Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப்போரில் காணாமல் போனோர்; இந்தியா, ஐ.சி.ஆர்.சி.யே பொறுப்பு: கோட்டா

Featured Replies

'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள், இந்திய வைத்தியசாலைகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர். எனவே அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இந்தியாவும் ஐ.சி.ஆர்.சி.யுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

 

இதன்போது, காணாமல் போனோர் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'யுத்தம் இடம்பெறும் நாடொன்றில் காணாமல் போதல், உயிரிழத்தல், காயமடைதல் என்பவை சாதாரணமானவை. கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தம் காரணமாக இராணுவத்தைச் சேர்ந்த மூவாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரையில் தெரியாது.

 

இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற இறுதி இரண்டரை வருட காலப்பகுதியில் இராணுவத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் அங்கவீனமுற்றுள்ளனர்.

 

குறிப்பிட்டதொரு பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் யுத்தம் இடம்பெறும் போது அப்பகுதியில் சிக்குண்டுள்ளவர்கள் மரணிக்க வாய்ப்பு உண்டு. அல்லது காணாமல் போக வாய்ப்புண்டு. யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கில் 100 சதவீதான நிலப்பரப்பு ஆட்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென பலர் பலவந்தமாக அவ்வியக்கத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இவர்கள் யுத்தத்தின் போது இறந்திருக்கலாம். ஆனால், இதுவரை அவர்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை.

 

இறுதி யுத்தத்தின் போது இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த மக்களை முதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இந்திய வைத்தியசாலைகளுமே பொறுப்பேற்றன. அவையே பின்னர் அம்மக்களை பாதுகாப்பு தரப்பினரிடம் அழைத்து வந்தன. இவ்வாறு பாதுகாப்பு தரப்பினரிடம் அழைத்து வரப்பட்டவர்கள் பதியப்பட்டே பொறுப்பேற்கப்பட்டனர்.

 

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட எவரும் இதுவரையில் காணாமல் போகவில்லை. அவ்வாறு காணாமல் போயிருப்பார்களாயின் அது இந்திய வைத்தியசாலைகளிடமோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமோ சரணடைந்த போதோ அல்லது அதற்கு முன்னரோ காணாமல் போயிருக்க வேண்டும்' என்றார்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/57655-2013-01-24-10-25-40.html

Edited by akootha

  • தொடங்கியவர்

வான்மைத்துவமற்ற இராணுவத்தால் போரில் வெற்றிகொள்ள முடியாது: பாதுகாப்பு செயலர்

 

'வான்மைத்துவமற்ற, ஒழுக்கமற்ற இராணுவத்தினால் யுத்தமொன்றை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது. இலங்கை இராணுவம் இந்த இரு விடயங்களிலும் சிறந்து விளங்கியதனாலேயே கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

'எமது இராணுவத்தினரால் சிறு சிறு தவறுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அவை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே இராணுவ தளபதி மேற்படி விசாரணைச் சபையை நியமித்தார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

'இலங்கை இராணுவம் ஒழுக்கமானதாகவும் வான்மைத்துவமிக்கதாகவும் செயற்பட்டு யுத்தத்தை வெற்றிகொண்டதாலேயே சர்வதேச ரீதியில் இலங்கை இராணுவத்துக்கு நற்பெயர் கிடைத்துள்ளது' என்றும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

 

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57658-2013-01-24-11-05-37.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிப்போடு அரிவாளை.. :D

  • தொடங்கியவர்

 இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள், இந்திய வைத்தியசாலைகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர். எனவே அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இந்தியாவும் ஐ.சி.ஆர்.சி.யுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 

 

இந்தியாவும் ஐ.நா.வுமே மக்களை கொன்றனர்   :wub: 

ஐ.நா சீனாவுக்கு பயந்து தமிழ் மக்களை கேடயமாக பாவித்த போது அதற்கு உதவி புரிந்த சில சர்வதேச அமைப்புக்களில் ஒன்று தான் I.C.R.C.  ஐ.நா தான் சிரியாவில் தலையிடவேண்டியிருந்ததால் உள்ளக விசாரணை நடத்தி சில பொட்டுக்கேடுகளை வெளிவிட்டது. அக்கசன் பாமின் 17 அங்கத்தவர்களை இலங்கை அரசு சுட்டுத்தள்ளிய போது, இலங்கைக்கு I.C.R.C. இல் ஒருவரைத்தன்னும் தண்டிக்க வேண்டிய தேவை ஏற்படாதது I.C.R.Cயின் இலங்கை அரசுக்கு சமர்ப்பணமான கடமையாற்றுதலை இலங்கை அரசு மெச்சியிருந்தது என்பதை தான் காட்டுகிறது.மேரி கொலின் உயிருடன் இருந்திருந்தால் I.C.R.C யின் திருகுதாளங்களை வெளிக்கொண்டுவரலாம். இப்போ அவர்களும், நம்பியாரும் தப்பிவிட்டார்கள்.

 

இன்னமும் ஒரு ஆளுக்கு கோத்தாவுக்கும் I.C.R.C க்குமிடையில் நடந்த பேச்சு வார்த்தைகள், கைச்சாத்தான ஒப்பந்தங்கள் பற்றிய  உண்மைகள் தெரியும். அவர் தமிழ் மக்களின் பக்கம் எடுத்து சபையில் வந்து உண்மைகளை சொல்வாரா தெரியாது.

 

வரவிருக்கும் மார்ச்சில் சென்ற மார்ச்சின் வேண்டுகோளுக்கு சிறிலங்கா இணங்கவில்லை என்பதை அமெரிக்கா வெற்றிகரமாக நிரூபித்தால் இவர்களின் வாக்கு மூலங்களை அமெரிக்கா பதியலாம். இல்லையேல் இந்த விசாரணையை சிறிலங்கா போர்குற்ற விசாரணை ஒன்றை மூடிவைக்க பாவித்துவிடும்.

  • தொடங்கியவர்
வரவிருக்கும் மார்ச்சில் சென்ற மார்ச்சின் வேண்டுகோளுக்கு சிறிலங்கா இணங்கவில்லை என்பதை அமெரிக்கா வெற்றிகரமாக நிரூபித்தால் இவர்களின் வாக்கு மூலங்களை அமெரிக்கா பதியலாம். இல்லையேல் இந்த விசாரணையை சிறிலங்கா போர்குற்ற விசாரணை ஒன்றை மூடிவைக்க பாவித்துவிடும்.

 

அப்படி மூடிவிடால் காணாமல்  போயுள்ள 40000+ பேருக்கும் ஐநா வும் இந்தியாவும் பதில்கூற வேண்டி வருமே?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் ஒரு 80,000 சிங்களவரை இரவோடு இரவாக போட்டுத்தள்ளிட்டு இப்படி ஒரு அறிக்கை விட்டால் தான் கோத்தபாய அடங்குவான் போல இருக்கே...! சும்மா திமிறிக்கிட்டே இருக்கிறான். அடங்குடா அடங்கு.. ரெம்ப  ஆடாத.

 

அதுசரி இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஹிந்திய தலைப்பாய் பீரிஸூடம் என்ன சொல்லி அனுப்புவார். கோத்தா வீரன்.. சூரன்.. அவருக்கு நாங்க உதவி செய்யுறம்.. கம்முன்னு இருக்கச் சொல்லியா..??! :(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இந்த அறிக்கையை வைத்து ஐ.நா.மீதும் இந்தியா மீதும் தமிழர்கள் வழக்கு போடவேண்டும்!

பீரிசு திரும்பி வந்தா பிறகு தான் கோட்டா  இந்த கோட்டாவை இந்தியாவுக்கு கொடுத்தார். ஒரு சமயம் பீரிசு அங்கே கோட்டைவிட்டுவிட்டுதான் திரும்பி வந்தார் என்பதுதான் பொருளா. கோட்டா இந்தியாவிடம் என்னை  நீ மார்ச்சில் காட்டிக்கொடுத்தால் உன்னையும் நான் காட்டிக்கொடுப்பேன் என்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
 
எல்லா நிறுவனங்களையும்(NGO) மிரட்டியோ தந்திரமாகவோ அனுப்பி விட்டுத்தானே தமிழ் மக்கள் மீதான கொலையை இலங்கை இராணுவம் செய்தது. இதில் ஐ.சி.ஆர் சி எப்படி சாட்சியாக முடியும்?? 
 
காயப்பட்டவர்களை விசாரித்த இந்திய குழு  காயப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதை விட யார் யார் புலிகள் என்பதை அறிவதில் ஆர்வம் காட்டிய இந்திய உளவித்துறையினர் என்பதை அங்கு சென்ற மக்களே சாட்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.