Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரன்

Featured Replies

பாலசந்திரா பச்சிளம் பாலகா!!!

  • Replies 225
  • Views 30.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெப்ப பெருமூச்சு ஒன்றைத்தவிர!!!!!!!!!!!!!!...வேறு எதையும் சொல்லத் தோன்றவில்லை!

 

இழப்பின் வலி!! இதயத்தில் இடி இறக்கிக்கொண்டே இருக்கிறது!..

பாலச்சந்திரன் படுகொலை மனதை பாதித்துவிட்டது: ராகுல்

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என்று இந்திய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைவர்களை டெல்லியில் சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே எனது மனதையும் பாதித்து விட்டது என உருகிப் போய் சொன்னாராம்.


அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றது. இதே போல உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படக் காட்சி வெளியானது. இதனால் உலகத் தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் கொதித்து எழுந்தன.

 

ஆனால் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது சரிதான் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சாமி கருத்து தெரிவித்தார். பாலச்சந்திரன் படுகொலை குறித்து ராகுல் காந்தியிடம் இருந்து விரைவில்இரங்கல் தகவல் வெளியாகலாம் என டெல்லி அரசியல் வட்டாரம் கூறுகின்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60363-2013-03-09-11-40-12.html

  • கருத்துக்கள உறவுகள்

thamarikavithai1.jpg

Uploaded with [url=http://imageshack.us]

பலரது உணர்ச்சிமிகு எழுச்சியுரைகளால் ஏற்படுத்திட முடியாத தமிழின எழுச்சியை,பார்த்தாலே வாரி அணைத்து உச்சி முகரத் தூண்டும் இந்த பாலகனின் அப்பாவி முகம் உருவாக்கி விட்டது என்றால் அது எள்ளளவும் மிகையல்ல. 

இறந்தும் போராளியாய் ஈழத்தை வென்றிட தலைமை ஏற்றுள்ளான் புலிக்குட்டி. (ராஜேஷ்தீனா).

  • கருத்துக்கள உறவுகள்

மகனே பாலச்சந்திரா,

உன் நெஞ்சினில் பாய்ந்த குண்டுகள் ஐந்தும்

தமிழினம் பட்ட கடன்

பட்ட கடன் தீர்க்காமல் விட்டதில்லை தமிழினம்..

 

 

executed2b.jpg

Uploaded with [url=http://imageshack.us]

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

balacahndranjpgllhhhhhh.jpg

 

உண்மையான உணர்வான வரிகள் மட்டுமல்ல, செயல்பாடுகளும் கூடத்தான்.

பொதுமக்களையும், குழந்தைகளையும் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களோ, புதிய தலைமுறை வசம் கிடைத்துள்ள விடியோகாட்சிகளோ, அந்த குழந்தைகள் போரில் சிக்கி உயிரிழந்ததாக இலங்கை சொல்லும் நொண்டிச்சாக்கை நிராகரிக்கின்றன.

 

  • கருத்துக்கள உறவுகள்
balkachandrannnnnnnn.jpg

பொதுமக்களையும், குழந்தைகளையும் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களோ, புதிய தலைமுறை வசம் கிடைத்துள்ள விடியோகாட்சிகளோ, அந்த குழந்தைகள் போரில் சிக்கி உயிரிழந்ததாக இலங்கை சொல்லும் நொண்டிச்சாக்கை நிராகரிக்கின்றன.

 

 

பாலச்சந்திரன் படுகொலையை சிலர் அவர் விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் என்பதால் சரியானதே என நியாயப்படுத்திய நிலையில் இந்த ஒளிப்படத்தை உலகத்தமிழர் பேரவையும் புதிய தலைமுறையும் வெளியிட்டு அவர்களை வெட்கி தலைகுனிய வைத்துள்ளனர்.

 

 

இன்று இது பற்றி 'டெக்கான் குரோனிக்கல்' இந்திய பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்துள்ளது.

ஆகவே சிங்கள இராணுவம் நிராயுத பாணிகளான சிறுவர்களை, சரணடைந்த சிறுவர்களை எல்லாம் கொலை செய்தது என உலகிற்கு தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Balachandran is profile pic for facebook users

 

The Tamil diaspora has intensified their ca­m­paign on war crimes against Sri Lanka government using the ima­ge of Balachandran mu­n­ching snacks with all innocence prior to bei­ng shot dead allegedly by the Lankan troops during the last phase of Eelam war IV.

With the tragic picture brought to light by Cha­nnel-4 being the main source of inspiration and instigation, the Ta­mils in Tamil Nadu ha­ve revived the series of protests seeking justice for their suffering bret­heren in the island nati­on.

Students of Loyola College sowed the seeds of mass protest across the state with their cou­nterparts following suit.

Be it a protest, demonstration or rally, the 11-year-old’s image wherein he gives a vacant stare is in predominant use.

“The visual has such an effect that it has shaken the conscience of the people. It made CPI leader D. Raja cry. The boy represents the thousands and thousands of innocent Tam­ils killed in the island nation. This picture of his is likely to be the most famous and most reproduced image after Argentine-born Marxist revolutionary Che Gue­vara,” says A. Jegana­than, a research scholar of Madurai Kamaraj University, who led a token hunger strike on the campus on Wednesday.

The image is in wide circulation on social networking sites such as Facebook.

Many users, especially Tamils, have this particular photo as their profile picture. Cartoonist Bala on his page put out: “The vacant stare of Balachandran has plunged everybody in grief. It has sparked spontaneous protests in several places, especially among the student community.”

Besides, Tamils, mainly women, who do not want to take to the streets to voice their anger are expressing through the social media by not only putting it as their profile picture but also signing petitions online to demand justice in Lanka and hold Rajapaksa government accountable.



http://www.deccanchronicle.com/130316/news-current-affairs/article/balachandran-profile-pic-facebook-users

  • கருத்துக்கள உறவுகள்
balaq.jpg
  • கருத்துக்கள உறவுகள்

soniyaaaaaaa.jpg
 
பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் குண்டு தாங்கிய படத்தைப் பார்த்து பதறிய மக்களே.... 

படத்தைப் பாருங்கள். கொத்துக் குண்டுகளைப் போட்டு நடத்திய கொலை பாதகச் செயலுக்கு கொழும்பில் மட்டும் கொண்டாட்டங்கள் நடக்கவில்லை. டெல்லியில் நடந்த விருந்தை யாராவது மறக்க முடியுமா?????

மகாத்மாவின் சிலையை வெளியில் வைத்துவிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு உள்ளே நடந்த 'ரத்த’ விருந்தில் கையில் கோப்பைகளுடன் சோனியா, கேலிச் சிரிப்பில் மகிந்த ராஜபக்ஷே, முகத்தில் எந்தச் சலனமும் காட்டாத மன்மோகன், தமிழகத்தில் மூன்று வழக்குகளில் 'தேடப்படும் குற்றவாளி’யாகக் கருதப்படும் டக்ளஸ் தேவானந்தா பக்கமாகத் திரும்பி நிற்கும் ப.சிதம்பரம்.... எதிர் வரிசையில் மகிந்தாவின் மனைவி ஷிராணி, அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மன்மோகனின் மனைவி... ஆகியோர் பங்கேற்ற 'படா கானா’ அது. இதை எல்லாம் மறதிக்குப் பெயர்போன மக்களுக்கு எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது என்ற தைரியத்தில் கடந்த வாரத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் மன்மோகன் பேசியிருக்கிறார்.

-Vikatan.com-

Harun Kanth
பிரபாகரன் ஒரு பாலச்சந்திரனை உருவாக்கினார்..

பாலச்சந்திரன் பல லட்சம் பிரபாகரன்களை உருவாக்கிவிட்டான்.

576022_611260862221051_1606252974_n.jpg

''என் பேரனைப் போல உள்ள பாலச்சந்திரனை சாவு எனக்கு ஏதாவது செய்யணும் போல ஆத்திரமாக இருந்தது அதுதான் என்னை போராடத் தூண்டியது...''

 

 

மாணவர்களின் போராட்டத்தில் ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்ட இந்த பாட்டி கூறியது...!

 

734236_597146540297375_279413700_n.jpg

அதே போன்ற இன்னொரு சம்பவம்.

 

உண்ணாவிரத மேடையில் பேசியதெல்லாம் கேட்டு, எதிரில் இருந்த தன்னுடைய தேநீர்கடையை மூடிவிட்டு, மாலைவரை உண்ணாவிரதத்தில் இருந்து, பின் பேசும்போது "அங்க இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா மக்கள்? இந்த சின்னபுள்ளையையா கொன்னாங்க? என் மகன் மாதிரியே இருக்கான்" என்று அழுத மல்லிகா அக்கா...

 

602711_596468270365202_1735703497_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

 

பி.கு: இந்தியாவில் பல மக்களுக்கு இன்னும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள் தெரியாது. :rolleyes: இந்த மாணவர் போராட்டம் பலருக்கு உண்மையை சொல்லி வருகிறது. :)

நடைபெறும் மாணவர் / மக்கள் போராட்டத்தின் முகமாக பாலச்சந்திரன் முகமே இருக்கின்றது என இந்திய ஆங்கில பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

05032013-md-hr-2%20copy.jpg

27130_10152689371480198_483576928_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் - பாவலர் அறிவுமதி கவிதை

 
B.jpg
 அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது… அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது… செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது… உலகெங்கிலும் உள்ள என் வயது நெருங்கிய என் அண்ணன்கள் என் அக்காள்கள் என் தங்கைகள் என் தம்பிகள் அனைவருக்குமானது! ஆம்…அப்பா! நீ எங்கள் அனைவருக்குமான ‘ஆண் தாய்’ அப்பா! அதனால்தான் சொல்கிறேன்… நான் மாணவனாக இருந்திருந்தால் என் மார்பில் மதிப்பெண்களுக்கான பதக்கங்கள் பார்த்திருப்பாய்! நான் மானமுள்ள மகனாய் இருந்ததால்தானே அப்பா என் மார்பில் இத்தனை விழுப்புண்கள் பார்க்கிறாய்! சிங்கள வீரர் ஒருவரது மனைவியின் வயிற்றில் வளர்ந்த கருவுக்கும் கூட கருணை காட்டிய அப்பா! உன் பிள்ளை உலக அறமன்றத்துக்கு முன் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்! பன்னிரெண்டு வயது பாலகன் துப்பாக்கி தூக்கினால் அது போர்க் குற்றம்! பன்னிரெண்டு வயது பாலகன் மீது துப்பாக்கியால் சுட்டால்… இது யார்க் குற்றம்! என்னைச் சுட்ட துப்பாக்கியில் எவர் எவர் கைரேகைகள்! உலக அறமன்றமே! உன் மனசாட்சியின் கதவுகளைத் தட்டித் திறக்க உலகெங்கிலுமுள்ள பாலச் சந்திரர்கள் அதோ பதாகைகளோடு வருகிறார்கள்! பதில் சொலுங்கள்!…. -அறிவுமதி-
 
 
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.