Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில வித்தியாசங்கள் – சுஜாதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில வித்தியாசங்கள் – சுஜாதா
 
silaneram-300x240.jpg

வாங்குகிற முந்நூற்றுச் சொச்சம் 25 தேதிக்குள் செலவழிந்துவிடுவது சத்தியம். இன்றைய தேதிக்கு என் சொத்து – ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிட்டவள் என் மனைவி. இவளைப் பற்றிக் கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லாததால் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் ‘பட்ஜெட்’டையும், சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம்! ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ வாங்க விரும்புகிறான் கணவன் என்று தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்த மனைவியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இவள் மற்ற நகைகளையும் விற்றாகிவிட்டது. எல்லாம் என் ஆர்வத்தில் ஓர் இலக்கியப் பத்திரிகை தொடங்கி இரண்டு மாதம் நடத்தினதில் போய்விட்டது. அதற்காக நான் அவமானப்படுகிறேன். இலக்கியப் பத்திரிகை நடத்தினதற்காக அல்ல; மனைவியின் சொற்ப நகைகளை விற்றதற்காக!

இன்று தேதி 29. என் கையில் இருப்பது மூன்று ரூபாய். எனக்குத் தேவை 325 ரூபாய். எதற்கு? சென்னைக்கு விமான டிக்கெட் வாங்க. என் அம்மாவின் உடல்நிலை கவலைக் கிடமாக இருக்கிறது. தந்தி வந்திருக்கிறது. அவளைப் பார்க்க உடனே செல்லவேண்டும்.

என் அம்மாவுக்கு இதயத்தில் கோளாறு. 58 வருஷம் அடித்து அடித்து அலுத்துப்போய் திடீரென்று நின்று விடலாமா என்று யோசிக்கும் இதயம். அவளுக்கு உடம்பு பதறும்; சில்லிட்டு விடும். இந்த மாதிரி மூன்று தடவை வந்திருக்கிறது. இந்தத் தடவை தீவிர மாக இருந்திருக்க வேண்டும். என் தம்பி அடித்த தந்தியின் சுருக்கமான வாசகங்கள்… ‘அம்மா கவலைக்கிடம். உடனே வா!’

இதுவரை நான் மேம்போக்காகவே எழுதி வந்திருக்கிறேன். என் உள்ளத்தின் பதற்றத்தைச் சமாளிக்க, என் அம்மாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையை வலியுறுத்த இப்படி எழுதிக்கொள்கிறேன். என் மனத்தின் ஆழத்தில் என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘அம்மா அம்மா அம்மா’ என்று அடித்துக்கொள்வதை யும், என்னுள் இருக்கும் சில இனம் தெரியாத பயங்களையும் நம்பிக்கைகளையும் வார்த்தைகளில் எழுதுவது கஷ்டம். யட்சன் போலப் பறந்து சென்று அவளை உடனே பார்க்க வேண்டும். ‘அம்மா, உன் டில்லி புத்திரன் இதோ வந்துவிட்டேன். ஏரோப்ளேனில் உன்னைப் பார்க்கப் பறந்து வந்திருக்கிறேன். இதோ, உன் அருகில் உன் தலையைத் தடவிக் கொடுக்கிறேன். உனக்குக் குணமாகி விடும்’ – பக்கத்து வீட்டு சாரதாவிடம் ‘என் பிள்ளை பிளேனில் வந்தான்’ என்று பெருமை அடித்துக்கொள்வதற்காகவாவது பிழைத்துகொள்வாள். அதற்கு எனக்கு ரூபாய் 325 தேவை.

எங்கே போவேன் பணத்திற்கு? யார் தருவார்கள்? என் நண்பர்களைப் போய் 29-ம் தேதி கேட்டால் ஹாஸ்யம் கேட்டதுபோல் சிரிப்பார்கள். என் மனைவியிடம் நகைகள் கிடை யாது. என் சொத்தைப் பற்றி முன்னமேயே தெரிவித்திருக்கிறேன். அதனால்தான் ராமநாதனிடம் கேட்கலாம் என்று தீர்மானித்தேன்.

ராமநாதன் எனக்குக் கிட்டத்திலும் அல்லாத, தூரத்திலும் அல்லாத உறவினர். என்ன உறவு என்கிற விவரங்கள் அநாவசியம். செக்ரட்டரியாக இருக்கிறார், முக்கியமான மந்திரிக்கு. சர்க்கார் எத்தனையோ மில்லியன் டன் கோதுமை கடன் வாங்கும்போது, இவர்தான் வெள்ளைக்காரர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஜோடியாகக் கையெழுத்துப் போடுவார். போகாத தேசமில்லை. டில்லியில் நான் எட்டு வருஷங்கள் இருந்திருக்கிறேன். இரண்டு தடவை இவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். இரண்டு தடவையும் நடந்தது, எழுதும்படியாக இல்லை. நானும் இவரும் இருப்பது வேறு வேறு மட்டங்களில். உறவுப் பிணைப்பை வைத்துக்கொண்டு இந்த வித்தியாசத்தை இணைப்பது சாத்தியமாகாது என்று அறிந்து, மரியாதையாக ஒதுங்கிவிட்டேன். தற்போது என் பணத் தேவை, அந்த அவமானங்களை எல்லாம் மறக்கச் செய்துவிட்டது. அவரைப் பார்க்கக் கிளம்பினேன்.

ஹேஸ்டிங்ஸ் ரோடில், அமைதியில் பச்சைப் புல்தரை ஏக்கர்களுக்கு மத்தியில், நாவல் மரங்களின் நிழலில், ஏர்கண்டிஷனர், நாய், அம்பாஸடர் கார் சகிதம் இருந்தது அவர் வீடு. வீட்டு வாசலில் கதர் அணிந்த சேவகர் என்னைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார். என் பெயர் சொல்லி, நான் அவர் உறவுக்காரர் என்பதையும் சொன்னேன். என்னை ஏதோ நாய் கொண்டு வந்து போட்ட வஸ்துவைப் போலப் பார்த்து, உள்ளே போகுமாறு சொன்னார் சேவகர் (‘ர்’ மரியாதையைக் கவனிக்கவும்).

ராஜகுமாரன் மாளிகையில் ‘சிண்ட்ரெல்லா’ நுழைவதுபோல் உணர்ந்தேன், உள்ளே செல்லும்போது.ஒரு ஹால்… தவறு, ஹா££ல்! கீழே கம்பளம். பக்கத்தில் ‘டெலிஃபங்கன்’ கம்பெனியின் ரேடியோகிராம் (ராமநாதன் அவர்கள் மேற்கு ஜெர்மனி சென்றிருக்கிறார்). டிரான்சிஸ்டர், மடங்கிப் படுக்கையாகத் தயாராக இருக்கும் சோபா. ரெஃப்ரிஜிரேட்டர் திறந்திருந்தது. அதில் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட சாராய பாட்டில்கள். மேலே காந்தி படம்.

ரேடியோகிராமிலிருந்து பலமாக கிதார் சங்கீதம் கேட்டுக்கொண்டிருந்தது. அதன் துடிப்பிற்கு ஏற்ப கால்களால் தாளம் போட்டுக்கொண்டு ஓர் இளைஞன், சோபாவில் முக்கால்வாசி படுத்துக் கொண்டு, ‘ப்ளேபாய்’ வாசித்துக்கொண்டிருந்தான். நான் வந்ததையோ, நின்றதையோ கனைத்ததையோ கவனிக்கவில்லை. அருகே சென்று, தாழ்வாக இருந்த நடுமேஜையில் ஒரு தட்டு தட்டினேன். கவனித்தான்.

”யெஸ்..?” என்றான் பையன். ராமநாதனின் ஒரே பையன்.

”அப்பா இருக்கிறாரா?”

”ஹி இஸ் டேக்கிங் பாத். ப்ளீஸ் வெய்ட்” என்றான்.

அவனுக்கு முடிவெட்டு தேவையாய் இருந்தது. அணிந்திருந்த சட்டை, பெண்கள் அணியவேண்டியது. போட்டிருந்த பேன்ட்டில் நுழைவதற்கு அசாத்திய சாமர்த்தியம் வேண்டும்.

”ஐம் ராஜேஷ்” என்று என்னை நோக்கிக் கையை நீட்டினான்.

”என் பெயர் ராஜாராமன். நான் உங்களுக்கு ஒரு விதத்தில் உறவு” என்றேன். நான் தமிழை விடுவதாக இல்லை.

”இஸ் இட்?” என்றான்.

”நீ அவர் பையன்தானே?”

”யெஸ்!”

”தமிழ் தெரியுமா?”

”யெஸ்!”

”பின் தமிழில் பேசேன்!”

”ஹான்ஸ்ட்லி ஐ லாஸ்ட் டச்” என்று சிரித்தான். எனக்கு லேசாகத் தலைவலிக்க ஆரம்பித்தது. மெதுவாக எழப்போகும் கோபத்துக்கு அறிகுறி.

”நீ என்ன படிக்கிறே?”

”ப்ளேபாய்”

”இதில்லை. எத்தனாவது படிக்கிறே?”

”சீனியர் கேம்பிரிட்ஜ்!”

ராமநாதன் உள்ளேயிருந்து வந்தார். நேராக இடப்பக்கம் இருந்த அறையை நோக்கி நடந்தார்.

”நமஸ்காரம் சார்!”

தயங்கி என்னைப் பார்த்தார். கண்களில் அவர் ஞாபகத்தில் என்னைத் தேடுவது தெரிந்தது… ”ஓ, ஹலோ! வாப்பா ராமச்சந்திரன்.”

”ராஜாராமன் சார்!”

”ஓ, எஸ்! ராஜாராமன், சௌக்யமா? ஒரு நிமிஷம்” என்றபடி மறைந்தார்.

ஓர் அசிங்கமான தயக்கம். ராஜேஷ் என் எதிரில் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தான். அவன் வயதில் நான் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கோல்ட்ஸ்மித் படித்துக்கொண்டு இருந்தேன். இவன் ட்விஸ்ட் சங்கீதமும், ஓர் இடத்திலும் தேங்காத இந்த யுகத்தின், இந்த நிமிஷத்தின் அமைதியற்ற துடிப்புமாக, என்னை மியூசியம் பிறவியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

ராமநாதன் அறையை விட்டு வெளியே வந்தபோது, வெளியே கிளம்புவதற்குத் தயாராக முழுக்க உடையணிந்திருந்தார். பீர் அதிகம் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட இளம் தொந்தி. கண்ணாடி, அலட்சியம், புன்னகை, அபார உயரம், கீழ் ஸ்தாயிப் பேச்சு எல்லாம் வெற்றிக்கு அடையாளங்கள்.

”ஸோ..?” என்றார், என்னைப் பார்த்து. மேஜை மேல் வைத்திருந்த சிகரெட் பெட்டியை எடுத்து, தேவ் ஆனந்த் போல் ஒரு தட்டுத் தட்டி வாயில் பொருத்தினார். ”ஸ்மோக்..?” என்றார். ”இல்லை” என்றேன். லைட்டரின் ‘க்ளிக்’கில் ஜோதி எம்பிப் பற்ற வைத்துவிட்டுத் தணிந்தது.

ராஜேஷ், ”டாட்! கேன் ஐ டேக் தி கார்?” என்றான்.

”நோ, ராஜ்! எனக்கு ஒரு கான்ஃபரன்ஸ் போக வேண்டும்.”

”ஐ வில் ட்ராப் யூ” என்றான் கெஞ்சலாக.

”ஓ.கே! ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு. பெட்ரூமில் சாவி இருக்கிறது. அம்மாவை எழுப்பாதே. அவள் தூங்கட்டும்!”

நான் மரமண்டை இல்லை. எனக்கு ஐந்து நிமிஷம் கொடுத்திருக்கிறார். அதற்குள், வந்த காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

”யெஸ்… ராமச்சந்திரன், எப்படி இருக்கே? ஜானகி எப்படி இருக்கா?”

”ராஜாராமன், சார்!”

”என்ன?”

”என் பெயர் ராஜாராமன், சார்!”

”யெஸ்! ராஜாராமன். இல்லை என்று யார் சொன்னார்கள்! ஒருவரும் அதை மறுக்கவில்லையே!” என்று சிரித்தார்.

”சரி, ஜானகி எப்படி இருக்கா?”

”ஜானகி செத்துப் போய் இரண்டு வருஷங்கள் ஆச்சு!”

”ஓயெஸ்… ஓயெஸ்… ஐ ரிமெம்பர் நௌ. இட்ஸ் எ பிட்டி. அவளுக்கு எத்தனைக் குழந்தைகள்?”

”ஒரே பையன். இரண்டு வயசுப் பையன்.”

”ஆமாம்… ஜானகி தம்பி ஒருத்தன் டில்லியிலே செக்ரடேரியட்டிலே வேலையாயிருக்கிறான் இல்லையா?”

‘விண் விண்’ என்று தலைவலி தெறித்தது எனக்கு. கோபம் கலந்த தலைவலி!

”நான்தான் சார், ஜானகி தம்பி!”

”ஸோ ஸாரி! எனக்கு ரொம்ப மோசமான மெமரி. நம்ம ரிலேஷன்ஸ் கூட டச்சே விட்டுப்போச்சு! சௌக்கியமா இருக்கிறாயா?”

”சௌக்கியம் சார்!”

”இப்ப என்ன வேணும் உனக்கு?”

அந்த நேரம் வந்துவிட்டது. திடீரென்று இரண்டடி உயர மனிதன் போல் உணரும் நேரம். இந்திரன் போல் கூச்சப்பட வேண்டிய நேரம். பணம் கேட்க வேண்டிய நேரம்.

”எனக்கு 350 ரூபாய் பணம் வேணும், சார்! எங்க அம்…”

”நினைச்சேன்! எப்ப வேணும்?”

”இப்ப சார்! எங்க அம்மா…”

”இரு, என்கிட்ட பணமா இருக்கானு பார்க்கிறேன்” என்று பர்சை எடுத்தார். பிரித்தார். எட்டிப்பார்த்தார். ”மஹும்! இல்லை. ‘செக்’ எழுதித் தருகிறேன். ஸ்டேட் பாங்கிலே மாத் திக்கிறாயா?”

”சரி, சார்! ரொம்ப வந்தனம். எங்க அம்மாவுக்கு…”

”திருப்பித் தருவாயா?”

”கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி விடுகிறேன், சார்! எங்க அம்…”

எழுந்துபோய்விட்டார், ‘செக்’ புஸ்தகம் கொண்டுவர.

‘மடையனே, என்னைப் பேச விடேன்! எனக்கு இந்தப் பணம் எதற்கு என்று சொல்ல விடேன்! என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால்தான் உன்னிடம் வந்து தொங்குகிறேன் என்று பேச விடேன்!’

‘செக்’ புஸ்தகம் கொண்டு வந்தார். பேனாவைப் பிரித்தார்.

”உன் முழுப்பெயர் என்ன?”

சொன்னேன்.

”ஸ்பெல்லிங்..?”

சொன்னேன்.

‘செக்’ எழுதி கையில் கொடுத்தார். கொடுக்கும்போது, ”நான் இதை அடிக்கடி செய்யறதா எனக்குப் படுகிறது” என்றார்.

”எதை சார்?”

”இந்த மாதிரி உறவுக்காரங்களுக்கு ‘செக்’ எழுதறதை!”

”இல்லை, சார்! என் கேஸிலே ரொம்ப அவசரமான தேவை. எங்க அம்மாவுக்கு சீரி…”

”அது சரி, தேவை எல்லாருக்கும் தான் இருக்கு. இந்தத் தேசத்துக்கே பணம் தேவை. உன் கேஸையே எடுத்துக்கலாம். இத்தனை நாள் டில்லியிலே இருந்திருக்கே. எத்தனை தடவை வீட்டுக்கு வந்திருக்கே?”

என் கோபம், என்னைப் பதில் சொல்ல விடவில்லை.

”எப்போ வருகிறாய்? உனக்குப் பணம் தேவையாக இருக்கும்போது! நான்தான் இருக்கேனே ‘செக்’ எழுதுகிற மிஷின்! என் கழுத்தில் போர்டு போட்டுத் தொங்கவிட்டிருக்கு இல்லையா, ‘ஏமாளி’ என்று. நம்ம சவுத் இண்டியன் மென்ட்டாலிட்டியே அப்படி! நான் பொதுவாகத்தான் சொல்கிறேன். உன்னைத் தனியாகச் சொல்லவில்லை…”

அவர் மேலே பேசப் பேச, என் கோபம் ‘போயிங்’ விமானம் புறப்படும் சப்தம் போல் மெதுவாக ஆரம்பித்து, உலகத்தையே சாப்பிடும் வேதனை எல்லை வரை உயர்ந்தது.

”அன்னிக்கு அப்படித்தான் ரெண்டு பேர் வந்தாங்க… நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு உறவு…”

பாதியில் நிறுத்திவிட்டார். ஏன்? நான் அவர் கொடுத்த ‘செக்’கை அவர் முகத்தின் முன்னால் நாலாகக் கிழித்துப் பறக்கவிட்டேன். ”சார்! உங்க பணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்க கிட்டே வந்ததே தப்பு. தேவை, மிக மோசமான தேவை.இல்லைன்னா உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டேன். நீங்க கான்ஃபரன்ஸூக்குப் போங்க. இந்த தேசத்தைப் பரிபாலனம் பண் ணுங்க!”

அவர் முகம் மாறியது. ”ராஜாராமன், கடன் வாங்க வந்தவனுக்கு இவ்வளவு கோபம் உதவாது! நீ இப்படிக் கேவலமாக நடந்துகொண்டதற்கு உன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும். மரியாதையாகப் போயிடு. கெட் லாஸ்ட் யூ பாஸ்டர்ட்!”

”கெட் ரிச் யூ பாஸ்டர்ட்!” என்று சிரித்தேன்.

”மன்ஸாராம்!” என்று சேவகனைக் கூப்பிட்டார்.

மன்ஸாராம் வருவதற்குள் ராஜாராம் கழண்டுகொண்டேன்.

வெளியில், வெயிலில் வந்து நின்ற என் நிலைமையைப் பாருங்கள். கௌரவம், மானம் என்பதெல்லாம் பணமுள்ளவர்களுக்கு உரியவை. எனக்கு ஏன்? அவர் சாதாரணமாகத் தான் பேசினார். அவர் வெறுப்பு அவருக்கு. அந்த வார்த்தைகளைப் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்து விட்டு, ‘செக்’கை வாங்கி மாற்றி டிக்கெட் வாங்கியிருக்கலாம்.

ஆனால், அந்தச் சமயம் நான் செய்த முற்றிலும் எதிர்பாராத செயலில், அந்த ஒரு தருணத்தில் பூர்ணமாக வாழ்ந்தேன் நான்.

நீங்கள் இவ்வளவு பொறுமையாக இதுவரை படித்ததற்கு நன்றி! கடனாக 325 ரூபாய் கொடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக்கொடுத்து விடுகிறேன். என் அம்மாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவளை உடனே போய்ப் பார்க்க வேண்டும், ப்ளீஸ்!

- 29-06-1969

sila-vithyasangal.jpg?w=600

முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய சிறுகதைகளை இப்போது மறுபடி நோக்கும்போது கதையின் கவலைகள் எதையும் திருத்தத் தேவையில்லை என்பது திருப்தி அளிக்கிறது. முப்பது வருடங்களில் விலைவாசி தான் உயர்ந்திருக்கிறது முப்பது மடங்காக.

- சுஜாதா

சுஜாதாவின் கதை என்றாலே தனி அலாதிதான் . இணைப்பிற்கு நன்றி நுணா .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

p91.jpg

ல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது.

ராஜலட்சுமி, கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் பிளட் பிரஷர் விலகும். பால் வராவிட்டால் என்ன? மேனகா கொஞ்சம் லேட் பண்ணால் என்ன? டெலிபோன் ஒலித்தால் என்ன?ல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது.

மேனகா சற்றே பயத்துடன் சைக்கிளில் இருந்து இறங்கினாள்.

அவள் பேன்ட்டும் பட்டனில் அலட்சியமாக இருந்த சட்டையும் ராஜலட்சுமியின் கோபத்தை இன்னும் அதிகரித்தன.

”எப்பம்மா வந்தே?”

”போன் அடிக்கிறது… கதவைத் திற” என அதட்டினாள்.

மேனகா, ”ஈஸி மம்மி!”

”சரி போடீ… கதவைத் திற முதல்ல… அப்புறம் பெரியவாளுக்கு உபதேசம் பண்ணு.”

”லுக் அட் திஸ்! நான் என்ன உபதேசம் பண்ணேன்?”

கதவைத் திறந்து, போனை நோக்கி ஓடி அதை எடுப்பதற்கு முன் போன் அடிப்பது நின்றுபோனது.

”சே…” என்று சோபாவில் விழுந்தாள்.

”ரிலாக்ஸ் மம்மி! முதல்ல ஈரப் புடைவையை மாத்தலாமா?” என்றாள்.

அத்தனை கோபத் திலும் மேனுவின் அழகான சடையின் கருநாகம் போன்ற வளர்த்தி பயமுறுத்தியது. கல்யாணம் பண்ண வேண்டும். நல்ல கணவனாகப் பார்த்து… என் கணவனைப் போல் இல்லாமல்.

போன் மறுபடி ஒலிக்க, மேனு எடுத்தாள்.

”…………..?”

”ராங் நம்பர்” என்றாள்.

எதிர் போன் மறுபடி ஏதோ கேட்க, மேனகா ”ஆமாம்… நம்பர் கரெக்ட்தான். உங்களுக்கு யார் வேணும்?”

”………….”

p91a.jpg

”மிஸஸ் ராமச்சந்திரன்னு யாரும் இல்லை இங்கே.”

”இரு” என்று அவளிடம் இருந்து ராஜ லட்சுமி போனைப் பிடுங்கிக்கொள்ள…

”யாரும்மா மிஸஸ் ராமச்சந்திரன்?”

ராஜலட்சுமி போனை எடுக்கும்போது அவள் கரம் நடுங்கியது.

”ராமச்சந்திரன்கறது உங்கப்பா பேரு.

ஹலோ… யாரு?”

”மிஸஸ் ஏ.வி.ராமச்சந்திரன் வீடுங்களா அது? நம்பர் கொடுத்தாங்க” என்று கேட்டது. நடுத்தர வயதுப் பெண் குரல்.

”ஆமாம், நீங்க யாரு..?”

”நான் எம்.ஆர். ஆஸ்பிட்டல்லேருந்து மேட்ரன் பேசறேன்.”’

”என்ன விஷயம்?”

”உங்க ஹஸ்பண்ட் இங்கே அட்மிட் ஆகி, போன ஒரு வாரமா நினைவு இல்லாமப் படுத்திருக்காரு. அட்மிஷன் ரிஜிஸ்தர்ல அட்ரஸும் போன் நம்பரும் இருக்குது. சார்ஜஸ் யாரும் ஏதும் கட்டலே… அதுக்குத்தான்…”

”அவருக்கு என்ன?”

”த்ராம்பாஸிஸ். நினைவு இல்லாமக் கிடக்கிறார். கேட் ஸ்கேன் எடுக்கறதுக்கு எழுதியிருக்காரு டாக்டர். ஆனா, யாரும் பணம் கொடுக்காததனால…”

ராஜலட்சுமியையே மேனகா உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்க…

”அட்ரஸ் சொல்லுங்க.”

”எம்.ஆர். ஆஸ்பத்திரி தெரியாதா… பூந்தமல்லி ஹைரோடுல ஈகா தியேட்டர் தாண்டினவுடனே திரும்பினீங்கன்னா…”

”ரூம் நம்பர் சொல்லுங்க.”

”பதினாலுல படுத்திருக்கார். வரீங்களா? கேஷா கொண்டுவந்தா நல்லது.”

”எத்தனை கொடுக்க வேண்டி இருக்கும்?”

”ஆயிரத்து எழுநூத்துச் சொச்சம் பாக்கி.”

”சரி… வரேன்” என்றாள் ராஜலட்சுமி.

”யாரும்மா?”

”உங்கப்பாடீ.”

”என்னவாம்?”

”ஆஸ்பத்திரியில பேச்சு மூச்சில்லாமப் படுத்திருக்காராம்.”

”அதனால?”

”பணம் பாக்கியிருக்காம்… டிஸ்சார்ஜ் வாங்கிட்டு…”

”என்னம்மா பேத்தறே? அவன் யாரு… அவனைப் போய் நீ என்ன பார்க்கறது?”

”அவன்லாம் பேசாதேம்மா… என்ன இருந் தாலும் உன் அப்பா அவர்.”

”நோ மம்மி, நோ… அந்தாளு உன்னைவிட்டு எத்தனை வருஷம் ஆச்சு?”

அப்போது மேனு மூன்று வயதுக் குழந்தை.

”அவன் மூஞ்சிகூடத் தெரியாதும்மா. உன்னைத் தனியா விட்டுட்டு… யாரவ… அவ பேர் என்னவோ சொன்னியே… யாரு அவ?”

”புனிதவல்லி.”

ராஜலட்சுமி ஈரப் புடைவையை மாற்றிக் கொண்டு, தலையை அவசரமாக வாரிக் கொண்டு, பர்ஸில் இருக்கும் பணத்தை எண்ணி செக் புத்தகத்தை எடுத்துக்கொண்டாள்.

”என்னம்மா, நான் சொல்லச் சொல்ல காது கேக்கலையா?”

”என்ன?”

”அங்கே போகப்போறியா?”

”ஆமாம். நீயும் வரே!”

”நோ வே! இந்த ஜென்மத்தில் நடக்காது.”

”மேனு, அப்புறம் விதண்டாவாதம் பண்ண லாம். இப்போ என்கூட வந்தே ஆகணும். நீ வேணும்னா பாக்க வர வேண்டாம்.”

”மம்மி, உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?”

பவுடர் போட்டுக்கொண்டு நெற்றிப் பொட்டை விஸ்தாரம் பண்ணிக்கொண்டு, ”பாரு, உன் அப்பா இல்லை, என் கணவன் இல்லேன்னாலும் ஒரு ஸ்ட்ரேஞ்சர்னு வெச்சுக்கலாமே…”

”மம்மி, யூ ஆர் அன்பிலீவபிள்! பாரத நாரி! என்ன, இப்படி ஒரு மதர் இண்டியா வேஷம் – பதினஞ்சு வருஷமா எட்டிப் பார்க்காத பன்னாடைக்கு.”

”அதுக்கு முன்னாடி பதினஞ்சு வருஷம் பழகியிருக்கேனே!”

”இது பைத்தியக்காரத்தனம். நான் பரத்துக்கு போன் பண்ணிச் சொல்லப் போறேன்.”

”எல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம். வரப் போறியா, நான் தனியா போகணுமா?”

ட்டோவில் போகும்போது மழை விடாமல் அவள் கால் ஓரத்துப் புடைவையை நனைத்தது. சின்ன பள்ளங்களில் எல்லாம் துள்ளித் துள்ளி அந்த ஆட்டோ செல்ல, மழை இரைச்சலின் இடையே மேனு புலம்பிக்கொண்டே வந்தாள்.

”இந்த மாதிரியும் ஒரு ஆள்… இந்த மாதிரியும் ஒரு மனைவி.”

p91b.jpg

”பேசாம வா முதல்ல. அவரைப் போய்ப் பார்க்கலாம் என்ன ஸ்திதின்னு.”

”அந்தாளு போயாச்சு. காலி கிளாஸ்.”

எதற்காக அவரைப் பார்க்கப்போகிறேன். என்னைப் பாடுபடுத்தியதற்குப் பகவான் கொடுத்த தண்டனையைக் கண்கூடாக – ஊர்ஜிதமாகப் பார்ப்பதற்கா… இல்லை, இன்னா செய்தாரை நாணவைப்பதற்கா… ஏன்தான் இப்படிப் படபடப்பாகப் பதினைந்து வருஷம் காணாத கணவனை நோக்கிச் செல்கிறேன்?

‘இந்த லெட்டர் யாரு எழுதியிருக்கா..?’

‘படிச்சுப் பாத்தியே… கடைசியில என்ன எழுதியிருக்கு – புனிதவல்லின்னுதானே?’

‘யாரு இந்தப் புனிதவல்லி?’

‘யாராயிருந்தா உனக்கென்ன..?’

‘ஃப்ரெண்டா?’

‘இப்போதைக்கு அப்படித்தான்.’

‘அப்புறம்?’

‘கல்யாணம் பண்ணிக்க சான்ஸ் இருக்கு.’

‘இப்படிக் கூசாம நேரா ஆணி அடிச்சாப்ல தாலி கட்டின பொண்டாட்டிகிட்ட சொல்றியே பிராமணா… இது நியாயமா? நான் என்ன குறைவெச்சேன் உங்களுக்கு?’

‘ஒரு குறையும் இல்லை ராஜி.’

‘பின்னே எதுக்கு இவ?’

‘அதுவந்து ஒருவிதமான தேவை ஆயிடுத்து ராஜி. உனக்குச் சொன்னா புரியாது. உனக்கு எந்தவிதமான குறையும் இல்லாம…’

‘உங்கப்பாவுக்குத் தந்தி கொடுத்து வரவழையுங்கோ.’

‘வரவழைச்சா போச்சு. எனக்குப் பயமில்லை.’

‘எனக்குப் புகலிடம் இல்லை… தைரியம் இல்லை… படிப்பு இல்லை… சாமர்த்தியம் இல்லை… ஒரு வேலை பாக்கத் தெம்பு இல்லேங்கறதாலதானே இப்படி அழிச்சாட்டியமா…’

‘பீ ரீசனபிள். இதனால எந்தவிதத்துல நீ பாதிக்கப்படறே? உன்னண்ட குறை இருக்கணும்னு கட்டாயம் இல்லை. பல பேர் ரெண்டு பொண்டாட்டி கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கா, தெரியுமோல்லியோ? பெருமாளே… சீதேவி பூதேவினு…’

‘எனக்குச் சந்தோஷம் கிடையாது இதுல.’

‘இப்போ யாரு கல்யாணம் பண்ணப் போறதா சொன்னா? ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன். அசடு… போ, மூஞ்சி அலம்பிண்டு பிள்ளையார் கோயிலுக்குப் போயிட்டு வா…’

‘தயவுபண்ணி எனக்குத் துரோகம் பண்ணிடாதீங்கோ. எனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை. அண்ணா வீட்டுல எனக்கு வாழ்வு இல்லை. ஒண்டியா என்னால எதும் யாரையும் எதிர்க்க முடியாது. ப்ளீஸ்! என்னைக் கைவிட்டுடாதீங்கோ.’

‘சே, அப்படி நடக்காது. எழுந்திரு. காலை விடு முதல்ல!’

மேனகா ரிசப்ஷனில் இருப்பதாகச் சொன்னாள். ”எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம். சரியா அரை மணிதான் காத்திருப்பேன்” என்றாள்.

”எங்கேயும் போயிடாதே செல்லம். ப்ளீஸ், இன்னிக்கு மட்டும் அம்மாவுக்கு ஒத்தாசையா இரும்மா.”

”அழாத போ.”

14-ம் எண் அறையை மெள்ள அடைந்தாள் ராஜலட்சுமி. வெண்மை சக்கரத் திரை லேசாக ஃபேன் காற்றில் அசைந்துகொண்டு இருக்க, ட்ரிப் கொடுத்து மார்பு வரை போர்த்தி அந்த ஆசாமி படுத்திருந்தான். வாயில் குழாய் செருகியிருந்தது. அறையில் வேறு யாரும் இல்லை. ராஜலட்சுமி படுக்கையின் கால்மாட்டை அணுகினாள். கண்ணீர் இயல்பாக வடிந்தது. ராமச்சந்திரனின் முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான தாடி இருந்தது. ஊசிக்காகப் பொத்தல் பண்ண பல இடங்களில் கரு ரத்தமாக இருந்தது. வாய் திறந்திருந்தது. மூச்சு மட்டும் கேட்டுக்கொண்டு இருக்க, கண்கள் மூடி இருந்தன.

‘இந்த முகமா… இந்த முகமா… இதுவா நான் பிரிந்த கணவன்?’

‘நீ சிவப்பா… நான் சிவப்பா… சொல்லு?’

‘நீங்கதான். இதிலென்ன சந்தேகம்.’

‘சின்ன வயசில் கடுக்கன் போட்டுண்டு காது தொள்ளைக் காதா போயிருக்கும் வைர கனம் தாங்காம. எங்கப்பா பாபநாசம் மைனர் பேரு ஆயிரம் வேலி நிலம் ஒழிச்சே கட்டினார்.’

”வந்துட்டீங்களா?” என்று குரல் கேட்கத் திரும்பினாள். ஒரு நர்ஸ் விரைவாக உள்ளே வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள்.

”இவர்தான்… இவர்தான்…”

”அவங்க சம்சாரமா நீங்க?”

”ஆமாம்மா…”

”ராஜலட்சுமி உங்க பேரு.”

நர்ஸ் சார்ட்டை எடுத்துக் கையை எடுத்து நாடி பிடித்து கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

”இப்போ இவருக்கு எப்படி இருக்கு?”

”டாக்டர் சொல்வாரு. ஆமா, ஒரு வாரமா இந்த மாதிரி போட்டுட்டுப் போயிட்டீங்கன்னா எப்படிங்க யாருன்னு தெரியும்? கேட் ஸ்கேன் எடுக்கணும்னு நியூரோ என்.எஸ். அனத்தறாரு.”

”இவருக்கு எப்படி இருக்கு?”

”அதான் பாக்கறீங்களே. பெட்சோர் வராமப் பாத்துக்கிட்டு இருக்கோம். அவ்ளோதான்.”

”பேசறாரா?”

”மாரைச் சொறிஞ்சா எப்பவாவது முழிச்சுப் பாரு. அந்தம்மா யாரு… முதல்ல வந்தாங்களே?”

பதில் சொல்லவில்லை.

”பேசாம டிஸ்சார்ஜ் வாங்கிட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருங்க. இங்கே ஒரு நாளைக்கு இருநூத்தம்பது ஆகுதில்லே!”

”ராமு சார்” என்று வலுக்கட்டாயமாக ராமச்சந்திரனை ஆட்டினாள் நர்ஸ்… திடுக்கிட்டு விழித்துக்கொண்டு பார்த்தான்.

”நான் வந்திருக்கேன்” என்றாள்.

”தலையணை மாத்திரலாமா?”

கண்கள் கலங்கியிருந்தன. எலும்பாக இருந்த கையைப் பிடித்தாள்.

”ராஜி வந்திருக்கேன்” என்றாள்.

கண்கள் அவளை அடையாளம் தேடினவா, கண்டுகொண்டனவா, கண்டுகொண்ட பின் துக்கப்பட்டனவா… ஏதும் தெரியாமல் மறுபடி கண் மூடிக்கொண்டான்.

”பேசுவாரா?”

”இல்லீங்க. பேச்சு, மூமென்ட் ஏதும் இல்லை. லம்பார் பங்க்சர் எடுத்தப்ப கட்டி கட்டியா ரத்தம்.”

”ஆகாரம்..?”

”எல்லாம் டியூப் வழியாதான். என்.எஸ். வந்தா கேட்டுருங்க. டிஸ்சார்ஜ் பண்ணிட்டு, வீட்டுக்கு எடுத்துட்டு ஒரு நைட் நர்ஸைப் போட்டு வெச்சுக்கறதுதான் நல்லது.”

”அவங்க யாரும் வரலையா..?”

”யாரு? வந்து அட்மிட் பண்ணதோட சரி. ஒரு சிவத்த ஆளு அந்தம்மாகூட வந்திருந்தாரு. என்னவோ அவங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டாங்க. ‘அவளை வரச் சொல்லி ஒப்படைச்சுரு’னு திருப்பித் திருப்பி வாதாடிக்கிட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட கொஞ்சம் கடுமையாகூட இருக்க வேண்டியிருந்தது… பேரு என்னவோ சொன்னாங்களே? ராமு ராமுன்னு

கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க.”

”புனிதவல்லி.”

”ரெண்டு

சம்சாரமா? ராமு சார்… பெரிய ஆளு நீங்க” என்று ராமச்சந்திரனின் கன்னத்தை லேசாக நர்ஸ் தட்ட… அதற்கேற்ப தலை ஆடியது.

”நீங்க மூத்தவங்களா?”

”ஆமாம்.”

”எத்தனை நாளா இப்படி?”

ராஜலட்சுமி சட்டென்று முகத்தை மூடி விசும்பி விசும்பி அழுதாள். ”என்.எஸ். வர்ற நேரம். அழுவாதீங்க. கோவிப்பாரு.”

கண்களைத் துடைத்துக்கொண்டு ”கீழே என் பெண் மேனகானு பேரு… வரச் சொல்றீங்களா?”

”வார்டு பாய்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறேன். டிஸ்சார்ஜ் வாங்கிட்டுப் போயிருங்க… செலவு குறையும். எனக்கு என்னவோ அதிக நம்பிக்கையா தெரியலீங்க. நெறைய ரெஸ்ட் எடுத்தா செலப்ப சரியாகும். பிரெட் எதாவது வேணுமா, சொல்லுங்க.”

”இதுதானா எங்கப்பா?”

திடுக்கிட்டுத் திரும்ப, மேனகா நின்று கொண்டு இருந்தாள்.

”இதானா அந்தாளு?”

”சத்தம் போடாதீங்கம்மா… மற்ற ரூம்கள்ல பேஷண்டுங்க இருக்காங்க இல்லை? பாப்பா, நீ இவரு மகளா?”

”அப்டின்னு சொல்லித்தான் தெரியும். மம்மி, பாத்தாச்சில்ல. போக வேண்டியதுதானே? அப்புறம் ஆட்டோ, பஸ் எதும் கெடைக்காது.”

”இரு மேனு. டாக்டர் வரப்போறாராம். அவரைப் பாத்து…”

”அவரைப் பாத்து..?”

”என்ன விஷயம்னு கேக்கணும். யாராவது பொறுப்பேத்துக்கணும்ல?”

”மம்மி, இதில் நாம தலையைக் கொடுக்கறது நல்லதில்லை. நான் கீழே ஆபீஸ்ல விசாரிச்சேன். முதல் மூணு நாளைக்கு பேமென்ட் பண்ணி இருக்கா. அதுக்கப்புறம் யாரும் வரலை. பாக்கி மட்டும் ஆயிரத்தெழுநூறு ரூபா இருக்கு. அதைக் கொடுத்தாத்தான் டிஸ்சார்ஜ் பண்ணுவா.”

”பணம் பெரிசில்லை மேனு…”

”அந்தப் பொம்பளை வந்திருந்தாங்களா அம்மா?”

”சொன்னேனே… முத நாள் மட்டும் வந்து ரெண்டு பேத்துக்குள்ள ஏதோ வாக்குவாதம் பண்ணிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் யாரும் வரலை.”

”அவங்க அட்ரஸ் இருக்குமா?” என்று மேனகா கேட்டாள்.

”ரிஜிஸ்தர்ல இல்லை.”

”ரிஜிஸ்தர்ல நம்ம அட்ரஸ், போன் நம்பர்லாம் கரெக்டா அவா யாரோ கொடுத்திருக்காம்மா.. ரொம்ப க்ளவரா பண்ணியிருக்கா. எனக்கு அந்தப் புனிதவல்லி எங்கே தங்கறானு தெரிஞ்சாகணும்.”

”மயிலாப்பூர்ல எங்கயோ… அதுக்கென்ன இப்போ?”

”அதுக்கென்னன்னா? இந்தாளை டிஸ்சார்ஜ் பண்ணிக் குண்டுக்கட்டா அவ வீட்டு வாசல்ல கொண்டுவெச்சுட்டு வர வேண்டாமாம்மா.”

”என்ன மேனு?”

”ஆமாம்மா. சரியா கேட்டுக்கோ. இவனை வீட்டுக்குகீட்டுக்கு அழைச்சுண்டு வர்றதா ஏதாவது யோசனை இருந்தா கைவிட்டுரு முதல்ல. இப்படித் திருட்டுத்தனமா நம்ம விலாசத்தைக் கொடுத்துட்டு அவா பொறுப்புல இருந்து கழட்டிக்க முடியாது. திஸ் இஸ் ஜஸ்ட் நாட் ஆன்.”

”மேனு, இந்தச் சமயத்துல இதெல்லாம் பத்தி ஆர்க்யூ பண்ண வேண்டாம்னு தோண்றது.”

”பேச்சே கிடையாது சிஸ்டர்… இந்தாளு எங்கம்மாவை எப்படி ட்ரீட் பண்ணியிருக்கார் தெரியுமா… என் அண்ணா பரத் சொல்லி இருக்கான். அப்போ நான் கைக் குழந்தை. மழையில நிஜமாவே தமிழ் சினிமாவுல வர்ற மாதிரி வாசல்ல தள்ளிக் கதவைச் சாத்தி இருக்காரு. ஒரு மெடிக்கல் ஷாப்புல ராத்திரி மழை நிக்கற வரைக்கும் காத்திருந்தோம். ராத்திரி சாப்பாடே இல்லை. இவங்க அண்ணா வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டியிருக்காங்க. அவங்க சம்சாரம் பால்கனியில இருந்தே திருப்பி அனுப்பியிருக்காங்க. இதெல்லாம் இமாஜின் பண்ணிப் பார்க்க முடியாது உங்களால. வாங்க மம்மி, போகலாம்.”

”அப்படியா… ராமு சார், அப்பேர்ப்பட்ட ஆளா நீ?” என்று படுத்திருந்தவன் கன்னத்தை நர்ஸ் தட்டுவதற்கேற்ப, தலை மறுபடி ஆடியது.

”எந்த நியாயத்தின் பேர்ல இவரை நாங்க உள்ளே சேர்த்துக்க முடியும். சொல்லுங்க.”

”நர்ஸ், இப்போ இந்தாளு இதுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய நிலையில் இலை. ஒரு மூட்டை மாதிரிதான் ஃப்ளாட்ஃபாரத்தில் விட்டாலும் படுத்திருப்பார். அப்படியே இருப்பார்.”

”காது கேக்குமா?” – மேனகா சார்ட்டைப் பார்த்தாள். கத்தையாகக் காகிதங்களில் பத்து நாள் சரித்திரம் எழுதியிருந்தது. ஸெரிப்ரல் த்ராம்பாஸிஸ்… எம்பாலிஸம் என்றெல்லாம் எழுதியிருந்தது.

”இல்லை கேக்காது!” – நர்ஸ் திடீரென்று மௌனமாகி சைகை மூலம் பெரிய டாக்டர் வருவதைக் காட்டினாள்.

பெரிய டாக்டருக்கு அதிகம் வயசாகவில்லை. முப்பத்தைந்து இருக்கலாம்போல. வெள்ளை கோட்டின் பையருகே ‘ஜி.ஆர்.கோபிநாத்’ என்று எழுதியிருந்தது. ”ஹலோ! அட்லாஸ்ட் ஸம் ஒன்… என்னம்மா… எல்லாரும் இந்தாளை த்ராட்ல வுட்டுட்டுப் போயிட்டீங்க?”

”இவங்க முதல் சம்சாரம் டாக்டர்.”

”யாராயிருந்தாலும் தினப்படி யாராவது பொறுப்பேத்துக்கணும். அண்டர்ஸ்டாண்ட்? நீங்க டாட்டரா?”

மேனகா தலையசைத்தாள்.

”லுக் யங் லேடி. யுர் ஃபாதர் இஸ் ரியலி ஸிக். கன்ட்ரோல் பண்ணாத டயாப்படீஸ். ஹைப்பர் டென்ஷன், ஆர்ட்டிரியல் திக்கனிங் த்ராம்பாஸிஸ் ஆகி பிளட் க்ளாட் ஆகியிருக்கு. அஃபேஸியா இருக்கு. எல்லாம் சேர்ந்து ஒரு பக்கமே பாரலைஸ் ஆகியிருக்கு. நிறைய க்ளாட்ஸ் இருக்கும்போல. அதைக் கரைக்கத்தான் தொடர்ந்து மருந்து கொடுத்துக்கிட்டு இருக்கமே… ஒரு ஸி.டி. ஸ்கேன் எடுக்கணும். எந்த அளவுக்கு டேமேஜ்னு தெரியணும்… யாரு பொறுப்புனு பார்த்தா, அட்மிட் பண்ணவங்க ஆளையே காணுங்கறாங்க… ரொம்ப விநோதம்!”

”நான் சொல்றேன் டாக்டர்.”

”மேனு சும்மாரு, டாக்டர்! இவர் உயிருக்கு ஆபத்தா?”

”அப்படி இல்லை. பெட் சோர் இல்லாமப் பாத்துக்கிட்டு வேளா வேளைக்கு ஃபீட் பண்ணா, பத்து நாளில் சில ஃபேகல்ட்டிஸ் எல்லாம் திரும்பப் பெற சான்ஸ் இருக்கு. எழுந்து நடக்க முடியாட்டாலும் ரைட்ஹாண்ட் கன்ட்ரோல் வரும்னு நம்பிக்கை இருக்கு.”

”டாக்டர், திஸ் பாஸ்டர்ட் ட்ரீட்டெட் மை மதர் லைக் ஷிட்” என்று ஆரம்பித்த மேனகாவைத் திரும்பி நிதானமாகப் பார்த்து, ”லுக் இந்தாளு என்னைப் பொறுத்தவரையில் ஒரு பேஷன்ட். இவர் பர்சனல் லைஃப்ல எப்படி இருந்தார்னு எனக்கு அக்கறை இல்லை. கொலைகாரனா இருந்து பெயில்ல வந்திருந்தாலும் இதே ட்ரீட்மென்ட்தான் கொடுப்பேன். எனக்கு இவர் ஒரு பல்ஸ், ஒரு மூச்சு, ஒரு எக்ஸ்ரே, ஒரு ஸ்கேன் இமேஜ், ஒரு சின்ட்ரோம்… அவ்வளவுதான்.”

”அந்த ஸ்கேன் என்னவோ சொன்னீங்களே… அது எடுக்க எத்தனை பணமாகும்?”

”ஆபீஸ்ல கேளுங்கோ, சொல்லுவா. நாளைக்கு எடுத்துரலாம். இவரை இன்னும் பத்து நாளாவது வெச்சுக்கிட்டா நினைவு வர சான்ஸ் இருக்கு. இப்பவே நிறைய இம்ப்ரூவ்மென்ட், மாரைப் பிறாண்டினா முழிச்சுப்பாரு. பாருங்க!”

டாக்டர், ”ராமசந்திரன் வேக்-அப் ராமச்சந்திரன். வேக்-அப்… யாரு வந்திருக்கா பாருங்க, வேக்-அப்” என மூர்க்கத்தனமாக அசைத்தார்.

”பத்து நாள் கழிச்சு அவரால பேச முடியுமா?” என்றாள் மேனகா.

”பேச்சு வர்றதுக்குக் கொஞ்ச நாள் ஆகலாம்.”

”சொல்றதைப் புரிஞ்சுப்பாரா?” ராமச்சந்திரன் கண் விழித்து விழிகள் உருண்டன.

”இப்பவே அரசல்புரசலா புரியும். என்ன ராமச்சந்திரன், இது யாரு, சொல்லுங்கோ… உங்க டாட்டர்.”

”அவர் பதினஞ்சு வருஷமா பாத்ததில்லை டாக்டர்.”

”அப்படியா… எங்கேயாவது அமெரிக்காவுல இருந்தாளா?”

”இல்லை. அசோக் நகர்ல” என்றாள் மேனகா.

இப்போது மேனகாவை உற்றுப் பார்த்த டாக்டர், ”ஸாரி, பர்சனல் ட்ராஜடிபோல இருக்கு. சரியானப்புறம் இந்தாளை உலுக்கிரலாம். கவலைப்படாதீங்க” என்றார்.

நர்ஸ் அவர் போனதும், ”இண்டியாலயே இவர்தாங்க பெரிய நியூரோ சர்ஜன். என்ன யங்கா இருக்கா பாருங்க.” மேனகா அதைக் கவனிக்காமல் ”மம்மி, போலாமா?”

”இல்லை… ராத்திரி நான் இங்கேயே இருக்கேன். நீ போய் எனக்கு மாற்றுப் புடைவையும் டாய்லெட் செட்டும் கொண்டுவந்துரு. கார்த்தால காலேஜுக்கு போன் பண்ணிச் சொல்லிடு. நாலு நாளைக்கு வர மாட்டானு.”

அவள் சொல்வதில் கவனம் இல்லாமல் மேனகா தன் தாயையே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்து ”திஸ் லேடி இஸ் அன்பிலீவபிள்” என்றாள்.

”சிஸ்டர், இந்தாள் சூட்டுத்தழும்பு இருக்குது எங்கம்மா புஜத்துல.”

”மேனு, ஜாஸ்தி பேசாம போறியா இப்போ?”

மேனகா, படுத்திருந்த ராமச்சந்திரனைப் பார்த்து ”பாருய்யா பாரதப் பண்பாடு… சட் யுர் ஆக் டிஸ்கஸ்டிங்!” விருட்டென்று புறப்பட்டுச் சென்றாள்.

போனதும் நர்ஸ் ”இந்த வயசுல புரியாதுங்க” என்று தன் வயிற்றைத் தடவிக்கொண்டாள்.

தினம் காலை மேனகா ஆட்டோவில் அவிஷ்கார் ரெஸ்டாரென்ட்டில் இருந்து அம்மாவுக்குச் சாப்பாடும் மாற்று உடையும் கொண்டு கொடுத்துவிட்டுத்தான் காலேஜ் போவாள். மாலை திரும்ப வந்ததும் காபி, டிபன் வாங்கிக் கொடுப்பாள். தாய்க்கும் மகளுக்கும் அதிகம் பேச்சே இல்லை. ராஜலட்சுமிதான் ”இன்னிக்கு முழிச்சு முழுசா என்னைப் பார்த்தார்” என்பாள். ”அடையாளம் தெரிஞ்சாப்ல இருந்தது. கண்ணுல தண்ணி வந்தது!”

”மருந்தோட ரியாக்ஷனா இருக்கும் மம்மி, உன்னை ஒண்ணு கேக்கணும்.”

”என்ன?”

”இவர் நிஜமா பிழைச்சு எழுந்து நட மாடறார்னு வெச்சுக்கோ… என்ன செய்யறதா உத்தேசம்?”

”என்ன செய்யறதுன்னா?”

”எங்கே தங்கப்போறார் எங்க அன்பான அப்பா? பரத்துக்கு எழுதினேன். அவனும் நம்பவே இல்லை”.

”நம்மகூடத்தான்.”

”நோ வே! நான் ஹாஸ்டல் போயிருவேன். ஐ ஜஸ்ட் கான்ட் ஸ்டாண்ட் திஸ் ரோக்.”

”அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல பிழைச்சு எழுந்திருக்கட்டும்.”

”அந்தப் புனிதவல்லிகிட்டே இருந்து தகவல் உண்டா?”

”இல்லை. அவா கைகழுவிட்டானு தோண்றது.”

”சக்கையா உறிஞ்சுட்டு, இந்தாளை கொட்டை துப்பறாப்ல துப்பிட்டா. அதைப் பொறுக்கி வெச்சுண்டு இருக்கே மம்மி. நீ என்ன நிரூபிக்க விரும்பறே?”

”ஒண்ணும் இல்லை. மேனு, ஒண்ணுமே நிரூபிக்க நான் விரும்பலை.”

”இவர் உன்னைப் படுத்தினது எல்லாம் மறந்துபோச்சா?”

”இல்லை.”

”பின்னே எதுக்காக?”

”எதோ ஒரு அநாதைக்குச் செய்யறதா. ஒரு மனிதாபிமானமா வெச்சுக்கலாமே. அதோட பழைய பந்தம்னு ஒண்ணு. அது என்னவோ எங்க தலைமுறைல அழியாத பந்தம்னு தோன்றது.”

”இன்க்ரெடிபிள் லேடி” என்று அவள் அருகில் வந்து கன்னத்தோடு ஒட்டித் தேய்த்து விட்டுச் சென்றாள் மேனகா.

டாக்டர் கோபிநாத் எதிர்பார்த்தபடி எட்டாம் நாள் ராமச்சந்திரனுக்கு முழு நினைவு வந்து வலது கையை அசைக்க முடிந்தது. கண்களில் அடையாளம் தெரிந்தது.

”என்னைத் தெரியறதா?” என்றாள் ராஜலட்சுமி.

கண்களில் நீர் வடியத் தலையை ஆட்டினான்.

”பேச மாட்டாரோ?”

”பேச்சு வர்றதுக்கு இன்னும் மூணு, நாலு நாள் ஆகும்.”

அப்போதுதான் உள்ளே வந்த மேனகாவைப் பார்த்து டாக்டர் புன்னகைத்து, ”மேனகா, நான் சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன். உங்க அப்பாவுக்கு முழு நினைவு வந்துடுத்து. என்ன என்னவோ கேக்கணும்னியே. என்ன வேண்ணா கேட்டுக்க. தி மான் இஸ் ல்யுஸிட் நௌ.”

”சிஸ்டர் இன்னிக்கு வார்டு பாயை ஷேவ் பண்ணிவிடச் சொல்லுங்க.”

மேனகா தன் தகப்பனைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.

”பேசறாரா?”

”இல்லை, புரிஞ்சுக்கறார். இவ யாரு தெரியறதா?” கலங்கிய கண்கள் அவளை ஏறிட்டுப் பார்த்து அடையாளம் தேடின.

”இவ மேனகா! அப்போ மூணு வயசு. உங்க பொண்ணு மேனகா… மேனகா.”

ராமச்சந்திரனின் கண்கள் தன் மகளை மெதுவாக மெதுவாக நிரடின.

மேனகா படுக்கை அருகே வந்து மிக அருகில் நின்றாள்.

”சொன்னியாம்மா? எட்டு நாளா நீ இவருக்கு மூத்திரம், பீ வாரினதையெல்லாம் சொன்னியாம்மா? உன்னை நடுத் தெருவில் துரத்திவிட்டதுக்கு எப்படி எங்களை எல்லாம் வளர்த்தே? சொன்னியாம்மா, எப்படி ஆளாக்கினே, எப்படி நீ வேலைக்குப் போய்ச் சேர்ந்து,

எங்களைப் படிக்கவெச்சே… சொல்லும்மா! உறைக்கட்டும் சொல்லு.”

”மேனு, அதெல்லாம் வேண்டாம்.”

ராமச்சந்திரனின் கை மெதுவாக அசைந்து உயர்ந்து, மேனகாவின் கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தைக் காட்டியது.

”என்ன சொல்றார்?”

”நோட்டு வேணுங்கறார்.”

”பேப்பர் வேணுங்கறார்போல இருக்கு.”

”ஏதாவது எழுதணுமா?”

ராமச்சந்திரன் தலையை அசைக்க, மேனகாவிடம் இருந்து பேனாவையும் காகிதத்தையும் வாங்கி அவன் மடியில் ராஜலட்சுமி வைத்தாள். ராமச்சந்திரனின் விரல் இடுக்கில் பேனா வைக்க, அவன் மெள்ள எழுதினான்…

‘புனிதவல்லி எங்கே?’

–நன்றி விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுணா...இரண்டாவது கதை சூப்பர் ஆனால் முடிவு இப்படித் தான் இருக்கும் என எதிர் பார்த்தேன்...சுஜாதாவின் திரில் கதைகளை இணையுங்கோ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஜோதியும்-ரமணியும்
 

sujatha23.jpg?w=256&h=207&h=207

புதிய பெண் லெக்சரர், ரமணியை எப்படி சமாளிக்கப்போகிறாள் என்று கதி கலங்கிப்போனோம். ரமணி என்று பெயர் இருந்தால் ஒருவன் எப்படி இருப்பான்? குழந்தை முகம், பெண்மை மிளிரும் தேக அமைப்புடன்தானே? தப்பு. இவன் மிலிட்டரி மீசையுடன் காட்டாகுஸ்தி பயில்வான் போல இருந்தான். போதாமல் பலத்த குரல். யாரையாவது விளித்தால் ஹாஸ்டலே அதிரும். சிரிக்கும்போது மட்டும் கண்களில் ரமணி தெரிவான். மற்றபடி காட்டான்.

ஒரு மாதம் லேட்டாகத்தான் சேர்ந்தான். முதலில் அவனை சர்வே கிளாசில் வெளியே ஹாஸ்டலைச் சுற்றி அளக்கும் பயிற்சியில் பார்த்தேன். ‘‘என் பேர் ரமணி. ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்ல புதுசா சேர்ந்திருக்கேன். கை குடு’ என்றான். குடுத்த கை வெல்லப்பாகு போல் பிசுபிசுவென்றிருந்தது. நான் துடைத்துக்கொள்ள, ‘‘கொஞ்சம் பிடிச்சுக்கோ’’ என்று செயின் சர்வேக்கான சங்கிலியை என்னிடம் கொடுத்துவிட்டு நியூ ஆஸ்டலின் மூலையில் திரும்பி அங்கே ரத்தன்லாலிடம் எனக்குத் தெரியாமல் மறுமுனையைக் கொடுத்துவிட்டு வேறுவழியாக காண்டீனுக்கு போய்விட்டான். இருவரும் பேந்தா மாதிரி ஒரு மணி நேரமாகசெயினைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம். ‘என்னடா’ என்று பட்டூஸ் என்கிற பட்டாபிராமன் விசாரித்ததில் ரமணி அந்தப் பக்கம் இருக்கிறான். அளந்துகொண்டு இருக்கிறான் என்று இருவரும் சொல்ல, விசாரித்ததில் கேண்டீனில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். ‘‘நானா! நீ வேற யாரையோ சொல்ற! எனக்கு சர்வே கிளாஸே கிடையாதே!’’ என்று சாது முகத்துடன் புளுகினதிலிருந்து அவனைக் கண்டாலே நானும் ரத்தன்லாலும் ஒதுங்கினோம். அந்த சம்பவத்தின் அவமானம் கலைய மூன்று மாதமாயிற்று.

ரமணி எப்போது யாரை எப்படிக் கவிழ்ப்பான் என்பது யாருக்கும் தெரியாது. சிறு நாடகங்களாடுவது அவனது இயற்கை. சின்ன விஷயத்துக்குக்கூட பொய் சொல்வான். மணி என்ன என்றால், அரை மணி கூட்டிச் சொல்வான். திங்கள்கிழமையை வியாழக்கிழமை என்பான். புதிய ஆட்களைச் சந்திக்கும்போது முத்தரையன், ரமணி ஐயர், அல்டாப் உசேன் என்று இஷ்டத்துக்கு பேர் மாற்றிச் சொல்வான். சொந்த ஊர் கேட்டால் ஒரு நாள் ஹைதராபாத், ஒரு நாள் சின்னாளம்பட்டி, ஒரு நாள் மொரிஷியஸ். நிஜப் பெயர் ரமணிதானா என்று எங்களுக்கு ரொம்ப நாள் சந்தேகமாக இருந்தது.

திடீர் என்று மொட்டை போட்டுக்கொள்வான். இட்லி விழுங்கும் போட்டியில் மற்ற பேர் பதினைந்து இட்லியிலேயே தவித்துக்கொண்டு இருக்கையில் ரமணி லேட்டாக மெஸ்ஸக்கு வந்து சேர்ந்துகொள்வான். நாற்பது இட்லி போடச் சொல்லி சாம்பாரில் குளிப்பாட்டி கவளம் கவளமாக ஆக்கிக்கொண்டு கன்னங்களின் இடுக்கிலேயே வைத்துக்கொள்வான். போட்டிக்கான நேரம் தீர்ந்ததும் துப்பிவிட்டு இன்னும் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்வான். ஹாஸ்டல் தினத்தின்போது மார்க்கருடன் ராயபுரத்திலிருந்து சாராயம் வாங்கி வந்து டென்னிஸ் கோர்ட்டில் நெற்றியில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு ‘‘மார்க்கர் வருத்தப்படாதே! சரோ வரேன்னு சொல்லிவிட்டு வரலை பாரு. அதான் ரொம்ப துக்கம். எனக்கு ஒரு தேவாங்கு மட்டும் வாங்கிக் கொடுத்துரு’’

மார்க்கர், ‘‘கவலைப்படாதே தம்பி! சரோசா இல்லைன்னா சரசாவை இட்டாரேன்’’

‘‘எங்க இருக்கா சொல்லு’’ இவ்வாறு திரும்பத் திரும்ப உரத்த குரலில் அலம்பிக்கொண்டு இருப்பார்கள். ஒரு பத்தி நாடகம் போல இருக்கும். பிறகு ‘‘மார்க்கர், இப்டியே போ, ரெண்டு லைட்டு தெரியுது பாரு. அதுக்கு மத்தியில் நடந்து போ’’ என்று அனுப்புவான். சற்று நேரத்தில் ‘க்றீச்’ என்று ப்ரேக் சப்தம் கேட்கும்.

‘‘மார்க்கர் போய்ட்டான்டா’’

‘‘அவனா… அவன் ஏன் சாவறான். இன்னும் எவ்வளவு ஜிஞ்சர் அடிக்கணும் அவனுக்கு’’.

‘‘ரமணி தேவாங்கு வளக்கப் போறியா?’’

‘‘ஆமாடா’’

‘‘யார்ரா சரோ?’’

‘‘என் உயிர்க் காதலி. பேங்க்ல வேலைசெய்றா’’

‘‘எந்த பாங்க்?’’

‘‘ப்ளட் பாங்க்’’ என்று சிரித்தான்.

நியூ ஹாஸ்டலில் வடக்கத்தி மாணவர்களிடையே கைகலப்பு நேர்ந்தபோது ரமணி இடையே புகுந்து கையெடுத்துக் கும்பிட்டு சண்டையைச் சரளமாக இந்தி கவிதைகள் பேசி நிறுத்தினான். மற்றொரு சந்தர்ப்பத்தில் ப்ரேம் மல்ஹனை வெட்டக் கத்தியை எடுத்துக்கொண்டு துரத்தினான். வளாகத்தில் ஓடிப்பிடித்து அவன் கழுத்தில் கத்தி வைத்துவிட்டு சற்று யோசித்து, ‘‘கை குடு! வியாழக்கிழமை நான் கொல்றதில்லை’’ என்றான்.

முதல் செமஸ்டருக்குள்ளே அவனைக் கண்டாலே மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அலறத் தொடங்கி னார்கள். கிளாசுக்கு வரும்போது ஒரு ஜிம்மி நாய் கூட வந்து காத்திருக்கும். சிலவேளை உள்ளே எட்டிப் பார்க்கும். ‘‘வரேண்டா அவசரப்படாதே’’.

யாரைச் சந்தித்தாலும் கையை முதுகுப் பக்கம் முறுக்கி வலிக்கிறாற் போல் செய்துவிட்டுத்தான் விடுவான். ஏதாவது பதில் சொன்னால் நேராக அடிமடி மர்மஸ்தானத்தில் கை செலுத்தித் திருகுவான். நாம் துடிப்பதைக் கண்டு கண்ணீர் வரச் சிரிப்பான். அதீத பலாத்காரன். தொடாமல், அடிக்காமல், முதுகில் குத்தாமல், கன்னத்தில் தட்டாமல், அங்கே பிடிக்காமல் அவனால் பேசவே முடியாது!

பரீட்சை பேப்பர் திருத்துபவரை ஒருமுறை ரயிலிலிருந்து தள்ளுவதாகப் பயமுறுத்தியதில், ரமணி எல்லா சப்ஜெக்டிலும் பாஸ். கெமிஸ்டரி கிருஷ்ணசாமி ஒருமுறை வெற்றுப் பேப்பருக்கு நாற்பத்தைந்து போட்டார். ஓரத்தில் இரண்டு வரிதான் எழுதியிருந்தான்… ‘‘பட்டா, மார்க் போடலை… தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ல தள்ளிடுவேன்’.’ தண்டவாளத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அத்தனை ரெயில்களும் ஹாஸ்டலுக்கு அருகில் அலறிக்கொண்டு செல்லும். ‘‘எதுக்கப்பா பொல்லாப்பு, ரெண்டு பொண்ணு, வயசான அம்மா இருக்கா. கிறுக்குப் பய ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துட்டான்னா?’’ என்று மார்க் போட்டு விட்டார்.

திடீர் என்று ராத்திரி ஒன்பதரைக்கு ‘‘வா ஓடியன்ல புதுப் படம் போலாம்’’ என்று எல்லாரையும் திரட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போவோம். ரமணி, ‘‘டிக்கெட் வாங்கிட்டு வரேன்’’ என்று படியேறிவிடுவான். ட்ரெய்ன் வந்து எல்லோரும் ஏறிக்கொள்ள அது நகர்ந்ததும் ரமணி எங்கள் தேசிய கீதமான ‘‘முண்டபக்கற மாரபக்கற ஓய் ஓய் ஓய்! சைதாப்பேட்டை க்ரோம்பேட்டை ஓய் ஓய் ஓய்!’’ சொல்லியபடி இறங்கி, ‘‘டேய் டிக்கெட் வாங்கலைடா, போய்ட்டு வாங்க’’ என்று டாட்டா காட்டுவான்.

இவன் கொட்டம் தாங்க முடியாமல் அத்தனை பேரும் உள்ளம் கொதித்துக்கொண்டு இருந்தாலும் அவனை நேர்கொள்ளும்போது நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நம் எல்லோரிடமும் உள்ள கோகுல கிருஷ்ணனின் விஷம இச்சை காரணமாக இருக்கலாம். இந்நிலையில் முதன்முதலாக ஆண்கள் காலேஜில் ஒரு பெண் லெக்சரராக சேரப்போகிறாள் என்று தெரிந்தபோது கதிகலங்கிப் போனோம். எப்போது ராஜினாமா கொடுப்பாள், மூணு நாளா… ஒரு வாரமா? என்று ரமணி இல்லாதபோது பந்தயம் கட்டி னோம்.

‘‘எலக்ட்ரானிக்ஸ் லெக்சரர்றா… ரமணி ஆட்டோ. அதனால ப்ரச்னை வராது’’ என்றேன்.

‘‘ஹாஸ்டல்ல ரூம் கொடுக்கப் போறாங்களாம்.

‘‘போச்சுரா.’’

அவளை முதலில் ஸ்டேஷனில் வைத்துத்தான் பார்த்தோம். இந்த வருஷம்தான் பாஸ் பண்ணியிருக்க வேண்டும். படிப்பிலேயே கவனமாக, உடம்பை பார்த்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறாள் போல. மொத்தமே பத்து கேஜிதான் இருந்தாள். அஞ்சடிக்கு ஒரு அங்குலம்தான் மிஞ்சியிருந்தாள். பலமாக ஊதினால் விழுந்துவிடுவாள். ரமணி அவளை ஒற்றைக் கையால் தூக்கிவிடலாம். யாராவது காதலிக்க வேண்டும் என்றால் மிகுந்த கற்பனை வேண்டும் என்று தோன்றியது. ‘‘குழந்தைடா அது’’ என்றான் நித்யானந்தன். ‘இரு’ என்றான் ரமணி. அவள் வந்து சேரும்போதே, ரமணியை சந்திக்கும் துரதிர்ஷ்டமாகிவிட்டது. சபர்பன் ரயில் நிலையத்தில் புது ஜமக்காளம் சுற்றின படுக்கையும் தகரப் பெட்டியும் நடுவயதுத் தந்தையுமாக வந்து இறங்கியபோது, ரமணி ரெயில்வே பெஞ்சில் சிகரெட் கடைக்காரனிடம் கடன் சொல்லிக்கொண்டு இருந்தான். ‘‘குடுக்கலைன்னா என்ன ரமணி? ஒண்ணாம் தேதி குடு. அதுக்கு எதுக்கு கையை முறுக்கறே!’’

‘‘எக்ஸ்க்யூஸ் மி! ஹாஸ்டலுக்கு எப்டி போகணும்?’’

ரமணி சட்டென்று அஜித்குமாரின் கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு என் தோளைப் பிடித்துக்கொண்டு அருகே சென்று ‘‘ஐயா எனக்கு அனகாபுத்தூர் போகணும். மெயின் ரோட்டுக்கு போகணும்… கண் தெரியலை. கூட்டிட்டுப் போறீங்களா?’’

‘‘ஸாரி ஸாரி’’ என்றாள்.

‘‘இவன் பேரு மோகன்தாஸ் காந்தி. எனக்காகப் பரீட்சை எழுதுவான். ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத் திருக்காங்க’’

‘‘மன்னிச்சுக்கங்க. நாங்களே குரோம்பேட்டைக்குப் புதுசு. உங்க பேர்?’’

‘‘அனகாபுத்தூர் அழகேசன்’’.

அனைவரும் சிரிப்பை அடக்கி கொள்வதைப் பார்த்தாள்.

‘‘அனகாபுத்தூரா?’’ என்று நான் வியக்க, ‘‘சும்மாரு’’ என்று அதட்டினான்.

‘‘எதிர்லயே ஹாஸ்டல் தெரியறதே’’ என்றாள்.

‘‘பர்ஸ்ட் இயரா நீங்க?’’ என்றான்.

‘‘இல்லை, லெக்சரரா சேர வந்திருக்கேன்’’.

‘‘லெக்சரரா?’’ என்று அட்டகாசமாகச் சிரித்தான். தந்தை ‘‘ஜோதி! வா, கண்டவாளோட பேசாதே!’’

ரமணி எழுந்து அப்பனின் சட்டையைப் பிடித்தான்.

‘‘என் பேரு கண்டவன் இல்லை. மரியாதையா பேரு கேளு. தி நேம் இஸ் எல்.ரமணி’’

‘‘ஏய் சட்டையை விடு’’.

ரமணி, ‘‘டேக் இட் ஈசி. நீங்க போங்க சார். பாப்பா பயந்துக்கப் போறது. இப்படியே மேம்பாலத்தைக் கடந்தா அந்தப் பக்கம் குறுக்கு வழி இருக்கு’’.

‘‘என் பேர் கண்டவனாடா?’’

‘‘கண்டுக்காதே ரமணி’’.

‘‘வாம்மா, ஸ்டேஷன் மாஸ்டரைக் கேக்கலாம்’’.

‘‘கணபதி ஐயர்! உம்ம பொண்ணு எப்படி சேர்றான்னு பாத்துர்றேன்!’’ என்றபோது ‘‘என்ன நீ மரியாதை இல்லாமப் பேசறே?’’ என்று அந்த பெண் ரமணியை அதட்டினாள். சற்று நேரம் பூமி சுழல்வது நின்றது.

இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நாங்கள் பயந்துகொண்டு ரமணியை பார்க்க, அவள் யதார்த்தமாக, ‘‘அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இருக்கு. என்னைத் தடுக்க நீ என்ன டைரக்டரா?’’

ரமணிக்கு இது புதுசு. இது வரை அவனை எதிர்த்தோ, ஏன் சமமாகவோகூட யாரும் பேசியதில்லை.

‘‘வா ஜோதி’’.

‘‘ஜோதியா? கவனிச்சுக்கறேன்.’’

ஜோதி ரிஜிஸ்ட்ராரிடம் பொறுப்பேற்ற கையோடு நடந்ததை ஒரு புகார் கடிதமாக எழுதிக் கொடுத்தாள். அப்போது ஆரம்பித்தது யுத்தம். டைரக்டர், ரமணியைக் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். ‘‘உன்னைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப ப்ராக்டிக்கல். ஜோக்ஸ் செய்றியாம். மனசுக்குள்ள என்னன்னு நினைச்சுட்டிருக்கே? ஒழுங்கா படிச்சு வெளிய வரணுமா? டிஸ்மிஸ் ஆகணுமா?’’

ரமணி தாசனுதாசனாக ‘‘சார் இனிமே அந்த மாதிரி கம்ப்ளெயிண்ட் வராது. இது உறுதி. எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. விசாரிச்சுப் பாருங்க. ஸ்டேஷன்ல என் சாயல்ல ஒரு பிச்சைக்காரன் இருக்கான் சார். அவன் பேரும் ரமணி. அவனைப் பத்திதான் என் மேல குற்றம் சொல்லியிருக்காங்க. புதுசில்லையா? காலைலதான் ஊர்லருந்து வந்தேன்’’

‘‘அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஸ்டேஷன்ல மிஸ் ஜோதிகிட்ட நீ நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுது முதல்ல.’’

‘‘எழுதலைன்னா என்ன ஆகும் சார்… தெரிஞ்சுக்கலாமா?’’

‘‘உன்னை சஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கும்.’’.

‘‘வேண்டாம் சார். எங்கம்மா அப்பா உயிரை விட்டுருவாங்க. ரெண்டு பேருக்கும் ஹார்ட் வீக். எந்த பேப்பரைப் வேணா காட்டுங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்.’’

அந்தக் கடிதத்தில் ‘‘சாது ரமணதாஸ், கேம்ப் மெட்ராஸ் 44’’ என்று கையெழுத்துப் போட்டான்.

அந்தப் பெண் இரண்டாம் வருஷத்துக்கு எலக்ட்ரானிக்ஸ் பாடம் எடுத்தபோது வகுப்பில் வந்து ரமணி உட்கார்ந்தான். அவனைப் பயத்துடன் பார்த்தோம்.

‘‘ரமணி இது உன் க்ளாஸ் இல்லை’’

‘‘அட ஜோஜோ… எப்படி சொல்லிக் கொடுக்கறதுன்னு டைரக்டர் ரிப்போர்ட் கேட்டிருக்கார்’’.

ஜோதி, ‘‘தி பீரியட் ஆஃப் தி மல்ட்டி வைப்ரேட்டர் இஸ் ஒன் பை ஸி ஆர்’’ என்றபோது, ‘‘உன் பீரியட் எப்ப?’’ என்றான். அவள் எழுதுவதை பாதியில் நிறுத்தி கரும்பலகையிலிருந்து திரும்பிப் பார்த்தாள். ‘‘ரமணி, இது உன் கிளாஸ் இல்லை. இப்ப வெளிய போ’’ என்றாள்.

‘‘நான் ஃபேகல்ட்டி மாத்திட்டேன். இப்ப எலக்ட்ரானிக்ஸ்’’.

‘‘கிளாஸ் ரிஜிஸ்டர்ல உன் பேர் இல்லை. போ… கெட் அவுட்.’’

‘‘நீயே எழுதிக்க என் பேரை. எல்.ரமணி. டி.நம்பர் 504. இல்ல கொடு, நான் எழுதறேன்’’.

ரிஜிஸ்தரில் தன் பெயரை எழுதினான். ‘‘லேடி லேடி, எங்கிட்ட வாடி. எல்லாம் சொல்லித் தாடி’’

ஒரு கணம் அவனையே கோபமாகப் பார்த்தாள். அந்த எளிய முகத்தில் அத்தனை கோபம்தான் சாத்தியம் என்பதுபோல் சட்டென்று கண்களில் நீர் நிரம்பியது. எத்தனை சபைகளில் எத்தனைப் பெண்கள் அவமானப்பட்டிருக்கிறார்கள். அவர்களது ஒட்டுமொத்தமான பிரதிநிதிபோல சரித்திரம் கடந்து சற்றுநேரம் நின்றாள். பிறகு சாக்பீஸ் கையைத் துடைத்துக்கொண்டாள்.

‘‘தங்கைகளைப் படிக்கவெக்க முதமுதலா வேலைக்கு வந்து சேர்ந்திருக்கேன். ஏன் இப்படிப் படுத்தறீங்க?’’ என்றாள்.

ரமணி ‘‘டேய் படுத்தாதீங்கப்பா. எத்தனை தங்கைங்க?’’ என்றான். சிகரெட் பற்றவைத்தான். பெஞ்சின் மேல் கால் போட்டுக்கொண்டு ஊதினான். எதிர்பாராதவிதமாக ஜோதி என்னைப் பார்த்து, ‘‘576, நீ போய் ரிஜிஸ்ட்ராரைக் கூட்டிட்டு வாப்பா’’ என்றாள்.

ரமணி என்னைப் பார்த்து, ‘‘ரங்குஸ், பலி விழும்’ என்றான்.

நான் மௌனமாக இருக்க, ‘‘கிளாஸ்ல நாப்பது பேர் இருக்கீங்க.. யாருக்கும் தைரியம் இல்லையா?’’ என்றாள். துரியோதனின் சபைபோல மௌனம்,.

‘‘நான் போறேன் மிஸ். எங்கிட்ட லெட்டர் குடுங்க’’ என்றான் ரமணி

அவளே போர்டை அழித்துவிட்டு டைரக்டரைச் சந்திக்கச் சென்றாள்.

மறுநாள் நோட்டீஸ் போர்டில் எல்.ரமணியின் மேல் மூன்று குற்றச்சாட்டுகள் பட்டியலிட்டிருந்தது. ‘தப்பான வகுப்பறையில், தவறான வார்த்தைகள் பேசினது, வகுப்பில் புகை பிடித்தது. விசாரணை முடியும் வரை ரமணிக்கு வகுப்புகளில் நுழைய அனுமதி இல்லை’ என்று அறிவித்தது.

அதன் பிரதியை ப்யூன் கொண்டு வந்து கொடுக்க ரமணி அவனைத் துரத்தி அடித்தான். ‘‘வக்காளி, எனக்கு நோட்டீஸ் குடுக்க வைஸ் சான்சிலர் தாண்டா வரணும். எல்லாத்தையும் எல்லாரையும் பத்தவைக்கிறேன் பாரு. சிட்டில உள்ள அத்தனை காலேஜ்லயும் ஸ்ட்ரைக்’ என்று ஆபீஸ் வளாகத்தில் சத்தம் போட்டான்.

அப்படி ஏதும் நிகழவில்லை. ஹாஸ்டலிலிருந்து புறப்பட்டுச் சென்றான். நடுராத்திரியில் திரும்பி வந்து ஜோதி தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்கு முன் சத்தம் போட்டான். ‘‘வெளிய வாடி ஏய்!’’ என்று கல்லெறிந்தான். புது ஹாஸ்டல் கட்டுவதற்காகக் கட்டியிருந்த தற்காலிக நீர்த் தொட்டியில் குதித்து ஈரமாக வந்து அவள் கதவைத் தட்டினான். ‘‘ஜோதி ஏய் ஜோதி, ரியலி சாரி ஜோதி. எனக்குப் பேதி ஜோதி. நான் ஏன் அப்படின்னு வெளிய வந்தா சொல்றேன். ஐ லவ் யு ஜோதி!’’

அந்த அறை இருட்டாக மௌனமாக இருந்தது. முதல் மாடியிலிருந்து டிசௌஸா, மொரைரா, வெங்கடேசன், நான் எல்லோரும் அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றோம். அந்த அறையில் சலனமே இல்லை. பாவம் அந்தப் பெண், கிலியில் நடுங்கிக்கொன்டு சுருண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.

ஹாஸ்டலிலிருந்து வகுப்பறைக்குச் செல்லும் பாதையில் சரக்கொன்றை மரங்களும் செம்பருத்தியும் நிழல் தரும் ஃபுட்பால் மைதானத்தில் ஒரு டக்கோட்டா ஏரோப்ளேன் இருக்கும். பேருந்துகளின் பணிமனை ஒன்று இருக்கும். ஜோதி அவ்வழியே தன் வகுப்புக்குப் பாடம் எடுக்கச் சென்ற போது, ஒரு புல்லட்டில் கடகடவென்று புழுதி பறக்க ஓட்டிவந்து அவளருகில் சுற்றி நிறுத்தி, ‘‘வா வா, க்ளாஸ்ல கொண்டுவிடறேன்’’. அவள், ‘‘என்கூட பேசாதே’’ என்று விரைவாக நடக்க, அடிக்கடி த்ராட்டிலை விர்விர் பண்ணிக்கொண்டு பாடிகார்டு போல கூடவே ஓட்டி வந்தான்.

அவள் மேலாடைத் தாவணியைப் பிடித்து இழுத்ததாக ஜோதி தன் புகார் கடிதத்தில், போலீஸ் எழுதச் சொன்னார்கள். பாதுகாப்பு கேட்டிருக்கிறாள். பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர் வந்தார். டைரக்டரின் அலுவலகத்திலும் அவர் க்வார்ட்டர்ஸிலும் போலீஸ்காரர்கள் நின்றார்கள். டைரக்டருக்கு மகா கோபம். மன்னிப்பே கிடையாது என்று வி.சி. ஆபிஸக்கு எழுதி பர்மிஷன் வாங்கி கேம்பஸைவிட்டு நீக்கி மூணு வருஷம் ரஸ்டிகேட் பண்ணும்படி சிபாரிசு செய்தார். லெக்சரர் டி.எம்.டி. ஜோதியைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவனை அரெஸ்ட் பண்ண போலீஸ் வாரண்ட்டுடன் வந்திருந்தார்கள்.

ஹாஸ்டலில் ரமணியைத் தேடினால் காணவில்லை. மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக முடிச்சு முடிச்சாகக் கூடி இருக்க, டைரக்டரிடம் இந்த தடவை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டோம்.

அவர், ‘‘படிக்கிற பையன், ரேங்க் வாங்குற பையனுக்கு மன்னிப்பு கேளுங்கப்பா. இந்தப் பொறுக்கி எல்லாரையும் கொடுமைப்படுத்திருக்கான். இவனை யாராலயும் காப்பாத்த முடியாது.’’.

‘‘இருந்தாலும் இத்தனை கடுமையாத் தண்டிக்கணுமா?’’

‘‘இது குறைந்தபட்சத் தண்டனை. யூனிவர்சிட்டி ரூல்ஸ் அப்படி’’ என்றார்.

‘‘யாராவது ரமணிகிட்ட போய்ச் சொல்லி ஊருக்குப் புறப்பட்டுப் போகச் சொல்லிரலாம்’’ என்று யோசனை சொன்னார்கள். ‘‘இல்லைடா, அவனை ஒருமுறை உள்ள தள்ளினால்தான் புத்தி வரும்’’

‘‘மூணு வருஷம் டீபார் பண்றது தப்புடா. அவன் வாழ்க்கையே பாழாகிடும்’’.

ரமணி லோக்கல் ட்ரெய்னிலிருந்து இறங்கி தூரத்தில் வந்துகொண்டு இருக்க, அவனை நோக்கி ஓடினேன். ‘‘ரமணி இப்படியே ஊருக்குப் போய்டு. உன்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருக்காங்க.’’

‘‘அப்படியா? வெரிகுட் வெரிகுட்… எங்க?’’

‘‘டைரக்டர் ஆபிஸ்ல… போய்டுரா.’’

‘‘தேவையில்லை. யார் அந்த இன்ஸ்பெக்டர்? விசாரிக்கிறேன்.’’

‘‘ரமணி உன்னை மூணு வருஷம் டீபார் பண்ணிருக்காங்க. ஜெயில்ல போடுவாங்க. இது விளையாட்டில்லை புரியுதா?’’

‘‘என்னடா தப்புப் பண்ணிட்டேன்? எதுத்தாப்பல பஸ் வருது. ஒதுங்கிக்கன்னு அந்தப் பொண்ணைத் தொட்டேன், அவ்வளவுதான்’’.

‘‘நம்பச் சொல்றியா? ஏன் இப்படி மரமண்டையா இருக்கே ரமணி?’’

‘‘பாரு, நம்பாட்டிப் போங்க. ஐ டோண்ட் கேர்’’.

‘‘ரமணி சாரிடா’’.

‘‘நானே சாரி இல்லை. நீ ஏண்டா சாரி. ஜோதி அக்கா… எப்படி இருக்காங்க?’’

‘‘பயத்துல இன்னிக்கு பூரா கிளாஸ் வரலை. டைரக்டர் ஆபீஸ்லயே இருக்காங்க.’’

‘‘போய்ப் பார்த்தாகணும்’’.

‘‘வேண்டாம் ரமணி’’.

‘‘போடா!’’

டைரக்டர் ஆபீசில் எதிர்ப்புக் குரல் கொடுத்தோம். ‘‘ரமணி ரமணி’ என்று கோஷமிட்டதும் ரமணி அரசியல் தலைவன்போல வணங்கிவிட்டு ‘உங்களுக்கெல்லாம் நண்பர்களே, ரோஷமுள்ளவர்களே! நாட்டுக் கட்டைகளே! என் மேல இருக்கிற அக்கறைக்காக ஆளுக்கொரு ஏக்கரா நிலம் ஜூலியஸ் சீஸர் உங்களுக்கு கொடுத்தாச்சு பழவந்தாங்கல்ல. தட்டுங்கடா கையை! வாழ்க ஜோதிபாய். மெஸ்ல நெய் ரோஸ்ட் போடச் சொல்லு. இப்ப வந்துர்றேன்’’ என்று உள்ளே சென்றான்.

உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து முதலில் இன்ஸ்பெக்டர் வெளியே வந்து ஜீப்பில் ஏறிக்கொண்டார். கண்களைத் துடைத்துக் கொண்டு ரமணி மெல்லத்தான் வெளியே வந்தான். அவன் கையில் விலங்கு மாட்டினதுபோல் கர்ச்சீப் கட்டியிருந்தான். அதைச் சடுதியில் பிரித்து அவிழ்த்து, ‘‘த்ரீ சியர்ஸ் டு ஜுலியஸ் சீஸர், ஹிப் ஹிப் ஹுர்ரே, முண்ட பக்கற மார பக்கற ஓய் ஓய் ஓய்!’’ சொல்லிவிட்டு இரு கைகளையும் உயர்த்தி ‘‘கை தட்டுங்கடா. எல்லா ஆர்டரையும் வாபஸ் வாங்கிட்டாங்க. போலீஸ் கேஸும்-வாபஸ்’’.

நாங்கள் குதூகலத்துடன் ‘‘என்னம்மா…எப்படி?’’

‘‘ஒரே ஒரு பொய் சொன்னேன். சால்வ் ஆயிருச்சு. நமக்குக் கைவந்த கலையாச்சே’’

‘‘என்னடா சொன்னே?’’

‘‘எனக்கு லுக்கிமியா… ஆறு மாசத்தில சாவப்போறேன். அந்த துக்கத்தை மறக்கத்தான் இந்த தமாஷ் எல்லாம் செய்தேன்னேன். டைரக்டர் அப்படியே அழுதுட்டார். அந்தப் பெண்ணும் தேம்பித் தேம்பி அழுதுது. பாரு எம்மேல சாஞ்சுகிட்டு அழுததில சட்டையெல்லாம் ஈரம்! எல்லா புகாரையும் வாபஸ் வாங்கிடுத்து. இன்ஸ்பெக்டர்கூட புறப்படறப்ப ஓரக்கண்ணைத் துடைச்சுகிட்டுத்தான் போனார். பாத்தியா? இந்தா சாப்பிடு’’ என்று வேர்க்கடலை கொடுத்தான்.

அதை உடைத்தபோது உள்ளே எதிலும் பருப்பு இல்லை! ரமணியின் மற்றொரு ஏமாற்று வித்தை.

‘‘டேய் போறுண்டா. இனிமேலாவது பொய் சொல்றதை விட்டுருடா.’’

‘‘பொய்தாண்டா என் உலகத்தை சுவாரஸ்யமாக்கறது. பொய் இல்லைன்னா வாழ்க்கையே … உலகமே இல்லை!’’ என்றான்.

மூன்றாவது செமஸ்டருக்குள் ஜோதி ராஜினாமா கொடுத்து விட்டாள். கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்கா போய் விட்டதாகச் சொன்னார்கள்.

ஊருக்குப்போன ரமணி மூன்றாவது செமஸ்டருக்கு வந்து சேரவே இல்லை. அதன்பின் அவனை நாங்கள் பார்க்கவே இல்லை. ஏன் என்று விசாரிக்கப் பயமாக இருந்தது.

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹா பலி – சுஜாதா

 

மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் ‘ஆஷோன்… ஆஷோன்’ என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக்கொள்ள… சென்னை-103-ஐச் சேர்ந்த ‘அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப்பள்ளி’யின் ஆசிரியைகள் டீசல் வேனில் இருந்து உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்துவத்தை விளக் கும்வகையில், ”இங்கதான்டி ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு’ ஷூட்டிங் எடுத்தாங்க” என்று வியக்க, கற்சிற்பிகளின் உளிச் சத்தம் எதிரொலிக்க, பிள்ளையார்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்ட்டுகளுக்குக் காத்திருந்தார்கள். ‘கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?’

இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன் கரைக் கோயிலின் அருகில் வந்து கடற்கரைப் பக்கம் சென்றான். 1200 வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான்.

”கேமரா வேணுங்களா… நிக்கான், ஜப்பான்… ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?”

அவன் மௌனமாக இருக்க,

”செருப்பு வேணுங்களா? ஜோடி இருபது ரூபாதாங்க… கோலாப்பூரி…”

”…..”

”பேச மாட்டீங்களா?”

அவனுக்குப் பள்ளிச் சிறுவன் போல அறியாத முகம். கருநீலத்தில் தொளதொள சட்டை அவன் சிவந்த நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. முதுகில் பட்டைவார் இறுக்கி பை வைத்திருந்தான். ஒருவேளை வடக்கத்திக்காரனாக இருப்பானோ என்று ”சேட், பந்த்ரா ரூபாய் மே லேலோ போணி!” என்றான் செருப்பு விற்ற சிறுவன்.

அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்துவிட்டு, கடலலைகளின் கோபத்தை மழுப்ப அமைக்கப்பட்ட கருங்கல் தடைகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தவரை அணுகினான்.

”எக்ஸ்கியூஸ் மி…”

அவர் திரும்ப, ”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”என் பெயர் அஜய். நான்தான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். செக்ரெட்டரிக்கு விளம்பரம் கொடுத்திருந்தீர்கள்.”

”ஓ! நீதானா அது? ‘யங்’காக இருக்கிறாயே?!”

”எனக்கு 25 வயது!”

”எனக்கு ஏறக்குறைய 70” என்றார். ”கண்தான் சரியாகத் தெரியவில்லை. ராத்திரி கார் ஓட்ட முடியவில்லை. பொய்ப் பற்கள்… ஒருமுறை ‘பைபாஸ்’ ஆகி விட்டது. கடன் வாங்கின ஆயுள்!”

”மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ்” என்றான்.

கரைக் கோயிலின் கோபுரத்தைச் சிரத்தையாக அமிலம்வைத்துச் சுத்தம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

”ஒரு வருஷமாவது இருப்பதாக வாக்களித்தால்தான் உனக்கு வேலை. சான்றிதழ்களை அப்புறம் பார்க்கிறேன். என் புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும்… பிரசுரகர்த்தர்கள் கெடு.”

”என்ன புத்தகம்?”

புல் போர்வையையும் கம்பி கேட்டையும் கடந்து சாலை நோக்கி நடந்தார்கள்.

”பல்லவர் காலச் சிற்பக்கலை பற்றி ஓர் அந்தரங்கப் பார்வை…”

பஸ் நிறைய மாணவர்கள் இறங்கி, விநோதமான ‘போஸ்’களில் படம் பிடித்துக்கொண்டு, ”என்ன மச்சி… கலர்ஸ் எல்லாம் ஒரு பக்கமா ஒதுங்கிருச்சு!”

”இவர்களுக்கா பல்லவச் சிற்பக் கலை பற்றிச் சொல்லப்போகிறீர்கள்?”

”ஏன்?”

”பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உணவகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசாரமற்றது.”

”நீயும் இந்தத் தலைமுறைதானே?”

”ஆம். ஆனால், வேறு சாதி.”

அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ”பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?”

”கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து இருக்கும் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக்கலை பற்றியும் தெரியும்.”

அவர் அவனைச் சிநேகபாவத்துடன் பார்த்து, ”ஐ லைக் யூ!”

”எப்போது வேலைக்கு வரலாம்?”

”இப்போதே என்னுடன் வா… உன் பைகள் எல்லாம் எங்கே?”

”எல்லாம் என் முதுகுக்குப் பின்னால்!”

”இவ்வளவுதானா?”

”இதில்கூடப் புத்தகங்கள்தான் அதிகம்.”

”செஸ் ஆடுவாயா?”

”சுமாராக.”

”சுமாராக ஆடி என்னிடம் தோற்பவர்கள்தான் எனக்கு வேண்டும். பேசப் பேச உன்னைப் பிடித்திருக்கிறது. லூயிஸ் தாமசும் படிப்பேன் என்று சொல்லாதே…”

”மெடுஸா அண்ட் தி ஸ்னெய்ல்.”

”கிரேட் யங்மேன். உன்னை எனக்கு நிச்சயம் பிடித்துவிடப் போகிறது. என் பெண் வினிதா சம்மதித்தால் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவேன்.”

இருவரும் வெளியே சாலைக்கு வர, அவர் கார் அருகில் சென்று, ”மாருதி ஓட்டுவாயா?”

”நான் ஓட்டாத வாகனமே இல்லை!” என்று சிரித்தான்.

”சிகரெட் பிடிப்பாயா?”

”இல்லை.”

”கல்யாணம் ஆகிவிட்டதா?”

”இல்லை.”

”பர்ஃபெக்ட்! சம்பளம் எத்தனை வேண்டும்?”

”உங்கள் இஷ்டம்.”

மாருதி காரைத் திறந்து, முதுகுச் சுமையைப் பின் இருக்கைக்குத் தள்ளிவிட்டு, முன்னால் ஏறிக் கொண்டான்.

”ஓட்டுகிறாயா?”

”இல்லை, இந்தப் பிரதேசமே எனக்குப் புதிது.”

”எந்த ஊர் நீ?”

”எதும் என் ஊர் இல்லை.”

கடற்கரையோரம் சென்றபோது மௌனமாக வந்தான். அருச்சுனன் தவத்தைக் கடந்து, கல்பாக்கம் சாலையைத் தவிர்த்து, ஊருக்கு வெளியே சென்று நீல, மஞ்சள் நைலான் வலைகளையும், மீன் நாற்றத்தையும் கடந்து கடலோர வீட்டு வாசலில் சென்றபோது, வெள்ளைச் சடை நாய் வந்து வாலை ஆட்டியது.

”அமைதியான இடம்… இவன் பெயர் ஸ்னோ. இங்கேயே இருப்பதில் உனக்குத் தயக்கம் ஏதும் உண்டா?”

”இல்லை.”

”அலை ஓசை பழகிவிடும். மாடியில் என் மகனின் அறை இருக்கிறது. எடுத்துக்கொள். மகன் அமெரிக்காவில் இருக்கிறான், டெக் நிறுவனத்தில். மகள் சென்னையில் படிக்கிறாள். விடுமுறைக்கு வருவாள்.”

”அப்படியா?!” – உள்ளே வந்து சித்திரங்களைப் பார்த்தான்.

”யாருக்கு ஷகால் பிடிக்கும்?”

”எனக்கு. உனக்கு..?”

”கன்டின்ஸ்கி.”

”ஏதோ ஒரு விதி என்னிடம் கொண்டுசேர்த்திருக்கிறது உன்னை. நான் இதுவரை தேடிய ஆதர்ச இந்திய இளைஞன் கிடைத்துவிட்டதுபோலத் தோன்றுகிறது.”

அவன் புன்னகைத்தான். ”மிகைப்படுத்துகிறீர்கள்…”

‘எதுவரை படித்திருக்கிறாய்?”

”கல்லூரிக்கு முழுதும் போகவில்லை. படிப்பு தடைப்பட்டுவிட்டது. பி.ஏ. ஹிஸ்டரி படித் தேன்.”

”எங்கே படித்தாய்?”

”லண்டனில்.”

”விட்டுவிட்டாயா?”

”ஆம். பெற்றோரை ஒரு விபத்தில் இழந்த பின்…”

அவன் பையிலிருந்து சாமான்களை எடுத்துவைத்தான். பெரும்பாலும் புத்தகங்கள்… 101 கவிதைகள், லையால் வாட்ஸன் கட்டுரைகள், ரயில்வே அட்டவணை, சதுரங்கம் பற்றிய பாபி ஃபிஷரின் புத்தகம், ‘தி டவ் ஆஃப் பவர்’, மெக்கியாவல்லியின் ‘பிரின்ஸ்’, மோதியின் ‘ஜூரிஸ் புடன்ஸ்’…

”உன்னை வகைப்படுத்த முடியவில்லை.”

மறுபடி புன்னகைத்தான். பதில் சொல்ல விரும்பாதபோதெல்லாம் மையமாகப் புன்னகைப்பான் என்பது புரிந்தது.

முதல் மாதத்தில் அவன் முழுத்திறமையும் படிப்படியாகப் புரிந்தது.

அஜய் ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டுக் கொடுப்பான். சந்திரகுமாருக்குத் தேவையான ஐஸ் டீ, லெமன் கார்டியல் தேன் கலந்து கொடுப்பான். இரவு அவர் எழுதிவைத்திருப்பதை எல்லாம் பிழையே இன்றி மிகச் சுத்தமாக எலெக்ட்ரிக் டைப்ரைட்டரில் அடித்துக் கொடுத்துவிடுவான். ஒன்றிரண்டு திருத்தங்கள்தான் இருக்கும். புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசவே மாட்டான். மாலை செஸ் ஆடுவார்கள். ஒரு நாள் அவன் தோற்பான். ஒரு நாள் இவர்… சில நாள் ட்ரா!

ராத்திரி அவருக்குக் கண்பார்வை மங்கியதால், படித்துக்காட்டினான். ஒருநாள், ”மாறுதலுக்காக ஏதாவது உன் புத்தகத்தில் இருந்து படித்துக்காட்டேன்” என்றார்.

”என் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்காது.”

”நான் தற்போது எழுதும் புத்தகத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?”

”இது நம் நாட்டுக்குத் தேவைஅற்றது.”

”எப்படிச் சொல்கிறாய்?” என்றார் கோபப்படாமல்.

”மகேந்திரன் கட்டிய தூணுக்கும் ராஜசிம்மன் கட்டிய தூணுக்கும் வித்தியாசங்கள் பற்றி ஒரு அத்தியாயமே விளக்கும் புத்தகத்தால் இன்றைய இந்தியாவுக்கு என்ன பயன்?”

”நம் கலாசார மரபு தெரிய வேண்டாமா?”

”தெரிந்து..?”

”நம் இந்தியாவை ஒன்றுசேர்த்த இந்த மரபு இப்போது தேவை இல்லை என்கிறாயா?”

”இந்தியா ஒன்றல்ல! இந்த மஹாபலிபுரம் பல்லவ ராஜ்யமாக இருந்தது. அவன் விரோதி புலிகேசி சாளுக்கிய ராஜ்யம்… அது போல் சோழ மண்டலம்…வேங்கி… இந்தியாவாக இல்லை. இந்தியா பிரிட்டிஷ்காரன் அமைத்தது.”

”எங்கள் தலைமுறை அப்படி நினைக்கவில்லை. நாங்கள் சுதந்திர வேட்கைப்பட்டு, தியாகங்கள் செய்தோம்.”

”காரணம், உங்களை எல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான். இப்போது நம் எதிரி நாமேதான்.”

”இருந்தும் இந்த நாட்டை ஒன்றுசேர்ப்பது கலாசாரம்.”

”இல்லை… ஏழ்மை!”

”உனக்குச் சிற்பங்கள் பிடிக்காதோ?”

”கரைக் கோயிலின் ஆர்க்கி டெக்சர் எனக்குப் பிடிக்கிறது. எனக்கு அதன் அழகை நிலவொளியில் பார்க்கப் பிடிக்கும். அதை அமைத்த பெயரில்லாத சிற்பி தான் என் ஹீரோ. மகேந்திரவர்மன் அல்ல.”

”மனம் மாறுவாய்” என்றார் சந்திரகுமார் புன்னகையுடன்.

வினிதா தசராவுக்கு வந்திருந்தபோது அவனை அறிமுகப்படுத்தினார். ”வினித், திஸ் இஸ் அஜய்… வினிதா என் பெண்.”

”ஹாய், யு லைக் மியூஸிக்?”

”பிடிக்கும்…”

”ஃபில் காலின்ஸ்?” என்றாள் எதிர்பார்ப்புடன்.

”மொஸார்ட்” என்றான்.

”யக்…” என்றாள் அருவருப்புடன்.

”புக்ஸ்? ஜெஃப்ரி ஆர்ச்சர்…”

”ஃபிக்ஷன் ரெண்டாம்பட்சம்… ஐ ரீட் போயம்ஸ்.”

”போயம்ஸ்! மைகாட்…”

”தேர் கோஸ் மை மேரேஜ் அலையன்ஸ்…” என்றார் சந்திரகுமார்.

”எங்கிருந்து அப்பா இந்தப் பிராணியைப் பிடிச்சுட்டு வந்தீங்க? ஹி இஸ் நாட் நார்மல்!” என்றாள் வினிதா.

இருவருக்கும் ஒரே ஒரு பொது அம்சம் – மே மாதத்தில் பிறந்தவர்கள் இருவரும். அவளுடன் விகற்பமில்லாமல் பழகினான். அவளைக் கவிதைகள் படிக்கவைத்தான். மொஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வீடியோ பார்க்கவைத்தான்.

ஒருநாள் மாலை ‘ரொம்பப் போர் அடிக்கிறது’ என்று கட்டாயப்படுத்தி அவனை ஊருக்குள் அழைத்துச் சென்றாள். ”கடற்கரைப் பக்கம் வாக்மென் போட்டுக்கொண்டு நடக்கப்போகிறேன். நீயும் வருகிறாயா?”

கட்டாயத்தின் பேரில்தான் சென்றான். திரும்பி வந்ததும், ”இரவு எனக்கு நிலவொளியில் கரைக் கோயிலைப் பார்க்க வேண்டும்.”

”அழைத்துச் செல்கிறேன்!”

அவர்கள் சென்றதும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். இருவரும் நெருக்கமாகப் பழகுவது திருப்தியாக இருந்தது. ”அவனைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி விசாரிக்க வேண்டும். இவனைப்போல் மாப்பிள்ளை கிடைப்பது மிக அரிது.’

இருவரும் போனதும் வீடு வெறிச்சென்று இருந்தது. மேஜையில் அவன், அவளுக்குப் படித்துக்காட்டிக்கொண்டு இருந்த புத்தகத்தை எடுத்தார். காது மடங்கியிருந்த பக்கத்தில் திறந்தது… ‘How did you die?’

கவிதையின் தலைப்பே சற்று அதிர்ச்சி தந்தது.

‘Death comes with a crawl,

or comes with a pounce

And whether he is slow or spry

It is not the fact that

you are dead that counts

But only, how did you die?’

வாசலில் ஜீப்பில் இருந்து ஒருவர் மெள்ள இறங்கி வந்து, சுற்றிலும் சவுக்குத் தோட்டத்தைப் பார்த்தபடியே அணுகினார்.

”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”ஐ’ம் ஃப்ரம் தி போலீஸ் ஸ்பெஷல் பிராஞ்ச்” என்று அடையாள அட்டையைக் காட்டி, ”இந்த போட்டோவில் உள்ளவனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”

கண்ணாடி போட்டுக்கொண்டு வெளிச்சத்தில் பார்த்தார். மீசை இல்லை; கிராப்பு வெட்டப்பட்டுச் சுருக்கமாக இருந்தது. இருந்தும் திட்டவட்டமாகச் சொல்ல முடிந்தது.

”இவன் பெயர் அஜய். என் செக்ரெட்டரி…”

”இவன் உண்மையான பெயர் அஜய் இல்லை. அவன் இங்கே இருக்கிறானா?”

”என் மகளுடன் கடற்கரைக்குப் போயிருக்கிறான். இப்போது வந்துவிடுவான். ஏதோ அடையாளக் குழப்பம் போலிருக்கிறது.”

வந்தவர் மிக வேகமாகச் செயல்பட்டார் ரேடியோவில். ”சார்லி, திஸ் இஸ் தி ப்ளேஸ்… வி காட் ஹிம்!”

”விவரமாகச் சொல்லுங்களேன்?”

”இவன் யார் தெரியுமா? மை காட்! எங்கே கடற்கரைக்கா?”

”இன்ஸ்பெக்டர், இதில் ஏதோ தப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பையன் என்னுடன் இருக்கும் செக்ரெட்டரி… ரொம்ப நல்ல பையன்.”

”புரொஃபசர், இவன் யார் தெரியுமா? எல்லா போலீஸாலும் தேடப்படும் மிகப் பெரிய தீவிரவாதி… மொத்தம் 18 கொலைகள் இவன் கணக்கில் உள்ளன.”

”சம்திங் பாஸிட்டிவ்லி ராங்… ஆள் மாறாட்டம்… போட்டோ தப்பு” என்றார்.

”அவன் இங்கேதான் தங்கி இருக்கிறானா?”

”ஆம்…”

”எந்த அறையில்?”

”மாடியில்!”

”என்னுடன் வாருங்கள்…” சரசரவென்று மாடிப்படி ஏறினவரைத் தயக்கத்துடன் பின்தொடர்ந்து, அஜய் தங்கியிருந்த அறைக்குள் முதன்முதலாக நுழைந்தார். ”என் செக்ரெட்டரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மணியான பையன். மிகுந்த புத்திசாலி. அழகுணர்ச்சி உள்ளவன், படித்தவன், சிந்திப்பவன்…”

அதிகாரி அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் இரை தேடும் சிங்கம் போல அறைக்குள் அலைந்தார். ஒழுங்கான அறை. சுவரில் கலையம்சத்துடன் நவீன சித்திரம் மாட்டியிருந்தது. அலமாரிப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்திருந்தான். மேஜை மேல் காகிதங்கள் அடுக்காக… ஜன்னல் மலர் ஜாடியில் ரோஜா.

அதிகாரி அவன் மேஜை இழுப் பறைகளைச் ‘சரக்… சரக்…’ என்று திறந்தார். மலர் ஜாடிகள் உருண்டன. காகிதங்கள் பறந்தன. பூட்டுகள் உடைந்தன.

”புரொஃபசர், இங்கே வந்து பார்க்கிறீர்களா, உம் நம்பிக்கைக்குரிய காரியதரிசியின் சொத்துக்களை?”

சந்திரகுமார் அருகே சென்றார்.

”இது உங்களுடையது அல்லவே?”

மேஜையின் மேல்மட்ட இழுப்பறையில் துப்பாக்கி இருந்தது. கீழ் அறையில் ஒரு காலாஷ் நிக்காஃப் ரைஃபிளின் பாகங்களும், மேகஸின்களும் இருந்தன. ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் இருந்தது.

”ஐ கான்ட் பிலீவ் இட்… திஸ் இஸ் இம்பாஸிபிள்!”

”இவன் பெயர் அஜய் அல்ல… இவன் பெயர் டோனு. கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் மகளுடன் எங்கே போய் இருக்கிறான்?”

”கடற்கரைக்கு என்று சொன்னேனே!”

”பதற்றப்படாதீர்கள், அவனுக்கு நாங்கள் இங்கு வந்து தேடுவது தெரியாது. அவனும் உங்கள் மகளும் திரும்பும் வரை பதுங்கி இருக்கலாம்.”

ஜீப்பைப் போகச் சொல்லி ஆணை கொடுத்தார். தபதப வென்று பத்து போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து வாசல் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.

”வெயிட்… யு கான்ட் டூ திஸ்… அவன் வேறு யாரையோ…”

”ஷட் அப் ஓல்ட்மேன்… கீப் கொயட்! ஒரு பயங்கரவாதிக்கு, தீவிரவாதிக்குப் புகலிடம் அளித்திருக்கிறீர்கள். வாயை மூடிக்கொண்டு நடப்பதைக் கவனிப்பது உசிதம்!”

”என்ன செய்யப்போகிறீர்கள்? காட்! என் மகள்… என் மகள் அவனுடன் இருக்கிறாள்!”

”அவளைக் காப்பாற்ற

முயற்சிக்கிறோம்.”

அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது. அலமாரியில் இருக்கும் ஸார்பிட்டால் தேவைப்பட்டது. நாக்கு உலர்ந்தது. ‘என்னவோ ஒரு பெரிய தப்பு நேர்ந்திருக்கிறது… ஆள்மாறாட்டத் தப்பு. இவன் இல்லை… தடுக்க வேண்டும்.’

”வர்றாங்க. எல்லாரும் தயாரா இருங்க. அநாவசியமா சுட வேண்டாம். நான் சொல்லும்போது சுட்டாப் போதும்!”

ஜன்னல் வழியே, வினிதாவுடன் அஜய் மெதுவாகப் பேசிக் கொண்டே வருவது தெரிந்தது. அவர்கள் கைகோத்துக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது அவன் தோளில் தட்டி ஆரவாரமாகச் சிரித்தாள்.

”ரெடி!”

ஒரு கணம் உலகமே நின்றது.

இங்கே துல்லியமாகத் துப்பாக்கிகளின் ட்ரிக்கரைத் தயாரிக்கும் சத்தம் கேட்டது. வீட்டை நோக்கி வந்துகொண்டு இருந்தவன், தரையில் ஈரம் இருந்ததைப் பார்த்தான். அதில் பதிந்திருந்த பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்தான். நின்றான். வின்னியிடம் ஏதோ சொன்னான். அவள் வியப்புடன் கீழே பார்த்தாள்.

”நாம் வந்திருப்பதைக் கண்டு பிடித்துவிட்டான், பூட்ஸ் அடை யாளங்களைப் பார்த்து. ஓடுங்க… பிடிங்க!”

இதற்குள் அஜய், வின்னியை முன்னால் இழுத்துத் தன்னை மறைத்துக்கொண்டான்.

போலீஸார் வெளியே வெள்ளமாகப் பாய்ந்தார்கள். அங்கிருந்து கத்தினான். தன் பையில் இருந்து எடுத்த துப்பாக்கியை வின்னியின் நெற்றியில் பதித்து, ”ஸ்டாப்! கிட்ட வந்தா பெண் இறந்து போவாள்… நில்லு!”

‘சினிமாவில்தான் இந்த மாதிரி காட்சிகள் வரும்’ என்று சந்திர குமார் நினைத்தார். ‘இப்போது கூட அனைத்தும் கனவு’ என்று விழிக்கத் தயாராக இருந்தார்.

அவர் பெண்ணை அவன் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி காரில் திணித்து ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது, போலீஸார் ‘வாக்கிடாக்கி’யில் ஆணைகள் பிறப்பித்தனர். ”க்விக்! செண்ட் த ஜீப்… ஹி இஸ் ரன்னிங்…”

புரொஃபசரைப் புறக்கணித்து விட்டு அனைவரும் ஓடினார்கள். நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் கேட் வரை ஓடியது. புரொஃபசர் வெலவெலத் துப்போய், ”என் மகள்… என் மகளைக் காப்பாற்றுங்கள்…”

இரவு எட்டு மணிக்கு அவர்கள் திரும்பி வந்து, அவரைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.

”என்ன ஆச்சு… என் மகளுக்கு என்ன ஆச்சு..?”

”ஓ! ஷி இஸ் ஆல்ரைட்…”

”பையன்?”

”கடற்கரையில் சுட வேண்டி இருந்தது…” அவர்கள் அந்த இடத்தை அணுக, வின்னி அவரை நோக்கி ஓடி வந்தாள்.

”வின்னி, தப்பித்தாயா! வின்னி, ஆர் யு ஆல்ரைட்?” என்று அவளைக் கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தங்கள் அளித்தார். ”எங்கேயாவது அடிபட்டதா?”

”இல்லை அப்பா… அவன் என்னை எதும் செய்யவில்லை.”

”எதும் செய்யவில்லையா?!”

”நான் அகப்பட்டுவிட்டேன். என்னை நிச்சயம் சுட்டுவிடுவார்கள். சாவதற்கு முன் கடற்கரைக் கோயிலை ஒரு முறை நிலவில் பார்த்து விட வேண்டும்” என்றான். அதற்காகத்தான் என்னைப் பணயக் கைதியாக அழைத்துச் சென்றான். இங்கே வந்ததும் என்னை விடுவித்து விட்டான்!”

சந்திரகுமார் கரைக் கோயிலைப் பார்த்தார். அதன் விளிம்புகளில் வெள்ளி பூசியிருந்தது. தூரத்தில் கடலலைகளின் சுருட்டல்களின் மீதும் வெள்ளி பிரவாகித்தது. அலை புரளும் ஓசை அவ்வப்போது உருண்டது.

”அப்பா, அவர்கள் அவனை… அவனை…” என்று விசித்து அழுதாள்.

கடற்கரைக் கோயிலின் அருகே மணல்வெளியில், நிலவில் நனைந்துகிடந்தான் அவன். மாருதியின் ஹெட்லைட் வெளிச் சத்தில் மார்பில் பாய்ந்திருந்த குண்டின் ரத்த உறைவு தெரிந்தது. சந்திரகுமார் கிட்டே போய் அவனைப் பார்த்தார்.

‘உங்களையெல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான்… இப்போது நம் எதிரி நாமேதான்!’

”மைகாட்! வாட் வென்ட் ராங்?” என்றார் சந்திரகுமார்.

”என்ன?”

”நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலி வாங்கும்படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட்டோம்? நன்றாகத்தானே ஆரம்பித்தோம்! எங்கே தப்பு செய்தோம்? எங்கே… எங்கே…?”

”அந்தக் கேள்வியெல்லாம் கேட்கறதில்லை நாங்கள்” என்றார் அதிகாரி!

 

நன்றி – விகடன்

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்
சுஜாதாவின் கொலை அர‌ங்கம் என்ட‌ ஒரு நாவலை வாசித்தீங்களா?...80,82 ம் ஆண்டு எழுதியிருக்கிறார்...ஈழத்து போராளிகளையும் கதையின் இடை,இடையே கொண்டு வந்துள்ளார்...அந்த நாவலில் தற்கொலைத் தாக்குதலுக்காக மேடையில் குண்டு வைத்தல் போன்ற சம்பவங்களை வைத்து எழுதியிருப்பார்...அதைத் தான் பின்னர் புலிகள் பயன்படுத்தினார்கள்...நீங்கள் கடைசியாக இணைத்த கதையிலும் கொஞ்ச‌ம் எங்கள் ஊர் ஞாபகம் வாற மாதிரி இருக்க்து
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்ததாக ஞாபகம் இல்லை.தேடும் போது கிடைத்தால் இணைத்து விடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணா
 

வீணா பிறந்தது 1946-ல். 1956-லிருந்து 1960 வரை அவள் பெற்றோர் டில்லியில் இருந்தபோது சாப்பிட்ட கோதுமையினாலும், அவள் அம்மாவிடமிருந்து பெற்ற நேர்த்தியான மூக்கினாலும், மிக ஒழுங்கான அதரங்களாலும், உயரத்தினாலும், எல்லா அளவுகளும் ஓர் அரை இன்ச் குறைந்து சட்டையை மீறும் உடம்பு வளப்பத்தினாலும் அவள் எதிரே செல்பவரைப் பிரமிக்கவைக்கும் அழகு பெற்றிருந்தாள். எப்படிப்பட்ட பிரமிப்பு? பெட்ரூமில் புலியைப் பார்க்கும் பிரமிப்பு. ஆதாரமான சில உணர்ச்சிகளை வயிற்றில் ஏற்படுத்தும் பிரமிப்பு!

அன்று மாலை, வீணா தன் ஆபீசிலிருந்து திரும்பியதும் கையிலி ருந்த புத்தகத்தையும் பையையும் தூக்கியெறிந்துவிட்டு, ”அம்மா! அம்மா! அப்பா எங்கே?” என்றாள்.

”இதோ எதிரிலேயே இருக்கி றேன்” என்றார் மதுசூதன்.

”ஸாரிப்பா..! நான் கவனிக்க வில்லை. ஸோ டயர்ட்! இந்தக் கடுதாசியைப் படியுங்கள், அப்பா!”

”என்ன கடுதாசி?”

”காதல் கடுதாசி.”

”என்ன?”

”ஆமாம். ஆபீஸ் விலாசத்துக்கு வந்தது. படியுங்கள். உரக்கப் படியுங்கள்.”

”யார் எழுதியது..?”

”சொல்கிறேன். படியுங்களேன்… சிரிப்பாய் இருக்கும்!”

”என் அருமைக் காதலிக்கு, அன்று நான் உங்களுடன் பேசியதிலிருந்து என் மனம் என் வசம் இல்லை. என் மனம் பரிபோய்விட்டது..

”பரி! சின்ன ரி!” என்றாள் வீணா, அப்பாவின் தோள் அருகே இருந்து.

”ம்… மேலே..!”

”ம்… பரிபோய்விட்டது! எனக்கு உணவு இல்லை. உறக்கம் இல்லை. எப்பொழுது உங்களுடன் மறுபடி அளவ ளாவச் சந்தர்ப்பம் கிட்டும் அப்பொழுதுக்காகவே உயிர் வாழும் சுந்தர்! யார் இந்தச் சுந்தர்?”

”எல்லாம் பக்கத்து வீட்டு சுந்தரராஜன்ப்பா! மேரியைத் தொடரும் ஆட்டுக்குட்டி போல என்னைத் தொடர்கி றான். கம்பளிப்பூச்சி மாதிரி ஒட்டிக் கொள்கிறான். நான் பஸ்ஸில் போனால், அதே பஸ் ஸில் ஆபீஸ் வரை கொண்டு வந்து விட்டுவிட்டு அப்புறம் அவன் ஆபீஸ் போகிறான். சாயங்காலமும் இதே கதி. அவனுடன் ஒரே ஒரு வார்த் தைதான் இதுவரை பேசி யிருக்கிறதாக ஞாபகம். ‘மணி என்ன’ என்று ஒருநாள் கேட் டேன். அவஸ்தைப்பா!”

அம்மா இதுவரை மௌன மாக இருந்தவள், ”அக்கிரமம். காலிப் பசங்க ஆறு பேர் இருக்கிறாங்க அந்த வீட்டில். ராத்திரி பூராவும் மூணு சீட்டு ஆடிக் கொண்டு…”

அப்பா, ”பப்பு” என்று கூப் பிட்டார். பப்பு என்கிற பத்மன், வீணாவின் தம்பி வந்தான்.

”பக்கத்து வீட்டுக்குப் போய் அங்கே சுந்தர் என்று ஒரு பையன் இருக்கிறான். அவ னைக் கையோடு கூட்டிக் கொண்டு, வா!”

அவன் போனதும், அப்பா வீணாவைப் பார்த்தார். அவள் சிரித்துக்கொண்டாள். ‘என் பெண் எத்தனை அழகாக இருக்கிறாள்!’ என்று கவலைப் பட்டார் மதுசூதன்.

”அப்பா! உங்களிடம் வந்து இந்த மாதிரி கம்ப்ளெய்ண்ட் செய்வது எனக்கு வெட்கமா கத்தான் இருக்கிறது. நான் ஒன்றும் பயந்த பெண்ணில்லை. ஆனால், இவன் செய்வது அருவருப்பாக இருக்கிறது. எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை…”

”இரு, இரு… அவன் வரட் டும்!”

”அப்பா! அநாவசியமாக ரகளை பண்ணாதீர்கள். அவ னைக் கூப்பிட்டு, ‘இந்த மாதிரி செய்வது நன்றாக இல்லை. இனிமேல் செய்யாதே!’ என்று சொல்லுங்கள்… போதும்!”

”ம்… அவன் வரட்டும்!” – மதுசூதன் தான் சொல்லப் போவதை, செய்யப்போவதை யோசித்துக்கொண்டு இருந்தார்.

”பெரிய நியூசென்ஸாகப் போய்விட்டான். எங்கே போனாலும் ஸ்பை பிக்சர் மாதிரி பின்னாலேயே மௌனமாகத் தொடர்கிறான். நம்பமாட்டீர்கள் அப்பா… நேற்று சிநேகிதிகளுடன் படகில் தண்ணீரில் போகிறாற்போல் கனா. தண்ணீருக்குள்ளிருந்து தலையை எடுத்துச் சிலிர்த்துக்கொண்டு சிரிக்கிறான்… யார்..? சுந்தர்!” என்றாள் வீணா.

சுந்தர் வாசலில் செருப்பை உதறிவிட்டுத் தயங்கி உள்ளே வந்தான்.

veena-300x192.jpgவீணா சில பத்திரிகைகளைச் சேகரித்துக்கொண்டு நிதானமாக மாடிக்குச் சென்றாள்.

சுந்தர் ஒரு சாதாரணன். அவன் உலகம், நீங்கள் கேட்டவை, தீபாவளி மலர், எம்.ஜி.ஆர்., சிவாஜி படங் களின் உலகம்; செய்தித்தாள்களை நம்பும் உலகம். ‘உங் களுக்குச் சோர்வாக இருக்கிறதா?’ என்று விளம்பரத்தில் கேட்டால், உடனே சோர்வாக உணரும் ஹிப்னோபீடியா சுபாவம். அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த மகத்தான சலனம், வீணாவுடன் ஒரு தடவை பேசியது. மகத்தான தீரச் செயல், அந்தக் கடிதத்தை எழுதியது.

சுந்தர் சுற்றுமுற்றும் பார்த்தான். மதுசூதன் நிற்கிறார். அம்மா, கையில் கரண்டியை வைத்துக்கொண்டு நிற்கிறாள். பப்பு நகத்தைக் கடித்துக்கொண்டு நிற்கிறான். அசிங்கமான மௌனம். அவன் கைவிரல்கள் மெதுவாக நடுங்க ஆரம்பித்தன. ”குட் ஈவி(னிங் ஸார்)!” என்றான்.

”நீதான் சுந்தரா?”

”ஆமாம், சார்!”

”உனக்கு மூளை இருக்கா?”

சுந்தர் பின்னால் திரும்பினான்.

”ஏன், யாரையாவது வக்காலத்திற்குக் கூட்டி வந்திருக்கிறாயா?” என்றவர், மேலும் கேட்டார்… ”இந்த லெட்டரை நீதானே எழுதினே?”

”லெட்… எந்த… த… லெ…” என்று ஒற்றை எழுத்துகளுக்கு நழுவினான்.

”பார்… பார்த்துச் சொல்! உன் கையெழுத்துதானே? பார்… பார்…” என்று அவன் முகத்தின் முன் அந்தக் கடிதத்தை ஆட்டினார்.

”நீதானே..?”

”……………”

”நீதானே?”

மீண்டும் புள்ளி புள்ளி புள்ளி. பதில்தான் வரவில்லை.

”உங்க மாமாகிட்டே சொல்லட் டுமா?”

”வேண்டாம் சார்” என்றான் உடனே ஸ்பஷ்டமாக..

”பின் ஏன் எழுதினாய்?”

”முழிக்கிறதைப் பார்! ஏண்டா காலிப் பசங்களா, உங்களுக்கு வேறே வேலை…” என்று ஆரம்பித்த அம் மாவை அவர் தடுத்து நிறுத்தினார். ”நீ சும்மா இரு! டேய், நீ பால் பிரதர்ஸில்தானே உத்தியோகம் பார்க்கிறே?”

”ஆமாம், சார்!”

”எனக்குப் பால் பிரதர்ஸ் ரெண்டு பேரையும் தெரியும். இப்ப ஒரு போன் கால் போட்டால், நாளைக் காலை உன்னைச் சீட்டுக் கிழித்து விடுவார்கள், தெரியுமா?”

ஃபாக்டரி ஆக்டின்படி அது சாத் தியம் இல்லை என்று சொல்லவேண் டும் போல் இருந்தது சுந்தருக்கு. சொல்லவில்லை.

மதுசூதன் மேலும் விரட்டினார்… ”உங்க வீட்டுக்காரங்கிட்டே சொன் னால், நாளைக்கே பெட்டி படுக்கை யைத் தெருவில் தூக்கி எறிந்துவிடு வான், தெரியுமா?”

இதற்கும் அவன் சொல்ல நினைத்த பதிலைச் சொல்லவில்லை. நாம் முன் சொன்னபடி சுந்தர் சாது. கால் கட்டைவிரலால் வட்டங்கள் வரைந்து கொண்டு, ”ஸாரி சார்!” என்றான்.

”என்ன ஸாரி! எப்பொழுதாவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா… இந்த மாதிரி கடிதம் எழுதுவது தப்பு; அந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் விருப்பமில்லாமல் இருக்கலாம்; இந்த மாதிரி எழுதுவது எவ்வளவு ஸில்லி, முட்டாள்தனம், அறியாமை என்று? பையா, நீ என்ன படித்திருக்கிறாய்?”

”பி.ஏ.”

”கோல்ட்-ஸ்மித் படித்திருக்கி றாயா?”

”………”

”படித்திருக்க மாட்டாய். போய் உட்கார்ந்து ‘சிடிஸன் ஆஃப் தி வேர்ல்ட்’ படி. புத்தி வரும். சரியான லூஸாக இருக்கிறாய். சில மரைகள் டைட் ஆகும். ஞானம் ஏற்படும்.”

”………”

”பேசுகிறானா பாரு!” – அம்மா.

”நீ இரு..! பையா, உனக்கு இது முதல் வார்னிங்! மறுபடி இந்த மாதிரி காதல் கடுதாசி எழுதினால், உன் வீட் டுக்கு வந்து, உன் மாமாவிடம் அனுமதி வாங்கி உன்னைச் செருப்பால் அடிப்பேன். ஜாக்கிரதை! உனக்கு மதுசூதனைத் தெரியாது. உனக்குக் கடுதாசி அனுப்பவேண்டும் என்று ஆவலாயிருந்தால் வெறும் காகிதம் அனுப்பு; ஷேவிங்குக்கு உபயோகமாக இருக்கும். அதிலே ஒன்றும் எழுதக் கூடாது. எழுதினால் ஷேவிங்குக்குக் கூட லாயக்கில்லாமல் போய்விடும். என் வீட்டில் சின்னக் குழந்தைகளும் இல்லை…” சுந்தருக்கு இது புரிய வில்லை. ”ஸாரி ஸார்..!”

”யங் மேன்! உனக்கு லட்சியம் இல்லை. லட்சியம் இல்லாத மனது சஞ்சலப்படும். ஏதாவது ‘ஹாபி’ வைத்துக்கொள்… பெண்களைத் துரத் துவதைக் தவிர! விறகு வெட்டு, காலி சிகரெட் பெட்டி சேர், ஸ்டாம்பு சேர்… எங்களை விட்டுவிடு. என்ன? சொல்வது புரிகிறதா? அநாவசியமாக எங்களுடன் குறுக்கிட்டு, உன் வாழ்க் கையை நாசம் பண்ணிக்கொள்ளாதே!”

”வரேன் சார்!”

”வராதே, போ!”

சுந்தர் செருப்பை மாற்றிப் போட் டுக்கொண்டு ஆவேசமாக வெளியேறி னான். அந்த ஆவேசத்தில் அவன் என்ன செய்யப்போகிறான் என்பது நமக்குத் தெரியாது. ‘பெண் என்னும் மாயப்பிசாசு’ என்று கவிதை எழுதச் சென்றிருக்கலாம்; ரயிலில் விழுந்து தற்கொலை செய்யப் புறப்பட்டிருக்க லாம்; அல்லது, ஒரு தமிழ்ப்படத்துக்குப் புறப்பட்டிருக்கலாம். நம் கவனம் இங்கே, மதுசூதன் வீட்டில்தான்!

அப்பாவுக்கு ஒரு பாட்டம் திட்டி னதில் மனதில் நிறைவு இருந்தது.அம்மா, ”இவனைச் சும்மா விடப் போவதில்லை. நான் போய் அந்த அம்மாவிடம் கேட்கப்போகிறேன்.என்ன ரௌடிப் பசங்கள்… காலிப் பசங்கள்..! வயசு வந்த பெண்ணை நெருப்பைப் போல் வீட்டில் வைத்துக் காவல் காக்க வேண்டியிருக்கிறது. படுகாலி…” என்று அந்த வயசும், அந்தக் குடும்ப நிலையும் அனுமதிக்காத மற்றொரு சொல்லையும் பிரயோகித்தாள்.

”இவனைப் பார்த்தால் ரௌடியாகத் தோன்றவில்லை. இது ஓர் இடியட். அவ்வளவுதான்! வயசுக் கோளாறு. படிப்பு போதாது. புத்தகங்கள், சினிமா! இவன் வயதில் நான் சியாமளா தண்டகம் சொல்லிக்கொண்டிருந்தேன். இவன் காதல் கதை படிக்கிறான். அதான் வித்தியாசம்! பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியார்கள் காரணம்; புத்தகங்கள் காரணம்; இந்த சோஷலிஸ்ட் சர்க்கார் காரணம். இடியட்… இடியட்…”

”எனக்கு என்னவோ வீணாவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது. தனியாக அனுப்புகிறோமே! இவள் உத்தியோகம் பண்ணி யாருக் குச் சோறு போட வேண்டும்? வீட்டிலேயே இருக்கட்டுமே” என்றாள் அம்மா.

மதுசூதன் ஸ்பஷ்டமாகச் சொன்னார்… ”வீணாவைப் பற்றிக் கவலைப்படாதே! அவள் அப்பாவின் பெண். தைரியசாலி! அவளுக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும். சீரியஸான பெண். இந்தக் காதல், கீதல் என்கிற புத்தக உணர்ச்சிகள் எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டவள். இதெல்லாம் மேம்போக்கானது என்று அறிந்துகொள்கிற பக்குவம் அவளுக்கு இருக்கிறது பார், அதுதான் முக்கியம்! நாம் வளர்த்த ரீதி. வேறு ஏதாவது பெண்ணாயிருந்தால் இந்த மாதிரி தத்துப்பித்து என்று கடுதாசி வந்தால், பதில் கடுதாசி எழுதி, விபரீதத்தை வளர்க்கும். வீணா அப்படி இல்லை! சென்ஸி பிள் கேர்ள்! வீ…ணா” என்று கூப்பிட்டார் மாடிப்பக்கம் பார்த்து.

வீணா மாடியிலிருந்து ”என்ன அப்பா?”

”அந்தப் பையன் வந்துட்டுப் போனான்!”

”கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா! யூவெர் க்ரேட்! இனி அவன் என்கிட்டே ஒரு பர்லாங் கூட வர மாட்டான்!”

அப்பா சிரித்துக்கொண்டார்… ”ஹி வாஸ் வெல் மீனிங் இடியட்!”

”ஆமாம்ப்பா!”

”என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?”

”படித்துக்கொண்டிருக்கிறேன்ப்பா!”

”என்ன?”

”ஷேக்ஸ்பியர்!”

அப்பா, அம்மாவைப் பெருமையுடன் பார்த்துக்கொண்டார்.

வீணா மாடியில், ஷேக்ஸ்பியர் புத்தகத்திற்குள்ளிருந்த கடிதத்தை எடுத்தாள். அதை மறுபடி (நான்காவது தடவை) படித்தாள்.

‘வீ… என் ஆயிரம் தடவை அன்பே! சனிக்கிழமை சஃபையர் 6-30 கட்டாயம். என்ன? மிக அவசரமும் காதலும் சேர்ந்து… சுந்தர்.”

வீணா அந்தக் கடிதத்தை எட்டாக மடித்துத் தன் மார்பின் அந்தரங்கத்தில் செருகிக்கொண்டாள். இந்தக் கடிதத்தைப் பற்றி அப்பாவிடம் சொல்லவில்லை. ஏனெனில், இது வேறு சுந்தர்!

- 08-09-1968 

 
  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதாவின் கதைகளை தேடி தேடி ஒருவயதில் வாசித்தது, குறிப்பாக அவரின் துப்பறியும் கதைகள், அதில்வரும் வசந்த், கணேஷ் போன்ற பாத்திரங்கள் மறக்கமுடியாதவை. சுஜாதா பலநிலைகளில் கதைகள் எழுதியவர், விஞ்ஞானகதை தழுவி அவர் எழுதிய "கடவுளின் வருகை" என்ற சிறுகதைக்காக, ஒரு புத்தகத்தை வாசிகசாலையில் இருந்து சுட்டது இப்போதும் ஞாபகம் உள்ளது. சுட்டகாயம் இன்னமும் உள்ளது........................

vaasippil niraiya theeni pottavai sujaathaavin kathaikal.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.