Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் ஏன் இப்படி..??!

Featured Replies

வர்ணன் அண்ணா என்ன விளையாடுறீங்களா சுவரில ஒருகையால தட்டினா சத்தம் வரும் தான் ஆனாஅதுக்கு சுவரும் வேண்டும் தானே சுவரோ கையோ இல்லை வேறு எதுவுமோ இல்லாம ஒருகையால (பிறகு கையில 5 விரல் எண்டு கடி ஜோக் சொல்ல மாட்டீங்க தானே) மட்டும் சத்தம் எழுப்ப முடியுமா என்ன

அப்ப எப்பிடி ஒரு கையால தட்டுறது, தட்டுவதற்கு எதுவும் இல்லாவிடத்து அதைத் தட்டுறதா எப்படி கூறுவது :roll: :roll: :roll:

  • Replies 67
  • Views 12k
  • Created
  • Last Reply

:evil: :evil: :evil: :evil:

19ni2.jpg

23en.jpg

33df.jpg

ஓய் சாட்றீயின்ர நிலமையை பாருங்கோாாாா

:cry: :cry: :cry: :cry:

சாட்றீயின்ர நிலமையை பற்றி ஆராய கெட்டகதெனியா தலைமையில் விரைவிலேயே விசாரணைக்குழு அமைப்போம்.

கவலைப்படாதீர்கள் சின்னப்பு. :wink:

.

மேற்கோள்:

அறிவுக்கொழுந்து

கடவுளே யார் யார் கூட எல்லாம் நம்மளை படைச்சிருக்கிறாய்

இதன் அர்த்தம் என்ன சின்னப்பு? :roll: :roll: 8)

மேற்கோள்:

அது ஏன் பெண்கள் மட்டும் தான் இப்படியானவர்கள் எண்டமாதிரி ஓரு தலைப்போட இங்க போடப்பட்டிருக்கு இது தான் எனது கேள்வி

அது தலைப்பை தொடங்கியவரை பொறுத்தது - சகோதரம்!

மற்றும் படி ஒரு ஆண் இதை அலுவலக நேரத்தில் செய்திருந்தாலும்- இதுதான் நடந்திருக்கும்!

ஒரு நிறுவனம் தன்னோட நிகர வருமானத்தில் குறியா இருக்குமா? ஆண் பெண் விடயத்தில் அக்கறை செலுத்துமா-?

8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னோய் வணக்கம், நானும் நீயும் ஒரே இனம் தான் கண்டீரே இருந்தாலும் வாய் சும்மா கிடக்குதில்ல, :lol:

இந்த சம்பவம் எங்க நடந்தது, எப்ப நடந்தது இச்சம்பவத்தின் உண்மை தன்மை என்ன, செய்தி எடுக்கப்பட்ட ஊடகம் என்ன? :?:

மேலதிகாரி அரட்டை அடிக்காமல் அந்த பெண் அரட்டை அடித்தாரா? பரீட்சிப்பில், அரட்டை அடிப்பது இது வெ முதல் முறையாக இருக்கும் என பறவைகள் எண்ணுகின்றன. பறவைகளுக்கு தெரிந்த அரட்டையடிப்புக்காய் எந்த நேரத்திலும் பதவிகுறைப்புக்களோ, பறப்புக்களோ நடைபெற்றதில்லை. மாறாக, அரட்டையடித்து, முகமலர்வுடன் கூடிய பலர் பதவியுயர்வு பெற்றதை பறவைகள் நேர பார்த்துள்ளன.

அரட்டையடித்து வேலையிலிருந்து இறக்கப்பட்டதற்க்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு? அந்த பெண் அரட்டையடிப்பதறக்கு காரணம் ஒரு ஆண், அந்த ஆண் தனது சக்தியை காட்ட அவரை பதவியிறக்கியிருக்கலாம். அங்கே ஒரு போட்டி நிலை கூட இதற்க்கு காரணமாகியிருக்கலாம். அதே நேரம் நீங்கள் சொன்னது போல இது கனடாவில் நடைபெற்றிருந்தால், இதை பறவைகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. தொழிலாளர் சட்டப்படி அரட்டை அடிப்பதற்க்கு பதவியிறக்கில் ஒரு போதும் நடந்ததில்லை. அப்படி நடக்குமாயின், தொழிலாளர் நீதி மன்றங்களுக்கும், சங்கங்களுடாகவும் இது பற்றி, கதைக்கலாம். ஒரு முறை பரீட்சித்து விட்டு மறு நாள் பதவியிறக்கம் என்பது, கனடாவில் நடைமுறையில் இல்லாத ஒரு விடையம் என்பதை மதிப்புக்குரிய குருவிகளுக்கு, பறவைகள் பணிவாக தெரிவித்து கெரள்ள விரும்புகின்றன.

பறவைகள். நான் நடந்து வந்து எழுத நினைத்ததை நீங்கள் பறந்து வந்து எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதியதை தான் நானும் எழுத வந்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள்.

குருவிகளின் கூற்றுப்படி (என்னென்றால் அந்த செய்தி எங்கிருந்து பெறப்பட்டது என்று தெரியவில்லை) அந்த பெண்ணிற்கு தொழிலளார் உரிமை சட்டங்கள் பற்றி போதிய அறிவு இல்லையென்று தான் நினைக்கின்றேன்.

இந்த இணைப்பில் போய் பார்த்தால் இன்னும் நிறைய விபரங்களை அறியலாம்.

http://labourrights.ca/restrictivelaws.htm

http://servicecanada.gc.ca/en/home.html

  • தொடங்கியவர்

இது கனடாவில் இருந்து வந்தவர்களால் சொல்லப்பட்ட விடயம். தனிப்பட்ட பாதிப்புக்களின் வெளிப்பாடுகளாக கூட இருக்கலாம்..ஆனால் பொதுவாக முகாமைத்துவத்தில் ஒரு முக்கிய ஊழியர் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கும் போது இப்படியான நடைமுறைகளின் கீழ் மேலதிகாரிகள் ஊழியர் தொடர்பான முறைப்பாடுகளை உறுதிப்படுத்துவது ஒரு நடைமுறையே..! ஈமெயில் மூலமான அறிவித்தல் அவருக்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம்..!

பிரித்தானியாவில் அண்மையில் கூட மேலதிகாரியுடன் பாலியல் தொடர்பு கொள்ள வைத்து வதிவிட உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன..! சோ பெண்கள் தங்களை இப்படி எல்லாம் பாவிக்க அனுமதிச்சிட்டு அப்புறம் ஆண் ஆதிக்கம் என்று கொண்டு ஆண்களில் மட்டும் குறை காண்பதில் என்ன அர்த்தம்...! ஆண்கள் தவறுசெய்ய பெண்களும் தூண்டுதலாக அமைவதைத் தவர்க்கலாம் தானே..! முதலில் பெண்கள் தங்களை கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டு ஆசைகளுக்கு அளவுகோல் இடுவதன் மூலம் நிச்சயம் இப்படியான சம்பவங்களில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்..என்பதே பொதுவான நிலைப்பாடு..! :P :idea:

உயர்ந்த ஒழுக்கப் பண்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் ஆண்களுக்கும் வழிகாட்டிகளாக இருக்க முடியும். குறிப்பாக குறித்த பெண் "சேர்" எனது வேலையில் நான் தீவிரமாக இருக்கின்றேன் வேறு ஓய்வுநேரத்தில் இதைப்பற்றிக் கதைப்போமே என்று சொல்லி விடைபெற்றிருக்கலாம்..! ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அதுதான் முகாமைத்துவத்தால் எதிர்பார்க்கப்பட்டிருக்கும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் பெண்கள் தங்களை கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டு ஆசைகளுக்கு அளவுகோல் இடுவதன் மூலம் நிச்சயம் இப்படியான சம்பவங்களில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்..என்பதே பொதுவான நிலைப்பாடு..!

இதென்ன உப்புச்சப்பில்லாமல் கிடக்கு..?? பெண்களுக்கு மட்டும் தான் ஆசைகள் வருமா.. அவர்கள் மட்டும் தான் அடக்க வேண்டுமா..?? ஒழுங்கான உத்தியோகத்தராய் இருந்தால் விசாவைக்கோரியிருந்த குறிப்பிட்ட பெண் விசாவைப்பெற தகுதி உடையவராக இருந்தால் கொடுக்கிறது இல்லாட்டால் அதை நிராகரிக்கிறது.. பிறகெங்க பாலியல் அங்க வந்தது..?? முதல் ஒரு பதவியில் அமரும் போது இந்த வக்கிர எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தன்கடமையை ஒழுங்காக ஆண்கள் செய்ய வெளிக்கிட்டால் அதுவே போதுமானது.. இதில ஆணியம் மட்டும் இல்லை சுத்த அயோக்கியத்தனங்கூட இருக்கு.. அது தெரியல.. முதலில உந்த வக்கிர ஆசைகளை ஆண்கள் அடக்கிக்கொண்டால்.. பெண்களிற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த மனிதசமூகத்திற்குமே நல்லதாக்கும். எங்க குருவிகள் தேடிப்பிடிக்கிறியள் நல்ல கேசுகளை.. :wink: :P

  • தொடங்கியவர்

ஐயோ.. போய் பிபிசில பாருங்கோ... பெண்கள் சிலர் கொடுத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் ஒரு கோம் ஒபீஸ் அதிகாரி பதவி விலக்கப்பட்டிருக்கிறார். ஆதாரம் ஈழமுரசு போன வாரப் பதிப்பு..!

வேலைத்தளத்தில் பொது இடங்களில் ஆசைக்கு ஒரு அளவு இருக்க வேண்டும். எவனோ ஒருத்தன் கூட அவன் கதைக்கிறான் என்பதற்காக அலட்டிட்டு இருக்க முடியுமா...??! இல்லைத்தானே..! ஆனால் பாருங்கள் நடைமுறை வாழ்வில் எத்தனை பெண்கள் அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கினம். எவன் கம்பனிக்கு வரான் என்றுதான் இருக்கினம். இவைதான் அவைக்கும் சமூகத்துக்கும் தவறான செய்திகளைக் காவிச் செல்கின்றன. இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க அவரவர் தங்கள் மனங்களை அடக்கி ஆளத்தெரியாத பண்பாட்டு ஒழுக்கவியல் சீர்கேடு என்றே சொல்ல வேண்டும்..! :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலைத்தளத்தில் பொது இடங்களில் ஆசைக்கு ஒரு அளவு இருக்க வேண்டும். எவனோ ஒருத்தன் கூட அவன் கதைக்கிறான் என்பதற்காக அலட்டிட்டு இருக்க முடியுமா...??! இல்லைத்தானே..! ஆனால் பாருங்கள் நடைமுறை வாழ்வில் எத்தனை பெண்கள் அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கினம். எவன் கம்பனிக்கு வரான் என்றுதான் இருக்கினம். இவைதான் அவைக்கும் சமூகத்துக்கும் தவறான செய்திகளைக் காவிச் செல்கின்றன. இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க அவரவர் தங்கள் மனங்களை அடக்கி ஆளத்தெரியாத பண்பாட்டு ஒழுக்கவியல் சீர்கேடு என்றே சொல்ல வேண்டும்..!

ஹா ஹா ஹா.. நல்ல நகைச்சுவை.. ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் உடனை பண்பாட்டு ஒழுக்கவீனமா..?? என்ன குருவிகள் கனவே..?? ஒரு ஆணும் பெண்ணும் பேசிறது ஒழுக்கவீனம் என்று நினைச்சால் உங்கள் பார்வையில் கோளாறு என்று தான் சொல்லமுடியும்.. ஆணும் சரி பெண்ணும் சரி மனிதவர்க்கம் தானே.. இரண்டு மனிதர்கள் பேசிக்கொள்வதில் என்ன தவறு?? பேசிக்கொள்வது என்றால் அது அரசியலாக இருக்கலாம்.. அன்றாட நாட்டு நடப்புகளாக இருக்கலாம் நட்பு ரீதியான கலந்துரையாடலாக இருக்கலாம்.. வெறுமனவே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் ஆபாசமாக நினைக்கிற ஆதிகால நோக்கத்தை விட்டுவிட்டு.. கொஞ்சம் வெளியவாருங்கள்... இருவர் பேசிய உடன ஒழுக்கம் கெட்டுப்போறதாய் கற்பனை வேண்டாம்.

அதைவிட.. விசா கொடுக்கிற அதிகாரி தனது கடமையை ஒழுங்காக செய்தாலே போதும்.. அதற்குரிய சன்மானம் அவரை தேடி ஊதியம் என்ற ரீதியில்போய்ச்சேரும்.. அவர் தன்ர பாலியல்இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காய்.. தன்ர வேலைக்கும் துரோகம் செய்து.. அந்த பெண்ணிடம் ஏதோ ஒரு விதமான லஞ்சத்தை பெற்றிருக்கிறார்.. முதலில அடங்க வேண்டியவர் யார்..?? :wink: :P

  • தொடங்கியவர்

ஆணும் பெண்ணும் பேசுறது தப்பில்லை..! அதில் அவசியம் இருக்க வேண்டும்..! அநாவசியமாக ஒரு நிர்வாக நடைமுறைக்குள் இருக்கும் போது அலட்டிட்டு இருக்க முடியாது. வேலைத்தளம் என்பது குறிக்கோள்களை அடையும் இடம். பொது இடம் என்பது அனைவருக்கும் பொதுவான பொதுச் சேவைகளைப் பெறும் இடம். அங்கெல்லாம் ஆணும் பெண்ணும் கதை அளந்திட்டு போற இடமில்லை. முதலில் ஆண்களின் பார்வைகள் வக்கிரமானவை என்ற தவறான பார்வைகளை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். சமூக நலன் நோக்கிய பார்வைகளையும் உயரிய தனிநபர் ஒழுக்கங்களை வேண்டும் ஆண்களின் சீரிய பார்வைகளையும் பெண்கள் இனங்காணக் கற்றுக் கொள்ள வேண்டும். வெறும் ஆண்களை வக்கிரர்களாக எதிலும் பார்க்கக் கூடாது. அவர்களின் ஆழமான கருத்தியலை உள்வாங்கப் பழகிக் கொள்ள வேண்டும்..! அதுவும் இப்படியான தவறுகள் செய்யும் ஆண்களைத் தனித்து இனங்காண் பெண்களுக்கு உதவும்..! :P

தமிழினியின் கருத்தே எனது கருத்தும்.குருவிகள் என்ன சும்மா தமிழினியோட விளாயாடுறீங்களா? இல்லை சிரியசாத் தான் சொலுறிங்களா? இந்தக் காலத்தில இப்படியும் இருப்பினமோ எண்டு சந்தேகமா இருக்கு,அதுவும் இந்த வயசில.எதோ நடத்துங்கோ.பூனை குட்டி சின்ன வயசில படியிற சில விசயங்கள் பிறகு எப்படித் தாக்கம் செலுத்தும் எண்டு சொன்னது தான் நாபகம் வருகுது.

  • தொடங்கியவர்

தமிழினியின் கருத்து ஆண் பெண் கதைப்பது தொடர்பில்..! குருவிகளின் கருத்து அதையும் தாண்டி ஆண் பெண் எப்படியான இடங்களில் எப்படி கதைப்பது என்பது தொடர்பில்...!

இடையில் அரைகுறையா கதை அநாவசியக் கதை வைக்கிறதை தவிக்கிறது நல்லம்..! முதலில் உங்கள் போன்றவர்களையே இதற்கு உதாரணமாக்கலாம்..போல..! :P :lol:

தமிழினியின் கருத்து ஆண் பெண் கதைப்பது தொடர்பில்..! குருவிகளின் கருத்து அதையும் தாண்டி ஆண் பெண் எப்படியான இடங்களில் எப்படி கதைப்பது என்பது தொடர்பில்...!

இடையில் அரைகுறையா கதை அநாவசியக் கதை வைக்கிறதை தவிக்கிறது நல்லம்..! முதலில் உங்கள் போன்றவர்களையே இதற்கு உதாரணமாக்கலாம்..போல..! :P  :lol:

தலைப்பு ஆண் - பெண்கள் என்றில்லை, அதோடு நீர் பெண்களைச் சாடியே முதலில கருத்தைத் துவக்கி உள்ளீர்.

மேலும் இங்கே கருத்து எழுத வேண்டாம் என்று சொல்வதற்கு உமக்கு எதிவித அதிகாரமும் கிடயாது. நீர் தனிப்பட்ட பிரச்சினையாக இது இருந்தால் அதை தமிழினியுடன் ,தொலைபேசியூடாகவோ அன்றி வேறுவழிகள் ஊடகவோ உரையாடும் யாரு வேண்டாம் என்றது.எல்லாருக்கும் பொதுவான களத்தில் இடப்படும் எந்தக் கருத்துக்கும் எவருக்கும் மேற்கோள் காட்டி பதில் அழிக்கும் உரிமை இருக்கிறது.இடப்பட்ட கருத்துக்களை வாசித்த பின்னே நான் கருத்து எழுதிஉள்ளேன்,இதை விட உங்கட குடும்பச் சண்டைகளைத் தெரின்ச்சு கொள்ள எனக்கு அவசியம் இல்லை.

மேலும் என்னையும் உதாரணம் காட்டலாம் என்று எதோ என்னைத் தெரிந்தவர் போல் எழுதி உள்ளீர், இவ்வாறு எழுதுவது தனி நபர் தாக்குதல் என்பதை உமக்கு முதலிலயே சொல்லி விடுகிறேன்.என்னைப் பற்றி உமக்கு ஒன்றும் தெரியாது.ஆகவே இவ்வாறு எழுதுவது கள விதி முறைகளை மீறி கருத்தாடும் உமது பழய பாணியே. களத்தில் இடப்படும் கருத்துக்களுக்கே நான் பதில் எழுதுகிறேன்.ஆகவே தனிப்பட்ட விசயங்களை பொது இடத்தில் வைக்காமல் ,வேறு இடங்களில் வைத்துக் கொள்வது நல்லது.

:twisted:

  • தொடங்கியவர்

ஐயா... இது சமூகத்தில் பேசப்படும் விடயம். அதுதான் இங்கு தரப்பட்டுள்ளது. இன்றும் பெண்கள் தொடர்பில் தான் இவை தொடர்பில் அதிகம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன..! நாங்கள் பெண்களுக்கு ஆதாரவு என்று காட்டித்தான் தலைப்பும் கருத்தும் வைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சமூகத்தில் கருத்து உலவும் வடிவத்தில் கொண்டு வருவதே அது அலசப்பட உதவும்..!

பூனைக்குட்டி...அதுஇதென்று அநாவசியமான உங்களுக்கு உங்கள் அறிவுக்கு தெரிஞ்சதுகளை எம்மீது திணிக்க நீங்கள் முற்படாதீர்கள்..! உங்கள் எச்சரிக்கைகள் எம்மை எதுவும் செய்யாது..! அநாவசியக் கருத்துக்கள் இங்கு எதிர்பார்க்கப்படவில்லை. தலைப்புத் தொடர்பில் மாற்றுக் கருத்து, விமர்சனம் இருந்தால் வையுங்கள். அவர் இவர் சொல்வது சரி என்று வில்லிசை நடாத்த இந்தத் தலைப்பு இடப்படவில்லை. அதற்கு நீங்களே ஒரு தலைப்பை திறந்து எழுதுக்கோ..! உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்தத் தலைப்பில் கருத்தை வைப்பதைத் தவிர்க்க தலைப்பிட்டவர் என்ற வகையில் குறிப்பிட எமக்கு உரிமை உண்டு...! :P :idea:

  • தொடங்கியவர்

ஹா ஹா ஹா.. நல்ல நகைச்சுவை.. ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் உடனை பண்பாட்டு ஒழுக்கவீனமா..?? என்ன குருவிகள் கனவே..?? ஒரு ஆணும் பெண்ணும் பேசிறது ஒழுக்கவீனம் என்று நினைச்சால் உங்கள் பார்வையில் கோளாறு என்று தான் சொல்லமுடியும்.. ஆணும் சரி பெண்ணும் சரி மனிதவர்க்கம் தானே.. இரண்டு மனிதர்கள் பேசிக்கொள்வதில் என்ன தவறு?? பேசிக்கொள்வது என்றால் அது அரசியலாக இருக்கலாம்.. அன்றாட நாட்டு நடப்புகளாக இருக்கலாம் நட்பு ரீதியான கலந்துரையாடலாக இருக்கலாம்.. வெறுமனவே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் ஆபாசமாக நினைக்கிற ஆதிகால நோக்கத்தை விட்டுவிட்டு.. கொஞ்சம் வெளியவாருங்கள்... இருவர் பேசிய உடன ஒழுக்கம் கெட்டுப்போறதாய் கற்பனை வேண்டாம்.

அதைவிட.. விசா கொடுக்கிற அதிகாரி தனது கடமையை ஒழுங்காக செய்தாலே போதும்.. அதற்குரிய சன்மானம் அவரை தேடி ஊதியம் என்ற ரீதியில்போய்ச்சேரும்.. அவர் தன்ர பாலியல்இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காய்.. தன்ர வேலைக்கும் துரோகம் செய்து.. அந்த பெண்ணிடம் ஏதோ ஒரு விதமான லஞ்சத்தை பெற்றிருக்கிறார்.. முதலில அடங்க வேண்டியவர் யார்..?? :wink: :P

தமிழினி நீங்கள் ஆண் பெண் கதைப்பது பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். ஆதிகாலத்தில் ஆணும் பெண்ணும் கதைக்கவில்லை என்று நீங்கள் நிரூபிக்க முடியுமா..! :lol: மனிதன் சமூக விலங்கு..! ஆண் பெண் இணைந்த சமூகத்தில் கருத்து, சமிக்கைப் பரிமாற்றங்கள் எல்லா விலங்குகளைப் போலவும் நிலவியே வருகிறது. குருவிகள் இங்கு குறிப்பிடும் விடயம் ஆண் பெண் உரையாடல்களின் சில வகைகள் சில இடங்களில் தவிர்க்கப்பட்டால் பெண்கள் வீணே ஆண்களை குற்றவாளிக் கூட்டில் நிறுத்துவதை தவிக்கலாம் என்பதே..!

அந்த ஆண் அடக்கப்பட வேண்டியவர் என்பது கட்டாயம். அதேவேளை ஆண்கள் தவறுசெய்ய காரணமாக இருக்கும் பெண்களும் அடக்கப்பட வேண்டியவர்கள்...! அதற்கு சட்டத்தில் போதிய இடமளிக்க வேண்டும். பெண்களுக்கு இன்னும் சமூகச்சட்டத்தில் நெகிழ்வுப் போக்கு இருப்பதும் பெண்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆண்களை இட்டுச் செல்லவும்....தாங்களே தவறிழைத்துவிட்டு ஆண்கள் மீது பழியைப் போடுவதும் நடைபெற உதவுகின்றன தானே...! இவை அனைத்தும் சமூகப் பாதிப்புக்குத்தானே இட்டுச் செல்கிறது. ஈழத்தில் பெண்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அதி உயர் தண்டனையான மரண தண்டனை வரை வழங்கப்படுவதை இங்கு உதாரணமாக காட்டலாம். அதேபோல் குற்றவாளிப் பெண்களை இனங்காண மொட்டை போடுதலும் அங்கு நடைமுறையில் இருந்தது.

சட்டத்தின் முன்..ஆணும் பெண்ணும் சமனாக மதிக்கப்படும் போது குற்றங்களுக்கான தண்டனைகளும் பாரபட்சமின்றி பெண்களின் ஆண்கள் மீதான அநாவசிய குற்றச்சாட்டுக்களுக்கு இடமளிக்காத வகையில் வழங்கப்பட முடியும். சட்டத்தை துணைக்கிழுக்கும் வரை காத்திருக்காது பெண்களும் ஆண்களும் தமக்குத்தாமே இறுக்கமான ஒழுக்கத்தை தேவையான இடங்களில் கடைப்பிடிப்பதன் மூலம் மேற் சொன்ன குற்றச்சாட்டுக்கள் அநாவசியமாக ஒருவர் மீது இன்னொருவர் இடுவதையும் நம்பிக்கையை வளக்கவும் உதவும்..!:idea: :D

ஐயா... இது சமூகத்தில் பேசப்படும் விடயம். அதுதான் இங்கு தரப்பட்டுள்ளது. இன்றும் பெண்கள் தொடர்பில் தான் இவை தொடர்பில் அதிகம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன..! நாங்கள் பெண்களுக்கு ஆதாரவு என்று காட்டித்தான் தலைப்பும் கருத்தும் வைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சமூகத்தில் கருத்து உலவும் வடிவத்தில் கொண்டு வருவதே அது அலசப்பட உதவும்..!

பூனைக்குட்டி...அதுஇதென்று அநாவசியமான உங்களுக்கு உங்கள் அறிவுக்கு தெரிஞ்சதுகளை எம்மீது திணிக்க நீங்கள் முற்படாதீர்கள்..! உங்கள் எச்சரிக்கைகள் எம்மை எதுவும் செய்யாது..! அநாவசியக் கருத்துக்கள் இங்கு எதிர்பார்க்கப்படவில்லை. தலைப்புத் தொடர்பில் மாற்றுக் கருத்து, விமர்சனம் இருந்தால் வையுங்கள். அவர் இவர் சொல்வது சரி என்று வில்லிசை நடாத்த இந்தத் தலைப்பு இடப்படவில்லை. அதற்கு நீங்களே ஒரு தலைப்பை திறந்து எழுதுக்கோ..! உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்தத் தலைப்பில் கருத்தை வைப்பதைத் தவிர்க்க தலைப்பிட்டவர் என்ற வகையில் குறிப்பிட எமக்கு உரிமை உண்டு...! :P  :idea:

இது ஒரு சமூகப் பிரச்சினை என்பதால் தான் நான் கருத்து எழுதி உள்ளேன், நீர் உமது சொந்தப் பிரச்சினைகளை பொதுவாக்கி, முழுச் சமூகத்தின் பிரச்சினயாகக் காட்ட முனைவதாலயே தான் உமக்குச் அதனைச் சுட்டிக் காட்டத் தான் பதிற் கருத்து எழுதி உள்ளேன்.

பெண்கள் தொடர்பில் குற்றச் சாட்டுக்கள் வைப்பது ,எமது சமூகத்தில் பழய கிழடு கட்டைகள் பத்து வருசத்தைற்கு முன்னர் செய்தது,இப்போது அது பெருமளவில் மாறி விட்டது. நீர் அந்தப் பழய சமூகக் கண்ணோட்டத்தில் தான் இன்றும் இருக்கிறீர் என்பதற்காகவே நான் உமது உளவியல் பற்றிக் குறிப்பிட்டேன்.இது பற்றி உளவியலில் பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருக்கும் மாணவியான சக கள உறவு பூனைக் குட்டி அவர்களை மேற் கோள் காட்டினேன்.இது எந்தக் கள விதி முறைகளுக்கும் முரணாணது கிடயாது.ஒரு துறையில் விசயம் தெரிந்தவரை மேற் கோள் காட்டுவது இயல்பான கருத்தாடல் நடைமுறை.ஆகவே அது,இது அனாவசியம் என்று உளற வேண்டாம்.

உம் மீது எந்தக் கருத்தையும் நான் திணிக்கவில்லை,கருத்துக்குப் பதில் கருத்து எழுதி உள்ளேன், அவ்வளவே.இங்கே நான் இடும் கருத்துக்கள் எல்லோருக்கும் பொதுவானது அதனைப் படிப்பதுவும் புத்தியில் எடுப்பதுவும் அவர் அவர் விருப்பம்.இங்கே பதிற் கருத்துக் கூற வேண்டாம் என்று ,உமது கருத்தை வலிந்து திணிப்பது நீர் தான்.அதுவே உமது வழக்கமான கருத்தியல் வன்முறைப் பாணி.

மேலும் இங்கே இடப்படும் கருத்துக்கள் தலைப்பிற்கு அவசியமனவையா இல்லயா என்று தீர்மானிப்பதற்கு மட்டுறுதினர்கள் இருகிறார்கள் , நிர்வாகக் குழு இருக்கிறது, அவர்கள் தான் அதனைத் தீர்மானிப்பார்கள். நீரல்ல.

மேலும் ஒருவர் கூறிய கருத்துடன் எனக்கு உடன் பாடு உள்ளது என்று சொல்வது ,வில்லிசை பாட அல்ல, கருத்து ஒருங்கிணைவும்,முரண்பாடும் கருத்தாடலின் அடிப்படைகள்.தமிழினியோடு இந்தக் கருத்தில் ஒருங்கு படும் நான் இன்னொரு கருத்தில் முரண் பட முடியும்.

நீர் என்ன வேணும் எண்டாலும் குறிப்பிடும் அதற்கு உமக்கு உரிமை இருக்கிறது,ஆனால் இங்கே கருத்தாடும் விதிகளை நிர்வாகமே தீர்மானிகிறது, அதனை நிர்வாகக் குழு அமுல் படுத்துகிறது.

இதற்கு மேல் என்னத்தைச் சொல்ல, நாய் வாலை நிமித்த முடியாது என்பதைத் தவிர? :cry:

  • தொடங்கியவர்

யாரை யார் நிர்வகிப்பது. நாம் அவர்கள் வித்ததை எமக்கு விதித்துதான் கருத்து வைக்கின்றோம்.மற்றவர்கள் நிர்வகிக்கும் வரை நாம் அதற்கு இடமளிக்கவில்லை.

நீங்கள் நிகழ்கால கருத்தியல் உலகிற்கு புறம்பான முறையில் கருத்துக்களை திசை திருப்ப முற்படுகின்றீர்கள்..! நாங்கள் இங்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டாடில் கருத்து கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அது எமக்கு கிடைத்த வடிவத்தில் தான் தரப்பட்டது. ஒரு உரையாடலில் அவதானிக்கப்பட்டதே தரப்பட்டது. ஆனால் பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் எழுவதே இல்லை என்ற பாணியிலான உங்கள் வாததை வைப்பதன் மூலம் நீங்கள் நிகழ்கால உலகிலையே இல்லாத மனிதர் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. எனவே இது விடயமான உங்களோடு இதில் கதைத்துப் பயனில்லை.

யாரை யார் நிர்வகிப்பது. நாம் அவர்கள் வித்ததை எமக்கு விதித்துதான் கருத்து வைக்கின்றோம்.மற்றவர்கள் நிர்வகிக்கும் வரை நாம் அதற்கு இடமளிக்கவில்லை.

நீங்கள் நிகழ்கால கருத்தியல் உலகிற்கு புறம்பான முறையில் கருத்துக்களை திசை திருப்ப முற்படுகின்றீர்கள்..! நாங்கள் இங்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டாடில் கருத்து கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அது எமக்கு கிடைத்த வடிவத்தில் தான் தரப்பட்டது. ஒரு உரையாடலில் அவதானிக்கப்பட்டதே தரப்பட்டது. ஆனால் பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் எழுவதே இல்லை என்ற பாணியிலான உங்கள் வாததை வைப்பதன் மூலம் நீங்கள் நிகழ்கால உலகிலையே இல்லாத மனிதர் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. எனவே இது விடயமான உங்களோடு இதில் கதைத்துப் பயனில்லை.

கொஞ்சம் விளக்கமா எழுதும் அவசரத்தில எழுதி, நிதானம் இழந்து எழுதி நீரும் குழம்பி மற்றவர்களையும் குழம்ப வைக்க வேண்டாம்.

கள விதிமுறைகளைக் கள நிர்வாகம் நிர்வகிக்கிறது.அமுல் படுத்துகிறது,இதில் என்ன குழப்பம்?

பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் என்ன குற்றச் சாட்டுக்கள் எழுகின்றன?

வேலை நேரத்தில் வேறு விடயங்களைச் செய்வதால் ஒருவர் பணி நீக்கப் படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு தான்.அதற்கும் உமது தலைப்பிற்கும், பொதுவாகப் பெண்கள் தான் இவ்வாறு என்று பெண்கள் மேல் நீர் ஒருவகை உள் நோக்கத்துடன் பொதுப்படயாக எழுதியதற்கே தமிழினி பதில் அழித்தார் , அவரின் கருத்துடன் நான் ஒருங்கு படுவதாக எழுதினேன்.

இங்கே நிகழ் காலத்தில் இருந்து அன்னியப் பட்டிருப்பது யார்?

ரமா இந்த தலைப்பில் பல இணைப்புக்களை இது சம்பந்தமாக வழங்கி இருந்தார்.மேலும் பலரும் எழுதி இருந்தனர்.

பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் பரஸ்பர குற்றச் சாட்டுக்கள் என்று எழுதி உள்ளீர் ,என்ன குற்றச் சாட்டுக்கள்?இதில் என்னத்தை நான் மறுத்திருகிறேன். நீர் சொல்வது ஒன்றும் தெளிவாக வில்லயே?

ஈமெயில் மூலமான அறிவித்தல் அவருக்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம்..!

ஈமெயில் மூலமான எச்சரிக்கையோ அல்லது தொலைபேசி மூலமான எச்சரிக்கையோ அதனை எச்சரிக்கையாகக் கொள்ளப்படுவதில்லை. அது எழுத்து மூலம் வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டாலே அது எச்சரிக்கையாகக் கொள்ளப்படும் :wink:

பிரித்தானியாவில் அண்மையில் கூட மேலதிகாரியுடன் பாலியல் தொடர்பு கொள்ள வைத்து வதிவிட உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன..! சோ பெண்கள் தங்களை இப்படி எல்லாம் பாவிக்க அனுமதிச்சிட்டு அப்புறம் ஆண் ஆதிக்கம் என்று கொண்டு ஆண்களில் மட்டும் குறை காண்பதில் என்ன அர்த்தம்...! ஆண்கள் தவறுசெய்ய பெண்களும் தூண்டுதலாக அமைவதைத் தவர்க்கலாம் தானே..! முதலில் பெண்கள் தங்களை கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டு ஆசைகளுக்கு அளவுகோல் இடுவதன் மூலம் நிச்சயம் இப்படியான சம்பவங்களில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்..என்பதே பொதுவான நிலைப்பாடு..! :P  :idea:

எள்

ஏன் ஆண்கள் கட்டுப்படுத்தப் பழகினால் கட்டுப்படுத்த முடியாதா? ஆசைகளைக் கட்டுப்படுத்துவது என்பது இருபாலாருக்கும் பொதுவானது. இதில் பெண்களை மட்டும் கட்டுப்படுத்துமாறு கோருவது அல்லது ஆலோசனை கூறுவது எவ்விதத்திலும் ஏற்புடையதில்லை. ஆண்கள் தவறு செய்ய பெண்கள் தூண்டுகிறார்கள் என்றால், விசாபெறுவதற்கு பாலியலைப் பாவிப்பதற்கு யார் தூண்டதலாக இருக்கிறார்கள். ஆயினும் அவ்விடத்திலும் பெண்களைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கான அடிப்படைக் காரணம் சமூகத்தில் இருக்கும் ஆணாதிக்க சிந்தனையன்றி வேறேதாக இருக்க முடியும். :roll: :roll:

தமிழினியின் கருத்து ஆண் பெண் கதைப்பது தொடர்பில்..! குருவிகளின் கருத்து அதையும் தாண்டி ஆண் பெண் எப்படியான இடங்களில் எப்படி கதைப்பது என்பது தொடர்பில்...!

அட ஆண் பெண் எப்படி எப்படியான இடங்களில எப்படி எப்படிக் கதைக்க வேண்டும் என்று பட்டியலிடுங்க. அது நமக்கும் உதவியா இருக்குமில்ல :wink: :lol:

  • தொடங்கியவர்

இந்த உதாரணத்துக்கு மேலதிகமாக நாங்கள் பார்த்த வரையில் ஆண்களை விட பெண்கள் தான் வேலைத்தளங்களிலும் சரி இதர முக்கிய இடங்களிலும் அநாவசியமாக சம்பந்தப்பட்ட விடயத்துக்கு அப்பால் கதைக்கின்றனர்..! இது தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் எழுவதை நாங்களே நேரடியாக கண்டிருக்கின்றோம். அந்த வகையினது ஒன்றாகவே இதுவும் இருந்திருக்கும். எமது இக் கருத்தின் நோக்கம் சில தொடரப்படும் தவறுகளாக நோக்கப்படுபவற்றை சுட்டிக்காட்டுதலே அன்றி வேறில்லை..! இதில் வக்கிரம் ஆணாதிக்கம் என்பதெல்லாம்..பெண்களின் செயற்பாடுகளை விமர்சனத்துக்கு அப்பால் அங்கீகரி என்பது போன்றதாகவே தென்படுகிறது. நிச்சயமான எந்த மனிதனினும் தனி மனித நடவடிக்கை சமூகத்தை அல்லது இன்னொரு தனி மனிதனைப் பாதிக்காத வரை அதை அங்கீகரிப்பதில் தவறில்லை.

இங்கும் கூட பலரும் பெண்கள் சார்ந்த கருத்து என்றால் கருத்தாடத் தயங்குவதுடன் ஏனடா வம்பு...அல்லது பெண்கள் தங்களைத் தவறாக நோக்கிவிடுவரோ என்று பயந்து ஒதுங்கிக் கொள்கின்றனர். இன்னும் சிலர் தங்கள் தனிநபர் எதிர்ப்பை ஏதோ ஒருவடிவில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தெளிவான கருத்தையும் தெளிவற்றதாக்க முனைகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே இங்கு பேசப்படும் விடயம் தெளிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தாங்களாகவே வாயக் கொடுத்திட்டு அப்புறம் அவஸ்தையும் பட்டிட்டு ஏன் ஆண்களக் திட்டித் தீர்க்கின்றனர் என்பதே வினவப்பட்டது..! அதற்காக விடையாகவே அநாவசிய இடங்களில் அநாவசிய கதை தவிர்ப்படுதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்லது என்பது சொல்லப்பட்டது. இது ஒரு கருத்து. இதற்குள் ஆணாதிக்க வெளிப்பாடு என்பது பெண்களின் தவறுகளை இன்னும் ஆணாதிக்கப் போர்வையால் மூடிமறைக்க முற்படுவதன் விளைவு என்றே தோன்றுகிறது.

நிச்சயமாக இது தொடர்பில் தெளிவான கருத்தாடல்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. எங்கள் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. காரணம் இதில் சம்பந்தப்பட்டது நாமல்ல. வாழும் சமூகத்தில் மற்றவர்கள்..! அதைப் புறக்கணிப்பதிலும் அது தொடரப்படுவதின் தன்மைகளை விளைவுகளை ஆராய்தல் சிறப்பு. அதற்கு பக்குவமான ஆழ்ந்த சிந்தனையியல் அவசியம். வெறும் வக்கிரம் ஆணாதிக்கம் என்ற கருத்தியல் வறுமைப் பேச்சுக்களை அல்லது தனிநபர் மோதல்களைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் அலசுதல் சிறப்பு..! அந்த வகையில் தான் இக்கருந்து இங்கு இடப்பட்டதே அன்றி எமது தேவைகளுக்காக அல்ல என்பதை அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்...!

கருத்துக்களுடன் தொடர்ந்திருங்கள் நன்றி வணக்கம். :wink: :P

ம்கூம் . . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்கூம் . . .

என்ன பரணி அண்ணா.. பந்தி பந்தியா எடுத்துவிடுவியள் என்று பாத்தால் ம்கூம் ஓட முடிஞ்சுது.. எப்படி சுகநலங்கள்.. :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.