Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசித்த வயிறுகளின் கொதிப்றியா ஈனச்சமூகமே பாலியல் தொழிலாயிது?

Featured Replies

சகாறாவே இப்படிக் கேட்பது சரியல்ல.... ஒருவரை இன்ன மாதிரி என்று முத்திரை குத்துவது அவரது ஆற்றல்களை மழுங்கடிக்கவே உதவி செய்யும்.

....குழந்தைத் தனமாக எழுதும் ஒருவர் தொடர்ந்து கருத்தாடல்களில் பங்கு கொண்டு தன்னை புடம் போட்டு நாளை மிகப்பெரும் கருத்தாளர்களாக வருவது யாழிலேயே நிகழ்ந்துள்ளது தானே... துளசியின் அரசியல் மற்றும் கலாச்சாரம் சம்பந்தமான அநேக கருத்துகளில் எனக்கு பெரும் முரண்பாடுகளும் வெறுப்புகளும் இருக்கு...ஆனால் தன்னுடைய கருத்துகளை சொல்வதில் அவருக்கு இருக்கும் சலிப்பின்மையும், தன் கருத்துகளுக்காக சளைக்காமல் போராடும் (அல்லது சண்டை பிடிக்கும் :) ) குணமும் நாளை பெரியளவில் அவரை ஒரு கருத்தாளராக மாற்றுவதற்குரிய வாய்ப்புகளைத்தான் கொண்டு இருக்கு, அத்துடன் அநேகரில் இல்லாத தன் தவறுகளுக்கு மன்னிப்பு கோரும் குணமும் இருக்கு.

முகத்துக்கு முன்னுக்கு ஒருவரை பாராட்டுவது முதுகில் கத்தியைச் செருகுவதற்கு சமமானது என்றாலும், இந்த இடத்தில் இதனை சொல்லாமல் விட முடியவில்லை. அத்துடன் இதனை ஒரு மட்டுவாக சொல்லவில்லை. :icon_idea:

பேய்நிழல் அண்ணா, இது நக்கலா அல்லது உண்மையா எழுதியிருக்கிறீர்களா என்று புரியாவிட்டாலும் :) உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு என் கருத்துகளில் உடன்பாடில்லை என்று எனக்கு தெரியும். :icon_mrgreen: எனவே அவர்கள் விமர்சனங்கள் என்னை பாதிக்காது...:) ஆனாலும் இவ்வளவுக்கு கற்பனை செய்யுமளவுக்கு எதிர்காலத்தில் சிறந்த கருத்தாளராக நான் வர மாட்டேன். :(

"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு" என்ற கூற்றை கிருபன் அண்ணா அடிக்கடி சொல்வார். அதிகளவு புத்தகங்களை படித்த அவரே அப்படி சொல்லும்போது நான் கைமண்ணளவு கூட கற்றிருக்கவில்லை எனும் போது எப்படி சொல்வது? உலக விடயங்கள் பற்றிய அறிவு எனக்கு குறைவு. உலக விடயங்களை பற்றி கூட காலப்போக்கில் அறிந்து கொள்ளலாம். ஆனால் எமது போராட்ட வரலாற்றை அறிவது தான் எனக்கு மிகுந்த சவால். அதற்கு காரணம் நான் சிறுவயதிலிருந்து போராட்டம் பற்றி ஊட்டி வளர்க்கப்படவில்லை. அத்துடன் நானாக அறிய முயற்சித்தாலும் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக எழுதும் புத்தகங்கள், கருத்துகளால் வரும் குழப்பங்கள். எது உண்மை என்று எனக்கு புரியவில்லை. :( எனவே தான் நான் யாழில் சிலரை வழிகாட்டியாக தெரிந்தெடுத்து அவர்கள் கருத்தை வாசித்து உள்வாங்க முயற்சி செய்கிறேன். ஆனாலும் எவ்வளவுக்கு என்னால் உள்வாங்க முடியுமோ தெரியவில்லை. எனவே சிறந்த கருத்தாளராக நான் வருவேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. :(

ஆனால் எவ்வளவு பிழை விட்டிருந்தாலும் என்னை மன்னித்து களத்தில் ஏற்றுக்கொண்ட உங்கள் செயலை மதிக்கிறேன். நன்றி... :)

  • தொடங்கியவர்

இதற்கு நான் என்ன பதிலைச் சொல்லமுடியும் நிழலி?

சகாறா என்றால் எதனையும் சுட்டிக்காட்டக்கூடாதா? முடியலைப்பா

கிகிகிகி.உருண்டு பிரண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறன் :lol: .வரவர யாழில் நிழலியின் கருத்துக்களும் என்ற கருத்தின்ர றேஞ்சுக்கு வீழ்ச்சிஅடையுது.இன்னொரு இடத்தில் பிரச்சினைக்கு கொலைதான் தீர்வு என்று போகும் ஒரு கதைக்கு தனது கருத்து அதுதான் என்று எழுதி இருந்தார்.இலங்கையில் நடந்த அத்தனை கொலைகளையும் ஒற்றைவரியில் நியாயப்படுத்துவதுபோல்.

  • கருத்துக்கள உறவுகள்

கிகிகிகி.உருண்டு பிரண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறன் :lol: .வரவர யாழில் நிழலியின் கருத்துக்களும் என்ற கருத்தின்ர றேஞ்சுக்கு வீழ்ச்சிஅடையுது.இன்னொரு இடத்தில் பிரச்சினைக்கு கொலைதான் தீர்வு என்று போகும் ஒரு கதைக்கு தனது கருத்து அதுதான் என்று எழுதி இருந்தார்.இலங்கையில் நடந்த அத்தனை கொலைகளையும் ஒற்றைவரியில் நியாயப்படுத்துவதுபோல்.

வண்டென்றால் உருண்டு பிரண்டுதான் சிரிக்கும் அழும் :lol::D

கிகிகிகி.உருண்டு பிரண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறன் :lol: .வரவர யாழில் நிழலியின் கருத்துக்களும் என்ற கருத்தின்ர றேஞ்சுக்கு வீழ்ச்சிஅடையுது.இன்னொரு இடத்தில் பிரச்சினைக்கு கொலைதான் தீர்வு என்று போகும் ஒரு கதைக்கு தனது கருத்து அதுதான் என்று எழுதி இருந்தார்.இலங்கையில் நடந்த அத்தனை கொலைகளையும் ஒற்றைவரியில் நியாயப்படுத்துவதுபோல்.

வண்டு,

உங்களை உருண்டு பிரண்டு சிரிக்க வைத்ததுக்கு மகிழ்கின்றேன். அத்துடன் உங்களின் கருத்துகளின் ரேஞ்ச் ஒன்றும் மோசமில்லை.

நான் philosophy பார்த்து எழுதுவதும் இல்லை, வாழ்வதும் இல்லை. நான் அமுதன் இடத்தில் இருந்தால் கண்டிப்பாக அதைத்தான் செய்து இருப்பேன் என்று எழுதாமல், அஹிம்சை, நிதானம் எல்லாம் கடைப்பிடித்து மூளையை உபயோகித்து எல்லாருக்கும் ஒரு உதாரணமாக வாழ்ந்து இருப்பேன் என்று எழுதி இருந்தால் அது பெரும் பொய்யாக இருந்து இருக்கும். அதை பிரச்சனைக்கு தீர்வாக கொலைதான் நிழலி சொல்லி இருக்கின்றார் என்று எடுத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் கண்டிப்பாக நான் அமுதனை விட முந்தி இருப்பேன் என்பது மட்டும் உண்மை.

வாழ்க்கையை அதன் வழியிலேயே எதிர்கொள்வது தான் சுகமானது.

  • தொடங்கியவர்

வண்டு,

உங்களை உருண்டு பிரண்டு சிரிக்க வைத்ததுக்கு மகிழ்கின்றேன். அத்துடன் உங்களின் கருத்துகளின் ரேஞ்ச் ஒன்றும் மோசமில்லை.

நான் உருண்டு பிரண்டு சிரிக்கிறேன் என்று சொன்னது துளசி கருத்தெழுதவேன்டும் அவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கவேண்டும் என்று சரியாக சிந்தித்து எழுதிய நீங்கள் சகாறாவை அப்படி எழுதாதே இப்படி எழுதாதே என்று அதானால் அவர்பாதிக்கப்படுவார் என்று சொல்லி அவருக்கு ஒரு கருத்தை சொல்ல இருக்கும் சுதந்திரத்தை கேல்விகேட்டதைதான் நினைத்துதான்.

அத்துடன் உங்களின் கருத்துகளின் ரேஞ்ச் ஒன்றும் மோசமில்லை.

எனது கருத்து மிகமோசமானது என்பதை நிர்வாகம் எனக்கு கருத்தெழுத கொடுக்கும் சுதந்திரத்தில் இருந்தே தெரிந்து கொண்டேன்.சிலவேளைகளில் இதுதன் எனது கடைசிக் கருத்தோ தெரியலை யாழில்.எல்லாவிதமான முட்டுக்கட்டைகளும் கொடுக்கப்படுவிட்டது.அடுத்தது தடைதான. :)

.நான் philosophy பார்த்து எழுதுவதும் இல்லை, வாழ்வதும் இல்லை. நான் அமுதன் இடத்தில் இருந்தால் கண்டிப்பாக அதைத்தான் செய்து இருப்பேன் என்று எழுதாமல், அஹிம்சை, நிதானம் எல்லாம் கடைப்பிடித்து மூளையை உபயோகித்து எல்லாருக்கும் ஒரு உதாரணமாக வாழ்ந்து இருப்பேன் என்று எழுதி இருந்தால் அது பெரும் பொய்யாக இருந்து இருக்கும். அதை பிரச்சனைக்கு தீர்வாக கொலைதான் நிழலி சொல்லி இருக்கின்றார் என்று எடுத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் கண்டிப்பாக நான் அமுதனை விட முந்தி இருப்பேன் என்பது மட்டும் உண்மை.

வாழ்க்கையை அதன் வழியிலேயே எதிர்கொள்வது தான் சுகமானது.

வாழ்க்கையை அதன்போக்கிலேயே வாழ்வது எமது சந்தோசங்களுக்காவே.அதுவே அடுத்தவன் சந்தோசத்தை கெடுக்கும் இடத்தில் நாம் எம்மை கண்டிப்பாக கட்டுபடுத்தியே ஆகவேவேன்டும்.அதுதான் மனிதன்.மனிதன் ஒரு சமூகமாக வாழ்பவன்.விலங்குகளைப்போல் எல்லையற்று எல்லாவிடயங்களிலும் வாழமுடியாது.அதில் முதன்மையானது கொலை.எம் உயிரை காக்கும் கடைசி நிமிட தற்காப்புக்காக அன்றி எந்த ஒரு காரணத்துக்காவும் இன்னொருவனை கொன்று வாழ்வது என்பது மனம்போழ் வாழ்க்கையை அதன் வழியில் அனுபவிப்பது ஆகாது.

ஒரு சின்ன உதாரணம் யாழிலேயே.

எனக்கு என் மனம்போல எழுத முடியாமல் எத்தனை தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் யாழ்போட்டிருக்கிறது.எதற்காக??மன்ம்போல் எழுதவே முடியாது எனும்போது அதற்கு கூட கட்டுப்பாடுகள் இருக்கும்போது..வாழ்க்கையை அதன் வழியில் வாழும்போதும் நாம் கொலை போன்ர சமூகவிரோத செயல்களை கன்டிப்பாக ஆதரிக்க முடியா.

  • தொடங்கியவர்

முள்வேலிக் கம்பிக்குள்ளேயே மாண்டு புதையுண்டு போனவர்கள் பலர்; வெளியே மீண்டு வந்து ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருப்போர் இன்னும் பலர். அவர்களில் துணிவுள்ளோர் சொல்லும் கதைகள் கல் மனதையும் கரைக்கும்.

விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இம்முன்னாள் பெண்போராளிகள் தொடர்ந்து சிங்களப் படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளனர். உசாவல் என்ற பெயரில் படை முகாம்களுக்கு அவர்கள் அடிக்கடி வரவழைக்கப்படுவர்; வண்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவர். வர மறுக்கும் பெண்களின் குடும்பங்கள் கொலையச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

கடைநிலை வீரன் முதல் தலைமைப் படையதிகாரி முடிய எல்லாருடைய காமப்பசிக்கும் இப்பெண்கள் இரையாகின்றனர். ஒரு முகாமுக்கு வரவழைக்கப்படும் இவர்கள் தேவைப்படும் பிற முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவர். இளம் சிங்கள வீரர்களின் காம இச்சையைத் தூண்ட ஆபாசப் பாலியல் படங்கள் மேலிருந்து அனுப்பப்படுவதாகவும் தமிழ்நெற் செய்தி தருகிறது. எனவே இது தமிழினத்தைக் கருவறுக்கத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிச்செயல் என்பது தெளிவாகிறது.

இக்கொடுமையிலிருந்து தப்பிக்க ஒன்று நாட்டை விட்டு ஓடிவிட வேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும். சில பெற்றோர்கள் தம் பெண்களைக் காப்பாற்ற காதலர்களோடு அவர்கள் ஓடிவிட்டதாகவும் கதைப்பதுண்டு. யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தற்கொலைக்கு முயற்சி செய்த முன்னாள் போராளிகள் பலருக்குத் தாம் மருத்துவம் பார்த்ததாக மருத்துவர் ஒருவர் தெரிவிக்கிறார். முகாம்களிலிருந்து திரும்பிய சிலர் பிளேடுகளை விழுங்கியும் சிலர் தீக்குளித்தும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். வறுமையின் காரணமாக இத்தகைய முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் கதைகட்டும் சிங்கள அரசின் கூற்றுகளை மருத்துவர்கள் மறுக்கின்றனர்.

அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சுபோதினி சிவலிங்கம் பதினைந்து ஆண்டுகள் விடுதலைப் போருக்காய்த் தம்மை ஈந்து கொண்டவர். 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற சண்டை ஒன்றில் ஊனமாகிப் போனவர். வன்னிப் போரின்போது புலிகளின் மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர். அவருடைய சாவுக்கும் வறுமையே காரணமாக்கப்படுகிறது. ஆனால் அவர் தொடர்ந்து உசாவலின் பேரில் முகாமுக்கு அடிக்கடி அழைக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டவர் என்பதை விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மூடி மறைக்கிறது சிங்களம். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டோரின் உண்மை எண்ணிக்கை யாருக்கும் தெரியாது.சிறை பிடிக்கப்பட்டோர் முகாம்களில் அடைக்கப்பட்டோர் எந்தக் கணக்கும் கிடையாது.2000 முதல் 3000 வரையிலான சிறை பிடிக்கப்பட்ட பெண் போராளிகளில் எவருக்கு என்ன நேர்ந்தது என்பது எவருக்கும் தெரியாது. 600 பேர்கள் மட்டுமே முகாம்களில் உள்ளதாகக் கொழும்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்யப்பட்டோர் எத்தனை பேர்? யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது? எதற்கும் எந்தப் பதிவேடும் கிடையாது. மண்ணில் மிதிபடும் இந்த மனித உரிமைகளைக் கேள்வி கேட்க உலகில் எந்த நாடும் இல்லையே!

நெஞ்சங் குமுறுகிறார் கற்பு

நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே யந்தப்

பஞ்சை மகளிரெல்லாம் துன்பப்

பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு

தஞ்சமு மில்லாதே அவர்

சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்

மிஞ்ச விடலாமோ........

பாரதியின் நெஞ்சக் குமுறலை பெண்போராளி ஒருவர் இப்படி வெளிப்படுத்துகிறார். “மீண்டும் நான் சண்டை போடத் துடிக்கிறேன். துவக்கு ஒன்று என் கையில் கிடைக்குமென்றால் எத்தனைச் சிங்களக் காமுகரைக் கொல்ல முடியுமோ அவ்வளவு பேர்களைக் கொன்றுவிட்டு மாய்வேன்.”

வண்டு அண்ணா இணைத்த இணைப்பில் கூறப்படுவது இராணுவத்தினர் போராளி பெண்களை கட்டாய படுத்தி வரவழைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவது. இதற்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காமல் அவர்களை நாம் காப்பாற்ற முடியாது... :rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தை கொண்டாட வேண்டாம் என்று கவிதை சொல்லவில்லை .மாவீரர் தினம் மட்டும் கொண்டாடினால் மட்டும் காணும் என்று இருக்கவேண்டாம் என்றுதான் தான் சொல்லுது .

கவிதையின் சாராம்சம் என்னவென்றால், போராளிப் பெண்கள் பசியினால் தங்களை விற்கப்போனால் அவர்களைத் திட்டிவிட்டு மாவீரருக்கு பூ வைக்கப் போவீர்களா என்பதுதான்..

முதலில் போராளிகள் தங்களை விற்றார்கள் / விற்கவில்லை என்பதே சரியாகத் தெரியாது. விகடனில் வந்த பேட்டியில்தான் சிலருக்குச் சந்தேகம். அதற்கும் மாவீரர் நினைவேந்தலுக்கும் முடிச்சுப் போடுவது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சுபோதினி சிவலிங்கம் பதினைந்து ஆண்டுகள் விடுதலைப் போருக்காய்த் தம்மை ஈந்து கொண்டவர். 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற சண்டை ஒன்றில் ஊனமாகிப் போனவர். வன்னிப் போரின்போது புலிகளின் மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர். அவருடைய சாவுக்கும் வறுமையே காரணமாக்கப்படுகிறது. ஆனால் அவர் தொடர்ந்து உசாவலின் பேரில் முகாமுக்கு அடிக்கடி அழைக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டவர் என்பதை விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வண்டுமுருகன்,

இந்த சுபோதினி பற்றி தமிழ்நெற் எழுதியது கட்டுக்கதை. ஆனால் இவள் இறந்த பின் இதனை பரப்பியுரைக்க தமிழ்நெற் பயன்படுத்தியதாக தமிழ்நெற்றின் தீவிரபக்தர் ஒருவர் என்னுடன் நியாயம் பேசினார். பாலியல் கொடுமைகள் நடக்கவில்லையென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். சுபோதினியின் தற்கொலையில் இராணுவத்தை தொடர்புபடுத்தி அவளது போராட்டகால அர்ப்பணிப்பை தமிழ்நெற் அவமானம் செய்துள்ளது.

தமிழ்நெற் போன்ற குருக்களை கேள்வி கேட்க முடியாது வண்டு. சுபோதினி இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்தவள். அவளது கால்கள் போலியோ வந்து பிள்ளைகளின் கால்கள் போன்று சூம்பி தூக்கி இருத்தினால் தான் கதிரைக்குள் இருக்க முடியும். தானாக எழுந்து இருக்கமாட்டாள்.

கைகால்கள் இழந்தவர்களை விடவும் சுபோதினி போன்ற முள்ளந்தண்டுவடம் பாதித்தவர்கள் நிலமை மிகவும் துயரமானது. இவள் போன்ற பெண்களை இயக்கம் இருந்த போது திருமணம் செய்த போராளிகளே யுத்த முடிவின் பின் கைவிட்டுள்ள சோகக்கதைகள் நிறையவே இருக்கிறது.

அவளுக்கான தேவைகள் பெரிது. அதாவது முள்ளந்தண்டு வடம் பாதித்து படுக்கையில் இருந்த ஒரு போராளி. முள்ளந்தண்டுவடம் பாதிப்பும் அவர்களது உடல் உள ரீதியான தாக்கங்கள் மருத்துவம் என்பது பெரியதேவை. இவர்கள் படுக்கைப்புண்ணால் பாதிப்பது அதிகம்.

சுபோதினி நீண்டகாலம் பம்பைமடு ஆயுள்வேத வைத்தியசாலையில் இருந்தவள். இவளையும் இவள்போன்ற 80பேர் வரையான போராளிகளை நெதர்லாந்த நிறுவனம் பராமரித்து வந்தது. படிப்படியாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் வரிசையில் சுபோதினியும் வீடு சென்றாள். இவளை வைத்து பராமரிக்கும் அவளவு அவளது வீடு பெரியபணக்காரவீடு இல்லை. சுபோதினிக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கிய ஒரு போராளிநண்பன் அவள் ஊரில் இன்னும் சாகாமல் உயிரோடு இருக்கிறான்.

அருளினியின் என்ற பத்திரிகையாளன் எழுதிய கட்டுரைக்கு போர்க்கொடி தூக்கிய எங்களால் தமிழ்நெற் போன்ற எங்களது தேசியவியாபாரிகளைக் கேள்வி கேட்க முடியாதது துர்அதிர்ஸ்டமே. (அருளினியனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களில் நானும் ஒருத்திதான் வண்டு)

ஊனமுற்றவருக்கும் காதல் வரும் தோல்வி வரும் அதன் வலியிருக்கும். வறுமையிருக்கும் தற்கொலை செய்ய வைக்கும்.

கட்டுக்கதைகளால் அரசியல் இலக்கையடைய முடியுமென்ற நம்பிக்கை இப்போது எமது தேசிய ஊடகங்களிடம் ஊன்றியுள்ள ஆயுதம். இந்த வழி இதுவரை இலட்சியத்துக்காக மடிந்த பிள்ளைகளின் தியாயகங்களையே தீமூட்டிச் சிதைக்கிறது என்பதனை யாரும் புரிந்து கொள்ளாமலிருப்பது வேதனை தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாச்சும் கட்டுரைகளை,செய்திகளை எழுதிப் போட்டு வெற்றிடத்தை நிரப்ப நினைக்கும் பேனாக்கள் இப்படி எத்தனையோ விதமான புனைவுகளை எழுதக் கூடும்,எழுதலாம்..ஆனால் அதில் எத்தனை வீதம் உண்மை,பொய் கலந்திருக்கிறது என்பதை நாம் தான் கண்டறிந்து கொள்ளவேணும்....

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.