Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன் விடுதலை

  By General 
2013-02-13 11:33:28
 
படையினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்களும் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய மேற்படி மாணவர்கள் வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் அடிப்படை உரிமைகள் மீறல் வழக்கு தொடர வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்கள் மகிந்தவிடம் கதைத்த பிற்பாடே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்தபடி செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அவைச் செய்தாதிருந்தபடி, மாணவர்கள் செய்வதை வைத்து இன்பம், கிளுகிளுப்பு காண்பதில் ஒரு பலனும் கிடையாது. இவ்வளவு நாளும் இரகசியமாகவெனினும், மாணவர்கள் மாவீரர்களை நினைவில் கொண்டார்கள். எனிவரும் காலங்களில் சும்மா, கிளுகிளுப்புக் காண்போருக்கு பார்க்க முடியாது போகலாம். போராட்டம் என்பதன் பாதைகள் என்ன என்பதில் நிறையவே குழப்பங்கள் மிஞ்சியுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கைதுகள் மூலம் சிங்கள பல காய்களைப் பறிக்க முனைந்துள்ளது.

1. தமிழர்களின் போராட்ட சிந்தனைக்கு சம்மட்டி அடி வழங்குவது.

2. மாணவர்கள் மத்தியில் போராட்ட எழுச்சிக்கு பூட்டுப் போடுவது.

3. சிறீலங்காவில் வாழும் மக்கள் மத்தியில் தமிழர்கள் போராட்டம் பற்றிய ஒரு பய பீதியை உண்டு பண்ணுவது.

4. சொந்த அரசியலை இலாபங்களை முன்னிறுத்துவது.

5. இராணுவ நிர்வாகத்திற்கு கூடிய மதிப்பளிக்கச் செய்வது.

6. தமிழர் பகுதியில்.. சிங்கள இராணுவ மயமாக்கலுக்கும் சிங்கள மயமாக்கலுக்கும் காரணங்களைக் கண்டுபிடிக்க ஆதாரமாக்குவது.

இந்த மாணவர்களின் விடுதலை இவ்வளவு விரைவில்.. அரசியல் மயமாக..

புலம்பெயர் மக்களின் குறிப்பாக இளையோரின் போராட்டங்களும்.. தமிழக கட்சிகள் சிலவற்றின் குரல்களும்.. சர்வதேசக் கண்டனங்களும்.. முக்கிய காரணமா இருந்தன.

இன்றேல்.. இந்த விடயம்.. இவ்வளவு சர்வதேச முக்கியத்துவம் பெறவில்லையேல்.. கடத்தப்பட்ட லலித்.. குகன் போல இவர்களும்.. காணாமல் போகடிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த சம்பவத்தின் பின் கைதான பொதுமக்கள் பலர் இன்று வரை விடுவிக்கப்படவில்லை என்பது இதனை தெளிவாக இனங்காட்டுகிறது. அவர்களின் விடுதலைக்கான செயற்பாடுகள் மந்தப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரியது.

என்ன தாயகத்தில் மக்களிடம் இல்லாத குழப்பம்.. புலம்பெயர் முன்னாள் போராட்ட ஆதரவாளர்கள் மத்தியில் இருப்பதையும் இது இனங்காட்டத் தவறவில்லை. மேலும்.. மாற்றுக் கருத்து மாணிக்கங்களின் உப்புச்சப்பற்ற ஒரு சதத்திற்கும் உபயோகமற்ற.. மாவீரர் மீதான வசைபாடலுக்கும்.. போராட்டம் பற்றிய விதண்டாவாத விதப்புரைகளும்.. இது இன்னொரு தடவை இடமளித்து விட்டுச் சென்றிருந்தது.

இந்த இடத்தில்.. இந்த மாணவர்களின் பிரச்சனையை தம்மால் இயன்ற அளவு சர்வதேச மயப்படுத்த உதவிய உள்ளூர் அமைப்புக்கள், கட்சிகள்..மற்றும் புலம்பெயர் இளையோர் அமைப்புக்கள் மற்றும் தமிழகக் கட்சிகளுக்கு நன்றி பாராட்டுதல் வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

விடுதலை என்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி.

ஆனால் இந்த விவகாரத்தை சிரானியின் விடயத்துடன் பல இடங்களில் பலரும் உரிய இடத்தில் முன்வைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சிக்கு உரிய செய்தி

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவும்: மனோ

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தது போன்று, மிக நீண்ட காலமாக அல்லலுறும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசியல் கைதிகள்: 

தெற்கிலும் வடக்கிலும் ஒரே மன நிலையில்தான் பல்கலைக்கழக மாணவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் தெற்கிலே ஒரு விதமாகவும் வடக்கிலே இன்னொரு விதமாகவும் மாணவர்கள் நடத்தப்படுகிறார்கள்.அந்த அடிப்படையில்தான் தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்று மாணவர் விடுதலை என்பது மகிழ்ச்சிக்குரியது.

ஆனால், இந்த அரசாங்கம் தமிழ் மக்களpன் மனங்களை வெல்ல  இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியதுள்ளது. அந்த நெடுந்தூர பயணத்தில ஒரு மைல்கல்தான் தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையாகும். கொழும்பு, வவுனியா, நீர்கொழும்பு, கண்டி மற்றும் களுத்தறை சிறைக்கூடங்களிலும் பூசா தடுப்பு முகாமிலும் இருக்கின்ற கைதிகள் தொடர்பில்  நியாயம் வேண்டும்.

தீர்ப்பு வழங்கப்பட்டோர், நீண்ட  காலம் வழக்காடுவோர்,  விசாரணையின்றி இருப்போர் ஆகியோர் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கும் தேசிய நல்லிணக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.  சோறு கொடுத்தார்கள், தண்ணீர் கொடுத்தார்கள், வீடு கொடுத்தார்கள் என ஏறக்குறைய ஆயிரம் பேரை சமூகத்தில் இருந்து பிரித்து வைக்காதீர்கள்.

ஆயிரமாயிரம் குற்றங்களை இழைத்துவிட்டு, ஒரேயொரு காயத்துக்கு மாத்திரம்  மருந்து தடவினால் நாம் மகிழ்ந்துவிடப் போவதில்லை. கண்ணெதிரே தெரியும் நடைமுறை உண்மைகளை நாம் மறந்துவிடமுடியாது.  எனவே தமிழ் கைதிகள் தொடர்பில் நீண்ட காலம் நீங்கள் வழங்கி வரும் உறுதிமொழிகளை நடைமுறை படுத்துங்கள்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58848-2013-02-13-10-18-34.html

 இந்த மாணவர்களின் விடுதலை இவ்வளவு விரைவில்.. அரசியல் மயமாக..

புலம்பெயர் மக்களின் குறிப்பாக இளையோரின் போராட்டங்களும்.. தமிழக கட்சிகள் சிலவற்றின் குரல்களும்.. சர்வதேசக் கண்டனங்களும்.. முக்கிய காரணமா இருந்தன.

இன்றேல்.. இந்த விடயம்.. இவ்வளவு சர்வதேச முக்கியத்துவம் பெறவில்லையேல்.. கடத்தப்பட்ட லலித்.. குகன் போல இவர்களும்.. காணாமல் போகடிக்கப்பட்டிருக்கலாம்.

இவற்றுடன், வர இருக்கும் ஜெனீவா கூட்டத் தொடரும், புதிதாக தமிழக மாணவர்களும் பரவலான போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தமையும் முக்கியகாரணம் என்று சொல்லலாம்.

ஈழத்தமிழரும், தமிழக மக்களும், ஒருசில வருடங்களில் களைத்துப் போய்விடுவார்கள், விடுதலைப் புலிகளை மறந்து விடுவார்கள், தமிழின அழிப்புக்களை மறந்துவிடுவார்கள் என்று இந்திய அரச, இராஜதந்திர, ரோ  காட்டுமிராண்டிகள் போட்ட கணக்கு தவறி வருவதும் ஒரு முக்கிய காரணம்.  மாறாக விழிப்புணர்வு பெருகி வருகிறது, போராட்டங்களும் விரிவடைகின்றன. .

சர்வதேசமும் தமிழின அழிப்புக்களை மறந்துவிடுவார்கள் என்று சிங்கள மற்றும் இந்திய அரச, இராஜதந்திர, ரோ  காட்டுமிராண்டிகள் போட்ட கணக்கும் தவறி வருவதும் இவர்களின் விடுதலைக்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
இனி மேல் மாவீர‌ர் தினம் வந்தால் வீட்டில் வைத்துக் கூட‌ கும்பிட‌ முடியாது இதற்கு தான் எல்லோரும் சேர்ந்து துள்ளினவை...அர‌சு நினைத்ததை செய்து முடித்திட்டினம்

இனி மேல் மாவீர‌ர் தினம் வந்தால் வீட்டில் வைத்துக் கூட‌ கும்பிட‌ முடியாது இதற்கு தான் எல்லோரும் சேர்ந்து துள்ளினவை...அர‌சு நினைத்ததை செய்து முடித்திட்டினம்

இந்த வருடம் மாவீரர் தினத்தில் மாற்றம் வரும் என்கிறீர்கள் :D

மகிழ்ச்சியான செய்தி .

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரமாயிரம் குற்றங்களை இழைத்துவிட்டு, ஒரேயொரு காயத்துக்கு மாத்திரம்  மருந்து தடவினால் நாம் மகிழ்ந்துவிடப் போவதில்லை. கண்ணெதிரே தெரியும் நடைமுறை உண்மைகளை நாம் மறந்துவிடமுடியாது.  எனவே தமிழ் கைதிகள் தொடர்பில் நீண்ட காலம் நீங்கள் வழங்கி வரும் உறுதிமொழிகளை நடைமுறை படுத்துங்கள்.

புலிகள் தான் பிரச்சனைக்கு காலானவர்கள் என்று சொல்லி விட்டு போரில் இறந்தவர்களுக்கு வணக்கம் செய்தவர்களை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தது தான் கடந்த 4 வருடத்தில் மகிந்த அரசு செய்த உருப்படியான வேலை எனும் போது எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை சொல்லி நிற்கிறது.

இவற்றுடன், வர இருக்கும் ஜெனீவா கூட்டத் தொடரும், புதிதாக தமிழக மாணவர்களும் பரவலான போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தமையும் முக்கியகாரணம் என்று சொல்லலாம்.

ஈழத்தமிழரும், தமிழக மக்களும், ஒருசில வருடங்களில் களைத்துப் போய்விடுவார்கள், விடுதலைப் புலிகளை மறந்து விடுவார்கள், தமிழின அழிப்புக்களை மறந்துவிடுவார்கள் என்று இந்திய அரச, இராஜதந்திர, ரோ  காட்டுமிராண்டிகள் போட்ட கணக்கு தவறி வருவதும் ஒரு முக்கிய காரணம்.  மாறாக விழிப்புணர்வு பெருகி வருகிறது, போராட்டங்களும் விரிவடைகின்றன. .

சர்வதேசமும் தமிழின அழிப்புக்களை மறந்துவிடுவார்கள் என்று சிங்கள மற்றும் இந்திய அரச, இராஜதந்திர, ரோ  காட்டுமிராண்டிகள் போட்ட கணக்கும் தவறி வருவதும் இவர்களின் விடுதலைக்கு காரணம்.

ஒரு அருமையான கருத்து, நன்றிகள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.