Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு; கர்நாடகாவில் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு: உச்சநீதிமன்றம் உத்தரவு படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் வீடு முற்றுகையிடப்பட்டது.

தமிழநாட்டில் காவிரியில் டெல்டா மாவட்டங்களில் உள்ள சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற இடைக்கால நிவாரணமாக வினாடிக்கு 10,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடமாறு கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி நேற்றிரவு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கர்நாடக அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விவசாய சங்கத் தலைவர் கவுடா தலைமையில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் மாண்டியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் இயக்கபடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பெங்களூருவில் க்னனட ரட்சன வேதிகா அமைப்பினர் அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டை நேற்று நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.பெங்களூருவில் பன்னாட்டு விமான நிலையத்தையும் முற்றுகையிட முயன்ற கன்னட ரட்சன வேதிகா அமைப்பினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தால், தமிழ்நாட்டிலிருந்து சத்தியமங்கலம், கூடலூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் பேருந்துகள் 2வது நாளாக இன்றும் எல்லையில் நிறுத்தப்பட்டது. இது போன்று மேட்டூர் வழியாக மதஸ்வரன் மலை, பெங்களூரு மற்றும் மைசூர் செல்லும் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தால் கிருஷ்ண ராஜ சாகர் ஆணைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://news.vikatan.com/?nid=11534#cmt241

சம்பா பயிர்கள் கருகிய வேதனையில் விவசாயி தூக்குபோட்டு தற்கொலை



திருவாரூர் அருகே தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால் வேதனையில் வயலில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆண்டாங்கரையை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (55), விவசாயி. இவரது மனைவி சலாமத்பேகம். மகன்கள் சையது அப்தாஹீர் (27), முகமது மைதீன் (25), சாகுல் ஹமீது (24), முகமது நசுருதீன் (13). இரண்டு மாதத்திற்கு முன் முகமது மைதீனுக்கு திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்காக கடன் வாங்கியுள்ளார். அந்த கடனுக்கு வட்டி கட்டி வந்தார். இந்நிலையில் 3 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்திருந்தார். அறுவடை செய்து கடனை அடைக்க திட்டமிட்டிருந்தார். 60 நாட்களான நெற்பயிருக்கு தண்ணீர் இல்லாமல் வயலில் நிலம் பாளம் பாளமாக வெடித் தது. தனது வயலுக்கு மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்ச போதிய பணம் இல்லாததால் கடந்த 3 நாட்களாக மனம் உடைந்த நிலையில் அப்துல் ரஹீம் காணப்பட்டார்.அவரது மகன்கள், ஆறுதல் கூறியுள்ளனர். இருந் தாலும் சரியாக சாப்பிடாமல் மனஇறுக்கத்துடன் காணப்பட்ட அவர், நேற்று வயலுக்கு சென்றார். பயிர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், வயலில் உள்ள கருவேலமரத்தில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். மரத்தில் சடலம் தொங்குவதை பார்த்த அவ்வழியே சென்ற விவசாயிகள் அப்துல் ரஹீமின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மகன் சையது அபுதாஹீர் மற்றும் உறவினர்கள் வயலுக்கு சென்று உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த ஆலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கோட்டூர் பாண்டியன், உள்பட பலர் அப்துல் ரஹீமின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

 

தினகரன்



18711_227960704002738_326125410_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலை இல்லாத நூதன பிரச்சனையெல்லாம் இந்தியாவிலைதான் இருக்கு.....ஒருநாடு ஒரே இனம் எல்லோரும் நம் மக்கள் நாங்கள் இந்தியர் என திரைப்பட வசனங்களுக்குத்தான் சரி....மிச்சம் எல்லாம் எதிருக்கு எதிர்தான்.... அதிலையும்......தமிழ் நாட்டுக்காரனுக்கு நதிகளின்ரை சுகபோகங்களை அனுபவிப்பதற்கு கண்ணாமூச்சி சினிமாக்களே தஞ்சம்...

https://www.youtube.com/watch?v=oUo2gj7n6xA&playnext=1&list=PL4836E8A9BB145D8D&feature=results_main
https://www.youtube.com/watch?v=blmm8EdNdM8&list=PLYZ9MZLzuR3D7ShSylXpz92C8n7tXaSNK&index=179

கருணாநிதி பற்றியும் மாற்று தெரிவாக உள்ள ஜெயலலிதா பற்றியும் சீமான் அழகாக இந்த நேர்காணலில் கூறி உள்ளார்.
இவர்களை தவிர வேறு ஒரு பலமான தெரிவு வரும்வரை தமிழக மக்கள் நிலைமை கடினமே.



http://www.yarl.com/forum3/index.php?showtopic=112747

155905_393841220690089_2051705674_n.jpg

 

மறு புறத்தில் ...

 

 

குளம், குட்டை, ஏரி, கண்மாய், கிணறு இப்படி எல்லாவற்றையும் அழித்துவிட்டு, மழை நீர் தேங்க வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தால் அழுது புரள்வது..

 

இறுதியில் சாக்கடையில் கலந்து வீணாக செல்வது வாடிக்கையான ஒன்று..

 

இப்படி நீர் ஆதாரங்களை எல்லாம் அழித்து ஒழித்துவிட்டு, இப்போது அவன் தண்ணி தரள இவன் தண்ணி தரள என்று புலம்புவது எந்த விதத்தில் நியாயம்..

 

எஞ்சியுள்ள நீர் ஆதாரங்களையாவது தூர்வாரி பாதுகாத்தால் நீர் வளம் சிறிதளவாவது பெருகும்.. இல்லையேல் வேறு வழியின்றி பிறமாநிலத்திடம் சண்டையிடவேண்டியதுதான்..

 

வீடு முழுக்க கான்க்ரீட் தளம் அமைத்துவிட்டு, மழை நீரையெல்லாம் சாக்கடைக்கு தாரைவார்த்துவிட்டு நிலத்தடி நீர் இல்லை என்று புலம் அறிவாளிகளை என்ன சொல்வது என்று தெரியவில்லை !!!


தயவு செய்து இனிவரும் காலங்களிலாவது தங்கள் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்து மழை நீரை சேமியுங்கள், பிறருக்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்..
 

வருங்கால சந்ததியினரும் நீரை ருசிக்கட்டும்..

 

 



- முகநூல்

இது காங்கிரசின் பிரித்தாளும் தந்திரம். தமிழ் நாடு கஸ்ட்டம். கர்நாடகத்தில் கண்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.