Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியலும் சமூகமும்

Featured Replies

சிறார்கள் பாலியலில் ஈடுபடுவது ஏன்?

 

  • தொடங்கியவர்

பாலியல் வன்முறைக்கு யார் பொறுப்பு?

 

  • தொடங்கியவர்

பெண் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும்?

 

  • தொடங்கியவர்

பாலியல் வன்முறை:நடவடிக்கை என்ன?

 

  • தொடங்கியவர்

இந்த திரியில் உள்ள மூன்றாவது காணொளி அருமையானது.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அபலைப் பெண்களின் குமுறல்

 

http://www.youtube.com/watch?v=3PeiZ4numLM

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள காணொளி. நன்றி அகூதா.

  • தொடங்கியவர்

வாழ்க்கையை விரும்பியபடி அமைத்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரித்தானதே..

 

ஆனால் அந்த உரிமை அனைவருக்கும் கிடைத்து விடுகிறதா? இல்லை.. சிலருக்கு வாழ்க்கை, மலர்கள் தூவிய பாதையில், வசந்தத்தின் வாசல்கள் திறக்கப்பட்ட வளமிக்க வாழ்வாக அமைகிறது.. சிலருக்கோ முட்கள் பதிக்கப்பட்ட பாதையில், துயர் படிந்த இருள் மிக்க வாழ்வாக இருக்கிறது. .. .

 

முட்களின் பாதையில் வீசி எறியப்பட்டவர்கள், விதையாக முளைத்து, விருட்சமாக வளர்ந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான போராளிகளாக போர்க்கோலம் பூண்கிறார்கள்.. அவர்களின் போராட்டங்கள் நிரம்பிய வாழ்க்கைப்பதிவுகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

செக்ஸ் தொடர்பான விடயங்களை பிள்ளைகளுடன் பேச நாணம்

 

டென்மார்க்கில் உள்ள பெற்றோரில் அரைப்பங்கினர் செக்ஸ் தொடர்பான விடயங்களை தமது பிள்ளைகளுடன் மனம்விட்டு, பேசி வழிகாட்டும் வல்லமையற்றவர்களாக இருப்பதாக இன்று வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

 

பாலியல் தொடர்பான உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள், மார்பகங்கள், மாதவிடாய், நோய்கள், தூண்டும் செக்ஸ் உணர்வின் பாரதூரமான விடயங்களை பிள்ளைகளுக்கு எடுத்துரைத்து அமைதி காண வைக்க பெரும்பாலான பெற்றோரால் இயலவில்லை.
 

இத்தகைய விடயங்களை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்காவிட்டால் அவர்கள் அதை மற்றவர்கள் மூலம் அறிய முற்படும்போது உண்டாகும் பாதிப்புக்கள் வேறுவிதமாக சிக்கல்களை கொடுக்கலாம் என்பதால் இது குறித்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
 

ஆனால் ஆய்வுக்காக தொடர்பு கொள்ளப்பட்ட பெற்றோரில் அரைப்பங்கினர் பிள்ளைகளுடன் இதை எப்படிப் பேசுவது என்ற நாணம் கொண்டோராக உள்ளனர், பத்துக்கு ஒருவர் இந்த விடயத்தை தாம் பிள்ளைகளுடன் பேசுவதே இல்லை என்றும் கூறியுள்ளனர்.
 

பாலியற் கல்வி பாடசாலைகளில் இருந்தாலும் பெற்றோர் கொடுக்கும் தகவல்கள் இதில் பிரதான பாத்திரம் வகிப்பது கவனிக்கத்தக்கது.
அதுபோல புகைப்பிடித்தலின் தீமைகளையும் பெற்றோர் பிள்ளைகளுக்கு எடுத்துரைப்பது அவசியம் என்று இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.


ஒருவர் புகைப்பிடித்து சிகரட்டை அணைத்தால் அதன் பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னரே இதயத் துடிப்பு இயல்பு நிலைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
 

சிகரட்டை இழுப்பதால் இதயத்துடிப்பு, பல்ஸ் என்பவை உயர்வடைந்து செல்லும், அதனால் வரும் உபாதையில் இதயம் படும் வேதனை குறைந்து அது மறுபடியும் இயல்பு நிலைக்கு வர 20 நிமிடமாகிறது என்றால் தொடர்ந்து சிகரட் குடிப்போர் தமது இதயத்திற்கும், சுவாசப்பைக்கும் எவ்வளவு நரக வேதனையை கொடுக்கிறார்கள் என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.
 

இவற்றை படிமுறையாக எடுத்துரைத்து பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றோர் கடமையாகும் என்கிறது இம்மாதம் வெளியாகியுள்ள சுகாதாரம் என்ற டேனிஸ் ஏடு.

 

http://www.alaikal.com/news/?p=121617

பாலியல் வன்முறை

 

 

 

 

தப்புக்கள் தவறுகள் பரந்து கிடக்கின்றன.தற்காலத்தில் தான் வெளிவருகின்றன.எப்படித்திருத்த முடியும்.பேசுவதுதான் ஒரே வழி

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

பாலியல் தாக்குதல்கள் ; ஒரு நகரமும் ஒரு தீவும்

 

’உன் மகளிடம் வெளியே போகாதே என்று கூறாதே; முதலில் வெளியே ஒழுக்கமாக நடந்து கொள்ளும்படி உன் மகனிடம் கூறு’ டெல்லி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி ஒன்றின் மாணவிகள் இவ்வாறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

 

இந்திய தலைநகர் புதுடெல்லியில் இடம்பெற்ற மருத்துவ கல்லூரி மாணவியான தாமினிக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவமும் அதற்குப்பிறகு இடம்பெற்ற அம்மாணவியில் மரணமும் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னமும் முடியவில்லை.

இந்த சம்பவத்தை தமது அரசியல் இயந்திரத்தை வேகப்படுத்தும் சுப்பர் பெற்றோலாக பயன்படுத்திக்கொண்டவர்கள் தான் அதிகம் எனும் கூறுமளவிற்கும் இதற்கு முன்னர் டில்லியிலோ அல்லது இந்தியாவின் வேறந்த மாநிலங்களிலோ இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை என நினைக்குமளவிற்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

 

பாலியல் வல்லுறவுகளுக்கு காரணமான ஆண்களை அவர்களின் ஆண் தன்மையை இழக்கச்செய்யும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெண்ணியவாதிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புக்கள் வலுப்பெற்றன.

 

மேலும் ஒரு நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் எங்கேயோ ஒரு கிராமத்தின் மூலையில் பெண்களுக்கு எதிராக என்னென்ன சம்பவங்கள் இடம்பெறுமோ என்ற விடயமும் முன்னிலைப்படுத்தப்பட்டது. இறுதியில் மத்திய அரசாங்கம் இந்த சம்பவங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என ஆராயும் பொருட்டு நீதியரசர் ஜே.எஸ். வர்மா தலைமையில் குழுவொன்றை அமைத்து பரிந்துரைகளை முன் வைக்கச்சொன்னது.


அதன்படி முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் கட்டளைச் சட்டமாக்கப்பட்டு இந்திய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு இவ்விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த கட்டளைச்சட்டத்தின் முக்கிய பிரிவு கூறுவதென்னவென்றால் பாலியல் வல்லுறவுக்கும் பெண் ஒருவர் மரணத்தை தழுவினால் அதற்கு காரணமானவருக்கு (குற்றமிழைத்தவர்) மரண தண்டனை வழங்கலாம் என்பதாகும்.

 

மேலும் இந்த புதிய கட்டளைச்சட்டம் “பாலியல் வல்லுறவு“ என்ற வார்த்தைக்குப்பதிலாக “பாலியல் தாக்குதல்“ என்ற சொற்பதத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஒன்றின் தலைநகரத்தில் ஏற்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள். இனி இந்த நாட்டிற்கு அருகாமையில் இருக்கும் தீவான இலங்கையில் ஏற்பட்டுள்ள ஏற்படப்போகும் சம்பவங்கள் எப்படியாக இருக்கும் என நாம் பார்த்தல் அவசியம்.


நாளொன்றுக்கு ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள்

இலங்கையைப்பொறுத்தவரை நாளொன்றுக்கு சராசரியாக ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எமக்கு அதிர்ச்சியூட்டும் விடயமல்ல. காரணம் பல சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன.


இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜேராம பகுதியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 47 வயது பெண், மற்றும் சிலாபம் பகுதியில் உல்லாசப்பயணியாக வருகை தந்திருந்த 25 வயது ஜேர்மனிய பெண் மீதான வல்லுறவு சம்பவங்களைப்பார்க்கும் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய கட்டளைச்சட்டத்தின் தேவை இலங்கைக்கும் உள்ளது என துணிந்து கூறலாம்.
 

இது குறித்து கடந்த வாரம் தமிழ் நாளிதழ் ஒன்று இலங்கைக்குப்பொறுத்தப்பாடானதாக இருக்கும் வர்மா குழுவின் பரிந்துரைகள் என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

 

பொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாட்டுக்கு அமைவாகவே நாளொன்று சராசரியாக எமது நாட்டில் ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த தொகைக்கு அதிகமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன

என்பதே யாதார்த்த உண்மை.


 

சட்டங்கள் அமுல்படுத்தப்படுமா?

இந்தியாவின் டில்லி நகரில் இடம்பெற்ற வல்லுறவு சம்பவம் மற்றும் அதைத்தொடர்ந்து நாடெங்கினும் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாலியல் வல்லுறவு சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக புதிய கட்டளைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது போது இலங்கையிலும் அவ்வாறான கடுமையான சட்டவிதிகள் கொண்டு வரப்படுமா என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

 

இலங்கையில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக பல பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூகங்கள் குரல் எழுப்பி வந்தாலும் அவற்றிற்கு அரசாங்கம் செவி சாய்க்கின்றதா என்பது முக்கிய விடயம் ஏன் ஊடகவியலாளர்களையும் இங்கு சற்று குறை கூற வேண்டியுள்ளது.

 

விஸ்வரூபம் பட சர்ச்சைகள் தொடர்பில் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்புபவர்கள் நாட்டில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் இவ்வாறான பிரச்சினைகள் குறித்தோ அதற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தோ கேள்விகள் எழுப்புவதில்லை. இதில் உள்ள மற்றுமொரு விடயம் பல பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு பின்னணியில் அல்லது அதோடு தொடர்பு பட்டவர்களாக அரசியல்வாதிகள் இருப்பதாகும்.
 

கடந்த வருடம் தங்காலைப்பகுதியில் பிரதேச சபை தலைவர் ஒருவர் இக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எவரும் கேள்வியெழுப்பவும் இல்லை அதை மறந்தும் விட்டார்கள்.

அக்கறையின்மை

 

சமூகத்தையும் தனிமனிதர்களையும் பல்வேறு விதத்தில் பாதிக்கும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து எமது நாட்டு மக்களிடம் உணர்வுபூர்வமான எழுச்சிகள் இது வரை தோன்றாதது ஆச்சரியமே.


மேலும் தாம் இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் வரை அடுத்தவருக்காக அனுதாபப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அக்கறையற்ற கலாசாரம் தான் இப்போது இவர்களிடம் உள்ளது. 1990 களில் காக்கை தீவில் இடம்பெற்ற ரீட்டா ஜோன் மீதான வல்லுறவு சம்பவம் அப்போதைய சூழலில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பின்னர் இதை ஒரு செய்தி வடிவமாக மட்டும் அனைவரும் பார்த்தனர். இப்போது அதை மறந்தும் விட்டனர்.

 

மேலும் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் எவராவது இவ்வாறான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என இது வரையில் குரல் கொடுத்திருப்பார்களா?


எதற்கெல்லாமோ சட்டங்கள் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன ஆனால் எத்தனையோ சிறுவர்கள் அப்பாவி பெண்களின் வாழக்கையை பாழாக்கிய வல்லுறவு தொடர்பாக இது வரை எதாவது சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனவா? ஆக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் இவ்விடயத்தில் அக்கறையின்றி இருப்பது தெளிவாகின்றது.

 

 

உல்லாசப்பயணிகள் தொடர்பான சம்பவங்கள்

உல்லாசப்பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு வரவழைத்து அந்நிய செலாவணியை பெறுவதற்கான திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அதை சீர்குழைக்கும் வகையில் உல்லாசப்பயணிகளுக்கு எதிராக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

 

கடந்த காலங்களில் பல வெளிநாட்டு பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக கரையோரப்பிரதேசங்களில் தமது விடுமுறையை கழிக்க வருகை தந்த ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த பெண்கள் தனி நபர்களினாலோ அல்லது குழுக்களினாலோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

மேலைத்தேய நாடுகளின் பெண்கள் மீதுள்ள தப்பான அபிப்ராயமே ஒரு சிலரை இவ்வாறு செய்யத்தூண்டுகிறது என்கிறார் ஒரு சமூக செயற்பாட்டாளர். கடந்த வருடத்தில் கல்பிட்டிய பகுதியில் ஹோட்டல் ஊழியர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தென்னாபிரிக்க பெண், மாத்தறைப்பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட ஸ்பெயின் நாட்டுப்பெண், தங்காலையில் பிரித்தானிய ஜோடியை தாக்கி அதில் ஆணை கொலை செய்து விட்டு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குழுவினர் இப்படி உல்லாசப்பயணிகளுக்கு எதிரான சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

 

தமது விடுமுறை பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் பல சம்பங்கள் குறித்து பொலிஸாரிடம் இவர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதில்லை என்பதே உண்மை.


 

சமூக அக்கறை

ஐக்கிய நாடுகள் சபையின் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய தொடர்பாடல் தகவல்களின் படி இன்று உலகில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களில் 50 90 வீதமானவை முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை என்றும் இதோடு தொடர்பு பட்ட குற்றவாளிகளில் 6 வீதமானோர் தமது வாழ்நாளில் ஒரு நாளையேனும் சிறையில் கழிக்காதவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவும் இலங்கையில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திடம் இது தொடர்பில் பொறுப்பு கூறும் தன்மை இல்லை என்பதை

அது சுட்டிக்காட்டியுள்ளது.

 

மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் தமது எதிர்ப்பை உணர்வு பூர்வமாக வெளிக்காட்ட வேண்டும் என்பது முக்கிய விடயம். வருடந்தோறும் அதிகரித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்பாக மட்டும் பொலிஸ் தரப்பும் ஏனைய அமைப்புகளும் கவலை வெளியிடாது இதை கட்டுப்படுத்தி தடுக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


-சிவலிங்கம் சிவகுமாரன்

 

http://www.virakesari.lk/article/feature.php?vid=87

 

நல்லதொரு திரி அகூதா... இணைப்புகளுக்கு மிகவும் நன்றி.

நல்லதொரு விடயம், இணைப்பிற்கு நன்றி.

நான் என் எட்டு வயது மகளுக்கு  பொதுவாக சந்தர்பம் கிடைக்கும்போதெல்லாம்  இந்த good touch , bad  touch பற்றி கதைபதுண்டு. அவவும் தன் சந்தேகங்களை அப்பப்ப என்னுடன் இயல்பாகக் கதைப்பா.

இங்கு இணைத்துள்ள 3 வது  - பெண் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவவை பார்க்க விடலாம் என நினைக்கின்றேன். இது சரியா? 
  • தொடங்கியவர்

இங்கு இணைத்துள்ள 3 வது  - பெண் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவவை பார்க்க விடலாம் என நினைக்கின்றேன். இது சரியா? 

- நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள பாடசாலை / கலாச்சார நடைமுறைகளை கருத்தில் கொண்டு முடிவை எடுக்கலாம்

- ஒரு வைத்தியரை / துறைசார் வல்லுனரை அணுகி கலந்தாலோசித்து முடிவை  எடுக்கலாம்

 

குறிப்பு : இது எனது ஆலோசனை மட்டுமே. நான் இந்த விடயத்தில் எந்த கல்வியோ  / தகமாவ்யோ பெற்றவன் அல்ல.

  • தொடங்கியவர்

பாலியல் வன்முறைகள்

 

தில்லியில் 16.12.2012 அன்று இரவு 23 அகவை இளம் பெண்ணும் அவருடைய ஆண் நண்பரும் தனியார் பேருந்தொன்றில் பயணம் செய்தபோது அவ்விளம்பெண்ணை பேருந்துக்குள் இருந்த ஓட்டுநரின் நண்பர்கள் ஆறுபேர் பாலியல் வன்முறை செய்து நாசப்படுத்திவிட்டனர். அப்பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆண் நண்பரைத் தாக்கிக் கீழே தள்ளி விட்டுள்ளனர் அக்கொடியவர்கள்.

 

 

புதுதில்லியில் ஏகாதிபத்திய அரச பீடங்கள் அமைந்திருக்கும் படகுக்குழாம் பகுதி, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன் உள்ள திறந்த வெளி ஆகியவை கடந்த டிசம்பர் 22,23,24 நாள்களில் போர்க்களம் ஆயின. நீதிகேட்டு வீதிக்கு வந்தனர் மக்கள். இவர்களில் இளம் ஆண்களும் இளம் பெண்களும் அதிகம். போராடிய மக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகைக்குண்டுகள் வீசினர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். தடியடி நடத்தினர். போராடிய இளைஞர்கள் காவல்துறையினரைத் திருப்பித் தாக்கினர். அதில் ஓர் உதவி ஆய்வாளர் உயிர் இழந்தார்.


நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தது. நரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஊளையிட்டன. நாட்டின் ஒழுக்கக் கேடுகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லாததுபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவேசப்பட்டனர். நாட்டின் அலங்கோலங்களின் மூல ஊற்று நாடாளுமன்றம்தான் என்பதை அவர்கள் தங்களின் பகட்டு ஆவேசத்தால் திரை போட்டு மறைத்தனர்.

 

தில்லிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த போது, 20.12.2012 அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், தாதன்குளம் தொடர்வண்டி நிலையம் அருகே, கிளாக்குளம் கிராமத்திலிருந்து பள்ளி செல்ல நடந்து வந்த 7ஆம் வகுப்பு மாணவி 13 அகவை நிரம்பாத, பருவமடையாத சிறுமியைச் சீரழித்துக் கொலை செய்தான் ஒரு காமக் கொடூரன். புனிதா என்ற இச்சிறுமியின் கொடூரக் கொலை குலைநடுங்க வைத்தது அடங்குவதற்குள் விழுப்புரம் அருகே ஒரு பாலியல் வன்முறை, அதற்கு முன் காரைக்கால் அருகே பாலியல் வன்முறை.


பேத்தியை வல்லுறவு கொண்ட தாத்தா, பெற்ற மகளை வன்புணர்வு செய்த தகப்பன், சித்தப்பன் மகளை வன்கொடுமை செய்த பெரியப்பன் மகன் என காமக் கொடூரன்களின் கண்மண் தெரியாத வெறியாட்டங்கள் நீள்கின்றன; தொடர்கின்றன.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22920:2013-02-11-02-06-04&catid=1560:12013&Itemid=807

Edited by akootha

  • தொடங்கியவர்

பாலியல் வன்முறைகள்
 
காதலுக்கு நான்கு கண்கள்
கள்வனுக்கு இரண்டு கண்கள்
காமுகனின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை

 

என்ற மருதகாசியின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நம் முன்னோர்கள் “காமத்துக்குக் கண் இல்லை“ என்று ஒரு பழமொழியை உருவாக்கியுள்ளார்கள்.


கல்வி வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில் காமக் கொடூரங்களும் அதிகரித்து வருவது ஏன்? பொருளியல் வளர்ச்சி முன்பிருந்ததைவிட அதிகரித்து வரும் நிலையில் திருட்டும் கொள்ளையும் அதிகரித்துவருவது ஏன்?
 

ஒழுக்கத்தை விதைக்காத கல்விப் பெருக்கமும், அறத்தைச் சாராத பொருள்வளர்ச்சியும் காட்டு மிராண்டிக் காலத்தைவிடக் கொடுமைகளைக் கூடுதலாக்கும்.
 

காமக் கொடூரன்களின் கைவரிசைகள் பெருகுவதற்கு பெண்ணடிமைத் தனத்தின் – ஆணாதிக்கத்தின் சூழல்தான் காரணம் என்று பொதுவாகக் கூறுகிறார்கள். இக்கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால் இது மட்டுமே முழுக் காரணம் அன்று.
 

உலகில் அதிக விகிதத்தில் பாலியல் வன்முறைகள் நடக்கும் நாடு அமெரிக்காதான் (யு.எஸ்.ஏ.). இந்தியாவில் இருப்பதைவிடப் பெண்ணுரிமை அதிகமுள்ள நாடு அமெரிக்கா. அதே போல் திருட்டும் கொள்ளையும் அதிக விகிதத்தில் நடக்கும் நாடு அதே அமெரிக்காதான். உலகில் மிகப்பெரிய பணக்கார நாடும் அதுதான்.
 

2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த பாலியல் வல்லுறவுகளுக்காகப் பதியப்பட்ட வழக்குகள் 83,425. குத்து, வெட்டு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைக் குற்றங்களுக்காகப் பதியப்பட்ட வழக்குகள் 12,03,564. கொலை வழக்குகள் 14,612. கொள்ளை வழக்குகள் 3,54,396. மோட்டார் வாகனத் திருட்டு வழக்குகள் 7,15,373. இப்படி இன்னும் நீள்கிறது பட்டியல்.
 

2011 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிறைக்கைதிகள் எண்ணிக்கை 20,19,234. அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை 2011 இல் 31,15,91,917. இந்தியாவின் மக்கள் தொகை 121,01,43,422. இந்திய நாடெங்கும் 2011 இல் சிறைக்கைதிகள் எண்ணிக்கை 3,13,635.
 

அமெரிக்கா கிட்டத்தட்ட 100 விழுக்காடு கல்வி வளர்ச்சி பெற்ற நாடு. பொருளியல் வளர்ச்சியில் இந்தியாவை விட எத்தனையோ மடங்கு உயரத்தில் இருக்கிறது. அவை போலவே பெண்ணுரிமையும் இந்தியாவை விட மிக அதிகமாக அங்குள்ளது. பிறகு அங்கு ஏன் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகமாக உள்ளன?
 

அறிவு வளர்ச்சி இருக்கிறது. உரிமைகள் பல இருக்கின்றன. பொருள் வளர்ச்சி இருக்கிறது. ஆனால் மன வளர்ச்சி இல்லை. அதனால் அங்கு ஒழுக்கமும் வளரவில்லை. அறமும் வளரவில்லை.
 

மன வளர்ச்சி என்பது சாரத்தில் மனதைக் கட்டுப் படுத்தி ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஆற்றல்தான். பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வது போல் மனம் எப்போதும் அற்ப மகிழ்ச்சிகளை நோக்கித் தாவுகிறது. எளிய செய்திகளையே விரும்பி ஏற்கிறது. சுற்றுப் பாதையில் போவதைவிடக் குறுக்கு வழியில் சென்று இலக்கைத் தவற விடுகிறது.
 

இப்படிப்பட்ட மனதைக் கட்டுப்படுத்துவது என்பது எப்படி? மனநிறைவுதான் மனதைக் கட்டுப்படுத்த சிறந்த வழி. மனதில் பற்றாக் குறைகள் நிறைந்திருக்கும்போது மனநிறைவு எப்படி ஏற்படும்? பற்றாக்குறை என்பது எது எதில் பற்றாக்குறை?

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22920:2013-02-11-02-06-04&catid=1560:12013&Itemid=807

  • தொடங்கியவர்

பாலியல் வன்முறைகள்
 
மனித நுகர்வில் ஏற்படும் பற்றாக்குறைகள்தான் முதன்மையான பற்றாக்குறைகள். நுகர்வில் முதன்மையானவை இரண்டு. ஒன்று பொருள் நுகர்வு. இரண்டு பாலியல் நுகர்வு. இவ்விரண்டையும் சார்ந்தே மனித மனநிலை பெரிதும் இயங்குகிறது.


இயற்கையைப் பொறுத்தவரை, பொருள் நுகர்வுக்கும் பாலியல் நுகர்வுக்கும் பற்றாக்குறை வைக்கவில்லை. உண்ணவும் உடுத்தவும் உறைந்திடவும் போதிய பொருள்களை இயற்கை வழங்குகிறது. அதைப் போலவே ஆணையும் பெண்ணையும் பொதுவாக சம எண்ணிக்கையில் உருவாக்குகிறது. பிறகு ஏன் இவ்விரண்டிலும் பற்றாக்குறை?
சமூகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொருள்களைப் பேராசை கொண்ட தனி மனிதர்கள் தங்களுக்கென்று மிகையாக வளைத்துக் கொள்கிறார்கள்.
 

இதனால் சமூகத்தில் பெரும்பாலோர் பொருள் பற்றாக் குறையினால் அதாவது வறுமையினால் துன்பப்படுகிறார்கள். மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏற்றத் தாழ்வை – ஒரு தரப்புப் பற்றாக்குறையை நீக்கிச் சமன் செய்து, அனைவரும் பகிர்ந்து வாழும் சமூக அமைப்பை உருவாக்க வந்ததுதான் நிகரமை (சோசலிச)த் தத்துவம். வர்க்கப் போராட்டம், வர்க்கப் புரட்சி என்பவை எல்லாம் நிகரமை இலக்கு நோக்கியவையே!
 

பாலியல் பற்றாக்குறை எப்படி ஏற்படுகிறது? பெண் பற்றாக்குறையினால் அல்லது ஆண் பற்றாக்குறையினால் ஏற்படுவதன்று பாலியல் பற்றாக்குறை.
 

பாலியல் வேட்கை உடல் சார்ந்தது மட்டுமன்று. மனம் சார்ந்ததும் ஆகும். பாலியல் வேட்கைக்கு உடல் அடிப்படையானது. ஆனால் மனம் முகாமையானது. உடல் மனதைத் தூண்டுவதும் மனம் உடலைத் தூண்டுவதும் சேர்ந்தும் நடக்கும்; ஒன்றுக்குப் பின் ஒன்றும் நடக்கும். அதாவது உடல் தேவை மனதைத் தூண்டுவதும் மன வேட்கை உடலைத் தூண்டிவிடுவதும் உண்டு.
 

பாலியல் பற்றாக்குறையில் பெரும்பங்கு வகிப்பது மனதில் ஏற்படும் பற்றாக்குறையே! அதாவது மனம் நிறைவு பெறாமையே! இணையராகிவிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் பொருத்தமின்மை அல்லது உறுப்புக் குறைபாடு காரணமாகப் பாலியல் பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. கலவிக் கலை பற்றிய புரிதல் இன்மையும் பாலியல் பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணம் ஆகும். இவை அனைத்தையும் விட மனதால் ஏற்படும் பற்றாக்குறையே அதிகம்.
 

பாலியல் இன்பத்தை மனம் கற்பனை செய்து, கற்பனைசெய்து பாலியல் வேட்கையைப் பெருக்கிக் கொள்கிறது. பொருள் நுகர்வைக் கற்பனையில் அனுபவிப்பதை விட சுவைப்பதை விட பாலியல் நுகர்வைக் கற்பனையில் அனுபவிப்பதும் சுவைப்பதும் அதிகம். அதனால்தான் கனவில் பாலுறவுக் காட்சிகள் தோன்றுவதும் அதனால் இளம் ஆண்களுக்கு விந்து வெளிப்படுவதும் பெண்களுக்கு திரவக் கசிவுகள் ஏற்படுவதும் நடக்கிறது.
 

இந்த மானசீக – கற்பனை வயப்பட்ட பாலியல் வேட்கைகளில் ஆண்களும் பெண்களும் எளிதில் சிக்கித் தவிக்கிறார்கள். இதனால் நிறைவேறாத ஆசைகள் அடிமனதில் நிரம்பிக் கிடக்கின்றன.
 

கற்பனைப் பாலியல் நுகர்வுக்கும் நிறைவேறாத ஆசைகளுக்கும் தீனி போடுவதன் மூலம் வாசகர்களை, பார்வையாளர்களை ஈர்த்துத் தமது தொழிலை, வணிகத்தை வளர்த்துக் கொள்கிறார்கள் பல எழுத்தாளர்கள், கலைப்படைப்பாளிகள், விளம்பரதாரர்கள் மற்றும் பல நிறுவனத்தினர்.
 

திரைப்படத்திலோ, விளம்பரப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ, கதைகளிலோ, ஏடுகளிலோ ஆணும் பெண்ணும் பாலுறவுச் சொற்களைப் பரிமாறிக் கொள்ளும்போதும் பாலுறவுக்கான உடல் மொழிகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும் அக்காட்சியைப் படிக்கும் அல்லது பார்க்கும் ஆண் அல்லது பெண் அந்தக் கதாபாத்திரத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு சுகம் காண்கிறார்கள். துக்கக் காட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டு அழுகிறார்கள். இதுதான் மானசீக வாழ்க்கை அல்லது கற்பனை வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இந்தக் கற்பனை வாழ்க்கை விலங்குகளுக்குக் கிடையாது. எனவே அவற்றிடையே பாலியல் வக்கிரங்கள் கிடையாது.

 

இயற்கையோடியைந்த பாலியல் ஒழுக்கம் அவற்றிடையே நிலவுகிறது. விலங்குகளிடையே பாலியல் வல்லுறவு என்பது கிடையாது.
 

விலங்குகளுக்கு இல்லாத அளவில் மனவளர்ச்சி மனிதர்களுக்கு இருப்பதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. எப்போதுமே தீமைகளை மனம் எளிதில் பற்றிக் கொள்ளும். கற்பனைப் பாலியல் துய்ப்புகளை மிகைபடத் தூண்டிவிட்டு, ஆண்களையும் பெண்களையும் தங்கள் வசம் ஈர்ப்பதில், சமூகப் பொறுப்பில்லாத வணிக நோக்கு எழுத்தாளர்கள், கலைப்படைப்பாளிகள், தொழில்-வணிக முதலாளிகள் முதலியோர் இடையறாது ஈடுபட்டு வருகின்றனர்.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22920:2013-02-11-02-06-04&catid=1560:12013&Itemid=807

  • தொடங்கியவர்

பாலியல் வன்முறைகள்
 
விளம்பரப் படங்கள் கூடப் பாலியல் உணர்வைத் தூண்டி விட்டுத்தான் தமது பொருளை விளம்பரம் செய்கின்றன. ஓர் ஊர்தி நிறுவன விளம்பரத்தில், இளம் ஓட்டுனர் இளம் பெண்ணைப் பார்த்து “பட்டன் திறந்திருக்கும்மா“ என்று சொல்வார். அப்பெண்ணின் மார்பகங்கள் காட்டப்படாமலே சொல்லின் மூலம் மார்பகங்களைக் கற்பனை செய்ய வைத்துக் கவனத்தை ஈர்க்கிறது அவ்விளம்பரம்.
 
மறைபொருளாகச் சொற்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் இந்த விளம்பரக் காட்சியே பாலுணர்வைத் தூண்டுகிறது. கால்பங்கு, அரைப்பங்கு, முக்கால்பங்கு என உடலுறவுக் காட்சிகளைக் காட்டும் திரைப்படங்கள், விளம்பரங்கள், கதைகள் மற்றும் கட்டுரைச் சித்தரிப்புகள் எந்த அளவு தீவிரப் பாலுணர்வைத் தூண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சிறுவர்களுக்கான தொலைக்காட்சித் தொடர்களும் பாலுணர்ச்சியைத் தூண்டும்படிதான் அமைக்கப்படுகின்றன. தெருக்களில், சாலைகளில் திரும்பிய பக்கமெல்லாம் பாலுணர்வைத் தூண்டும் படங்கள், விளம்பரங்கள்!


எந்நேரமும் காமப் பசியோடும் காம ஏக்கத்தோடும் மனம் அலைபாயும்படி மனிதர்களை ஆட்டிப் படைக்கிறார்கள் தன்னல வெறியர்கள்.

 

“எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் கொடுத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசை என்னும் விஷம் கொடுத்தான்“

என்று கண்ணதாசன் எழுதினார்.

 

பாலியல் பற்றாக்குறையை – பாலியல் வறுமையை ஒவ்வொருவர்க்கும் செயற்கையாக உருவாக்கி விடுகிறார்கள்

தன்னலப் படைப்பாளிகளும், தன்னலத் தொழில்-வணிக நிறுவனங்களும்!

 

புயல் காற்றில் சிக்கிக் கொண்ட மனிதர்களில் பலவீனமானவர்கள் விழுந்து விடுகிறார்கள். வலிவுள்ளவர்கள் தப்பி விடுகிறார்கள். அதுபோல காமச் சூறாவளி சுற்றிச் சுழன்றடிக்கும் சூழ்நிலையில் மனதைக் கட்டுப்படுத்தி, ஒழுங்கு படுத்தும் பண்பு, பழக்கவழக்கம், பயிற்சி உள்ளவர்கள் தப்பிவிடுகிறார்கள். அவ்வாறில்லாதவர்கள் சீரழிகிறார்கள். மற்றவர்களைச் சீரழிக்கிறார்கள்.

 

சமூக உறுப்பினர்கள் அனைவர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய பொருளைப் பேராசைக்காரர்கள் தங்களுக்கு மட்டுமே குவித்துக் கொண்டு மற்றவர்களைப் பற்றாக்குறையில்-வறுமையில் தள்ளுவது போல் தன்னல வெறிப் பேராசைக்காரர்கள் மற்றவர்களுக்குப் பாலுணர்ச்சியை மிகைபடத் தூண்டிவிட்டு அவர்களை செயற்கையான பாலியல் பற்றாக்குறையில் தள்ளிவிட்டு சீரழிக்கிறார்கள்.

 

சிலரின் மிகைப் பொருள்குவிப்பால் பலர் வறுமையுறுகின்றனர்; அப்பலரில் சிலர் ஒழுக்கச் சிதைவுகளுக்குள்ளாகி திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும் இறங்குகின்றனர். அதேபோல் பாலியல் பற்றாக்குறைக்கும்-வறுமைக்கும் உள்ளானோரில் சிலர் ஒழுக்கச் சிதைவுகளுக்கு உள்ளாகி பெண்களை வல்லுறவு கொள்வதுடன் கொலையும் செய்கின்றனர்.

 

இந்த பாலியல் குற்றங்களை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக மட்டும் ஒற்றைப் பரிமாணத்தில் குறுக்கிவிடக் கூடாது. ஆணாதிக்கம், சமூகம் தழுவிய அளவில் தன்னல வெறியர்களால் தூண்டிவிடப்படும் பாலியல் வெறி, மதுப்பழக்கம் போன்றவை பாலியல் குற்றங்களின் தூண்டுவிசைகளாக இருக்கின்றன. பெண்களிடமும் பாலியல் வெறி தூண்டிவிடப்படுகின்றது. அதற்காகப் பெண்கள் தங்களுக்குத் தொடர்பில்லாத ஆண்களை வல்லுறவு கொள்வதில்லை. பாலியல் வெறிக்கு உள்ளான பெண்களில் சிலர் மனக்கட்டுப்பாட்டை இழந்து வரம்பற்ற பாலுறவை நாடுகிறார்கள். அதற்கு வன்முறையை நாடாமல் ஆண்களைக் கவர்தல் என்ற உத்தியைக் கையாள்கிறார்கள்.

 

பாலியல் வன்முறை புரியும் ஆண்களைத் தண்டிக்க வேண்டும். அதற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோருவது உணர்ச்சி வசப்பட்ட வெளிப்பாடே தவிர உரிமையின்பாற்பட்டதன்று. வழக்குகளை விரைந்து முடித்தல், காவல்துறையினர் பாலியல் வன்முறைக் குற்ற வழக்குகளை உரிய அக்கறையோடும் கவனத்தோடும் நடத்துதல், தனி நீதிமன்றங்கள் அமைத்தல் என்ற வழிகளில்தாம் பாலியல் குற்றங்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். குற்றம் புரியாத அப்பாவிகளை இவ்வழக்குகளில் சிக்கவைக்கக் கூடாது என்பதிலும் கவனம் வேண்டும்.

 

பாலியல் குற்றம் புரிந்த ஆண்களின் ஆண்மையை அகற்றுதல் அதாவது காயடித்தல் – அதற்கான ஊசி போடுதல் போன்ற தண்டனைகளையும் சிலர் முன் மொழிகின்றனர். இவ்வாறான தண்டனைகள் மனித நேயம், மனித உரிமை ஆகிய துறைகளில் சனநாயகத் தன்மை இல்லாத எதேச்சாதிகாரக் காலங்களில் வழங்கப்பட்டவை. கண்ணுக்குக் கண் பறிக்கும் தண்டனைகளும், மரண தண்டனைகளும் கூடாது என்ற மனித நேயமும் மனித உரிமைக் கோட்பாடும் வளர்ந்து வரும் இக்காலத்தில் பாலியல் குற்றங்களுக்குக் காயடித்தல் அல்லது மரண தண்டனை வழங்குதல் ஏற்கக் கூடியதன்று. தவிரவும் கொடுந்தண்டனைகள் குற்றங்களை நூற்றுக்கு நூறு தடுத்துவிடுவதில்லை. “தாங்கள் தப்பித்துக் கொள்வோம்“ என்ற துணிச்சலிலும், விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்காத கண நேர வெறியிலும்தாம் பெரும்பாலும் குற்றங்கள் நடக்கின்றன.

 

தங்கள் சொந்த இலாபத்திற்காகத் தன்னல வெறியோடு சமூகத்தில் காம வெறியைத் தூண்டி விடும் கயவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது? இதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் இவர்களும் தண்டனைக்குள்ளாக வேண்டும். இவர்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் வேண்டும்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் தன்கட்டுப்பாட்டுணர்ச்சியை வளர்க்க வேண்டும். பெரும்பாலான மக்கள் குற்றமிழைக்காதவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் தண்டனைக்கு அஞ்சுவதால் அன்று. பொது ஒழுக்கம் பேணுவதில் அவர்களுக்குள்ள மனப்பக்குவமும் அவர்களிடம் உள்ள பண்பு நிலையுமே காரணங்களாகும்.

எதிலுமே மிகைப்பற்று கூடாது. இயல்பான பற்று இயற்கைவிதி; மிகைப்பற்று மன நோய். மிகைப்பற்று காலப்போக்கில் வெறியாக மாறுகிறது. வெறியானது குற்றச் செயல்புரியத் தூண்டுகிறது.

 

இயல்பான தேவைகளை அடைய முயல வேண்டும். அது தவறன்று. அம்முயற்சி பிறரின் உரிமையைப் பறிப்பதாக அமையக்கூடாது. செயற்கையாகத் தூண்டிவிடப்பட்ட தேவைகள் மனதில் எழுந்தால் அவற்றை மறக்கவும் புறந்தள்ளவும் மனதைப் பயிற்றுவிக்க வேண்டும்.

 

ஆசைப்பட்டதையெல்லாம் அடைய வேண்டும் என்று பின்நவீனத்துவ வாதிகளில் சிலரும் பெருநிறுவனச் (கார்ப்பரேட்) சாமியார்களில் சிலரும் கூறிவருகின்றனர். ஒழுக்கச் சிதைவின்றியோ அல்லது நேர்மையான வழியிலோ அல்லது பிறரது உரிமைகளையும் இன்பங்களையும் பறிக்காமலோ ஒருவர் ஆசைப்பட்டதையெல்லாம் அடைய முடியாது. “எல்லாவற்றுக்கும் ஆசைப்படு“ என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது நுகர்வு வெறி தவிர வேறன்று. இந்நுகர்வு வெறி பிறர்க்கு உரிமையாய் உள்ள நுகர்வுகளைப் பறிப்பதிலோ அல்லது சிதைப்பதிலோ போய் முடியும்.

 

இலாப வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் உலகமயக் கோட்பாடு தனியார்மய – தாராளமயக் கோட்பாடு தனிநபர் நுகர்வு வெறியைப் பல்வேறு “சுதந்திரங்களின்“ பெயரால் கட்டமைக்கிறது. பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவுப்பிணைப்பை மட்டுமின்றி கணவனுக்கும் மனைவிக்குமிடையே உள்ள உறவுப் பிணைப்பைக் கூட உலகமயமும் தாராள மயமும் “தனிமனித சுதந்திரத்தின்“ பெயரால் அறுத்தெரிகிறது. சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் அன்று, தனிமனிதரே என்பதுதான் உலகமயப் பண்பாடு. சமூக மனிதர்களை உதிரிகளாக்கி விடுகிறது.

 

பெரும்பெரும் முதலாளிய நிறுவனங்களின், வணிக நிறுவனங்களின் பொருள்கள் அனைத்தையும் வாங்கிக் குவிக்கும் வாடிக்கையாளர்கள் உலகமயத்திற்குத் தேவை. உலகமயத்தைப் பொறுத்தவரை தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தம்பி, கணவன், மனைவி, தமிழன், தமிழச்சி என்பது முக்கியமல்ல. இவர்கள் அனைவரும் நுகர்வாளர்கள். எனவே இவர்கள் அனைவரும் அவர்களின் வாடிக்கையாளர்கள்!

 

வாடிக்கையாளர் மனநிலையை உருவாக்குவதும் வளர்ப்பதும்தான் முதலாளிய நிறுவனங்களின் இலட்சியம்! பற்பல பெயர்களில் சிறப்பு விற்பனை நாள்களை அந்நிறுவனங்கள் உருவாக்குகின்றன. ஆடித்தள்ளுபடி, அட்சய திரிதி என்று ஆண்டு முழுவதம் சிறப்பு நாள்களை அறிவித்து விற்பனை நாட்களை உருவாக்கிக் கொள்கின்றன நம் நாட்டு நிறுவனங்கள். வெளி நாட்டு நிறுவனங்களோ “காதலர் நாள்“ போன்று பல விற்பனை நாள்களை உருவாக்கிக் கொள்கின்றன.

 

கணக்குப் பார்த்தால் 365 நாள்களும் காதலர் நாள்கள்தாம். “காதலர் நாள்“ என்று குறிப்பிட்ட நாளை வரையறுத்துக் கொண்டாடச் செய்வதில் பன்னாட்டு நிறுவனங்களின் பண்டவிற்பனை உத்தி அடங்கியுள்ளது. அந்நாளில் தமிழ்நாட்டு இளம் ஆண்களும் பெண்களும் குறிப்பாக மாணவர்கள் சாலைகளில், தொடர்வண்டிகளில், பூங்காக்களில், கடற்கரைகளில் கட்டிப் பிடித்துக் கொண்டு திரிவதும், முத்தம் கொடுத்துக் கொள்வதும் பரவி வருகிறது. சுவை மிகுந்த தின்பண்டங்களை பிறர் சாப்பிடும்போது, அதைப் பார்ப்பவர்களுக்கு நாக்கில் எச்சில் ஊறும், பாலியல் நுகர்வைப் பகிரங்கமாகச் செய்யும் போது பிறருக்கு ஏற்படும் தூண்டுணர்ச்சி, தின்பண்டங்கள் உண்பதைப் பார்ப்பதால் ஏற்படுவதை விடப் பன்மடங்கு அதிகமாகும்.

 

மேலை நாட்டுப் பண்பாடு நமக்கு அப்படியே ஒத்துவராது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வார்கள். குழந்தையும் பெற்றுக் கொள்வார்கள். பின்னர் ”பிடிக்கவில்லை” என்று கூறிப் பிரிந்து விடுவார்கள். திருமணம் செய்து கொள்பவர்களும் அடிக்கடி மணமுறிவு செய்து கொள்கிறார்கள். இப்பண்பாட்டால் அந்நாடுகளில் பரவலான மக்கள் மன அமைதியற்று வாழ்கிறார்கள்.

 

தமிழ்நாட்டுக் குடும்ப உறவில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் இருக்கின்றன. கணவன் – மனைவி சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தில் சனநாயகத் தன்மை வேண்டும். பெண்ணுரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மணமுறிவு உரிமை வேண்டும். அதே வேளை மணமுறிவு உரிமையை வேறு வழியில்லாத நிலையில் கடைசியாகப் பயன்படுத்தும் மனமுதிர்ச்சி வேண்டும். மேலை நாடுகளைப் போல் நம் நாட்டில் குடும்பங்களை அழித்துக் கொண்டு மன அமைதியின்மையையும் உதிரித் தன்மையையும் விலைக்கு வாங்கக் கூடாது.

 

மேலை நாட்டு ஆண்களையும் பெண்களையும் பின்பற்றி நம் நாட்டு இளைஞர்கள் அரை குறை ஆடை உடுத்த வேண்டியதில்லை. ஆண்கள் “பர்மிடாஸ்“ என்று முழங்காலுக்கு மேல் கால்சட்டை அணிந்து கொண்டு வீதிகளில் செல்வது நாகரிகக் குறைவானது, கண்ணியக் குறைவானது. அதே போல் பெண்கள் மார்பகப் பிளவு தெரிவது போலும் பாதி உடல் தெரிவது போலும் இரவிக்கை அணிந்து செல்வதும் கண்ணியக் குறைவானது. ஆண்களும் பெண்களும் முழுக்கால் சட்டை அணிந்து கொள்வதோ, பெண்கள் சுடிதார் அணிந்து கொள்வதோ தவறன்று.

 

பிறர், குறிப்பாக எதிர்ப்பாலினர் தம்மைப் பொருட்படுத்தி நோக்கும்படி தாம் அழகாக ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது சராசரி ஆண்களின் மற்றும் பெண்களின் உளவியலாகும். அது உறுப்புக் கவர்ச்சி காட்டுவதாக மிகைபடக் கூடாது.

 

மனித மூளையும் மனமும் எண்ணங்கள் அற்ற வெற்றிடமாக ஒரு நொடி கூட இருப்பதில்லை. ஏதாவது எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும். அந்த எண்ணங்கள் பிறர்க்குத் துன்பம் தராததாக, நல்ல பண்பு சார்ந்ததாக, உயர்ந்த இலட்சியம் சார்ந்ததாக இருந்தால் திருட்டு, கொள்ளை, பாலியல் வன்முறை போன்றவை அதிகம் நடக்காது.
சனநாயகக் காலத்தில் சமூகத்தை நல்வழிப்படுத்தும் எண்ணங்கள் சிறந்த அரசியல் இலட்சியங்கள் வழியாகவே வருகின்றன. அரசியல் தலைமைகளிலிருந்து வரும் சமூக மேம்பாட்டுக் கருத்துகள் பெரும் மக்கள் திரளை எளிதில் கவ்வுகின்றன. இப்போது உயர்ந்த இலட்சியமில்லாத அரசியல், ஒட்டுண்ணி முதலாளிய அரசியலாகச் சீரழிந்துள்ளது.

இவ்வரசியல் சமூகச் சீரழிவுகள் அனைத்திற்கும் முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தேர்தல் சீரழிவு அரசியல் சமூக அறத்தை, மனித மதிப்பீட்டைச் சீர்குலைத்துச் சிதைத்து விட்டது. தில்லிப் பாலியல் வன்முறைக்காக தேர்தல் கட்சிகள் விடும் கண்ணீர் முதலைக் கண்ணீர். அக்கட்சிகளில் பாலியல் குற்றமிழைத்தவர்கள் எத்தனை பேர் வேட்பாளர்களாக, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆனார்கள் என்பது தேர்தல் ஆணையப் புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழர் அறத்தின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்படும் தமிழ்த் தேசிய இலட்சிய அரசியல், தமிழ் மக்களிடம் ஆணாதிக்கத்தை நீக்கி பெண்களின் உரிமையை நிலைநாட்டி உண்மையான சமத்துவ சமூகத்தை உருவாக்கும் வல்லமை படைத்தது.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22920:2013-02-11-02-06-04&catid=1560:12013&Itemid=807

  • தொடங்கியவர்

பாலியல் குற்றத்திற்காக 59 ஆண்டுகள் சிறைத்தண்டனை

 

அமெரிக்காவில், இந்தியாவைச் சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், பாலியல் குற்றத்திற்காக 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் ஜான், 1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற பேஷன் டிசைனராக இருந்தவர். பிரபல நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவரான ஆனந்த் ஜான் மீது, 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் சுமத்தப்பட்டது.

 

 

anand-john.png

 

பேஷன் உலகில் மாடலாக வலம் வருவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தங்களை பலவந்தப்படுத்தியதாக ஜான் மீது 7 பெண்கள் புகார் தெரிவித்தனர். இவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜான் மீது 49 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றங்களின் பேரில், California சிறையில் 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ஜான் மீது, மான்ஹாட்டன் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது.

 

நேற்று நடந்த விசாரணையின்போது தன் மீதான குற்றங்களில் ஒன்றை ஆனந்த் ஜான் ஓப்புக்கொண்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஆனந்த் ஜான் கலிபோர்னியாவில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

 

ஆனந்த் ஜானுக்கு ஏற்கனவே 59 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள நிலையில், டெக்சஸ், நியூயார்க்கிலும் அவர் மீதான குற்றங்களின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

 

http://puthiyathalaimurai.tv/india-born-fashion-designer-anand-jon-pleads-guilty-to-sex-charge

  • 1 month later...
  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.