Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபச்சாரத்தை தொழிலாக்க இலங்கையில் கோரிக்கை

Featured Replies

இலங்கையில் ஏற்கனவே பல ஆயிரம் சீனதொழிலார்கள். விபசாரத்தை செய்ய கூட சீனத்து திரவியங்கள் தான் வந்து செய்ய வேண்டிய நிலை. ஒவ்வொரு மந்திரிக்கும் இனி தேவையான அளவு தாய்லாந்து பைங்கிளிகளும், இந்தோனேசிய முத்துரத்தினங்களும் கிடைக்கும். (கல்வித்துறை மாணவர்களுக்கு செருப்பு.) இலங்கை பெண்களைகு விபசாரம் செய்ய கூட இலங்கை அரசு அனுமதிக்க போவதில்லை. அனுமதி பத்திரத்திற்கு மந்திரிகளின் வீடுகளுக்கு அலையத்தான் போகிறார்கள். வெலிக்கடை அனுபவம், சிங்கள மோடையாக்களுக்கு இனி இனி இருக்க சிறை கூடக்கிடையாது. .

  • கருத்துக்கள உறவுகள்

எயிட்சை கட்டுப்படுத்தத்தான் புலிகள் மண்டையில் போட்டார்களா? ரொம்ப அநியாயமா இருக்கு இந்தக் கருத்து.

நான் சொன்ன கருத்து பாலியல் விவாகாரத்தில் எமது சமுதாயத்தில் இருந்த முரண்பாட்டினதும் இறுக்கத்தினதும் நீட்சியே மண்டையில் போடும் நிலைக்கு இட்டுச் சென்றது என்பதையே.

பாலியல் தொழிலை சட்டமாக்காமல் விட்டால் போல் பாலியல் தொழில் நிற்கவோ குறையவோ போவதில்லை. சட்டமாக்கப்பட்டால் இந்தத் தொழிலை நிர்வகிக்க ஒரு பிரிவு அரச திணைக்களத்தில் அமைக்கலாம். அதனூடாக முறையான அனுமதி பாதுகாப்பான உறவுக்கான கல்வி அறிவை போதிக்கலாம். வயது எல்லையை வரயறுக்கலாம். உடல் நலத்தை பரிசோதிக்கலாம். இதற்கொல்லாம் யார் யார் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் எத்தனை பேர் இவற்றை ஒழுங்கமைத்து நடத்துகின்றார்கள் என்பது அரசுக்கு தெரியவரவேண்டும் .அதற்கு சட்டமே அவசியம். கண்டும் காணாமலும் இருக்கும் நிலையில் நடக்கும் இத் தொழிலை விட அதை ஒரு நிர்வாக அலகின் கீழ் கண்காணிப்பதே சிறந்தது.

உலகின் மிகப் பழமையான தொழில் என்று வர்ணிக்கப்படும் பாலியல்தொழிலை எவ் வகையிலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதில் மாற்றங்களை கொண்டுவரவேண்டுமானால் அது சட்டபூர்வமாக்கப்படுதல் அவசியம்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் இதை பாலியல் தொழில் என்றே அழைக்கவேண்டும். விபச்சாரம் என்பது பொருந்தாது. ஒருவரின் உடல் அவருக்குச் சொந்தமானது அவர் அதை வைத்து தொழில் செய்வதற்கு முழுச் சுதந்திரமும் உள்ளது. கலாச்சாரக் காவடியை தூக்கிக்கொண்டு தனிமனித சுதந்திரத்தில் தலையிடமுடியாது.

ஒரு பெண் பல ஆண் நுகர்வேரை நம்பித்தான் இத்தொழிலை செய்ய முடியும். ஆணுக்கான தேவை இருக்கும் வரை இத்தொழிலுக்கான வாய்பும் இருக்கும். பாலியல் தொழில் என்பது ஆண் என்ற கம்பனியில் பெண்கள் வேலைபார்ப்பது. இங்கே ஆண்தான் பாஸ். சட்டத்தால் இந்தக் கம்பனியை இழுத்து மூட முடியாது. இதை தடுப்பதற்கு ஊளியர்களை தண்டிப்பது ஜனநாயக விரோதம். கம்பனியோடுதான் பேச்சுவார்த்தை நடத்தவேணும்.

உங்கள் பார்வையில் நிறையத் தவறுகள் உள்ளன.

சமூகவிரோதிகளை புலிகள் மட்டுமே தண்டித்தனர் என்பது முதல் தவறு. சமூக விரோதிகளை இதர சமூக விரோத சக்திகளும் தண்டித்திருந்தனர்.

மண்டையில் போட்ட சமூக விரோதிகளாலும் குறிப்பாக விபச்சாரத்துக்கு எதிரான நடவடிக்கைகளாலும் தான் பால்வினை நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இதனை மறுதலிக்க முடியுமா..????!

மேலும்... விபச்சாரம் சட்டரீதியாக உள்ள நாடுகளில் கூட ஆட்கடத்தல் மற்றும் மறைக்கப்பட்ட விபச்சாரங்கள் நிகழ்கின்றன.வரி.. வட்டி.. என்று அங்கும் எத்தனையோ பிரச்சனைகள். அதற்கு அதிகமாக குடும்பப் பிறழ்வுகள்..! இவை எதுவுமே உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா..?????!

அண்மையில் கூட பிரிட்டனில் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பீட்டில்.. கிழக்கு ஐரோப்பிய பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு விபச்சாரத்துக்குள் தள்ளப்பட்டிருக்கும் செய்திகள் வந்தன. பெண் பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டு இத்தாலியில் வைத்து எஜமானர்களின் அதீத பணத்தேவைக்கு விற்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த நிகழ்வுகளைத் தட்டிக்கேட்க வேண்டிய காவல்துறை.. நீதித்துறையினரே அந்தப் பெண்களை விபச்சாரத்தேவைக்காக அணுகிய சம்பவங்கள் நடந்திருந்ததோடு அதுபற்றிய விபரணம் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

ஆக.. விபச்சாரம் போன்ற பகிரங்கப்படுத்தினாலும் அடுத்தவர்கள் மறைத்துச் செய்ய விரும்புகின்ற தொழில்களால் எப்போதுமே சமூக ஆபத்துக்களைக் கட்டுப்படுத்துவது இலகு அல்ல. அதுமட்டுமன்றி சுகாதார சேவைகளை இவர்களுக்கு வழங்க அதிக நிதி ஒதுக்கீடுகள் அவசியம். இவற்றை யார் செய்வது.. விபச்சார வரி.. இதனைச் செய்ய போதுமாக இருக்குமா..??! அதிலும் வரியேய்ப்பு வியாபாரம் நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்..????! ஏலவே சட்டரீதியாக்கப்பட்ட விடயங்களிலேயே நாட்டில் சட்டத்தை சரியா கடைப்பிடிக்கக் காணம்.. இப்ப இது வேற...??! நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் காணம்.. இந்த இலட்சணத்தில் விபச்சாரமும் வந்தால்.. சிறீலங்கா தெற்காசியாவின் தாய்லாந்தாகும் நிலைமையே தவிர வேறிருக்காது.

எமக்கு அதுபற்றி கவலை இல்லை. இருக்கும் கவலை எல்லாம் தமிழ் பெண்கள் இதற்கு கருவியாக பாவிக்கப்பட்டு தமிழின அழிப்புக்கு இவ்வகையான சட்டமூலங்கள் வெளிப்படையாகவே அங்கீகாரம் அளிக்குமோ என்பது மட்டுமே..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

நல்ல கூட்டம்

என்ன சொல்ல வாறீங்கள்?

ஜரோப்பாவில் தமிழர்கள் போய்வாறதில்லையா?

இதை விட மோசமான உறவுகள் பரிஸில் இருக்கு அதை விட தொழிலாக செய்பவர்களிடம் போய்வருவது தவறில்லை.

நீங்கள் சொன்ன அணைத்து நீங்கள் இருக்கும் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் இருந்து கூட்டம் கூட்டமாக டென் ஹாக் என்ற இடத்துக்கு தெரிந்த பையங்கள் போய்வருவார்கள்.

நான் இருக்கும் நாடு எனது நாடல்ல ....இன்னொருவனின் நாட்டில் தஞ்சம் புகுந்து உங்களைப்போல இருக்கிறேன் .[நீங்கள் அகதி இல்லாவிட்டால் இந்தக்கருத்துக்கு மன்னிக்கவும்] பிரச்சனைகளின் விரட்டலாலேயே ஓடிவந்து ,நாடோடியாய் அலைகிறேன் ..இங்கு வந்து எந்தப்பிரச்சனைக்காக உயிரை காப்பாற்றவேண்டும், அல்லது உறவுகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திகாய் வந்தேனோ அப்படிப்பட்ட பிரச்சனைகளை மேல் குறிப்பிட்ட செயல்களை செய்து மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை ..... :D .....

.

நான் இருக்கும் நாட்டில் அது மட்டுமல்ல..... .கஞ்சா பத்துவதற்கும் , கஞ்சா விற்பதற்கும் கூட அனுமதி இருக்கு ....அனுமதி இருக்கு தானே என்பதால் நான் ,கஞ்சா பத்த வேண்டும் ,அல்லது அதற்கு காசு கொடுத்து போக வேணும் என்ற கட்டாயம் இல்லை :lol: .

இந்தக்கருத்து மூலம் நான் பெரிய மகான் என்று தத்துவம் கூறுகிறேன் என்று தப்பாய் நினைக்கவேண்டாம் ......

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியம்............................. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன அணைத்து நீங்கள் இருக்கும் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் இருந்து கூட்டம் கூட்டமாக டென் ஹாக் என்ற இடத்துக்கு தெரிந்த பையங்கள் போய்வருவார்கள்.

என்ன சொல்ல வாறீங்கள்?

ஜரோப்பாவில் தமிழர்கள் போய்வாறதில்லையா?

இதை விட மோசமான உறவுகள் பரிஸில் இருக்கு அதை விட தொழிலாக செய்பவர்களிடம் போய்வருவது தவறில்லை.

ஒருபக்கம் விபச்சாரத்துக்கு ஆதரவு

மறு பக்கம்

நான் போவதில்லை

நண்பர்கள் போனார்கள்

எனது நாடும் சுத்தம்

பக்கத்து நாடுகள் தான் கெட்டுக்கிடக்கின்றன என்ற வேசமிடல்.

நான் வசிக்கும் நாட்டை இதற்குள் தேவையற்று இழுத்து சேறு பூசுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயம்: ஸர்மிளா செய்யித் face.jpg By General

2012-11-21 11:00:11

பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா செய்யித் பி.பி.சி.தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதேவேளை இவருடைய கருத்துக்கு எதிராக பலர் எதிர்ப்புக்களை தெரிவித்ததையடுத்து அதற்கு விளக்கமளிக்கும் வகையில் தனது முகப்புத்தகத்தில் கருத்தினையும் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியுமென தென்பகுதி மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்னா என்பவர் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் இது தொடர்பாக பி.பி.சி.தமிழோசை, ஸர்மிளாவை தொர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

(ஒலிப்பதிவு: நன்றி பி.பி.சி)

இது தொடர்பாக ஸர்மிளா தொடர்ந்து கூறுகையில், பாலியல் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் உல்லாசத்துறையை மேம்படுத்த முடியும்.

உல்லாசத் துறையை ஊக்குவிப்பதற்காக பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதென்பது நல்ல விடயமாக நான் பார்க்கின்றேன். வேறு சில நாடுகளிலும் இந்த நடைமுறை இருக்கின்றது. பொதுவான அடிப்படையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க அந்த மாகாண சபை கூறியுள்ள காரணங்கள் சரியானவை என நான் பார்க்கின்றேன்.

இலங்கை பாரம்பரிய கலாசார நாடு என்று கூறப்பட்டாலும் கூட இலங்கையில் பாலியல் தொழில் என்பது அதிகரித்து வருகின்றது. சட்டபூர்வமாக்காமலேயே பாலியல் தொழில் அதிகரித்துள்ளது.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் அது எந்தவொரு பாதகத்தையும் ஏற்படுத்தாது. அது பாதுகாப்பை ஏற்படுத்தும் என்று நான் கருதுகின்றேன். இலங்கையில் சுனாமிக்குப்பின்னரான காலப்பகுதியில் இந்த பாலியல் தொழில் என்பது அதிகரித்து காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது நடைபெறும் அபிவிருத்தியினால் வெளிநாட்டு பிரஜைகளின் வருகை இவைகளின் மூலமும் இந்த பாலியல் தொழில் என்பது அதிகரித்து வருகின்றது என்று ஸர்மிளா செய்யித் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸர்மிளா தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிரப்புகளை தெரிவித்துள்ளனர்.

அவர் தனது முகப்புத்தகத்தில் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

'பிபிசி செய்திச் சேவையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல் தொடர்பாக என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக் குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்கள், கருத்துக்களுக்கான எனது கவலையினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும் ஹராமாக்கப்பட்டதும் விபச்சாரம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இஸ்லாமிய பெண்ணாக எந்தவித மாற்றுக்கருத்தும் எனக்கில்லை. சமகால நடைமுறை தொடர்பான எனது கருத்தையே நான் பிபிசிக்கு தெரிவித்திருந்தேன். நான் இஸ்லாமிய சமூகப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது என்ற அடிப்படையில் பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது என்றும், அது சட்டபூர்வமாக்கப்படும்போது அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறவும் பாதுகாப்புப் பெறவும் வழியை ஏற்படுத்தும் என்பதே என் கருத்து.

பாலியல் தொழில் அங்கீகரிப்பட்டது என்றோ. அதில் யாவரும் ஈடுபடலாம் என்றோ நான் பிரச்சாரம் செய்யவில்லை. முஸ்லிம் சமூகத்தில் தடைசெய்யப்பட்ட விபசாரம், பாலியல் தொழில் என்ற அங்கீகாரத்துடன் ஏனைய சமூகத்தில் நடைபெறுவது அப்பட்டமான உண்மை. அந்த உண்மையையும் அதன் பாதிப்பையும், சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பையும் கவனத்திற் கொண்டுதான் எனது கருத்தை நான் வெளியிட்டிருந்தேன்.

ஒரு பெண்ணாக பாலியல் தொழிலை, பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதை வன்மையாககக் கண்டிப்பதாகக்கூடக் குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்து முஸ்லிம் சகோதரர்களை காயப்படுத்துவதாக அல்லது பிழையான முறையில் விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தால் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=1740

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சமூகத்தில் தடைசெய்யப்பட்ட விபசாரம்,

பாலியல் தொழில் என்ற அங்கீகாரத்துடன்

ஏனைய சமூகத்தில் நடைபெறுவது அப்பட்டமான உண்மை.

இவரும்

எனது சமூகத்தில் இல்லை

ஏனைய சமூகங்களில் தான் உள்ளது என்கிறார்........

எல்லோரும் ஒரு மார்க்கமாகத்தான் புறப்பட்டிருக்கிறார்கள்.............

  • தொடங்கியவர்

[size=4]பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்று சமூக ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்றும் தேவைப்படின் பாலியல் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் தென்பகுதி மாகாண சபையின் ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்ற நிலையிலேயே சமூக ஆய்வாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் சமூக ஆய்வாளரான, சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சர்மிளா செய்யத் வெளிநாட்டு செய்தி சேவைக்கு மேலும் தெரிவிக்கையில்,

"பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும்.

இலங்கை ஒரு பாரம்பரிய கலாசாரங்களை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு ஏற்கனவே பாலியல் தொழில் மிகவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறைக்கு நல்லது. அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும்.

ஏற்கனவே, பல கிராமிய மற்றும் சிறிய பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இப்படியாக அந்த தொழில் சட்டபூர்வமாக்கப்படுவது, அவர்களுக்கு சிறிதளவாவது பாதுகாப்பை ஏற்படுத்தும்" என்றார்.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53149-2012-11-21-05-48-25.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மாகாண சபையே ஒரு உப்பு சப்பிலாத ஓன்று யாரும் கணக்கு எடுக்கிறதில்ல இதுக்குள்ள அந்த மாகான சபை உறுப்பினர் சொல்லுறத யாரு கேக்க போறாங்க? அப்பிடி ஒரு சட்டம் கொண்டு வருகின்ற எந்த எண்ணமும் இலங்கை அரசுக்கு இருக்காது தேரர் மார் விட மாட்டினம்

இவரும்

எனது சமூகத்தில் இல்லை

ஏனைய சமூகங்களில் தான் உள்ளது என்கிறார்........

எல்லோரும் ஒரு மார்க்கமாகத்தான் புறப்பட்டிருக்கிறார்கள்.............

இது சரியான உண்மை.

அரசு பாலியல் தொழில் சரியா பிழையா என்ற விவாதத்தில் இறங்கத்தேவையில்லை. அது சமய கோட்பாடு. இதில் ஈடுபடுபவர்களில் ஒரு மதிப்பிற்கு, 5% வீத மடம்களைத்தவிர, இது வறிய பெண்களின் தொழில். அவர்களுக்கு நேர்த்தியான தொழில் ஒன்றின் மூலம் தொடரான வருவாய் தேடிக்கொடுப்பதும், முடியாதவர்களுக்கு சமூகசேவை பணம் கொடுப்பதும் அரசின் கடமை.

முஸ்லீம் மதத்தில் இருக்கும் ஒரு குறைபாடு, விபச்சாரம் இருப்பது பெண்களின் பிழைகாகப் பார்ப்பது. அது இருப்பதன் 95% வீத காரணம் பிழையான அரசு பதவியில் இருப்பதே. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் பெண்களை இயன்றளவு கவனிப்பதால் மட்டுமே கிழக்கு ஐரோப்பிய பெண்கள் அங்கே இறக்குமதி செய்யப்படுவது. மேற்கு பெண்கள் கிழக்கில் தொழிலுக்கு போவதில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகள், தற்கால உலகில், ஜனநாயாகத்தின் உச்சியில் இருப்பதால் மக்கள் செய்வதை குற்றமாக கூறி தடுக்க முன் வரவில்லை. ஆனால் இலங்கையில் சர்வாதிகாரத்தால் மட்டும்தான் புது புது பெண்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இதில் இழுத்து விடப்படுகிறார்கள். எனவே இலங்கை அரசு மேற்கு ஐரோப்பிய சட்டங்களை உதாரணம் காட்ட முயலக் கூடாது.

முஸ்லீம் மதம் மாதிரி, சைவமோ பௌத்தமோ இதை பெண்களின் குற்றமாக மட்டும் பார்க்கவில்லை. இரண்டு சமயத்திலும் பிறன்மனை விளைதலில் தொடங்கி, ஈடுபடும் இரண்டு பக்கத்திலும் இது பஞ்சமா பாதகத்தில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வழமையில் மத்திய,ஏழை மக்களிடம்தான் கலாச்சார, சமயநம்பிக்கைகை வேருன்றியிருப்பது. அதன் அர்த்தம், இதை செய்யும் சைவ, பௌத்த பெண், வயிற்றுக்கு தாளம் போட்டு வாழ்க்கை நடத்துவது மட்டும் அல்ல, தன் வாழ்நாளை பஞ்சமா பாதகம் இழைக்கும் குற்றவாளியக்கத்தான் கண்டு வேதனையில் கழிக்கிறாள். இலங்கையின் இராணுவ அரசு, மக்களுக்காக தான் இருக்க மறுப்பதால்தான், மக்களின் பிரச்சனைகளை உணராமல் இதை சட்டமாக்க முயல்வது.

நிச்சயமாக இலங்கை மாதிரி ஒரு நாட்டில் அது இருப்பது வறுமையின் எடுத்துக்காட்டு. இலங்கையில் அது அதிகரிப்பதன் காரணம், எதையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு பகுதி தான் தோன்றித்தனமாக சிந்திப்பது அதிகரிப்பதும், அன்றாடவாழ்க்கைக்கு வறு கழுவ முடியாது போவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுமே. இலங்கைக்கு மட்டுமாக அது, இன வாத, இராணுவ பிரசன்னத்தின் எடுத்து காட்டும் கூட. சாதாரண நிலைமைகளில், பெண்கள் விரும்பாத தொழிலாக அது இருப்பதால், அரசு செய்ய வேண்டியது அது இருப்பதன் காராணங்களை ஆராய்ந்து அதில் அவர்கள் விழ வேண்டி ஏற்படும் காரணங்களை இல்லாமல் செய்தலே.

அதை குற்றமாக்குவதால் அது இல்லாது போகாது. ஆனால் அதை சட்டமாக்குதால் அரசு தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளுக்கு என்ன தீர்வு கொடுக்கிறதோ அதையேதான் பெண்களின் பிரச்சணைகளுக்கும் கொடுக்கிறது.

அதை சட்டமாகுவதால் அரசு தானது தேவைக்கு குடிவரவு திணைக்களத்தின் பிடிகளை தளர்த்த முயல்கிறது. குடும்பம் இல்லாமல் பெருமளவில் வந்து சேர்ந்துவிட்ட சீனதொழிலாளர்களுக்கு தீவனம் போட புதிய உத்திகளை கையாள முயல்கிறது. ஆனால் சட்டமாக்கிய பின் இதிலும் அரச ஊழல்கள் தொற்றிக்கொள்ளபோவது மட்டுமல்ல, வெளியில் இருந்து வரும் இந்த தொழிலாளர்களுடன் போட்டி போட முடியாமல், இராணுவத்தால் வனமுறையாக இதில் இழுத்துவிடப்பட்ட பெண்கள், இதை செய்தும் வயிறு கழுவ முடியாத நிலை வரப்போகிறது.

இதை சமயவிடயமாக மட்டும் பார்க்க கூடாது. இதை சட்டமாக்குவதன் நோக்கம், பணம் படைத்த அதிகாரவர்க்கதை குற்றத்தில் இருந்து தப்ப வைப்பதே, இது அதிகார வர்க்கத்தின் இச்சைகளுக்காக இலங்கையில் மெல்லிய இனமான பெண்கள் சமுதாயம் மேலும் மேலும் அடிமைப்படுத்தப்படுவதின் அறிகுறியே

மேற்கு ஐரோப்பிய நாகளில் பெண்களுக்கு இருக்கிர பாதுகாபுகள் எல்லாம் இலங்கையில் முதலில் வரட்ட்டும். அதன் பின் இதை சட்டமாக்கட்டும்.

சர்வதேச நாடுகள் இந்த பெண்களுக்காக கதைக்க முன் வரவேண்டும். இவர்களின் அன்றாட அவலங்களை தீர்க்க அரசை நிப்பந்திக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=5]பாலியல் தொழிலை நான் பிரசாரம் செய்யவில்லை: சர்மிளா விளக்கம்[/size]

[size=4]பாலியல் தொழில் அங்கீகரிப்பட்ட வேண்டும் என்று நான் பிரசாரம் செய்யவில்லை என சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான சர்மிளா செய்யத் தெரிவித்தார்.[/size]

[size=4]இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் எனது கவலையினை தெரிவித்து கொள்கின்றேன்.

விபசாரம் இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும் ஹராமாக்கப்பட்டதும் என்பது மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பில் இஸ்லாமிய பெண் என்ற வகையில் எந்தவித மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.

சமகால நடைமுறை தொடர்பான எனது கருத்தையே நான் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்திருந்தேனே தவிர சட்டமாக்க வேண்டும் என குறிப்பிட்டவில்லை. நான் இஸ்லாமிய சமூகப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது.

பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது. அது சட்டபூர்வமாக்கப்படும் போது அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் பெறவும் பாதுகாப்பு பெறவும் வழியை ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து.

ஒரு பெண்ணாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதையும் வன்மையாககக் கண்டிப்பதாக குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்து முஸ்லிம் சகோதரர்களின் உணர்வுகளை நோகடிப்பதாக அல்லது பிழையான முறையில் விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தால் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுகின்றேன்" என்றார்.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53171-2012-11-21-09-11-21.html

  • தொடங்கியவர்

[size=5]பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கல் : சுற்றுலாதுறைக்கு நல்லது ஆனால் பெண்களுக்கு?[/size]

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்று தென்பகுதி மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.

[size=3][size=4]அத்துடன் தேவைப்படின் பாலியல் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]அதேவேளை, இப்படியாக பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்கின்ற கருத்தை சமூக ஆய்வாளரான, சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சர்மிளா செய்யத் ஏற்றுக்கொள்கிறார்.[/size][/size]

[size=3][size=4]இலங்கை ஒரு பாரம்பரிய கலாச்சாரங்களை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு ஏற்கனவே பாலியல் தொழில் மிகவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறைக்கு நல்லது என்றும் அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும் என்றும் சர்மிளா கூறுகிறார்.[/size][/size]

[size=3][size=4]ஏற்கனவே, பல கிராமிய மற்றும் சிறிய பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இப்படியாக அந்த தொழில் சட்டபூர்வமாக்கப்படுவது, அவர்களுக்கு சிறிதளவாவது பாதுகாப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.[/size][/size]

[size=3][size=4]இருந்தபோதிலும், இந்தத் தொழில் சட்டபூர்வமாக்கப்படுவதால், அந்த தொழிலில் ஈடுபடும் தரகர்களே அதிக பலனைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.[/size][/size]

[size=3][size=4]அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.[/size][/size]

[size=5]http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121120_sharmila.shtml[/size]

ஒருபக்கம் விபச்சாரத்துக்கு ஆதரவு

மறு பக்கம்

நான் போவதில்லை

நண்பர்கள் போனார்கள்

எனது நாடும் சுத்தம்

பக்கத்து நாடுகள் தான் கெட்டுக்கிடக்கின்றன என்ற வேசமிடல்.

நான் வசிக்கும் நாட்டை இதற்குள் தேவையற்று இழுத்து சேறு பூசுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

உங்கள் கண்டனத்தை ஜநா சபையில் நிறைவேற்றவும். :D

ஜயா நண்பர்கள் போனார்கள் எனக்கும் போக ஆசை ஆனால் என்னை கூட்டிச் சொல்ல அவர்கள் விரும்பவில்லை அடுதது நீங்கள் வசிக்கும்நாட்டில் ஒன்றும்நடைபெறுவதில்லையோ?

எனது நாடு சுத்தம் என்று எங்கே ஜயா சொன்னேன்?

பக்கத்து நாடு சுத்தமில்லை என்று எங்கை ஜயா சொன்னேன்.

நான் அறிந்தவரை ஒல்லாந்தில் விபச்சாரமும் கஞ்சாவும் அனுமதிக்கப்பட்ட ஒன்று

விசுகு அண்ணை நீங்கள் கருத்தை திசை திருப்புவதும் மற்றது எதைச் சொன்னாலும் உங்களை நோக்கி சொன்னது போல் தொப்பியை எடுத்து தலையில் போட்டு தெருச்சண்டியர் போல் எழுதுகிறீங்கள் :D:lol:

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்

[size=5]சர்மிளாவின் பாலர் பாடசாலைக்கு தீ வைக்க முயற்சி[/size]

[size=4]இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்கிற யோசனை தொடர்பில் தமது கருத்தை தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் நிர்வாகத்திற்குரிய பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது சகோதரியான சயீத் அஹமது பர்ஸானா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாலர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்த வேளை கதவு துவாரம் ஊடாக உள்ளே பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், இரும்புக் கதவு என்பதால் தீ உள்ளே பரவவில்லை என்றும் தெரிவிக்கின்றார்.

தனக்கும் பாலர்களுக்கும் கட்டிடத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு ஏறாவூர் காவல்துறையிடம் தான் செய்த முறைப்பாட்டையடுத்து பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினரிடம் தொடர்பு கொண்ட போது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புகள் இல்லை என்றும் இதுகுறித்த மேலதிக விசாரனைகள் நடைபெற்று வருவதாகவும் பதிலளிக்கப்பட்டது.

இதற்கிடையே, புதன் கிழமை ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி 5 பேர் கொண்ட குழு, சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் பெற்றோரை வியாழக்கிழமை இரவு சந்தித்து ஷர்மிளா சயீத்தினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக உரையாடியது.

இந்த சந்திப்பு தொடர்பாக சம்மேளனத்தைச் சேர்ந்த மௌலவி எம்.எல்அப்துல் வாஜித் சம்மேளன பிரதிநிதிகளுக்கு அவருடன் தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் முன் வைத்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

தனது மகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், இஸ்லாததிற்கு எதிரானது என்று அவரது தந்தை ஏற்றுக்கொண்டதாகவும், அதற்காக தனது வருத்தத்தை தெரிவித்ததோடு தங்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் மௌலவி ஏ.எல்.அப்துல் வாஜித் குறிப்பிட்டார்.

தங்களால் கூட தம் மகளுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாக அவரது தந்தை இந்த சந்திப்பில் தங்களிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர், ஒரிரு நாட்களில் தாம் கொழும்புக்கு நேரில் சென்று தமது மகளின் தொடர்பை பெற்று பள்ளிவாசல்கள் சம்மேளனததின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய மன்னிப்பு கோர வைப்பது தொடர்பான உறுதிமொழியை ஷர்மிளாவின் தந்தை தங்களுக்கு வழங்கியதாகவும் அப்துல் வாஜித் மேலும் குறிப்பிட்டார்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1778

  • 2 weeks later...

  பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு கோருமளவிற்கு அரசியல்வாதிகள் தரம்குறைந்துள்ளனர்

 

4.12.12

 

sopita_therer.jpg

இலங்கையில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு கோருமளவிற்கு அரசியல்வாதிகள் தரம்குறைந்துள்ளனர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தேர்தலில் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் இவ்வளவு இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது. இவ்வாறான நிலைமை சமூகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்தும். பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.வேறு மதத்தவர்களின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு பௌத்த பிக்குகள் இழிவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.   

http://www.tharavu.com/2012/12/blog-post_3158.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.