Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸில் கைது :

Featured Replies

[size=5]பரிதி கொலை வழக்கு: வி.பு. இயக்கத்தின் பிரான்ஸ் பிரிவு தலைவர் விநாயகம் கைது?[/size] face.jpg By Kavinthan Shanmugarajah

[size=3]2012-11-17 15:56:03[/size]

[size=3]பிரான்ஸ் நாட்டில் செயற்பட்டு வருவதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப் பிரிவொன்றின் தலைவராக கூறப்படும் விநாயகம் என்பவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 8 ஆம் திகதி பரிசில் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான நடராஜா மதீந்திரனின் கொலை தொடர்பிலேயே விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

பரிதி அல்லது ரீகன் என அழைக்கப்படும் மதீந்திரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவர் என்பதுடன் பிரான்ஸிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளருமாவார்.

ஐரோப்பாவில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகள் வலையமைப்பின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் இடம்பெறும் மோதல்களே இக் கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இக்கொலைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென அவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=2]http://www.virakesari.lk/article/local.php?vid=1675[/size]

  • Replies 100
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்தச் செய்தி பொய்யானது என்றே நினைக்கிறேன். இலண்டனில் இருந்துதான் இந்தச் செய்தி பரப்பப்பட்டது. என்னை தொடர்புகொண்டும் பலர் கேட்டார்கள்.[/size]

[size=5]பிரெஞ்சு காவல்துறை வட்டாரத்திலே அல்லது பிரெஞ்சு ஊடக வட்டாரத்திலோ இதை உறுதிப்படுத்த முடியவில்லை.[/size]

[size=5]ஆனால் விநாயகத்தை கைது செய்யும்படி பாரிசிலுள்ள பலர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கிடைத்தது.ஒருவர் தொடர்பாக பலர் முறைப்பாடு செய்தால் அவரை காவல்துறை அழைத்து விசாரிப்பது வழமையான நடைமுறை. ஆனால் விநாயம் விடயத்தில் அவ்வாறு நடந்ததாகவும் தெரியவில்லை[/size]

[size=5]இங்கே குழுவாத நலன்களை முன்வைத்து செய்திகளுக்கு தலை கால்வைத்து வியாபாரம் செய்ய பலரும் முயல்கிறார்கள்.[/size]

[size=5]தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை கலைக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் பிரான்சின் மேல்முறையீட்டு நீதிமன்றம் சிபார்சு செய்தது.ஆனால் பிரெஞ்சு அரசாங்கம் அதை செய்யவில்லை.தற்போது விடுதலைபபுலிகளையும் அவர்களுக்கு சார்பான அமைப்புக்களையும் பிரெஞ்சு மண்ணில் செயற்பட அனுதிப்பது ஆயுத வன்முறைக்கும் குழு மோதல்களுக்கு இடமளிக்கும் என்ற கருத்து காவல்துறை மட்டத்திலும் அரசாங்க மட்டத்திலும் மேலோங்கியிருகக்pறது.[/size]

[size=5]இதைத்தான் இந்த வியாபாரிகள் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.[/size]

[size=5]விநாயகம் கைது செய்யப்பட்டால் அந்த தகவலை தந்த காவல்துறை வட்டாரம் எது? அதை வெளியிட்ட பிரெஞ்சு பத்திரிகை எது? என்ற தகவலை ஆதரபூர்வமாக வெளியிடவேண்டும். உதாரணமாக பாரிதியன் கொலையுடன் சம்பந்தப்பட்வர்கள் என்று கைது செய்ப்பட்ட இருவர் பற்றிய தகவலை லு பிகாரே லுபரிசியன் லு மொண்ட் ரிஎப் வண் தொலைக்காட்சி பிஎப்எம் ரிவி முதலான பெரும்பாலான அனைத்து பிரெஞ்சு ஊடகங்களும் வெளிட்டன.[/size]

[size=5]நான் பிரெஞ்சு காவல்துறையினர் செய்;தி தொடர்பு பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது இதுபற்றிய எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும் பொதுவாக ஒரு குற்றச்செயல் பற்றிய புலன்விசாரணையில் ஈடுபடும் காவல்துறை பிரிவினர் அது தொடர்பாக வெளிவரும் செய்திகள் அதை வெளியிடும் நிறுவனங்கள் தனிநபர்கள் பற்றிய தகவல்களை கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்தனர்.[/size]

[size=5]ஏனவே தயவு செய்து செய்தி எழுதும் போது அந்த செய்தியை தெரிவித்தவர் யார்? எங்கே? எப்போது? என்ற விபரங்களை குறிப்பிட்டு எழுதுங்கள்.வதந் 'தீ' எமது இனத்தின் ஒற்றுமையை பொசுக்கிவிடும் என்பதை மறக்க வேண்டாம்.[/size]

உங்களது... மிகப் பெரிய முயற்சிக்கு, நன்றி நவம்.

  • கருத்துக்கள உறவுகள்

திவயனவில் எழுதப்பட்ட செய்தியை எல்லோரும் தங்களின் ஊடகவியாபாரத்துக்காக எழுதி எப்படி எல்லாம் சம்பாதிக்கின்றார்கள்... அதற்குள் .ப்படி இருக்கலாம்... அப்படி இருக்கலாம் என்று ஆராய்வு வேறு...

ஏற்கனவே சொன்னது போல, இப்படியான செய்திகளை இணைக்கின்றபோது, யாழ் நிர்வாகம், ஆதாரம், அல்லது தொடர்புபட்ட செய்திகளை இணைப்பவரிடம் பெற்றுக் கொள்வது நன்று... இப்படிப்பட்ட செய்தியை இணைப்பவர்கள் குறைந்தபட்சம், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆராயக்கூடாதா?

ஏன் கறுப்பி, உங்களுக்கு இச் செய்தி பற்றி ஆராய்ந்து உண்மையை உறுதிப்படுத்த எவ்வளவு நேரம் எடுக்கும்??

[size=5]விநாயகத்தை நேற்று மாலை தான் நேரில் பார்த்ததாக என்னிடம் நம்பிக்கையான ஒருதர் உறுதிப்படுத்தினார்.[/size]

[size=5]பருதியின் கொலையில் சிறீலங்காவின் பங்கு உறுதிப்பட்ட நிலையில் இதை வைத்து பிரான்சிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் வன் முறையைத் தூண்டுவதற்கும் சிலர் முயலக் கூடும் என்ற சந்தேகம் பிரெஞ்சு காவல்துறையினருக்கு ஏற்பட்டிருந்ததை அறிய முடிந்தது.[/size]

[size=5]சாதரண ஒரு குற்றவாளி கைது செய்யப்படவதையே செய்தியாக்கும் பிரெஞ்சு ஊடகத்துறை விடுதலைப்புலிகளின் முக்கியத்தர் எனப்படும் விநாயகம் கைது செய்யப்பட்டதை கண்டுகொள்வில்லை என்று இந்த செய்தியை உருவாக்கிய நபர்கள் நினைத்துக்கொண்டு பொய் செய்தி வெளியட்டால் நிச்சயம் அவர்கள் சட்டச் சிக்கலை எதிர்கொள்வார்கள் என்று பிரெஞ்சு ஊடகமொன்றின் ஊடகவியலாளர் என்னிடம் தெரிவித்தார்.[/size]

[size=5]ஏனெனில் பருதியின் கொலையின் தொடர்ச்சியாக குழுமோதல்களோ ஆயுத வன்முறையோ ஏற்படாமல் தடுப்பதற்கான இறுக்கமான அனைத்து நவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதில் பிரெஞ்சு அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது.[/size]

[size=5]இதற்கென யுரோ போலின் உதவியை பெற்றுக்கொள்ள பிரெஞ்சு காவல்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிந்தது.[/size]

[size=5]ஆதாரமற்ற முறையில் வன்முறையை தூண்டும் கருத்துகளை வெளியிடும் நபர்கள் அமைப்புக்கள் ஊடகங்கள் பிரெஞ்சு உள்ளக புலனாய்வுத்தறையின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.[/size]

[size=5]விநாயகம் என்பவர் பிரான்சில் புகலிடம் கோரிய ஒருவர் என்றும் அவரது புகலிடக் கோரிக்கையை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரிக்காதவரையில் அவர் பிரான்ஸ் அரசின் பாதுகாப்பிலேயே இருப்பதாகவும் இவ்வாறு பிரான்ஸ் அரசின் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் குற்றமிழைத்தவராக இருந்தாலும் அவரதோ அவரது குடும்பத்தினரதோ தகவல்களை பகிரங்கமாக வெளியிட்டு அதன் மூலம் அந்த நபருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த தகவல்களை வெளியிட்ட நபர்களே பொறுப்பு என்றும் அந்த நபர்கள் மீது கிறீமினல் குற்றம் சுமத்தப்படும் என்றும் பிரான்சில் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் பருதியன் வழக்கில் வாதடியவருமான மூத்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார் [/size]

இந்த செய்தி உண்மையானது மாதிரி தெரியவில்லை. ( பிரான்ஸ் கூகிள் இல் தேடினேன் )

இப்ப தேடுங்கோ அகோதா கிடைக்கும்

சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். உங்களைப் போன்ற நல்ல உள்ளம் படைத்த தேசியவாதிகள் தமிழர் மத்தியில் பிளவு வரக் கூடாது என்று எண்ணுகிறீர்கள் ஆனால் எல்லாரும் அப்பிடி நினைச்சா தான் பிரயோசனம்

  • கருத்துக்கள உறவுகள்

நவம் அண்ணா உங்கள் செய்திகள பாத்தா நீங்களும் குறிப்பிட்ட ஒரு குழுவை சேர்ந்தவர் மாதிரியும் செய்திகளை வெளியிடும் இணையங்களை மிரட்டுவது மாதிரியும் இருக்கு யாழ் களம் இப்பிடி பலத்தையும் தாண்டி வந்தது செய்திகள் இணைக்கும் ஊடகங்கள் மீது French புலனாய்வுத்துறையால் ஒன்றும் செய்ய முடியாது மிட்டுவதை விட்டு பக்கம் சாராமல் செய்திகளை போடுங்கள்

இவ்வாறான செய்திகளை யாரும் நம்பாதீர்கள். இது புலம்பெயர் தமிழர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சி.

ஐரோப்பாவில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக கைது செய்யப்பட்டால் சாதாரணமாக காவல்துறையினர் அந்நபர் குற்றவாளி என்று நிரூபணமாகாதவரை அவர் பெயரை வெளியிட்டு கருத்து தெரிவிக்காது. அப்படியிருக்கும் போது பிரான்ஸ் காவல்துறையை மேற்கோள்காட்டி செய்தியை வெளியிட்டிருப்பதானது பொய் என நம்பலாம்.

பிரெஞ்சு பத்திரிகைகளில் வராத செய்திகளை நம்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திவயனவில் எழுதப்பட்ட செய்தியை எல்லோரும் தங்களின் ஊடகவியாபாரத்துக்காக எழுதி எப்படி எல்லாம் சம்பாதிக்கின்றார்கள்... அதற்குள் .ப்படி இருக்கலாம்... அப்படி இருக்கலாம் என்று ஆராய்வு வேறு...

ஏற்கனவே சொன்னது போல, இப்படியான செய்திகளை இணைக்கின்றபோது, யாழ் நிர்வாகம், ஆதாரம், அல்லது தொடர்புபட்ட செய்திகளை இணைப்பவரிடம் பெற்றுக் கொள்வது நன்று... இப்படிப்பட்ட செய்தியை இணைப்பவர்கள் குறைந்தபட்சம், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆராயக்கூடாதா?

--------

திவஜினவையும், குளோபல் ரைம்ஸ்ஸையும்... யாழின் கறுப்புப் பட்டியலில், சேர்க்க வேணும். :D:lol:

Edited by தமிழ் சிறி

மொத்தத்தில் தேச விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த இருவர்.. தமிழர்கள்.. பலியிடப்பட்டுள்ளார்கள்..! இது சிங்களத்துக்கு இன்னொரு இராஜதந்திர வெற்றி..! தொடர்ந்து அழிவது நாமே.. அவர்கள் அல்ல.

இதனை சிந்திக்க முடியாதவர்களாய் இன்னும் மக்கள்...! அதுவும் இந்த மாவீரர் நினைவு காலத்தில்.. இவ்வாறான துன்பியல்களை சிங்களமும் சர்வதேசமும் எம்மிடையே விதைக்க காரணங்கள் உண்டு. அவற்றை ஆராயாமல்.. எமக்கிடையே பிளவுகளையே அதிகரிக்கத்துக் கொண்டு நிற்கிறார்கள் இன்னொரு சதிகாரக் கூட்டத்தினர். சிங்களத்துக்கு மறைமுக சேவகம் செய்பவர்கள். இவை எல்லாம்.. செய்த குற்றங்களை மறைக்க.. சிங்களம் போடும் நாடகங்களோ.. யார் அறிவார்..??! :icon_idea:

நெடுக்கு எமக்கு மட்டும் எந்த தனிப்பட்ட கோபமும் இல்லை விநாயகம் மீது ஆனால் அவரது செயற்பாடுகள் குழப்பகரமாகவே உள்ளது. பாரிசில் போட்டி மாவீரதினத்தின் சூத்திரதாரியே அவர் தான். அதவிட குழப்பகரமான தலைமைச் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர் அவர். யேர்மனியில் அவரது சகோதரனே அந்நாட்டில் போட்டி மாவீரதினத்தை சென்ற ஆண்டில் இருந்து நடாத்துபவர். எமக்குள் ஒற்றுமை வேண்டும் அதை நாம் மட்டும் விரும்பி பிரயோசனம் இல்லை.

நான் எந்தக் குழுவையும் சோந்தவனில்லை. செய்தி என்பது உண்மையாக இருகக் வேண்டும் .ஒரு குற்றச் செயல் தொடர்பாக விசாரணை நடக்கும் போது அது தொடர்பாக வெளிவரும் அனைத்துச் செய்திகளும் கண்காணிக்கப்படும்.ஒரு சமூகத்தில் வன்முறை சம்பவம் இடம் பெறும் என்று கருதினால் அது தொடர்பாக ஆதாரமற்ற விதத்தில் செய்திவெளியட்டு தூண்டிவிடுவது குற்றமாகும். விநாயகம் கைது செய்ப்பட்டது உண்மையென்றால் அந்த செய்தியன் மூலம் என்ன பிரெங்சு காவல்துறையின் எந்த பிரிவு அந்த தகவலை வெளிட்டது. பிரான்சிலுள்ள எந்த ஊடக நிறுவனம் அல்லது ஊடகவியலாளர் இந்தச் செய்தியை வெளியட்டது என்கின்ற தகவல்களை நீங்கள் தந்துதவினால் நான் உடனடியாகவே அவர்களுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக உறுதிப்படத்தலை உடனே செய்ய முடியும்

நவம் அண்ணா உங்கள் செய்திகள பாத்தா நீங்களும் குறிப்பிட்ட ஒரு குழுவை சேர்ந்தவர் மாதிரியும் செய்திகளை வெளியிடும் இணையங்களை மிரட்டுவது மாதிரியும் இருக்கு யாழ் களம் இப்பிடி பலத்தையும் தாண்டி வந்தது செய்திகள் இணைக்கும் ஊடகங்கள் மீது French புலனாய்வுத்துறையால் ஒன்றும் செய்ய முடியாது மிட்டுவதை விட்டு பக்கம் சாராமல் செய்திகளை போடுங்கள்

அவர் கருத்தை பார்த்தால் அப்பிடி தெரியேல்லை. ஒருவர் சட்ட சிக்கல் பற்றி தனக்கு தெரிந்த தகவல்களை வழங்குவதற்கு பேர் மிரட்டுவது அல்ல.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

திவஜினவையும், குளோபல் ரைம்ஸ்ஸையும்... யாழின் கறுப்புப் பட்டியலில், சேர்க்க வேணும். :D:lol:

அப்பிடியே வீரகேசரி,ஈழதேசம் ,தமிழ்த்தாய், செய்தி இணையம், போன்ற அனைத்தையும் கருப்பு பட்டியில் இணைக்க வேண்டும்

இப்ப தேடுங்கோ அகோதா கிடைக்கும்

சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். உங்களைப் போன்ற நல்ல உள்ளம் படைத்த தேசியவாதிகள் தமிழர் மத்தியில் பிளவு வரக் கூடாது என்று எண்ணுகிறீர்கள் ஆனால் எல்லாரும் அப்பிடி நினைச்சா தான் பிரயோசனம்

[size=4]இப்பொழுதும் பிரெஞ்சு மொழி கூகிளில் இல்லையே [/size]

[size=4]https://www.google.fr/search?hl=fr&gl=fr&tbm=nws&q=Nadarajah+Mathinthiran+&oq=Nadarajah+Mathinthiran+&gs_l=news-cc.3..43j43i400.4787.4787.0.5368.1.1.0.0.0.0.126.126.0j1.1.0...0.0...1ac.1.NwdJ9lOrXM0[/size]

https://www.google.fr/search?hl=fr&gl=fr&tbm=nws&q=vinayagan&oq=vinayagan&gs_l=news-cc.3..43j43i400.3115.6432.0.6879.9.4.0.5.0.0.123.444.1j3.4.0...0.0...1ac.1.3YErUtEr_0o#hl=fr&gl=fr&tbm=nws&sclient=psy-ab&q=vinayagam&oq=vinayagam&gs_l=serp.3...2903.3372.0.3649.2.2.0.0.0.0.109.204.1j1.2.0...0.0...1c.1.jWkzlNw34-4&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&fp=9e7804cae1a53d32&bpcl=38625945&biw=1280&bih=637

இவ்வாறான செய்திகளை யாரும் நம்பாதீர்கள். இது புலம்பெயர் தமிழர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சி.

ஐரோப்பாவில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக கைது செய்யப்பட்டால் சாதாரணமாக காவல்துறையினர் அந்நபர் குற்றவாளி என்று நிரூபணமாகாதவரை அவர் பெயரை வெளியிட்டு கருத்து தெரிவிக்காது. அப்படியிருக்கும் போது பிரான்ஸ் காவல்துறையை மேற்கோள்காட்டி செய்தியை வெளியிட்டிருப்பதானது பொய் என நம்பலாம்.

பிரெஞ்சு பத்திரிகைகளில் வராத செய்திகளை நம்பாதீர்கள்.

உண்மைதான் துளசி ஐரோப்பாவில் தமிழருக்குள் ஒரு பிளவும் இல்லை . எல்லாம் ஒழுங்கா நடைபெறுகிறது. சில செய்திகள் தான் குழப்பா வருது. முள்ளிவாய்க்காலுக்கு பின் இங்கு எல்லாம் ஓரணியா செயற்படுகிறார்கள். ஒரு பிரச்னையும் இல்லை . சென்ற ஆண்டும் பாரிசில் பருதி மீதும் லண்டனில் தனம் மீதும் யாரோ தமாசுக்கே வெட்டினார்கள். இடப் பற்றாக்குறை காரணமாகவே லண்டன்,பாரிஸ்,ஜெர்மனியில் இரண்டாக மாவீரார் நாள் இடம்பெறுகிறது. சுவிசில் ஐநா முன்றலில் சென்ற ஆண்டு போட்டி ஊர்வலம் வேற

Edited by Ramanan005

வன்முறை ஒன்றைத்தவிர எதையும் அறியாத இவர்கள் தங்களுக்குள் அடிபட்டே அழிந்துவிடுவார்கள் . எதற்கும் வன்முறை ஒன்றுதான் தீர்வு இவர்களுக்கு ஊட்டிவிட்டார்கள் . .

[size=4]யாரும் எதையும் இங்கே இணைக்கலாம், யாழில் அவை தடை செய்யப்படாத ஊடகங்கள் என்றால்.[/size][size=1]

[size=4]மிச்சம் மீதியை ஆராய்வது வாசகர்கள் பொறுப்பு. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான செய்திகளை யாரும் நம்பாதீர்கள். இது புலம்பெயர் தமிழர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சி.

ஐரோப்பாவில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக கைது செய்யப்பட்டால் சாதாரணமாக காவல்துறையினர் அந்நபர் குற்றவாளி என்று நிரூபணமாகாதவரை அவர் பெயரை வெளியிட்டு கருத்து தெரிவிக்காது. அப்படியிருக்கும் போது பிரான்ஸ் காவல்துறையை மேற்கோள்காட்டி செய்தியை வெளியிட்டிருப்பதானது பொய் என நம்பலாம்.

பிரெஞ்சு பத்திரிகைகளில் வராத செய்திகளை நம்பாதீர்கள்.

தமிழ்ப் பத்திரிகை எல்லாம்.... சொந்த நிருபர் வைத்திருப்பது கிடையாது.

இணையத்தில்... இருப்பதை, அரை குறை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும், ஜேர்மனிலும், ஹிந்தியிலும் உள்ளதை... வாசித்து விட்டு... சொந்தச் சரக்கையும்... சேர்த்து, செய்தியாக வெளியிடும் ******** கூட்டம். :icon_idea:

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

வன்முறை ஒன்றைத்தவிர எதையும் அறியாத இவர்கள் தங்களுக்குள் அடிபட்டே அழிந்துவிடுவார்கள் . எதற்கும் வன்முறை ஒன்றுதான் தீர்வு இவர்களுக்கு ஊட்டிவிட்டார்கள் . .

எல்லாம் உங்களிடம் கற்றதே

[size=3]எனினும் இக்கொலைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென அவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=2]http://www.virakesar...al.php?vid=1675 [/size]

[size=4]ஒரு மகளுக்கு தகப்பன் சில உண்மைகளை கூறி இருக்கலாம். [/size]

[size=4]வன்முறைகள் இல்லாத உலகத்தை எமது முன்னோர்கள் செயலில் காட்டியபடியால் தான் இன்று கோவணத்துடன் அலைகின்றோம். [/size][size=1]

[size=4]மற்றையவர்கள் எல்லோரும் இராணுவத்தை கட்டி எழுப்புகிறார்கள். நாங்கள் மட்டும் தான் கோயில்களை கட்டுகின்றோம். [/size][/size]

வன்முறைகள் இல்லாத உலகத்தை எமது முன்னோர்கள் செயலில் காட்டியபடியால் தான் இன்று கோவணத்துடன் அலைகின்றோம்.

[size=1][size=4]மற்றையவர்கள் எல்லோரும் இராணுவத்தை கட்டி எழுப்புகிறார்கள். நாங்கள் மட்டும் தான் கோயில்களை கட்டுகின்றோம். [/size][/size]

ஒரு மகளுக்கு தகப்பன் சில உண்மைகளை கூறி இருக்கலாம்.

கொலைய சிங்கள அரசு செய்வித்தது ஆனால் அந்த கைக் கூலிகள் யார் என்பது தான் பிரச்சனை

உண்மைதான் துளசி ஐரோப்பாவில் தமிழருக்குள் ஒரு பிளவும் இல்லை . எல்லாம் ஒழுங்கா நடைபெறுகிறது. சில செய்திகள் தான் குழப்பா வருது. முள்ளிவாய்க்காலுக்கு பின் இங்கு எல்லாம் ஓரணியா செயற்படுகிறார்கள். ஒரு பிரச்னையும் இல்லை . சென்ற ஆண்டும் பாரிசில் பருதி மீதும் லண்டனில் தனம் மீதும் யாரோ தமாசுக்கே வெட்டினார்கள். இடப் பற்றாக்குறை காரணமாகவே லண்டன்,பாரிஸ்,ஜெர்மனியில் இரண்டாக மாவீரார் நாள் இடம்பெறுகிறது. சுவிசில் ஐநா முன்றலில் சென்ற ஆண்டு போட்டி ஊர்வலம் வேற

தமிழர்களுக்குள் பிரிவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் மாவீரர் தினமோ அல்லது வேறு நடவடிக்கைகளையோ வைத்து கொலையையும் அவர் தான் செய்திருப்பார் என்று ஆதாரமற்று தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். உண்மையில் ஒருவர் கொலையாளி என ஆதாரபூர்வமாக நிரூபணமானால் காவல்துறையினர் பிரெஞ்சு ஊடகங்கள் மூலம் மக்களுக்கு அறிவிப்பார்கள் என்பதை ஏன் யோசிக்க மறுக்கிறீர்கள். அவ்வாறானதொரு நம்பகமான செய்தி வர முன்பு எதற்கு ஆளுக்காள் ஒவ்வொரு விதமாக எழுதும் செய்திகளை நம்ப வேண்டும்? :rolleyes:

மாவீரர் தினம் எத்தனை பிரிவாக நடைபெற்றாலும் மக்கள் மாவீரரை தான் வணங்குகிறார்கள். இன்று பிரிந்து நடத்துபவர்களை நாளை ஒன்று சேர்க்க நாமும் முயல்வோம். ஒன்றாக செயற்படாத அனைவரையும் தள்ளி வைத்துக்கொண்டு சென்றால் இறுதியில் தமிழன் ஒற்றுமையாக இருப்பதற்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். :rolleyes:

அவரை கொலையாளி என்று கூறவில்லை. சந்தேக நபர் என்று தான் சொல்லப் பட்டிருக்கு
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வன்முறைகள் இல்லாத உலகத்தை எமது முன்னோர்கள் செயலில் காட்டியபடியால் தான் இன்று கோவணத்துடன் அலைகின்றோம். [/size]

[size=1][size=4]மற்றையவர்கள் எல்லோரும் இராணுவத்தை கட்டி எழுப்புகிறார்கள். நாங்கள் மட்டும் தான் கோயில்களை கட்டுகின்றோம். [/size][/size]

"கோயில் இல்லா ஊரில், குடியிருக்க வேண்டாம்" என்று... பள்ளிக் கூடத்தில், படித்தது தப்பா?

தமிழனுக்கு ராணுவம் வேண்டும் என்று, சொல்லாதது... படிப்பித்த வாத்தியாரின் தப்பு.

இந்தச் செய்தி நேற்று காலை 9 மணியளவில் இலண்டனில் உருவாகியது. காலை 9.30 மணிக்கு லண்டனில் இருந்து சிலர் என்னுடன் தொடர்புகொண்டு இது உண்மையா என்று கேட்டார்கள்?

நான் பிரெஞ்சு ஊடகத்துறை வட்டாரத்திலும் காவல்துறை வட்டாரத்திலும் தொடர்பு கொண்டு இது பற்றி விசாரித்தேன். அவர்கள் இது பற்றி தங்களிடம் எந்தத் தகவலும் இல்லை என்ற தெரிவித்தார்கள்.

நேற்று காலை 10 மணியளவில் லண்டனில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்றில் இது விநாயகத்தின் பெயர் குறிப்பிடாமல் வெளிவந்தது. அதன் பின் இன்று கொழும்பு ஊடகங்களில் இது விநாயகத்தின் பெயர் குறிப்பிட்டு வெளிவந்தது.

அதை தொடர்ந்து புலம்பெயர்ந்த பல தமிழ் ஊடகங்களில் அதற்கு கைகால் வைத்து செய்தி வெளியகியது.

பிரெஞ்சிலுள்ள எந்த ஊடகத்திலும் (தமிழ் ஊடகங்கள் அல்ல) இந்தச் செய்தி வெளிவரவில்லை.

ஊலகில் நடக்கும் ஒவ்வாரு செய்தியையும் வெளியடும் பாரிசை தளங்கொண்டு இயங்கும் ஏஎப்பி செய்தி நிறுவனத்திலும் இந்த செய்தி வெளிவரவில்லை

தமிழ் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை சிலர் இங்கு கொண்டு வந்து இணைத்தார்கள்;.

இது தான் இந்த செய்தி உருவான கதை.

தம்பி SUNDHAL ரிரிஎன் தொலைகாட்சி மூடப்பட்டது அல்மனாhர் தொலைக்காட்சி தடைசெயய்ப்பட்டது.சாலாபிஸ்ட் எனப்படும் இஸ்லாமிய அடைப்படை வாதத்தை தளமாகக் கொண்ட மத வன்முறையை தூண்டிய 6 இணையத்தளங்கள் கண்காணிப்புக்கு உள்ளாகியது.பிரான்ஸ் தழுவிய அளவில் பலர் கைது செய்யப்பட்டது இதெல்லாம் பிரான்சில் தான் நடந்தது தம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.