Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

[size=4]நவம்பர் 21 தொடக்கம் 27![/size]

[size=4]தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை நீத்த உத்தமவீரர்களை நினைவுகூரும் புனித வாரம் . இலட்சியக்கனவுடன் துயில்கொள்ளும்அந்த தெய்வங்களை பூஜிப்பதற்கு எமக்கு கிடைத்துள்ள அற்புத தருணம். தமது இனத்தின் அடிமைச்சங்கிலியை தகர்த்தெறிவதற்காக உயிரையே காணிக்கையாக்கிய அந்த தியாக செம்மல்களை வணங்குவதற்கு கிடைத்துள்ள தூய வாரம்.[/size]

[size=4]ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்குள்ளும் ஆக்கிரமிப்புக்குள்ளும் சிக்கிச்சீரழிந்து உரிமைகள் பறிக்கப்பட்ட வெறும் உடலங்களாக சிஙகளதேசத்தின் அடிமைகளாக வாழ்ந்த தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதம் தரித்து தாய்மண்ணுக்காக உயிர்துறந்த அஞ்சா நெஞ்சங்களையே இவ்வாரத்தில் நாம் நினைவு கூருகிறோம். தமது இனத்தின் விடிவே தமது இலட்சியம் என்ற கொள்கை வரித்துக்கொண்ட இந்த மாவீரர்கள் தமது மக்களையும் மண்ணையும் அவ்வளவுக்கு நேசித்தார்கள். தங்களது இறப்பின் ஊடாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தவேண்டும். அந்த வலியில் ஆக்கிரமிப்பாளன் எமது தேசத்தை விட்டகலவேண்டும் என்ற கொள்கையுடன் தேசத்துக்காக உயிர் நீத்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்.[/size]

[size=4]அவர்கள் தங்களது வாழ்வை பற்றிக்கவலைப்படவில்லை. தங்களது ஆசா பாசங்களை பற்றி கவலைப்படவில்லை. தமக்கு விடுதலைவேண்டும் என்றுகூட ஆசைப்படவில்லை. அடுத்தகணம் உயிர்துறப்பதற்கு தயாராகி கந்தகசுமையுடன் எதிரியுடன் மோதத்துணிந்தவர்கள் தமக்கு விடுதலைவேண்டும் என்ற போராடவில்லை. தமது மண்ணுக்கும் மக்களுக்கும் விடுதலைவேண்டும் என்ற இலட்சியத்துடனேயே போராடினார்கள்.நெஞ்சிலே குண்டேற்று வீழ்ந்தார்கள். [/size]

[size=4]எமது தேசத்தின் ஆன்மாவையும் தேசியத்தின் உறுதியையும் இனத்தின் வெற்றியையும் இன்று பாரெங்கும் உள்ளவர்கள் உற்றுப்பார்த்து உறைந்து போயுள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த மாவீரர்கள். வீரம் செறிந்தது தமிழினம் என்று எட்டுத்திங்கும் பறைசாற்றிவிட்டு சென்றவர்கள் இவர்கள். எமது இனத்துக்கு ஒரு விடிவை சிங்களதேசம் வழங்க மறுப்பினும் சர்வதேசமும் அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எழுதாத விதியை தமது உயிரால் எழுதிச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.[/size]

[size=4]பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதிகள் என்றும் தமிழீழ தாகத்தையும் விடுதலைப்புலிகளையும் ஒற்றைச் சொற்களுக்குள் அடக்கிவிடமுடியாது என்ற உண்மையை உலகஅரங்கிலே இன்று இந்த மாவீரர்களின் இறப்பு எழுதிச்சென்றிருக்கிறது. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடி இறந்திருக்கிறார்கள் என்றால் அதனை எவருமே ஒரு கிள்ளுக்கீரையாக ஒதுக்கிவிடமுடியாது. ஒரு இனம் தனது நியாயமான உரிமைகளையும் அபிலாஷைகளையும் வேண்டி சத்தியத்தின்வழி நின்று போராடியது என்ற உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும். அந்த இனத்தின் வேண்டுதலை நிறைவுசெய்யவேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்திச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.[/size]

[size=4]தமிழீழ விடுதலைப்போராட்டம் இன்று வித்தியாசமான பரிமாணத்தை எடுத்திருக்கிறது. இந்த மாவீரர்களின் மீது சத்தியம் செய்து அவர்களின் இலட்சியக்கனவுகளை அமைதிவழியில் சென்று அடைவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அல்லல்படும் எமது மக்களுக்கு அமைதிவேண்டும் என்றும் அவர்களுக்கு அவர்களது உரிமைகள் வேண்டும் என்பதே மாவீரர்கள் அவா. நிறைவேறாத அவர்களது ஆசையை நாங்கள் நிறைவேற்றவேண்டிய வரலாற்று பொறுப்பாளிகளாக நாங்கள் இங்கு நின்றுகெண்டிருக்கிறோம். விதைகுழியில் தூங்குகின்ற மாவீரச்செல்வங்களின் நெஞ்சிலே கனன்ற இலட்சிய நெருப்பு எமது நெஞ்சிலும் எரியவேண்டும். அவர்களை போல கழுத்திலே நஞ்சுடன் களத்தில் நின்று போராடவேண்டிய தேவை இன்று இல்லை. அவர்களது இலட்சிக்கனவை நாங்கள் பொறுப்பேற்று விடுதலைக்காக அவர்கள் அமைத்த உறுதியான பாதையில் பயணம்செய்தாலே, அவர்களின் கனவுக்கு உரமூட்டும் பாரிய பணியாக அமையும்.[/size]

[size=4]சர்வதேசமும் உற்றுப்பார்க்க ஆரம்பித்திருக்கும் எமது போராட்டத்தின் நியாயங்களை இன்னும் தெளிவாக அவர்களுக்கு விளக்குவோம். மாவீரர்களின் துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் பாய்ந்த வேகத்துடன் இந்த பணியை நாங்கள் முன்னெடுப்போம்.. குருதியில் தோய்ந்து சாம்பர் மேடுகளாக காட்சியளிக்கும் எங்கள் தாயகபூமியை மீண்டும் சிங்களத்திடமிருந்து மீட்டு சொர்க்கபூமியாக்கிக்கொள்வதற்கு உறுதியெடுப்போம்.[/size]

[size=4]கனவுகளுடன் தூங்கும் இந்த உத்தமவீரர்களை பார்த்து, உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி கல்லறையையும் கசியவைப்போம். அதுவே எம் மாவீரச்செல்வங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கை. அந்த சத்திய வேள்வியை நிறைவேற்ற உறுதியுடன் பயணிப்போம்.[/size]

[size=4]-பகலவன்[/size]

http://www.tamilleader.com/mukiaya/7596--21-27-.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]கனவுகளுடன் தூங்கும் இந்த உத்தமவீரர்களை பார்த்து, உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி கல்லறையையும் கசியவைப்போம். அதுவே எம் மாவீரச்செல்வங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கை. அந்த சத்திய வேள்வியை நிறைவேற்ற உறுதியுடன் பயணிப்போம்[/size].

உறுதி எடுத்துக்கொள்வோம்.

Posted

[size=4]

சர்வதேசமும் உற்றுப்பார்க்க ஆரம்பித்திருக்கும் எமது போராட்டத்தின் நியாயங்களை இன்னும் தெளிவாக அவர்களுக்கு விளக்குவோம். மாவீரர்களின் துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் பாய்ந்த வேகத்துடன் இந்த பணியை நாங்கள் முன்னெடுப்போம்.. குருதியில் தோய்ந்து சாம்பர் மேடுகளாக காட்சியளிக்கும் எங்கள் தாயகபூமியை மீண்டும் சிங்களத்திடமிருந்து மீட்டு சொர்க்கபூமியாக்கிக்கொள்வதற்கு உறுதியெடுப்போம்.
[/size]

[size=4]தொடர்ந்து சர்வதேசம் ஊடாக ஒரு அரசியல் தீர்வை பெற ஒற்றுமையாக பயணிப்போம். [/size]

[size=1]

[size=4]"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"[/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

[size=4]உறுதி எடுத்துஒற்றுமையாக பயணிப்போம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள் நடந்து செல்லும், கரடு முரடான பாதையில், ஒரு மிகவும் முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறோம்!

இன்னும் ஒரு சில காலத்திற்கு நகர்த்தப் படவேண்டிய, நகர்வுகளிலேயே, எமது தலைவிதி தங்கியுள்ளது!

மாயை, தனது பல முகங்களை, இனித் தான் கடுமையாகக் காட்டும்!

அதனை அடையாளம் கண்டு, பயணிப்போம்!

Posted

3911_350481391714097_1964048894_n.jpg

[size=4]மாவீரர் தமிழீழ மண்ணில் எழுதினரே மந்திரம்

அதை புலத் திசையாவும் மீட்டனரே

எம் எதிர்கால தலைமுறையினர்

மலை போன்ற உறுதி ஐயா உம்மிடம்

எங்கள் மனதெல்லாம் உம நினைவின் செம்தடம் .....[/size]

[size=5](முகநூல்) [/size]

Posted

காலம் கனிந்து வரும் கார்த்திகையை மூட வந்த கார் மேகங்கள் விலகும்.

பல மதங்கள் கொண்டாடும் இந்த ஒளிமாதம் முழுவதும் ஒரு நாள் ஒரு தனி திருநாளாக மலரும்.

அன்று வரை ஒரே நோக்காக, ஒரே இனமாக போராடி தமிழீழம் அமைப்போம்.

Posted

தமிழ் மக்களை கருத்தில் கொண்டு, சிங்களத்தை பொது எதிரியாக கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.