Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவிற்கு குடிவருவது எப்படி? நீங்களே உங்கள் தகுதியைத் தீர்மாணிக்கலாம். விபரங்கள் இதோ!

Featured Replies

[size=3]

கனடாவிற்கு குடிவருவது எப்படி என்ற கேள்வி பலரிடமும் இப்போது தக்கி நிற்கிறது. இந்த ஆண்டு முதல் கனடாவிற்குள் அனுமதிக்குப்படும் புதியவர்களின் விவகாரத்தில் பல மாற்றங்களை கனடா ஏற்படுத்தியுள்ளது.[/size][size=3]

2013ம் ஆண்டு கனடாவிற்குள் 260,000 பேரை கனடாவிற்குள் அனுமதிக்க கனடிய குரவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதில் தொழில்சார்ந்த பயிற்சியுடைய, கல்வித்தகுதி மற்றும் வியாபார முதலீட்டாளர்கள் என்ற வகையாறவிற்குள் அடங்கங்கூடிய 158,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். இது முழுத்தொகையின் 62 வீதமாகும்.[/size][size=3]

இவ்வாறு வருகை தருபவர்கள் ஐந்து வகையாறாவுக்குள் அடங்குவர். இந்த ஐந்து வகையாறாக்களும், இதற்கான படிமுறைகளும் கனடிய குடிவரவுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது [http://www.cic.gc.ca/english/immigrate/index.asp ].[/size][size=3]

இவர்களிற்காக முக்கியமான தகுதியாக கனடாவின் தேசிய மொழிகளான ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி இரண்டில் ஒன்றைக் கையாளும் திறமை ஓரளவு உள்ளவர்களாகவும் இருப்பது அவசியம். இவர்கள் உத்தியோகபூர்வ விண்ணப்பங்களை நேரடியாக கனடாவின் தூதரகங்களிற்குச் சமர்ப்பித்து முயற்சிக்க வேண்டும்.[/size][size=3]

கனடிய அரசின் இந்த இணையத்தளம் தங்களது சேவைகள், நிரப்பப்பட வேண்டிய விண்ணங்கள் உள்ளிட்ட சகல விபரங்களையும் தனது இணையத்தளத்தில் மிகவும் தெளிவாக வைத்திருக்கிறது. இதனை நீங்கள் நேரடியாகவே சென்று பார்வையிடலாம்.[/size][size=3]

CIC1-600x486.jpg[/size][size=3]

2012ல் கனடாவிற்குள் அனுமதிக்கப்படுவோரில் இரண்டாவது கட்டமாக கனடாவில் தற்போது வதிபவர்களின் குடும்ப வகுப்பில் தெரிவு செய்யப்படும் வாழ்க்கைத் துணைகள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை அனுமதிக்கும் வகையாறா இடம்பெறுகிறது. இந்த வகையாறாவில் 73,000 அடுத்த ஆண்டில் அனுமதிக்கப்படுவர். இது மொத்தத் தொகையில் 27 வீதமாக இருக்கிறது.[/size][size=3]

மீதமுள்ள 2013ம் ஆண்டில் அனுமதிக்கப்படவுள்ள 28 ஆயிரம் புதிய வரவாளர்களில் அகதிகளாக சுமார் 8,500 பேரையே கனடா ஏற்றுக் கொள்ளும். இது மொத்த புதிய வரவாளர்கள் தொகையில் 3 வீதமாகும். அதுகூட முன்னயைப் போலல்லாது தற்போது அகதிக் கோரிக்கையாளர்களின் விவகாரத்தில் கடுமையான மாற்றங்களைக் கனடா செய்துள்ளது.[/size][size=3]

அத்தோடு ஒரு அகதிக் கோரிக்கையாளரின் வழக்கை சில மாதங்களிலேயே முடித்து அவர் அனுமதிக்கப்பட முடியாதவர் என்றால் உடனேயே திருப்பியணுப்பும் நடவடிக்கைக்கும் அது முஸ்தீபு கொண்டுள்ளது.[/size][size=3]

வியாபார, தொழில்ரீதியான முதலீடு செய்யுமளவிற்கு காசிருந்தால் அல்லது தொழில்சார்புலமை, கற்றறிவு போன்ற தகுதிகளே இனிக் கனடாவிற்குள் புதிய குடிவரவாளர்களை அனுமதிக்கும் அளவுகோல்களாகும். இந்த இணையத்தளம் நீங்கள் கனடாவிற்கு வருவதற்கு தகுதியுள்ளவரா இல்லையா என்பதை உங்களிற்கு விளக்கமளிக்குமளவிற்கு தகவல்களைக் கொண்டது.[/size][size=3]

அத்தோடு கனடிய அரசு இடையிடையே வேறு நாடுகளில் தனது தூதரங்களினூடாக கனடாவிற்கு வருகை தரக்கூடிய வகுப்பினர் பற்றிய விளக்கவுரைகளையும் மேற்கொள்கிறது [ http://www.cic.gc.ca/english/work/jobfair.asp ].[/size][size=3]

http://www.canadamirror.com/canada/1314.html[/size]

அகதிகளை அனுமதிக்கும் விடயத்தில், ஏற்கனவே தம் நாட்டில் வாழ முடியாது என்று கூறி அகதி தரத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதனை பயன்படுத்தி வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை பெற்றவர்கள் மீண்டும் தம் நாட்டுக்கு சென்றால் வதிவிட மற்றும் குடியுரிமை பறிக்கப்படும் என்ற ஒரு விதியும் எதிர்காலத்தில் சேர்க்கப்படல் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அவ்வாறு உரிமை பறிக்கப்படும் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையிலான அதிகரிப்பை புதிய அகதிகளை அடுத்த ஆண்டில் அனுமதிப்பதில கொண்டு வரவேண்டும். இதுவே உண்மையான அகதிகளை உள்வாங்கச் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

நீங்கள் ஒருவரின் தனிமனித உரிமையில் கை வைக்க கூறுகின்றீர்கள் போல் தெரிகின்றது. உங்கள் கருத்துப் படி முன்னர் வந்த யூதர்களும் ஐரோப்பா போக முடியாதே.

இது மனித உரிமை மீறல் ஆகும் என்ற காரணத்தினால் தான் இவ்வாறான கட்டுப்பாடுகள் பொதுவாக மேலை நாடுகள் விதிப்பதில்லை.

குடி உரிமை மற்றும் பொருளாதார வசதிகளை பெற்றுக் கொண்ட பின்னர் ஒருவர் எங்கு ஓய்வு கொள்வது என்பது அவரது விருப்பம்.

அட, உலகின் இரண்டாவது பெரிய நாட்டில், மக்கள் தொகை காணாது என்று தான் எல்லோரையும் வர விடுகினம். பிறகு ஏன் பயப் பிடுகின்றீர்கள்?

Edited by Nathamuni

அகதிகளை அனுமதிக்கும் விடயத்தில், ஏற்கனவே தம் நாட்டில் வாழ முடியாது என்று கூறி அகதி தரத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதனை பயன்படுத்தி வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை பெற்றவர்கள் மீண்டும் தம் நாட்டுக்கு சென்றால் வதிவிட மற்றும் குடியுரிமை பறிக்கப்படும் என்ற ஒரு விதியும் எதிர்காலத்தில் சேர்க்கப்படல் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அவ்வாறு உரிமை பறிக்கப்படும் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையிலான அதிகரிப்பை புதிய அகதிகளை அடுத்த ஆண்டில் அனுமதிப்பதில கொண்டு வரவேண்டும். இதுவே உண்மையான அகதிகளை உள்வாங்கச் செய்யும்.

இது உங்களை போன்றோரின் சுயலகருத்து.

அப்படியாயின் நீங்கள் சொன்ன கருத்தோடு நான் சொவதையும் சேர்த்துக் கொள்ளுவோமா?

எந்த நாட்டில் இருந்து நீங்கள் அகதியாக தஞ்சம் கேட்டீர்களோ அந்த நாட்டுக்கு ஒரு சல்லிக் காசும் அனுப்பவோ அல்லது அந்த நாட்டு அரசியல் செயற்படுகளில் ஈடுபடவோ கூடாது,

முக்கியமாக புலிகளாலும் தங்களுக்கு பிரச்சனை என்று அகதி தஞ்சம் கேட்டவர்கள் புலிக் கொடியையும் ஏன் புலிகளுக்கு ஆதரவான கருத்தை யாழ்களத்தில் எழுதவும்ம் கூடாது.

:lol::D:rolleyes:

எந்த நாட்டில் இருந்து நீங்கள் அகதியாக தஞ்சம் கேட்டீர்களோ அந்த நாட்டுக்கு ஒரு சல்லிக் காசும் அனுப்பவோ அல்லது அந்த நாட்டு அரசியல் செயற்படுகளில் ஈடுபடவோ கூடாது,

:lol::D:rolleyes:

அது !! ..ஹி ஹி...அடி மடியில் கை வைக்க கூடாது பாருங்கோ. நாங்கள் காசு அனுப்பாட்டி அங்கு எப்படி விஜயிற்கு கட் அவுட் வைத்து பாலாபிசேகம் செய்வது ?

அப்படி தான் 10 பேர் உண்மையான பிரச்சனையீல் அகதியாக வந்தால் 25 பேர் அந்த சாட்டில அகதியாக வ்ந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எலே என்னாலே தகுதி அது இது என்னுக்கிட்டு.... கனடாக்கு போறத்திக்கு சுலபமான வழி இருக்குவே ஒரு Canadian சிடிசன் இருக்கிற பொண்ண சைட் அடிச்சு கல்யணம் பண்ணிகிட்ட Canada க்கு போவலாம்வே சும்மா தகுதி அது இதுனுகிட்டு :D

நிழலி,

நீங்கள் ஒருவரின் தனிமனித உரிமையில் கை வைக்க கூறுகின்றீர்கள் போல் தெரிகின்றது. உங்கள் கருத்துப் படி முன்னர் வந்த யூதர்களும் ஐரோப்பா போக முடியாதே.

யூதர்கள் போவதற்கும் மற்றவர்கள், முக்கியமாக தமிழர்கள் இலங்கை போவதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. யூதர்களுக்கு என்று ஒரு நாடும் இருக்கின்றதுடன் ஏனைய நாடுகளின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சர்வதேச சக்திகளாகவும் அவர்கள் இருக்கின்றனர். ஒரு யூதர் இன்று அகதியாக தன்னை விண்ணபிக்கும் அடிப்படைத் தேவை முற்றாக இல்லாத சூழ்நிலையில் அவர்கள் போவது சரியானது.

ஆனால் தமிழர்களின் நிலை முற்றிலும் மாறானது. இன்றும் ஊரில் வாழ முடியாத கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் இன்னொரு நாட்டில் அகதியாக தம்மை விண்ணப்பிக்கும் தகுதிகளை தார்மீக ரீதியில் கொண்டவர்கள். இப்படியானவர்களின் அகதிக் கோரிக்கை பாதுகாப்புக் காரணங்களை காரணம் காட்டி அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் போய் வருவதால் நிராகரிக்கப்படும் சூழ்நிலைதான் இன்று இருக்கின்றது.

நீங்கள் சொல்வது சரி அகதியாய் வந்து அந்தந்த நாட்டு குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் இப்ப அங்க போய் முதலிடுகினம், வெள்ளவத்தையில் இருக்கும் முக்கால் வாசி குடியிருப்பு வீடுகளும் வெளிநாட்டு குடியுரைமை பெற்ற தமிழர்களினுடையது.

தாங்கள் தப்பி பிழைச்சா சரி மற்றவன் எப்படி போனால் என்ன அது தான் நாங்கள்.

எனக்கு தெரிந்த ஒருத்தர் இப்ப கிளிநொச்சியில விடுதி ஒன்றுகட்டி இரானுவ தளபதி ஒருத்தரை கூப்பிட்டு திறந்தவர்.

அவரைக் கேட்டா அங் ஒன்றும் இல்லை சூப்பரா இருக்கு பிற எப்படி இப்ப வாறவைக்கு அகதி அந்தஸ்து கிடைக்கும்?

இப்ப சில பேர் அவை ஏன் இனி இஞ்ச வருகினம் என்டல்லோ கேட்கினம்

[size=5]" இக்கரைக்கு அக்கரை [/size][size=5] [/size][size=5] பச்சை " :o[/size]

[size=6]Ontario puts Ottawa ‘on notice’ it seeks more immigrants[/size]

[size=5]Ontario Immigration Minister Michael Chan said he wants to “put the federal government on notice” that Canada’s largest province by population will demand a fair allocation under the new Expression of Interest system to be established over the next two years.[/size]

[size=5]Mr. Chan wants more economic immigrants for his province, which has seen its once-dominant share of immigration decline over the last decade. Ontario is also seeking a doubling of its quota under the Provincial Nominee stream, a program that has been used primarily to direct immigrants to the Prairies and Atlantic Canada.[/size]

[size=5]At the conclusion of Friday’s federal-provincial meetings, federal Immigration Minister Jason Kenney told reporters that he plans to hold immigration levels steady at about 260,000 a year for now, although the meeting did consider new research that suggested raising levels to about 317,000 annually in five or six years, he said.[/size]

http://www.theglobeandmail.com/news/politics/ontario-puts-ottawa-on-notice-it-seeks-more-immigrants/article5400635/

எலே என்னாலே தகுதி அது இது என்னுக்கிட்டு.... கனடாக்கு போறத்திக்கு சுலபமான வழி இருக்குவே ஒரு Canadian சிடிசன் இருக்கிற பொண்ண சைட் அடிச்சு கல்யணம் பண்ணிகிட்ட Canada க்கு போவலாம்வே சும்மா தகுதி அது இதுனுகிட்டு :D

அதேசமயம் கனேடியக்குடியுரிமை உள்ளபெண் எப்படியான ஆளை காதலித்து கைப்பிடிக்கவிரும்பும் என்பதையும் ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள். ஆகையால், அதைவிட மேலேகூறப்படும் வழிமுறைகளே எவ்வளவோ மேல்!

மேலே கூறப்படும்முறைகளில் ஏதாவதொன்றூடாக உங்களுக்கு கனடாவுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் அனுமதிவிண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு காரணங்கள் கூறப்பட்டு கனடா அரசாங்கம் மூலம் கடைசி ஏதாவது கடிதமாவது அனுப்பப்படும். ஆனால், சைட் அடிக்கும்வழியில் போனால் கடைசிவரை கேள்விக்குறியுடனே காலங்கடந்துவிடலாம்.

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.