Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - சுமந்திரன்

Featured Replies

நாட்டிலே பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமாக தீர்வொன்று வராமலிருக்கிற சூழலிலே வன்முறையற்ற, அகிம்சை வழியிலே போராட்டங்களை மேற்கொள்ளவும், அரசோடு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் நாம் இப்போது முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான அனுசரணையை சர்வதேச சமூகத்திடமிருந்து நாம் பெற்றுக்கொண்டும் இருக்கிறோம். இலங்கை அரசு தொடர்ந்து மறுத்துவரும் உரிமைகளைப் பெறுவதற்கு எமக்கு வேறு வழியில்லை. இனி வீதியில் இறங்கிப் போராடவேண்டும். எங்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறையற்ற சாத்வீக வழியிலான போராட்டங்களை புதிய வருடத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

 

அண்மையில், நோர்வே தமிழர் கற்கை மையம் ஒழுங்குசெய்திருந்த கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக நோர்வே வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அ.சுமந்திரன் பொங்குதமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 


இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:


நோர்வேயில் இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற கருத்தரங்கில் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புகள் சம்பந்தமாகவும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் அங்கு வாழ்கின்ற மக்களுக்கும் உடந்தையாக என்ன விதமான செயற்பாடுகளில் ஈடுபடலாம் என்பதைக் குறித்து ஆக்கபூர்வமான பல கருத்துக்களை நாங்கள் பரிமாறக்கூடியதாக இருந்தது.

 

கடந்த 7ம் திகதி நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்திய சம்பந்தன் அவர்கள் தனது பேச்சிலே விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று வர்ணிக்கவில்லை. ஒருபோதும் அப்படியான வர்ணிப்பை அவர் செய்யவில்லை. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பதையே அவர் விபரித்துக் கூறியிருந்தார்.


நாங்கள் பாராளுமன்றத்திலே உரையாற்றுகின்ற வேளைகளில் தொடர்ச்சியாக எங்களைப் புலிகள் என்று கூறி கூக்குரலிட்டுக் கொண்டிருப்பார்கள். இந்தப் பின்னணியிலே விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று ஏன் பலராலும் முத்திரை குத்தப்பட்டார்கள், பலநாடுகளில் பயங்கரவாதிகள் நிரலிலே ஏன் அவர்கள் சேர்க்கப்பட்டார்கள் என்பதை சம்பந்தன் விபரித்துக் கூறியிருந்தாரே தவிர, தன்னுடைய கருத்திலே புலிகளைப் பயங்கரவாதிகள் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை.

 

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக முழு அர்ப்பணிப்போடு செயற்பட்டவர்கள் என்பதிலே எந்தவிதமான ஐயப்பாடும் கிடையாது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் வேறுபட்டதும் இல்லை. ஆனால், பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்கிய சில சம்பவங்கள், வணக்க தலங்களை தாக்கிய சம்பவங்கள் போன்றன அவர்களை பயங்கரவாதிகள் என்ற துரதிஷ்டமான வர்ணிப்புக்கு உள்ளாக்கியது என்பது உண்மையான விடயம். அதை சொல்லுகிறபோது எவருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பதல்ல எமது நோக்கம். எங்களையே நாங்கள் திருத்திக் கொள்ளவும் இனி வருகிற காலங்களிலே நாங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்கிற ஒரு சந்தர்ப்பமாகக்கூட அது இருக்கும்.

 

நாங்கள் கடந்த மூன்றரை வருடங்களாக அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் எங்கும் தவறிழைக்கவில்லை, மாறாக சிறிலங்கா அரசாங்கம்தான் இதிலே தவறிழைத்திருக்கிறது எனவும் ஒரு தீர்வைக் காண்பதில் அவர்கள் பின்நிற்கிறார்கள் என்ற தீர்மானத்திற்கும் சகலரும் வந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் நாங்கள் உண்மையோடு இதிலே ஈடுபட்டமைதான்.


விடுதலைப் புலிகளின் காலத்திலே ஒரு குறித்த நோக்கோடு அவர்கள் செயற்பட்டு, மக்களுடைய விடுதலைக்காக அவர்கள் இயங்கினார்கள் என்பது உண்மை. ஆனால் அது கைகூடவில்லை. ஆயுதப் போராட்டம் தோல்வியிலே முடிவடைந்த பிறகு, "ஆயுதப் போராட்டத்திலே நாங்கள் வெற்றிபெற்று விட்டோம் - எனவே எந்தவிதமான அரசியல் தீர்வையும் கொடுக்க வேண்டியதில்லை" என இலங்கை அரசாங்கம் நினைக்கிறது. அரசியல் பிரச்சனை என்பது ஆயுதப்போராட்டம் ஆரம்பமாவதற்கு 30 வருடங்களுக்கு முன்னரே உருவான ஒன்று. அது எங்களுடைய மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கை. அது அவர்களின் உரிமை. அதனை எப்படியாவது பெற்றே தீரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கிறோம்.

 

இனப்பிரச்சனைத் தீர்வுக்கு இனி ஆயுதப் போராட்டமொன்றின் ஊடாக நாம் முனையக்கூடாது என்பது எனது தனிப்பட்ட எண்ணம். எமது கோரிக்கை நீதியானது, நியாயமானது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலே எங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒன்று. எனவே அதனைப் பெறுவதற்கு இராஜதந்திர வழிகளில் நாம் செயற்படவேண்டிய அவசியம் இருக்கிறது.


இலங்கை அரசோடு நேரடியாகப் பேசுகின்ற முயற்சியிலே அது பலன் தராவிட்டாலும், நாம் சரியான முறையிலே செயற்பட்டு அதற்கான பிரதிபலன் இல்லாமற் போகின்ற வேளையிலே, சர்வதேச சமூகத்தின் அனுசரணையோடு அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு அது உதவியாக இருக்கும்.

 

பேச்சுவார்த்தை தொடர்ச்சியாகப் பயன்தராத நிலையிலே, சர்வதேச சமூகத்துடன் கடந்த ஒரு வருடமாக நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றிலும் அவர்கள் கேட்பது 'இனி நாம் என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்' என்று. அதற்கான சில உத்திகளை சில சிந்தனைகளை நாம் அவர்களோடு பகிர்ந்திருக்கிறோம். அவர்கள் இவ்வாறு எம்மிடம் கேட்பதற்குக் காரணமே, நாம் இந்த விடயத்தில் உண்மையோடு ஈடுபட்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதுதான். ஆகவே அதன் வழியிலே நாம் எதிர்காலத்திலும் செயற்படமுடியும் என்பது எனது நம்பிக்கை.


நாட்டிலே பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமாக தீர்வொன்று வராமலிருக்கிற சூழலிலே வன்முறை அற்ற அகிம்சை வழியிலே போராட்டங்களை மேற்கொள்ளவும், அரசோடு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் நாம் இப்போது முன்னெடுப்புகளை செய்துகொண்டு வருகிறோம். அதற்கான அனுசரணையை சர்வதேச சமூகத்திடமிருந்து நாம் பெற்றுக்கொண்டும் இருக்கிறோம். இலங்கை அரசு மறுத்துவரும் உரிமைகளை நாம் பெறுவதற்கு வேறு வழியில்லை. இனி வீதியில் இறங்கிப் போராடவேண்டும். எங்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறையற்ற சாத்வீக வழியிலான போராட்டத்தை புதிய வருடத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தமான விடயத்திலே சிங்கள மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்களில் சில போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். இது நல்ல அறிகுறி. இதனால்தான் நாம் இப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டிருந்தது. தற்போது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் சூழ்நிலையை சரியாக அவதானித்து எங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் வழங்குவதற்கு சிங்கள மக்களும் வெளியுலகத்திலே வாழ்கின்ற மக்களும் தயாராக இருக்கிறார்கள் என்ற நிலைக்கு வருகிறபோது நாம் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்போம்.


கூட்டமைப்பு பல கட்சிகளின் ஒரு கூட்டமைப்பாகவே இன்றைக்கும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பரந்த குறிக்கோளை அடிப்டையாக வைத்து ஒன்றாக செயற்படுகிறோமே தவிர ஒவ்வொன்றும் வித்தியாசமான அரசியல் கட்சிகளாகவே இருந்துகொண்டிருக்கின்றன. அதனால்தான் கூட்டமைப்பிலிருந்து வித்தியாசமான குரல்கள் வெளிவருவதை மக்கள் காணக்கூடியதாக இருக்கிறது. இது ஒரு ஜனநாயக அமைப்பிலே இருக்கவேண்டிய ஒன்று. ஒரே கட்சியாக இருந்தாலும்கூட உட்கட்சி ஜனநாயகம் என்ற ரீதியிலே பலருக்கும் பேச்சுச் சுதந்திரமும் பலருக்கும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமையும் இருக்கத்தான் செய்யும். ஆனபடியால் ஒரு கூட்டமைப்பாக வெவ்வேறு அரசியல் கட்சிகள் சேர்ந்து இயங்குகிறபோது இது தவிர்க்க முடியாத ஒரு காரணியாக இருக்கிறது.

 

சென்ற வருடம் ஒக்ரோபர் நவம்பர் மாதத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பிலே அமெரிக்கா சென்று ஒரு வார காலம் தங்கியிருந்து நடத்திய பேச்சின் பிரதிபலனாகத்தான் இந்தவருடம் மார்ச் மாதம் ஐ.நா மனிதவுரிமை ஆணைக்குழு கூட்டத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்தது. 2013 ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கிற ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலே ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எவ்வாறு இலங்கை அரசினால் அமுல் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஐநா மனிதவுரிமைகள் ஆணையாளர் ஒரு அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார்.

 


ஆணையாளரின் இவ் அறிக்கையின் அடிப்படையிலே, தொடர்ச்சியாக ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அமெரிக்கா சரியான ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். ஏனென்றால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா ஒரு துளியேனும் நிறைவேற்றவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.


இவ்விடயத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை ஒரு தீர்மானகரமான முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஏதுவாக சில பேச்சுக்களை நாம் மேற்கொள்ள இருக்கிறோம். இது குறித்து அவர்களோடு பேசியிருக்கிறோம்.

 


2013 ம் ஆண்டு தமிழ் மக்களுடைய அரசியல் வாழ்விலே ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது என்பது என்னுடைய சிந்தனை. அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் இலங்கை அரசு போரின் இறுதிக் கட்டங்களில் நிகழ்த்திய கொடுரங்களுக்கு பதில்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து விடுபட்டுக்கொண்டிருக்கிற சூழ்நிலையிலும் சர்வதேச சமூகத்தையும் ஒன்றிணைத்து, சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் பல போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஒரு தீர்மானமான செயற்பாட்டில் இறங்குதவற்கு இருக்கிறோம்.


அப்படியான ஒரு முன்னெடுப்பு மேற்கொள்ளும்போது புது வருடத்திலே பல விதமான மாற்றங்கள், குறிப்பாக எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.


இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொங்குதமிழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=fc1b467b-3702-4dc6-b109-f89aad3ea0d2

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக முழு அர்ப்பணிப்போடு செயற்பட்டவர்கள் என்பதிலே எந்தவிதமான ஐயப்பாடும் கிடையாது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் வேறுபட்டதும் இல்லை. ஆனால், பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்கிய சில சம்பவங்கள், வணக்க தலங்களை தாக்கிய சம்பவங்கள் போன்றன அவர்களை பயங்கரவாதிகள் என்ற துரதிஷ்டமான வர்ணிப்புக்கு உள்ளாக்கியது என்பது உண்மையான விடயம். அதை சொல்லுகிறபோது எவருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பதல்ல எமது நோக்கம். எங்களையே நாங்கள் திருத்திக் கொள்ளவும் இனி வருகிற காலங்களிலே நாங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்கிற ஒரு சந்தர்ப்பமாகக்கூட அது இருக்கும்.

 

அவருக்கு இவர் விளக்க உரை கொடுக்கிறார். விடுதலைப்புலிகள் எந்தவொரு தாக்குதல் இலக்கையும் தன்னிச்சையாக தீர்மானிக்கவில்லை. தமிழ் மக்களின் கோவில்கள்.. தேவாலயங்கள்.. பள்ளிக்கூடங்கள்.. சந்தைகள்.. வதிவிடங்கள்..ஊடக நிலையங்கள்.. மக்கள் பயணித்த ஊர்திகள்.. அகதிகளாக அடைக்கலம் தேடிய இடங்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்லங்கள்.. இவை சிங்களப் படைகளால் திட்டமிட்டு தாக்கப்பட்டதன் பின்னணியில் தான் புலிகளால் பழிவாங்கல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

இவை குறித்து புலிகள் பலமுறை விளக்கிவிட்ட பின்னரும்.. சிங்கள அரசின் தாக்குதல்களை பயங்கரவாதமாக உச்சரிக்கத் தவறிய சர்வதேசமும் சம்பந்தனும்.. அதற்குப் பதிலடியாக அமைந்த தாக்குதல்களை பயங்கரவாதம் என்று எப்படி வரையறுக்க முடிகிறது என்பதை சுமந்திரன் விளக்க வேண்டும்.

 

அமெரிக்க சார்பு மேற்குலக சர்வதேசம் எடுக்கும் எல்லா நிலைப்பாடுகளும் நியாயமானவை என்பதும் தவறு. அவர்களும் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர். விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடயத்திலும் அவர்கள் மோசமான தவறுகளைச் செய்துள்ளனர். அவற்றைச் சுட்டிக்காட்டாமல்.. புலிகளே தவறு செய்தனர் என்பது போலச் சொல்லி சிங்களம் செய்த பயங்கரவாதத்தையும்.. பயங்கரவாதத்தை தூண்டும் செயல்களையும் சுமந்திரனும்.. சம்பந்தனும் ஏன் மறைக்கிறார்கள்..???!

 

சர்வதேசத்தை திருப்திப்படுத்த..சிங்களம் எம்மீது வலிந்து திணித்த அழிவுகளையும் எங்கள் பக்கமுள்ள நியாயங்களையும் குழிதோண்டிப் புதைப்பது.. மோசமான செயல்..! சர்வதேசத்திற்கு எமது நியாயத்தை எடுத்துச் சொல்வதை விடுத்து சர்வதேசம் திருப்திப்படும் அளவிற்கு எம்மில் நாமே எல்லாப் பழிகளையும் போட்டுக் கொள்வது அரச பயங்கரவாதங்களும் அவற்றை ஊக்குவித்தவர்களும் மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்யவும்.. தப்பிப் பிழைக்கவுமே வழி செய்யும்.

 

காத்தான்குடி படுகொலை கல்முனை தமிழ் கிராமங்கள் மீதான முஸ்லீம் காடையர்களின் மிக மோசமான படுகொலையின் எதிரொலி. இது உலகிற்குத் தெரியும். தெரியாத மாதிரி நடிக்கிறது. அதேபோல் தலதாமாளிகை தாக்குதல் பற்றி தெரியும். மாவீரர் துயிலும் இல்லங்கள் இடித்தழிக்கப்பட்டதற்கான பதிலடி. இவை சிங்கள அரசுக்கும் மற்றவர்களுக்கும் நல்லாத் தெரியும்.

 

அதுமட்டுமன்றி நாகர்கோவில் தமிழ் பள்ளிக்கூடப் படுகொலைக்குப் பின்னர் சந்திரிக்கா அம்மையார் கொழும்பிலும் பிற தென்பகுதியில் சில இடங்களிலும் பள்ளிகளை மூடுவதும் திறப்பதுமாக இருந்தார். காரணம் பள்ளிக்கூடங்களை தாங்கள் தாக்கியது போல புலிகளும் பழிவாங்கத் தாக்குவார்கள் என்று. ஆனால் புலிகள் அப்படிச் செய்யவில்லை. மாறாக செஞ்சோலை தாக்கி அழிக்கப்பட்டு 60 க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிச் சிறார்கள் மீண்டும் கொல்லப்பட்டார்கள்.

 

எனவே இன அழிப்புக்கு எதிரான பழிவாங்கல் தாக்குதல்களின் பின்னால் உள்ள யதார்த்ததை உணர்த்தாமல்..  நாமே அவற்றிற்கு பயங்கரவாத முத்திரை குத்தி எம்மை பயங்கரவாதிகள் என்று ஆக்கிக்கொண்டு.. சிங்கள அரச பயங்கரவாதத்தை காப்பது மிக மோசமான செயல்.

 

இன்று சிரியாவில் கிளர்ச்சிக்காரர்கள் அரசுக்கு எதிராக மேற்குலக ஆதரவோடு எத்தனை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அவற்றில் எத்தனை பொதுமக்கள் பலியாகியுள்ளனர். அவை அனைத்தும் அரசுக்கு எதிராக கிளர்ச்சி என்று தானே சொல்லப்படுகின்றன. தற்கொலைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. அவற்றை அமெரிக்காவோ.. ஐநாவோ.. ஐரோப்பிய ஒன்றியமோ கண்டித்து.. அந்தக் குழுக்களை ஏன் இன்னும் பயங்கரவாதப் பட்டியலில் போடல்ல. லிபியாவில் அரசுக்கு எதிராக போராடின குழுக்கள் செய்த மனித உரிமை மீறல்களும் கொலைகளும் எங்கே போயின..??! ஏன் அவர்கள் பயங்கரவாதிகளாக இனங்காட்டப்படல்ல..??!

 

துருக்கியில் 5 பேரை சிரியாவின் எறிகணைகள் கொன்றுவிட்டன என்பதற்காக நேட்டோ ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறைகள் அங்கு நகர்த்தப்பட்டுள்ளதோடு.. துருக்கி தன் பாதுகாப்பிற்கு சிரியாவை தாக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1986 முதல் தமிழ் மக்கள் மீது சிங்கள அரச படைகளும் இந்தியப் படைகளும் ஏவிய எறிகணைகள் பலியிட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை என்ன..??! அதற்கு யார் பதில் தாக்குதல் நடத்தினார்கள்.. அவற்றை தடுத்து நிறுத்தினார்கள். மாறாக நியாயம் கற்பித்தார்கள்.. எங்க இருந்து செல் வருகுது என்று தெரியவில்லையாம்..??! மடுமாதா ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ICRC ஒன்றைச் சொல்ல.. சிங்கள அரசாங்கம் ஒன்றைச் சொல்ல.. UNHCR இன்னொன்றைச் சொன்னது. ஆனால் துருக்கி எல்லையில் மட்டும்.. எல்லாமே வெளிச்சமா தெரிஞ்சது. ஏன் அந்த எறிகணைகளை துருக்கியே.. கிளர்ச்சிக்காரர்களைக் கொண்டு.. ஏவி.. சர்ச்சையில் தன் தலையீட்டை கொண்டு வந்திருக்க முடியாது..??! ஏன் யாரும் அந்த எறிகணைகளை யார் வீசியது என்று தெரியாது.. என்று சொல்லி வாழாதிருக்கவில்லை..???!

 

ஆனால்.. எங்கள் விடயத்தில்.. சர்வதேசம் செய்யுதோ இல்லையோ.. நாங்களே எங்களைத் திருத்திக் கொள்ளுறம் என்ற போர்வையில்.. காட்டிக்கொடுப்புக்கள் தான் நிகழ்கின்றன. சிங்கள அரசின் அரச பயங்கரவாதம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. அதற்கு உதவிய சர்வதேச அரச பயங்கரவாத ஊக்குவிப்புக்களும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

 

சர்வதேசமும் அதையே விரும்புகிறது. அதில் இருந்து மீள முடியாமல்.. நாமே நம்மை குற்றவாளி ஆக்கி மகிழ்ந்து கொண்டிருப்பதுவே இன்று எம்மத்தியில் நிகழ்கிறது. அதற்காக அது உண்மையோ.. நியாயமோ அல்ல. அது நாமே எம்மை பயங்கரவாதிகள் என்பதற்குச் சமன்.

 

ஆனால் புலிகளைப் பொறுத்தவரை அவர்களின் ஒவ்வொரு நகர்வையும் எதிரியே தீர்மானித்தான். இதுதான் தர்மத்தின் முன்னால் உள்ள உண்மை.

 

இதை யார் சர்வதேசத்திற்கு சொல்லி அவர்கள் அதனை ஏற்கச் செய்யப் போகினம்..???! சம்பந்தனோ.. சுமந்திரனோ.. நாங்கள் இங்கே சொன்னதை மறுக்க முடியுமா..????! ஏன் சர்வதேசம் தான் மறுக்க முடியுமா..???!  :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

123

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்
இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - சுமந்திரன்

 

தாங்கள் ஆணியே புடுங்க வேணாம் பிளீஸ்..... 

 

இதுவரை சம்பந்தன் வீட்டு கொல்லைக்குள் இருந்து போராடியவர் இனி வீதியில் இறங்கி  சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போராடப் போகிறாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.