Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தின மலரில் வந்த செய்தி......................

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லுங்கியால் கட்டி அகதி சித்ரவதை சலுகைகளில் கைவைக்கும் அதிகாரிகள்* நடவடிக்கை எடுக்குமா புதிய அரசு?

தமிழகத்துக்கு வரும் இலங்கை அகதிகளிடம் நடக்கும்மனித உரிமை மீறல் அவலங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1983 க்கு பிறகு இலங்கையில் மீண்டும் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையில் சண்டை துவங்கும் என்பதால் உயிரை பாதுகாத்துக்கொள்ள அகதிகளாக தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகம் வரும் இவர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை சந்திக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். தனுஷ்கோடி வந்த அகதிகளிடம் கடற்படை வீரர் ஒருவர் வரம்பு மீறி நடந்ததோடு அமெரிக்க டாலர்களையும் பறித்து கொண்டார். அகதி ,புலனாய்வுதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்க சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்த கடற்படை அதிகாரிகள் அகதியிடம் டாலர்களை ஒப்படைத்து மன்னிப்பு கோரிய சம்பவமும் நடந்துள்ளது. அகதிகளுடன் வந்த ஒருவர் போலீசை கண்டதும் பயத்தினால் ஓட, துரத்தி பிடித்த போலீசார் அவரின் லுங்கியினால் புறம்கையை கட்டி அரைகுறை ஆடையுடன் சித்ரவதை செய்த சம்பவமும் அரங்கேறியது.

மண்டபம் முகாம் செல்லும் அகதிகளின் உடமைகளை அங்குள்ள உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை எடுத்துக்கொண்டுஅவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளிலும் கைவைக் கின்றனர்.முகாமில் பலர் இன்னும் பசைபோல் ஒட்டிக்கொண்டிருப்பதால் அகதிகள் வருகை இவர்களுக்கு பணம் கொட்டும் வியாபாரமாகிவிட்டது. முகாமில் உள்ள கிணறுகளில் பெண்கள் குளிக்கும் காட்சியை டூட்டி போட்டு ரசித்து பார்க்கும் பணியில் போலீசார் ஈடுபடுவதால் பயத்தில் பெண்கள் குளிக்ககூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அகதிகள் முகாமில் நடைபெறும் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் ,அதிகாரிகள் நடவடிக்கைகள் குறித்தும் புலனாய்வு துறையினர் முழுமையான அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி

உள்ளனர்.

ஐயா இது ஒண்ற்ம் புதிது அல்ல. சமாதான காலத்திலேயே அங்கு 70 ஆயிரம் அகதிகள் 102 முகாம் களில் இருந்தார்கள். இவர்கள் தினமும் அதிகாரிகளிடம் படும் அவலம் சொல்ல முடியாத்து. நான் இதில் பல முகாம்களுக்கு விசிட் போய் இருக்கிரேன். கியூ ப்பிரான்ச் பொலிஸ்காரன் தொல்லை இந்த முகாம்களில் பெரும் தொல்லை. பின் விளைவுகளுக்குப் பயந்து யாரும் முறைப்பாடு செய்வதில்லை. அகதிகளின் கொஞ்ச உடமைகளை கொள்ளை அடிப்பதற்கு இந்த நாய்கள் செய்யும் அனியாயம் மிகவும் மோசம். சிங்களவன் எவ்வளவோ பரவாயில்ல.

Å󾡨à šƨÅìÌõ ¾Á¢Æ¸õ ±É ¦ÀÂ÷ Åó¾Ð

þ¾É¡ø¾¡§É¡...!!!

வந்தாரை வாழவைக்குமா? அங்க உள்ளவனே அஞ்சுக்கும் பத்துக்கும் அடிசுக்கொண்டு சாவுரான்.

கருமம்.

ஆமாம் ஈழத்தில் தான் பாலாறும் தேனாறும் ஒடுகிறதாம்.. யாரு என்ன பேசுறதுண்ணே விவஸ்தை இல்லாமல் போச்சுடா சாமி

மேற்கோள்:

ஆமாம் ஈழத்தில் தான் பாலாறும் தேனாறும் ஒடுகிறதாம்.. யாரு என்ன பேசுறதுண்ணே விவஸ்தை இல்லாமல் போச்சுடா சாமி

என்னடா ....... கொஞ்சகாலமா - களம் எந்த வெட்டு கொத்தும் இல்லாம - அமைதியா இருக்கு என்னு பார்த்தம் -

ஆகா - வந்திட்டார் ல - மகராசன்!

இனி நடத்துங்க! 8)

அய்யா ராஜாதிராஜா அமைதி அமைதி சற்ரு றிலாக்ஸ் பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தேவை இல்லாமல் ஈழ தமிழ்ர்களை கேலியாக எழுதும் படி செய்ய வேண்டாம்

_________________

ராஜாதிராஜா எழுதியது......

நீர் எழுதின கருத்தில் எல்லாம் கேலியாகதான் எழுத்யிருக்கிறீர். இப்பஎன்ன புதுசாக மீரட்டுகிரீர்....நாங்கள் ஜனநயகவாதிக்ள் என்றபடியால் தான் நீர் இப்படி எல்லாம் எழ்துவதற்கு விட்டுட்டு இருக்கிறொம்........

Removed because dont want to continue post offensive on the request of Mr vasambu

சிலர் செய்யும் தவறுகளுக்காக நாம் எல்லோருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து இது சம்பந்தமாக ஏதாவது ஆக்கபுூர்வமாகச் செய்யலாம்.

தயவுசெய்து தமிழகத்தின் அகதிகள் புனர்வாழ்வு சம்பந்தமான அமைச்சரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தபால் முகவரி போன்றவற்றை ராஜாதிராஜா அல்லது லக்கிலுக் யாராவது இங்கு இணைத்தால் இது விடயமாக நாங்கள் அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதங்கள் அனுப்பி வைக்கலாம்.

தமிழ் நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் நிலவரங்களை நேரில் பார்வையிட்ட தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி, இந்த முகாமில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட அகதிகள் இருப்பதாகவும், ஆனால் முகாமில் உள்ள நிலைமகள் திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவித்தார்.

'முகாமில் குளிக்க தனியறை இல்லை'

முகாமில் உள்ள பெண் அகதிகளுக்கு தனியாக குளியலறை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குடியிருப்புகளில் மின்சார வயர்கள் கூட அறுந்து தொங்குவதாகவும், பெண் அகதிகளுக்கு ஆண் போலிசார் பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அகதிகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இது குறித்து தான் அரசுக்கு மனு ஒன்றை அளிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

b.b.c thamil

பிச்சைகாரர்களிடமே புடுங்கித்தின்னும் பிச்சைக்கரனுடன் எமக்கு என்ன பேச்சு. என்ன செய்வது. சில சமயங்களில் சாக்கடைகளையும் கடந்துதான் போகவேண்டியுள்ளது.

அணால் எல்ல இந்தியர்களுமே அப்படி அல்ல. பல தூய உள்ளம் படைத்தவர்கள் உள்ளார்கள். அணால் அவர்களையும் இந்த ரஜாதிராஜ மாதிரியான பிணம் தின்னிகள் நிம்மதியாக வாழவிடுவதில்லை. இப்படியான் தூய இந்தியர்கள் சாக்கடையில் கல் எறிந்தால் நமக்குத்தான் அசிங்கம் என அரசியல், பொது வாழ்வில் இருந்து ஒதுங்கி தம்மால் முடிந்தவரை வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கின்றனர். எனக்கு பல நண்பர்கள் உள்ளனர். உண்மையிலேயே மிக சிறந்த மனிதர்கள்.

தமிழகத்த்ல் உள்ள இந்த 70 ஆயிரம் ஈழ அகதிகள் போதுமடா சாமி உங்கள் சாக்கடை நாத்தம் தாங்க முடியல என திரும்பி ஈழத்திற்குப் போவதெண்றாலும், கியூ பிரான்ச் பொலிஸ் நாய்களும், பினம் தின்னி அதிகாரிகளும் அவர்களை போக விடுவதிலை. நான் இது சம்பந்தமாக பல தடவைகள் பலருக்கு திரும்பி போவதர்க்கு உதவி உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் முகாம் மற்றும் நலன் குறித்து முதல்வர் கலைஞருக்கு அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம் மற்றும் அகதிகளின் நலன் ஆகியவை குறித்து தமிழக முதல்வர் கலைஞருக்கு ஆய்வறிக்கை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

அகதிகள் நிலை குறித்து ஆய்வு செய்ய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான குணசேகரன் மற்றும் இராமசாமி ஆகியோரை நியமித்திருந்தது.

இருவரும் மண்டபம் அகதிகள் முகாமில் அகதிகளைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் இராமதநாதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் இருவரும் கூறியதாவது:

தமிழகத்திற்கு அகதிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் உயிருக்கு பயந்து வாழ்வாதாரம் தேடி அகதிகளாக தமிழகம் வருகின்றனர்.

மண்டபம் முகாமில் எவ்வளவு அகதிகள் வந்தாலும் தங்குவதற்கு போதுமான இருப்பிட வசதிகள் உள்ளது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் முகாமில் அகதிகளுக்கு காவல்துறையினரால் எந்த தொந்தரவும் இல்லை.

பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் அகதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முகாமில் போதுமானதாக இல்லை.

குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் குறைவாகவே உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனியாக கழிப்பறை வசதி இல்லை. முகாமில் உள்ள பல குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அவற்றை மராமத்து செய்ய வேண்டும்.

அகதிகளாக வருபவர்களின் குழந்தைகள் கல்வி பயில பள்ளிகளில் உடனடி சேர்க்கை வழங்க நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்.

மேலும் அகதிகளுக்கு அரசு வழங்கி வரும் அரிசி உள்பட உணவு பொருட்கள், நிதி உதவி போன்றவை ஏற்கனவே உள்ள விகிதப்படியே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் கடந்த பல வருடங்களில் இலங்கையில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த படகுதாரர்களும், இங்குள்ள படகு முகவர்களும் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்தி தவறு செய்தவர்களை தண்டித்து மற்றவர்களை விடுவிக்க வேண்டும்.

இது குறித்து எங்கள் கட்சி தலைமைக்கு விரிவான அறிக்கை சமர்பிப்போம்.

கட்சி தலைமை இந்த அறிக்கையை முதல் அமைச்சர் கருணாநிதியிடம் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றார் அவர்.

-புதினம்

இப்ப மட்டும் எங்க இருக்கிறாரு.... இவரு வீரம் எல்லாம் வெளிநாட்டுலே கம்ப்யூட்டர் முன்னாடி தான்.... பாவம் அங்கே துப்பாக்கி ஏந்தி சாகறவன் வேறக் கூட்டம்....

தலை சார்... நீங்க வேளாளரா? :lol:

திமுக காறன் ஜாதி அரசியல் ஆரம்பிச்சிட்டான்.....

:wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.