Jump to content

இனவாடை வீசும் சிறிலங்கா கிரிக்கற்றைப் புறக்கணிப்போம் - ஆஸி. எழுத்தாளர்


Recommended Posts

[size=4]மனித உரிமைகள் தொடர்பாக அவுஸ்திரேலியா சர்வதேச அரங்கில் ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுகின்றபோதும், பாதுகாப்பில்லாத ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அல்லது அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுக்காத ஒரு தலைமையாகவே இருந்துவருகிறது. [/size]

[size=4]ஆனால் இதற்கு விதிவிலக்காக இந்தப் போக்கை கண்டிக்கும் வகையிலான ஒரு நிகழ்வு.

ஒரு பரந்த நோக்குள்ள படசாலை மாணவனாக இருந்த நான், 1950 களில் நான்காம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது அவுஸ்திரேலியா மற்றையவர்களை சிறப்பாக வரவேற்கும் ஒரு நாடாக இருந்தது என்றே நான் படித்துள்ளேன். 1948 இல் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைத்துவ நாடாக இருந்து சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை அங்கீகரித்தது என்னைக் கவர்ந்திருந்தது.

உண்மையான அவுஸ்திரேலியரான, டொக் இவற் (Doc Evat) ஐ.நா பொதுச்சபையின் தலைவராக இருந்து இவ்விடயத்தில் முக்கிய பங்கு வகித்தமையால் நாம் பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி நடந்தோம்.

அப்போது பாடசாலையில் மதிப்பீட்டிற்காக அந்த சாசனத்தை தடித்த - கறுத்த பெரிய எழுத்துக்களில் கொடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஏனெனில் அந்த அளவிற்கு அது மிகவும் உன்னதமான ஒரு ஆவணம் எனக்குத் தெரிந்தது.

அது யுத்த திகில், அடக்குமுறை, இன ஒழிப்பு என்பவற்றிலிருந்து இவ்வுலகைக் காக்கும் ஒரு சிறந்த ஆவணம்.

அப்பாவியான அந்தக் குழந்தைப் பருவத்தில் இருந்து நான் கண்டுகொண்ட உண்மை, நான் அடைந்த பெருமை எல்லாம் இன்று அதிச்சிக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

தமது அடிப்படை மனித உரிமைகளை அடைவதற்காக எமது கரையோரத்தை நோக்கி ஓடி வருபவர்கள் விடயத்தில், அவுஸ்திரேலியாவின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் கடலளவு ஆழமானதும் அகலமானதுமான வேறுபாடு இருந்து வருவதை நான் இப்போது உணர்கிறேன்.

மற்றைய ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்களைப்போலவே எனக்கும் கிலாட் அரசின், அகதிகள் தொடர்பான கொள்கை, ஆத்திரமூட்டுவதோடு வெட்கமாகவும் சங்கடமாகவும் உள்ளது.

ஹவாட்டின் லிபரல் அரசில் இருந்து ஊளையிட்ட கெட்ட சக்திகளைப்போலன்றி, தொழிற்கட்சியானது புகலிடம் தேடுவோர் விடயத்தில் போதிய மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் என நான் அப்பாவித்தனமாக நம்பினேன். (ஆம் நான் இன்னும் அப்பாவியே).

ஆனால் உண்மை இப்போது தெரியவந்துள்ளது. இவர்கள் அவர்களிலும் மோசமானவர்கள்.

மனித உரிமைகள் தொடர்பில் போருக்குப் பிந்திய அவுஸ்திரேலியாவின் கவலைதரும் பதிவிலிருந்து பாடம் படிக்க விரும்பினால் உள்ள ஒரே வழி என்னவெனில், கண்டன நிகழ்வுகளை ஏற்பாடுசெய்வதும் விளையாட்டுத்துறையை பகிஷ்கரிப்பதும்தான். கோடைகாலத்தில் போராட்டத்தை நடத்துவதற்கு சிறந்த இடம் விளையாட்டுத்துறையாகும்.

கிரிக்கட் என்பது நடுநிலை, சமத்துவம் என்பவற்றுக்கு பெருமைசேர்க்கும் ஒரு விளையாட்டாகும். கிரிக்கட் என்ற சொல் இந்த இயல்புகளுடன் தொடர்புடைய, எமது மொழியின் பகுதியாக இருந்துவந்துள்ளது.

ஆனால் இந்த கார்த்திகை மாதத்திலிருந்து மாசி மாதம் வரை (November – February) மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி என்பவற்றில் கலந்துகொள்வதற்காக தனது அணியை அனுப்பும் சிறிலங்காவைப் பொறுத்தவரையில் அங்கு சமத்துவமோ நேர்மை அல்லது நடுநிலையும் இல்லை.

உள்நாட்டு யுத்தத்தின்போது குறைந்தது 50,000 அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று தற்போது தமிழின ஒழிப்பில் ஈடுபட்டுள்ள, பகையுணர்வு கொண்ட அரசாங்கத்தின் படைகளுடன் நெருக்கமானது இந்தக் கிரிக்கட் அணி.

அண்மையில் இலங்கைக் கிரிக்கட் குழுவின் தலைமைப்பதயில் இருந்து விலகிய சனத் ஜயசூரிய தற்போதைய அரசின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டதுடன் தற்போது இந்த கொடிய ராஜ்யத்தின் நாடாளுமன்ற அங்கத்தவராகவும் உள்ளார்.

புதிய வியத்தகு சுழற்பந்து வீச்சாளரான அஜந்த மென்டிஸ்இலங்கை இராணுவத்தில் 2வது லெப்டினன்ட் ஆக உள்ளவர். அவர் ஆட்டிலறிப்படையில் சுடுநராக சிறந்த சேவையாற்றியவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார். அப்பாவித் தமிழ்ப் பொது மக்கள் வைத்தியசாலைகள், கட்டடங்கள் கப்பல்கள் என்பவற்றில் தஞ்சம் அடைந்திருந்த வேளை ஆட்டிலறிப்படைகளால் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளது, பல சர்வதேச நாடுகளாலும் ஐ.நா நிறுவனங்களாலும் யுத்தக் குற்றம் எனத் தெரிவிக்கப்படும் இச் செயற்பாட்டில் அஜந்த மென்டிஸ் பங்கு கொண்டாரா என்பது தெரியவில்லை.

முன்னாள் நட்சத்திரக் கிரிக்கட் வீரரும், அணியின் தலைவருமான அர்ஜுனா ரணதுங்க நீண்டகாலமாக ராஜபக்ஷ அரசின் அரசியல்வாதியாக இருந்தவர். பின்னர் அதிலிருந்து தாவி மேலும் மோசமாக சென்று தமிழினப்படுகொலையின் போது இராணுவத்தளபதியாக கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகாவை ஒரு சிறப்பான மனிதர் என்றும், இலங்கை அரசியலைக் காப்பாற்றக் கூடிய ஒருவுர் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்தவர்.

இக்கிரிக்கட்குழு பெரும்பான்மை சிங்களவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு அமைச்சர்களிலிருந்து ஜனாதிபதிவரை அரசாங்கத்தினால் செல்வாக்கு செலுத்தப்படுவது. கடந்த வருடம் சிறிலங்கா கிரிக்கட் அணி லண்டனுக்கு விஜயம் செய்தபோது , நாடாளுமன்றம் செல்வதற்காக 2010 இல் ஓய்வுபெற்ற சனத்ஜயசூரியவை இரு சர்வதேசப்போட்டிகளில் மீண்டும் இணைத்துக்கொள்ளும்படி ராஜபக்ஷ ஆணைபிறப்பித்தார்.

அவரது அரசியல் ஆலோசகர் வழிகாட்டி முன்னாள் கப்டனுக்கு தகுந்த பிரியாவிடைஅளிக்கவிரும்பினார். இதனால் அணியைத் தெரிவு செய்வதில் தெரிவுக்குழுவிற்கு பெரும் இடையூறு ஏற்பட்டதுடன் அணிக்கு உளப்பாதிப்பையும் ஏற்படுத்தியது. யாரும் ஜனாதிபதிக்கு மறுப்பு கூற முடியாது.

சிறிலங்கா கிரிக்கட் குழுவில் இவ்வளவு காலமும் மிகக் குறைவான தமிழரே இடம்பெற்றிருக்கிறார்கள். இது தெரிவுக்குழுவின் செயற்பாடல்ல. தமிழர்களுக்கு சமமான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அவர்கள் ஒரு ஒடுக்கப்படும் இனமாக உள்ளனர். அவர்கள் விளையாட்டுத்துறையில் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கு மிகவும் குறைவான சந்தர்ப்பத்தையே பெறுகிறார்கள் என்பது கண்கூடு. “கிரிக்கட் பைத்தியம” பிடித்த இந்த நாட்டில் கடந்த இருபது வருடங்களில் மிகப் பிரபல்யமான சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுடன் சேர்த்து ஆறுபேர் வரையிலான தமிழர்களே இடம்பெற்றிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் கிரிக்கட் குழுவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையவே சந்தர்ப்பம் உள்ளது. யுத்த முடிவின் போது ஆயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகள் கொல்லப்பட்டதோடு அதிலிருந்து தப்பியவர்கள் விளையாட்டினால் கிடைக்கப்படும் சந்தோஷத்தைப் பெறமுடியாத ஒரு வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இன ஒதுக்கல் கொள்கையை கொண்டிருந்த தென்னாபிரிக்காவின் வெள்ளையர் மட்டும்கொண்ட அணி என்பதைவிட இது மோசமாக நோக்கப்படவேண்டியது. ஒரு இனம் அல்லது வகுப்பே இதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இது தெரிவுக்குழுவின் செயற்பாட்டால் ஏற்பட்டதல்ல. அரசாங்கம் தமிழ் சமூகத்தை அழிப்பதற்காக செய்வது.

கடந்த வருடம் பிரிட்டனின் சனல் -4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஒரு விவரணபப்படத்தில் அங்கு புகலிடம் வழங்கப்பட்டிருக்கும் ஒரு தமிழர் இந்த அரச படைகளால் தனக்கு ஏற்பட்ட அருவருக்கத்தக்க அநுபவம் தொடர்பாக தெரிவித்திருந்தார். அவர் யுத்தத்தின் போது அழிக்கப்பட்டு சில மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிலரால் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள தமிழ்ப்புலிகளுடன் முன்னர் இணைந்து செயற்பட்டவர்.

’என்னை இரும்புக் கேபிளால் அடித்தார்கள். அது தோலை உரிக்கக்கூடியது. நோ தாங்க முடியாமல் இருந்தது, என்னைத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு தலையை நீருள் புதைத்தார்கள். பெற்றோலில் தோய்த்த பொலித்தீன் பையினால் எனது தலையை மூடி கழுத்தில் இறுகக் கட்டியிருந்தர்கள். நான் மூச்செடுக்க முயன்றபோது நெருப்பை சுவாசிப்பது போல இருந்தது.’ பிரிட்டனில் புகலிடம் வழங்கப்பட்டுள்ள இன்னுமொருவர் தெரிவிக்கையில் ’எனது முக்தை மேசையில் அழுத்தி வைத்துக்கொண்டு கம்பி, தடி, பொல்லு என்பவற்றால் அடித்தார்கள். சிகரெட் துண்டுகளால் சுட்டார்கள். நான் தாகத்திற்கு நீர் கேட்டபோது பருகுவதற்கு சிறுநீரைத் தந்தார்கள்.” என்று தெரிவித்துள்ளார்கள்.

இப்பொழுது உண்மை வெளிவரத்தொடங்கியுள்ளது, கடந்த வருடம் சிறிலங்கா கிரிக்கட் அணி இங்கிலாந்திற்கு விஜயம் செய்தபோது அது பாரிய எதிப்பை சந்தித்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. நாடு கடந்து வாழும் தமிழர்கள் அக்கறையுள்ள ஏனையவர்களுடன் இணைந்து பூரண பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்திருந்ததுடன் இருதரப்பு நிகழ்வுகள் அனைத்தையும் நிறுத்திவைக்கும்படியும் கேட்டிருந்தனர்.

தென்னாபிரிக்க விளையாட்டுத்துறையை வெற்றிகரமாக பகிஷ்கரிக்கச் செய்தது போல இப்பொழுது அதே போன்ற பகிஷ்கரிப்பை மேற்கொள்ளும்படி தமது அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணம் அவுஸ்திரேலிய மக்களுக்கு வந்துள்ளது.

கொழும்பில் புதிய கிரிக்கட் ஸ்டேடியம் ஒன்றுக்கு தனது பெயரை வைத்திருக்கும் ராஜபக்ஷ ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரி. தனது நடவடிக்கைகளின் விளைவைத் தணிப்பதற்காக விளையாட்டுத்துறையை விசேடமாக கிரிக்கட்டை பாவிப்பபவர்.

அவுஸ்திரேலிய அரசும், அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையும் இலங்கை விடயங்களை கவனத்திற்கொள்ளாது இருந்தாலும் அவர்களால் தொடர்ந்து அவ்வாறு செய்ய முடியாது. அதே நேரத்தில் சிறிலங்காவிற்கு எதிரான பகிஷ்கரிப்பு தொடர்பான கருத்து இந்தக் கோடைகாலத்திலும் தொடரும். அதன் மூலம் இலங்கைக் கிரிக்கட்குழு ஆனது, இன ஒழிப்பிலீடுபட்டு; தமிழ் மக்களை புகலிடம் தேடி எமதுநாட்டுக்கும் வேறு நாடுகளுக்கும் ஓடவைக்கும் அரசின் பிரசாரப் பீரங்கி என்பதையும் தெரியவைக்கும்.

அவுஸ்திரேலிய அரசு நீண்டகாலமாக வெட்கக்கேடான வகையில் தனது பழங்குடி மக்களதும், புகலிடம் தேடி வருபவர்களதும் மனித உரிமைகளை அடக்குவதற்கு பெரிய அளவில் செயற்பட்டுள்ளதுடன் தனது உதவியுடன் எழுதப்பட்ட ஐ.நா சாசனத்தையும் புறக்கணித்தது,

1957 இல் தென்னாபிரிக்க அரசாங்கத்தை தனது இன ஒதுக்கல் கொள்கையை பரிசீலனை செய்யுமாறு ஐ.நா வால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்தே ஐந்து நாடுகளில் அவுஸ்திரேலியாவின் Menzies தலைமையிலான லிபரல் அரசாங்கமும் ஒன்று. ஏனைய 55 நாடுகள் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் அவுஸ்திரேலியாவிற்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை.

1970 களில் தென்னாபிரிக்க வெள்ளையர் அரசாங்கத்தின் மோசமான இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக வீதிகளில் போராடியது அவுஸ்திரேலிய அரசாங்கமோ விளையாட்டுத்துறையோ அல்ல அவுஸ்திரேலிய மக்களே.

பசில் டி ஒலிவேரா என்ற கறுப்பினத்தவரை கிரிக்கட் அணியில் சேர்த்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை தென்னாபிரிக்க அரசு நிராகரித்ததால் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவிற்கான தனது விஜயத்தை ரத்துச்செய்திருந்த இருவருட காலத்தில் அவுஸ்திரேலிய அரசின் முழு ஆதரவுடன் 1970இல் எமது தேசிய கிரிக்கட் அணி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்தது.

1971 இல் இங்கிலாந்திற்கு விஜயம் செய்திருந்த தென்னாபிரிக்க றக்பி அணி, அங்கு இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக நாடு திரும்புமாறு வற்புறுத்தப்பட்டபோது Mc Mahon தலைமையிலான சமஷ்டி லிபரல் அரசின் ஆசியுடனும் உதவியுடனும் அவ்வணி அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்தது.

இங்கு எதிர்ப்புகளையும் தடைகளையும் தவிர்ப்பதற்காக அவுஸ்திரேலியாவின் விமானப்படை விமானங்களில் பறந்து திரிந்தனர். இந்த றக்பி குழுவின் பயணங்கள் தொடர்வதற்கு அவுஸ்திரேலியாவினால் எடுக்கப்பட்ட நேர்மையற்ற தீர்மானத்திற்கு எதிராக றக்பி போட்டிகள் நடைபெற்ற இடங்களிலும், வீதிகளிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்ச்சி முயற்சி தோல்வியடைந்தமைக்கு நன்றியாக உள்ளோம். இந்த சூழ்ச்சி முயற்சி தோல்வியடைந்தமைக்கு நன்றியாக உள்ளோம்.

பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தடைகளின் விளைவாக 1971- 72 காலப்பகுதியில் தென்னாபிரிக்காவின் அவுஸ்திரேலியா விஜயம் சாத்தியமாகாது என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆலோசனையை சேர் டொனால்ட் பிரட்மன் தலைமையினாலான இன ஒதுக்கல் கொள்கைக்கு ஆதரவான கிரிக்கட் சபை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் அந்த விஜயம் ரத்து செய்யப்பட்டது, தொடர்ந்து போட்டிகளை நடத்துவதற்காக பிரட்மன் இரகசிய முயற்சிகளை எடுத்த போதிலும் தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை ஒழிக்கப்படும்வரை தென்னாபிரிக்காவுடன் பெரிய அளவிலான போட்டிகள் எதனையும் அவுஸ்திரேலியாவால் நடத்தமுடியவில்லை.

தென்னாபிரிக்காவை அது அதிகமாக விரும்பும் விளையாட்டுத்துறையிலிருந்து தனிமைப்படுத்தும் இச்செயற்பாடானது இன ஒதுக்கல் கொள்கையை இல்லாதொழிப்பதில் முக்கிய பங்குவகித்தது. இன ஒழிப்பு கொள்கையை முடிவுக்கு கொண்டுவருவதில் ஏனைய நிர்ப்பந்தங்களுடன் விளையாட்டுத்துறைப் பகிஷ்கரிப்பும் முக்கிய பங்காற்றியது’ என அவுஸ்திரேலியாவின் பிரபல விளையாட்டுச் சரித்திரவியலாளரான றிச்சர்ட் காஷ்மன் (Richard Cashman) தெரிவித்துள்ளார்.” இப் பகிஷ்கரிப்பினால் இரண்டு முக்கிய விளைவுகள் ஏற்பட்டன. ஓன்று தென்னாபிரிக்க வெள்ளை இனத்தவரை மதிப்பிழக்கச் செய்தமை. மற்றையது இன ஒதுக்கல் விடயத்திற்கு சர்வதேச நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய இடத்தை அளித்தமை.” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கோடைகால கிரிக்கட் இதனுடன் ஒப்பிடப்படுவதும் விநோதமாக நோக்கப்பட வேண்டியதும் தவிர்க்கமுடியாதது. இதில் பல்லின விளையாட்டு வீரர்களைக் கொண்ட தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளும் அதேவேளை இன வாடை வீசும், அதிகாரவகுப்பினால் ஆதிக்கம் செலுத்தப்படும் இலங்கையணியும் நத்தார் -புதுவருட காலத்தில் மெல்பேர்ன், சிட்னி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள போட்டிகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கவுள்ளது.

இன ஒதுக்கல் கொள்கையைக் கொண்டிருந்த தென்னாபிரிக்க அரசிற்கு தெரிவிக்கப்பட்ட அதே செய்தியே இந்த அணியின் மூலமாக இலங்கை அரசாங்கத்திற்கும் தெரிவிக்கப்படுகிறது, ஒரு அசாதாரண சமூகத்தில் சாதாரண விளையாட்டு இருக்க முடியாது.

இதயத்தைப் பிழியும் ஒரு விவரணப்படத்தை அண்மையில் பார்த்தேன். அதன் பெயர் ”கேட்கப்படாத குரல்கள்” (Silenced Voices) என்பதாகும் . இலங்கை அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் கொலை மற்றும் தமிழ் மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.. இந்த நடவடிக்கைகளே இன்று ராஜபக்ஷ மீதும் அவரது இராணுவ அதிகாரி கள் மீதும் யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளை நடத்தும்படியான சர்வதேச ரீதியான வற்புறுத்தலுக்கு வழிவகுத்துள்ளது.

இன்னுமொரு காட்சி , வீதியில் இறந்து கிடந்த தாய்க்கு மேலாக நின்று கொண்டு பிள்ளைகள் அவரை எழும்பும்படி கெஞ்சுகிறார்கள். ஏனெனில்; அநாதைகள் ஆவதை அவர்கள ; விரும்பவில்லை.

இன்னுமொரு மனிதர் கண்களும், கைகளும் கட்டப்பட்டு முழங்காலில் நிற்கவைக்கப்பட்டு தலையின் பின்பகுதியில் படையினர் ஒருவரால் சுடப்படுகிறார்.

நான் பார்த்த படங்களில் என்றுமில்லாதவாறு முரண்டாடானதாக அமைந்தது இது. இருந்தும் எந்த வன்முறையும் இம்பெறாததுபோன்ற தோற்றம். அது கொழும்பு வீதிகளில் விளம்பரத்திற்காக ஒட்டப்பட்டிருந்த பெரிய புகைப்படம் அதில் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா ஜிலாட் மிகுந்த சிரித்த முகத்துடன் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு கைலாகு கொடுக்கின்றார்.[/size]

[size=4]-றோவர் கிரான்ட (TREVOR GRANT is one of Australia’s premier sports writers.)[/size]

[size=4]-தமிழ் லீடருக்காக தமிழில் தருபவர்: தேவா[/size]

http://www.tamilleader.com/mukiaya/7771-2012-11-29-10-00-47.html

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள் ஊர்ப்பூராயம். இந்தியத் தளங்களுக்கு ஆங்கில வடிவத்தைக் கொண்டுசென்றால் நல்லது.

Link to comment
Share on other sites

[size=6]BOYCOTT SRI LANKA CRICKET[/size]

[size=3]

[size=5]Cricket is a sport that prides itself on equality and fairness. “It’s not cricket” is a phrase associated with these qualities that has long been part of our common language. But there’s nothing equal or fair about Sri Lanka, which is sending its cricket team to Australia to play three Tests and a one-day series from November to February.[/size][/size][size=3]

[size=5]Worse, this team is closely aligned with the malevolent Government forces that murdered at least 50,000 innocent Tamil civilians towards the end of the civil war and is now engaged in the ethnic-cleansing of Tamils. The recently-retired captain Sanath Jayasuriya has long been associated with the current government of president Mahinda Rajapaksa and is now an elected representative of this brutal regime.[/size][/size]

http://wtss.com.au/?p=61

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெள்ளைக்காரருக்கு இருக்கும் உணர்வு சிட்னிவாழ் பெரும்பாலான தமிழர்களுக்கு இல்லை என்பது வேதனையான விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிங்கள அணிதுடுப்பாடவரும் போது அவ்வணிக்கு சிட்னிவாழ் பல தமிழர்கள் சிங்கக்கொடியுடன் சிங்கள துடுப்பாட்ட அணிக்கு ஆதரவான ஆடையினை அணிந்து வருகிறார்கள். எனது அனுபவங்கள் சில

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76895&st=20#entry620143

http://www.yarl.com/forum3/index.php?showtopic=98322

இம்முறையும் எதாவது தமிழ் அமைப்பு சிங்கள அணிக்கு எதிராக எதாவது செய்தால் நானும் நிச்சயம் கலந்துகொள்வேன்.

Link to comment
Share on other sites

59589_4914370735363_796149334_n.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதான 10 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்து கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். குறித்த கடற்படை சிப்பாய் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியான போதும், கடற்படை பேச்சாளர் அதனை மறுத்திருந்தார். எவ்வாறாயினும் கைது நடவடிக்கையின்போது, உயிரிழப்பொன்று ஏற்பட்டதால் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்படி 10 இந்திய மீனவர்களும் நேற்று (25) மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். https://thinakkural.lk/article/304609
    • பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நாளை உள்ளூர் நேரடி இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும்  போட்டியிடவுள்ளனர். இத்தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதன்போது குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரேன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.   மொத்தம் 90 நிமிடம் இவ் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389828
    • கவி அருணாசலத்தின் AI படங்களுக்கெல்லாம் இவ்வளவு பதில் எழுதி நேரத்தை விரயமாக்க  வேண்டுமா?  யாழ் களத்தில் சீமான் மீதான விமர்சனம் என்பது காழ்ப்புணர்ச்சி காரணமாக வருகிறது. குழந்தையால்கூட இதைப் புரிந்துகொள்ள முடியும்.  தமிழக மீனவர்களின் அத்துமீறலை சீமானுக்கெதிரான விடயமாக மாற்றும்போது மட்டுறுத்தினர் அதனைக் கண்டும் காணாமல் விடுகிறார்கள்.   
    • முதலில் சாரதி அனுமதிப்பத்திரம் கொடுப்பதில் இருந்து தொடங்க வேணும்.இங்குள்ள இறுக்கமான நடவடிக்கைகள் பற்றி சொன்னால் அங்குள்ளவர்கள் தாங்கள் ஏதோ பிரச்சனை இல்லாத நாட்டில் இருப்பது போலும் நாங்கள் எல்லா விடையங்களுக்கும் கஸ்ரப்பட வேன்டிய நிலையில் வாழ்வதாகவும் நினைக்கிறார்கள்.பலன் இப்படியான விபத்துக்கள்.பிலியானவர்களுக்கு அஞசலிகள்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.