Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

hari2vi.jpg
  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply

hari2vi.jpg

ஓய் மன்னா நீரும் ஆள் வலுகெட்டிக்காறன் போல இருக்கு புட்பால் இல....அதுசரி ஓய் உம்மடநாட்டு மக்கள் விளையாடுறேல்லையோ ???

:? :? :? :? :? :? :roll: :roll: :roll:

யாழ்கள உறுப்பினர்களின் உதைப்பந்தாட்டப்போட்டியில் காலிருதியில் போட்டியிடும் 8 நாடுகளில் அதிகப்படியாக 4போட்டியாளர்கள் 7 நாட்டினைச் சரியாகச் சொன்னார்கள். கரி,லக்கிலுக்கு,மணிவாசகன்,சு

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ஷ்டம் இல்லாத அவுஸ்திரேலியா அதிர்ஷ்டத்தால் வென்ற இத்தாலி

கடைசிக் கட்டத்தில் பெனால்டி வாய்ப்பில் பிரான்சஸ்கோ டோட்டி அற்புத கோல் அடிக்க, `10 பேருடன் இத்தாலி அணி காலிறுதிக்குள் நுழைந்தது. அதிர்ஷ்டம் இல்லாத அவுஸ்திரேலியா பரிதாபமாக வெளியேறியது.

நேற்று முன்தினம் கைசர்ஸ்லாட்டர்னில் நடந்த நொக்-அவுட் முறையிலான இரண்டாம் சுற்றுப் போட்டியில் மூன்று முறை சாம்பியனான இத்தாலி, அவுஸ்திரேலிய அணிகள் மோதின. தொடக்கத்தில், அனுபவம் இல்லாத அவுஸ்திரேலியா மிரட்டியது. ஆனாலும், போகப் போக இத்தாலியின் அதிரடி ஆரம்பமானது.

ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் லூகா டோனிக்கு அருமையான வாய்ப்பு. இவர் தலையால் பந்தை முட்ட, அதை அவுஸ்திரேலிய கோல்கீப்பர் மார்க் ஸ்கவார்சர் துடிப்பாக தடுக்க வாய்ப்பு நழுவியது.

அடுத்து, அவுஸ்திரேலிய தாக்குதல். 30 ஆவது நிமிடத்தில் இந்த அணியின் ஸ்காட் சிப்பர்பீல்ட் 10 மீற்றர் தூரத்தில் இருந்து அடிக்கிறார். காத்திருந்த இத்தாலி கோல்கீப்பர் கியான்லியுகி பபான் சிறப்பாகத் தடுத்து சபாஷ் பெற்றார்.

முதல் பாதியில் இரு அணிகளும் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தின. நட்சத்திர இத்தாலி ஜொலிக்காதது தான் ஏமாற்றம் தந்தது. முதல் பாதி முடிவில் கோல் எதுவும் அடிக்கப்பட வில்லை.

இரண்டாவது பாதி தொடங்கியதும் இத்தாலிக்கு `அடி' 51 ஆவது நிமிடத்தில் இந்த அணியின் நட்சத்திர வீரரான மார்க்கோ மாட்டராசி, அவுஸ்திரேலியாவின் மார்க்கோ பிரசியானோவை முரட்டுத்தனமாக தடுக்க, உடனடியாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, 10 பேருடன் விளையாட வேண்டிய இக்கட்டான நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டது. 10 பேராக குறைந்து போனதால், இத்தாலி தற்காப்பைத் தகர்த்து 58 ஆவது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் முன்னேறினார். அவுஸ்திரேலியாவின் ஸ்காட் சிப்பர்பீல்ட்.

இவர் அடித்த பந்தை, நல்லவேளை இத்தாலி கோல்கீப்பர் கியான்கியுகி பபான் தடுத்து விட்டார். பின்னர் 65 ஆவது நிமிடத்தில் இத்தாலிக்கு கிடைத்த `பிரீ-கிக்' வாய்பை ஆன்ரியா பிர்லோ வீணாக்கினார். இப்படி இரு அணிகளும் பந்தை பாஸ் செய்வதும், பெனால்டி ஏரியாவை நெருங்குவதுமாக இருந்தன. `பினிஷிங்'திறன் இல்லாததால் கோல் தான் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் இத்தாலியின் நட்சத்திர வீரரான பிரான்சஸ்கோ டோட்டி, டெல்பியரோவுக்குப் பதிலாக களமிறக்கப்பட்டார். மேலதிக நேரத்தில் இத்தாலியின் பாபியோ கிராசோ பந்தை எடுத்துக் கொண்டு பெனால்டி ஏரியாவுக்குள் அதிவேகமாக சென்றார்.

அப்போது அவரை அவுஸ்திரேலியாவின் லூகாஸ் நீல் மடக்க, நடுவர் இத்தாலிக்கு `சர்ச்சைக்குரிய' பெனால்டி வாய்ப்பளித்தார்.

இப்போது பந்தை அடிக்க வருகிறார் பிரான்சஸ்கோ டோட்டி. எதிரில் அவுஸ்திரேலிய கோல்கீப்பர் மார்க்ஸ்கவாசகர் மட்டும் நிற்கிறார். டோட்டி துல்லியமாக அடிக்க, பந்து வலைக்குள் செல்ல.. இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

அதிர வைக்கும் ஆட்டங்கள்'

போர்த்துக்கல், ஹொலன்ட் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் போடப்பட்டதென்னவோ ஒரு கோல்தான். ஆனால், 16 மஞ்சள் அட்டைகளும் 4 சிவப்பு அட்டைகளும் காட்டப்பட்டன.

ஹொலன்ட் வீரர்களுக்கு 7 மஞ்சள் அட்டைகளும், 2 சிவப்பு அட்டைகளும் காட்டப்பட்டன. போர்த்துக்கல் வீரர்களுக்கு 9 மஞ்சள் அட்டைகளும் 2 சிவப்பு அட்டைகளும் காட்டப்பட்டன. போர்த்துக்கல் அணியின் மணிச்சே ஒரே ஒரு கோல் போட்டார். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் போர்த்துக்கல் ஆடவிருக்கிறது.

போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றபோதும் அணியின் பயிற்சியாளர் லூயி பெலிப் ஸ்கொலாரி கோபத்தில் அங்கும் இங்கும் குதித்துக் கொண்டிருந்தார். டீகோ, காஸ்டினா இருவருக்கும் சிவப்பு அட்டைகளை ரஷ்ய நடுவர் வாலன்டின் இவனோவ் காட்டியிருக்கிறார்.

எனவே, அவ்விருவரும் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் ஆட முடியாது. நல்ல வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்தை எதிர்கொண்டு என்ன பயன் என்ற கோபம் ஸ்கொலாரிக்கு.

ஜேர்மனியில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இதுவரை இருந்திராத வகையில், ஆட்டக்காரர்கள் நேருக்கு நேர் "மோதிக் கொண்ட" ஆட்டம் என்றால் அது இதுதான் என்ற முடிவுக்கு ரசிகர்களே வருவார்கள்.

ஆனால், நடுவர் வாலன்டின் அட்டைகளை சற்றுத் தாராளமாகவே காட்டிவிட்டார் என்பதுதான் ஸ்கொலாரியின் கோபம். ஓரளவுக்கு அது நியாயமும் கூட. கால்பந்து என்றாலே இப்படி எதிராளியைத் தள்ளுவது, காலை இடற வைப்பது, ஓட முடியாமல் பிடித்து இழுப்பது, மேலே போய் விழுவது எல்லாம் சகஜம்.

ஹொலன்ட் அணியில் கியோவனி வான் பிராங்கார்ஸ்ட், காலித் பௌலாரூஷ் ஆகியோருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

48 ஆட்டங்களில் 18 சிவப்பு அட்டைகள்

இந்த உலகக் கிண்ண போட்டிகளில் இதுவரை மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 18 ஆட்டக்காரர்களுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டிருக்கிறது. 2002 இல் நடந்த போட்டிகளின்போது காட்டப்பட்டதைவிட ஒன்று அதிகம்.

இதுவரை நடந்த மோதல்களிலேயே மோசமானது இத்தாலியின் நடுக்கள வீரர் டேனியல் டி ரோசி, அமெரிக்காவின் பிரையன் மெக்பிரைடை முகத்தில் இடித்ததுதான். அதற்காக அவருக்கு 4 ஆட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பப்லோ மஸ்திரோனி, எட்டி போப் ஆகிய இத்தாலி வீரர்களுக்கும் சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

-தினக்குரல்

யாழ்கள உறுப்பினர்களின் உதைப்பந்தாட்டப்போட்டியில் காலிருதியில் போட்டியிடும் 8 நாடுகளில் அதிகப்படியாக 4போட்டியாளர்கள் 7 நாட்டினைச் சரியாகச் சொன்னார்கள். கரி,லக்கிலுக்கு,மணிவாசகன்,சு

அது தான் கடும் வெயில் ஒரு காரணம், டேவிட் பெக்கம்

இக்குவடோர் டன் விளையாடும் போது சத்தி கூட எடுதார்

அப்படி வெயில் பார்க்கலாம்.

2004 போத்துகளிடம் தான் இங்கிலாந்த் தோல்வி அடைந்தது

பார்போம்

வினித் அண்ணா நானும் இங்கிலாந்துக்கு சப்போட்தான்

ஆனால் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் இங்கிலாந்து அதிஸ்டத்தால மட்டுமே வென்றது

பெக்கம் Free Kick Goal போடுறதில உரு காலத்தில பேமஸாக இருந்தார்தான் ஆனால் கடந்த 3வருடங்களில் அவர் எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை

இப்ப இங்கிலாந் அணி நம்பியுள்ளது Rooney, Gerrard, Crouch and Joe Cole இவர்களைதான் பெக்கமை அல்ல

போர்த்துகல் 9 பேரோட விளையாடுற பவடியால அடுத்த மட்சில இங்கிலாந்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறன்

அந்த அணியில அவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் டம்மிதானே அதான் :oops: :oops: :oops:

அந்த அணியில அவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் டம்மிதானே அதான் :oops: :oops: :oops:

ஆம நீங்கள் சொல்லுவது சரி தான் டேக்கோ அண்ட் கிறிஸீயன் றொனல்டோ விளையாடின கஸ்டம் தான் ஆனால் டேக்கோ விளையாட முடியாது ....

எனக்கு லம்பாட் ஜேறாட், ஜே.கொல் ஆகியோர் மீது நம்பிக்கை இருக்கு( அப்ப அப்போ நம்ம டேவிட் பெக்கமும் தான்) :P

எனக்கும் Lambard மீதும் நம்பிக்கை இருக்கு

என்ன எல்லாரும் சொதப்பாமல் ஒழுங்கா விளையாடினா சரி :P

Michael Owen இல்லாதது ஜேர்மனி பிரேசிலுடன் விளையாடேக்க தெரியும் :lol::lol:

Lampard சிக்ஸர் அடிக்காமை பவுண்டரி அடிச்சா (?) கட்டாயம் கோல் அடிப்பார்.

போர்த்துக்கல்லை குறைச்சு மதிப்பிட வேண்டாம். அவையளின்ரை பின்வரிசை நல்ல பலமானது.

  • கருத்துக்கள உறவுகள்

Lampard சிக்ஸர் அடிக்காமை பவுண்டரி அடிச்சா (?) கட்டாயம் கோல் அடிப்பார்.

போர்த்துக்கல்லை குறைச்சு மதிப்பிட வேண்டாம். அவையளின்ரை பின்வரிசை நல்ல பலமானது.

இது துடுப்பாட்டமல்ல, உதைப்பந்தாட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அணி முதல் சுற்றில் சாதாரண அணி போலத்தான் விளையாடியது.ஆனால் 2வது சுற்றில் விளையாடும் போது பலம் பொருந்திய அணி போல சிறப்பாக விளையாடியது.

இது துடுப்பாட்டமல்ல, உதைப்பந்தாட்டம்

என்ன அப்பு கோவிக்கிறியள்.

நான் சொன்னது பந்தை கோல் கம்பத்துக்கு மேலை அடிக்காமை பதிச்சு அடிச்சால் வெல்லலாம் எண்டு :)

எப்படி அடிச்சாலும் சரி கோல் போட்டாச் சரி அப்படித்தானே மணி அண்ணா :wink: :P

ஆனால் பிரேசில பாருங்க எப்பவும் கோல் போடுறதில தான் குறியாக இருப்பினம் அவர்களது டிபன்ஸ் சரியான வீக் எதிரணி பலமானதாக இருந்தா அவர்களால பிரேசிலின் டிபன்ஸை சுலபமாக உடைச்சு கோல் போடலாம் :wink:

பார்ப்பம் அடுத்த மட்சில என்ன செய்யினம் எண்டு எல்லா அணியும் கானா மாதிரியா இருக்கும் பிரேசில் மேல பலருக்கு இருக்கிற மயக்கம் அடுத்த மடசில தெளிஞ்சிடும் (எனக்கு பிரேசில பிடிக்காது :wink: ) :P

எப்படி அடிச்சாலும் சரி கோல் போட்டாச் சரி அப்படித்தானே மணி அண்ணா :wink: :P

ஆனால் பிரேசில பாருங்க எப்பவும் கோல் போடுறதில தான் குறியாக இருப்பினம் அவர்களது டிபன்ஸ் சரியான வீக் எதிரணி பலமானதாக இருந்தா அவர்களால பிரேசிலின் டிபன்ஸை சுலபமாக உடைச்சு கோல் போடலாம் :wink:

பார்ப்பம் அடுத்த மட்சில என்ன செய்யினம் எண்டு எல்லா அணியும் கானா மாதிரியா இருக்கும் பிரேசில் மேல பலருக்கு இருக்கிற மயக்கம் அடுத்த மடசில தெளிஞ்சிடும் (எனக்கு பிரேசில பிடிக்காது :wink: ) :P

நானும் அதைத் தான் நினைச்சனான். பிறெசிலின்ரை முன்வரிசையைப் போலை பின்வரிசை இல்லை. சனிக்கிழமை பிறேசில் பிரான்ஸ் ஆட்டம் கடும் போட்டியா இருக்கும்.

Lampard பற்றி நான் சொன்னது அவர் long range shorts லை கெட்டிக்காரர் எண்டாலும் இந்த முறை எல்லாத்தையும் மேலாலை எல்லே அடிக்கிறார். பொறுத்திருந்து பாப்பம்

நானும் அதைத் தான் நினைச்சனான். பிறெசிலின்ரை முன்வரிசையைப் போலை பின்வரிசை இல்லை. நாளைக்கு ஜெர்மன் பிறெசில் ஆட்டம் கடும் போட்டியா இருக்கும்.

Lampardஐப் பற்றி நான் சொன்னது அவர் Long range shots இலை கெட்டிக்காரர் எண்டாலும் இந்த முறை எல்லாத்தையும் மேலாலை vல்லே அடிக்கிறார். பொறுத்திருந்து பாப்பம் சனிக்கிழமை

நானும் அதைத் தான் நினைச்சனான். பிறெசிலின்ரை முன்வரிசையைப் போலை பின்வரிசை இல்லை. நாளைக்கு ஜெர்மன் பிறெசில் ஆட்டம் கடும் போட்டியா இருக்கும்.

நாளைக்கு ஜேர்மனி -ஆஜென்டினா

பிரித்தானியா - போர்த்துக்கல்

நாளைக்கு ஜேர்மனி -ஆஜென்டினா

பிரித்தானியா

அப்ப எனித்தான் கால்பந்தாட்டம் பார்க்கலாம் என்றீங்கள். :wink: :P

வசி...பிரித்தானியா விளையாட்டில் ஒற்றுமையாக இல்லையே...இங்கிலாந்து ஸ்கொட்லாந்து அயர்லாந்து என்று பிரிஞ்செல்லோ..உண்மைத் தோற்றத்தோட இருக்கு...! :wink: :lol:

நாளைக்கு ஜேர்மனி -ஆஜென்டினா

பிரித்தானியா - போர்த்துக்கல்

தவறுக்கு மன்னிக்கவும்.

இங்கிலாந்து போர்த்துக்கல் ஆட்டம் நாளையா :lol:

தவறுக்கு மன்னிக்கவும்.

இங்கிலாந்து போர்த்துக்கல் ஆட்டம் நாளையா

ஹ்

இல்லை சனி போல :roll: :roll:

ஹ்

இல்லை சனி போல :roll: :roll:

சரி போனாப் போகுது எண்டு விட்டுக் கிடக்குது. இனிமேல் இப்பிடிச் செய்தால் மூதேசிட்டைச் ( எங்கடை களத்திலை இருக்கிறவர்)சொல்லிக்குடுப்ப

சரி போனாப் போகுது எண்டு விட்டுக் கிடக்குது. இனிமேல் இப்பிடிச் செய்தால் மூதேசிட்டைச் ( எங்கடை களத்திலை இருக்கிறவர்)சொல்லிக்குடுப்ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வசி, இங்கிலாந்தில் இருந்துகொண்டே இங்கிலாந்து எப்போ விளையாடுகிறது என்று தெரியாமல் இருக்கிறதா? எந்தச் சிறிய தமிழ்ப் பிள்ளையளைக் கேட்டால்கூட தெரிந்துகொள்ளலாம்.

நாளை: ஜேர்மன் - ஆஜென்ரீனா

இத்தாலி - உக்கிறேன்

அதுபோல சனிக்கிழமை:

இங்கிலாந்து - போத்துக்கல்

பிரான்ஸ் - பிரேசில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.