Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா அவமதித்த ராஜபக்சவை அரவணைத்த இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

79097099Mahinda_86972c.jpg

 

 

சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற எடுத்த முயற்சி மீண்டுமொருமுறை தோல்வியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச ரீதியாக சிறீலங்கா தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து வருவதை இந்த சம்பவம் எடுத்து காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தெரியவருவதாவது,

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே சிறிலங்காவின் தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய றொபேட் ஓ பிளேக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுஇ சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உங்களைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்புவதாக கூறியுள்ளார்.

அதற்கு பிளேக் அது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் சந்திப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.

எனினும்இ அந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்படவில்லை.

இதேவேளை, அமெரிக்கா ராஜபக்சவை சந்திப்பதை தவிர்த்த போதும், வழக்கம் போல இந்தியா ராஜபக்சவை அரவணைத்துள்ளதாக வொசிங்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. இது, தொடர்பாக தெரியவருவதாவது,

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இராப்போசன விருந்தில் பங்கேற்றதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கசகஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வொசிங்டனுக்கு வெளியேயுள்ள மேரிலன்ட் பால்ரிமோரில் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறிலங்கா பிரதமர் டி.எம். ஜெயரட்ணவை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் வொசிங்டனில் கடந்த 24ம் நாள் இரவு சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய அளித்த இராப்போசன விருந்தில் பங்கேற்றார்.

வொசிங்டனில் இருந்து நியுயோர்க் புறப்படுவதற்கு முன்னர் அவர் பங்கேற்ற ஒரே நிகழ்வு இதுவாகும்.

சோறு, கறியுடனான அந்த இராப்போசன விருந்தில் சிறிலங்கா தூதரக அதிகாரிகளுடன் சுமார் 60 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவருமே வொசிங்டன் பெரும்பாக பிரதேசத்தில் வசிக்கும் சிறிலங்கர்கள்.

விதிவிலக்காக அந்த விருந்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவும் பங்கேற்றார்.

சிறிலங்காவுக்கான இந்தியத் தூவராக இருந்தபோதும் பின்னர் இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்தபோதும் சிறிலங்கா அதிபருடன் நிருபமா ராவ் நெருக்கமானவராக இருந்தார்.

வெளிவிவகாரச் செயலர் பதவியில் இருந்த விலகியபோது இராஜீய நெறிமுறைகளுக்கு முரணாக சிறிலங்கா அதிபரின் தனிப்பட்ட விருந்தில் பங்கேற்கஇ தனது கணவர் சுதாகர் ராவுடன் கொழும்பு சென்றிருந்தார்.

இந்தநிலையில்இ சிறிலங்கா அதிபர் பங்கேற்ற இராப்போசன விருந்தில் நிருபமாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதன் பின்னர்இ கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்ரிமோரில் இருந்து நியுயோர்க்கிற்கு சிறிலங்கா அதிபர் தொடரூந்து மூலம் சென்றார். இரகசிய சேவை முகவர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.

நியுயோர்க்கில் துறைமுக அதிகாரசபை முனையத்தில் சிறிலங்கா அதிபரை பாலித கொஹன்னவும் மேஜர் ஜெனரல் சவீந்தர சில்வாவும் வரவேற்றனர்.

http://eelampresse.com/?p=13700

பாலூட்டி சீராட்டி வளர்த்த தாய் இந்தியா.இளமையான மகனோ புதிய அழகான வளமான காதலியான சீனாதான் வேண்டும் என நிற்கிறான்.

 

தாயோ மகனை கைவிட முடியாமல் உள்ளார்.மகனோ தாய்ப்பாசத்தை வைத்து இடைக்கிடை வந்து போவார். தாயும் வரும்பொழுது உணவும் பணமும் தருவார்.

 

பெத்த மனம் பித்து.



74214_443778949020609_1037343240_n.jpg



Mahinda Rajapaksa and Family Members May Get US 1.2 -1.8 Billion Dollars
as Commissions for Chinese Projects During 2005-2015

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா, மகிந்த சிங்களத்தில், சீனா தான் வேண்டும் என்று கூறவில்லைப் போல் உள்ளது!

சீனாவும் வேண்டும் என்று தான் கூறுகின்றார், என நினைக்கிறேன்! :rolleyes:  

அடிப்பவனும் அவனே. அணைப்பவனும் அவனே.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா சரணம் கச்சாமி என்று சொல்லுறார் போல கிடக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.