Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச் 5ல் சிங்கள தூதரகம் முற்றுகை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்

Featured Replies

சென்னையில் மார்ச் 5ம் தேதி சிங்கள தூதரகத்தை முற்றுகையிட போவதாக டெசோ சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது. டெசோ அமைப்பு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11.15 மணிக்கு தொடங்கியது.
 
இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதி தலைமை வகித்தார். அமைப்பின் உறுப்பினர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்,  விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர்.பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
tesomeeting250213.jpg
ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் பற்றியும், இலங்கையில் நிலவிவரும் தற்போதைய நிலவரங்கள், பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூர கொலை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மார்ச் 5ம் தேதி சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடவும், அதே நாளில் பார்லிமென்ட் முன்பு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் பூதம் மீண்டும் வெளிவரும்போலை இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

2009தில் செய்து காட்டதையா இனி செய்து காட்டப் போக்கினம்... ஏதோ செய்யுங்கோ....இனியாவது நல்ல மனதோடை செய்தால் எல்லாம் நல்ல மாரி நடக்கும்..அரசியலுக்காக மீண்டு நாடகம் போட்டால்..நீங்கள் அடுத்த தேர்தலிலும் படு தோல்வி தான்.............

இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் பூதம் மீண்டும் வெளிவரும்போலை இருக்கு.. :D

காங்கிரஸ் திரும்ப வரமாட்டாது. அதில் கையை போடால் அவர்களின் நாசிதான் பழுதாகும். சோனியா, சிதம்பரம்போன்ற்வர்களின் பங்கு பிராணம் முகர்ஜியாலேயே ஏற்கப்பட்டது.  கிண்டி வைத்துவிட்டுபோனார்களானால் பா.ஜா.காவிலும் எல்லோரும் வாஜ்பாய் மாதிரி கனவான் பாதிரம் ஏற்று நடிக்க விரும்புவர்கள் அல்ல, கிடைக்கும் சந்தர்பத்தை இலகுவில் போகவிடமாட்டார்கள். அந்தவகை வாதத்தால் காங்கிரஸ் இனி அதில் கவனம் செலுத்தாது.

 

ஸ்பெக்ரம் வழக்கு கருணாந்தியின் குடும்பத்தை அரசியலில் இருந்து ஒதுக்க கொண்டுவரப்பட்டத்து அல்ல. கருணாநிதி கூட்டணி அரசியலில் இன்னமும் ஒரு பங்குதாரர். அன்றும் பங்குதாரர்.  தி.மு.காவில் அந்த நேரம் வளர்ந்து வந்துகொண்டிருந்த கனிமொழிக்கும் மட்டும் எதிரானது. தி.மு.கவில் கனிமொழியியை வலுக்குறைத்தபின்னர் அந்த வழக்கும் வலுக்குறைக்கப்பட்டது.

 

காரணம் பலவற்றை சொல்லலாம். ஆனால் கனிமொழி தமிழ் நாட்டில் தனது பிரசித்தியை கூட்ட ஈழத்தமிழர் பிரச்சனையை கையில் எடுத்தா. இதை காங்கிரஸ் கையைகட்டி வாளாவிருந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அப்பா காங்கிரஸ் செய்வது ஒன்றும் அடாத்தில்லை என்றதை நிரூபிக்க 4 மணித்தியால உண்ணாவிரதமிருந்தார். இது காங்கிரசுடன் பேசிப் பொருத்தி நடந்த விடையம். ஆனால் கனி மொழி செய்தவை தான் மட்டும் பிரசித்தமாக செய்தவை. இவை காங்கிரசால் வவுச் பண்ணப்பட்டிருக்காதவை. பின்னர் அவை வெறும் அரசியல் ஸ்ரண்ட் தான் என்பதை காங்கிரசுக்கு காட்ட, கனிமொழி மகிந்தாவின் காலில் வந்து விழுந்தா. அதன் பின்னர் கனிமொழி தி.மு.காவில் தனது வளர்ச்சியை துரிதப்படுத்த முயலவில்லை. (குறைந்தபட்சம் அதை செய்திகளிலாவது நாம் காணவில்லை.) அழகிரி-ஸ்ரனின் நாட்கங்களை பிரசித்தமாக தொடங்கிவிட்டன. கனிமொழியை ஒருவரும் கவனிக்கவில்லை.

 

2G  அலைகற்றை வழக்கில் சம்பந்தபட்ட அரசியல்வாதிகளான, மாறன், சிதம்பரம், சோனியா இராசாத்தி அம்மாள், கருணாநிதி இவர்கள் எல்லோருக்குள்ளும் கனிமொழிதான் மிக குறைந்த குற்றச்சாட்டை கொண்டிருந்தவ. ஆனல் அவ தமிழ் நாட்டில் தன்னை பிரசித்தப்படுத இலகுவான ஈழத்தமிழர் விவகாரத்தை தான்தோன்றித்தனமாக தனது  கையில் எடுத்தா. தனது அனுபவமின்யை அறிந்துகொண்டுவிட்ட கனிமொழி ஈழத்தமிழர் விவகாரத்தில் இருந்து ஒதுங்கிவிட்டா.

 

அன்றைய  கனிழொழியின் செயல்களால் காங்கிரஸ் நேராக இலங்கை அரசால் தாக்கபட்டிருக்கலாம். அதாவது மறைமுகமாக அது காங்கிரசுக்கு எதிரானது. இன்றைய டெசொ அன்று கனிமொழி விபரம் தெரியாமல் பாவித்த அரசியல் ஸ்ரண்ட் அல்ல. மேலும் இது காங்கிரசுக்கு எதிரானதும் அல்ல.  டெசோவின் இலக்கு ஜெயலலிதா. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த ஈழத்தமிழர் ஆதரவு மீது வைக்கப்பட்ட குறிதான் டெசோ. எனவே காங்கிரஸ்-கருண்நிதி கூட்டு மத்திய தேர்தலில் தப்பியொட்டி திரும்பவ வரவேண்டுமாயின் காங்கிரசுக்கு டெசோ மிகவும் இன்றியமையாதது. இவற்றை பின்னல் வைத்துக்கொண்டு, முன்னால் எதிர்ப்பது, ஆதரிப்பது போல இந்த அரசியல் வாதிகள் காட்டுவது எல்லாம் ஒரே நேரத்தில் வடக்கு தெற்கு இரு மக்களையும் ஏமாற்ற போடும் சதிகள் மட்டுமே.

Edited by மல்லையூரான்

இலங்கை தூதரகம் முற்றுகை!
டெசோ கூட்டத்தில் முடிவு!


”இனி ராஜபக்சேவின் இலங்கை தூதரக முற்றுகை அறிவிப்பை எதிர்பார்க்கலாம்... ”

 

போனவருசம் ‘சர்வதேச விசாரனை வேண்டும் என்பதை இந்தியா திரித்ததை சி.பி.ஐ கட்சியின் டி.ராஜா கண்டித்து நேர்மையான தீர்மானம் கொண்டு வர விவாதிக்கவேண்டும் என்றபோது , “ நமது பிரதமர் ஆதரவுன்னு அறிவிச்சுட்டார்,

 

இதுக்குமேலே வேறெதுவும் பேசவேண்டியதில்லைன்னு” திமுக எம்.பி குறிக்கிட்டு டி.ராஜாவை தடுக்காம இருந்திருந்தா ஏதேனும் நடந்திருக்கலாம்.. இவுங்க லண்டனுல பண்ணுன கூத்தைப் பற்றி இதுவரை பேசாம இருக்குறேன்.. பேச வைப்பாங்க போல....


இவுகள யாராச்சும் கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லுங்கப்பா.. முடியல....

 

- - திருமுருகன் காந்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.