Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிசானா விவகாரம்: முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?: பிரபா எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

prabaganesan(23).jpg

'சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் தொடர்பில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம் தலைவர்கள்; நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்பொழுது வியப்பாகவும் அருவருப்பாகவும் உள்ளது' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'ரிசானா நபீக் குறைந்த வயதிலே வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது சம்பந்தமாக அனுப்பி வைத்த முகவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசானாவுக்கு  நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை சம்பந்தமாக மனிதாபிமான முறையில் இவரது  பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தோர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

இருப்பினும் இவரது இந்த நிலைக்கு காரணமாக அனுப்பி வைத்த முகவரை மட்டும் நான் பார்க்கவில்லை. மாறாக இவரது பெற்றோர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். போலியான வயதை காட்டி இவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்து அவர் மூலமான வருமானத்தை பெற முற்பட்ட பெற்றோர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே வெளிநாட்டிற்கு பெண்களை வேலைக்கு அனுப்பிவைத்து அதன் மூலம் சுகபோகமடையும் கணவன்மார்களுக்கு பெற்றோர்களுக்கும் தகுந்த பாடத்தை உணர்த்தலாம். 

இது இப்படியிருக்க சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் முஸ்லிம் அல்லாது சிங்களப் பெண்ணாக இருந்திருந்தால் இன்று இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என சம்பவங்களுக்காக அறிக்கை விடுபவர்கள் இந்நாட்டில் ஐக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் விளம்பரம் தேடிக்கொள்ளப் பார்க்கிறார்கள். 

இருப்பினும் இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் தலைவர்கள் எடுத்துக்கொண்ட நடவடிக்கை என்ன? ரிசானாவுக்கு அமெரிக்கா அல்லது ஏனைய மேற்குல நாடுகள் மூலமாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் வெள்ளிக்கிழமை நாளில் மேற்குல நாடுகளின் தூதரங்கள் பயந்து ஓடும் அளவிற்கு பல விதமான போராட்டங்களை அரசாங்கத்திலிருக்கும் முஸ்லிம் தலவர்களும் எதிர்கட்சியிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களும் ஒன்றிணைந்து கொழும்பு நகரத்தை ஸ்தம்பிதம் அடையும் அளவிற்கு கொண்டு சென்றிருப்பார்கள். 

ஆனால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை முஸ்லிம் நாடான சவூதி அரேபியாவில் இடம்பெற்றதனால் இன்று வாய் மூடி மௌனித்திருப்பது ஏன்? சவூதி அரேபிய தூதரகத்தின் முன் இவர்களால் ஏன் ஒரு ஆர்ப்பாட்டத்தினையாவது நடத்த முடியவில்லை. இனி எதிர்காலத்தில் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நம்பகத்தன்மை உள்ளதா என தெரிந்து கொண்டு அதற்கு முஸ்லிம் மக்கள் துணை போக வேண்டும். 

இன மத பேதமின்றி அநீதி எங்கு நடக்கின்றதோ அது எந்த நாடாக இருந்தாலும் அதற்கெதிராக நேர்மையான முறையிலே குரல் கொடுக்க வேண்டும் என்பதே எனது இந்த அறிக்கையின் நோக்கமாகும்' என்று பிரபா கணேசன் எம்.பி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57393-2013-01-21-13-09-07.html

என்னா.... இந்த ஆளு.. போயும் போயும் வெள்ளிக்கிழமையில் புரட்சி செய்யவில்லை என்கிறார்.  என்ன அந்த அளவுக்கு போக இது அவ்வளவு பெரிய சமாசாரமா. சவுதில் என்ன குர்ரானை கிழித்தார்களா அல்லது முகமதுவை படத்தில் வரைய முயன்றார்களா.  அட சும்மா போயும் போயும் இந்த சிறுவயது பிச்சைக்காரிக்காக இவ்வளவு கூப்பாடு போடுகிறாறு நைனா.  <_<

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கரெக்டான  ஆன்சரு ..மல்லையூரன்...

  • கருத்துக்கள உறவுகள்

 
ரிசானா விவகாரம்: முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஒன்றும் சொல்ல இல்லை..  :unsure:  விரல் சூப்புகிறார்கள்..

 

Spoiler
அவர்களால் முடிந்தது.. :D
  • கருத்துக்கள உறவுகள்
ரிசானாவின் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்! - பிரபா கணேசன் 
[Tuesday, 2013-01-22 09:13:00]
 
ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் சிரைச்சேதம் செய்யப்பட்டது சம்பந்தமாக இந்நாட்டிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும் பொழுது வியப்பாகவும் கேவலமாகவும் உள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் தெரிவித்ததாவது,
 
ரிசானா நபீக் குறைந்த வயதிலே வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது சம்பந்தமாக அனுப்பி வைத்த முகவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசானாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை சம்பந்தமாக மனிதாபிமான முறையில் இவரது பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தோர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இருப்பினும் இவரது இந்த நிலைக்கு காரணமாக அனுப்பி வைத்த முகவரை மட்டும் நான் பார்க்கவில்லை.
 
மாறாக இவரது பெற்றோர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். போலியான வயதை காட்டி இவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்து அவர் மூலமான வருமானத்தை பெற முற்பட்ட பெற்றோர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே வெளிநாட்டிற்கு பெண்களை வேலைக்கு அனுப்பிவைத்து அதன் மூலம் சுகபோகமடையும் கணவன்மார்களுக்கு பெற்றோர்களுக்கும் தகுந்த பாடத்தை உணர்த்தலாம்.
 
இது இப்படியிருக்க சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் முஸ்லிம் அல்லாது சிங்களப் பெண்ணாக இருந்திருந்தால் இன்று இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என சம்பவங்களுக்காக அறிக்கை விடுபவர்கள் இந்நாட்டில் ஐக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் விளம்பரம் தேடிக்கொள்ளப் பார்க்கிறார்கள்.
 
இருப்பினும் இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் தலைவர்கள் எடுத்துக்கொண்ட நடவடிக்கை என்ன? ரிசானாவுக்கு அமெரிக்கா அல்லது ஏனைய மேற்குல நாடுகள் மூலமாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் வெள்ளிக்கிழமை நாளில் மேற்குல நாடுகளின் தூதரங்கள் பயந்து ஓடும் அளவிற்கு பல விதமான போராட்டங்களை அரசாங்கத்திலிருக்கும் முஸ்லிம் தலைவர்களும் எதிர்கட்சியிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களும் ஒன்றிணைந்து கொழும்பு நகரத்தை ஸ்தம்பிதம் அடையும் அளவிற்கு கொண்டு சென்றிருப்பார்கள்.
 
ஆனால் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் இடம்பெற்றதனால் இன்று வாய் மூடி மௌனித்திருப்பது ஏன்? சவுதி அரேபியா தூதரகத்தின் முன் இவர்களால் ஏன் ஒரு ஆர்ப்பாட்டத்தினையாவது நடத்த முடியவில்லை.
 
இனி எதிர்காலத்தில் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நம்பகத்தன்மை உள்ளதா என தெரிந்து கொண்டு அதற்கு முஸ்லிம் மக்கள் துணை போக வேண்டும். இன மத பேதமின்றி அநீதி எங்கு நடக்கின்றதோ அது எந்த நாடாக இருந்தாலும் அதற்கெதிராக நேர்மையான முறையிலே குரல் கொடுக்க வேண்டும் என்பதே எனது இந்த அறிக்கையின் நோக்கமாகும்.
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோருக்குத் தண்டனை வழங்குவது சரி.. அதுபோல் போலிக் கடவுச்சீட்டை வழங்கிய அதிகர்ரிகளையும், எடுக்க உதவிய முகவரையும்கூட உள்ளே தள்ள வேண்டும்.

rizana1(3).jpg

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துள்ளார்.

இதன்போதே, பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன் ரிசானா நபீக்கின் சகோதரரிற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்திலும் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த சந்திப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் கலந்துகொண்டனர்

http://tamil.dailymirror.lk/--main/57447-2013-01-22-07-49-33.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rajapaksa traded Rizina's life for a support form Saudi for the forthcoming UNHRC

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.