Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் மீதான புனர்வாழ்வு சட்டவிரோதமானது! - சரத் பொன்சேகா விமர்சனம்!

Featured Replies

யாழ்.பல்கலைக்கழக மாணவர் மீதான புனர்வாழ்வு சட்டவிரோதமானது! - சரத் பொன்சேகா விமர்சனம்!!

 

 

அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவின்றி எந்தச் சட்டத்தின் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்புத் தரப்பினரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் அனைவருக்கும் சமமானதாக இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கோ அல்லது எந்தவொரு தரப்புக்கோ இதில் பாகுபாடு இருத்தல்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுள் நால்வர் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்ட விவகாரம் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்களிடம் இன்று மாலை கருத்து வெளியிடும்போதே ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும்,  முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

யாரேனும் ஒருவரைக் கைதுசெய்வதாக இருந்தால் அந்த நடவடிக்கை, சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படவேண்டும். எவ்வித பாகுபாடும் இருத்தலாகாது. ஏனெனில், சட்டம் யாவருக்கும் சமனானதொன்றாகும்.

நாட்டில் தற்போது அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லை. எனவே, கைதுசெய்யப்பட்டவர்களை தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கோ, புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கோ நீதிமன்றத்தின் உத்தரவு அவசியமாகும்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு நீதிமன்ற உத்தரவின்றியே மாற்றப்பட்டுள்ளனர். அப்படியானால், எந்தச் சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது?

பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்புத் தரப்பினரும் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அப்பால் சென்று சட்டவிரோதமான முறையில் இந்த விடயத்தில் செயற்பட்டிருப்பார்களானால் அது கண்டிக்கத்தக்கதாகும்.

அதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பழிவாங்கல் நடவடிக்கை என நாம் ஆரம்பம் முதலே கூறிவருகின்றோம். பழிவாங்கல் நடவடிக்கைக்குப் புறம்பாக இதில் வேறொன்றும் இல்லை.

இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

12/28/2012 1:52:32 PM

 

 

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=863272c1-eda2-4c38-bac4-227775ed3716

 பொன்சேகாவிற்கு இன்று தமிழர்கள் மேல் திடீர்  'அக்கறை'  :wub:

அவரும் புனர்வாழ்வு பெற்றவர் அல்லோ அதனால தான்

அவரும் புனர்வாழ்வு பெற்றவர் அல்லோ அதனால தான்

 

அப்போ சிங்களவனிடம் புனர்வாழ்வு பெறுவது நல்லதா?

அப்போ சிங்களவனிடம் புனர்வாழ்வு பெறுவது நல்லதா?

உங்களுக்கு என்ன தோணுது? சிங்களவனிடம் புனர் வாழ்வு பெறுவது நல்லதா ?

எனக்கு தெரியாது அந்த  இக்கட்டான சூழ்நிலை எனக்கு வரவில்லை.

சிங்கள அரச பயங்கரவாதிகள் தமது கைகூலிகள், அடிவருடிகள், மற்றும் தாம் வீசும் எலும்புத்துண்டை நக்கி பிழைப்பு நடத்த முன்வரும் எவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் இக்கட்டான சூழலை ஏற்படுத்துவதில்லை!



உதாரணமாக கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றவர்களை மற்றும் அவர்களின் அடிவருடிகளைக்
கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
அப்போ சிங்களவனிடம் புனர்வாழ்வு பெறுவது நல்லதா?

 

அவர்கள் நாட்டில் வசிக்கும் மனிதர்கள் புனர்வாழ்வு பெறுவது பற்றி பேசுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.