Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டே லீடர் ஊடகவியலாளர் சுடப்பட்டுள்ளார்

Featured Replies

சண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 

ஊடகவியலாளரான பர்ஷா சகுல்கெட்டாலி என்பவர் மீதே இனந்தெரியாத நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.


அவர்,தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் வைத்தே இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதாக வும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59003-2013-02-15-22-30-07.html

 

 

Sunday Leader Journalist Faraz Shaukatally was shot by an unidentified group, around midnight on Friday, a reporter said. He was admitted to the Kalubowila hospital.

 

http://www.dailymirror.lk/top-story/25786-sunday-leader-journalist-faraz-shot.html

Edited by akootha

  • தொடங்கியவர்

சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் எல்லா இன மக்களும் பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்கும் காலம் இது.

 

இந்த ஊடகவியலாளர் மகிந்த கூட்டத்தின் ஊழல் ஏமாற்று நடவடிக்கைளை ஆதாரத்துடன் எழுதி வந்தவர். இன்று அதற்காக அந்த பயங்கரவாத கூட்டத்தால் சுடப்பட்டுள்ளார். இவர் தப்ப வேண்டும். இல்லாவிட்டால் லசந்தவின் தலைவிதியே இவருக்கும் ஏற்படும்.

வழக்கமா நடக்கிறது தானே? 

  • தொடங்கியவர்

வழக்கமா நடக்கிறது தானே? 

 

இதையும் புலிகள் தான் செய்தார்கள் என கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். 

 

 

பலவேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் மகிந்த கூட்டம் இந்த செயலை செய்தது ஏன் என சிந்திக்க எண்ண  வைக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் முடிவு வரப்போகுதோ?

 

சர்வதேசம் துணிந்து இந்த இடத்திற்குள் கால் வைக்குமா? :unsure:

  • தொடங்கியவர்

அண்மைக்காலமாக உதயன் பத்திரிகை மீது பல தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளது. அவர்களும் அவதானமாக செயப்பட வேண்டிய காலம் இது.

  • தொடங்கியவர்

2013-02-15T210611Z_993701363_GM1E92G0DUQ

 

Journalist Faraz Shauketaly, who writes for the Sri Lankan newspaper "The Sunday Leader", receives treatment for his injuries after being shot by an unidentified group of men at Kalubowila hospital in Colombo February 16, 2013. The reason for the shooting is still unknown and the police are conducting investigations into the matter, reported local media.

 

http://news.yahoo.com/photos/journalist-shauketaly-writes-sri-lankan-newspaper-sunday-leader-photo-210611051.html

  • தொடங்கியவர்

ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு
 
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
 சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இனந்தெரியாத நபர்கள் மூவரினால்  நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகத்திற்கு இழக்கான நிலையில் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59012-2013-02-16-05-08-46.html

  • கருத்துக்கள உறவுகள்

ஏல்லாக் கொலைகளையும் புலிகள்முPது போட்டார்கள்.சர்வதேசம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி புலிகளை அழிக்க உதவி செய்தது.இப்போது புலிகள் இல்லை! ஆனால் கொலைகள் தொடர்கின்றன.ஆகவே கொலைகளுக்கு புலிகள் காரணமல்ல.இந்தக் கொலைகளுக்கு காரணம் சிறிலங்கா அரசா?அல்லது சர்வதேசமா?சர்வதேசம் இதற்குப்பதில் சொல்ல வேண்டும்.

  • தொடங்கியவர்

நடேசன், நிமலராஜன், சிவராம், லசந்த, பிரகீத் ( காணவில்லை) போன்றவர்களை அரசு கொன்றபொழுது  காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத்தவறியமையே தொடரும்அச்சுறுத்தலுகளுக்கு காரணம்.
 
பலநூறு ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு ஓடி விட்டார்கள். லசந்தாவின்  மனைவி, கண்ணை இழக்கும் நிலையில் சிறைவைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் (இப்பொழுது அமெரிக்காவில் உள்ளார்) என அடுக்கி கொண்டே போகலாம்.
அதேவேளை தம்மை தாமே பத்திரிகையாளர்கள் எனக்கூறும் கனடாவின் ஜெயராஜ் டென்மார்க்கின் இராஜசிங்கம் போன்றோர்கள் ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் அவமானம் தேடித்தரும் விதமாக செயல்படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள சகோதர கொலைகள் தொடர்கின்றன!

 

 

தமிழரிடம் மட்டுமே  இந்தக்குணமுண்டு என்று சிலர் இங்கு முழங்கியதாக ஞாபகம்

  • தொடங்கியவர்

பர்ஷா சகுல்கெட்டாலி பல பங்குபிரிப்புக்கள் பற்றி ஆதாரத்துடன் எழுதியவர்.

  • தொடங்கியவர்

இவர் பிரித்தானியாவில் பிறந்த ஊடகவியலாளர்

British-Sri Lankan journalist shot in his bedroom

 

Faraz Shauketaly, who holds both British and Sri Lankan citizenship, was shot by three men who broke into his house in a Colombo suburb late on Friday evening. He was taken to Colombo National Hospital where he underwent surgery to remove the bullet this afternoon. A hospital employee said the 54-year-old remained in intensive care but was in a stable condition.

 

http://www.independent.co.uk/news/world/asia/britishsri-lankan-journalist-shot-in-his-bedroom-8497658.html

  • தொடங்கியவர்

இந்த ஞாயிறு வர இருந்த கட்டுரை சம்பந்தமாக இந்த குடும்பத்தை பிரித்தானியாவில் விட்டுவிட்டு கொழும்பில் கடமையாற்றும் ஊடகவியலாளர் சுடப்பட்டுள்ளார்.

 

பிரித்தானியாவில் பிறந்து ஆற்றும் சேவை பாராட்டப்பட வேண்டியதே.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு

 

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இனந்தெரியாத நபர்கள் மூவரினால்  நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகத்திற்கு இழக்கான நிலையில் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59012-2013-02-16-05-08-46.html

என்னத்துக்கு உவர் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்?

விசாரண என்பது தானாகவே தொடங்கப்பட வேண்டியதொன்று இதெல்லாமா அரச தலைவர் கவனிப்பார்?

 

எனக்கென்னவோ என்னவோ விசாரிச்சு இது ஒரு தனிப்பட்ட பகை என்று முடித்து தாங்கள் செய்யவில்லை என்று தப்புவதுக்குத்தன். 

சிங்கள அரச பயங்கரவாதிகளின் இதுபோன்ற மனிதாபிமான நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும் என்று பான் கீ மூன் நினைக்கலாம்.

  • தொடங்கியவர்

ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: பிரித்தானியா அதிர்ச்சி, கவலை

 

பிரித்தானியக் குடியுரிமை பெற்ற சண்டேலீடர் வாரஇதழின் புலனாய்வு ஊடகவியலாளரான, பரஸ் சௌகத்அலி சுடப்பட்டதற்கு பிரித்தானியா கடும் அதிர்ச்சி மற்றும் கவலை தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், கடும் அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் வெளியிட்டுள்ளார்.

 

 

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், சாத்தியமான எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும், அலிஸ்ரெயர் பேர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


இதேவேளை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் இணைந்து நாமும் பிரார்த்திக்கிறோம்.

 

எமது தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டனர்.

 

தேவைப்பட்டால், அவருக்கு மேலதிக உதவிகளை வழங்கத் தயாராகவே உள்ளோம்.

 

ஊடகவியலாளர் என்பதனால் தான் அவர் மீது இந்தக் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.


இலங்கை அதிகாரிகள் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

 

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும், அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3072

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.