கோட்டை பௌத்த மதத் தேரரின் படுகொலையுடன் தொடர்புடையவர்), நிர்மல் அத்தபத்து, துஷார சந்திர என்ற களு துஷார (இவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்கோஷ்டி நபர்), திஸ்ஸ குமார (பாலியல் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்), அஸ்வதீன், மலிக் சமீர பெரேரா (கொண்டமில) ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்' என்றார்.

V10(2).jpg[/size][/size]

[size=2][size=4]http://tamil.dailymi.../52444--1-.html[/size][/size]

[size=4]

இதேவேளை தமிழ், முஸ்லிம் கைதிகள் எவரும் பலியாகவில்லை எனவும் தெரிவித்தார்.
[/size]

[size=4]தமிழ், சிங்கள மக்களாக இருந்திருந்தால் 'போட்டுத்தள்ளி' விரைவாக முடிவிற்கு கொண்டுவந்து இருப்பார்கள் :icon_mrgreen:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

V02(45).jpg

[size=2][size=4]வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற கலவரத்தை அடுத்து பாதுகாப்பு தரப்பினர், சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.

V03(31).jpg

V04(15).jpg

V05(7).jpg

V06(8).jpg

V07(6).jpg

V08(4).jpg

V9(2).jpg

V11.jpg

V13.jpg

V15.jpg

V17.jpg

V16.jpg[/size][/size]

[size=2][size=4]http://tamil.dailymi...0-13-01-27.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்: அமைச்சர்

magasin.jpg

இலங்கையில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த மோதல்களின்போது, ஆயுதங்களை ஒப்படைக்கும்படி விடுத்த வேண்டுகோளை 11 கைதிகளே ஏற்று சரணடைந்தனர் என்றும் மற்றவர்கள் சரணடைய மறுத்து தாக்குதலை தொடர்ந்ததாலேயே இராணுவ கமாண்டோ அணி உள்ளே சென்று தாக்குதல் நடத்தியதாக சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் சந்திரசிறி கஜதீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஆயுத மோதல்களில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை பின்னேரம் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தேடுதல் நடத்தச்சென்ற சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையே நடந்த மோதல் பின்னர் ஆயுத மோதலாக மாறியதை அடுத்தே பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

சிறையில் இருந்த ஆயுத அறையை உடைத்து துப்பாக்கிகளை எடுத்த கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் பல மணிநேரம் பரஸ்பரம் துப்பாக்கித் தாக்குதல்கள் நடந்தன.

சிறைச்சாலை வளாகத்தில் நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் இன்னும் தேடுதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிறைக்கைதிகளின் கைகளில் சிக்கிய 82 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 6 துப்பாக்கிகளை காணவில்லை என்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளின் குடும்ப உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்தில் குவிந்துகொண்டிருப்பதாக கொழும்பிலிருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

16 சடலங்கள் மருத்துமனையில்௧1 சடலங்கள் சிறை வளாகத்தில்

மோதல்களில் கொல்லப்பட்ட 16 பேரின் சடலங்கள் நேற்றிரவு கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக பணிப்பாளர் அனில் ஜாசிங்க பிபிசியிடம் கூறினார்.

மேலும் 11 கைதிகளின் சடலங்கள் வெலிக்கடை சிறை வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிபிசியிடம் தெரிவித்தார்.

காயப்பட்ட 43 பேரில் 23 பேர் கைதிகள், 13 பேர் பொலிஸ் கொமாண்டோக்கள், 4 படைச் சிப்பாய்கள் மற்றும் குறைந்தது ஒருவர் சிறைக்காவலர் என்று கூறிய மருத்துவமனை பணிப்பாளர், 5 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகக் கூறினார்.

இன்று காலை வரையில் நீடித்த தேடுதல்களின்போது தப்பியோடிய கைதிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட வேண்டியிருப்பதாக சிறைத்துறை அமைச்சின் மூத்த ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த இதே மாதிரியான ஒரு வன்முறையில் வெலிக்கடை சிறைச்சாலையில் 25 கைதிகளும் 4 சிறைக்காவலர்களும் காயமடைந்தனர்.

2010-ம் ஆண்டிலும் தேடுதல் நடத்தச் சென்ற படையினருடன் நடந்த மோதலில் 50-க்கும் மேற்பட்ட பொலிசாரும் சிறைக்காவலர்களும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

[size=4]இந்த கொலைச்சம்பவம் மேலும் சங்கடங்களை தரவேண்டும் [/size]

[size=4]==================================================[/size]

[size=4]வெலிக்கடை சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. [/size]

[size=4]அந்தவகையில், இலங்கையில் பாதுகாப்பு கவனயீனம் காரணமாகவே வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுத களஞ்சியசாலை, கைதிகளால் உடைக்கப்பட்டு ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று இத்தாலி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள் தொடர்பிலும் மந்தமானதொரு தகவலே வழங்கப்பட்டு வருவதாகவும் அவ்வூடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size]

large4-600x247.jpg

[size=3][size=5]Une mutinerie dans une prison de haute sécurité de Colombo a fait 27 morts et 43 blessés, selon un nouveau bilan, encore provisoire, annoncé samedi par le ministre sri lankais de la Réhabilitation et de la Réforme des prisons Chandrasiri Gajadeera.[/size][/size]

[size=3][size=5]“Seize cadavres sont à l’hôpital et 11 autres ont été découverts aujourd’hui à l’intérieur de la prison” de Welikada, a déclaré le ministre aux membres du Parlement. “J’ai désigné un comité de trois membres pour enquêter sur cet incident”, a-t-il ajouté.[/size][/size]

[size=3]http://fr.euronews.c...-fait-27-morts/[/size]

Edited by akootha

இந்த உடைப்பு பஸ் ரீல் சிறை உடைப்பாக அமையட்டும்.

Edited by மல்லையூரான்

எழுதி குவிக்க ஒரு தமிழனும் சாகவில்லை போலகிடக்கு .திரி சப் என்றாகிவிட்டது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் தமிழ் கைதி பலி!

[sunday, 2012-11-11 21:27:11]

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 10 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பி. டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இக்கலவரத்தின் போது 27 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 45 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், கலவரத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாகவும், அவர் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் இல்லை என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=70001&category=TamilNews&language=tamil

[size=5]அதிகாலை வாக்குமூலம் அளிக்கச் சென்றவர்கள் சுட்டுக் கொலை?[/size]

[size=5]வெலிக்கடை சிறைச்சாலையில் ஆயுத மோதலில் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ள 27 கைதிகளில் சிலர், ஆயுத மோதலில் சம்மந்தப்படவில்லை என்றும் [/size]

[size=5]அவர்கள் அதிகாலை 4 மணிக்குப் பின்னர் வாக்குமூலம் அளிப்பதற்காக கொண்டுசெல்லப்பட்டவர்கள் என்றும் கைதிகளின் உறவினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் விவகார அமைச்சு நிராகரிக்கிறது.[/size]

[size=5]http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121111_prisonmother.shtml[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை சிறையில் நடைபெற்றுவரும் போதை வஸ்த்து மற்றும் செல்போன் பாவனைகளைக் கண்டுபிடிப்பதற்கு அவ்வபோது ஆயுதம் தரிக்காத சிறைக் காவலர்களே பரிசோதனைகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இம்முறை பொலீஸ் மா அதிபருக்குக் கூட அறிவிக்காமல் விசேட அதிரடிப்படைக் குழுவொன்றை கோத்தாவின் நேரடி உத்தரவில் அனுப்பியிருக்கிறார் அதிரடிப்படைத் தளபதி. அதன்படி அதிரடிப்படை தளபதி சில்வெஸ்டர் தலமையில் நூற்றுக்கணக்கான அதிரடிப்படை உறுப்பினர்கள் வெலிக்கடை சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவன்றி வந்த அதிரடிப்படை அதிகாரியை சிறை அதிகாரி தடுக்கவே அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார் சில்வெஸ்டர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கைதி ஒருவர் எதற்காக அவரை அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரை அந்த இடத்திலேயே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு கைதிகளை சோதனை செய்யும் முன்னர் அனைத்துச் சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகளையும் சோதனை செய்திருக்கிறார்கள் எஸ்.டி. எப் பினர். பின்னர், உள்ளே சென்று கைதிகளை தாக்கி சோதனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் அதிரடிப்படையினரைத் தாக்கி அவர்களிடமிருந்த சில ஆயுதங்களைப் பறித்து அவர்களைத் திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆயுதக் களஞ்சியம் உடைக்கப்பட்டதென்று சொல்வதெல்லாம் முற்றான சோடிக்கப்பட்ட கதைகள்தான். அதிரடிப்படையினர் வைத்திருந்த ஆயுதங்களே கைதிகளின் கைக்கு சென்றிருக்கின்றன. இதைக் காரணம் காட்டியே இந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், தப்பியோட எத்தனித்தார்கள் என்று சொல்லப்பட்ட பல கைதிகள் சிறை வளாகத்துக்குள்ளேயே வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். மோதலில் காயப்பட்ட சிறைக்காவல்ர்கள் அதிரடிப்படையினரின் தாக்குதலிலேயே காயப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் கைதிகளால் சுற்றி வளைக்கப்பட்ட பல அதிரடிப்படை உறுப்பினர்களை மீட்கவென இராணுவ அணியொன்று உள்நுழைது கைதிகள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதன்போதே ஏனைய கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாகுதலுக்கும், கலவரத்துக்கும் பொறுப்பான அதிரடிப்படைத் தளபதி சில்வெஸ்டர் நிலமை மோசமாவதை அறிந்து மெதுவாக அவ்விடத்தை விட்டு நழுவியிருக்கிறார்.

ஆக, தனது முழுமையான இராணுவ சர்வாதிகாரத்தில் நாட்டை வைத்திருக்க கோத்தா போட்ட இன்னொரு நாடகமொன்று இப்படி 30 கைதிகள் இறக்கக் காரணமாக இருந்திருக்கிறது.

தமிழர் இந்தமுறை கொஞ்சம் என்ரது மனதுக்கு ஆறுதலாக இருக்கு.

[size=4]சகல சாட்சியங்களும் அழிக்கப்படுள்ளது போல்லுள்ளது. எனவே உண்மைகள் கூட அழிக்கப்பட்டு உள்ளன. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சொறிவந்தால் கை சும்மா இராது. பேரினவாதத்தின் பேராலான பயங்கரவாதம் அவர்கள்மீதே ஒருநாள் திரும்பும்.

சொறிவந்தால் கை சும்மா இராது. பேரினவாதத்தின் பேராலான பயங்கரவாதம் அவர்கள்மீதே ஒருநாள் திரும்பும்.

தொடர்ந்தும் கனவு காண்கின்றீர்கள் .இலங்கை அரசிற்கு உது பொருந்தாது புலிகளுக்குத்தான் பொருந்தும் .பிரான்ஸ் கொலை அதற்கு நல்ல உதாரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் கனவு காண்கின்றீர்கள் .இலங்கை அரசிற்கு உது பொருந்தாது புலிகளுக்குத்தான் பொருந்தும் .பிரான்ஸ் கொலை அதற்கு நல்ல உதாரணம் .

நான் சொல்வது மனநிலை சம்பந்தப்பட்டது.. கனவு அல்ல..

ஒருதரம் கொலை செய்து தப்பித்தவன் மீண்டும் அடுத்த கொலைகளைச் செய்யப் பயப்பட மாட்டான்.. பல தொடர் கொலைகாரர்கள் (Serial Killers) தாம் எப்போது பிடிபடுவோம் என ஏங்குவதற்குக் காரணமும் அதுதான்.. அவர்கள் நினைத்தாலும் மேற்கொண்டு கொலை செய்வதை நிறூத்த முடியாது. இது ஒரு மனநலம் சம்பந்தப்பட்ட நோய்.

சிங்கள இனவெறி இராணுவத்திலும், காவல்துறையிலும்கூட பல கொலைகாரர்கள் இருக்கிறார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் கனவு காண்கின்றீர்கள் .இலங்கை அரசிற்கு உது பொருந்தாது புலிகளுக்குத்தான் பொருந்தும் .பிரான்ஸ் கொலை அதற்கு நல்ல உதாரணம் .

இலங்கை அரசை காப்பாற்ற வேண்டுமென்பதில் அப்படியென்ன அவசரம் ? இங்கே பேசப்பட்ட விடயம் வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் பற்றியது. அதையும் புலிகள்தான் செய்தார்கள் என்று சொல்கிறீர்களா???

உங்கள் புலிக்காய்ச்சலுக்கு ஒரு அளவேயில்லையா??? சிலவேளைகளில் உங்கள் கருத்துக்களைப் படிக்கும்போது மனநோயாளி ஒருவரின் கருத்துக்களைப் படிக்கும் உணர்வுதான் ஏற்படுகிறது.

Edited by ragunathan

[size=4]இதே வெலிக்கடை சிறைச்சாலை 1983 ஆம் ஆண்டு அங்குள்ள தமிழ் கைதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி, கொல்லப்பட்டனர். [/size]

[size=4]அது பற்றிய ஒரு சரித்திர குறிப்புக்கள் அடங்கிய தளம் : [/size][size=5]http://www.blackjuly83.com/[/size]

[size=5]July 27 (Day 4): 17 more prisoners at Welikade Prison were hacked to death just two days after the prison massacre. The surviving 36 prisoners are transferred to other prisons. Rioting continued and the curfew is extended. Witnesses of the violence reported that charred corpses of Tamil victims lined the streets of Colombo, some mutilated with X’s.[/size]

Edited by akootha

pri600.jpg

நான் சொல்வது மனநிலை சம்பந்தப்பட்டது.. கனவு அல்ல..

ஒருதரம் கொலை செய்து தப்பித்தவன் மீண்டும் அடுத்த கொலைகளைச் செய்யப் பயப்பட மாட்டான்.. பல தொடர் கொலைகாரர்கள் (Serial Killers) தாம் எப்போது பிடிபடுவோம் என ஏங்குவதற்குக் காரணமும் அதுதான்.. அவர்கள் நினைத்தாலும் மேற்கொண்டு கொலை செய்வதை நிறூத்த முடியாது. இது ஒரு மனநலம் சம்பந்தப்பட்ட நோய்.

சிங்கள இனவெறி இராணுவத்திலும், காவல்துறையிலும்கூட பல கொலைகாரர்கள் இருக்கிறார்கள்..!

இராணுவம் என்பது அரசிற்கு கட்டுப்பட்ட ஒரு யந்திரம் ,கனேடிய கார்ப்பரின் இன்றைய கொங்கொங் உரை கேட்டேன் .கனேடிய மக்கள் இன்று இவ்வளவு சுதந்திரமாக ஜனநாயமாக வாழ்வதற்கு இராணுவம் கொடுதவிலைதான் கரரணம் என்றார் .இலங்கை இராணுவம் கூட தாம் செய்யும் இந்த அடாவடி அத்துமீரல்களை தாம் நாட்டை காக்கின்றோம் என்றுதான் செய்கின்றார்கள் .அவர்கள் அரசுக்கு எதிராக திரும்புவதென்பது சாத்தியமற்றது .அவர்கள் அரச விசுவாசிகள் .

Edited by arjun

இராணுவம் என்பது அரசிற்கு கட்டுப்பட்ட ஒரு யந்திரம் ,கனேடிய கார்ப்பரின் இன்றைய கொங்கொங் உரை கேட்டேன் .கனேடிய மக்கள் இன்று இவ்வளவு சுதந்திரமாக ஜனநாயமாக வாழ்வதற்கு இராணுவம் கொடுதவிலைதான் கரரணம் என்றார் .இலங்கை இராணுவம் கூட தாம் செய்யும் இந்த அடாவடி அத்துமீரல்களை தாம் நாட்டை காக்கின்றோம் என்றுதான் செய்கின்றார்கள் .அவர்கள் அரசுக்கு எதிராக திரும்புவதென்பது சாத்தியமற்றது .அவர்கள் அரச விசுவாசிகள் .

காபார் சொல்ல வருவது கனேடியன் ராணுவம் கொடுத்த விலையால்த்தான் இலங்கை இராணுவம் தாக்கும் போது அரிசுன் அங்கு ஓடிப்போய் தப்புவித்தார் என்பது.

கனேடியன் பிரதமர் அத்தோடு அரிசுன்னிடம் சொல்லியிருப்பது, இலங்கை அரசு அதன் இரணுவத்தை கட்டுப்படுத்த தவறியமையால் தான் பொதுநலவாய மகாநாட்டுக்கு இலங்கை போகப் போவதிலை என்று.

[size=1]நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது[/size]

Edited by நியானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த கைதிகள் 18 பேரின் சடலங்கள் கையளிப்பு தப்பியோடியவர்கள் குறித்து இன்று அறிக்கை

2012-11-12 11:34:26

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பலியான 18 கைதிகளின் சடலங்கள் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 20கைதிகள் 3அதிரடி படை வீரர்கள் மற்றும் 4 இராணுவ வீரர்கள் வைத்திய சாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

தப்பியோடிய கைதிகள் தொடர்பில் இன்று முழுமையான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதுடன் அவர்களை கைதுச் செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாத் ஜயக்கொடி கூறுகையில்:

கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சோதனையிடச் சென்ற விசேட அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் நிலையை அடுத்து 27 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 18 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை சுமூகமாக காணப்பட்டாலும் இராணுவம் மற்றும் பொலிசார் விசேட பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சில கைதிகள் தப்பியோடியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஆறு கைதிகள் சரணடைந்துள்ளனர். துப்பாக்கிகள் குறித்து கூடிய அவதானமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. களஞ்சிய சாலைகளிலிருந்து கைதிகளால் எடுக்கப்பட்ட துப்பாக்கிகள் பல மீட்கப்பட்ட போதிலும் அது குறித்து முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனக் கூறினார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=1574

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.