Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்

Featured Replies

Tiger leader appologises for 1991 killing of Indian prime minister

Associated Press, Tue June 27, 2006 10:01 EDT . NEW DELHI (AP) _ A senior Tamil Tiger leader has apologized to India for the 1991 assassination of former Indian Prime Minister Rajiv Gandhi by a Tiger suicide bomber.

``I would say it is a great tragedy, a monumental historical tragedy for which we deeply regret and we call upon the Government of India and people of India to be magnanimous to put the past behind,'' said the Tigers' chief negotiator Anton Balasingham in an interview with India's NDTV news channel to be aired Tuesday. NDTV released some of the transcripts ahead of the broadcast.

The Tigers killed Gandhi to protest India's involvement, during Gandhi's tenure, in Sri Lanka's civil war. The Tigers have acknowledged their role in the attack in the past, but this is the strongest expression of regret yet from the rebels.

Balasingham's comments came as mounting violence in Sri Lanka threatens to torpedo a shaky 2002 cease-fire that ended a bloody civil war, which left some 65,000 people dead in the island nation.

But the context for the comment _ and whether it was part of a larger strategy to court Indian support _ was not immediately clear.

Balasingham said the Tigers, formally called the Liberation Tigers of Tamil Eelam, had given India a commitment that it would not target its leaders again and would welcome a greater Indian involvement in the peace talks between the Tigers and the Sri Lankan government.

The Tigers have pledged not to work against India's interests, Balasingham told NDTV, saying India should be ``actively involved in the peace process.''

Gandhi, the son of slain Prime Minister Indira Gandhi, was killed in an explosion triggered by a female Tamil Tiger who greeted him while he was campaigning for elections in the southern Indian state of Tamil Nadu on May 21, 1991

The Tigers were angered by Gandhi's decision to send Indian troops as peacekeepers to northern Sri Lanka in 1987 as part of an accord with the Sri Lankan government to broker peace.

The Indian troops ended up fighting with the Tigers and withdrew from the island nation in 1990

  • Replies 88
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் வருத்தற்திற்குரிய நிகழ்வு அன்ரன் பாலசிங்கம்

இராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வு எனவும் அதற்காக மிகவும் வருந்துவதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் என்.டி.ரி.வி என்ற இந்திய செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

1991ல் இடம்பெற்ற அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுவதானால்இ அது மிகவும் துரதிஸ்டவசமானதொரு நிகழ்வு வரலாற்றில் மிகப்பெரியதொரு தவறு. அதற்காக நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம் எனத் தெரிவித்ததோடு

இந்திய அரசும் இந்திய மக்களும் இந் நிகழ்வை பெரிய மனதுடன் மன்னித்து கடந்த காலத்தை புறந்தள்ளி இலங்கை இனப்பிரச்சினையில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்;துள்ளார்.

இராஜீவ் காந்தியின் மரணத்தையடுத்து கடந்த 15 ஆண்டுகளாக மௌனமாக இந்தியா இருந்து வருவதாகவும்இ இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நடுநிலையான பங்கை வகிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ள பாலசிங்கம் அவர்கள்இ

விடுதலைப்புலிகள் இந்திய அரசுடன் புதியதொரு உறவைக் கட்டியெழுப்பத் தயாராகியுள்ளதாகவும்இ இந்தியாவின் பிராந்திய நலன்களிற்கு எதிராக விடுதலைப்புலிகள் எதனையும் எப்போதும் இனிமேல் செய்யமாட்டார்கள் என்ற உறுதிமொழியை தாங்கள் இந்திய அரசிற்குத் தெரிவித்துள்ளதாகவும் மேலும் அச் செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்தியா இனப்பிரச்சினை விவகாரத்தில் நடுவர் நிலை வகிக்க விரும்பினால் அது விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென பேட்டியாளரின் கேள்வியொன்றிக்கான பதிலில் தெரிவித்த பாலசிங்கம் அவர்கள்

அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள்இ ஆயுதப்படைகள் மக்களைக் கொல்வதை அனுமதிக்க வேண்டாம் என மகிந்த ராஜபக்சவிற்கு வேண்டுகோள் விடுத்ததை மேற்கோள் காட்டியதோடுஇ இந்தியாவின் இவ்வாறான இராஜதந்திரத் தலையீடே இன்றைய நிலையில் எமது மக்களைப் பாதுகாக்கத் தேவையானது எனவும் தெரிவித்துள்ளார்.

புதினம்

ராஜிவ் காந்தி கொலை பாரிய துன்பியல் சம்பவம், வருந்துகிறோம், என்கிறார் பாலசிங்கம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை ஒரு வரலாற்று ரீதியான தவறு என்றும் ஆனால் இதை இந்தியாவும் இந்திய மக்களும் மறந்து, பெருந்தன்மையாக நடந்து கொண்டு, இந்தச் சம்பவத்தைப் பின் தள்ளிவிட்டு, இனப்பிரச்சினையை ஒரு மாறுபட்ட கோணத்தில் அணுகவேண்டும் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

இந்தியத் தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பாலசிங்கம் அளித்த பிரத்யேக பேட்டியொன்றில், இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலையைப் பொறுத்த வரையில் அது ஒரு பாரிய துன்பியல் சம்பவம் என்றும், அது குறித்து தாங்கள் மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் நலன்களுக்கு எதிராகத் தாங்கள் நடந்துகொள்ள மாட்டோம் என்று இந்திய அரசுக்கு உறுதிமொழிகள் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதால், விடுதலைப்புலிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டு அதன் விளைவாக இந்தக் கொலை நடந்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த அண்டன் பாலசிங்கம், இந்திய ராணுவத்துக்கு எதிராக தாங்கள் ஒரு போரை இரண்டு வருடமாக நடத்தியதாகவும், இறுதியாக இலங்கை அரசுடன் ஒரு சமரசம் பேசி இந்தியப்படையை 90 நாளில் அங்கிருந்து வெளியேறச் செய்தோம். இதனைத் தொடர்ந்து இராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையும் இடம் பெற்றது. அந்தச் சம்பவத்தை பொறுத்தவரை அது ஒரு பெரிய அனர்த்தம் என்று நான் கூறுகிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துன்பியல் சம்பவம் இது. அது குறித்து நாங்கள் வருந்துகிறோம் என்றார்.

மேலும் பாலசிங்கம் கூறுகையில், இந்தியா விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் பயிற்சியும், ஆயுதமும் வழங்கியது. அரச அடக்குமுறையில் இருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே அது வழங்கப்பட்டது.

ஆனால் அதற்கான நோக்கம் ஒரு தனியான நாட்டை உருவாக்குவதல்ல, தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ளத்தான் அது வழங்கப்பட்டது என்றார் பாலசிங்கம்.

1983 முதல் 1987 வரை இந்தியத் தலையீடு இருந்தது, அந்த வேளையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டது, அந்த சந்தர்ப்பத்தில் இந்தப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண இந்தியா முயன்றது என்று கூறிய பாலசிங்கம், ஆனால் அது ஒரு சிக்கலான சரித்திரம், இந்தியா முன்வைத்த அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து விடுதலைப்புலிகளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லை, ஏனென்றால் அது தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தவில்லை என்றார்.

இந்தியாவில் இருப்பது போன்ற ஒரு கூட்டாட்சி முறையை இந்தியா பரிந்துரைத்திருந்தால் அப்போது நாம் நிச்சயமாக சாதகமாக பதிலளித்திருப்போம். ஆனால் இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட மாகாண நிர்வாகம் தமிழ் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்றார் பாலசிங்கம்.

நன்றி பிபிசி தமிழோசை

பாலசிங்கம் கருத்துக்களால் இந்திய நிலையில் மாற்றம் இராது என்கிறார் பத்திரிகையாளர் ராம்

'இந்திய நிலையில் மாற்றம் இராது' ராம்

ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்திய மக்களைக் கவர எடுக்கப்பட்டுள்ள ஒரு சாதுர்யமான முயற்சி மட்டுமே என்று பிரபல இந்திய பத்திரிகையாளர் என்.ராம் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழோசைக்கு வெளியிட்ட கருத்துக்களில், இத்தகைய படுகொலை சம்பவங்கள் குறித்து யாரும் தங்களது வருத்தங்களை வெளியிடலாம் அது மட்டுமே போதாது என்றார். இந்தியாவை பொறுத்தவரை விடுதலைப்புலிகள் விஷயத்தில் பாரிய மாற்றம் இருக்கும் என்று தான் கருதவில்லை.

தமிழகத்தைப் பொறுதத வரை, இலங்கையில் நிலவும் வன்முறை காரணமாக தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகள் குறித்து அனுதாபமும், பொதுவாக இலங்கைத் தமிழருடன் ஒருவித தோழமை உணர்வும் இருந்தாலும், தமிழக மக்கள், இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் பிரித்தே பார்க்கிறார்கள் என்று ராம் கூறினார்.

நன்றி பிபிசி தமிழோசை

  • கருத்துக்கள உறவுகள்

இந்துப்பத்திரிகை ராம், துக்ளக் பத்திரிகை சோ போன்ற பாப்பணர்கள் எதுக்கெடுத்தாலும் புலி எதிர்ப்பு நிலைகொண்டவர்கள். பி.பி.சி தமிழோசையும் அதே உணர்வுடன் செயர்படுகிறது. இந்திய நிலையிலும், தமிழகத்தமிழர்கள் நிலையிலும் மாற்றம் வந்தாலும், இந்தப்பாப்பணர்களின் நிலையில் மாற்றம் வராது. தந்தை பெரியார் பாம்போடு பாப்பணரையும் ஒப்பிட்டுச் சொன்ன கருத்துதான் யாபகத்தில் வருகிறது.

பார்ப்பான் பார்க்கமாட்டான் முத்திரைக்கு சீலடிக்கிறதை விட்டிட்டு இன்னொருக்கா தமிழோசையை முழுசா கேளுங்கோ..

:idea:

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பான் பார்க்கமாட்டான் முத்திரைக்கு சீலடிக்கிறதை விட்டிட்டு இன்னொருக்கா தமிழோசையை முழுசா கேளுங்கோ..

:idea:

இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன். தூயவன், வர்ணன், வினித் போன்றவர்கள் பதில் அளிப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தரப்பினால் திட்டமிட்டு திரிவுபடுத்தப்பட்ட அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டி

என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பேட்டி இந்தியத் தரப்பினால் திட்டமிட்டுத் திரிவுபடுத்தப்பட்டிருப்பதா

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பான் பார்க்கமாட்டான் முத்திரைக்கு சீலடிக்கிறதை விட்டிட்டு இன்னொருக்கா தமிழோசையை முழுசா கேளுங்கோ..

:idea:

ஓமண்ணை வடிவாகத் தான் கேட்டனாங்கள்! அது ஏன் ராமுக்கு கதைக்கும் போது குரல் இப்படி நடுங்குது. இந்தியச்சனத்தின் ஒட்டுமொத்த குரல் போல, ஓளிபரப்பாகி கொஞ்ச நேரத்தில் அறிக்கையை விடுகின்றார். ஆனால் பாவம் அவர்!

இந்திய மக்கள் புலிகளை ஆதரிக்க கூடாது என்ற ஆதங்கம் குரலில் நடுங்க வைக்குது.

பாப்பாணச் சீலடிப்பதை விடுவோம். ஆனால் சுனாமி நடந்த நேரம் இத்தனையாயிரம் மக்கள் செத்ததைப் பொறுப்படுத்தாமல், தேசியத்தலைவருக்கு துன்பம் நிகழ்ந்தது என்று சிங்களப்பத்திரிகைகளும், கறுணா( இவரின் பிரபாகரன் வியாக்கியனாம் தனி ஜோக். அதை விடுங்கோ!)வும் சொன்னதை வைத்துக் கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டவரில்லோ! அப்போதே தெரியும் தானே இவருக்கும் எப்படிப் புலிக்காச்சல் இருக்குது என்று!

சனத்தைப் பற்றி கவலையில்லாமல், இப்படிப் புலம்பும் இவரின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள்! ஏனென்றால் அவருக்கு மட்டுமல்ல புலிக்காச்சல் என்று தெரியும்! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையை மறக்கவோ

புலிகளை மன்னிக்கவோ முடியாது

இந்திய வெளியுறவு இணை அமைச்சர் அறிவிப்பு

""ராஜீவ் கொலைச் சம்பவத்தை மறக்கவோ, அதற்காக புலிகளை மன்னிக்கவோ இந்திய மக்கள் தயாராக இல்லை''

இப்படி இந்திய இணை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார் என என்.டி.ரி.வி. செய்தி நிறுவனம் நேற்று அறிவித்தது.

புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வழங்கிய பேட்டியின் சில பகுதிகளை தனது அறிவிப்புக் கருத்துகளோடு ஒளிபரப்பிய அந்தச் செய்தி நிறுவனம் அதைத் தொடர்ந்து இந்திய இணை அமைச்சர் ஆனந்த் சர்மா இவ்விடயம் குறித்து வெளியிட்ட கருத்துக்களைப் பேட்டியாக வெளியிட்டது.

அன்ரன் பாலசிங்கத்தின் கருத்துத் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச் சர் ஆனந்த் சர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: ராஜீவ் காந்தி கொலைக்குப் புலிகளே பொறுப்பு என்பதை எல்லோரும் அறிந் திருந்தாலும் எப்போதும் புலிகள் இப்போது போல அதை ஏற்றுக்கொண்டு மறந்துவிடுமாறு கோரியது கிடையாது. ஆகவே, இந்திய மக்களும் இந்திய அரசும் இந்தக் கட்டத்தில் அப்படி நடந்து கொள்ளமுடியுமா?

பதில்: புலிகளின் பேச்சாளரின் அறிவிப்பு அவர்கள் பக்கத்தில் ராஜீவ் கொலையில் அவர்களின் சிக்கல் நிலை பற்றிய ஒப்புதல் வாக்குமூலம்தான். கடந்த பதினைந்து ஆண்டு களாக அது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.

புலிகளின் தலைவர்கள் இது தொடர் பாக இந்திய நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட் டுள்ளனர்.

இந்நிலையில் இதனை மன்னிக்கும்படியோ, இது குறித்துத் தாராளமாக நடந்து கொள்ளும் படியோ கோருவது பயங்கரவாதம், வன் முறை, அரசியல் படுகொலை ஆகியவை பற் றிய கொள்கையை அங்கீகரிப்பது போலவே அமையும். ஆகவே, புலிகள் புரிந்த திடுக் கிடச் செய்யும் இந்தக் குற்றத்தை இந்திய மக் களால் மறக்கவே முடியாது.

கேள்வி: கடைசியில் எப்படியும் நாம் முன்னோக்கி நகரத்தானே வேண்டும்? இந் தப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஓர் அரசி யல் தீர்வு காண இலங்கை முயற்சிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஒருபுறம் கைக்கொள்ளும்போது ஏதோ ஒரு கட்டத் தில் இந்தத் துன்பியல் கொலை பின்தள்ளப் பட்டுத் தானேயாகவேண்டும்?

பதில்: அப்படி அவர்களால் இலகுவாகக் கூறமுடியும். ஆனால், அவர்கள் தொடர்ந் தும் பயங்கரவாதம் மற்றும் வன்முறை அடிப் படையிலான அரசியலில்தானே நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்? இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையில் அமைதி, ஸ்திரம், ஐக்கியம் ஆகியவற்றையே விரும்பு கின்றது.

அமைதி முயற்சியை நாங்கள் ஆதரிக்கி றோம். அது தடம்புரள்வது கவலைக்குரியது. நன்மையான எண்ணம் அங்கு நிலைக்கும் என நம்புகின்றோம். இலங்கையில் எல்லா விடயங்களும் ஜனநாயக, அமைதி வழியில் தீர்க்கப்படவேண்டும். வன்முறை, படுகொலை கள், இராணுவ வழிமுறைகள் மூலம் எந்த விடயத்துக்கும் தீர்வுகாணமுடியாது.

கேள்வி: இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகின்ற நிலையில், இவ்விடயத்தில் இந்தியா அதிகளவில் நேரடிப் பங்களிப்பு வழங்கவேண்டும் எனப் புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் கூறி யிருக்கின்றார். இவ்விடயத்தில் இந்தியா நடு நிலையாளராக (மெடிஅடொர்) பங்கு வகிக்க முடியுமா?

பதில்: புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. உலகின் வேறு பல பெரிய நாடுகளிலும் அதற்கு எதிராகத் தடையுள்ளது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியமும் தடையை அறிவித்துள்ளது.

வன்முறைகளைக் கைவிடுவதாக அறி வித்து பேச்சு மேசைக்குத் திரும்புவது புலிக ளைப் பொறுத்தது.

கேள்வி: ஆனால் இதில் முரண்பாடு உள்ளதே. பல கட்சிகள் குறிப்பாக உங்கள் அரசில் இடம்பெற்றுள்ள தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் யாழ்ப்பாணத் தமிழர் என்ற விடயம் வரும்போது இந்தியாவின் அதிக செயல்பாடான பங்களிப்பை வற்புறுத்துகின் றார்களே?

பதில்: அது வித்தியாசமான கேள்வி. இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் ஜனநாயக முறையில் தீர்வு காணும் எந்த முயற்சிக்கும் நாங்கள் முழு ஆதரவு வழங்கு கின்றோம். ஆனால், அதையும் இதையும் முடிச்சுப் போட்டுப் பார்க்காதீர்கள்.

கேள்வி: கடைசியாக ஒரு கேள்வி. இலங்கைப் பிரச்சினை இவ்வளவு மோச மான வடிவம் எடுக்க முன்னர் ஆரம்பத்தில் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித்தது என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. அதை பாலசிங்கமும் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றா

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தரப்பினால் திட்டமிட்டு திரிவுபடுத்தப்பட்ட அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டி

என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பேட்டி இந்தியத் தரப்பினால் திட்டமிட்டுத் திரிவுபடுத்தப்பட்டிருப்பதா

ம்.. ஆர் நடுங்கி நடுங்கி பேட்டி குடுத்ததெண்டு இன்னுமெருக்க கேட்டுப்பாருங்கோ.. கடைசியிலை இந்திய உத்தியோகபூர்வ அறிக்கை பற்றியும் செய்தியிலை சொல்லியிருக்கு.. இந்தாங்கோ லிங்..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணா?

தமிழ்மக்கள் கொல்லப்படும் செய்தி கேட்கும் போது காது கேட்காதவன் மாதிரியும், சிங்கள இராணுவம் சாகும்போது பந்திபந்தியாக அறிக்கை விடும் பக்கசார்புச் செவிட்டுப் பயல் என்றா எம்மையும் நினைத்தீர்கள்! ஏற்கனவே கேட்டபடியால் தான் சொல்கின்றோம்!

பிபிசிக்காரன் கேட்கும்போது வார்த்தை தேடிக் குலையும் ராமின் குரல் விளங்கவில்லையோ! இப்படி ஒரு நடுக்கம் அவருக்கு முன்பே இருந்ததில்லையே!

முழுமையாக ஒளிபரப்பாமல் இந்திய அரசு திருட்டுத்தனம் செய்திருக்கலாம். இந்திய அரசு என்ன முடிவாவது எடுக்கட்டும். ஆனால் இது மக்கள் மனத்தில் புலிகள் மீதான வெறுப்பை குறைக்கும் என்பது உண்மை. பலருக்கு புலிகள் இது குறித்து ஆதங்கம் தெரிவிக்காதபடியால் தான் சிறிய ஊடல் இருந்தது. அது கடந்த தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு தொடர்பாக, தமிழக ஊடகங்களில் எதிரொலித்தது. எனவே இந்த கடடத்தால் றோவிற்கு ஒரு சாட்டை விளப்போகின்றது.

மக்கள் மனதில் ஏற்படும் மாற்றத்தை நடுங்கும் குரலால் ராமோ, சோ(மாரி) யாராலும் ஒண்டும் செய்யமுடியாது.

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம் - Wednesday, June 28, 2006

ராஜீவ் காந்தி படுகொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ""ஆழ்ந்த வருத்தம்'' தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் ""புதிய உறவுக்கு'' அது அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம், இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா ""செயலூக்கமான பங்காற்ற'' முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தாந்தவாதியான ஆன்டன் பாலசிங்கம், என்டிடிவி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1991 மே 21-ம் தேதி பெண் மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது, ""மாபெரும் வரலாற்று சோகம்'' என்று அவர் கூறியுள்ளார்.

அவரது பேட்டி வருமாறு:

அந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில்... அது ஒரு பெரும் சோகம்... மாபெரும் வரலாற்று சோகம்... அதற்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.

கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசையும், இந்திய மக்களையும் அழைக்கிறோம்... மாறுபட்ட கண்ணோட்டத்தில் இனப் பிரச்சினையை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எந்தச் சூழ்நிலையிலும் இந்திய அரசின் நலன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம்.

இந்திய அரசுடன் புதிய நல்லிணக்கத்தை, புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

கடந்த காலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணுகுமுறையைப் பின்பற்றினால், இலங்கை இனப் பூசலுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா ஆக்கபூர்வமான பங்காற்ற வாய்ப்புள்ளது.

இவ்வாறு பாலசிங்கம் பேட்டியில் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளின் பங்கை, பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான பாலசிங்கம் போன்ற புலிகள் அமைப்பின் உயர் தலைவர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதல் முறை.

ராஜீவ் காந்தி படுகொலையில் தங்களுக்குள்ள தொடர்பை ஆரம்பத்தில் புலிகள் கடுமையாக மறுத்து வந்தனர். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் நிரூபித்த பிறகே அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர்.

ஆனந்த் சர்மா: இது பற்றி, இந்திய அரசு சார்பில் உடனடியாக கருத்து தெரிவித்து, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

புலிகள் இழைத்த கொடிய குற்றத்தை இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள். பாலசிங்கத்தின் கூற்று, ராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலம். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என்பது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோரும் நன்கறிந்த உண்மை என்றார் ஆனந்த் சர்மா.

நன்றி: தினமணி

ஆண்டன் பாலசிங்கத்தின் பேட்டியை பெருவாரியான இந்தியர்கள் வரவேற்கிறார்கள்.... இந்தியா இனியும் அமைதி காக்காமல் உடனடியாக இலங்கைப் பிரச்சினைக்கு (இராணுவரீதியாக அல்ல) பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு....

புலிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நியாயமான பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்....

சில ஊடகங்கள் திட்டமிட்டு திரிபுபடுத்தி நாடகமாடியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.

1980 களின் பின்பகுதிகளில் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் தான் அதை பார்க்க வேண்டும். அந்த காலப் பகுதியில் முன்னால் பிரதமமந்திரியும் எதிர்கட்சித் தலைவருமான ரஜீவ் கொலை மாத்திரம் அல்ல பல வரலாற்று தவறுகள் நடந்தது அதன் விளைவாக பல துன்பவியல் சம்பவங்கள் நடந்தது. இவற்றில் அதிகப்படியா இழப்புகளை சந்தித்தது தமிழ் இனம் என்றதை மறந்துவிடக்கூடாது.

15 வருடங்களிற்கு பின்னர் தமிழ் இனம் இன்று எதிர்பார்ப்பது அந்த வடுக்களை ஆறவிட்டு ஒரு புதிய உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்வதே அன்றி யார் பிழை விட்டது யார் மன்னிப்பு கேட்பது என்று ஊடகங்களில் சொற்களை திரித்து நாடகமாடுவதை அல்ல.

இளைப்பாறிய அமைதிப்படை அதிகாரிகள் முதல் மறைந்த ஜே என் டிக்சிற் இன் கருத்துக்கள் பல தமது தவறான மதிப்பீடுகளை உணர்ந்தவர்களாக, புலிகளின் ஏகபிரதிநிதித்துவத்தை மக்களிடம் அவதானித்ததாக தமது புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவற்றை மேற்கோள் காட்டி இந்திய தரப்பில் பிழையை ஒத்துக் கொள்கிறார்கள், இந்தியா ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் கொலைகளிற்கும், பாலியல் வன்புணர்விற்கும் மன்னிப்பு கேருகிறது என்று தமிழர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இங்கு கலாநிதி பாலசிங்கம் விட்ட பிழை என்டிரிவி இக்கு மாத்திரம் பிரத்தியேகமாக அந்த பேட்டியை வழங்கியது. அந்த பேட்டி முழுவடிவத்தில் தொலைக்காட்சியிலும் சமாந்தரமாக ரிரிஎன் போட வேண்டும், முன்கூட்டியே இணையத்திலும் சமாந்தரமாக போடுவதாக இருந்தால் அது தமிழ்நெற் இல் வெளியிடபட்டிருக்க வேண்டும்.

பார்பணிய வரட்டுக் கொளரவ ஆதிக்கத்திலிருந்து இந்திய வெளியுறவுக் கொள்ளை இன்னமும் முழுமையாக விடுதலை பெறவில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் லக்கி லுக் அண்ணா...இந்தியாவில் இரப்பவர் என்ற முறையிலும்...பத்திரிகை துறையை சார்ந்தவர் என்ற முறையில் இந்த பேட்டிக்கு பின்பு இந்திய மக்களுடைய Reaction எப்பிடி இரக்கின்றது என்று கூறுங்களேன்... :roll: :roll:

வணக்கம் லக்கி லுக் அண்ணா...இந்தியாவில் இரப்பவர் என்ற முறையிலும்...பத்திரிகை துறையை சார்ந்தவர் என்ற முறையில் இந்த பேட்டிக்கு பின்பு இந்திய மக்களுடைய Reaction எப்பிடி இரக்கின்றது என்று கூறுங்களேன்... :roll: :roll:

இந்திய மக்கள் இந்தப் பேட்டியை வரவேற்கிறார்கள்.... இதுவரை இந்தியாவில் ஈழத்தமிழரை ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் காண்பித்த நொண்டிச்சாக்கு "ராஜிவ் மரணம்".... இனி அவர்களால் இந்த நொண்டிச் சாக்கை சொல்ல முடியாது.... 1983ல் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்த ஒரு அலையை ஆண்டன் பாலசிங்கம் இந்தப் பேட்டி மூலமாக மீண்டும் ஏற்படுத்தப் போகிறார் என்பது என் கணிப்பு....

தமிழக அரசுத் தலைமையும் இனி எந்த நெருடலும் இன்றி மத்திய அரசை நெருக்கலாம்.... ஆனந்த சர்மா என்ற மத்திய அமைச்சரின் பேட்டி நிச்சயமாக இந்திய அரசின் குரல் அல்ல என்று எடுத்துக் கொள்ளலாம்... ஆனந்த சர்மா பொதுவாக ஜெயலலிதா போன்ற இந்திய அரசியல்வாதிகளுக்கு ஆதரவானவர்.... ராஜிவின் நண்பர்.... அவரிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.... ஆனாலும் சோனியாவைப் பொறுத்தவரை ராஜிவின் மரணத்தை அவர் எப்போதே மறந்து மன்னிக்கத் தயாராகி விட்டார்.... நளினியின் கருணை மனுவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னபோதே சோனியா தமிழருக்கு எதிரானவர் அல்ல என்பது எங்களுக்குப் புரிந்து விட்டது....

அமைதிப்படை செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடிக்கொள்ளவே சோனியா விரும்புவார்... அனேகமாக இந்திய அரசு நேரடியாக பேச்சுவார்த்தையில் தமிழருக்கு ஆதரவாக பங்கேற்கும் என்று இங்கே பேசிக்கொள்கிறார்கள்... இதனால் அது அமெரிக்கா போன்ற நாடுகளின் பகையையும் சம்பாதிக்கவும் தயாராகி விட்டது என்றும் பேச்சிருக்கிறது....

ஆனாலும், ஐ.நா. செயலர் பதவியை இலங்கை வேட்பாளர் பெற்று விட்டால் அது இந்தியாவுக்கும் சரி.... ஈழத்தவர்க்கும் சரி பின்னடைவாகவே முடியும்.... அங்கே இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது ஈழத்தவருக்கு சரி, இந்தியருக்கும் சரி ஆதரவான ஒரு செயலாக அமையும்.... சசி தரூர் கேரளாவைச் சார்ந்தவர்.... ஈழத்தில் நடந்த பேரினவாத படுகொலைகளை நன்கு அறிந்தவர்....

இதுபோலவே இந்திய அரசும் கவுரவத்தை விட்டு அமைதிப்படையின் அராஜகத்துக்கு ஒருமுறை மனம் திறந்து மன்னிப்பு கேட்டால் எந்தவித மனஸ்தாபமும் இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து....

தனி ஈழம் வெகு விரைவில் அமையும்..... :lol::lol::lol:

சில ஊடகங்கள் திட்டமிட்டு திரிபுபடுத்தி நாடகமாடியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.

15 வருடங்களிற்கு பின்னர் தமிழ் இனம் இன்று எதிர்பார்ப்பது அந்த வடுக்களை ஆறவிட்டு ஒரு புதிய உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்வதே அன்றி யார் பிழை விட்டது யார் மன்னிப்பு கேட்பது என்று ஊடகங்களில் சொற்களை திரித்து நாடகமாடுவதை அல்ல.

குறுக்காலபோனவன் போன்றவர்களின் கருத்துக்கள் மீண்டும் மலர்ந்து வரும் ஈழத்தமிழர் - இந்தியர் உறவை கெடுக்கும் வண்ணமே எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன்....

மன்னிப்பு கேட்பது என்பது உயர்ந்தப் பண்பு.... தமிழன் எங்கேயும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தவறியதில்லை என்பது வரலாறு....

விடுதலைப்புலிகள் "மன்னிப்பு" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பதன் மூலம் மிகவும் உயர்ந்திருக்கிறார்கள்.... குறுக்காலப் போனவன் சொன்னமாதிரி தாழ்ந்து ஒன்றும் போய் விடவில்லை....

புலிகள் இப்போது இந்திய மனங்களை வென்றிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது....

இந்தியாவே இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.... இது இந்தியாவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி தான்.....

இன்னொரு விஷயம்.... இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் என்.டி.டி.வி புலிகளின் அரசியல் ஆலோசகரை பேட்டி கண்டிருக்க முடியுமா என்பதை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்....

புலிகளுக்கும் - இந்திய அரசுக்கும் பரஸ்பர நல்லெண்ணம் ஏற்படவே இந்தப் பேட்டி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....

நன்றி லக்கிலுக்

நன்றி லக்கிஜி

நன்றி லக்கிஜி

ஆதிபன்!

சென்னையில் தானே இருக்கிறீர்கள்.... சென்னைத் தமிழர்களின் மன உணர்வை சரியாகப் பிரதிபலித்திருக்கிறேனா?

நேற்றைய தினம் பேட்டியைப் பார்த்ததில் இருந்தே பல நண்பர்களுடன் இதைப் பற்றி பேசி சந்தோஷப்பட்டேன்... நிறையப் பேர் இதை வரவேற்றே கருத்து சொன்னார்கள்.... ஒரு சிலர் மட்டும் (அவர்கள் எப்போதும் அப்படித்தான்) இதை புலிகளின் தந்திரம் என்றெல்லாம் சொன்னார்கள்....

மேலும், ஆண்டன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளால் இனி எக்காலத்திலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று உறுதி அளித்திருப்பது பாராட்டத்தக்கது....

இதை வரவேற்க மனமில்லாதவன் இந்தியன் மட்டுமல்ல மனிதனே கிடையாது.....

இனியாவது இந்தியா இந்தியராணுவம் செய்த செயல்களுக்கு தமிழர்களிடம் வருந்தம் தெரிவிக்கட்டும். அது இருபக்கமும் சுமுகஉறவை ஏற்படுத்தும்.

தவறு செய்பவன் மனிதம். அதை மன்னிப்பவன் தெய்வம். இந்தியா மன்னிக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை ஆர்வம்.

அன்பின் லக்கிஜி துரதிஸ்டவசமாக நான் இந்தியாவில் இல்லை. ஆனாலும் எனது பெற்றோர் அங்குதான் உள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.