Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன்

பிரிட்டனின் ஆளும் கான்சர்வேட்டிவ் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தப் போவதாக பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார்

130123104257_cameron_eu_304x171_bbc_nocr

நெகிழ்வுத்தன்மையுடைய, பொருந்திப் போகக்கூடிய மேலும் வெளிப்படையான ஒரு உறைவை உருவாக்கும் வகையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் அதன் முடிவுகள் 2018 இல் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் கமரன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும் வகையிலான உறவையே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அதன் குடிமக்களுக்கும் இடையே ஒரு இடைவெளி அதிகரித்துக் கொண்டு செல்வதாகவும், அதனை பிரிட்டனில் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சிந்த்னைகளை ஏற்க மறுப்பவர்களிடம் இருந்துதான் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.bbc.co.uk/

நல்ல விசயம் நடக்கதொடங்கீட்டுது........

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அதன் குடிமக்களுக்கும் இடையே ஒரு இடைவெளி அதிகரித்துக் கொண்டு செல்வதாகவும், அதனை பிரிட்டனில் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓட்டை விழுந்த கப்பலில் யார் ஏறுவார்கள் ? :D

இப்பவே இதிலிருந்து பிய்த்துக் கொண்டு ஓடினால் நல்லம் என்ற நிலைதான். 

இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மையானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கே  வாக்களிப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்கு ஆர் மணிகட்டுறதெண்டு கன நாடுகள் யோசிச்சுக்கொண்டிருந்தவை........லண்டன் தொடக்கி வைச்சுட்டுது.. :D

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலத்துவது தான் நல்லது. பிரிட்டனாவது தப்பி போகட்டும்... :D
 
Reaction to Cameron's EU speech: 'A politics of cherry-picking will not work'

 'We have to always keep in mind that other countries have different wishes and we have to find a fair compromise. - German chancellor, Angela Merkel.

Germany, and I personally, want Britain to be an important part and an active member of the European Union. We are prepared to talk about British wishes, but we have to always keep in mind that other countries have different wishes and we have to find a fair compromise.

We will talk intensively with Britain about its individual ideas, but there will be time for that over the months to come.

- German chancellor, Angela Merkel.

http://www.guardian.co.uk/politics/2013/jan/23/david-cameron-europe-international-reaction

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய  ஒன்றியத்திலிருந்து  பிரெஞ்சு  வெளியாறுவதால்  ஏதாவது  நன்மையுண்டா   என்று நேற்று  கேட்கப்பட்ட கேள்வி  ஒன்றுக்கு  ஒரு பிரபல ஆய்வாளார் பொருளியல் மேதை சொன்னது.

அது தற்கொலைக்கு சமமானது என்று.

ஐரோப்பிய  ஒன்றியத்திலிருந்து  பிரெஞ்சு  வெளியாறுவதால்  ஏதாவது  நன்மையுண்டா   என்று நேற்று  கேட்கப்பட்ட கேள்வி  ஒன்றுக்கு  ஒரு பிரபல ஆய்வாளார் பொருளியல் மேதை சொன்னது.

அது தற்கொலைக்கு சமமானது என்று.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராமல் விட்டிருந்தால் யூரோவின் பெறுமதி விழும் போது பிரான்ஸ் விழுந்திருக்காது.... :rolleyes: இனி தன்னும் நீங்கினால் எதிர்காலத்தில் பொருளாதார பின்னடைவு ஏற்படுவதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்/ ஒப்பீட்டளவில் குறைத்து கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக விழ வேண்டியது தான். :unsure:

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருந்தாலும் border பிரிந்த நிலையில் உள்ளது. எனவே இலகுவில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக முடியும்.. ஆனால் என்ன செய்வார்களோ தெரியாது. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து போவது தற்கொலைக்கு சமனானது அதை காப்பாற்றி அனைவரும் முன்னேறுவதே வருங்காலத்துக்கு உகந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவும்  ஐரோப்பிய யூனியனுக்கை உள்ள பஞ்சப்பரதேசி நாடுகள் எல்லாம் நுழைஞ்சதாலைதான் வந்த வில்லங்கங்கள்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவும்  ஐரோப்பிய யூனியனுக்கை உள்ள பஞ்சப்பரதேசி நாடுகள் எல்லாம் நுழைஞ்சதாலைதான் வந்த வில்லங்கங்கள்.......

இப்ப கடன் கேட்ட நாடு கிறீக், அடுத்து கேக்க போறது ஸ்பானியா, அதுக்கு அடுத்து இத்தாலி இதுகள் பஞ்சபரதேசி நாடுகளா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இவைகள் சோம்பேறி நாடுகள்.
 
கிறீக் நாட்டை பொறுத்தவரை....அந்த நாட்டின் பல செல்வந்தர்கள் நிலமையறிந்து தங்கள் பணத்தை ஏற்கனவே பல இடங்களில் பதுக்கி விட்டார்கள்.
இத்தாலியரும் ஸ்பானியரும் சுகபோக வாழ்க்கையை விரும்புபவர்கள். சொந்த நாட்டைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.
இப்ப கடன் கேட்ட நாடு கிறீக், அடுத்து கேக்க போறது ஸ்பானியா, அதுக்கு அடுத்து இத்தாலி இதுகள் பஞ்சபரதேசி நாடுகளா?

இதே நிலை நீடித்தால் பிரான்சும் ஜெர்மனியும் அதன் தொடராக வரும்.

சில வருடங்களின் முன்பு ஜேர்மனியினதும் பிரான்சினதும் பொருளாதாரம் முன்னணியில் இருந்தது.  ஆரம்பத்தில் சில நாடுகள்தான் சேர்ந்திருந்தன. நல்ல நோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டமைப்பு, சமநிலையில் இல்லாத நிறைய நாடுகளை உள்வாங்கிக் கொண்டதால் தடம் புரண்டோடுகிறது. ஏழ்மையான நாடுகளும் இந்த ஒன்றியத்தை தவறாகப் பாவிக்கிறார்கள்.

சரியான நல்லதொரு கருத்து தப்பிலி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.