Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவி கைது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடசாலை மாணவி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நீதியமைச்சும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என ஜனாதிபதி பணித்துள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான  கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தினார். உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு கல்வியமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். 

 இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுச்சென்றிருக்காமல் இணக்கச்சபையின் ஊடாக தீர்வு கண்டிருக்கலாம்.குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிபரையோ இன்றேல் ஆசிரியரையோ கடமையிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் கல்வியமைச்சருக்கோ அமைச்சின் செயலாளருக்கோ இல்லை.

பொது சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்றார்.பாடசாலை கட்டிடங்களுக்கு நிறம் பூசுவதற்காக பாடசாலை நிர்வாகம் மாணவர்களிடம் 800 ரூபாவே கோரியுள்ளது.

அதனை திரட்டிக்கொள்ள முடியாத மாணவி அருகிலுள்ள தென்னந்தோட்டத்தில் 8 தேங்காய்களை களவெடுத்துள்ளார்.அந்த மாணவியை குற்றவாளியாக இனங்கண்ட ஹொரணை நீதவான் நீதிமன்றம் அவரை 50 ஆயிரம் ரூபா பிணையில் விடுதலைச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

tamilmirror.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே! எட்டுத் தேங்காயிட்காய் பள்ளிக்கூட பிள்ளையை கைது செய்கிறார்களே. தேங்காய்த் தோட்டங்களையே களவெடுத்தவர் வெளியில் இருக்க    

police600.jpg

ஒரு உரித்த தேங்காய் ரூபா 4௦.௦௦, சரி அந்தக் கணக்கே பார்த்தாலும் 40 X 8 = 320.00

ஒரு சிறுமியிடம் 50,000 ரூபா அபராதமா? 

 

இதென்னையா நீதி? 

தேங்காய் வழக்கு வாபஸ்

 

13 வயது மாணவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த தேய்காய் திருட்டு குற்றச்சாட்டு வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.ஹொரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கே பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

320 ரூபா பெறுமதியான 8 தேங்காய்களை திருடியதாக பாடசாலை மாணவியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். வுழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பில் குறித்த மாணவிக்கு நோட்டீஸ் மூலம் அறிவிக்குமாறு ஹொரணை; நீதிமன்ற நீதவான் மஹிந்த ரணசிங்க பொலிஸாருக்கு பணித்தார்.


இந்த சிறு சம்பவமானது ஊடகங்கள் வாயிலாக பெரிதுபடுத்தப்படுமாயின் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு அது பிள்ளையின் கல்விசெயற்பாடுகளுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பாடசாலை கட்டிடத்திற்கு நிறப்பூச்சி பூசுவதற்காக பாடசாலை நிர்வாகத்தினால் கோரப்பட்ட 900 ரூபா பணத்தை திரட்டிக்கொள்ள முடியாத குறித்த மாணவி அருகிலுள்ள தேங்காய் தோட்டத்தில் 08 தேங்காய்களை களவெடுத்தாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம் ஊடகங்களில் வெளியானதையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்வியமைச்சருக்கும் நீதியமைச்சருக்கும் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58677-2013-02-11-06-32-39.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நீதித்துறை சாகவில்லை என்று தேங்காயில் காட்டியுள்ளார்கள்..! :D புரிந்துகொள்ளுமா மேற்குநாடுகள்? :D

சிறுமி மந்திரியாகலாம இனி?



சிறுமிக்கு அலரி மாளிகை விருந்துபசார நாள் இன்னமும் குறிக்கப்டாதது கவலைக்கிடம்.



இவர் பேர்போன ஜனாதிபதி மட்டுமல்ல இப்பாடி தலாட்டுவதில் சிறந்த Nany ம் கூட

Edited by மல்லையூரான்

Justice without mercy is a tyranny

Editorial(96).jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களிடம் பணம் அறவிடல்; முதலமைச்சர்கள் - ஜனாதிபதி சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013 03:29     0 COMMENTS
-ஒலிந்தி ஜயசுந்தர
 
மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவது தொடர்பாக மாகாண முதலமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
எட்டாம் வகுப்பு மாணவியொருவர் வகுப்பறை தளபாடங்களுக்கு வர்ணம் பூசுவதற்காக 800 ரூபாவை செலுத்த சில தேங்காய்களை திருடியதாக கூறப்படும் செய்தி பணம் அறவிடுவது தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளை தூண்டியுள்ளது என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடகங்களுக்கு பேசும்போது குறிப்பிட்டார்.
 
பாடசாலை தேவைக்கு மாணவரிடம் அறவிடப்படும் பணத்தை கட்டுப்படுத்துவதற்காக சுற்றறிக்கைகள் திருத்தப்படவுள்ளன என முதலமைச்சர் தெரிவித்தார்.பணம் கொடுக்க வசதியில்லாத பிள்ளைகளிடமிருந்து பணம் பெற அனுமதிக்கப்பட்டமாட்டாது என அவர் கூறினார்.
 
இவரது வறுமையை உணர்ந்து பண அறவீடுகளிலிருந்து இவருக்கு பூரண விலக்களிக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டார்.
 
நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவியின் வீட்டுக்கு சென்ற வகுப்பாசிரியர் மாணவியை பாடசாலைக்கு வரும்படியும் யாரும் அவரை கிண்டல் செய்யமாட்டார்கள் எனவும் மாணவியிடம் கூறினர்.
 
800 ரூபா கொண்டுவரும்படி பாடசாலை நிர்வாகம் கூறியதாக இந்த பிள்ளை கூறியது உண்மையல்ல என இந்த பிரச்சினையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் இந்த பிள்ளை சொன்னது பொய்யாயிருக்கலாம், ஆனால் உங்களில் யாரும் எந்தடவையில் சொன்ன எதுவும் உண்மையிலை. அதாவது "இந்த பிள்ளை பொய்சொல்கிறாள் "என்பது உள்ளடங்கலாக. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.