Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிப்.5-ல் தமிழ ஆளுநர் மாளிகை முற்றுகை

Featured Replies

ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிப்.5-ல் தமிழ ஆளுநர் மாளிகை முற்றுகை:

 

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளனர்.

 

இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணணையக் கூட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை சர்வதேச நாடுகள் கொண்டுவர உள்ளன. இதிலிருந்து தம்மை எப்படியும் இந்தியா காப்பாற்றிவிடும் என்ற இறுமாப்பில் போர்க்குற்றவாளி ராஜபக்சே இருக்கிறான். இதற்காக அண்மையில் அந்நாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வந்து சென்றது. இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அப்போதே சுட்டியும் காட்டியது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்று காட்டுவதற்காகவே போர்க்குற்றவாளி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் 8-ந் தேதி வருகை தர இருக்கிறான்.

 

முற்றுகைப் போராட்டம்

தமிழக மக்களின், தமிழக அரசின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக அலட்சியம் செய்து, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை புறந்தள்ளி கொடியவன் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை காப்பாற்றும் வகையில் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து இந்திய அரசின் பிரதிநிதியாக தமிழகத்தில் பதவியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை வரும் 5-ந் தேதியன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தீர்மானித்திருக்கிறது! விசாரணை கூட இல்லை யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இலங்கை தமிழர் தாயகப் பகுதி சிங்கள தேசமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்து ஆலயங்கள், முஸ்லிம், கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் நிர்மூலமாக்கப்பட்டு புத்த விகாரைகளாகிப் போய்விட்டன.

 

இலங்கையில் இதுநாள் வரை போர்க்குற்றவாளிகள் எவருமே அடையாளம் கூட காட்டப்படவில்லை. விசாரணை கூட தொடங்கப்படவில்லை. முள்ளி வாய்க்கால் யுத்தத்தில் சரணடைந்த பேபி, யோகி, ரத்தினதுரை போன்ற மூத்த போராளிகள் கதி என்ன என்று தெரியவில்லை.

 

நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு அனுமதி மறுப்பு தற்பொழுது கூட இலங்கையின் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்த மகிந்த ராஜபக்சேவை சர்வதேச சமூகமே கண்டிக்கிறது. நீதித்துறைக்கு சவால்விடும் சர்வாதிகாரி ராஜபக்சேவுக்கு எதிராக விசாரணை நடத்த சர்வதேச சட்டவாளர்கள் சங்கம் சார்பில் சென்ற இந்திய நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு விசா கூட தர மறுத்திருக்கிறது சிங்கள அரசு.

 

இப்படிப்பட்ட கொடுங்கோலனுக்குத்தான் சிறிதும் வெட்கமே இல்லாமல் மத்திய அரசு முட்டுக் கொடுத்து இந்தியாவுக்குள் செங்கம்பள வரவேற்பு கொடுக்கிறது! இத்தகைய மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கவே இந்திய அரசின் பிரதிநிதியான தமிழகத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்துகிறது.

 

பிப்ரவரி 5-ந் தேதி காலை 11 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாக இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்! தமிழின விரோத மத்திய அரசுக்கு எதிராக, போர்க்குற்றவாளியை அனுமதிக்கும் இந்திய அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து பெருந்திரளாய் தமிழர்களாய் ஒன்று திரண்டு முற்றுகையிடுவோம்! வாரீர்!! என்று அதில் கூறியுள்ளார்.

 

 

 

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/03/tamilnadu-tvk-lay-siege-raj-bhavan-velmurugan-169064.html

எல்லோரும் சேர்ந்து மத்திய தேர்தல் வரும் போது கருணாநிதியை கவணித்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் மத்திய அரசு அங்கிருக்காது. ராஜபக்சேயும் வரமாட்டார்.

 

முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

Petition: Nitish Kumar, Chief Minister, Bihar, India: Stop Sri Lankan President Mahinda Rajapaksa from visiting Bodh Gaya

 

https://www.change.org/petitions/nitish-kumar-chief-minister-bihar-india-stop-sri-lankan-president-mahinda-rajapaksa-from-visiting-bodh-gaya?

கலந்துகொள்ளவுள்ள உறவுகளுக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் விஜயத்திற்கு தடை வேண்டாம் - ராமாகோபாலன்
2013 ஃபெப்ரவரி மாதம் 04 திங்கட் கிழமை- பி.ப 07:25

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் நாட்டின் ஹிந்து முன்னணியின் தலைவர் ராமா கோபாலன் தெரிவித்துள்ளார்.

ஹிந்து முன்னணியானது இந்து மக்களின் உரிமைகளுக்காக தமிழ் நாட்டில் இருந்து செயற்படும் அமைப்பாக திகழ்கிறது.

ஏற்கனவே அந்த அமைப்பினர் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிராக தமிழ் நாட்டில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஹிந்து முன்னணியின் தலைவர் ராமா கோபாலன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திருப்பதி தலத்திற்கு சமய நிகழ்விற்காகவே வரவுள்ளதாக தெரிpவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கையிலிருந்த கத்தோலிக்க யாத்திரிகர்கள் சிலர் வேளாங்கன்னி தேவாலயத்திற்கு சென்ற போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அந்த சம்பவம் இந்திய அரசியல் தரப்பினரால் கடும் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இதன்காரணமாக இலங்கை அரச தலைவரின் தமிழக விஜயத்திற்கு எந்த இடையூறுகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என ஹிந்து முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்..

 

http://www.hirunews.lk/tamil/52735

இதற்கு முன்னர் இலங்கையிலிருந்த கத்தோலிக்க யாத்திரிகர்கள் சிலர்

வேளாங்கன்னி தேவாலயத்திற்கு சென்ற போது அவர்கள் மீது தாக்குதல்

நடத்தப்பட்டமையும் அவர் நினைவு கூர்ந்தார்.

பாரபட்சம் இல்லாமல் இருக்க இந்த முறை கட்டாயம் நமது தமிழக உறவுகள் நமக்காக இதை செய்ய வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.