Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவை பல்கலைக்கழக மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சிறிலங்கா துணைவேந்தர்

Featured Replies

கோவை பல்கலைக்கழக மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சிறிலங்கா துணைவேந்தர் [ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 09:56 GMT ] [ அ.எழிலரசன் ]

karunya-university.jpgதமிழ்நாட்டில், கோவையில் நடந்த அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட இரண்டு பேர், தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பினால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பங்கேற்ற ஊவாவெல்லச பல்கலைக்கழக துணைவேந்தர் ரஞ்சித் பிறேமலால் டி சில்வா மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையைச் சேர்ந்த சந்திரானி எதிரிசூரிய ஆகியோரே தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 

நாசாவின் துணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வாரகால அனைத்துலக கருத்தரங்கு கடந்த வியாழக்கிழமை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. 

இதில் சிறிலங்காவைச் சேர்ந்த இருவர் பங்கேற்பதை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உறுப்பினர்கள், நேற்று பல்கலைக்கழக வாயிலில் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர். 

சிறிலங்காவைச் சேர்ந்த இருவரும் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

இதையடுத்து, காருண்யா பல்கலைக்கழகம் சிறிலங்காவைச் சேர்ந்த இருவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. 

இதையடுத்து அவர்கள் உடனடியாக கேரளா வழியாக கொழும்பு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

http://www.puthinappalakai.com/view.php?20130112107583

 கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பங்கேற்ற ஊவாவெல்லச பல்கலைக்கழக துணைவேந்தர் ரஞ்சித் பிறேமலால் டி சில்வா மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையைச் சேர்ந்த சந்திரானி எதிரிசூரிய ஆகியோரே தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
 

 

சிங்கள இனவாத இனவழிப்பு அரசின் முகவர்களை அகற்றிய உறவுகளுக்கு நன்றிகள்.

சிங்களக் கயவர்களை அகற்றிய தமிழக உறவுகளுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே, தமிழ் மாணவர்கள் சிறிலங்காப் பல்கலைக் கழகங்களுக்கு போவதையும், சிங்கள பேராசிரியர்களிடம் படிப்பதையும் நிப்பாட்டச் சொன்னால் நல்லது :lol:

இவ்வாறான பேராசியர்கள் மற்றும் சிங்கள அரசின் பிரமுகர்கள் ஏன் புறக்கணிப்பட வேண்டும்?

 

- போர் முடிந்தும் பலவேறு காரணங்களால் கிட்டத்தட்ட அறுபது வீதமான தமிழர்கள் பாடசாலையை கைவிட்டுள்ளனர்
- வன்னி பாடசாலைகளில் இராணுவம் கல்வி கற்பிக்க முனைந்தது
- யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அநியாயமாக கைது செய்து வைத்துள்ளமை
- நடைமுறையில் உள்ள தரப்படுத்தல்
- கடத்தப்பட்டு கொல்லப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் / துணைவேந்தர்

ஈழத்தமிழர்களுக்கு  ஒரு அரசியல்  தீர்வு கொடுக்கப்படும் வரை சிங்கள் காட்டு மிராண்டிகளை  திரிய விடக்கூடாது.

 

சிங்களனில் படித்தவன் தான் தமிழனுக்கு எமன். தீர்வுக்கு தடையாய் இருப்பவர்கள்  அவர்கள் தான்.. தமிழர்களை  அடிமையாய் நடாத்தலாம் என இன்றுவரை நினைப்பவன் படித்த சிங்கள கூட்டம் தான். பாமர சிங்களன் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாத இனவழிப்பு அரசின் முகவர்களை அகற்றிய உறவுகளுக்கு நன்றிகள்.


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.