Jump to content

மரணச்சிரிப்பு... -------------------------


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


மும்பையில் இருந்த காலத்தில் சிவாஜி பார்க் கடற்கரைக்கு நாயுடன் ஜாக்கிங் செல்வது என் வழக்கம். அங்குத் தான் அந்த பையாஜி அறிமுகம். பொதுவாக உ.பி., பிஹார் உள்ளிட்ட வட இந்தியர்களைப் பையாஜி என்று அழைப்பது ஒரு வழக்கம். 

அவர் ஒரு பானிபூரி வியாபாரி. கடற்கரையில் கடை போட்டிருந்தார். கடை என்றால் நீங்கள் நினைப்பதுபோல் அல்ல.. ஒரு நீளமான கூடை. அதன் மேல் ஒரு பெட்டி வைத்து உள்ளுக்குள் பானிப்பூரி ஐட்டங்கள் இருக்கும். வீடு திரும்பும் போது கடையை முதுகில் கட்டி கொண்டுவந்துவிடுவார். அவ்வளவு தான் அந்தக் கடை. 

சிலமாதங்களாக அவர் கடை போடும் இடம் வெறுமையாக இருந்தது. ``ஊருக்கு போய்ருப்பார் போல..’’ என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் பையாஜியை தெரிந்த இன்னொரு நண்பரை பார்த்தபோது விசாரித்தேன். ``எனக்கும் தெரியாது.. ஆனா அவர் வீடு இருக்கும் பகுதி தெரியும்.. வேணா போய்ப் பார்ப்போம்’’ என்றார். 

அதன்படி மறுநாள் நானும் நண்பரும் மாலை நேரத்தில் சென்றோம். தாதரை ஒட்டிய குடிசைப்பகுதி அது. பானிபூரிக்காரரின் வீடு எது என்ற விசாரித்தபோதே சிலர் ஏற்ற இறக்கமாகப் பார்த்துவிட்டு வழி சொன்னார்கள். 

சந்து சந்தாக நுழைந்து அந்த வீட்டை அடைந்தோம். தகரம் மற்றும் ப்ளாஸ்டிக் காகிதத்தால் உருவான ஒரு சின்ன அறை. கதவை தட்டியதும் எலும்பும் தோலுமாக ஒரு பெண்மணி எட்டிப்பார்த்தார். நாங்கள் புதிய முகம் என்றதும் சந்தேகச் சுருக்கம் நெற்றியில். கதவை முழுமையாகத் திறக்காமல் தலையை மட்டும் நீட்டியவாறு நின்றார். 

``பையாஜி ஹை க்யா’’ (இருக்காரா..) என்று விசாரிக்க.. 
``பார் ஹெயா..’’ (வெளியே போய்ருக்கார்) என்று மறுத்தார். 

எங்களின் பெயரை சொல்லிவிட்டு.. ``வந்தோம்னு சொல்லுங்க’’ என்று
கூறியவாறு திரும்பி செல்ல எத்தனித்தேன்.. அப்போது வீட்டுக்குள்ளிருந்து இருமல் சத்தமும்.. தொடர்ந்து எங்களை உள்ளே கூப்பிடச்சொல்லி மனைவியிடம் கூறும் பையாஜியின் குரலும் கேட்டது. 

எனக்குக் குழப்பம்.. கணவனை வீட்டுக்குள் வைத்துக்கொண்டே ஏன் இல்லை என்கிறார்.. ஒருவேளை கடன் வசூலிக்க வந்தவர்கள் என்று நினைத்திருப்பர் போல என்று நினைத்துக் கொண்டு சிரித்தவாறே உள்ளே நுழைந்தேன். 

ஆனால் உள்ளே நான் கண்ட காட்சி என்னை ஆட்டிவிட்டது. ஒரு ப்ளாஸ்டிக் சாக்கில் பையாஜி எலும்புக்கூடாகக் கிடத்தப்பட்டிருந்தார். அவரின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்து சளி வடிந்து கொண்டிருந்தது. கண்ணு குழிக்குள் இருந்து எட்டிப்பார்த்தது. கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டப்பட்டிருந்தது. சாக்கின் ஓரங்களில் சிறுநீர் வடிந்து நின்றது. அந்த அறை முழுக்க ஒரு வகையான கொடூர சாவு வீச்சம் அடித்துக் கொண்டிருந்தது. எல்லாம் புரிந்ததுபோனது எனக்கு.. 

``என்ன பையாஜி.. இப்படி..’’ என்று குரல் கம்ம கேட்டேன்.. 
இதழோரத்தில்ஒரு மரணச்சிரிப்பு எட்டிப்பார்த்தது பையாஜியிடம். நடுங்கும் கைகளை இடுப்புக்கு கீழே கொண்டு போனார்.. சுருங்கிப்போய்க் கிடந்த தனது ஆணுறுப்பை இழுத்துக் காட்டி ``எல்லாம் இது பண்ணுன வேலை பாபு..’’ என்றார் பலகீனமான குரலில்.. 

பின்னாடி திரும்பி பார்த்தேன் அவரது மனைவி கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்தார். அவரின் சேலையைப் பிடித்தவாறு இரண்டு சிறுமிகளும் ஒரு மூன்று வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தார்கள். பையாஜியின் மனைவியின் எலும்புருகிய தோற்றமே சொன்னது.. பையாஜியிடமிருந்து எய்ட்ஸ் அவருக்கும் பரவியிருக்கிறது என்று. 

கனத்த இதயத்துடன் வெளியே வந்தேன். பையாஜியின் குழந்தைகளைக் கூட்டிச்சென்று பிஸ்கெட் வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். 

மறுநாள் தகவல் கிடைத்தது.. நாங்கள் பார்த்துவிட்டு வந்த அதே இரவு பையாஜி இறந்து போனார் என்று. 

ஒரு எய்ட்ஸ் நோயாளியின் கடைசிச் சில நிமிடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன் என்பது மறக்க முடியாதது. ஒரு சொட்டு சிறு நீர் வெளியேற்ற பையாஜி துடித்த துடிப்பு இன்னும் ஞாபகத்திலிருக்கிறது..

அவருக்குப்பின் அவரது மனைவியும் இறந்திருப்பார். அந்தக் குழந்தைகள் என்னவாகியிருக்கும்.. யோசித்துப்பார்க்கிறேன்.. பெரும் துன்பமாக இருக்கிறது. 

பாடங்களை யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.. இந்தப் பையாஜியும் எனக்கு ஆசிரியர் தான்.. 

சபலங்கள் எட்டிப்பார்க்கும் தருணங்களில் ஒருவேளை இனி உங்கள் ஞாபக மின்னலிலும் பையாஜியின் மரணச்சிரிப்பு எட்டிப்பார்க்கக்கூடும்.. அப்போது அவர் உங்களுக்கும் ஆசிரியராவார்..

480554_4179452050925_2122438571_n.jpg

thanks Cartoonist Bala

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு. நன்றி சுபேஷ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு சுபேஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு, சுபேஸ்!

 

மரணத்தைப் பற்றிய எனது பார்வை கொஞ்சம் வித்தியாசமானது! :o

 

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மரணம் கூட ஒரு விடுதலையே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.