Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் சிங்களவர்களை விட முஸ்லிம்கள் அதிகமில்லை ; எஸ்.பி

Featured Replies

நாட்டில் சிங்களவர்களை விட முஸ்லிம்கள் அதிகமில்லை ; எஸ்.பி

63f2b70ba54e40f426e45455c3ffc082.jpg

இலங்கையில் சிங்களவர்களை விட முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திளில் எந்தவிதமான உண்மையுமில்லை என உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற சுதந்திரத் தின வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

1962, 1983, 1993, 2011 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம் மக்களின் சனத்தொகை வீதம் அதிகரித்துள்ளதாகவும் சிங்கள மக்களின் சனத்தொகை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் அவர்களது எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை. அவ்வாறு கூறுவது உண்மைக்குப் புறம்பானது.  

 

இருப்பினும் 1956, 1967, 1983, 1994, 2011 ஆம் ஆண்டுகளில் கொழும்பு நகரில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

எனினும் ஆரம்பகாலத்தில் வர்த்தகத்தினை நோக்காகக் கொண்டு அரேபியாவில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு முஸ்லிம் ஆண்கள் மட்டுமே வந்தனர்.

அவர்களுடன் பெண்கள் யாரும் வரவில்லை. அவர்கள் இலங்கையில் இருந்த சிங்கள பெண்களை யே மணந்து கொண்டனர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

 

http://onlineuthayan.com/News_More.php?id=320881816406228818

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து, ஸ்ரீலங்காவுக்கு வந்த முஸ்லீம்கள், சிங்களப் பெண்களை மணம் முடித்தால்.... அவர்கள் சிங்களவர்களா, முஸ்லீம்களா?

எந்த முஸ்லீமும், மற்ற மதப் பெண்களை.... முதலில் தமது மதத்திற்கு மாற்றிவிட்டுத்தான், திருமணம் செய்வான்... என்பது அமைச்சருக்கு தெரியாது போலை.

Edited by தமிழ் சிறி

இனி வரும் காலங்களில் முஸ்லிம் பெண்களையும் சிங்களப் பெண்களாக கணக்கெடுத்தால் எங்கும் உதைக்காது!

இந்த மாதிரிப் பேர்வழிகளுக்கெல்லாம் உயர் கல்வி அமைச்சை ஒதுக்கியவன் எப்படிப்பட்ட மூளைசாளியாக இருப்பான்? :unsure:

சிங்கள பௌத்த பேரினவாதத்தின்  கண்களில்  'முஸ்லீம் சனத்தொகை வளர்ச்சி' பட்டுவிட்டது.


அந்த இயந்திரம் உறங்ககப்போவதில்லை  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில் சிங்களவர்களை விட முஸ்லிம்கள் அதிகமில்லை ; எஸ்.பி

எனினும் ஆரம்பகாலத்தில் வர்த்தகத்தினை நோக்காகக் கொண்டு அரேபியாவில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு முஸ்லிம் ஆண்கள் மட்டுமே வந்தனர்.

அவர்களுடன் பெண்கள் யாரும் வரவில்லை. அவர்கள் இலங்கையில் இருந்த சிங்கள பெண்களை யே மணந்து கொண்டனர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

 

http://onlineuthayan.com/News_More.php?id=320881816406228818

 

 

 

ஆஹா....  :lol:

என்ன ஒரு கண்டுபிடிப்பு????????

அரேபியாவில் இருந்து வந்தவர்கள் சிங்களப் பெண்களை மணந்தால் அவர்களின் பரம்பரை எப்படி தமிழை தாய் மொழியாகக் கொண்டது?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அரேபியாவில் இருந்து வந்ததனால் இலங்கை முஸ்லிம்கள் தவறு செய்தால் தலையை வெட்டலாமோ? :unsure: இல்லை சும்மாதான் கேக்கிறன்.. :huh:  சரியா சட்டம் எண்டால் அவைக்கு மெத்த சந்தோசம்தானே?? :D

  • தொடங்கியவர்

அரேபியாவில் இருந்து வந்ததனால் இலங்கை முஸ்லிம்கள் தவறு செய்தால் தலையை வெட்டலாமோ? :unsure: இல்லை சும்மாதான் கேக்கிறன்.. :huh:  சரியா சட்டம் எண்டால் அவைக்கு மெத்த சந்தோசம்தானே?? :D

 

ஆண்களுமட்டும்தான் என்று கக்கீமும் மகிந்தாவும் ஏற்றுக்கொண்டுளதாக ஒரு கதை அடிபடுகிறது. சிங்கள பெண்கள் மகிந்த சிந்தை உள்ளவர்கள். :lol:

 

விஜயன் விடுகாலிப்பெடியலோடை இலங்கைக்கு வந்து எங்களின்ரை பெட்டையளை கலியாணம் கட்டிப்போட்டு எங்களுக்கு ஆப்பு வைக்கலாம் என்றால் இது எந்த வகையில் பிழை? முஸ்லீம்கள் தங்கள் மகாவம்சத்தை எழுத வேண்டியதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

1641607581ages.jpg

1915 சிங்கள-முஸ்லிம் கலவரம்போல் புதிதொன்று ஏற்படாமல் பாதுகாப்பது அரசின் பொறுப்பு - ரணில்

 

சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட ஏதுவான காரணங்களை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

1915ம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தை போன்று மற்றுமொரு கலவரம் இடம்பெறாமல் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ரணில் விக்ரமசிங்க இன்று (06) பாராளுமன்றில் தெரிவித்தார். 

இலங்கையில் பௌத்தர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஒரே சட்டமே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முஸ்லிம் பிரஜைகளுக்கு சில சில இடையூறு, நியாயமற்ற செயல்கள் இடம்பெறும் போதெல்லாம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள - பௌத்த மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். 

ஹலால் சான்றிதழ் பெறுவதில் சிங்கள வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனரா என அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கோரியுள்ளார். 

எதிர்கட்சித் தலைவரின் இக்கூற்றுக்கு நாளை பதிலளிக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

(அத தெரண - தமிழ்)

Edited by nunavilan

  • தொடங்கியவர்

முஸ்லிம் பிரஜைகளுக்கு சில சில இடையூறு, நியாயமற்ற செயல்கள் இடம்பெறும் போதெல்லாம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள - பௌத்த மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

வழமையான நரி வேலை செய்து எண்ணை வார்க்கிறார். இதில் கிழக்குத் தமிழர் தொடப்பட்டால் சர்வதேசம் ஐ.நா. இராணுவத்தை அனுப்ப வேண்டும்.

Edited by மல்லையூரான்

அரேபியாவில் இருந்து வந்தவர்கள் சிங்களப் பெண்களை மணந்தால் அவர்களின் பரம்பரை எப்படி தமிழை தாய் மொழியாகக் கொண்டது?

போர்த்துக்கீசியர்கள் முஸ்லிம்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற, முஸ்லிம்களுக்கு  அடைக்கலம் கொடுத்த கண்டி மன்னன் தனது ஆளுகைக்குக் கீழ் இருந்த காத்தான்குடியிலும் கல்முனையிலும் குடியேற்றினான்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் பூர்வீகமே இலங்கை; வந்தேறு குடிகள் சிங்களவர்களே!


 

Mubarak2-150x150.jpg

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்பது இலட்சக் கணக்கான வருடங்களைக் கொண்டதே அல்லாமல் அவர்கள் அனைவரும் அறபு மக்களின் வாரிசுகள் என்பது அப்பட்டமான கற்பனையாகும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

 

இனாமலுவே சுமங்கள தேரரின் முஸ்லிம்கள் பற்றிய தவறான அண்மைய கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முபாறக் மௌலவி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

 

“இலங்கையை பொறுத்த வரை சிங்களவர்களின் வரலாறு என்பது சுமார் 2500 வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாவதாக சிங்கள மக்களின் வரலாற்றுக்குரிய ஆதாரபூர்வ நூலான மஹாவம்சம் கூறுகிறது. அத்துடன் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு வந்த விஜயன் ஒரு பௌத்தனாக வரவில்லை. ஏனெனில் விஜயனின் வரவிற்கு பின்பே இலங்கைக்கு பௌத்த மதம் வந்ததாக மஹாவம்சம் கூறுகிறது.

 

ஆனால் விஜயனின் வரவுக்கு முன்பிருந்தே இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். விஜயன் மணமுடித்த குவேணி ஒரு பௌத்த பெண்ணாகவோ அல்லது இந்துவாக வாழ்ந்ததாகவோ ஆதாரம் இல்லை. இந்த நிலையில் மனித வரலாற்றை ஆராயும் போது முதல் மனிதன் ஆதம் இலங்கையில் கால் பதித்ததாகவே சமயங்களும் மானுட வரலாறும் தெளிவாக கூறுகின்றது.

அதேபோல் ஆதம் ஒரு முஸ்லிமாக வாழ்ந்ததாக குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது. சிங்களவர்களுக்கு எவ்வாறு மஹாவம்சம் ஆதார நூலோ அதேபோல் சில வேளை அதனை விடவும் குர்ஆன் முஸ்லிம்களின் ஆதார நூலாக முஸ்லிம்களால் கொள்ளப்படுகிறது.

 

ஆதத்தின் வரலாறு என்பது சுமார் நாற்பது லட்சம் வருடங்களுக்கு முந்தையது என இன்றைய விஞ்ஞானம் உறுதியாக கூறுகிறது. அந்த வகையில் ஆதத்தின் பரம்பரையான முஸ்லிம் சமூகம் இலங்கையில் பல லட்சக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறது என்பதே உண்மையாகும்.

 

இவ்வாறு ஆதத்தின் பரம்பரையில் வந்த முஸ்லிம் பெண்ணாகவே நான் குவேணியை பார்க்கிறேன். அவள் வேடுவ பெண்ணான போதும் ஆதி மனிதன் முஸ்லிமான ஆதத்தின் பரம்பரை வேடுவர்களாகவே இங்கு வாழ்ந்தார்கள். இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களே மத்திய கிழக்கு போன்ற உலக நாடுகளுக்கு சென்றார்களே தவிர மத்திய கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் வந்தார்கள் என்பது கற்பனையானதாகும்.

 

சுமார் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் பிறந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை உலகுக்கு கொண்டு வரவில்லை. மாறாக களங்கப்படுத்தப்பட்டிருந்த இஸ்லாத்தை பதுப்பிப்பதற்காக இறைவனின் இறுதி தூதராகவே வந்தார்கள். ஒரு சில அறபு வியாபாரிகள் முஹம்மது நபிக்கு பின் இலங்கைக்கு வந்தார்கள். இங்கு திருமணமும் முடித்தார்கள். சிலர் இங்கு தங்கியிருக்கலாம். சிலர் தமது இலங்கை மனைவியை அழைத்துக் கொண்டு தமது நாடுகளுக்கு சென்றிருக்கலாம். இங்கே தங்கியவர்கள் எற்கனவே இங்கிருந்த முஸ்லிம் பரம்பரையுடன் முஹம்மது நபியை இறுதித் தூதராக அவர்களையும் ஏற்கச் செய்து அவர்களுடன் வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மையான வரலாறாகும்.

 

ஆனாலும் பிற்காலத்தில் இலங்கை வந்த அறபிகள் சிங்கள பெண்களை கொள்ளையடித்தார்கள் என தேரர் கூறுவதன் மூலம் சிங்கள பெண்களைத்தான் இவர் கேவலப்படுத்தியுள்ளார். அறபியைக் கண்டு அதுவும் கடலோடிகளாக வருபவர்கள் இளைஞர்களல்ல, முதியவர்களே, அத்தகையவர்களில் மயங்கிய சிங்கள பெண்கள் அவர்களை மண முடிக்கிறார்கள் என்றால் அந்த மயக்கம் அவர்களின் இனத்து ஆண்களிடம் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதே பொருளாகும். இவ்வாறு சிங்கள பெண்களை கேவலப்படுத்துவது தேரருக்கு சந்தோசமாக இருக்கலாம். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் சிலரின் தாய்மார்களான அந்த சிங்கள பெண்களை இவர் கேவலப்படுத்துவதை எம்மால் எற்றுக் கொள்ள முடியாது.

 

இந்நாட்களில் கூட இலங்கைக்கு சுற்றுலா வரும் பல அறபிகள் சிங்கள பெண்களை மண முடித்து சில காலத்துக்கு வைத்திருந்து விட்டு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிங்கள பெண்கள் அறபிகள் மீது மோகம் கொள்வதற்கு அவர்களின் சுத்தமும் வீரியமிக்க ஆண்மையும் நல்ல நடத்தையும், பெண்களை மதிக்கும் உயர் பண்பும் காரணமாக இருக்கலாம். இந்த ரகசியத்தை சிங்கள பெண்களாலேயே தெளிவுபடுத்த முடியுமே தவிர துறவியான தேரரால் புரிந்து கொள்ள முடியாது.

ஆகவே சிங்களவர்கள்தான் இலங்கைக்கு வந்தவர்களே என்பதுவும் முஸ்லிம்களேSL.png இந்நாட்டின் முதல் பூர்விகம் என்பதையும் ஆணித்தரமாக சொல்லி வைக்கிறோம்” என்று குறிப்பிட்டார். 

http://metromirror.lk/?p=465

 

Edited by nunavilan

Well said மௌலவி முபாறக் அப்துல் மஜீத் :D

  • தொடங்கியவர்

அந்தாள் நியாமான ஒரு வாதாட்டத்தை வைக்கிறர். தமிழ் நாட்டில் எப்போது முதல் யவணர்கள் குடியேறினார்கள்? எப்போது வியாபாரத்திற்கு வரத்தொடங்கினார்கள்? அப்போது அவர்கள் நிச்சயமாக இலங்கையையும் எட்டிப்பார்த்தார்கள் என்பது உண்மை. இது ஆராச்சிகள் மூலம் நிறுவப்பட்டது.

 

6ம் நூற்றண்டு மகாவம்ச சமய கதைகளில் இறங்கினாலும் அவர் சொல்கிற சமயக்கதை கதை 6ம் நூற்றாண்டுக்கு முன்னர் தொடக்கம் இருக்கு.

 

வெறும் நம்பிக்கை கதையான சிவனொளிபாதத்தில் மட்டும் அவர் தேரரருக்கு சரிக்கு சரி. ஏன் எனில் மேலே, கீழே என்பதெல்லாம் சிவனொளி பாத மலையின் வயதுக்கு அப்பால் போக முடியாது.

 

அவர் தேரரிடம் தோற்பது கடைசி வசனத்தில் மட்டும். இதில் மட்டும் உலமாக் கட்டிசித்தலைவர் தன்னால் நிரூபிக்க முடியாதை கூறிவிட்டார்.

 

இந்த ரகசியத்தை சிங்கள பெண்களாலேயே தெளிவுபடுத்த முடியுமே தவிர துறவியான தேரரால் புரிந்து கொள்ள முடியாது.

இவ்விடம் வரும் போது யாரையும் குறைத்து எடைபோடாமல் இருந்திருக்கலாம் அல்லவா? :lol: :lol: :lol:

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.