Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் வீசும் சிறிலங்காவுக்கு எதிரான அலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

canada.jpg

தலைமைநீதியரசரை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவிநீக்கம் செய்த விவகாரத்தினால், கொமன்வெல்த் மாநாட்டை கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் புறக்கணிக்கும் விவகாரம் சூடுபிடித்துள்ளது. 

சிறிலங்காவில் மனிதஉரிமைகள் நிலை முன்னேற்றமடையாது போனால், இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக, கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இந்தநிலையில், சிறிலங்காவின் தலைமைநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவி நீக்கம் செய்துள்ளது அனைத்துலக அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில், கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் அரசியலமைப்பையும், நீதித்துறைச் சுதந்திரத்தையும் மதித்து நடக்குமாறும், இவற்றுக்கு எதிரான போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். 

கொமன்வெல்த் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்துக்கு கனடா இந்த விவகாரத்தை கொண்டு செல்லும் என்றும் கனேடியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையே, பிரித்தானியாவுக்கான கனேடிய உயர்ஆணையர் கோடர் காம்பெல், கடந்தவாரம் கொமன்வெல்த் செயலரைச் சந்தித்து, அடுத்த குழுக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரத்தைச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றிக் றோத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை கனடாவில் உள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்த கனேடிய அதிகாரிகள், இதுதொடர்பான கவலையை நேரில் வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கொழும்பிலுள்ள சிறிலங்கா அரச அதிகாரிகளுடனும் கனேடிய அதிகாரிகள் பேசவுள்ளதாகவும் தெரிவித்த அவர், “சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்தும், நல்லிணக்கத்தின் அவசியம் குறித்தும், ஜனநாயக சூழல் இல்லாமை குறித்தும் கனடா தீவிர அக்கறை கொண்டுள்ளது. இந்த விவகாரங்களில் எமது அக்கறையை அழுத்தமாகத் தொடர்வோம்.” என்றும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரும், வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டும், கொமன்வெல்த் அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான நடவடிக்கைக் குழுவின் அவசரகூட்டத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவர் பொப்றே கேட்டுக் கொண்டுள்ளார். 

“இந்த மோசமான சூழ்நிலை குறித்துப் பதிலளிக்க, அடுத்த கூட்டம் வரை காத்திருக்க முடியாது. எனவே பிரதமர் ஹாப்பரும், வெளிவிவகார அமைச்சர் பயார்ட்டும் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

அதேவேளை, கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக, ஹாப்பர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயக கட்சியின் வெளிவிவகாரப் பிரிவைச் சேர்ந்த போல் டீவோர் தெரிவித்துள்ளார். 

நீதித்துறைச் சுதந்திரத்தின் மீதான இந்தத் தாக்குதலை கண்டிக்க கொமன்வெல்த் உறுப்புநாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130115107601

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏதோ லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. சிராணியைப் பதவி நீக்கி நீதித்துறையை ஆட்டிப் படைப்பது இவர்களுக்கு ஏன் அதிக வலியை ஏற்படுத்துகிறது? சிந்தித்துப் பார்க்க வேண்டும். :rolleyes:

 

மேற்குலகில் இவர்கள் எடுத்த பல முடிவுகள் இலங்கையின் நீதித்துறையின் தீர்ப்புகளை ஒட்டியே. நாளை அந்த நீதித்துறையே அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒன்று என்று யாராவது பிரச்சினையைக் கொண்டு வரலாம். அவ்வாறு நடந்தால் மேற்குலகின் பல கொள்கை முடிவுகள் ஆட்டம் கண்டுவிடும். :rolleyes:

 

அதனால் இவர்கள் எதிர்க்கிறார்கள். நாளை ஏதாவது பிரச்சினை வந்தால் போருக்குப் பிந்திய மகிந்தர் ஆட்சியில்தான் இலங்கை நீதித்துறை கெட்டது என்று பிரட்டிவிடுவார்கள். :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை முடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று பாலைக் குடிக்குமாப்போல எல்லோ இருக்கு இவயளின்ர கதை ...... 

மேற்குலகில் இவர்கள் எடுத்த பல முடிவுகள் இலங்கையின் நீதித்துறையின் தீர்ப்புகளை ஒட்டியே. நாளை அந்த நீதித்துறையே அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒன்று என்று யாராவது பிரச்சினையைக் கொண்டு வரலாம். அவ்வாறு நடந்தால் மேற்குலகின் பல கொள்கை முடிவுகள் ஆட்டம் கண்டுவிடும். :rolleyes:

 

பிளேக் வெளிப்படையாக பலதடவைகள் அமெரிக்கா, இலங்கை பயங்கரவாதத்தை எதிர்த்து போராட சட்டத்துறை உதவிகள் கொடுப்பதாக கூறினார். அவற்றில் சில தான் கனேடிய மாணவர்களின் கைதும். மேற்குநாடுகளில் நிராகரிக்கப்பட்ட பல அகதி கோரிக்கைகள்  இலங்கையிடம் இருந்து பெற்ற தரவுகளால் மட்டுமே. இவற்றை தெரியாமல்த்தான் நம்பினார்களா?

மேற்குலகம் நீதி விடயத்தில் கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால்  அவர்களின் சொல்லுக்கு சிங்களத்தை கீழ்ப்படிய வைக்க பலமிழந்தவர்களாக மாறி வருகிறார்கள்.

 

பொருளாதார தடை என்ற ஆயுதத்தை வைத்துள்ளார்கள். அதிலும் சிக்கல்கள் உள்ளது. சீனா முழுமையாக சிங்களத்தை ஆள தொடங்கி விடலாம். சீனா பலம் இழந்தால் மட்டுமே மேற்குலக தேவை சிங்களத்திற்கு ஏற்படும்.

பொருளாதார தடை என்ற ஆயுதத்தை வைத்துள்ளார்கள். அதிலும் சிக்கல்கள் உள்ளது. சீனா முழுமையாக சிங்களத்தை ஆள தொடங்கி விடலாம். சீனா பலம் இழந்தால் மட்டுமே மேற்குலக தேவை சிங்களத்திற்கு ஏற்படும்.

 

சீனா இலங்கையை ஆழுகின்றது என்பதில் உண்மை இல்லை...   மேலோட்டமாக பார்த்தான் அதுதான் உண்மை போலவும் இருக்கும்...  மேற்குநாடுகளில் மிக முக்கியமாக அமெரிக்காவில், இங்கிலாந்தில் சீனாவின் முதலீடுகள் அளவிட முடியாதவை...   அதே போல தான் இலங்கையிலும்....

 

இலங்கை  சீனாவை பயன் படுத்தி கொண்டு உள்ளது அதுதான் உண்மை ...  காலப்போக்கில் நிலைமைகள் மாறலாம்...   தனது பொருளாதாரத்தை கட்டி எழுப்ப என்ன செய்ய வேண்டுமோ அதை  சீனா செய்கிறது...

 

இண்றைக்கும் இலங்கையில் அரசியலில்  ஆதிக்கம் செலுத்தும்  சக்தி இந்தியா மட்டும் தான் ...   மகிந்த இயங்குவது கூட அவர்களின் வரைபுக்கு ஏற்ப்பவே...   இந்தியாவை மீறி மகிந்த ஏதும் செய்து விடவில்லை போவதும் இல்லை...

அமெரிக்க கம்பனிகள் இலங்கையில் 50 மில்லியனுக்கு ஒரு முதலீடு போடுவதற்கு நாமலுடன் சேர்ந்து அவையால் பெரிய ஆரவாரம் போடப்படுகிறது. சீனா 50 பில்லியனை போடும் சிலமன் தெரியாமல் போடுகிறது. இணைத் தலைமை நாடுகளாக யப்பான் 2.5 பில்லியனையும், நோர்வே 1.0 பில்லியனையும் EU .5 பில்லியனையும் முதலிட வந்த போது பிளேக் அந்த சமாதான முயற்சிகளிலிருந்து பிரபாகரனை விலக்கி வைத்து அமெரிக்க அரசியல் அதிகாரத்தை காட்டி அந்த முதலீடுகள் இல்லாமல் செய்தவர். இப்போ சண்டைக்கு பிறகு சின்ன சின்ன முதலீடுகளை போடுகிறார்கள். இதனால் இலங்கை அரசு வடக்கில் குடியேற்றம் செய்ய வசதிகள் செய்துகொடுக்கிறார்கள். இனி சரித்திரத்தில் நாமலையோ கிளிநொச்சியால் பிடுங்க முடியாத வேலை செய்திருக்கிறார்கள். 

 

நாம் பல உடன்படிக்கைகளை எழுதி ஏமாந்ததை சொன்ன போது பிளேக் எள்ளவும் ஏற்கவில்லை. இப்போ பங்கு சந்தை 100% மகிந்தா ஆளுகையில். நீதி 100% மகிந்தா ஆளுகையில். முதலீட்டுப் பிரச்சனைகளில் சிறிய சலசலப்பு வந்தாலும்(கட்டாயம் சிறி சிறு பிரளிகள செய்து இலங்கை போர் நிறுத்ததை குழப்பிய மாதிரியே இந்த உடன்படிக்கைகளை குழப்பும்) அப்போது இலங்கை அமெரிக்க தனியார் கம்பனிகளுக்கு 200% ..300% தண்டம் அடித்து வெளியே அனுப்பி விடும். இலங்கை ஐரோப்பிய GSP+ யை மதியாமல் நடந்த போது EUவால் எதுவும் செய்ய முடியவில்லை. தனியார் ஆலைகள் சில மூடப்பட்டன. ஆனால் அரசு சின்ன ஆட்டமும் காணவில்லை. சீனா காப்பற்றிவிட்டது.  ஆனால் இது அமெரிக்க GSP+க்கு நடக்காது என்று அமெரிக்கா கனவு காண்கிறது. இதில் அமெரிக்கா சிங்களவரின் கையில் கொடுத்த முதல் முழுவதையும் இழக்க சந்தர்ப்பம் இருக்கிறது. மேலும் தமிழருக்கு தேறுவது ஆமியை மினக்கெடுத்தாத வடமாகாண சிங்கள் குடியேற்றம் மட்டும்.

 

இந்திய கம்பனிகள் இலங்கையில் தமது வர்த்தக உடன்படிக்கைகளை இழந்த போது சர்வதேச சட்டங்களை வைத்தும் இலங்கையை எதுவும் செய்ய முடியவில்லை. சென்ற வருடம் சிவசங்கர் மேனன் எண்ணைக்குத உடன்படிக்கையை காப்பாற்ற பிரத்தியேக பயணம் வந்து இலங்கைகைக்கு பரிசுகள் கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் அதில் ஒரு முன்னேறத்தையும் இந்தியா காண முடியாமல் போனது மட்டுமால்லாமல் அத்துடன் புதிதாக  பல ஏற்றுமதிகளை இழந்துவிட்டது. இதை இளிச்ச வாய் இந்தியாவுக்குமட்டும் நடந்ததுதான் என்று தட்டிக்கழிக்க முடியாது. ஏன் எனில் இதில் EU, யப்பான் எவரும் வேறுவிதமாக செய்யவில்லை.

 

கடந்த காலங்களில் நீதி துறை வடக்கு-கிழக்கை பிரித்து வைத்து 13ம் திருத்தத்தை பலன் இல்லாததாக்கிய போது இந்தியா எதிர்ப்பை காட்டியது. அது எடுபடவில்லை. இந்தியா தான் பின்னர் வர்த்தக உடன்படிக்கைகளுகுக்காக விட்டுக்கொடுத்துவிட்டு புதிதாக 13+ கதைகளை ஆரம்பித்தது. ஆனால் இனி இந்தியாவால் இலங்கையில் எந்த வர்த்தகமும் செய்ய முடியாது. இந்த மாத வெளிநாட்டு மந்திரிகளின் கூட்டத்தில் திரும்ப பீரிசு சல்மானுக்கு பரிசுகள் கொடுத்து ஏமாற்றிவிடுவார். தேவைப்பட்டால் தலதாமாளிகை திறந்தே இருக்கிறது. ஒருதடவை பயணம் வந்து போக நோய் எல்லாம் மாறிவிடும்.

 

இதே நிலமையில் தான் அமெரிக்க இன்று திவி நெகும சட்டத்துடன் தன்னை அடையாளம் காண்கிறது. திரும்ப 13ம் திருத்தம் நீதித்துறையால் முதுகெலும்பு உடைக்கபட்டு திவி நெகும முன்வர அனுமதிக்கபட்டிருக்கிறது. திவி நெகும நடப்புக்கு வந்தவுடன், இன்று கிளிநொச்சியில் முதலிட்டிருக்கும் அமெரிக்க தனியார் முதலாளிகள் தமது கம்பனிகளை கிளிநொச்சியில் போய் பார்க்க வேண்டுமென்றாலும் பசிலின் காலின் விழுந்துதான் அனுமதி பெற வேண்டிவரும். எந்த பழுதடைந்த யந்திரம் திருத்த வேண்டுமாயினும் திருவாளர் 95% வீதத்தின் அனுசரனை இல்லாமல் நடக்காது. அப்போலோ வைத்திய சாலை கோத்தாவின் வைக்கு மாறிய மாதிரியே இந்த முதலீடுகள் பசிலினதும், நாமலினதும் கைக்கு மெல்ல மெல்ல மாறிவிடும்

 

அமெரிக்கா இதில் நன்றாக படிப்பதை தவிர அமெரிக்காவுக்கு இதில் ஒரு மாற்றீடும் இல்லை. இந்தியா திமிறியா மாதிரியே அமெரிக்காவும் திமிறினாலும், இலங்கை பிடித்துவைத்து நாணயம் மூக்கில் குத்துவதகிந்தியாவுக்கு தவிக்க முடியாமல் போனது மாதிரியே அமெரிக்காவுக்கும் தவிர்க்க முடியாமல் போகும். அமெரிக்காவின் ஆரம்பம் மிகத்தோல்விகண்ட இராஜ தந்திரியான பிளேக்கால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. அது எந்த பக்கமும் பெரிதாக போக வழி இல்லை. இலங்கைக்கு வெளியே அமெரிக்கா இன்னமும் லேம் டக்காக மாறவில்லை.(அது இலனகையில் வைத்துதான் ஆரம்பிக்க போகிறதோ தெரியாது. ஒருவேளை அமெரிக்கா இந்தியா படித்த பாடங்களை படித்து வர வடமாகாணத்தில் தமிழர் இல்லாமலே போய்விடுவார்கள்.)

 

இலங்கையில் நன்றாகத்தோல்வி கண்டபின்னர் இந்தியா UNHRC இல் இலங்கையை புகழ்ந்து தீர்மானம் நிறைவேற்றாமல் ஒருதடவை எதிர்த்து வாக்களிக்க முன்வந்தது. அந்த நாள் அமெரிக்காவுக்கும் வரும் அன்று அமெரிக்கா UNHRCல் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை புகழ்ந்து பிரேரணைகள் நிறைவேற்றாமல், இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி பிரேரணைகள் நிறை வேற்றும். அது காலம் கடந்ததாகமட்டுமே இருக்க போகிறது.

 

பேச்சு வார்த்தைகளில் இலங்கை அரசு இனி ஒன்றும் தராது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை எப்படி முடித்து வைத்து எப்படி சர்வதேச நாடுகளை பொறுப்பு எடுக்க வைக்கலாம் என்பது அறியாத விடையம். எதற்கு அமெரிக்காவுக்கும் இலங்கையில் தனது முதலீடுகள் கையில் கடிக்க ஆரம்பிக்கும் வரை இந்தியா மாதிரியே அமெரிக்காவும் நாம் சொல்லப் போறதை கேட்கிற நிலையில் இல்லை.

Edited by மல்லையூரான்

2009 க்கு பின்னரான இலங்கை முதலீட்டில் சீனா இந்தியாவை விட அதிகமாக முதலீடு செய்துள்ளது - அண்ணளவாக ஆறு பில்லியன்கள்.
இதனால் சீனாவும் மகிந்த குடும்பமும் இலாபம் அடைந்துள்ளன.

 

 

இந்தியாவிற்கு உறுதி அளிக்கப்பட்ட காலிமுகத்திடல் நிலம் - சீனாவிற்கு தரப்பட்டது
இந்திய இறக்குமதிகளை சிங்களம் கட்டுப்படுத்துகின்றது.
இந்திய முதலீடுகளை ஊக்குவிற்க மறுக்கின்றது.
இருந்தும் இந்தியா இலங்கையை கைவிட முடியாத நிலை.


 

இதுதான் சிங்களத்தின் பலம், இந்தியாவின் பலவீனம், அரசியல் கொள்கை பலவீனம்.

இலங்கையுடன் தொடர்பு வைக்க கிருஸ்ணா, நாரயணன், சிவசங்கர் மேனன், அக்காசி, பிளேக், நம்பியார், சொலெயும், பாங்கி மூன் மாதிரி ஆண்களை அனுமதிக்காமல் மேரி கொலின், பிரான்சிஸ் கரிசன், சுஸ்மா, மிசேல், நூலண்ட், சுசான், நவநீதம் பிள்ளை போன்றவர்களை வைத்திருந்தால் ஒழுங்காக எதாவது நடக்கும்.

இந்தியா தனது சொந்த நாட்டிலேயே முதலீடுகளை செய்ய முடியவில்லை ஆதலால் பல்தேசிய நிறுவனங்களுக்கு திறந்து விட வேண்டிய நிலையிலேயே உள்ளது...  அதன் உச்ச கட்டமே சில்லறை வாணிபத்தில் அன்னிய முதலீடு... !  

 

அன்னிய முதலீட்டாளர்களை நட்டமடையாமல் செய்ய இருக்க மக்களை தயார்படுத்தும் நடவடிக்கையாக இதுவரை இந்திய அரசு வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு  மானியமாக கொடுத்துவந்த பொருட்கள் எல்லாம்  நிறுத்தப்பட்டு பணமாக வளங்கப்பட இருக்கிறது...  

 

இதுதான் இந்தியாவில் உள்வீட்டு நிலமை...   ஆனால் சீனாவில் நிலைமை அன்னிய முதலீடுகளுக்கு அவசியமே இல்லை...

 

நிலமை இப்படி இருக்க இந்தியாவுக்கு இலங்கையில் இடங்கள் கொடுக்கப்பட்டு இருக்குமானால் அவற்றால் பயன் பெற இந்தியாவாலோ அல்லது இலங்கையாலோ முடியாது...    இது இந்திய அரசியல் பொருளாதார வல்லுணர்களுக்கு தெரியாததும் அல்ல...

 

 

Edited by தயா

சீனா இலங்கையை ஆழுகின்றது என்பதில் உண்மை இல்லை...   மேலோட்டமாக பார்த்தான் அதுதான் உண்மை போலவும் இருக்கும்...  மேற்குநாடுகளில் மிக முக்கியமாக அமெரிக்காவில், இங்கிலாந்தில் சீனாவின் முதலீடுகள் அளவிட முடியாதவை...   அதே போல தான் இலங்கையிலும்....

 

இலங்கை  சீனாவை பயன் படுத்தி கொண்டு உள்ளது அதுதான் உண்மை ...  காலப்போக்கில் நிலைமைகள் மாறலாம்...   தனது பொருளாதாரத்தை கட்டி எழுப்ப என்ன செய்ய வேண்டுமோ அதை  சீனா செய்கிறது...

 

இண்றைக்கும் இலங்கையில் அரசியலில்  ஆதிக்கம் செலுத்தும்  சக்தி இந்தியா மட்டும் தான் ...   மகிந்த இயங்குவது கூட அவர்களின் வரைபுக்கு ஏற்ப்பவே...   இந்தியாவை மீறி மகிந்த ஏதும் செய்து விடவில்லை போவதும் இல்லை...

இது முற்று முழுதான உண்மை .சீனாவின் பிடியில் இலங்கை அதனால் தான்  மேற்குலகம் இலங்கை மீது கண் வைக்கின்றது என்பதெலாம் வெறும் கற்பனை .அதை விட இந்தியாவை சுற்றி சீனாவின் பொறி என்றெல்லாம் அவனவன் எழுதிதள்ளுகின்றான் .உலகவல்லரசுகள் ,வல்லரசாக எத்தனிக்கும் நாடுகள் எல்லாவற்றிற்கும் இடையில் தம் நலம்(அரசியல் ,பொருளாதார )  சார்ந்து உளவியல் யுத்தம் ஒன்று நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.அதில் மற்ற நாடுகள் சிக்குண்டு உத்தரிப்பதும் தவிர்க்க முடியாததாகின்றது .

இவைகளுக்கிடையில் எமது அரசியலை விவேகமாக செய்வதுதான்  சாணக்கியம் .

(கனடா அரசியலில் பிரித்தானிய முறையையும் பொருளாதாரத்தில் அமெரிக்க முறையையும் பின் பற்றும் நாடு என்று கூறலாம்.)

இதுதான் இந்தியாவில் உள்வீட்டு நிலமை...   ஆனால் சீனாவில் நிலைமை அன்னிய முதலீடுகளுக்கு அவசியமே இல்லை...

 

இரண்டும் வேறு வேறு பொருளாதார அமைப்புக்கள். உண்மையை எழுத பல திரிகள் வேண்டும்.

 

சீனாவின் அரச சார் கம்பனிகள்  இலங்கையில் ரோட்டு போட பாலம் கட்டத்தான் தாயார். ஆனால் இந்திய அமெரிக்க கம்பனிகள் வியாபாரம் செய்ய விரும்புகின்றன.

 

அதாவது சீன மக்கள் இலங்கைக்கு வேலை தேடி வருகிறார்கள். இலங்கையில் வேலை முடிய எல்லோரும் வீட்டுக்கு போக வேண்டும். அவர்கள் சீனா திரும்பி அங்கே என்ன செய்வார்கள் என்பது கேள்வி. இதில் இலங்கை சுரண்டப்படுகிறது. ஆனால் அமெரிக்க இந்திய அரசுகள் தமது மக்களுக்கு தமது நாட்டில் வேலை தேடி நிரந்தர முன்னேற்றதை காண முயல்கின்றன. இந்த அன்னிய முதலீட்டால் இலங்கையும் முன்னேறும்.

 

இந்தியா சிலவற்றில் முன்னேற்றம். அதை இலங்கையுடன் வியாபாரம் செய்ய முயலும். அடிப்படை பொருளாதார தத்துவங்கள், தச்சு தொழிலாளி கதிரையைச் செய்து களிமண் வேலையாளியிடம் கொடுத்து பாத்திரங்கள் வாங்குவான். இதில் யார் சிறந்தவர்கள் என்பது செய்யும் பண்டத்தை பொறுத்து அல்ல. எல்ல பண்டங்களுக்கும் தேவை இருக்கலாம். திறமை,  தொழிலாளி அந்த பண்டத்தில் காட்டும் வண்மையிலேயே இருக்கிறது. நமக்கு தெற்காசிய நாடு என்பதால் இந்தியாவில் செய்யப்படும் பொருள்களில் தேவை இருக்கிறது.

 

மேலும் இலங்கைக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய அந்த பொருள்களில் தனித்திறமை இருக்க வேண்டியதில்லை.

 

ஐந்தாம் வகுப்பு வாத்தியார் தான் B.Sc. படிக்கும் போது சிறுவர்களுக்கு படிப்பிக்கிறார். B.Sc  முடிய அவர் O/L , A/L இற்கு பாடம் சொல்வார் அந்த நேரம் தனது PhD ஆராச்சி கட்டுரைகளில் ஓய்வு நேரத்தை போக்கலாம்.

இலங்கையில் சீனர்கள் ஆகவே சீனாவின் எதிரி இந்தியா தமிழருக்கு உதவ வேண்டும் என்னும் இந்திராகாந்தி கால சமன் பாடுகள் இனிமேல் சரி வரப்போவதில்லை...

 

புலிகள் தமிழீழம் பிரகடனப்படுத்தி இருந்தால் சீனா அதை அங்கீகரிக்க முன்வந்து கூட இருக்கலாம் ஆனால்  இந்தியா இலங்கையில் தமிழர்கள் தலையெடுப்பதை விரும்பவில்லை, விரும்பப்போவதும் இல்லை என்பது மட்டும் தான் உண்மை... 

 

சீனா ஒருகாலத்தில் தங்களின் கைகளில் இறுக்கமாக வைத்து இருந்த  பர்மா, வடகொரியா,  வியட்நாமில் எல்லாம் மேற்குலகை நுளைய அனுமதித்து விட்டது...  கரணமாக பல காரணிகளை  சொல்ல முடியும்...   மிக முக்கியமாக மேற்குலக உட்பட பல நாடுகளில்  பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை சீனா செய்ய தொடங்கிய பின் தனக்கான நட்பு நாடுகள் சீனாவுக்கு தேவை இல்லை...

 

கிட்டத்தட்ட இந்த நிலையை யூதர்களோடு ஒப்பிட முடியும்... 

சீனா பல  பில்லியன்களை ஆபிரிக்க கண்டத்தில் முதலீடு செய்து  வருகின்றது.

கடாபியை அகற்றி ஆறு பில்லியன்கள்  முதலீடு நாலாயிரம் சீனர்கள் அகற்றப்பட்டனர்.

மன்மோகன் சிங்கும் போட்டியாக நாலு பில்லியன்களை முதலிட்டார்.

இன்று மாலியில் மேற்குலகம்.

 

ஆசியாவிலும் பல நாடுகளில் மேற்குலகம் 'கண்' வைத்துள்ளது என நம்பித்தான் ஆகவேண்டும்.

இலங்கையில் சீனர்கள் ஆகவே சீனாவின் எதிரி இந்தியா தமிழருக்கு உதவ வேண்டும் என்னும் இந்திராகாந்தி கால சமன் பாடுகள் இனிமேல் சரி வரப்போவதில்லை...

அப்படி ஒரு அரசியல் சமன்பாடு உண்மையில் இருந்ததா தெரியாது. இது கிழக்கு பாகிஸ்த்தானை பிரித்தது போல இந்திரா காந்தி இலங்கையை பிரிக்க முயற்சிகள் எடுத்தா என்ற அனுமானத்தை வைத்து சொல்வதாயின், இந்தியா வங்காளத்திற்கு உண்மையாக அரசியல், பொருளாதார உதவிகள் செய்ய அங்கு போகவில்லை. வங்காளதேசத்திற்கும் நமக்குள்ளது மாதிரியே இந்தியா தம்மை ஆக்கிரமிக்கலாம் என்ற பயம் இருக்கு. அதனால் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்தாலும் அவர்கள் பாகிஸ்த்தான் மாதிரியே சீனாவுடன் கூட்டு. இது தமிழ் ஈழத்துக்கு பொருந்துமா என்று அனுமானிப்பது கடினம். எவ்வளவு கோபம்,பயம் இருந்தாலும், இந்தியாவை விட்டுவிட்டு நாம் சீனாவுடன் சேருவமா என்பது சொல்ல முடியாது.

 

இலங்கையுடனான சீனாவின் 1970-1980 களின் கொள்கைக்கும் 2008 க்கு பின்னரான கொள்கைகளுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. அல்லது 2009 முன்னர் இலங்கையில் சீனாவின் தலையீடு இருக்கவில்ல. அன்று இரண்டு நாடுகளுக்குமிடையில் வெறும் நட்பு நிலமைதான் இருந்தது. இன்று சீனா இலங்கை மீது ஒரு போட்டி ஆரம்பித்து வைத்திருக்கிறது. அண்மையில், காலியில் நடந்த வெளிநாடுகளின் பாதுகாப்பு கூட்டத்தில் கோபத்தபய கூறியதின் சாரம் "சீனா எங்களுக்கு நிபந்தனைகள் அற்ற உதவி செய்வதால் நாங்கள் சீனாவுடன் இருக்கிறோம்" என்பதாகும்.  மறை முகைமாக அமெரிக்கா, இந்தியாவுடன் இல்லை என்பதாகும்.

 

புலிகள் தமிழீழம் பிரகடனப்படுத்தி இருந்தால் சீனா அதை அங்கீகரிக்க முன்வந்து கூட இருக்கலாம் ஆனால்  இந்தியா இலங்கையில் தமிழர்கள் தலையெடுப்பதை விரும்பவில்லை, விரும்பப்போவதும் இல்லை என்பது மட்டும் தான் உண்மை... 

1.தனது கண்ணக்குகளில் அல்லாமல் இலங்கை பிரிவதை இந்தியா விரும்பவில்லை.(பிரிவதை முழு மனத்துடன் தடுக்கவில்லை. தமிழ் ஈழத்தை பிடிப்பதுதான் ஆர்வம்) 2.புலிகள் அதிகாரத்தை வைத்திருப்பதையோ அல்லது குறைந்த பட்சம் உயிர்வாழதோ தன்னும் பிடிக்கவில்லை. 3. கூட்டமைப்பு போல தீர்வை நோக்கி தெளிவான பயணத்தை ஆரம்பிக்கும் ஜனநாக அமைப்பை பிடிக்காது. 4.வரதர் தனி நாடு பிரகடினப்படுத்திய பின்னரும் இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். எனவே நாடு பிரிகிறதோ இல்லையோ தன் கணக்கைதான் இந்தியா சரியாக வைத்திருக்கிறது. இதில் குறுகிய நோக்கம் கொண்ட, தமிழர் எதிர்ப்பு, மலையாளிகள் இடையில் வருவதால், இந்தியாவின் தனி நோக்கு தமிழர் எதிர்ப்பு என்பது போலப்படுகிறது. ஆனால் முழுமையாக அப்படி இல்லை.தமிழ் ஈழத்தை கையடக்குவதுதான் ஆசை.

 

இந்தியாவின் கொள்கையை தனிபட்ட ஆட்சியில் இருக்கும் தலைமையின் தன்னலங்களில் இருந்து பிரிப்பது கடினம்.

சீனா ஒருகாலத்தில் தங்களின் கைகளில் இறுக்கமாக வைத்து இருந்த  பர்மா, வடகொரியா,  வியட்நாமில் எல்லாம் மேற்குலகை நுளைய அனுமதித்து விட்டது...  கரணமாக பல காரணிகளை  சொல்ல முடியும்...   மிக முக்கியமாக மேற்குலக உட்பட பல நாடுகளில்  பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை சீனா செய்ய தொடங்கிய பின் தனக்கான நட்பு நாடுகள் சீனாவுக்கு தேவை இல்லை...

 

சீனாவுக்கு எல்ல நாடுகளும் வேண்டும். சீனா எற்றுமதிப் பொருளாதார நாடு. சீனாவால் மற்றைய நாடுகளில் கம்பனிகள் அமைப்பது கஸ்டம். இதனால் எங்குமே முதலிட்டு இல்லை. செட்டிமாதிரி கடன் கொடுத்துவிட்டு கண்ணுக்குள் எண்ணை போட்டுக்கொண்டிருக்கிறது. உலகின் எந்த நாட்டிலும் டோயோட்டா மாதிரி ஒரு கம்பனியை சீனா முதலிட்டு  திறந்தில்லை.

 

அவர்களின் தொழிலாளி Costயை  வெளிநாடுகளில் கணக்கிடுவது கஸ்டம். எனவே சீனத்தொழிலாளிகளையே கொண்டு போக வேண்டும். இது நாட்டை முன்னேற்றும் மேற்கு நாடுகளுக்கு சரிவராது.  ஆனால் கமிசன் வாங்கும் தரம் கெட்ட மூன்றாம் நாடுகள் கமிசனை வாங்கிக் கொண்டு தொழிலை சீன தொழிலாளிகளுக்கு வேலை கொடுக்கிறார்கள்.  (ரிசானா எச்சில் சோற்றுக்கு அலந்து  சவுதியில் தலை துண்டிக்கபடும் போது சீனத் தொழிலாளிகள் பல திருட்டுக்களுடன் இலங்கையில் செழிக்கிறார்கள்)  சீனாவின் அரச தொலை தொடர்பு கம்பனி வேவு பார்க்க மேற்கு நாடுகளில் முயல்கிறது.  இதனால் சீன அரசு மேற்குநாடுகளில் அந்த கமபனிக்கு தொழில் சாலைகள் அமைக்க விருப்பம் காட்டுகிறது. ஆனால் மேற்கு நாடுகள் சட்டங்கள் போட்டு தடுத்துவிட்டார்கள்.

 

பழைய ஒப்பந்தங்களின் பாலம், ரோட்டுக்கள் போட்டு முடியவும், கமிசன் வாங்க புதிய முன்னெடுப்புக்கள் இல்லாமல் போனவுடன் உறவு முடிவடைந்துவிடும். பொருளாதாரமானது, யப்பான்-அமெரிக்கா, கனடா-அமெரிக்கா மத்திரி ஒன்றில் ஒன்றுதங்கத்தக்கதாக பின்னப்படுவதில்லை. சீனாவுடனான ஒப்பந்தங்களின் படி ஒருநாடு மற்றைய நாட்டை சுரண்டுகிறது. இரண்டாவது நாடு தன் மக்களை கொள்ளை அடிக்கிறது.

 

கிட்டத்தட்ட இந்த நிலையை யூதர்களோடு ஒப்பிட முடியும்... 

( :rolleyes: சரியாக விளங்கவில்லை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.