Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு புகைப்படம் சொல்லும் ஆயிரம் வார்த்தைகள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thissssaaaa.jpg

 

இலங்கையில் பிரதமநீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான பிரச்சினையில் இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முரண்பட்டு நிற்கின்றன. எனினும் நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்கள் மேடைக்கு அப்பால் அந்த இரண்டு தரப்புக்களும் ஒன்றாக இணைந்தே செயற்படுவதாக சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.  

கடந்த வாரத்தில் பிரதம நீதியரசர் விடயத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்புக்கள் ஒன்றையொன்று குற்றம் சுமத்திக்கொண்டிருந்தன. இது, தமது ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதேநேரம் அநீதிக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக எதிர்க்கட்சியும் தெரிவித்திருந்தது. எனினும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து எதிர்க்கட்சிகளின் நால்வர் விலகிய கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் மக்கள் கட்சி ரீதியாக பிரிந்து தமது விமர்சனங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

இதேவேளை, அன்று இரவு சபாநாயகர் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் நாடாளுமன்றக்குழுவில் இருந்து விலகிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜோன் அமரதுங்க தலைமையிலான குழுவினர் பங்கேற்று ஜனாதிபதியுடன் சந்தோசமாக உள்ள புகைப்படம் வெளியானது.

இதனைப் பார்க்கும் போது அரசியல் என்பது மக்களுக்காக தயாரித்து வழங்கப்படும் ஒரு மேடை நாடகம் என்பது புரிகின்றது , இலங்கை மக்களை ஆளும் கட்சியும் , எதிர் கட்சியும், ஏன் தமிழ் கட்சிகளும் சேர்ந்தே ஏமாற்றுகின்றன...

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=5918:2012-12-12-02-55-11&catid=1:latest-news&Itemid=18

இதனைப் பார்க்கும் போது அரசியல் என்பது மக்களுக்காக தயாரித்து வழங்கப்படும் ஒரு மேடை நாடகம் என்பது புரிகின்றது , இலங்கை மக்களை ஆளும் கட்சியும் , எதிர் கட்சியும், ஏன் தமிழ் கட்சிகளும் சேர்ந்தே ஏமாற்றுகின்றன..

 

 

இது மகிந்தா புகை படங்களுக்கு செய்யும் நாடகம். இதை வைத்துதான் ஜோன் அமரதுங்காவை மதிப்பிட வேண்டும் என்று இல்லை. ரணிலின் கீழ் இருக்கும் UNPயை வைத்து கூட்டமைப்பின் சிறிதரன் போன்றோர்கள் எல்லோரை மதிப்பு போடவேண்டியது அக்கினி குஞ்சின் அரசியல் நாடகம்.

இங்கே இரணில் மிகவும் பலமான மகிந்த கூட்டத்தை நரித்தனமாக, தனக்கே உரிய பாணியில் ஏமாற்றி வருகிறார் என நான் கருதுகின்றேன்.

 

ஆதரவு போல காட்டி சரியான நேரத்தில் மகிந்தாவை மாட்டி விடப்போகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்புகைப்படத்தினைப் பார்க்கும் போது புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் விடுதலைப்புலிகள் ஆதரவாளராக இருப்பவரும், புலி எதிர்ப்பாளரும் ஒன்றாக இருந்து தண்ணி அடிப்பது ஞாபகத்துக்கு வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.