Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி!
ஜன 16, 2013
 
கே.பியால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் விசுவநாதன் உருத்திரகுமாரனின் சகாவான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ethirveerasingham1.jpg

1952ஆம், 1956ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 1959ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை அணியின் தடகள வீரராகக் கலந்து கொண்ட எதிர்வீரசிங்கம் பின்னர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தமிழ் மக்களிடையே வெளிப்பாட்டார்.

கே.பியின் தலைமையில் அனைத்துலக செயலகம் இயங்கிய 1990களில் இவரையும், உருத்திரகுமாரனையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பின்கதவுத் தொடர்பாளர்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு பயன்படுத்தி வந்தது.

15.10.1998 அன்று இலண்டனில் உள்ள அனைத்துலக கற்கை மையம் ஒன்றில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களுடன் இவரும், இவரது சகா உருத்திரகுமாரனும் உரையாற்றியிருந்தனர்.

rudrakumar.jpg
2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தனது புதல்வர் அர்ஜுனுடன் வன்னிக்கு சென்ற இவர், தமிழீழ அரசியல்துறையுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதோடு, தனது மகனை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

arjun2.jpg

சிங்களப் பெண் ஒருவரை மணம்முடித்த இவரது மகன் அர்ஜுன் ஓரிரு மாதங்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய பிரமுகராக உயர்ந்ததோடு, கொழும்பில் இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இணைப்பாளராகவும், முகாமையாளராகவும் பதவி வகித்தார்.

regi.jpg

சந்திரிகா குமாரதுங்கவின் ஆலோசகர் ஹரீம் பீரிசுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த இவர், 2005ஆம் ஆண்டு கடற்கோளுக்குப் பின்னர் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன் கொழும்பு சென்ற பொழுது அவரை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக விளங்கியவரும், தற்பொழுது கே.பி கும்பலின் தலைமைச் செயலகத்தின் அரசியல் பொறுப்பாளராக விளங்குபவருமான கே.பி.ரெஜி சந்தித்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
 

arjun.jpg

அத்தோடு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு சந்திரிகா குமாரதுங்க வழங்கிய விருது ஒன்றையும் இவரே பெற்றுக் கொண்டார்.

Arjun%20Ethirveerasingham1.jpg


தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை 2006ஆம் ஆண்டு சிங்கள அரசு முடக்கிய பொழுது இவரது பொறுப்பிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கு இருந்தது.

இதன் பின்னர் இலண்டனை வந்தடைந்த இவர் வெம்பிளி பகுதியில் இயங்கிய கே.பி.ரெஜியின் அலுவலகத்தில் ஊடகத் தொடர்பாளராக பணியாற்றினார்.
arjun3.jpg

தலைமைச் செயலகம், நாடுகடந்த அரசாங்கம் போன்ற அமைப்புக்களை கே.பியுடன் இணைந்து ரெஜி உருவாக்கிய பொழுது அதற்கு இவர் உறுதுணையாக விளங்கினார்.

Arjun4.jpg
இது இவ்விதமிருக்க இவரது தந்தை எதிர்வீரசிங்கம் 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவராக சிறிது காலம் பதவி வகித்தார்.

இதன் பின்னர் உலகத் தமிழர் பேரவையிலிருந்து விலகிய இவர், கொழும்பு சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
Ethirveerasingham2.jpg

கே.பியை போன்று கடந்த சில மாதங்களாக கிளிநொச்சியில் வசித்து வந்த இவரை தற்பொழுது வடக்கு மாகாண சபையின் ஆலோசகராக மகிந்த ராஜபக்ச நியமித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் சந்திப்பு ஒன்றில் இவர் கலந்து கொண்டதை வெளிக்கொணரும் நிழற்படம் சிறீலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் போன்று காண்பித்து வன்னியில் உயர்மட்டத் தொடர்புகளைப் பேணிய இவர், நீண்ட காலமாக சிங்கள அரசின் கைக்கூலியாக இயங்கியதையே இவரது செய்கை உணர்த்தி நிற்பதை சங்கதி-24 இணையம் சுட்டிக் காட்டுகின்றது.

Arjun%20ethirveerasingham.JPG

http://www.sankathi24.com/news/26008/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதி இதனை தனக்கு ஏற்ற வகைக்கு தலைப்பிட்டுள்ளது.

 

இந்த எதிர்வீரசிங்கம் (ஆசிய விளையாட்டுப் போட்டியில்.. ஒரு பதக்கத்தை உயரம் பார்த்தலில் பெற்றதற்காக தூக்கிப் பிடிச்சு கொண்டாடின எங்கட ஆக்களுக்கு இதுவும் வரும்.. இன்னும் வரும்.)  கூட்டம் பரம்பரை பரம்பரையாக சிங்கள காலனித்துவத்திற்கு அடிமையான கூட்டம். அதனிடம் போய்.. வேறு எதனை எதிர்பார்க்க முடியும். தகாத காலத்தை கழிக்க.. தமிழ் தேசிய புலி முகம்.. இப்போ சிங்க முகம்..! பிழைக்கத் தெரிந்த தமிழ் சுழியன்கள் அவர்கள். :lol::icon_idea:

 

US-based former GTF President becomes advisor to SL colonial governor

 

[TamilNet, Wednesday, 16 January 2013, 00:16 GMT]


US-based Dr Nagalingam Ethirveerasingam, the first president of the Global Tamil Forum (GTF), accepts an advisor position to G.A. Chandrasiri, Sri Lanka’s colonial governor and retired Major General of the war crimes accused SL military. The website of SL run Northern Provincial Council on Saturday indicated that Dr Ethirveerasingam is already functioning as Advisor on Education and Sports to the SL Governor. A doctorate in Agriculture education from the Cornell University in the USA, Ethirveerasingam, now 78, is also a recognised sportsman who represented Ceylon in the Olympics of 1950s.
 

Ethir_fr.jpg
 

The International Crisis Group (ICG) in its report no 186, dated 23 February 2010 on “Sri Lankan Tamil Diaspora after the LTTE”, said that “hardliners in the GTF, such as the British Tamil Forum (BTF), have reportedly forced out the GTF president, Dr Nagalingam Ethirveerasingam, for moderating his stance on separatism” (page 14).

Rev Fr Dr S.J. Emmanuel replaced Dr Ethirveerasingam as the president of the GTF earlier in 2010.

In the post-war scenario, Dr Ethirveerasingam was interested in contesting elections in the island, informed political sources said.

He managed to find the space to work in Vanni on children and sports after the war.

Writing a comment in Groundviews website in 2008, Ethirveerasingam said:

“The Sinhala and the Tamil communities are like the right and left half of a brain. They were joined with a connective tissue, the “corpus collosum”. Mr. B and his majority blocked communication between the two brains with the Sinhala Only Act in 1956. Mrs B and her leftists performed the surgery to cut the connective tissue in 1972. It is foolish for the right-half to pronounce that there is no left half and that both are one, the right. It is best not to harm each others independent existence until such time we are creative enough to grow a new connective tissue better than the old one, to make both halves benefit equally from each other.” (ஐயோ.. முடியல்ல....................... பேசாம தமிழ் படத்துக்கு நல்ல காமடி சீனுக்கு எழுதிப் பாவிக்கலாம் :D )

Dr Ethirveerasingam in his recent comments has come out with appreciating words on TNA’s nominated parliamentarian M.A. Sumanthiran.
 

11_01_2013_SL_Gov_Meeting_Jaffna_101976_
 
[Photo courtesy: np.gov.lk]

* * *


Dr Ethirveerasingam was appointed as Advisor on Education and Sports to the SL Governor on 11 January 2013, according to a news release of the website of the Northern Province.
 

Chandrasiri_Ethir_101980_445.jpg
 
SL Governor Maj Gen (retd) Chandrasri issues appointment letter to Dr N Ethirveerasingam on 11 January 2013 [Photo courtesy: np.gov.lk]
 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமாரின் சகோதரர்கள் மாவீரராக இருக்கலாம்

அதற்கு அவருக்கு எந்த சலுகைகளும் நாம் செய்யவில்லை

ஆனால் அவரது சகா

மகிந்தவின் கூட்டாளியாக இருந்தால்

அதற்க உருத்திரகுமார்தான் பொறுப்பெடுத்தக்கொள்ளவேண்டும்.

 

வேண்டாத பெண்டாட்டி...........???? :(  :(  :(

நான்கு வயதுச் சிறுமி கொடிய மிருகங்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டது பற்றி, தமிழ் பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது பற்றி, தமிழ் அரசியல்வாதிகளை கைது செய்வதற்கான சு+ழ்ச்சிகள் நடப்பது பற்றி அலசி ஆராய்ந்து எழுத வக்கில்லாத ஒரு கூட்டம் தமிழனைப் பிரிப்பதற்காக சிங்கள இணையமொன்று எழுதிய செய்தியை விலாவாரியாக்கி பிரசுரித்து மகிழ்கிறது. இங்கே இணைக்கப்பட்ட பதிவில் இடம்பெறாத சில செய்திகளும் இந்தக் கட்டுரை(?)யின் முழுமையான வடிவத்தில் காணப்பட்டது. அதில் சுரேன் உள்ளிட்டவர்கள் மகிந்தவின் நண்பனான் மங்கள சமரவீரவைச் சந்தித்தார்களாம். மங்கள என்பவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பதை தெரியாமல் இவர்கள் எழுதினார்களா அல்லது தெரிந்து கொண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக எழுதினார்களா என்பது எழுதியவர்களுக்கும் இதனைப் தலைப்புச் செய்தியாக்கும் ஊடகங்களுக்குமே வெளிச்சம் தொடரட்டும் உங்கள் தமிழ் தேசியச் செயற்பாடுகள்.....

பட்டியல் இன்னும் நீளும் .

உருத்திரகுமாரன் எந்த சகோதரன் மாவீரர் ?.

 

 

நியானி: ஆதாரமற்ற கருத்து நீக்கம்

Edited by நியானி

இது நமது SOStamil கிளறிவிட்ட வெள்ளைப் யானைப் புரளி.

 

இவர் யாழ்ப்பணத்தில் இருக்கிறார். தொண்டுகள் செய்யவதாக காட்டிகொள்கிறார். ஆனால் நாடுகடந்த அரசாங்கத்தையும் தாம் நடத்துவதாக எங்காவது அறிக்கைவிட்டர்களா? உங்களில் யாரவது, இந்த வெள்ளையானை SOStamil யை தவிர, இலங்கையில் வசிப்பவர் ஒருவர் நாடுகடந்த அரசுக்காக தொழில்ப்படமுடியும் என்று நினைக்கிறிர்களா? அவர் இலங்கை போனதால் 2009 மேயிற்கு பின்னர் நாடுகடந்த அரசுடன் இருக்க முடியாது என்பதை நம்ப கஸ்டமா?  

இதை நம்ப கஸ்டபடுபவர்களுக்கு K.P யால் நாடுகடந்த அரசு, GTF, கூட்டமைப்பு.... எல்லாம் இயக்கப்படுகிறது என்பதை நம்ப இலகுவாகிறதா?

 

அப்படியாயின் அவர்கள் தங்களையும் K.P தான் run பண்ணுகிறாரா என்று ஒருதடவை check பண்ணிப்பார்த்தார்களா?
 
இது மகிந்தா K.P.யைவைத்து புலிகளின் பணத்தையும், இவரை வைத்து TROவின் பணத்தையும் பெறசெய்யும் முயற்சியே.

 

இதை இப்போ கொண்டுவருவதின் நோக்கம் புலிகள் பணத்தை வாங்கினார்கள்; வன்னி போராளிகளை இப்போ கவனிக்கலாமே என்ற  அதே பழையை வாதாட்டதை கொண்டுவரவே. அதுதான் நாமல் சொல்கிறாரே தான் பில்லியன் பில்லியன் டொலர் கணக்கில் கிளிநொச்சியில் போட்டிருப்பத்தாக என்று. பிறெகேன் உதவி?.

 

சென்ற தடவை புல பெயர் தமிழரருடன் அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவிட்டத்தாக புரளிகிளறுபவர்கள் பல லட்சம் பணத்தை கரியாக்கி பிரசாரம் செய்து முடிய சுரேன்,சுரேனும் உருத்திரா போன்றவர்களும் மறுத்து அறிக்கை விட்டார்கள். 

 

மகிந்தாவோடு சிராணி இல்லை. ரிசானாவின் கதை விழுந்து படுத்துவிட்டது. இப்படி யாரையாவது வாங்கிய பின்னர் அதை விளம்பரப்படுத்தி லாபம் தேட முயல்கிறார்கள். எதுக்கும் இந்த கிழவர் எந்த கட்சியில் இணைந்தால்தான் என்ன, ஆனால் மார்ச்சில் மகிந்தாவுக்கு என்ன நடக்கும் என்பதை காண்பதில்தான் எனக்கு ஆர்வம்.

 

மகிந்த முழுதாக மாட்டியிருப்பத்தாகவே படுகிறது. உருத்திரா குறுப், இமாலுவல் அடிகளார் குறுப் மட்டுமல்ல இந்த முறை சம்பந்தரும் பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதை இப்போதே யாழில் எல்லோரும் முன் வைக்க தொடங்க வேண்டும்.

 

 

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டதால் அது சம்பந்தமான கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.