Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்ப-சட் சீனாவின் பாதைக்குள்ளேயே சுற்றும். இலங்கையின் வலையத்தில் அல்ல.

Featured Replies

பெயர் குறிப்பிடாத இந்திய தூதுவ அதிகாரி இலங்கையின் சுப்ப-சட் யை ஒரு மாயமானா வருணிக்காத குறையில் தாழ்த்து பேசியுள்ளார்.

"அது ஒரு தொலை தொடர்பு செய்மதி மட்டுமே. மேலும் அது சீனாவின் பாதையில்தான் சுற்றும். இலங்கையின் பாதையில் அல்ல. அந்த நிலையில் அதை பற்றி ஒன்றும் செய்ய இயலாது என்று கூறினார்"

"It's a commercial communication satellite. It's going to be in a Chinese (orbit) slot and not in a Sri Lankan slot. At that far, you can't do anything and it's not a concern for us," said an Indian diplomat based in Sri Lanka, speaking on condition of anonymity.

http://in.reuters.co...outh Asia News)

Edited by மல்லையூரான்

[size=1]

[size=4]இலங்கையில் தொடரும் அதனது தமிழின அழிப்பு கொள்கை முன் 'மீசையில் மண் படவில்லை' என்ற வெளிநாட்டு கொள்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]" ஆமாம் சீனா சொல்வதெல்லாம் உண்மை, உண்மை அன்றி வேறு எதுவும் இல்லை " , இப்படி இந்தியா கூறி தன்னை தானே ஏமாற்ற வேண்டியதுதான்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனா உதவியுடன் செயற்கைக்கோளை ஏவிய இலங்கை.

கொழும்பு: இந்தியாவின் கடும் ஆட்சேபனை மற்றும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சீனாவின் உதவியுடன் தனது முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சுப்ரீம்சாட்-1 என்ற செயற்கைக் கோளை ஏவியுள்ளது இலங்கை.

28-lanka-satilite4-600.jpg

சுண்டைக்காய் நாடான இலங்கை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழப் போரில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பி்ன்னர் இந்தியாவை படு மோசமாக நடத்த ஆரம்பித்துள்ளது. இந்தியாவை எப்படியெல்லாம் எரிச்சல்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்ய ஆரம்பித்துள்ளது. சீனாவின் கையை வைத்து நமது முகத்தை அவ்வப்போது குத்தி வருகிறது. நாம் சொல்வதை அது கேட்பதே இல்லை, கண்டு கொள்வதே இல்லை. இருந்தாலும் நமது மத்திய அரசு, இலங்கையிடம் எவ்வளவு குணிந்து போக முடியுமோ அவ்வளவு குணிந்து போய்க் கொண்டேயிருக்கிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் அதுகுறித்து இந்திய அரசு கவலைப்பட்டாலும் அதைத் தடுக்க முடியாத நிலையில்தான் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில் இலங்கை,சீனாவின் உதவியுடன் தனது முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த அரசு சார்பு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த செயற்கைக்கோளை சீனாவிலிருந்து ஏவியுள்ளது இலங்கை. இதனால் இந்தியா, இலங்கை இடையிலான உறவில் மேலும் கசப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த செயற்கைக் கோள் ஏவுவதற்கு இந்தியா ஏற்கனவே கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. ஆனால், இதை இலங்கை நிராகரித்து விட்டது. இந்த செயற்கைக்கோள் ஏவும் திட்டம் முற்றிலும் தனியார் சம்பந்தப்பட்டது என்றும், இலங்கையைச் சேர்ந்த சுப்ரீம்சாட் என்ற தனியார் நிறுவனமும், சீனாவின் கிரேட் வால் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து இதை மேற்கொண்டதாக இலங்கை கூறியுள்ளது.

இருப்பினும் இந்த செயற்கைக் கோளை உருவாக்கியது தான்தான் என்பது போல சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார் ராஜபக்சேவின் இளைய மகன் ரோஹிதா.

செயற்கைக் கோள் ஏவப்பட்டது குறித்து சுப்ரீம்சாட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜீத் பெரீஸ் கூறுகையில், செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேற்கு சீனாவில் உள்ள ஜிசாங் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து செயற்கைக் கோள் ஏவப்பட்டது.

இலங்கை, சீனா இடையிலான நெருக்கமான உறவு இந்த செயற்கைக் கோள் மூலம் மேலும் வலுவடையும் என்றார்.

இந்த நிலையில் இலங்கையின் இந்த செயல் குறித்து டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வு மைய ஆய்வாளர் பிரம்மா செல்லனே கூறுகையில், சீனாவுடன் இலங்கை நிதானமாக அதேசமயம் வலுவாக நெருங்கி வருவதையே இது காட்டுகிறது. மேலும் இந்தியாவுக்கு இது மறைமுக எச்சரிக்கையுமாகும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வருவதையும் இது வெளிக்காட்டுகிறது. இது நிச்சயம் நமக்கு நல்ல செய்தி அல்ல என்றார்.

ஏற்கனவே இந்தியாவை சுற்றி வளைத்து தனது நிலைகளை வலுப்படுத்தி வருகிறது சீனா. தற்போது இலங்கையை மையமாக வைத்து இந்தியாவுக்கு கடும் எரிச்சலையும், பாதுகாப்பு மிரட்டலையும் விடுத்து வருகிறது சீனா. தற்போதைய செயற்கைக் கோள் ஏவுதல், இந்தியாவுக்கு மேலும் பதட்டத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்கிறார்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வாளர்கள்.

நன்றி: http://tamil.oneindi...ite-165366.html

Edited by nedukkalapoovan

இந்தியாவுக்கு சிங்களவன் என்தாப்படிச்சாலும் வலிக்குதில்லையாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு சிங்களவன் என்தாப்படிச்சாலும் வலிக்குதில்லையாமே?

வடிவேலும் மூத்திர சந்து பகிடி போலத்தான் இன்று இந்தியாவின் நிலை. ரெம்ப நல்லவன் என்றிட்டாண்டா என்ற நிலையில் தன்னைத் தானே தோற்றிக் கொண்டிருக்கிறது.

மலையாளிகளின் தவறான வெளிவிவகார நிலைப்பாடுகளும்.. தி மு கவின் தவறான வழி நடத்தல்களும்.. காங்கிரஸின் சோனியாவின் காழ்ப்புணர்ச்சிகளுமே இந்திய தேசத்தின் இன்றைய இந்த நிர்க்கதிக்கு முக்கிய காரணம். இதனை எல்லாம் அறிஞ்சு தான் இந்திரா காந்தி அன்று தமிழீழத்தை கோரும் தமிழர் போராட்டத்தை ஆதரித்தவர்..! எம் ஜி ஆர் அவருக்கு சரியான வழிகாட்டலைச் செய்தார்..!

இன்று.. குடும்ப ஆட்சிகளை விரும்பும்.. குள்ளநரிகளால்.. தமிழருக்கும் விடிவில்ல.. தமிழகத்துக்கும் உய்வில்ல.. இந்தியாவிற்கும் நிம்மதியில்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஊழலை, அமெரிக்கா, மேற்குநாடுகள் மாதிரி ஜனநாயக நாடுளில் மட்டும் அல்ல, ஐ.நா வரைக்கும் விதைக்கும் ஆற்றலை இலங்கை பெற்றிருக்கிறது. சொலெயும், லிலாம் ஃபொகஸ், பிளேக், நம்பியார், மற்றைய கொழும்பிலிருந்த ஐ.நா அதிகாரிகளின் சுயசரிதை அச்சில் வந்தால் நிறைய உண்மைகள் வெளிவரும். ஆனல் பணம் ஒன்றில் இலங்கை சிறியது. சீனா அதை இலங்கைக்காக கவனித்து கொள்கிறது. இலங்கையும், சீனாவும் சேர்ந்த இந்த சூராவளியில் சர்வதேச வேப்பமரம் ஆடும் ஆட்டத்தில் இந்தியா என்ற லஞ்ச ஊழலால் மெலிந்து போயிருக்கும் நாணல் ஆடாமல் என்ன செய்ய முடியும்.

இந்த உண்மையை ஏற்க மறுத்து "இந்தியாவின் பாது காப்பு கொள்கையும், புவிசார் அரசியலும்" பற்றி யாழில் தொடர்ந்து பாடங்கள் நடந்த காலங்கள் வெகு பின்னுக்கு போகவில்லை.

இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையாக யத்திந்திரா, எழுதி ராஜகுரு என்ற உறவு யாழில் இணைத்திருந்த ஒரு பெரிய அரசியல் அலசல் யாழில் இருக்கிறது. நானும், யாழில் இணந்த காலங்களில், அந்த திரியில் கருத்து எழுதியுள்ளேன்.

இந்த அதிகாரி இந்தியாவால், இலங்கையின் பெயரில் சீனா செய்மதி ஒன்றை ஏவுவதை தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரிக்கிறார். இவர் இலங்கை ஈரானிடமிருந்து எண்ணை வாங்கியதற்கு அமெரிக்கா என்ன செய்தது என்பதை கேள்விப்படவில்லை போலும். சீனா இலங்கையின் பெயரில் துவிச்சக்கர வண்டிகள் செய்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விற்ற போது அவை என்ன செய்தன என்பதை கேள்விப்படவில்லை போலும்.

போகிற போக்கில் இந்தியன் தூதுவராலயம் இலங்கையில் இயங்க, இந்த அதிகாரிகளை தனது சம்பள பட்டியலில் வைத்திருப்பது மட்டும் அல்ல, வாடகை கட்டுவது வரை சீனா தான் என்று செய்தி வந்தால் அதையும் கூடத்தான் நம்பலாம்.

வெக்கம் கெட்ட அதிகாரி தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். நல்ல காலம் தனது பெயரை வெளிவிடவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.