Jump to content

நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை.

Recommended Posts

நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை.

(திங்கட்கிழமை, 19 யூன் 2006) (யோககுமார்)

லண்டனில் பரவலாக சிங்களப் பௌத்த பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைப் பிரச்சாரம் செய்து தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்க வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் நுளைவாயிலில் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பரவலாக லண்டனில் தமிழ்த் தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மங்கள சமரவீர மற்றும் மகிந்த றாஜக்சவின் மனைவி தலைமையிலும் இலங்கை விமானத்தில் ஒரு சிங்கள விசேட இசை நடனக் குழுவும் இன்னொரு விமானத்தில் யானைக்குட்டிகளும் அதன் பாகன்களுமாக மாபெரும் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளும் குழுவும் லண்டன் வந்து பல கோடி செலவில் தீவிர பிரசாரம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. இதனைத் தமிழ் இளைஞர்களும் சிறுவர்களும் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பறைமேளங்களையும் வேறு சில இசைக்கருவிகளினையும் பயன்படுத்தித் தமிழ்த் தேசியத்தின் பக்கம் உள்வாங்கியதுடன் சிங்களவர்களின் நிகழ்வுகளைப் பார்க்க வந்த சுமார் 25 ஆயிரம் வெள்ளை இனத்தவர்களையும் தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தின் பக்கம் திசை திருப்பினார்கள். நீண்ட நெடுங்காலமாகத் திட்டமிட்ட முறையில் மழுங்கடிக்கபட்டும் போட்டி பொறாமை மமதை காரணமாக நிகழ்வுகளைக் குழப்பியும் வேறு பல சுயநலக் காரணங்களைக் கருத்திற் கொண்டு நிகழ்வுகளை நடத்தாமலும் இருந்து வந்த சிலரால் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் முடக்கப்பட்டிருந்தது. சின்னஞ் சிறுசுகள் தற்போது உணர்வின்பால் உந்தப்பட்டு வீதிக்கு வந்தும் நீண்ட நெடுங்காலமாக மாமனிதர் சிவராம் பேராசிரியர் சிவதம்பி ஆகியோர் கூறியது போன்று மீண்டும் பிரித்தானியாவில் முளைவிட்டுள்ள தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தைத் தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்த்து மக்களை உற்சாகம் கொடுக்க வேண்டிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து வருகின்றமை பலருக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தமிழ்ச் சிறுவர்கள் செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் துண்டுப் பிரசுர விநியோகத்தை சிறிது வினாடிகளுக்கு மட்டும் ஒலிபரப்புச் செய்துவிட்டு தமிழர்களுக்கு வேண்டத்தகாத சிங்களவர்களின் ஏற்பாட்டு நிகழ்வைப் பல நிமிடங்களாக ரி.ரி.என் ஒலிபரப்புச் செய்து தமிழ் இளைஞர்ளின் நிகழ்வுகளை ஓரங்கட்டியிருந்ததுடன் இலங்கை தேசியத் தொலைக்காட்சி றூபவாகினியின் செய்தித் தணிக்கை போன்று செயற்பட்டிருந்தது.

ஜரோப்பா எங்கும் மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தி ஏற்பாட்டாளர்களைத் தூண்டி அவர்களுக்குப் பூரண ஆதரவு கொடுத்துப் பல வேறு வகையான தீவிர தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தை சுயாதீனமாக முடக்கி விடவேண்டிய தொலைக்காட்சி இவற்றையெல்லாம் மழுங்கடிக்கும் செயல்களைக் காட்சி நேரங்களில் குறைத்து தேவையற்ற விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வேண்டத்தகாத விடயங்களையும் ஒலிபரப்புச் செய்து வருகின்றது.

இத்தகைய விடயங்களை சாதமாகப் பரிசீலித்துப் பிரித்தானியா உட்பட ஜரோப்பிய நாடுகள் அனைத்திலும் தமிழ்த் தேசியப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்குப் பூரண ஊடாக ஆதரவு கொடுத்து பிரச்சார சக்திகளை ஊக்குவித்து வளர்த்துவிட வேண்டியது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கும் ஊடகம்; ரி.ரி.என் பார்த்து ஜரோப்பாவில் மக்கள் சோம்பலாளிகளாகவும் தமிழ்த் தேசிய ஊற்றில் வற்றியவர்களாகவும் மாறவிடாது பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது போன்று தேவையற்ற சீக்கிய இனத்தவர்களின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஜரோப்பாவெங்கும் சுயாதீன தமிழ்த் தேசியப் பிரச்சார சக்திகளை வளர்த்துவிட வேண்டுமென்று எந்தவித வேறுபாடுகளும் அற்ற முறையில் இத்தகைய ஒரு ஆர்பாட்டமாக இருப்பினும் அதற்குப் பூரண ஆதரவு கொடுப்பதுடன் ஏற்பாட்டாளர்களுக்கு மேலும் பல உதவிகளைச் செய்து கொடுத்துக் கட்டமைப்பொன்றை வளர்க்க வேண்டுமென்று லண்டனிலிருந்து சுந்தரம் என்பவர் எமக்கு எழுதி அனுப்பியுள்ள தனது ஆதங்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.nitharsanam.com/?art=18122

Link to comment
Share on other sites

இங்கு புலத்தில் நடக்கும் இப்படியான கழுத்தறுப்புக்கள் யாருக்கு/எதற்கு தாக்கத்தை ஏற்படுத்துமென்று நினைக்காமல் சிலர் தமது கதிரைகளை காப்பாற்றுவதற்காக செய்து வருகிறார்கள்.

நாங்களும் செய்ய மாட்டோம், மற்றவர்களையும் செய்ய விடமாட்டோம் என்ற மனப்பான்மை பல காலமாக புலத்தில் இருந்து வருவதற்கு இது ஒரு நல்ல சான்று. நேற்று லண்டன் ரவல்கார் சதுக்கத்தில் நடைபெற்ற சிங்களவர்களின் கேளிக்கைகளைக் காட்டத் தெரிந்த ரி.ரி.என் க்கு, அங்கு தமக்கு என்ன நடக்குமோ என்பதையெல்லாம் மறந்து தமிழ்த்தேசியத்திற்க்காக களமமைத்த இளையர்கள் கண்களுக்குத் தெரியாமல் போய் விட்டது.

இது ஒரு நிகழ்ச்சியல்ல!!! இப்படி பல நடந்து கொண்டேயிருக்கிறது. தாயகத்தில் தேசியத்திற்கெதிராக பல்லாண்டுகளாக செயற்பட்ட பலர் இன்று தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையிலும், புலத்தில் மாறாக தேசியத்திற்காக செயற்பட்ட செயற்பாட்டாளர்கள் புறக்கணிக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வரும் சூழ்நிலையே தொடர்கிறது.

எங்கள் இனத்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய சாபம்தான் இந்தகைய செயற்பாடுகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட தமிழ் தொலைக்காட்சிகளுக்கு எதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேணும் எதுக்குக்கொடுக்கக் கூடாது என்று தெரியவில்லைப் போல கிடக்கு. சின்னத்திரையும் சினிமாவும் நேரம் மட்டும் தப்பாமல் போடுவீனம். மற்ற நம்மவர் நிகழ்வுகள் 5 நிமிடம் 10 நிமிடம் தான் வரும் அதுவும் ஒரு ஊமைப்படம்போல எங்க நடந்தது எதுக்காக நடந்தது என்று ஒருவிளக்கமுமில்லாம் வரும்...

ஏன்தான் இப்படிச்செய்கிறார்களோ தெரியவில்லை?

Link to comment
Share on other sites

அதற்கு பல காரணங்கள் இருக்கிறது, எல்லா காரணத்தையும் வெளிப்படையாக கூறமுடியாது, தமிழ்தொலைக்காட்சி ஜரோப்பா தடைசெய்வதற்கு முன்னர் எப்படி செயல்பட்டது இப்போது எப்படி செயல்படுகிறது. தமிழர்களுக்கு என இருக்கும் தொலக்காட்சி இது ஒன்றுதான், சண்டை தொடங்கினால் அனைத்து ஊடகங்களும் பழையபடி கொழும்பில் இருந்தவாரே செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும். உண்மை வெளிவராது வரக்கூடிய ஒரு வழி எமது தொலைக்காட்சிதான், தற்போது அது முற்றிமுழுதாக புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்ற முத்திரை குத்தி தடை செய்து செய்துவிடக்கூடது என்பதற்கா நடத்தப்படும் ஒரு விளையாட்டு. இது அரசியல் தளம். களம். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை.

(திங்கட்கிழமை, 19 யூன் 2006) (யோககுமார்)

லண்டனில் பரவலாக சிங்களப் பௌத்த பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைப் பிரச்சாரம் செய்து தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்க வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் நுளைவாயிலில் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பரவலாக லண்டனில் தமிழ்த் தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மங்கள சமரவீர மற்றும் மகிந்த றாஜக்சவின் மனைவி தலைமையிலும் இலங்கை விமானத்தில் ஒரு சிங்கள விசேட இசை நடனக் குழுவும் இன்னொரு விமானத்தில் யானைக்குட்டிகளும் அதன் பாகன்களுமாக மாபெரும் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளும் குழுவும் லண்டன் வந்து பல கோடி செலவில் தீவிர பிரசாரம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. இதனைத் தமிழ் இளைஞர்களும் சிறுவர்களும் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பறைமேளங்களையும் வேறு சில இசைக்கருவிகளினையும் பயன்படுத்தித் தமிழ்த் தேசியத்தின் பக்கம் உள்வாங்கியதுடன் சிங்களவர்களின் நிகழ்வுகளைப் பார்க்க வந்த சுமார் 25 ஆயிரம் வெள்ளை இனத்தவர்களையும் தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தின் பக்கம் திசை திருப்பினார்கள். நீண்ட நெடுங்காலமாகத் திட்டமிட்ட முறையில் மழுங்கடிக்கபட்டும் போட்டி பொறாமை மமதை காரணமாக நிகழ்வுகளைக் குழப்பியும் வேறு பல சுயநலக் காரணங்களைக் கருத்திற் கொண்டு நிகழ்வுகளை நடத்தாமலும் இருந்து வந்த சிலரால் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் முடக்கப்பட்டிருந்தது. சின்னஞ் சிறுசுகள் தற்போது உணர்வின்பால் உந்தப்பட்டு வீதிக்கு வந்தும் நீண்ட நெடுங்காலமாக மாமனிதர் சிவராம் பேராசிரியர் சிவதம்பி ஆகியோர் கூறியது போன்று மீண்டும் பிரித்தானியாவில் முளைவிட்டுள்ள தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தைத் தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்த்து மக்களை உற்சாகம் கொடுக்க வேண்டிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து வருகின்றமை பலருக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தமிழ்ச் சிறுவர்கள் செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் துண்டுப் பிரசுர விநியோகத்தை சிறிது வினாடிகளுக்கு மட்டும் ஒலிபரப்புச் செய்துவிட்டு தமிழர்களுக்கு வேண்டத்தகாத சிங்களவர்களின் ஏற்பாட்டு நிகழ்வைப் பல நிமிடங்களாக ரி.ரி.என் ஒலிபரப்புச் செய்து தமிழ் இளைஞர்ளின் நிகழ்வுகளை ஓரங்கட்டியிருந்ததுடன் இலங்கை தேசியத் தொலைக்காட்சி றூபவாகினியின் செய்தித் தணிக்கை போன்று செயற்பட்டிருந்தது.

ஜரோப்பா எங்கும் மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தி ஏற்பாட்டாளர்களைத் தூண்டி அவர்களுக்குப் பூரண ஆதரவு கொடுத்துப் பல வேறு வகையான தீவிர தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தை சுயாதீனமாக முடக்கி விடவேண்டிய தொலைக்காட்சி இவற்றையெல்லாம் மழுங்கடிக்கும் செயல்களைக் காட்சி நேரங்களில் குறைத்து தேவையற்ற விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வேண்டத்தகாத விடயங்களையும் ஒலிபரப்புச் செய்து வருகின்றது.

இத்தகைய விடயங்களை சாதமாகப் பரிசீலித்துப் பிரித்தானியா உட்பட ஜரோப்பிய நாடுகள் அனைத்திலும் தமிழ்த் தேசியப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்குப் பூரண ஊடாக ஆதரவு கொடுத்து பிரச்சார சக்திகளை ஊக்குவித்து வளர்த்துவிட வேண்டியது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கும் ஊடகம்; ரி.ரி.என் பார்த்து ஜரோப்பாவில் மக்கள் சோம்பலாளிகளாகவும் தமிழ்த் தேசிய ஊற்றில் வற்றியவர்களாகவும் மாறவிடாது பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது போன்று தேவையற்ற சீக்கிய இனத்தவர்களின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஜரோப்பாவெங்கும் சுயாதீன தமிழ்த் தேசியப் பிரச்சார சக்திகளை வளர்த்துவிட வேண்டுமென்று எந்தவித வேறுபாடுகளும் அற்ற முறையில் இத்தகைய ஒரு ஆர்பாட்டமாக இருப்பினும் அதற்குப் பூரண ஆதரவு கொடுப்பதுடன் ஏற்பாட்டாளர்களுக்கு மேலும் பல உதவிகளைச் செய்து கொடுத்துக் கட்டமைப்பொன்றை வளர்க்க வேண்டுமென்று லண்டனிலிருந்து சுந்தரம் என்பவர் எமக்கு எழுதி அனுப்பியுள்ள தனது ஆதங்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.nitharsanam.com/?art=18122

Link to comment
Share on other sites

இனியும் இந்தப் புலத்தில் தமிழ்த்தேசியத்திற்காக செயற்படுபவர்கள் திருந்தாவிடில் அவர்களை நாம் திருத்த வேண்டும் அதுவும் முடியாவிடில் தூக்கியெறிய வேண்டும்.

இங்கு லண்டனில் தற்போது நடைபெறத் தொடங்கியிருக்கும் தமிழ்த்தேசிய செயற்பாட்டு எழுச்சி நிகழ்வுகளுக்கு, இங்கு பல கோஸ்டிகளாக இருக்கும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என தம்மைக் கூறிக்கொள்பவர்கள், ஒருவர் மற்றையவரின் நிகழ்ச்சிக்கு தமக்கு தெரிந்தவர்கள் செல்வதை தடுக்கிறார்களாம். இவை உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்.

சிதறிப்போயுள்ள, ஒதுக்கப்பட்ட, விலகிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அணைவரும் அரவணைக்கப்பட வேண்டும். எல்லோருடைய இலக்கும் ஒன்றாக இருக்கும்போது ஏன் குழி பறிப்புக்கள்?????

ஒன்றிணைந்து செயற்படுவோம். ஒற்றுமையே வாழ்வு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு பல காரணங்கள் இருக்கிறது' date=' எல்லா காரணத்தையும் வெளிப்படையாக கூறமுடியாது, தமிழ்தொலைக்காட்சி ஜரோப்பா தடைசெய்வதற்கு முன்னர் எப்படி செயல்பட்டது இப்போது எப்படி செயல்படுகிறது. தமிழர்களுக்கு என இருக்கும் தொலக்காட்சி இது ஒன்றுதான், சண்டை தொடங்கினால் அனைத்து ஊடகங்களும் பழையபடி கொழும்பில் இருந்தவாரே செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும். உண்மை வெளிவராது வரக்கூடிய ஒரு வழி எமது தொலைக்காட்சிதான், தற்போது அது முற்றிமுழுதாக புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்ற முத்திரை குத்தி தடை செய்து செய்துவிடக்கூடது என்பதற்கா நடத்தப்படும் ஒரு விளையாட்டு. இது அரசியல் தளம். களம்[/color']

உண்மை நிகழ்ச்சிகளை வெளியிட ஏன் நாம் பயப்படவேண்டும். இதைக்காரண்மாகக் கூறுவது பொருத்தமல்ல. தற்போதெல்லாம், விளம்பரங்களே கூடிய நேரத்தை இடம் பிடிக்கின்றன. அந்த விளம்பரங்களைப் போடுவதற்காக் செய்தி நிகழ்ச்சிகளை குறைப்பது, அல்லது, இணைகளத்தில் இருந்து அப்படியே சொல்லுக்கு சொல் செய்திகளைத் தருவது. இப்படி TTN தன் தரத்தை தன்னை அறியாமலையே குறைத்துக் கொண்டு வருகிறது. செய்தி தொகுப்பாளர்கள், முழு நேர செய்திதொகுப்பாளராக இல்லாமல் வந்து விட்டு,வாசித்துவிட்டுப் போகிறவர்களாக இருக்கிறார்கள் போலும். வெளி இடங்களில் நிருபர்கள் வைத்து புலன் வாழ் தமிழ் மக்களின் தமிழ் ஆதரவு செயல்களை வெளிக்காட்டுவதோடு மாத்திரமன்றி மற்றைய நாட்டு ஊடகர்களோடு நட்புறவு ஏற்படுத்தி எமது ஆதரவு செயற்பாட்டுகளை பரிமாறிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு கிணற்றுத் தவளைகளாக செயற்படுகிறார்கள் போல் தெரிகிறது!

அல்லிகா

Link to comment
Share on other sites

மேலுள்ள கருத்து தொடர்பாக "தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்" என்று ஒருவர் அனுப்பி வைத்த கருத்து

தமிழ்த்தேசியத்தினைத் தமது வயிற்றுப்பிழைப்புக்காகப் பலர் பாவிக்கத்தொடங்கியுள்ளனர். தாம்தான் தமிழ்த்தேசியத்தின் காவலர்கள் என்று மேடையேறித் தமிழர்களை நம்ப வைத்துக்கொண்டு திரைமறைவில் தமிழ்த்தேசியத்தின் கட்டமைப்புகளை புலம்பெயர் நாடுகளில் சிதைப்பதில் முனைப்புடன் செயற்படுகின்றனர். இவர்கள் பற்றி அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ரீரீஎன் இளையோருடைய ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்று "சுந்தரத்தாரின்" ஆதங்கங்களுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுத்துச் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.

நீங்கள் தமிழ்த்தேசியத்தின்பால் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால்,

1. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்தி அதற்குரிய பதிலைப் பெற்றிருக்கலாம்.

2. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரீரீஎன் இற்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தி, அந்நிகழ்வை ஒளிபரப்புச் செய்யும்படி கேட்டார்களா என அறிந்திருக்கலாம்.

3. சந்தர்ப்பத்திற்கேற்ப "தமிழீழ" ஆதரவு பேசும் பல ஊடகங்கள் இலண்டனில் இயங்கிவருகின்றனவே. உங்கள் ஆதங்கமும், கோபமும் ஏன் அவர்கள் பால் எழவில்லை?

அடுத்தமுறை, உங்கள் கண்ணையே நீங்கள் குத்தமுன் இருமுறை யோசித்துச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்.

Link to comment
Share on other sites

எல்லா இடங்களிலும் சுயநலம் பிடித்தவர்களும் புகுந்துள்ளதால் இப்படியான பிரச்சனைகள் வருகின்றன.. சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டால் சரியான பதில் தரமாட்டார்கள் நான் அவர்களுடன் பலமுறை கேட்டு எந்தவித பதிலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஒரு சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்காக நடைபெறுகின்றது.

பல பிரச்சனைகளை இங்கு எழுதமுடியாது. இந்தநேரத்தில் நாம் எம்மீது சேற்றை வாரி இறைக்கமுடியாது. நாம் விடுதலை பெற்றபின் இந்த சுயநல கும்பலை வெளிக்கொணர்வோம். அதுவரை அமைதிகாப்பதுதான் நல்லது. அதற்காக தவறுகளை சுட்டிக்காட்டாமலும் இருக்கமுடியாது.

Link to comment
Share on other sites

எல்லா தமிழ் ஊடகங்களும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஆதரவு அழிக்க வேண்டும்.ஊடகங்கள் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும், யாரால் நடத்தப்பட்டாலும் அவை தமிழ்தேசியத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தால் கட்டாயம் ஒளி,ஒலி பரப்ப வேண்டும்.யாழ்க் களத்தில் கூட இந்த நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆகவே இங்கே நிகழ்வு நடை பெற்றது அறிவிக்கப்படவில்லை என்று கூறும் காரணம் வலுவற்றதாகவே இருக்கிறது.மேலும் இதற்குத் தடை காரணம் என்று கூறுவது வலு அற்றது.இந்த நிகழ்வுகள் தடை செய்யப் பட்ட எந்த ஒரு இயக்கதாலும் நடத்தப்படவில்லை, சகல ஜன நாயக உரிமைகளும் உடய பிரித்தானியப் பிரசைகளால் நடத்தப்பட்டது அதுவும் இங்கு பிறந்து வளர்ந்த இளயவர்களால்.இவர்களை நாங்கள் தான் ஊக்கப்படுத்த வேன்டும்.இதில் பெயருக்கு பதவிகளில் இருபோர் வெறும் நொண்டிச் சாக்குக்களைக் கூறுவதாகவே படுகிறது.குறிப்பாக இளயோர் அமைப்பே பிரித்தானியாவிலும் சரி உலகளாவிய ரீதியுலும் சரி முனைப்புடன் இயங்கி வருகிறது.

செயற்பாட்டு ரீதியாக முனைப்புடன் இயங்குபவர்களுக்கு வழி விட்டு , பொறுப்புக்கள் திறமையானவர்களுக்கு வழங்கப் பட்டாலயே இழந்து போன எமது பிரச்சாரத்தை மீளக் கட்டி அமைக்கலாம்.அதற்கு ஆரோக்கியமான சுய விமர்சனமும், இளயவர்களுக்கு வழி விடலும் அவசியம் ஆகும்.

Link to comment
Share on other sites

எனக்கு இருக்கும் சில சந்தேகங்களை தருகிறேன்.

அண்றய தினம் அதே இடத்தில் மங்கள சமரவீர வந்ததையும் பிரித்தானியாவிற்கான இலங்கை தூதுவர் வந்ததையும் அவவுடைய சாறியையும் அவ சிரித்து சிரித்து மங்களவுடன் கதைத்ததையும் மங்கள தனது பரிவாரத்தடன் நடந்து வந்ததையம் சிங்கள பெண்கள் நடனம் ஆடுவதையும் கண்டி பரதநாட்டியத்தையும் இதே ரி.ரி.என்தான் அண்று ஒலிபரப்பு செய்தது...................இது அவர்கள் ரி.ரி.என். இடம் கேட்டார்களா வந்து எடுங்க இதை போடங்க எண்டு?

ரி.ரி.என்னிடம் முன் அனுமதி கேட்டதா இலங்கை அரசு.

ஏற்பாட்டார்கள் தங்களுக்கு சொல்ல வில்லையாம். அப்படியானல் எனக்கு வரும் ஒரு சந்தேகம் ஒரு இணையத்தில் இது 3 நாட்களாக இருந்தது ஒரு மீடியா ஏன் அந்த தொலைபேசிக்கு தொடர்பகொண்டு கேக்க இல்லை. 250 மக்கள் தமது பிள்ழைகள் சகிதம் அந்த நிகழ்வில் வந்து பாரிய எதிர்பு நிகழ்வு நடாத்தியபோதும் ரி.ரி.என் பிரதம விருந்தினம் அனுமதி கேப்பது மாதாரி அல்லவா இருக்கிறது.

மொத்தத்தில் ஊடத்துறை என்பது எந்த வீதியில் அந்த ஊடகத்தின் பின்னனியுடன் தொடர்புடைய விடயமாக இருந்தால் செத்து கிடந்தாலும் அதை தேடி எடுத்து போட வெண்டம் அதுதான் ஊடகம்.

Link to comment
Share on other sites

தம்பி மோகன் எல்லாத்தை முன்கூட்டியே சொல்லி சரிவரவில்லை

அதனால்த்தான் இந்த களத்தில எழுதினார்கள் வேணும்

என்றால் ரி.ரி.ன் நிர்வாகத்துடன் தெடர்பு கொண்டு கேழும்

சும்மா ந{ர்ரே நினைத்து எழுதவேண்டாம் உம்மட கண்னை

ந{ர்ரே கூத்தவேண்டாம்

எழுதப்பட்டது: திங்கள் ஆனி 19, 2006 10:47 am Post subject:

--------------------------------------------------------------------------------

மேலுள்ள கருத்து தொடர்பாக "தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்" என்று ஒருவர் அனுப்பி வைத்த கருத்து

தமிழ்த்தேசியத்தினைத் தமது வயிற்றுப்பிழைப்புக்காகப் பலர் பாவிக்கத்தொடங்கியுள்ளனர். தாம்தான் தமிழ்த்தேசியத்தின் காவலர்கள் என்று மேடையேறித் தமிழர்களை நம்ப வைத்துக்கொண்டு திரைமறைவில் தமிழ்த்தேசியத்தின் கட்டமைப்புகளை புலம்பெயர் நாடுகளில் சிதைப்பதில் முனைப்புடன் செயற்படுகின்றனர். இவர்கள் பற்றி அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ரீரீஎன் இளையோருடைய ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்று "சுந்தரத்தாரின்" ஆதங்கங்களுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுத்துச் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.

நீங்கள் தமிழ்த்தேசியத்தின்பால் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால்,

1. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்தி அதற்குரிய பதிலைப் பெற்றிருக்கலாம்.

2. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரீரீஎன் இற்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தி, அந்நிகழ்வை ஒளிபரப்புச் செய்யும்படி கேட்டார்களா என அறிந்திருக்கலாம்.

3. சந்தர்ப்பத்திற்கேற்ப "தமிழீழ" ஆதரவு பேசும் பல ஊடகங்கள் இலண்டனில் இயங்கிவருகின்றனவே. உங்கள் ஆதங்கமும், கோபமும் ஏன் அவர்கள் பால் எழவில்லை?

அடுத்தமுறை, உங்கள் கண்ணையே நீங்கள் குத்தமுன் இருமுறை யோசித்துச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு பல காரணங்கள் இருக்கிறதுஇ எல்லா காரணத்தையும் வெளிப்படையாக கூறமுடியாதுஇ தமிழ்தொலைக்காட்சி ஜரோப்பா தடைசெய்வதற்கு முன்னர் எப்படி செயல்பட்டது இப்போது எப்படி செயல்படுகிறது. தமிழர்களுக்கு என இருக்கும் தொலக்காட்சி இது ஒன்றுதான்இ சண்டை தொடங்கினால் அனைத்து ஊடகங்களும் பழையபடி கொழும்பில் இருந்தவாரே செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும். உண்மை வெளிவராது வரக்கூடிய ஒரு வழி எமது தொலைக்காட்சிதான்இ தற்போது அது முற்றிமுழுதாக புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்ற முத்திரை குத்தி தடை செய்து செய்துவிடக்கூடது என்பதற்கா நடத்தப்படும் ஒரு விளையாட்டு. இது அரசியல் தளம். களம்.

_____________________________________________________________

-----------------------------------------------------

அன்பின் பிருந்தன் அவர்கட்கு....

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி என்று எடுத்துக்கொள்வோம்... ஆனால் எங்கள் தமிழ் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு முக்கியம் கொடுக்காமைக்கு சொல்லமுடியாத பல காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.... சரி ஏற்றுக் கொள்கிறோம். ஏன் சிங்களவரின் கூத்தை போட்டுக்காட்டுகின்றீர்கள்.... தமிழர்கள் இதைக் கேட்டார்களா? எதற்கு சிங்களவனின் உல்லாசப்பிரயாணக் களியாட்டத்தைக் காட்டினார்கள்.. அதை காட்டாமல் விட்டிருக்கலாம்தானே....

மேலும் ரி.ரி.என் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் ஈபிள் கோபுரத்துக் அருகே.. எமது தேசியக் கொடியான புலிக்கொடி ஏற்றப்பட்டு உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை துணிச்சலுடன் ஒரு உலக அதிசயமும் உல்லாசப்பிரயாணிகள் பலரும் கூடுமிடத்தில் எமது தமிழ் மக்கள் துணிச்சலுடன் ஏற்றியிருக்கிறார்கள். சும்மா சொல்ல முடியாத காரணம் சொல்லக் கூடிய காரணம் என்று பம்மாத்து விடாதயுங்கோ.... பிழையை பிழையென்று ஏற்று திருந்தும் பக்குவம் வேண்டும்... அதை விட்டுட்டு விட்ட பிழைகளை மூடிமறைப்பதற்கு காரணம் தேடிக்கொண்டிருக்காதையுங்கோ

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரி.ரி.ன் பிரித்தானிய பொறுப்பாளர் மேன்மை தாங்கிய கருணைலிங்கம் ரி.ரி.ன் ஓளிப்பதிவாளருடன் பிரசன்னமாகி சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஓளிப்பதிவு செய்தவரின் கண்களில் எம்மவரது நிகழ்ச்சி தென்படவில்லை.

Link to comment
Share on other sites

அதற்கு பல காரணங்கள் இருக்கிறதுஇ எல்லா காரணத்தையும் வெளிப்படையாக கூறமுடியாதுஇ தமிழ்தொலைக்காட்சி ஜரோப்பா தடைசெய்வதற்கு முன்னர் எப்படி செயல்பட்டது இப்போது எப்படி செயல்படுகிறது. தமிழர்களுக்கு என இருக்கும் தொலக்காட்சி இது ஒன்றுதான்இ சண்டை தொடங்கினால் அனைத்து ஊடகங்களும் பழையபடி கொழும்பில் இருந்தவாரே செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும். உண்மை வெளிவராது வரக்கூடிய ஒரு வழி எமது தொலைக்காட்சிதான்இ தற்போது அது முற்றிமுழுதாக புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்ற முத்திரை குத்தி தடை செய்து செய்துவிடக்கூடது என்பதற்கா நடத்தப்படும் ஒரு விளையாட்டு. இது அரசியல் தளம். களம்.

_____________________________________________________________

-----------------------------------------------------

அன்பின் பிருந்தன் அவர்கட்கு....

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி என்று எடுத்துக்கொள்வோம்... ஆனால் எங்கள் தமிழ் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு முக்கியம் கொடுக்காமைக்கு சொல்லமுடியாத பல காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.... சரி ஏற்றுக் கொள்கிறோம். ஏன் சிங்களவரின் கூத்தை போட்டுக்காட்டுகின்றீர்கள்.... தமிழர்கள் இதைக் கேட்டார்களா? எதற்கு சிங்களவனின் உல்லாசப்பிரயாணக் களியாட்டத்தைக் காட்டினார்கள்.. அதை காட்டாமல் விட்டிருக்கலாம்தானே....

மேலும் ரி.ரி.என் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் ஈபிள் கோபுரத்துக் அருகே.. எமது தேசியக் கொடியான புலிக்கொடி ஏற்றப்பட்டு உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை துணிச்சலுடன் ஒரு உலக அதிசயமும் உல்லாசப்பிரயாணிகள் பலரும் கூடுமிடத்தில் எமது தமிழ் மக்கள் துணிச்சலுடன் ஏற்றியிருக்கிறார்கள். சும்மா சொல்ல முடியாத காரணம் சொல்லக் கூடிய காரணம் என்று பம்மாத்து விடாதயுங்கோ.... பிழையை பிழையென்று ஏற்று திருந்தும் பக்குவம் வேண்டும்... அதை விட்டுட்டு விட்ட பிழைகளை மூடிமறைப்பதற்கு காரணம் தேடிக்கொண்டிருக்காதையுங்கோ

நன்றி

தமிழ்சிறுவர் நடத்திய ஊர்வலத்தை ஒளிபரப்பாததற்காக நான் எழுதவில்லை, பொதுவாக எழுதினேன்.

உதாரணத்துக்கு இன்று அரசு சொல்கிறது விமானத்தாக்குதல் நடைபெறவில்லை என்று, ஆனால் விடுதலைப்புலிகள் சொல்கிறார்கள் நடை பெற்றது என்று, அதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தது ரீரீஎன். ஒது ஒரு உதாரணம் மட்டுமே. சமாதன காலத்திலேயே இப்படி சொல்லும், அரசு கூறும் பொய்புரட்டுகளை வெளிக்கொண்டுவர இருக்கும் ஒரு தொலைக்காட்சி, எமது தொலைக்காட்சிதான். அதுபல்வேறுபட்ட நிகழ்வுகளையும் ஒலிபரப்பி ஒருசாதரன தொலைக்காட்சி என்ற மாயையை உருவாக்கி வைத்திருப்பது, நல்லதா? இல்லையா? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன் அதற்காகத்தான் தமிழீழ தேசிய தொலைக்காட்சி இருக்கிறதே..?

Link to comment
Share on other sites

அது தன்னிச்சையாக உலம்முழுதும் ஒளிபரப்புவதற்குரிய பொருளாதார வசதிகளுடன் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரி;.ரி.ன் ற்குரிய பொருளாதார வசதி என்ன வானத்திலிருந்தா வந்தது?

எல்லாம் மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

அவ்வளவு விளம்பரங்களை தமிழீழதொலைக்காட்சிக்கு புலம்பெய்தமிழர் இந்தநிலையில் கொடுப்பீர்களா? அது அமைப்பு ரீதியாக இயங்குகிறது, இது தனியார் ரீதியாக இயங்குகிறது, சண்டை தொடங்கினால் புலம்பெயர்தேசத்தில் எது இயங்குவது இலகு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஓளிபரப்பிய காட்சிகளையே ரி.ரி.ன் ஒளிபரப்புகிறது.

சற்று சிந்தியுங்கள் ஒரு வேளை சண்டை தொடங்கினால் ரி.ரி.ன் இற்கு எப்படி அது தொடர்பான தகவல்கள் கிடைக்கும்?

Link to comment
Share on other sites

பிருந்தன் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஓளிபரப்பிய காட்சிகளையே ரி.ரி.ன் ஒளிபரப்புகிறது.

சற்று சிந்தியுங்கள் ஒரு வேளை சண்டை தொடங்கினால் ரி.ரி.ன் இற்கு எப்படி அது தொடர்பான தகவல்கள் கிடைக்கும்

அப்ப இப்ப மட்டும் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனதின்னர ஆதரவோடையே தேசிய தொலைக்காட்சி நிகள்ச்சிகளை ஒளிபரப்பீனம்...???

இல்லை அமெரிக்கா சற்றலைற் குடுத்து உதவுதோ...???

உமக்கு விளாப்பு கதையை விட்டால் ஒண்டுமே வராதே..???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல கருத்தெழுத முன் நன்றாக வாசித்து விளங்கி எழுதவும்.

சண்டை தொடங்கினால் ரி.ரி.ன் நேரடியாக செய்திகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதனால் தமிழீழ தேசியதொலைக் காட்சியிள் ஒளிபரப்பிலேயே ரி.ரி.ன் இன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

Link to comment
Share on other sites

என்றை, உன்றை என்ற சண்டை தயவு செய்து இங்கு வேண்டாம். தவறுகள் விடுவது மனித பண்பு! தேசியத்தையும் அவரடசார் போராட்டங்களையும் எள்ளி நகையாட போட்டி போட்டு நிற்கும் தளங்களுக்க நாமே அவலை கொடுப்பதா?

ரீரீஎன்னுடன் பிரச்சனையென்றால் ரீரீஎன் அலுவலகத்திற்கு போய் கதையுங்கள். உரியவர்கள் கேட்க ஆயுத்தமாக உள்ளனர். இன்றைய கால கட்டத்தில் தமிழர்கள் பலர் சுத்தசுவாதுpனமற்ற நிலையில் வானெலி மற்றும் இணையத் தளங்களில் புலம் பெயர் நாட்டில் உள்ள தேசியத்திற்கு ஆதரவானவர்கள் மீது முத்திரை குத்தி பரிகசித்து ஏளனம் செய்யும் கும்பல் நிச்சயம் இதையும் பாவிக்க போகிறது. தேசியத்தின் மீதான ஆதரவு உடைகிறிது என்ற கூச்சல் வெகு விரைவில் வரப்போகிறது. அதற்கான தார்மீக பொறுப்பை இந்த செய்தியை கொண்டவரே ஏற்க வேண்டும். ரீரீஎன்இல் குறைபாடு இருந்தால் அதை உரியமுறையில் சொல்லி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவும் சரி வராவிட்டால் சொல்ல வேண்டிய இடத்திற்கு சொல்லுவோம். அதை விடுத்து இங்கு வந்து எழுதுவது நம் கண்ணை நாமே குத்துவது போல் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இனி வருங்காலங்களில் இப்படி நடக்காது என்ற நம்பிக்கையுடன் இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவோம்!

Link to comment
Share on other sites

மேலும் ரி.ரி.என் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் ஈபிள் கோபுரத்துக் அருகே.. எமது தேசியக் கொடியான புலிக்கொடி ஏற்றப்பட்டு உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை துணிச்சலுடன் ஒரு உலக அதிசயமும் உல்லாசப்பிரயாணிகள் பலரும் கூடுமிடத்தில் எமது தமிழ் மக்கள் துணிச்சலுடன் ஏற்றியிருக்கிறார்கள்.

விளங்காப்பயல் அடிக்கடி உங்களுக்கு விளக்கம் இல்லை எண்டதை நீங்களும் உறுதிப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். தடைசெய்யப்பட்டது தமிழீழ விடுதலைப்புலிகள். அதுவும் அர்களது நிதிச் செயற்பாடுகளில் முடக்கம் அடையவைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏந்தியிருந்தது தமிழீழ தேசியக்கொடி இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.