Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதுவரை 12 முறை அழிந்த உலகம்... டிசம்பர் 21ல் அழியுமா?

Featured Replies

சீனாவில் 60க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்,உலகம் அழியும் என செய்தி வெளியிட்டதற்காக. ஆசிய நாடுகளை விட ஜரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தான் டிச.21 குறித்த பீதி அதிகம். அந்த நாடுகளில் உலக அழிவுக்கா தயாராக பலர் இருப்பதாக ஆங்கில இணைய தளங்களில் செய்திகள் காணக்கிடைக்கின்றன.இந்த உலகம் அழியும் என்ற நம்பிக்கை மாயன் காண்டர் 21.12.2012ல் முடிகிறது என்பதால் (அவர்களுக்கு தெரிந்து அவ்வளதான் அதனால் முடித்து கொண்டார்கள்) எற்பட்ட பரபரப்பு... இந்த ஆண்டு துவக்கத்திலேயே இருந்தது. இன்றையவானத்தில் இடப்பட்ட உலகத்தின் கடைசிநாள் பதிவு சமீப நாட்களாக அதிகமாக பார்க்கப்படுகிறது. அதனால் உலக அழிவு குறித்து எனக்கு தெரிந்த புதிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.சரிப்பா உலகம் அழியுமா? இல்லையா என்றால் அழியும்.... என்கிறார்கள் விஞ்ஞானிகள். எப்படி அழியும் என அவர்கள் கணித்துள்ள சில தகவல்....
 

1. பூமியின் மீது வால்நட்சத்திரம் மோதினால் உலகம் அழியும், ஜூராசிக்பார்க் படத்தில் பார்த்தீர்களே டைனோசர்கள் அவை அழிந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். சூரியமண்டலத்திற்கு வெளியே ''ஊர்ட்மேகம்'' என்ற பகுதியல் நூற்றுக்கணக்கான வால்நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் சுற்றுபாதையில் சூரியனை சந்திக்க வரும் போது பூமியில் மோதினால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டு மனித இனம் அழியலாம். வால்நட்சத்திரங்களில் மிகப்புகழ்பெற்து ஹாலிவால்நட்சத்திரம்,அது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை பார்க்கவரும் கடைசியாக 1986 வந்தது, இனி 2062 ல் வரும்.மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னால் ''ஜூமேக்கர் லெவி'' என்ற வால்நட்சத்திரம்  9 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகத்தில் மோதியது.

 

dinosaur_1.jpg

 

 

2. செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையை லட்சக்கணக்கான பாறைகள் சுற்றிவருகின்றன, அவற்றில் 10 அல்லது 20 கிலோமீட்டர் சுற்றளவுள்ள பாறைகளும் அடக்கம். இவை பாதை தவறி பூமியின் மீது மோதினால் உலகம் அழியும். இரவு நேரங்களில் நாம் எல்லோரும் பார்த்திருப்போம்... எரிகற்கள் அவைதான் இவை. பெரும்பாலும் எரிந்து போனாலும், பெரிய பாறைகள் பூமியில் மோதவாய்ப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னால் சில நொடி தாமதத்தால் ரஷ்யாவின் லெனின்கிராண்ட் நகரம் தப்பியது.  ஆனால் சைபீர்ய பகுதியில் ஆயிரக்கணக்கான ரெயின்டீர் மான்கள் இறந்து போயின.

3.நம் பூமி சூரியனை சுற்றுவதைப்போல சூரியன் பால்வெளிமண்டலம்(கோடிக்கணக்கான நட்சத்திரம் அடங்கி பகுதி,(இதுபோன்று வானத்தில் நிறைய உண்டு) என்கிற நட்சத்திர மண்டலத்தை சுற்றிவருகிறது. ( இரவு வானத்தில் வெண்நிற மேகம் போல காட்சியளிக்கும்)   அப்படி சுற்றிவரும் போது கதிர்வீச்சு அதிகம் உள்ள பகுதிக்குள் சூரியன் பயணம் செய்யும் பொழுது பூமியில் உள்ள உயிரினங்கள் அடியோடு அழிந்து போகும் வாய்ப்பு உண்டு. கடந்த 100 மில்லியன் ஆண்டுகளில் 12 முறை இது போன்ற அழிவு நடந்திருக்கலாம்.அதன் பிறகு 13மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் இனி எப்போது என்பேதை இயற்கைதான் தீரமானிக்கும்...

 

4.அடுத்தாக சூரியனின் வயது தற்போது நடுத்தர கட்டத்தை எட்டிவிட்டது. வயதை கண்க்கீட, வெள்ளை நிறமாக இருந்தால் இளம் வயது. மஞ்சள் நடுத்தரம், சிகப்பு முதுமை, என சூரியனின் வயதை கணக்கிடலாம். நடுத்தரவயதை அடைந்துவிட்ட சூரியன் சிவப்பாகி முதுமையடைந்து வெடித்து சிதறினால் பூமியில் உயிர்கள் அழியும். ஆனால் அதற்கு இன்னும் 400 மில்லியன் ஆண்டுகள் இருக்கின்றன. இந்த விசயத்தில் கவலை தேவையில்லை.

 

5. மற்றொன்று நட்சத்திர மோதல்கள்.... நமது சூரியனுக்கு பக்கத்தில் சீரிஸ் நட்சத்திரம்(சூரியனிலிருந்து 2 ஒளியாண்டு- தூரத்தில்உள்ளது, ஒளியாண்டு என்பது ஒரு நொடியில் ஒளி செல்லும் வேகம்1,80.000 கிமீ இவ்வளவு  வேகத்தில் போனாலும் சீரிஸ் நட்சத்திரத்துக்கு போக 2வருசம் ஆகும்) ,ஆல்பாலெண்டார் (நான்கு ஒளியாண்டு)சூரியன்,சீரஸ்,ஆல்பா இவை முன்றும் அவற்றின் பயணப்பதையில் மோதிகொண்டால் உலகம் அழியும்.

 

article-2242176-16473ba5000005dc-467_634


 மேற்சென்ன காரணங்கள் எல்லாம் நம் சக்திக்கு கட்டுப்படாத,இயற்கையின் வீதப்படி நடப்பவை. தற்போது நடக்கப் போவதில்லை... ஆனால் பூமியில் வாழ்கின்ற மனிதர்களாகிய நமே நம்மைநாமே அழித்து கொள்ளம் வாய்ப்புகள் தான் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்..

 

நம்மை நாமே அழித்து கெள்ளும் வழிமுறைகள் :

1. அமெரிக்காவிடம் உலகத்தை பலமுறை அழிக்கவல்ல அணு ஆயுதங்கள் உள்ளன.மேலும இந்தியா,சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ளன.இவற்றை வைத்து எத்தனை முறைவேண்டுமானலும் உலத்தை அழிக்கலாம்.

 

300px-Patriot_missile_launch_b.jpg

 

 

2. மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் கெட்டுவருகிறது. அதனால் சூடேரும் பூமி, துருவ பகுதியில் பனிகட்டிகள் உருக துவங்கியுள்ளன. கடல் மட்டும் உயர்ந்து உலகம் அழியாலாம்.
         
3. பூமி சூடேருவதால் ஏற்கனவே நிறைய பறவைகள், உயிரினங்கள் அழிந்துவிட்டன. சிட்டுக்குருவி,பருந்து போல மனிதர்களுக்கும் அந்த நிலை வரலாம்.

 

4.சுகாதார குறைபாடுகளால், முறையற்ற வாழ்க்கை முறைகளால் எயிட்ஸ்,டெங்கு,பன்றிகாய்ச்சல் போன்ற உயிர்கொல்லி நோய்கள் வந்து மனிதர்கள் கொத்து கொத்தாக அழிந்து போகலாம்.
       
5. இனம்,மதம்,மொழி என மனிதர்கள் பிரிந்து மனிதர்கள் போர்கள் நடத்துகிறார்களே,, இது வரை அமெரிக்கா ஜப்பானில் ஹீரோசிமா,நாகசாகி,அரபு நாடுகளில் கொண்டு குவித்த மனிதர்கள் பலகோடிகளை தாண்டும்,பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்கள், இப்படி தொடரும் போர் பெரிய அளிவில் வெடித்து 3ம் உலகப்போர் வருமானால் உலகத்தை மனிதர்களே அழித்துக்கொள்வார்கள்.

இவை மனிதர்களால் சரிசெய்யக்குடியவை, இனம்,மதம்,மொழி பேதம் மறந்து, பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாத்து நாம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக இந்த உலகத்தை ஒப்படைத்தோமானல் இன்னும் 400 கோடி ஆண்டுகள் பூமி இருக்கும். அதற்குள் மனிதன் வேறுகிரகங்களுக்கு குடியேறும் வாயப்பு அதிகம். அதனால் டிசம்பர் 21 குறித்த பயம் தேவையில்லை. 2013க்கான காலண்டர் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டது. உங்கள் வீட்டுக்கும் வந்திருக்கும் என் நம்புகிறேன். அடுத்த ஆண்டுக்கு உங்கள் வளர்ச்சிகாக புதிதாக திட்டமிடுங்கள். அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-செல்வன்
 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெளிவான கட்டுரை நல்ல விளக்கம். ' உலகம் அழியுமா?' என்ற கேள்விக்கே இடமில்லை. ' ஆக்கப்பட்டவை அனைத்திற்கும் அழியும் காலமும் உண்டு. படைக்கப்பட்டவை(நம்புகின்றவர்களுக்கு மட்டும்) யாவும் ஒரு கட்டத்தில் அழியும் என்பதும் உண்மை.

 

ஆனால், வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியும் என்பது......நிச்சயிக்கப்பட்ட உண்மை அல்ல. '

எழுதி வைத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக நாளை உலகம் அழியாது.

  • கருத்துக்கள உறவுகள்
எழுதி வைத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக நாளை உலகம் அழியாது.

 

இன்றைக்குத் தேதி 19 தானே..!

 

உலகம் எப்பவுமே அழியாது. மனிதன் மட்டும் என்றோ ஒரு நாள் அழிவான். அதற்கிடையில் நாங்க செத்துப்போயிடுவம்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'சாவைப்பற்றிய பயம் கொண்டவர் தான் தினம் தினம் சாவார்:).

 

நாமெல்லாம் எப்போதும் 'இருப்போம்":)))

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாவை பற்றி கவலை பட்டது இல்லை ஒரு நாளும்...அப்படி சாகனும் என்ரா அது நான் பிறந்த மண்ணில் தான் சாகனும் :P

ஈழத் தமிழன் சாவுக்கு பயந்தவன் இல்லை... என்ன கொஞ்சம் ஏளியா வெளி நாடு வந்த கொஞ்ச ஈழத் தமிழருக்கு சாவுக்கு பயம் போல...அது தான் 21ம் திகதியை பற்றி அதிகம் கவலை படினம்

எத்தனை குண்டு சத்தங்கள்...எத்தனை விமான தாக்குதலை கண்ணால் கண்ட நமக்கு சாவு ஒரு தூசு

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல் 13 வது தடவையாகவும் உலகம் அழியப்போகிறது.

  • தொடங்கியவர்
தெளிவான கட்டுரை நல்ல விளக்கம். ' உலகம் அழியுமா?' என்ற கேள்விக்கே இடமில்லை. ' ஆக்கப்பட்டவை அனைத்திற்கும் அழியும் காலமும் உண்டு. படைக்கப்பட்டவை(நம்புகின்றவர்களுக்கு மட்டும்) யாவும் ஒரு கட்டத்தில் அழியும் என்பதும் உண்மை.

 

ஆனால், வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியும் என்பது......நிச்சயிக்கப்பட்ட உண்மை அல்ல. '

 

 

எந்த ஒரு தொடக்கத்திற்கும் முடிவு என்ற உண்டு . அது இயற்கையை முன்தள்ளி மனிதனின் கையில் போய்விட்டது கண்கூடு . ஆனால் , அப்பாவிகளை அச்சுறுத்தி அவர்களை மரணபயத்தில் வைத்திருக்கும் மீடியாக்கள் மத்தியில் ஓர் உண்மைசொல்லியாக இந்தப்பதிவரின் பதிவை இன்றுகாலையில் பார்த்தேன் . இந்தப்பதிவை கருத்துக்கள உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்ட  இணைத்தேன் . வரவிற்கும் கருத்துகளுக்கும் நன்றி தமிழ்த்தங்கை  :)  :)  .

இன்றைக்குத் தேதி 19 தானே..!

 

உலகம் எப்பவுமே அழியாது. மனிதன் மட்டும் என்றோ ஒரு நாள் அழிவான். அதற்கிடையில் நாங்க செத்துப்போயிடுவம்..! :lol:

 

 

திகதி நாமே சமைத்த சதி. அழியப்போவது வெறும் சில இரசாயனத்  துணிக்கைகள். ஆன்மா அழியாது மகனே.

தப்பிலியானந்தா எல்லோரையும் காப்பார். :D

உலகத்தின் அழிவு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் ஏற்படும் என கூறிவருகின்ற போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது என புவியியலாளர் லலித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்த்தன தெரிவிக்கையில்,

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அதாவது டிசம்பர் மாத இறுதி சனிக்கிழமை அன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும்.

இதன் தாக்கம் இந்தியாவிற்கும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி ஆகியவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும்.

2004ம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் 2013ம் ஆண்டில் விண்கற்கள் விழும் என்ற எச்சரிக்கை என்பவை தொடர்பில் 2001, 2002 ஆகிய ஆண்டுகளின் ஊடகங்களில் தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

2012ம் ஆண்டு உலகம் அழியும் என்பது முற்றிலும் போலியான பிரச்சாரம் ஆகும், ஆனால் எதிர்வரும் 29ம் திகதி பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படவுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவுக்கும் ஏற்படும். ஆனால் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படாது.

பூமியின் மீது 2013ம் ஆண்டு விண்கற்கள் விழும் என நான் 2001, 2002 காலப்பகுதியில் எதிர்வு கூறினேன்.

அதன் பின்னர் இது குறித்து ஆராய்ந்து நாசா உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் அக்கற்களை சிறுதுண்டுகளாக உடைத்தெறியும் நடவடிக்கையில் இறங்கினர்.

அதேபோன்று, 2004ம் ஆண்டு கடல்சார் பாரிய அழிவுகள் இலங்கையில் இடம்பெறும் என்று 2002ம் ஆண்டிலேயே கூறினேன்.

அதற்கமைய 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி சுனாமி அலைகள் இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கின.

இவ்வாறு எதிர்வு கூறிய அனைத்தும் எனது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வகையிலேயே இடம்பெற்று முட்ந்துவிட்டன. எனவே நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

2012ம் ஆண்டில் உலகம் அழியாது. ஆனால் 29ம் திகதி பூமியதிர்வு இலங்கையில் ஏற்படும்.

2019ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் அரேபிய நாடுகள் பாரிய இயற்கை அழிவுகளைச் சந்திக்கும் எனவும் திடமாக கூறியுள்ளார் லலித் விஜயவர்த்தன.

  • தொடங்கியவர்
எழுதி வைத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக நாளை உலகம் அழியாது.

 

அதைத்தான் நாங்களும் சொல்லிறம் . இந்த இடத்திலை என்னம் ஒண்டும் ஞாபகம் வருகிது . நாங்கள் 9ம் வகுப்பு படிக்கேக்கை " ஸ்கைலாப் " எண்ட செய்மதி இந்தியா இலங்கைக்கு மேலை விழுந்து , இரண்டு நாடும் இல்லாமல் போகப் போகுது எண்டு ஒருத்தன் ரைம் பாஸ் பண்ண . சனம் சொத்துபத்துக்களை வித்துப் போட்டு நாளை எண்ணிக்க கொண்டு இருந்த கதையளையும் கண்டம் . பேந்து ஸ்கைலாப் கடலுக்கை விழுந்தது வேறை கதை :lol: :lol: .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
இன்றைக்குத் தேதி 19 தானே..!

 

உலகம் எப்பவுமே அழியாது. மனிதன் மட்டும் என்றோ ஒரு நாள் அழிவான். அதற்கிடையில் நாங்க செத்துப்போயிடுவம்..! :lol:

 

 

உண்மை நெடுக்கர் . முதலில் இந்த மீடியாக்களை கொளுத்தி எறியவேணும் :) :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

21ம் திகதி ஆச்சே!!:)

 

  • தொடங்கியவர்

நான் சாவை பற்றி கவலை பட்டது இல்லை ஒரு நாளும்...அப்படி சாகனும் என்ரா அது நான் பிறந்த மண்ணில் தான் சாகனும் :P

ஈழத் தமிழன் சாவுக்கு பயந்தவன் இல்லை... என்ன கொஞ்சம் ஏளியா வெளி நாடு வந்த கொஞ்ச ஈழத் தமிழருக்கு சாவுக்கு பயம் போல...அது தான் 21ம் திகதியை பற்றி அதிகம் கவலை படினம்

எத்தனை குண்டு சத்தங்கள்...எத்தனை விமான தாக்குதலை கண்ணால் கண்ட நமக்கு சாவு ஒரு தூசு

 

எப்பொழுதும் நேரமறையான எண்ணங்களே ஒருத்தனை வாழவைக்கும் .  எங்கோ ஒருவன் ரைம் பாஸ் பண்ணிய விடையத்தை தூசிதட்டி தங்கள் றாங்கை கூட்டுவதற்காக ஊதிப்பெருப்பித்த மீடியாக்களும் , அதற்கு துணைபோய் மக்கள் மத்தியில் குழப்பம் விளைவித்தவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றேன் . இவர்களுக்கெல்லாம் யார் பொதுநலவழக்கு போடுவது பையா ??

  • தொடங்கியவர்
தெளிவான கட்டுரை நல்ல விளக்கம். ' உலகம் அழியுமா?' என்ற கேள்விக்கே இடமில்லை. ' ஆக்கப்பட்டவை அனைத்திற்கும் அழியும் காலமும் உண்டு. படைக்கப்பட்டவை(நம்புகின்றவர்களுக்கு மட்டும்) யாவும் ஒரு கட்டத்தில் அழியும் என்பதும் உண்மை.

 

ஆனால், வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியும் என்பது......நிச்சயிக்கப்பட்ட உண்மை அல்ல. '

 

 

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தமிழ்த்தங்கை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.