Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ?

"இறுதியுத்தத்தின் போது தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாக புலிகள் பயன்படுத்தினார்கள். கட்டாய ஆட்சேர்ப்பை நடாத்தினார்கள். கட்டாயமாக களத்தில் கொலை செய்தார்கள் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்தினார்கள்.இப்படியான மனிதகுலத்துக்கு எதிரான காரியங்களை புலிகள் செய்தார்கள்.அதனால் அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அந்த அமைப்பில் இருந்ததற்காக இவை எதிலும் அவன் சம்மந்தப்பட்டது கூறப்பட்ட குற்றங்கள் ஒன்றுகூட நிரூபிக்கப்படாதிருந்தும் அந்த இளைஞன் ஜனநாயகத்தின் வாசலான நாடு ஒன்றில் அகதித்தஞ்சம் கோரியபோது போர்க்குற்றவாளியாக்கப்பட்டு அகதியாக ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த நாட்டில் இவனுக்கு மருத்துவம் இல்லை , உணவுக்கான உதவியில்லை  , தொழில் செய்ய முடியாது வீட்டுக்காவலில் இருப்பதுபோல நிலமை. இன்றோ நாளையோ என்றோ திருப்பியனுப்பப்படும் நிலமையில் உள்ள மகனை நினைத்து ஊரிலிருந்து தினமும் ஏங்குகிற பெற்றோர்களின் துயர் மட்டுமன்றி ஏற்கனவே களத்தில் காயமுற்ற உடல்வலி மனவலியும் கூட தினம் தினம் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஓர் இளம் போராளியின் நிலமையே கீழ் வரும் உண்மை"


இவன் தனது சிறு வயதில்; புலிகள் அமைப்பில் இணைந்து இறுதி வரையும் வன்னிக்கள முனையிலே இருந்தவன். விடுதலைப்புலிகளின் பல முக்கியமான படைப்பிரிவுகளில் அவன் தன்னை அர்ப்பணித்து ஆற்றிய பணியென்பது விடுதலைப்பாதையில் வரலாறுகளாய் பதியப்பட வேண்டிய ஆயிரமாயிரம் கதைகளைக் கொண்டவை. இவனுடைய போராட்ட வாழ்க்கையில் இவன் சந்தித்தவை துன்பங்களும் துயரங்களும் மட்டும்தான். ஆனால் எல்லாவற்றையும் அவன் சவாலாகச் சந்தித்து முறியடித்து அத்தகைய பெரும் ஆபத்துகளிலிருந்தும் அவன் வெளியேறிய பாங்கு வியப்புக்குரியது.


இவனது ஆழுமை ஆற்றல் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. ஆயுதங்களோடு சமராடிக்கொண்டிருந்தவனை கல்வி கற்க வைத்து இன்றைய உலகம் எதிர்பார்க்கிற கல்வியையும் அவன் கற்க வேண்டுமென்று அவனை வளர்த்த தளபதியின் விருப்பத்தையும் நிறைவேற்றி கல்வியையும் கற்றான். பல முக்கிய இராணுவ நகர்வுகளில் இவனது பங்கும் வெற்றியும் வரலாற்றில் எங்கும் பதியப்படாதவை.


2008 இறுதிப்போர் கிளிநொச்சியை அண்மித்த வேளையில் தலைவரின் விசேட பணிப்பிற்கமைய 100பேர் கொண்ட அணியொன்றை எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இரகசியமாக ஊடுருவி பின்புறமாக வழிநடத்தியபடி முன்னேறிக்கொண்டிருந்த போது எதிரியின் எதிர்த்தாக்குதலில் காயமுற்றான். உடலின் பாகங்களில் கணிசமானவை பாதிப்புற்று பிணங்களோடு அடுக்கப்பட்டவன்.


பின்பு தனது வாழும் கணங்களை எண்ணிக் கொண்டிருந்த போது எதிர்பாராத அதிசயமாக மருத்துவர் ஒருவரின் கவனமும்  கடவுளின் கருணையாலும் அவனின் தன்னம்பிக்கையும் இவனைக் காத்து இன்றுவரையும் வாழ வைத்துள்ளது.


காயமடைந்ததும் அனேகம் போராளிகள் குப்பியடிக்கவே முயற்சிப்பார்கள் இதன் காரணமாக முற்கூட்டியே அருகில் நிற்பவர் முதல் பணியாக குப்பியை அறுத்தெடுத்துவிடுவது வளமை. இவனும் காயத்தின் தாக்கம் உயிர் தப்புவது சிரமம் என்ற நிலமையில் குப்பியைத் தருமாறு தோழர்களிடம் வேண்டினான். காயமடைந்த களத்திலிருந்து அகற்றி மருத்துவத்துக்காகக் கொண்டு செல்ல 13மணித்தியாலங்கள் வரையும் காத்து போராடி இவனைக் காக்க வேண்டுமென்று முயற்சித்தவர்கள் குப்பியை கொடுக்கவேயில்லை.

அப்ப குப்பிடியச்சிருந்தா இப்ப தினம் தினம் சாக வேண்டி வந்திராது. இப்படித்தான் இப்போது அடிக்கடி சொல்லிக் கொள்கிறான். இப்போது அந்தக் குப்பியைத் தராத தோழர்கள் மீது கோபம் வருகிறது. தாயகம் என்ற கனவோடு கல்வியை நல்வாழ்வை குடும்ப உறவுகளை வெறுத்த தாயகக்கனவுக்கு இந்தக்காலமும் இந்தக்கால மனிதர்களும் கொடுத்துள்ள தண்டனையை நினைக்கும் போதெல்லாம் வெளியிட முடியாது வெறுப்பும் கோபமும் மிஞ்சுகிறது....!

2009 மே 17 அன்று கடும்காயத்தோடு சரணடைந்து முகாம் வாழ்வு அன்றாட உணவுக்கு வரிசையில் நின்று மயங்கிவீழ்ந்து மீண்டும் காயம் கடுமையாகி இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பலமுறை கிழித்து சீர் செய்யப்பட்ட வயிற்றுக்காயம் உறவுகளை எங்கேயென்று தேட முடியாத அவலத்திலும் ஏதோ வளியாய் குடும்ப உறவுகளின் தொடர்பு கிடைத்தது. சிறைக்கு கொண்டு செல்லப்பட இருந்த வேளையில் ஒரு சிங்களமருத்துவத்தாதியின் மனிதநேய உள்ளத்தால் காப்பாற்றப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற உதவி கிடைத்தது.

பிணங்களோடு குறையுயிரில் புதைக்கப்படாது காப்பாற்றப்பட்டவனை பெற்றோரும் வெளிநாட்டில் இருந்த உறவொன்றின் மூலம் ஐரோப்பா அனுப்பி வைத்தனர். ஐரோப்பியநாடு அமைதியையும் பாதுகாப்பையும் தருமென்ற நம்பிக்கையோடு அகதி விண்ணப்பம் நிரப்பினான்.


ஐரோப்பாவில் வழக்கு நடத்துவதில் தற்போது தமிழ் சட்டத்தரணிகள் நிறைய நிறுவனங்களாக இயங்குகின்றன. தமிழ் சட்ட வல்லுனர்களால் மட்டுமே தன்னைக்காப்பாற்ற முடியுமென்று நம்பிய இந்த இளைஞன் தமிழ்சட்ட வல்லுனர் ஒருவரிடம் தனது வழக்கை தாக்கல் செய்ய ஆதரவை நாடினான். அந்தத் தமிழ்சட்ட வல்லுனர் தானே வழக்கை எழுதி இவனுக்கான வாழ்வு வருமென்று நம்பிக்கை கொடுத்தார். அந்த நாட்டில் அவன் தடைசெய்யப்படும் வரை தனது தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் பயன்படுத்தி மேற்படிப்பை தொடர்ந்தான். தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை உருவாக்கினான். ஆனால் காலம் அவனை விடாமல் கலைத்தது.


வலுவற்ற உடலின் காய வலியும் இரவுகளைத் துரத்துகிற பயங்கரம் மிக்க கனவுகளும் மன அழுத்தத்தைக் கொடுத்து ஓய்ந்து உறங்க முடியாத அவலத்தோடு அல்லப்பட்டுக் கொண்டிருந்தவன் போர்க்குற்றவாளி என அவன் வாழ்கிற நாடு தீர்ப்பு வழங்கியது.


வந்தநாள் முதல் இன்று வரை சமூக உதவிக் கொடுப்பனவும் இல்லை மருத்துவம் இல்லை வேலைசெய்ய முடியாத தடை இப்படி எல்லா வழிகளையும் ஜனநாயக நாடொன்று மறுத்து இவனைப் பயங்கரவாதியாய் பட்டியலிட்டு வைத்திருக்கிறது.


இப்போது மறுமுறையீடு நிராகரிக்கப்பட்டு தினம் தினம் நாடுகடத்தப்படுவேனோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது இவன் ஒரு போர்க்குற்றவாளியாக கருதப்பட்டு(ஆனால் நிரூபிக்கவில்லை) அடிப்படை மனிதவுரிமைகளும் மீறப்பட்டு மருத்துவமும் கிடைக்காது அவதிக்குள்ளாகியுள்ளான்.


இந்த இனத்தை நம்பி இந்த இனத்துக்காக போராடிய பலரது வாழ்வு இன்று ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளால் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்படுகிறது. தாயகக்கனவோடு போன எங்களுக்கு உலகமும் எங்களினமும் கொடுத்திருக்கிற வாழ்வின் கொடுமையை அனுபவிக்கிற ஒவ்வொரு போராளிக்கும் தினம் தினம் மரண வேதனையாகவே கழிகிறது.


எங்களுக்கென்றொரு நாடு வேண்டி தங்கள் காலத்தை தந்தவர்கள் எங்கள் கண்முன்னால் எதுவுமேயற்றுத் தவிக்கிறார்கள். புலம்பெயர்ந்து பயங்கரவாதிகள் எனப்படுகிற முன்னாள் போராளிகளுக்கான ஆதரவை வழங்க எங்கள் மனக்கதவைத் திறப்போமா ?

10.12.2012

http://mullaimann.blogspot.de/2012/12/blog-post.html
 

Edited by shanthy

#1: இருக்கும் நாட்டில் உள்ள தமிழ் அமைப்புக்களை அணுகவேண்டும்
#2: அவர்கள் மூலம் திறமைவாய்ந்த சட்டத்தரணிகளை வைத்து மீண்டும் வாதாடவேண்டும்
#3: அரசியல் வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மத அமைப்புக்கள் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்
#4: இன்றைய தாயக நிலையை ஆதாரங்களுடன் எடுத்து மு
ன்வைக்கவேண்டும்

 

பி.கு. இதயசுத்தியுடன் உதவிகளை / ஆலோசனைகளை கேட்பவர்கள் "தேசியவாதிகள் என்ன செய்யப்போகிறோம். ?" என்பதை தவிர்க்கவேண்டும். காரணம் இப்படி கேட்பதால் உண்மையில் உதவியை கேட்கிறாரா இல்லை எமது சமூகத்தில் ஒரு பகுதியினரை ஒருவரின் இக்கட்டான நிலையை வைத்து தாக்குகின்றாரா? என எண்ணத்தோன்றுகின்றது.

கப்பலில் வந்த பல முன்னாள் போராளிகள் கனடாவிலும் உள்ளனர்.

 

அப்படியானவர்களில் சிலருக்கு எனக்கு தெரிந்த ஒருவர் அவர்களை வேலையில் அமர்த்தி உள்ளார்.


இதன் மூலம் அவர்களின் நிரந்த வதிவுட உரிமை பெறும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

பல்கலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரை அவர் களுக்காகக் குரல் கொடுப்பதில் பலமான மாணவர் சக்தி, புத்திஜீவிகளின் தைரியமான கரங்கள் கூடவே பல்கலைக்கழக நிர்வாகம் என்ற ஒழுங்கமைப்பு உண்டு. ஆனால், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களைக் கைது செய்யும் போது அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு, அமைப்பு ரீதியாக எதுவும் இல்லையயெனலாம்.


எனவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படைத்தரப்பு நடந்துகொண்ட முறைமைகளோடு ஆரம்பமான குழப்ப நிலையை முடிபுக்கு கொண்டு வருவதற்கு, முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களின் கைதுகளை நிறுத்த வேண்டும் என்றும், நவம்பர் 2012க்கு முன்பிருந்த ஒரு குழப்பமற்ற சூழ்நிலை மீள ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் பல்கலைக்கழக புத்தி ஜீவிகளால் முன்வைக்கப்பட வேண்டும். இல்லையேல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்ந்தும் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி நிற்கும்.

எனவே, கைது என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றும் தார்மீகப்பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை நாம் எச்சந்தர்ப்பத்திலும் மறந்துவிடலாகாது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112788

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பி.கு. இதயசுத்தியுடன் உதவிகளை / ஆலோசனைகளை கேட்பவர்கள் "தேசியவாதிகள் என்ன செய்யப்போகிறோம். ?" என்பதை தவிர்க்கவேண்டும். காரணம் இப்படி கேட்பதால் உண்மையில் உதவியை கேட்கிறாரா இல்லை எமது சமூகத்தில் ஒரு பகுதியினரை ஒருவரின் இக்கட்டான நிலையை வைத்து தாக்குகின்றாரா? என எண்ணத்தோன்றுகின்றது.

 

இதில் தேசியவாதி என என்னையும் என் சார்ந்தவர்களையும் மட்டுமே நோக்கிய கேள்வி அகூதா. இதில் என்முன் உள்ள உங்களையோ அல்லது யாரையுமோ குற்றம் சுமத்தவில்லை. இதில் எவரையும் தாக்குவதற்கு என்னிடம் எவ்வித ஆயுதங்களும் இல்லையென்பதனை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணம் என்பது உங்களது மட்டுமே அதனை எனதாக்க முடியாதல்லவா?

உண்மையில் உதவி தேவைப்படாத ஒருவருக்காக நேரத்தை மினக்கெடுத்தி எழுதி இங்கு பதிவிட்டு என்னத்தை சாதிக்கலாம் ?

கப்பலில் வந்த பல முன்னாள் போராளிகள் கனடாவிலும் உள்ளனர்.

 

அப்படியானவர்களில் சிலருக்கு எனக்கு தெரிந்த ஒருவர் அவர்களை வேலையில் அமர்த்தி உள்ளார்.

 

இதன் மூலம் அவர்களின் நிரந்த வதிவுட உரிமை பெறும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

 

நீங்கள் குறிப்பிடுகிற வகைக்குள் இந்தப் போராளி மீதான தீர்ப்பு அமையவில்லை. ஒரு வீட்டுக்கைதிக்கு சமமான நிலமையிலேயே இருக்கிறது நிலமை.

இதில் தேசியவாதி என என்னையும் என் சார்ந்தவர்களையும் மட்டுமே நோக்கிய கேள்வி அகூதா. இதில் என்முன் உள்ள உங்களையோ அல்லது யாரையுமோ குற்றம் சுமத்தவில்லை. இதில் எவரையும் தாக்குவதற்கு என்னிடம் எவ்வித ஆயுதங்களும் இல்லையென்பதனை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணம் என்பது உங்களது மட்டுமே அதனை எனதாக்க முடியாதல்லவா?

 

உண்மையில் உதவி தேவைப்படாத ஒருவருக்காக நேரத்தை மினக்கெடுத்தி எழுதி இங்கு பதிவிட்டு என்னத்தை சாதிக்கலாம் ?

 

நன்றிகள் உங்கள் பதிலுக்கு.

இருந்தாலும் இந்த தலைப்பை விட " அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ? தேசியவாதிகள் என்ன செய்யப்போகிறோம். ?".

 

இவ்வாறு தலைப்பை போட்டுவதுதான் அழகு என்பது எனது கருத்து.

" அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ? என்ன செய்யப்போகிறோம். ?"

.அகூதா குறிப்பிடுவது போன்று இந்தத் தலைப்பு ஒரு வித மோதல் (offensive) நிலையைத்தான் தருகின்றது. Constructive ஆன எதிர்வினைகளை தருவதற்கான சந்தர்பங்களை குறைக்கின்றது.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகூதா , நிழலி,
உங்கள் இருவரின் வேண்டுதலை ஏற்று தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.


இத்தலைப்பை போடுவதற்கான காரணம் கூட தேசியவாதிகள் என்று தங்களை அடையாயப்படுத்தி இயங்குகிறவர்களிடம் குறித்த இந்த போராளிக்கான உதவிகள் கோரியிருந்தேன். அவர்களது விட்டேற்றித்தனமான பதில்கள் உண்மையிலேயே கவலைதந்த விடயம். அதனாலேயே இத்தலைப்பை தேர்ந்தேன்.


குறித்த இந்த போராளியை வைத்து பந்தயம் கட்டுவதற்கே குறித்தவர்கள் தயாராகிய நிலமையில் அவனது தனித்த உயிர்வாழ்வு அவனது இழப்பு பற்றி இவர்கள் அக்கறை கொள்ளாது நடந்து கொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவிலும் சிலர் போராளியாக இருந்தார்கள் என்று கூறி அகதி அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சிறிலங்கா சென்றால் உயிர் ஆபத்து என்றும் உண்மையில் அகதி என்றும் ஐ.நாவுக்கான அகதிகளுக்கான அமைப்பின் மூலம் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.