Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் வாழ்வும் பணமும்

Featured Replies

புலம்பெயர் வாழ்வும் பணமும்

 

புலம்பெயர்ந்து பலவேறு நாடுகளிலும் வாழும் எம்மில் பெரும்பான்மையினர் முதலாவது தலைமுறை தமிழர்களாக வாழுகின்றோம். எனவே அதில் பலவேறு சவால்களுக்கு முகம்

கொடுக்கின்றோம். அதில் ஒன்று - பணம்.


பணத்தை ஒரு கடின வேலையை செய்து உழைப்பதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் பல்லின சமூக நாடுகளில் பல தலைமுறைகளாக வாழும் அயலவர்களுடன் நாமும் சமனாக வாழ முயலும்பொழுது பல தொல்லைகளும் எம்மை பிடிக்கின்றன. உதாரணத்திற்கு சொந்தமாக வாழ ஒரு வீடு, ஓடித்திரிய ஒன்று இல்லை இரண்டு வாகனங்கள், வருடத்தில் ஒருமுறையாவது 'வக்கேசன்', பிள்ளைகளுக்கு ஐபோன் / ஐபாட், பலவேறு வகுப்புகள் என பட்டியல் நீண்டே போகும்.  இவற்றை விட மாதம் ஒருமுறை என்றாலும் வார இறுதி நிகழ்வு என ஒரு கதவால் வரும் பணம் பல கதவுகளால் சென்று விடுகின்றது.

 

உழை, சேமி, முதலிடு என்ற மந்திரத்தை  எம்மால் வெற்றி கொள்ள முடிகின்றதா?

  • தொடங்கியவர்

இன்று கனடா போன்ற நாடுகளில் ஒருவரின் கடன் சுமை என்பது கிட்டத்தட்ட 140 வீதமாக உள்ளது. அதாவது உழைக்கும் நூறு டாலருக்கு செலவாக நூற்றி நாற்பது உள்ளது. இலங்கை அரசின் கடன் எண்பது வீதம் என சர்வதேச நாணய நிதியம் கூறி கடனை மறுத்திருந்தது.
 
இது சராசரி. இதில் இங்குள்ள பணக்கரரர்கள், கடன் இல்லாதவர்கள் என நீக்கி பார்த்தால் நடுத்தர சமூகத்தின் கடன் இருநூறு வீதமாக கூட இருக்கலாம். இதில் எம்மைப்போன்ற முதலாவது தலைமுறையின் கடன் எவ்வளவு என கூற புள்ளி விபரங்கள் இல்லை. இருந்தாலும் அது அதிகமாக இருக்கும்.

இதில் நல்ல கடன் என பார்த்தால் வீட்டு அடைமான கடன், பிள்ளைகளின் படிப்பிற்காக சேர்க்கும் பண கடன் என கூறலாம். சிலவேளைகளில் வாகனத்திற்கு பட்ட கடன் கூட நல்ல கடனாக இருக்கலாம். அதேவேளை எம்மில் பலரும் திடமான வரவு-செலவு திட்டம் இல்லாத காரணத்தால் பல ஆயிரம் டாலர்களை வட்டியாக கட்டவேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகின்றோம்.
 
நிலையில்லாத வேலை, வேலையில் அழுத்தம், கட்டவேண்டிய கடன்  என பலவும் சேர்ந்து குடும்பத்தில் சிக்கல்களை உருவாக்கி விடுகின்றது, நிம்மதியும் போய்விடுகின்றது. 

பெரிய வீட்டை வேண்டி கிழமையில் ஏழு நாளும் வேலை செய்து இல்லை பெற்றோர் இருவரும் வேலை செய்து பிள்ளகள் வளரும் காலத்தில் அவர்களுடன் நேரத்தை செலவழிக்க தவறி விடுகின்றோம். அவர்களுக்கு நாம் பட்ட, படும் துன்பங்களை கூற தவறிவிடுகின்றோம். மொத்தத்தில் அவர்களை நல்வழிப்படுத்த நேரம் இல்லாமல் போய்விடுகின்றது.

Edited by akootha

  • தொடங்கியவர்

கல்வியும் பெற்றோரும் பணமும்


தாயகத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் போனால் மட்டுமே நல்வாழ்வு என்ற நிலையில் பலரும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ளார்கள்.

 

நிச்சயம் நல்ல சித்திகள், பெறுபேறுகள் நல்ல வேலையை பெற உதவும். ஆனால் பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்கள் பற்றிய தரவில் அவர்கள் பார்ப்பது - மூன்றாம் பக்கத்தை.


அதில் என்ன உள்ளது? முதலாம் இரண்டாம் பக்கத்தில் நீங்கள் என்ன படித்தீர்கள்,உங்கள் வேலை அனுபவம் இருக்கும். மூன்றாம் பக்கத்தில் மட்டுமே உங்களின் தனித்துவம் - உங்களின் ஆளுமை பற்றி இருக்கும். உங்களை மற்றைய விண்ணப்பாளர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும் தரவுகள் இருக்கும். இவ்வாறான தகமைகளை எமது பிள்ளகைகள் பெறுவதில் அநேகமான பெற்றோர்கள் கவனம் செலுத்துவது குறைவு என கூறலாம்.

  • தொடங்கியவர்

விளம்பரங்களும் அழுத்தங்களும்

 

கனடா விளம்பரங்களில் கணிசமான அளவு - வீடு விற்பனை. இது ஒரு ஆரோக்கியமான முதலீடு. ஒவ்வொரு பத்து வருடமும்  தனி வீட்டின் விலை டொராண்டோ பெரும்பாகத்தில் இரண்டு மடங்காகின்றது என பல புள்ளிவிபரங்கள் காட்டுகின்றது.

 

ஆனால் சராசரி தனி வீட்டின் விலை கிட்டத்தட்ட ஐந்து லட்சம் டாலர்கள். வீடு அடைமானம், சோலைவரி, மின்சாரம், நிலவாயு மற்றும் வீட்டை பேணும் செலவுகள் என மாதம் வரும் செலவுகள், வருடம் வருடம் அதிகரித்து செல்லும் செலவுகள்.


எம்மில் பலரிடம் இவற்றுக்கான மாதாந்த வரவு செலவு கணக்குகள் இல்லை. அவற்றை நிர்வகிக்கும் மனக்கட்டுப்பாடும் இல்லை.

 

வசதிக்கு மேலான வீடுகளை வேண்டி தினமும் அதை அனுபவிக்க முடியாமல் ஓடித்திரிபவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல  தலையங்கம் எல்லோரும் . சிந்திகக் வேண்டிய ஒன்று . பிறரை பார்த்து வாழ்வதை நிறுத்தத் வேண்டும் அவன் வீடு கார் வாங்கினால் நானும் அதை விட பெரிய தாய் வாங்க வேண்டும் இத்னால்கடன் இரண்டு மூன்று வேலை என்று மக்கள் ஓடிகொண்டே திரிகிறார்கள்  வரவுக்கேற்ற செலவு தேவை.உதவியாக் கடன்  மட்டை களும் கை கொடுக்கின்றன வட்டி கட்ட உழைப்பதே சிலர் வாழ்க்கையாகி விடுகிறது. இருக்க வீடும் ஓட வாகனமும் தேவை ஆனால் விரலுக்கேற்ற வீக்கமாக் இருக்கனும்.

  • தொடங்கியவர்

இரண்டு பெற்றோர் உழைப்பும் உதவிகளும்

 

பல வீடுகளிலும் இரண்டு பெற்றோரும் உழைக்கவேண்டிய தேவை உள்ளது. முடிந்தால் ஒரு பெற்றோர் உழைப்பில் வாழ்ந்தால் பிள்ளைகள் வெற்றிற்கு அது கூடுதலாக உதவும். 


சில வீடுகளில் பேரன் பேத்திகள் இருந்து உதவுகிறார்கள். அது பிள்ளைகள் தமிழ் பேச, கலாச்சாரம் பற்றி கூடுதலாக அறிய உதவுகின்றது. முக்கியமாக சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் செல்வது இல்லாமல் போகின்றது. ஒரு பிள்ளை சிறுவர் பராமரிப்பு இல்லம் செல்வது என்பது வருடத்திற்கு பத்தாயிரம் டாலர்கள் வரை செலவாக கூடியது. அதேவேளை அவர்களை பார்க்கவேண்டிய கவனிக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது.

 

என்ன தான் உதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் புலம்பெயர் சூழலில் உழைத்து பிள்ளைகளை வளர்ப்பது என்பது சவாலான ஆனால் சமாளிக்க கூடிய விடயமாக உள்ளது.

 

  • தொடங்கியவர்

நல்ல திரி அண்ணா.

கனடா வாழ்கை முறையை இரண்டாம் தலைமுறையினரே தீர்மானிக்கிறார்கள் என்பது என் கருத்து.

சிறார், கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போது, குடும்ப விடுமுறை கட்டுரை கேட்பார்கள்.

வேலைக்கு மூன்றாம் பக்கம் முக்கியம்.

எனது பக்கத்தில் இரத்ததான எண்ணிக்கை(30),  தேனீ வளர்ப்பு, இயற்கை விவசாயம் இருப்பதால் வேலை இண்டர்வியு கலகலப்பாக இருக்கும்.

அவன் இப்ப முளைச்சவன்,  4000 அடி வீடுவான்கிவிட்டான் என்று 5000 அடி வீடு வாங்கி சுத்தபடுத்த கூட நேரமில்லாமல், வேலைக்கு ஓடுபவர் இருக்கிறார்கள்.

வீட்டு வட்டி,  எரிவாயு விலை கூடினால் ஆபத்து.

 

ஜோர்ஜ் புஸ் இளையவர் முன்னைநாள் அமேரிக்கா சனாதிபதி பிரபல யேல் பல்கலைக்கழகத்தில் பேசும்பொழுது கூறினார்: " மிகச்சிறந்த சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள். அதேவேளை சாதாரண சித்திபெற்ற மாணவர்களே, நீங்கள் இந்த நாட்டின் தலைவராக கூட வரலாம்".

 

கனடாவின் சிறந்த ஒரு முன்னை நாள் தொழில் அதிபர் ரெட் ரோஜர்ஸ், அவர் கூட கல்வியில் தோற்றவர். பில்கேட்ஸ், வரன் பவ்வத் என கூறலாம்.

 

இருந்தாலும் இவர்கள் சிறுபான்மையினரே. கல்வி இல்லை திறமை என்பன வெற்றிற்கு தேவையானவையே. உங்கள் மூன்றாம் பக்கத்தை பலப்படுத்துங்கள்.

  • தொடங்கியவர்

மிகவும் நல்ல  தலையங்கம் எல்லோரும் . சிந்திகக் வேண்டிய ஒன்று . பிறரை பார்த்து வாழ்வதை நிறுத்தத் வேண்டும் அவன் வீடு கார் வாங்கினால் நானும் அதை விட பெரிய தாய் வாங்க வேண்டும் இத்னால்கடன் இரண்டு மூன்று வேலை என்று மக்கள் ஓடிகொண்டே திரிகிறார்கள்  வரவுக்கேற்ற செலவு தேவை.உதவியாக் கடன்  மட்டை களும் கை கொடுக்கின்றன வட்டி கட்ட உழைப்பதே சிலர் வாழ்க்கையாகி விடுகிறது. இருக்க வீடும் ஓட வாகனமும் தேவை ஆனால் விரலுக்கேற்ற வீக்கமாக் இருக்கனும்.

 

உண்மை. ஆனால் மனித குணம் என்பது பலவேளைகளில் கட்டுப்பாடு அற்று அலையும். அதுவே நம்மை கடனாளியாக்கி வருத்தக்காரனாக கூட ஆக்கிவிடுகின்றது.

 

அண்மையில் விபத்தில் இறந்த ஒருவருக்கு ஆயுள் மற்றும் வீட்டு அடைமான  காப்புறுதி இருக்கவில்லை. இன்று மனைவியும் பிள்ளைகளும் மிகவும் கடினமான பொருளாதார நிலையில்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் எனது அனுபவத்தைக் கொண்டு எழுதுவதானால்..

 

கள்ள வேலைகள் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கிரெடிட் நல்ல நிலையில் உள்ளமாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இழப்பதுபோன்று இருக்கும். நம்பகத்தன்மையை நிலைநாட்டியபின்னர், பலவித நன்மைகள் ஏற்படும்.

 

கள்ளவேலை என்று நான் சொல்ல வருவது..

 

1) வரி ஏய்ப்பு செய்தல்.

2) ரசீது இல்லாமல் காரியங்கள் செய்வித்தல்.

3) கைக்காசுக்கு உழைத்தல்.

4) மாதாந்த உதவியைப் பெற்றுக்கொண்டு வேலைக்குப் போதல்

5) ஸ்பொன்சர் செய்து குடும்பத்தவரை எடுத்துவிட்டு அவர்களை கொடுப்பனவு எடுக்க அனுமதித்தல்.

 

இத்யாதி.. இத்யாதி..

  • தொடங்கியவர்

ஒரு வழியால் வரும் பணம் மறு வழியால் வேகமாக ஓடும் பணம்
 
பலரும் வாராந்த இல்லை இருகிழமை சம்பளங்களை பெறுகின்றோம். வங்கியில் வைப்பிலிடும் பணம் வந்த சில நாட்களிலேயே போய்விடும். செலவு வருவாயை விட கூடினால் அது சிக்கல்களை தரும். அடச்சீ, இதற்காகவா இவ்வளவு குளிரிலும் கடினப்பட வேண்டி  உள்ளதே என மனம் கலவைப்படும்.

ம் ம், பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றோம்.
 
எனவே வரும் வருவாயுக்குள் வாழப்பழகுவதே முன்னேற்றத்தை தரும். எமது பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல பாடத்தை அது கற்றுக்கொடுக்கும்.

  • தொடங்கியவர்

கடன் மட்டையும் கௌரவமும் தலையிடியும்

 

கடன்மட்டை வைத்திருப்பது, அதிலும் பல மட்டைகளை வைத்திருப்பது, மேலும் 'உன்னிடம் உள்ள லிமிட் என்ன? ' என விசாரிப்பதும் ஒரு கி..கிளுப்பை தருவது.


எமது முன்னைய தலைமுறை போன்று பணத்தை மட்டுமே பாவிப்பது என்பது பல இடங்களில் சாத்தியமாகாது. அதேவேளை வங்கியில் பணம் இருந்தால் மட்டுமே கடன்மட்டையை பாவிப்பதே நன்மை தரும்.

 

ஒரு அவசரத்திற்கு பாவிக்கும் கருவியாக மட்டுமே கடன்மட்டை இருக்கவேண்டும்.


மாத நிலுவையை கட்டிவிட்டால் வட்டி கட்டத்தேவையில்லை. அவசரத்திற்கு குறைந்த வட்டியுள்ள 'லைன் ஒப் கிரடிட்' வைத்திருந்தால் அதை எடுத்து அதிகூடிய கடன்மட்டை கடனை அடைத்துவிடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தின் தளம்பல் நிலையில் நாளை விடியும் போது தனக்கு வேலை இருக்குமா என்னும் எண்ணோட்டத்தில் பெரும்பாலும் மக்கள் இருப்பதால் திட்டமிட்டு தமது எதிர்கால நிதி நிலையை திட்டமிட முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.

  • தொடங்கியவர்

மகிழ்ச்சியான விடயம். பொருளாதார ரீதியாக நேர்வழியில் முன்னேறுவது பல பலன்களை பெற்றுத்தரும். அதிலும் அசையா சொத்துக்கள் நல்ல முதலீடே.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.