Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்; இந்தியா எதிர்ப்பு

Featured Replies

[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பில் 36 நாடுகள் பங்கேற்கவில்லை என்பதுடன் இந்தியா உட்பட 39 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனை இன்னும் நீடித்து வருவது ஆழ்ந்த கவலைக்குரியது. எனவே, அனைத்து நாடுகளும் மரண தண்டனையை ஒழிக்கும் நோக்கத்தில், மரண தண்டனையை கைவிட வேண்டும் என்று சமூக மற்றும் மனிதாபிமான விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா பொதுச்சபையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

அதில், மரண தண்டனையை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது. மரண தண்டனை விதிப்பதற்கான குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த ஐ.நா பொதுச்சபை தீர்மானித்தது. இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 110 நாடுகளின் ஆதரவுடன் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், பங்களாதேஷ், ஈரான், ஈராக், குவைத், லிபியா, கொரியா உள்ளிட்ட 39 நாடுகள் வாக்களித்துள்ளன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்தியா, 'ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் சட்ட நடைமுறையை தீர்மானிக்க இறையாண்மை உரிமை உள்ளது. இந்த தீர்மானம், மரண தண்டனையை கைவிட வற்புறுத்துகிறது. தீர்மானத்தை அதன் தற்போதைய வடிவத்தில் ஏற்க முடியாது' என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53153-2012-11-21-06-09-47.html

இந்த பழிவாங்க்கும் குணம் உள்ள, கருணை இல்லாத இந்தியாவை பாதுகாப்பு சபைக்குள் எடுக்கக்கூடாது. அது ஏற்கனவே நியாயமில்லாமல் நடந்துகொள்ளும் வல்லரசுகளின் செயல்ப்பாடுகளை மேலும் மோசமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பழிவாங்க்கும் குணம் உள்ள, கருணை இல்லாத இந்தியாவை பாதுகாப்பு சபைக்குள் எடுக்கக்கூடாது. அது ஏற்கனவே நியாயமில்லாமல் நடந்துகொள்ளும் வல்லரசுகளின் செயல்ப்பாடுகளை மேலும் மோசமாக்கும்.

மிகச்சரி.. ஊழ‌லும், ந‌ம்ப‌க‌த்த‌ன்மையும் அற்ற‌ அதிகாரிக‌ளின் கைகளுக்குள் உல‌க‌ ச‌மாதான‌ம் சென்றுவிட‌க்கூடாது. :rolleyes:

அவ‌ச‌ர‌மாக‌ தூக்கில் போட்ட‌த‌ற்கும் இந்த‌த் தீர்மான‌ம் வ‌ருவ‌துதான் கார‌ண‌மா? :huh:

அது இருக்க‌ட்டும்.. உல‌க‌ ம‌க்க‌ளின் சார்பாக‌ ஜ‌ன‌நாய‌க‌வ‌ழியில் உல‌க‌நாடுக‌ள் ம‌ர‌ண‌த‌ண்ட‌னை கூடாது என்று வாக்க‌ளித்துள்ள‌ன‌. இதன் அடிப்படையில், ஜ‌ன‌நாய‌க‌ ம‌ர‌புக‌ளைப் பின்ப‌ற்றி இந்தியா ம‌ர‌ண‌த‌ண்ட‌னைச் ச‌ட்ட‌த்தை நீக்குமா? :rolleyes:

மரண தண்டனை கூடாது என்றால், படு பயங்கர குற்றங்களைப் புரிகின்றவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? குழந்தைகளை திட்டம் போட்டு பாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்கின்றவர்களை சில வருடம் உள்ளே வைத்து விட்டு வெளியே விட வேண்டுமா? ஒரு சமூகத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வல்ல போதைப் பொருளை உற்பத்தி செய்கின்றவர்களை, விற்கின்றவர்களை வெளியில் விடுவது சரியா? கோடிக்கணக்கான மக்கள் நலன் அடையக் கூடிய திட்டங்களுக்குரிய பணத்தை திட்டமிட்டு சுருட்டிக் கொள்கின்றவர்களை என்ன செய்யலாம்?

இப்படியான குற்றவாளிகளை ஆயுள் தண்டனை என்ற பெயரில் உள்ளே சில காலம் வைத்துக் விட்டு வெளியே விடுவது என்பது மிக ஆபத்தானது. திட்டமிட்டு இத்தகைய கொடிய தவறு செய்கின்றவர்கள் ஒரு போதும் திருந்துவதும் இல்லை.

Edited by நிழலி
எழுத்துப் பிழைகள்

  • கருத்துக்கள உறவுகள்

மிக அண்மையில் ஒரு சிறுமியை பலாத்காரம் புரிந்த ஒருவனை தமிழக காவல் துறை என் கவுன்ட்டர் இல் சுட்டுத்தள்ளியது தமிழகத்தில் பலதரப்பட்டவர்களும் அந்த கொலையை ஆதரித்து காவல் துறைக்கு நன்றி எல்லாம் சொல்லி இருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இயற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டு சாசனமாக்கப்பட்ட ஆவணங்களே ஊசலாடுது.

இதில் இது வேறயா..........???

போங்கையா போய் சொந்த உழைப்பில் வாழும் வழி பாருங்கள்.

ஐநாவும் மண்ணாங்கட்டியும்............??? :( :( :(

மரண தண்டனை கூடாது என்றால், படு பயங்கர குற்றங்களைப் புரிகின்றவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? குழந்தைகளை திட்டம் போட்டு பாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்கின்றவர்களை சில வருடம் உள்ளே வைத்து விட்டு வெளியே விட வேண்டுமா? ஒரு சமூகத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வல்ல போதைப் பொருளை உற்பத்தி செய்கின்றவர்களை, விற்கின்றவர்களை வெளியில் விடுவது சரியா? கோடிக்கணக்கான மக்கள் நலன் அடையக் கூடிய திட்டங்களுக்குரிய பணத்தை திட்டமிட்டு சுருட்டிக் கொள்கின்றவர்களை என்ன செய்யலாம்?

இப்படியான குற்றவாளிகளை ஆயுள் தண்டனை என்ற பெயரில் உள்ளே சில காலம் வைத்துக் விட்டு வெளியே விடுவது என்பது மிக ஆபத்தானது. திட்டமிட்டு இத்தகைய கொடிய தவறு செய்கின்றவர்கள் ஒரு போதும் திருந்துவதும் இல்லை.

குற்றத்தின் தாற்பரியம் செய்தவரின் அப்போதைய மன நிலையை பொறுத்தது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை என்பது ஒரு வகை தத்துவார்த்த தண்டனை. அவன் எவ்வளவு காலம் உள்ளே இருக்க வேண்டும் என்பது பல காரணிகளில் தங்கியதொன்று.

அன்றிய யேட் என்ற பெண்ணின் வழக்கு முடிந்த பின்னர்,அந்த வழக்கு, சில வட மானிலங்களில் நடந்திருந்தால் அன்றியா சிறைகே போயிருக்க மாட்டார் என்று செய்திகளில் குறிப்பிட்டார்கள் .

http://en.wikipedia.org/wiki/Andrea_Yates

குற்றம் செய்தவரை அழிப்பதால்பாதிக்கபட்டவர் பலன் அடைவதில்லை. அமெரிக்காவில் தூக்கு தண்டனை அதிக செலவு கூட என்று கூறுகிறார்கள். அப்போது ஏன் தூக்குவான்.

சமுதாயத்தில் சேர்ந்து வாழ முடியாத நிலையில் ஒருவன் இருந்தால் சிறையில் வைத்து அவனை/அவளை சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்தலாம். அது திருத்துவதும், தண்டிபதும் கலந்ததாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் DNA டெஸ்டிங்க் கண்டு பிடித்ததால் பல தூக்கு தண்டனை நிரையில் இருந்தோர் விடுவிக்க பட்டனர். எனவே குற்றவவாளி என்று கண்டவனை விட்டு வைப்பத்தால் நீதி வழங்கும் சமுதாயம் தன்னைத்தான் தனது குற்றத்திலிருந்து விடுவிக்க இடம் எடுத்துக்கொள்கிறது. திருந்த சந்தர்ப்பம் எடுத்துக்கொள்கிறது.

Although the defense's expert testimony agreed that Yates was psychotic, Texas law requires that, in order to successfully assert the insanity defense, the defendant must prove that he or she could not discern right from wrong at the time of the crime. In March 2002, a jury rejected the insanity defense and found her guilty. Although the prosecution had sought the death penalty, the jury refused that option. The trial court sentenced her to life imprisonment in the Texas Department of Criminal Justice with eligibility for parole in 40 years.

  • தொடங்கியவர்

[size=6]மரணத்தைக் கொண்டாடும் தேசம்![/size]

[size=4]ஐ.நா. சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வில் மனிதநேயம் தொடர்பான பிரச்னைகளை கவனித்துக் கொள்ளும் குழு இது. இந்தக் கூட்டத்தில் ஒரு வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. “மரணத்தண்டனை விதிக்கப்படுவது உலகம் முழுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்”[/size]

[size=4]நிறவெறி தேசங்கள் என்று கருதப்படும் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்திருக்கின்றன. தீர்மானத்தை முழுமூச்சாக எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், மரணத் தண்டனையை எதிர்த்த காந்தியை தேசப்பிதாவாக கொண்டாடும் நாடுமான இந்தியாவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இன்னொரு ஜனநாயக நாடு அமெரிக்கா. அகிம்சையைப் போதித்த புத்தபகவானை வணங்கும் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளும் எதிர்த்திருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் எதிர்த்து வாக்களித்திருப்பதாக தெரிகிறது.[/size]

[size=4]ஏன் எதிர்த்தோம் என்பதற்கு இந்தியா விளக்கமும் கொடுத்திருக்கிறது. “ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சட்ட நடைமுறைகளை வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. இதில் குறுக்கிடுவது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்” என்று இந்தியா தனது எதிர்ப்புக்கான நியாயத்தை பேசியிருக்கிறது. அவ்வப்போது அண்டை நாடுகளிடம் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசியாவின் தாதா ‘இறையாண்மை’ குறித்துப் போதிப்பது கருப்பு நகைச்சுவைதான்.

“மரணத்தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்கிற ஒருவரி தீர்மானம் தவிர்த்து பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இத்தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் போன்ற வலியுறுத்தல்கள் குறித்து இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை ‘மரணத் தண்டனை’ என்பது ஊடகங்களுக்கு தரும் ஃப்ளாஷ் நியூஸ். அரசோ, எதிர்க்கட்சிகளோ சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் மக்களை மடைதிருப்ப ‘மரணத்தண்டனை’ உதவிக் கொண்டிருக்கிறது. மாநில அளவில் கலைஞர் ஆட்சியாகட்டும், ஜெயலலிதா ஆட்சியாகட்டும். இவர்களுக்கு ‘என்கவுண்டர்’ எப்படி உதவுகிறதோ அதுபோல மத்திய ஆட்சியாளர்களுக்கு மரணத்தண்டனை. மனித உரிமை, கருத்தியல், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்ப்பை அரசோ, மரணத்தண்டனைக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடும் குடிமக்களோ முன்வைப்பதில்லை. ‘தீவிரவாதிகளை எப்படி கட்டுப்படுத்துவதாம்?’ என்று ‘வெயிட்’டான காரணத்தை முன்வைத்து, மூளையை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு தூக்குத்தண்டனைக்கு ‘ஜே’ போடுகிறார்கள். வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இராணுவத்துக்கும், மற்ற பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஒதுக்கப்படுகிறதே.. அவற்றுக்கு முறையான கணக்கிருக்கிறதா.. அவர்கள் ஒழுங்காக வேலைபார்த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மாட்டார்களா.. தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முன்பாக நம் உளவு அமைப்புகள் தூங்கிக் கொண்டிருந்தனவா.. என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப நமக்கு துப்பில்லை.[/size]

[size=4]எனவேதான் கிட்டத்தட்ட திருட்டுத்தனமாக திடீரென்று கசாப்பை தூக்கிலிட்டிருக்கிறார்கள். மரணத்தண்டனை என்பது நியாயமான நீதியென்று பெருமிதமாக மார்தட்டிக் கொள்பவர்களுக்கு இந்த திருட்டுத்தனம் அவசியமில்லை. கசாப்பை தூக்கிலிடும் தேதியை வெளிப்படையாக அறிவித்தால் தீவிரவாதிகள் ஜெயிலைத் தகர்த்து கசாப்பை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள் என்றெல்லாம் அரசு அஞ்சியதா என்ன.. அவ்வளவு பலவீனமாகவா இந்தியா இருக்கிறது? கசாப்பின் தூக்குத்தண்டனையை ரகசியமாக நிறைவேற்றியதற்கு ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை இந்தியா சொல்ல வேண்டும்.[/size]

[size=4]விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக குஜராத் தேர்தலில் பாஜகவோடு பலப்பரிட்சை நடத்தியாக வேண்டும். இத்தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலின் ‘ட்ரைலர்’ என்று பாஜக பிரச்சாரம் செய்யும். அரசின் மீது தொடர்ச்சியாக ஊழல் கணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிர்க்கட்சியான பாஜக இனி ஊழலைப் பற்றிப் பேச அருகதையில்லை என்பதை அக்கட்சியின் தலைவர் கட்கரி நிரூபித்துவிட்டார். எனவே அடுத்து அவர்கள் எய்யப்போகும் அம்பு ‘கசாப்’தான் என்பதை பா.ஜ.க.வின் அரசியலை எடைபோடுபவர்கள் எளிமையாக யூகிக்க முடியும். அந்த வாய்ப்பை தர காங்கிரஸ் தயாராக இல்லை. ஒத்த வீட்டுக்கு துண்டு போட்டு போகும் பெரிய மனுஷன் கணக்காக அசிங்கமான முறையில் கசாப்பை தூக்கிலிட்டு விட்டது. மும்பையில் தெருவெங்கும் கொண்டாட்டமாம். கொஞ்ச நாட்களுக்கு தேசியவெறி தலைக்கேறி மக்கள் அரசு சார்பாக சிந்திக்கத் தொடங்குவார்கள். முன்பு இதேபோன்ற தேசியவெறியை கார்கில் போர் வாயிலாக கிளப்பி பாஜக ஆட்சிக்கு வந்தது நினைவிருக்கலாம். இவையெல்லாம் வெளிப்படையாக யூகிக்கக்கூடிய விஷயங்கள். காங்கிரஸுக்கு கசாப்பை தூக்கிலிட்டதன் மூலமாக கிடைக்கக்கூடிய மறைமுக பலன்கள் என்னவென்று தெரியவில்லை.[/size]

[size=4]எனவேதான் பதறிப்போய் குஜராத் படுகொலை புகழ் நரேந்திரமோடி அவசர அவசரமாக ‘அப்சல் குருவுக்கு எப்போ?’ என்று கேட்கிறார். காங்கிரஸ் அதையும் உடனடியாக செய்ய தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் பேச்சின் வாயிலாக அவர்களது ‘மூட்’ புரிகிறது. “கசாப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது. கசாப்போடு நாம் நின்றுவிட முடியாது. அப்சல் குருவுக்கான தண்டனையையும் விரைவுப்படுத்த வேண்டும்” என்கிறார். பேசுவது காங்கிரஸ் பொதுச்செயலரா அல்லது பாஜகவின் தலைவர்களில் ஒருவரா என்பதே தெரியாத அளவுக்கு திக்விஜய்சிங்கின் பேச்சு அமைந்திருக்கிறது. சிறுபான்மையினர் விஷயத்தில் பாஜகவோடு ஒப்பிட்டு காங்கிரஸை தூக்கிப்பிடிக்க இனி நமக்கு காரணங்கள் எதுவுமில்லை. இது இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை என்று பிரச்சாரப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் பாஜகவும், காங்கிரஸும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. பாஜகவின் செய்தித் தொடர்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வி, “நாட்டின் எதிரி தண்டிக்கப்பட்டுள்ளான்” என்று கருத்து சொல்லியிருப்பதின் மூலம் இதை புரிந்துக் கொள்ளலாம். ஒருவகையில் கசாப்பின் தூக்கு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நிம்மதியையும் தந்திருக்கலாம். தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாய் கசாப் அவர்களுக்கு உறுத்திக் கொண்டிருந்தான்.

நாட்டின் பாதுகாப்பை விட, அரசியல் பிரதிபலன்கள்தான் இங்கே மரணத்தண்டனையை தீர்மானிக்கின்றன. மரணத்தண்டனையை விட ஆபத்தான அம்சம் இது. மனிதநேயத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்துக் கொண்டே இருப்பது நமது கடமை.[/size]

http://www.luckylookonline.com/2012/11/blog-post_21.html

  • கருத்துக்கள உறவுகள்

லஞ்சம் தலை தூக்கும் இந்தியா போன்ற நாடுகளில் உண்மையான குற்றவாளி தண்டிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிக குறைவு.அரசியல் பழிவாங்கல்களுக்காக அரசுகள் லாவகமாக குற்றங்களை சோடித்து தண்டனைகளை வழங்குவதில் இந்தியாவுக்கு நிகர் இந்தியா தான்.குற்றவாளிகளை நல்வழிப்படுத்துதல் என்பதெலாம் இந்தியாவுக்கு சரிவராத ஒன்று.லஞ்சம் தராதவருக்கு லத்தியால் அடிக்கும் காவல் துறையினர் உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு நல்வழிப்படுத்தல் சரிப்பட்டு வராத ஒன்று.எனவே இவர்கள் மரணதண்டனையை ஆதரிப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இன்று அமெரிகாவில் சிறைகளில் இருக்கும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை உலகின் எந்த நாடுகளிலும் இல்லை.பல கைதிகளை வெளியில் விடுவதால் மீண்டும் மக்களுக்கு ஆபத்து ஆகி விடுவார்கள் என்பதால் உள்ளேயே வைத்துள்ளார்கள்.திருத்த முடியாதவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. உ+மாக ஒக்லகோமாவில(oklakoma) குண்டு வைத்து பல சிறுவர்களை கொன்ற ரிமதி மிக்வேய்(timothy timothy mcveigh) மின்சார கதிரையில் வைத்து கொல்லப்பட்டார். மேலும் சிறையில் வைத்து பராமரிக்கப்படும் கைதிகளின் செலவுகள் அனைத்தும் மக்களினால் கொடுக்கப்படும் வரிப்பணம் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.