Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டில் பங்கேற்க கூட்டமைப்பு தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA_logo_sithy%20(1).jpg

ஜெனீவாவில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெனீவா விஜயம், தென்னாபிரிக்க விஜயம் தொடர்பிலான விளக்கம், வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கம் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது. இதன்போது, எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஜெனீவாவுக்கு செல்வதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

  

இந்தநிலையில் இராஜதந்திரிகளின் கூற்றின் பிரகாரம் கட்சி தலைவர் அல்லாது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செல்வது குறித்து முடிவானதாக தெரியவருகின்றது. அத்துடன் வட மாகாண சபைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்படுகிறதோ அதன் போது இது குறித்து முடிவெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு இதன் போது தெளிவுபடுத்தப்பட்ட அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்தில் இணைவது குறித்தும் பேசப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்துக்கு கட்சி தமது ஆதரவினை வழங்குவதெனவும் முடிவெடுக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.seithy.com/breifNews.php?newsID=76647&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் ஜெனீவாவுக்குப் போகாத கூட்டமைப்பினர் இந்தமுறை செல்லுவது நல்லதுதான். எனினும் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் வழிநடத்தல்களும், வடமாகாணசபைத் தேர்தலும் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம். ஜெனீவாவில் போய் காத்திரமான அரசியல் நிலைப்பாட்டைக் காட்டுவார்கள் என்று நம்புவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சமரசிங்க, ரவிநாத் ஆரியசிங்க போவதைக் காட்டிலும் சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் போனால் கெடிக்கலக்கமா இருக்கும்.. :rolleyes: எங்களுக்கு.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சமரசிங்க, ரவிநாத் ஆரியசிங்க போவதைக் காட்டிலும் சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் போனால் கெடிக்கலக்கமா இருக்கும்.. :rolleyes: எங்களுக்கு.. :wub:

 

சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் ஜெனீவாவிற்குப் போகவில்லையாம். அவர்கள் இருவரும் இலண்டனில் நடைபெற உள்ள உலகத் தமிழ் பேரவையின் மாநாட்டிற்குத்தான் வருகின்றார்கள். சொந்தங்கள், நண்பர்களைப் பார்க்க லண்டன் வருகை உதவும்தானே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவா பயணம்! - கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் முடிவு!!

 

ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் ஓரங்கக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழு ஒன்று ஜெனிவா செல்லவுள்ளது.

 

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவை எடுத்துள்ளது.

 

கடந்த வருடம் ஜெனிவா செல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜெனிவா செல்லுமா? என்ற கேள்விக்குரிய விடையை சிறிலங்கா அரசாங்கம் உட்பட பலதரப்பும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா படைத்தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டு, சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கான புதிய ஆதராங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவொன்று ஜெனிவா செல்வது இன்னும் பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெனிவா செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன், சி.சிறிதரன் ஆகியோர் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது.

 

அதேவேளை, உலகத் தமிழர் பேரவையின் அனைத்துலக கருத்தாளர்கள் மற்றும் அரசியலாளர்கள் பங்கேற்கும் மாநாடு இலண்டனில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்றிரவு இலண்டன் புறப்பட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=276cc287-49f0-4f09-90bc-8868be677fd4

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் ஜெனீவாவிற்குப் போகவில்லையாம். அவர்கள் இருவரும் இலண்டனில் நடைபெற உள்ள உலகத் தமிழ் பேரவையின் மாநாட்டிற்குத்தான் வருகின்றார்கள்.

சொந்தங்கள், நண்பர்களைப் பார்க்க லண்டன் வருகை உதவும்தானே.

நக்கல்..............??? :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன், சி.சிறிதரன் ஆகியோர் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது.

 

அப்பாடா.. காலையிலேயே ஒரு நல்ல செய்தி.. உண்மையாக இருக்கவேண்டும்.

 

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல்..............??? :icon_mrgreen: 

 

ஜெனீவாக் கூட்டத்தில் என்ன சொல்லவேண்டும் என்பதை யாராவது சொல்லிக்கொடுப்பார்கள் என்பதால் முக்கிய தூண்கள் அங்கு செல்லத் தேவையில்லை. தமிழ் மக்களைக் குளிர்விக்கக்கூடிய உணர்ச்சிப் பேச்சுக்களைத் தரக் கூடியவர்கள் போனால் போதுமானது.

 

லண்டனில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்திற்கு கூட்டமைப்பினரே பேச்சைத் தயார்படுத்த வேண்டுமென்பதால் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் வந்துதானே ஆகவேண்டும். அத்தோடு தமது நண்பர்களையும், சொந்தங்களையும் கையோடு பார்ப்பதில் தவறில்லைத்தானே. 

எதிரியின் பலத்தை வைத்தே கூட்டமைப்பால் தாயகத்தில் அரசியல் செய்யமுடியும்.

கூட்டமைப்பின் முடிவானது மகிந்த அரசு பலம் இழப்பதையும் அதன் காரணமாக அவர்கள் சில நடவடிக்கைகளை எடுக்க முடிகின்றது என்பதையும் இந்த முடிவு காட்டுகின்றது.

 

நன்றி கூட்டமைப்பிற்கு.

நக்கல்..............??? :icon_mrgreen: 

இந்தநிலையில் இராஜதந்திரிகளின் கூற்றின் பிரகாரம் கட்சி தலைவர் அல்லாது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செல்வது குறித்து முடிவானதாக தெரியவருகின்றது.

போன தடவை போகாத காரணம் அமெரிக்கா மறித்ததாகத்தான் சுமந்திரன் கூறினார். ஆனால் அரசகுடும்பம் கொழும்பில் ஒரு இனக்கலவரத்துக்கு அடுக்கு செய்துவிட்டு அதை சம்பந்தரிடம் கூறி "எல்லாம்  அடுக்காக இருக்கு போனால் இனி திரும்பி வர வேண்டிய தேவை இல்லை" என்று மிரட்டியது. அதனால் இந்த முறை நேரத்திற்கே கூட்டமைப்பு,  "நாங்கள் போகவில்லை. அவர்கள்தான் போகச் சொன்னர்கள் என்று" பாதுகாப்பான கதை விடுகிறது போலிருக்கு. இது கூட்டமைப்புக்கு வெளியே ஒரு பிரசாக கூட்டமாகத்தான் இருக்க முடியும். அவர்கள் உள்ளே பங்குபற்ற முடியாது. எனவே சம்பந்தர் அதில் இல்லை.

 

இது தமிழ் மக்கள் மனத்தில் கூட்டமைப்பு எதையோ செய்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். சிறு நம்பிக்கை தன்னும் இல்லாவிட்டால் தமிழ்மக்களே தாமாக முன்வந்து அடிமை சாதனம் எழுதிக்கொடுத்துவிடத்தான் இருக்கும். இந்த அற "நனைந்தால் குளிர் என்ன கூதல் என்ன" தோல்வி மனப்பான்மை ஆபத்தானது. இந்த தோல்வி மனபான்மையால் தமிழர்கள் சிலர் எதிரிகள் எழுதுவதை நிறைப்படித்து மூளை சலவை செய்யபட்டவர்களாக அங்கே தீர்வுக்கான மற்று கருத்துக்கள் இருக்கென மயங்கும் நிலையை தவிர்க்க மறந்துபோகிறார்கள். 

 

ஜெனிவா பிரேரணை, பிரதானமாக, LLRC பரிந்துரைகளைப்பற்றியது. பரிந்துரை பல விடையங்களை தொடுகிறது. அதில் சில பாகங்கள், தமிழர் பிரச்சனைகளுக்கு மேல் போய் மேற்குநாடுகளுக்கும் சாதகமாக அமைகிறது. இலங்கையின் அரசை நீதி, உன்னாட்டு பாதுகாப்பு போன்றவற்றால் திருத்தி அமைப்பது அவர்களுக்கு சாதகமானது. சீனா, இலங்கைக்கு கொடுக்கும் கடனுக்கு மகிந்தாவை சினேகிதம்(லஞ்சம்) என்ற பெயரில் நன்றாக மிரட்டி வைத்திருக்கிறது. உதாரணமாக நுரைசோலையை சீனா கையடக்கிய வழி முறைகளை மேற்கு நாடுகள் செய்ய இயலாது.  பங்கு சந்தை, பிரதான கோடு போன்றவைகளின் வெளிப்படையான இயக்கம் அவர்கள் இலங்கையுடன் உறவுகள் வைக்க மிகத் தேவையானது. இந்த இரண்டுக்கும் மேல்லால், பரிந்துரை, தமிழர் பிரச்சனக்கு தெளிவாக அதிகார பரவலாகம் பூரணப்படுத்தி முடிக்கப்படவேண்டும் என்கிறது. மேலும் தமிழர் பிரசனையை பரந்த அளவில் அணுகி, மீளக் குடியமர்த்தல், காணாமல் போனோர் விவகாரம், வடக்கு கிழக்கு இராணுவம் போன்றவற்றையும் அது கையாளுகிறது.( நமக்கு இது காகித குப்பை என்பது தெரியும், ஆனல் மேற்கு நாடுகளுக்கு இது ஒரு நல்ல ஆவணமாக படுகிறது). போறுப்பு கூறலில் மேற்கு நாடுகளுடன் உடன்படாமல், நல்லிணக்க அறிக்கை, இராணுவம் பொறுப்பாக நடந்து கொண்டத்தாக கூறியது. எனவே  பிரேரணை ,இதில் பரிந்துரையுடன் ஒத்துப்போகாமல், இலங்கை அரசு சமநிலையான விசரணை நடத்தி குற்றமிழைத்தவர்களை பொறுப்பு கூறவைக்கவேண்டும் என்றும் கேட்கிறது.

 

ஆனால் இந்தியா மிக குறுகிய பாதையாக, தமிழருக்கு அரசியல் தீர்வு என்ற போர்வையில் 13ம் திருத்தம் என்ற வேறு பாதையில் போகிறது என்பதை நான் சொல்லத்தேவை இல்லை. பிரேரணையில் கடைசி அம்சமாக நாம் பார்த்த பொறுப்பு கூறல் என்பது இலங்கைக்கு வலிக்கும் அதே அளவு இந்தியாவுக்கும் வலி கொடுப்பது. சீனா மாதிரியே, மிரட்ட்லும் சிநேகிதமும்(லஞ்சம்) என்ற பதையைத்தான் இந்தியாவும் இலங்கைக்குள் ஊடுருவ பாவிப்பதற்கு விரும்புகிறது. சிங்கள்வருக்கும், முஸ்லீம்களுக்கும் $100 வீடுகளை குடியேற்றத்திற்கு கட்டிக்கொடுத்து தண்டவாளக் கொந்துராத்துகள் வாங்கி டெல்கியில் தேர்தல் வெல்ல முயல்கிறது. $270 மில்லியனை கிருஸ்ணா கோபத்தபயாவிடம் இதற்காக கொடுத்தார். இந்த பாதையை இந்தியா விரும்புவதால் இந்தியா சென்ற முறை  பிரேரணைக்கு வாக்களிக்க விரும்பவில்லை. சீமான், நெடுமாறன், வைகோ.......... அது வெல்லாம் ஏற்கனவே பழைய கதை. குடும்பி பிடியில் வைத்துதான் இந்தியாவே வாக்களிக்க வைக்கப்பட்டது.  இதில் இந்தியா கூடமைப்பை குடும்பியில் பிடித்துவைத்து செய்விக்க ஒன்றும் இருக்கவில்லை. வாக்களித்துவிட்டு வந்தவுடன் மன்மோகன் சிங் எல்லோரினதும் ஏமாற்றமாக மகிந்தாவுக்கு மன்னிப்புகடிதம் எழுதினார். 

 

இந்த முறை இந்தியா தான் வாக்களிக்கும் என்று சுதர்சன நாச்சியப்பன் போன்றோரூடாக ஏற்கனவே வெளிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு பொது மக்களும், அரசியல் வாதிகளும் இதை காங்கிரசின் சதியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் எப்படி சதியாக இருக்கலாம் என்பதை முழுமையாக விளக்குவதும் கடினம். ( தமிழ் நாட்டு தேர்தல் நோக்கத்தை தவிர்த்தால், இலங்கைக்கு ஒரு தனிப்பட்ட மிரட்டல் விட்டு தன் பாதையில்-13ம் திருத்தம்- முந்த பார்க்கிறதாக கொள்ளலாம்). ஈழத்து தமிழர் பாராமுகமாக (indifference) இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த முறையும் இந்தியா தான் நடக்கமாட்டாத மூஞ்சூறாகத்தான் பிரேணையில் நடந்து கொள்கிறது. இதில் கூட்டமைப்பு விளக்கு பிடிப்பத்தென்ற விள்க்குமாத்தையும் அது காவுகிறது என்பது உண்மைக்கதை அல்ல. 

 

 

எனவே கிருபன் சொல்வது போல  கூட்டமைப்பு ஜெனிவா போவதில் இந்தியாவின் பங்கு இருக்கு என்று அடித்துவைத்து சொல்ல முடியாது. இந்திய மத்திய அரசு தொடர்ந்து 13ம் திருத்ததைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.