Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமாவின் ஆசியப் போராட்டத்துக்கு அமைவாக நாமும் காய் நகர்த்த வேண்டும்: தமிழீழ சுதந்திர சாசன வெளியீட்டின் போது உருத்திரகுமாரன் தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
tamileelam_book-seithy-2-20130227-150.jp

தமிழீழ தேசத்தின் விடுதலை உடனடியாகக் கிடைக்காவிடினும் எமது போராட்டத்தின் மூலம் எமது காலத்திலேயே கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. முப்பது நாடுகள் விடுதலைக்காகப் போராடி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட தனது போராட்டம் ஆசிய நாடுகளை நோக்கித் தான் எனக் கூறியுள்ளார். இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக அமெரிக்க புத்திஜீவிகளும் எழுதி வருகின்றார்கள். எனவே ஒபாமாவின் ஆசியப் போராட்டத்துக்கு அமைவாக நாமும் காய் நகர்த்தினால் ஒரே புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். கடந்த ஞாயிறன்று மாலை அமெரிக்காவில் வபளோ நகரில் உள்ள விஞ்ஞான நூதனசாலை மண்டபத்தில் நடைபெற்ற தமிழீழ சுதந்திர சாசனக் கைநூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமாரன் விஸ்வநாதன் இவ்வாறு வலியுறுத்தினார்.

  

"விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்வோருக்கு பதவிகள் வழங்கப்படுவதில்லை, பொறுப்புக்கள் தான் வழங்கப்படுகின்றன" என தலைவர் கூறியிருந்தார். அதைப் போலவே நாமும் எம்முடன் இணைந்து செயற்படுவோரிடம் முக்கியமான பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளோம். ஈழத் தமிழர்களை மாத்திரமல்ல இந்தியத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் ஆகியோரையும் பல்வேறு தமிழ் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்பட நாம் தீர்மானித்துள்ளோம். தமிழ் மக்களாகிய நீங்களும் எம்முடன் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். இன்று ஊடகத்துறையினரும், பொது மக்களும் பெருமளவில் திரண்டு வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர் என்பதனை சர்வதேச அமைப்பினர்களுக்குப் புலப்படுத்தும் வகையில் நாம் நூறாயிரத்துக்கு மேற்பட்டோரது கையெழுத்தினை திரட்டவுள்ளோம். நாளை மலரவிருக்கும் தமிழீழம் எவ்வாறு இருக்கும் என்பதனை விடுதலை சாசனம் எடுத்து விளக்கும். நாம் சிறந்த வேலைத் திட்டத்தை முன்வைத்து செயற்படும் போது நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கிவிடும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் கூறினார்.

 

திரு.வி.எஸ்.துரைராஜா, திரு.சுந்தரன் சின்னையா ஆகியோர் மங்கள விளக்கேற்றி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றும் திருமதி சாந்தி சிவசோதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நாடு கடந்த தமிழீழ அரசின் மேலவைத் தலைவி திருமதி உஷா ஸ்ரீஸ்கந்தராஜா வரவேற்புரை நிகழ்த்துகையில் தமிழீழ அரசு என்ற ஊர்தியை இழுத்துச் செல்லும் சக்தியே மக்கள். தமிழீழ விடுதலை சாசனக் கைநூல் வெளியிடப்படும் இன்றைய நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள் எனக் கூறினார். பிரதமர் தமிழீழ சுதந்திர சாசனக் கைநூலை வெளியிட்டு வைத்த போது அதன் முதற் பிரதியை திரு.தங்கவேலு வேலுப்பிள்ளை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் விளக்கமாகப் பதில் அளித்தார். அமெரிக்காவில் இவ்விழாவினை நடாத்துவதற்கு உதவி செய்த திரு. ஜெகன்பிள்ளை நன்றியுரை வழங்கினார். கனடாவில் இருந்து அநேகமான ஊடகவியலாளர்களும் பொது மக்களும் பஸ்ஸிலும், கார்களிலும் ஆர்வத்துடன் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

tamileelam_book-seithy-1-20130227-374.jp

 

 

tamileelam_book-seithy-2-20130227-432.jp

 

 

tamileelam_book-seithy-3-20130227-296.jp

 

 

tamileelam_book-seithy-4-20130227-374.jp

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76912&category=TamilNews&language=tamil

தனியே ஈழத் தமிழர்கள் என்றில்லாமல் உலகத் தமிழர்களையும் இணைக்கும் உங்கள் முயற்சி கைகூடவேண்டும்.

 

இது உலகத்தமிழர்களுக்கும் பலம் செக்கும்.

திரண்டிருக்கும் ஆட்களை பார்க்க அப்படியே அடுத்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பு மனுவையும் தாக்கல் செய்யல்லாம் போலகிடக்கு .

திரண்டிருக்கும் ஆட்களை பார்க்க அப்படியே அடுத்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பு மனுவையும் தாக்கல் செய்யல்லாம் போலகிடக்கு .

 

ஒபாமாவை பற்றியும் இவ்வாறே சில கறுப்பின மக்கள் கூறியதுண்டு.

 

அதாவது சில நல்ல கருத்துக்களை  உடையவர்களை நல்ல திறமையுள்ளவர்களை எல்லாராலும் புரிந்துகொள்ள முடிவதில்லை.

http://tamileelamfreedomcharter.org/



தமிழீழ சுதந்திர சாசனம் - ஓர் சுருக்கமான அறிமுகம் : -

 

இச் சுதந்திர சாசனம் தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையின் வெளிப்பாடாக தமிழீழ மக்களதும் தமிழீழ விடுதலைக்காய் உழைக்கும் உலகத் தமிழ் மக்கள், சிங்கள மற்றும் அனைத்துலகச் சமூகத்தின் முற்போக்காளர்களினதும் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுகின்றது.

 

ஈழத் தாயகத்தில் வாழும் நமது மக்களுக்கு அவர்கள் அரசியல் விருப்பு வெறுப்புக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கான அரசியல்வெளி, சனநாயகவெளி அங்கு இல்லை. தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இரு நாடுகள் என்ற தீர்வுமுறையினை உள்ளடக்கியதான கருத்து வெளிப்பாட்டுக்கு சிறிலங்காவின் ஆறாவது திருத்தச் சட்டம் தடையாக உள்ளது. சட்டங்கள் மட்டுமல்ல ஈழ மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவமும் மக்களுக்கான அரசியல் வெளியை இறுக அடைத்து வைத்திருக்கிறது. இதனால் தாயகத்தில் வாழும் தமிழீழ மக்கள் தமது உண்மையான அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசு என்ற நிலைப்பாட்டை தமது ஆழ் மனதுக்குள் புதைத்து வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். இதனால் உலகத் தமிழ் மக்களால் முரசறையப்படும் இந்தத் தமிழீழ சுதந்திர சாசனம் தாயக மக்களது குரலாகவும் ஒலிக்கிறது.

 

தமிழீழ சுதந்திர சாசனத்தை உருவாக்குவதில் உலகத் தமிழ் மக்களின் பங்கு முழுமையாக எதிர்பார்க்கப்படுகின்றது. சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், அவை எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பது தொடர்பாகவும் மக்கள் கருத்துக்களைக் கேட்டறிவதற்கான கூட்டங்களை மக்களிடையே நடாத்துவதற்கான ஏற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், ஏனைய அமைப்புகளும் செய்து வருகின்றன.

 

மக்களின் கருத்தறிவதற்கான கேள்விக் கொத்தொன்றும் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக தமிழீழ சுதந்திர சாசனமொன்றை முரசறைவதன் அவசியம் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் எமது கருத்துக்களை மக்கள் முன்வைத்தல் அவசியம் எனக் கருதியமையின் நிமித்தம் தமிழீழ சுதந்திர சாசனம் குறித்த விளக்கங்களுடன் கையேடு அமைகின்றது. - உலகில் சுதந்திரத்துக்காகப் போராடும் மக்கள் தமது விடுதலை வேட்கையினை அனைத்துலகிற்கும் முரசறைவித்து, அனைத்துலக மக்களதும், அரசுகளதும் ஆதரவினைத் தமது விடுதலைப் போராட்டத்துக்கு வென்றெடுக்கும் வகையில் சுதந்திர சாசனத்தினை வெளியிட்டு வந்துள்ளார்கள்.

 

நமது மக்களின் அரசியல் தலைவிதியினை நாமே தீர்மானிப்பதற்குத் தேவையான பலமான அடித்தளத்தினையும் நாம் இட முடியும். அனைத்துலக அரங்கில் நடைபெறும் அரசியல் சதுரங்கத்தில் ஏனையோர் வகுக்கும் வியூகத்துக்கு உட்பட்டு நாம் செயற்படாமல், நமக்கென்று நாம் வகுக்கும் ஒரு வியூகத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கும் இச் செயல்முறை துணைபுரியும். இவை அனைத்தும் தமிழீழ சுதந்திர சாசனத்தை முரசறைவதற்கான உற்சாகத்தை உலகத் தமிழ் மக்களுக்கு தருகின்றது. - ஒடுக்குமுறை சிறிலங்கா அரசுக்கும் அமையப்போகும் தமிழீழ அரசுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் தமிழீழ சுதந்திர சாசனம் சுட்டி நிற்கும். உதாரணமாக பௌத்தத்தை முதல் மதமாகக் கொண்ட மதச்சார்பு அரசாக சிறிலங்கா இருக்க தமிழீழம் மதச்சார்பற்ற அரசாக அமைவதனைக் குறிப்பிடலாம். மேலும் சிறிலங்கா அரசு மிகவும் மோசமான முறையில் மனித உரிமைகளை மீறும் அரசாக இருக்க தமிழீழம் உன்னதமான முறையில் மனித உரிமைகளை மதிக்கும் விருப்பும், தகமையும் கொண்டதாகத் தன்னை வெளிப்படுத்தி நிற்பதனை இந்த சுதந்திர சாசனம் பதிவு செய்யும். இத்தகையதொரு பின்னணியிலேயே உலகத் தமிழ் மக்களால் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படுகின்றது. இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முரசறைவு மட்டுமல்ல ஈழத் தமிழர் தேசத்தின் முரசறைவு… ! உலகத் தமிழினத்தின் முரசறைவு…. ! ஈழத் தேசத்தின் விடுதலையை வேண்டி நிற்கும் அனைவரதும் முரசறைவு….!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.