Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!!

Featured Replies

இணையத்தில் மனம் போன போக்கில் ஏதோ தேடிக் கொண்டிருக்கும்போது சட்டென்று பாரதிதாசனின் இந்த கவிதை தென்பட்டது. ஏற்கனவே படித்த ஒன்றுதான் என்றாலும்  ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உடலெங்கும் ஒரு பரவசம்...  இந்தப் பரவசம் உங்களையும் தழுவட்டும்...

 

இந்தப் பாடலை வாசித்தும்  பள்ளி நாட்கள் தான் நினைவுக்கு வந்தது.  பெண்கள்  நீலவண்ண பாவாடை அணிந்து வெண்ணிற சட்டை அணிந்து வருவார்கள். இந்த உவமை சரியா வரும்தானே "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை" :)

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!

அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்!
அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்!
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந்தானோ!

 

உன்னை என திருவிழியாற் காணுகின்றேன்;
ஒளிபெறுகின்றேன்; இருளை ஒதுக்கு கின்றேன்;
இன்னலெலாம் தவிர்க்கின்றேன்; களிகொள் கின்றேன்;
எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்!
அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவுமுற்றி
ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!
இன்பமெனும் பால்நுரையே! குளிர் விளக்கே!
எனை இழந்தேன், உன்னெழிலில் கலந்த்தாலே!!! "

 

மின்னல் குலத்தில் விளைந்ததோ? - வான்
வில்லின் குலத்தில் பிறந்ததோ?
கன்னல் தமிழ்க் கவிவாணரின் உளக்
கற்பனையே உருப்பெற்றதோ!
பொன்னின் உருக்கில் பொலிந்ததோ? - ஒரு
பூங்கொடியோ? மலர்க்கூட்டமோ?

 

காதலை எந்த அளவு சுவை பட சொல்ல முடியுமோ அந்த அளவு சோகத்தையும் வடிக்கிறார்.

 

வேல்விழியால் என்னை விலாப்புறத்தில் கொத்தாதே!
பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!
காதல் நெருப்பால் காடலுன்மேல் தாவிடுவேன்
சாதி எனும் சங்கிலி என் தாளைப் பிணிக்குதடி!
பாளைச் சிரிப்பில் நான் இன்று பதறிவிட்டால்
நாளைக்கு வேந்தன் எனும் நச்சரவுக்கென் செய்வேன்?

 

 

சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்
தவிர்வது எனில் இருவருமே தவிர்தல் வேண்டும்!
ஓதுக இவ்விரண்டில் ஒன்று மன்னவன்வாய்
உயிர் எமக்கு வெல்லம் அல்ல!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆழமான கவிதை. நன்றி பகிந்து கொண்டமைக்கு. என்ன அந்தக் காலக் கடிதங்கள் மனதில் வந்து போகிறது.

இணைப்பிற்கு நன்றி ஆதித்த இளம்பிறையன் . என் பார்வையில் இலக்கிய காதல் பிரிவுகள் .

 

சினைப்பசும் பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
... ... ... ... ... ... ... ... ...
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே” (குறு-35)

 

தலைவன் எத்தனை அழகு பொருந்திய தலைவியைக் கொண்டிருந்தாலும், பரத்தையரோடு உறவு கொண்டு ஒழுகுவதையே நாட்டமாகக் கொண்டு விளங்குகிறான். இவ்வாறு பரத்தையும் தலைவனும் ஒன்றுபட்டதற்கு வில்லைப் பிடித்த விரல்களை உவமை கூறினார் புலவர். அவர் தான் ‘வில்ல விரலினார்' என்னும் சொல்லால் அழைக்கப்படும் நல்லகப்புலவர். சினைபிடித்த பச்சைப் பாம்பின் உடல் போன்று பருத்த கணுக்களைக் கொண்ட கரும்பின் மடல் அவிழ துகில் போல வான மங்கையின் மேலாடும் முகில் கூட்ட மழைத்துளிகள் சிந்துகின்ற போது வாடையெனும் குளிர்காற்றால் வாடுகின்றாள் தலைவி. தலைவனோ, போர் முனையில் வில், வேல், வாள் எனும் ஏர் பூட்டி வெற்றி விளைச்சல் நடத்தி விட்டு வாடை நாள் தொடங்கும் முன்னரே வந்து விடுவதாக ஓடைமலர் போன்றவளிடம் கூறிச் சென்றவன் இன்னும் வரவில்லை. அவன் பிரிந்து செல்லும் போது அவனுக்கு விடை கொடுத்த தலைவியின் கண்கள் இப்போது அழுகிறது. இதோ தன் விழிகளைப் பார்த்துத் தலைவி கோபம் கொள்கிறாள். ‘கண்களே( நாணம் கொள்க(' எனக் கடுமையாக மொழிகிறாள். கரும்பின் கணுக்களிலே காணப்படும் பசுஞ்சோலை, பச்சைப் பாம்பு கருக் கொண்டிருக்கும் காட்சிக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பது இங்கே சிறப்பாகும். கழார்க் கீரன் எயிற்றி என்னும் புலவர் பாடிய இந்த இனிய பாடல்... ... ...

 

“குக்கூ... ...என்றது கோழி; அதனெதிர்
துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம்
தோள்தோய் காதலர் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்ததென்றால் எனவே” (குறு-157)

பொருள்:

துட்கென்று --- அதிர்ச்சியால் திக்குற்று,

தேள் தோய்--- தோளைத் தழுவிக் கிடத்தல்

வைகறை ----- வடியற்காலை
 

கோழியின் மீது கோபம் :

தலைவன் அருகிலிருந்தால் காலம் கரைவது எப்படித் தெரியும்? தலைவி புலம்புகிறாள் தன் தோழியிடம் அத்தான் ... ... என் அத்தான் அதை எவ்வாறு சொல்வேனடி என்று கண்ணதாசன் தலைவியின் தவிப்பைத் திரைப்பாடலில் காட்டியது போல் இக்குறுந் தொகைத் தலைவியின் நெஞ்சக் குமுறலை அள்ளூர் நன்முல்லையார் என்னும் புலவர் கள்ளூறும் சுவைத் தமிழ்ப்பாடலில் காட்டுகிறார். தோழி என்... ...( வேதனையை என்னவென்று சொல்வேனடி பொழுது விடியாமலே நீளும் என்று எண்ணி நானும் தலைவனோடு விளையாடிக் கொண்டிருந்தேனடி நானும் என்னென்பேன், ஏதென்பேன், ‘கூரிய வாள் போல்' என் தோள்பிரிக்க, வைகறை வந்ததடி வைகறையின் வரவை குக்கூ... ... என்று கூவி சேவற்கோழி சொன்னதடி தோழி என்று வைகறையை வாளுக்கு உவமையாகக் கூறுமிடம் காதலன் தோளின் இனிமையும் பிரிக்கவரும் வைகறை என்னும் வாளின் கடுமையும் இப்பாடலில் நம் நெஞ்சைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
 

“பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுகதில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயிற்கே” (குறு-57)

தலைவியின் உள்ளம் தலைவனின் பிரிவால் அடைந்திருக்கும் ஆற்றொணாத் துயரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது பாடல். கவிஞன் உணர்ச்சியின் உந்துதலால் தலைவியின் மனத்துயரைப் பாடலால் சமமப்படுத்துகிறான். நீரில் இணைந்து நீந்திச் செல்லும் அன்றில் பறவையானது இடையிலே தாமரை மலர் தண்டுடன் இடைப்பட்டது அதனால் சற்றுப் பிரிய நேரிட்டது. இந்தப்பிரிவானது ஆண்டுகள் பல பிரிந்தது போன்ற துயரத்தை உணர்த்துகின்றது.

இணைப்பறவைகளாகிய அன்றிலின் தூய காதலன்பு தலைவியின் உள்ளத்திற்கு உவமை காட்டப்பட்டுள்ளது. குறுந்தொகையில் கையாளப்பட்டுள்ள மிகச் சிறந்த உவமைகளில் இஃதும் ஒன்றாகும்.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,

நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்

கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்

சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!

காதலின் பரவசம் ஒவ்வொரு வரிகளிலும்.....

காதலின் பரிசம் ஒவ்வொரு நரம்பிழையுலும்... ஊடுருவும் போது சாவிலும் துணை சேர துடிக்கும் மனதினை அனுபவித்து எழுதியிருக்கிறார்.

இந்தக் கவிதையை வாசிக்கும்போது நீலவான ஓடையில்.... அந்த பாட்டு நினைவுக்கு வருகிறது.

 

என்னையும் காதல் பரவசத்தில் ஆழ்த்தியமைக்கு நன்றிகள்.

556727_361052830658100_1957850382_n.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்!

அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்!

பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?

பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!

சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி

இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்

எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந்தானோ!

 

நன்றாக இருக்கிறது, ஆதி! நன்றிகள்!

 

நல்ல கடும் காச்சலில் தான் காய்ந்திருக்கிறார் கவிஞர்!

  • தொடங்கியவர்

மிகவும் ஆழமான கவிதை. நன்றி பகிந்து கொண்டமைக்கு. என்ன அந்தக் காலக் கடிதங்கள் மனதில் வந்து போகிறது.

 

மன்மத மாதம்(மார்கழி)நெருங்கிறது அல்லவா அதுதான்!! 

 

என்னையும் காதல் பரவசத்தில் ஆழ்த்தியமைக்கு நன்றிகள்.


எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே 

 

நல்ல கடும் காச்சலில் தான் காய்ந்திருக்கிறார் கவிஞர்!


காதலின்பம் காணாமல் கவி எப்படி எழுதுவது!! இதயம் கனக்கும்போது வருவதுதானே கவிதை. 
அவரது இதயமும் கனத்துப் போய்தான் இருந்திருக்கிறது.



நன்றி  கோமகன். சங்க இலக்கியங்கள் உவமைகளின் ஊற்று...  அதைப் பருக பருக வந்து கொண்டே இருக்கும் 

நன்றி யாழ் அன்பு .

Edited by ஆதித்ய இளம்பிறையன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.