Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்

Featured Replies

ம்.. ரஜீவ் தலைப்புக்கைநிண்டு தாத்தா கொசிப்.. நல்லாவே இல்லை.. அதை விடுவம்.. உதயன் பத்திரிகையிலை தாங்கள் செய்ததெண்டு ஒப்புக்கொளேல்லையெண்டு செய்தி வந்திருக்கிது.. இதையும் ராஜதந்திர நடவடிக்கையெண்டு சொல்லுறதோ..அல்லது................................. :?:

கேள்வி கேக்க வேணும்தான்.... ஆனா சாதிச்சவை சொன்னால் கேக்கக்கபடாது.... இந்தியனோடை ஒட்டி வந்து அடிவாங்கிக்கொண்டு ஓடிப்போய் இந்தியாவில பதுங்கீட்டு பிறது சிங்களவனோடை வந்து ஒட்டினவை சொன்னால் கேக்கலாம்.....

அது சரி புலி ஆதரவாளர் எண்டு போட்டுத்தள்ளின சனத்தை நாங்கள்தான் போட்டனாங்கள் எண்டு எப்ப நீங்க உரிமை கோரப்போறீங்க..... சொல்லாமல் இருக்கிறதுக்கும் ஏதாவது இராஜதந்திரம் இருக்கா...???

  • Replies 88
  • Views 10.9k
  • Created
  • Last Reply

ம்.. ஏதொ அவங்கள்தான் இழுத்துக்கொண்டுபோய் வைச்சு பேட்டி குடு எண்டு சொன்னமாதிரியிருக்கு உங்கடை கதை.. சொன்னதை காட்டினாங்கள்.. குடுத்தவருக்கு அறிவு எங்கை போச்சு?

இந்திராகாந்தியை கொலைசெய்தது ஒரு சிங்.. அதேஅரசாங்கத்திலை தற்போதைய பிரதமர் மன்கோகன்சிங்(தலைப்பாசிங்) அப்படியிருக்கேக்கை அது தனிமனித கொலையாயிருந்தாலென்ன கூட்டுக் கொலையாயிருந்தாலென்ன..

இராஜீவை தாங்கள் கொல்ல இல்லை எண்டு புலிகள் எப்பவாவது சொன்னவையே.....??? அப்பிடி உங்கட ஆக்கள் தானே சொல்லுகினம்....!

அதேமாதிரி உரிமை கோர இல்லைத்தானே....! அப்பிடி பாலா அண்ணா எங்கயாவது சொல்லி இருக்கிறதாய் காட்ட ஏலுமே...??? சும்மா உளராதேயுமோய்...!

ம்.. கொலைசெய்தும் கொலைசெய்யாத ஒன்றுக்கு தேவையில்லாமல் வருத்தம் தெரிவிச்சு பிரச்சனையை ராஜதந்திரம் பண்ணியிருக்கு..

நல்லாயிருக்கப்பா.. :P

இராஜீவை தாங்கள் கொல்ல இல்லை எண்டு புலிகள் எப்பவாவது சொன்னவையே.....??? அப்பிடி உங்கட ஆக்கள் தானே சொல்லுகினம்....!

அதேமாதிரி உரிமை கோர இல்லைத்தானே....! அப்பிடி பாலா அண்ணா எங்கயாவது சொல்லி இருக்கிறதாய் காட்ட ஏலுமே...??? சும்மா உளராதேயுமோய்...!

அப்பு தலா உவருடையை நோக்கம் தெள்ளத் தெளிவா தெரியுது தானே பிறகேன் நேரத்தை வீணாக்குறீர்?

உங்களை சொல்லி என்ன உவை நிர்வாக குழு என்று குந்தியிருக்கிறவைக்கு சைட்சாஜர் வைச்சா எல்லாம் பக்குவமா நடக்கும் :evil:

  • கருத்துக்கள உறவுகள்

சில விசமிகளுக்கு பதில் அளிப்பதாக நினைத்துக் கொண்டு, மீண்டும் ஒரு இந்திய எதிர்பலையைத் தூண்ட வேண்டாம். பழையவற்றை மறந்து, ஒன்று கூடும் என்று பாலா அண்ணாவின் சொற்கள் புரிந்திருந்தால் இத்தலைப்பில் விவாதிக்க வேண்டிய தேவை இருக்காது!

இந்தியா - ஈழம்

இன்று தமிழ் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் மறுபடியும் பேசப்படுவது "சிலருக்கு" எரிச்சலாகவே அமைந்து இருக்கிறது. கடந்த காலங்களில் "தமிழீழ ஆதரவாளர்கள்" அனைவரும் "இந்தியாவின் எதிரிகள்" அல்லது "பிரிவினைவாதிகள்" என முன்நிறுத்தப்பட்ட வாதத்தை மீண்டும் நிலை நிறுத்த இவர்கள் தலைப்பட்டுள்ளார்கள்.

"தமிழீழ ஆதரவாளர்கள்" இந்தியாவின் இறையான்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலம், இப் பிரச்சனை குறித்து பேசு முனைபவர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவது தான் இவர்களின் நோக்கமாக உள்ளது.

சில ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகள் தொடங்கி அத்தகைய சிலரை தமிழ் வலைப்பதிவுகளிலும் காண முடியும். "இந்திய தேசியத்தை" முன்னிலைப்படுத்தி அதன் மூலம் தங்களின் அரசியல் சார்புகளை மறைத்து, ஈழம் குறித்து பேச முற்படுபவர்களை பயமுறுத்துவது, தமிழீழ நோக்கங்களை தமிழகத்தில் மறுபடியும் எழாமல் மழுங்கடிப்பது என்பன தான் இவர்களின் நோக்கங்களாக இருந்து வந்திருக்கிறது.

இந்திய தேசிய ஆதரவாளர்கள், தமிழீழ ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்று "சிலரால்" நிலைநிறுத்தப்பட்ட கருத்தாக்கத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, அந்தப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகமும் இன்று முன்னிலையில் இருக்கும் பொருளாதாரச் சூழலில் வளர்ந்த எனக்கு, எந்த உரிமைகளும் இந்தியாவில் மறுக்கப்பட்டதில்லை. இந்தியாவில் தமிழகம் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.

சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் கேட்டு மறுக்கப்பட்ட மாநில சுயாட்சியை விட, வளர்ச்சியடைந்த நிலையில் இன்று மைய அரசில் தமிழகத்தின் முக்கியமான பங்களிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, இன்று மைய அரசின் கூட்டாட்சி நிலையில் வெளிப்பட்டுள்ளது. "தமிழன்" என்று நாம் தொடர்ந்து பராமரித்து வந்த அடையாளமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். தமிழன் என்று நாம் பராமரித்து வந்த அடையாளத்தின் இந்த தாக்கம் தான் இந்திய தேசியத்தில் தமிழகத்திற்கு கணிசமான பங்களிப்பை ஏற்படுத்தி, இன்று இந்தியாவின் ஒரு முக்கியமான பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறது. இந்தியா என்றில்லாமல், ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பிராந்தியங்களில் தமிழகம் முன்னிலை அடைந்திருக்கிறது.

இவ்வாறான சூழலில், தமிழகத்தில் பிரிவினை என்பது எந்தளவுக்கு அர்த்தமற்ற விவாதம் என்பது நமக்கு தெரியும். இந் நிலையில், ஈழம் பற்றிய விவாதக் களம் அமையும் பொழுதெல்லாம், தமிழகத்தில் பிரிவினையை நுழைப்பது சிலரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இவர்கள் இந்திய தேசியத்தைப் பேசுபவர்கள் என்பதை விட தமிழீழத்தை எதிர்ப்பதற்கு இந்திய தேசியத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் உணமையான நிலை.

தமிழீழம், இன்று தமிழகத்தில் இருப்பவர்களின் ஆதரவு/எதிர்ப்பு நிலையைச் சார்ந்து இல்லை. தமிழீழம் குறித்த ஆதரவு/எதிர்ப்பு நிலை சர்வதேச தளத்திற்குச் சென்று விட்டது. எதிர்கால உலகப் பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்த பார்வையில் இவை அலசப்படுகின்றன. இத்தகைய நிலையில் தங்களின் உத்திகளை புலிகள் எப்படி அமைக்கிறார்களோ, சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றுகிறார்களோ, அதைப் பொறுத்தே தமிழீழம் அமைவதோ, ஒன்றுபட்ட இலங்கை அமைவதோ இருக்க முடியும்.

இந்தியாவின் Strategic நடவடிக்கைகள் கூட அவ்வாறே இருப்பதாக நான் கருதுகிறேன். அதனுடைய சில அறிகுறிகள் தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. நேற்று வெளியான இந்திய அமெரிக்க அணுத்துறை ஒத்துழைப்பிற்கான அமெரிக்க செனட்டின் ஆதரவு கூட எதிர்கால பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்து கட்டியம் கூறுகின்றன. இந்தியா எதிர்கால பொருளாதார வல்லரசாகும் சூழலில், இந்தியாவை தன் பக்கம் வைத்துக் கொள்ள அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவுடன் நெருங்குவதன் மூலம் எதிர்காலத்தில் எழக்கூடிய சீனாவின் சவாலை சமாளிக்க இந்தியா நினைக்கிறது. இந் நிலையில் தான் தனது கடந்த கால வெளியுறவு கொள்கைகளில் நிறைய மாற்றங்களை இந்தியா தற்பொழுது கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் Strategic உத்திகள் dynamicக, யதார்த்தங்களைச் சார்ந்து தான் இருக்குமே தவிர, உணர்ச்சிப் பூர்வமாக என்றுமே இருந்ததில்லை.

சில ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களின் "வெறித்தனமான" அபிமானங்களோ, "சில" குழுக்களின் உணர்ச்சி மிகுந்த கூக்குரல்களோ இந்தியாவின் கொள்கைகளை வகுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இந்தியாவை முன்னிலைப்படுத்தி ஈழம் குறித்து Pack செய்யப்படும் என்னுடைய பதிவுகளின் நோக்கங்களும், இந்தியாவின் நோக்கங்களைச் சார்ந்து தான் வெளிப்பட்டுகொண்டிருக்கிறது.

http://thamizhsasi.blogspot.com/2006/06/bl...og-post_30.html

ம்.. கொலைசெய்தும் கொலைசெய்யாத ஒன்றுக்கு தேவையில்லாமல் வருத்தம் தெரிவிச்சு பிரச்சனையை ராஜதந்திரம் பண்ணியிருக்கு..

நல்லாயிருக்கப்பா.. :P

அதுக்கு பேர் இராஜ தந்திரம் இல்லை... வேண்டுகோள்... இந்த இலவு கூட தெரியாமல் எப்பிடியோ குப்பை கொட்டுறீர்...??? :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஒரு உயிர் தானா உயிர் ?

மூத்த பத்திரிiகாயளரும் சிறந்த பத்திரிகையாளருமான பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள் 13.02.2001 எழுதிய ஆசிரியர் தலையங்கம் தற்காலத் தேவைகருதி பதிவிடுகிறேன்.

smg17xr.th.jpg

smg28sk.th.jpg

smg37oz.th.jpg

smg42le.th.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் உயிர்தான் உயிர் மற்றதெல்லாம் ?

இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது.

இது அவர்கள் நேரம். ஆடட்டும்.

எங்களுக்கும் காலம்வரும்.

நம்பிக்கையோடு இருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:twisted: உந்த மந்திவந்தனன் ஆசியன் திரி(வு)பூனையின் உளவாளி!

mathi@kumar.dk என்பவன் இங்கே "வெப்மாஸ்டர்" ஆக இருகிறானாம் என்று எனக்கு ஒருவர் தெரிவித்திருந்தார்!

உவனுக்கு நான் பதில் கூறவில்லை, மாறாக பத்திரிகையில் சேறுமா தெரிவித்த கருத்துக்கே என் பதில். உந்தப் பிறவிகள் தாங்களும் உணரமாட்டார்கள், மற்றயவரையும் கேலிக்காக்குவார்கள்.

வெறுப்புடன் அல்லிகா

:twisted: உந்த மந்திவந்தனன் ஆசியன் திரி(வு)பூனையின் உளவாளி!

mathi@kumar.dk என்பவன் இங்கே "வெப்மாஸ்டர்" ஆக இருகிறானாம் என்று எனக்கு ஒருவர் தெரிவித்திருந்தார்!

உவனுக்கு நான் பதில் கூறவில்லை, மாறாக பத்திரிகையில் சேறுமா தெரிவித்த கருத்துக்கே என் பதில். உந்தப் பிறவிகள் தாங்களும் உணரமாட்டார்கள், மற்றயவரையும் கேலிக்காக்குவார்கள்.

வெறுப்புடன் அல்லிகா

அப்பஉது டென்மார்க் துரையின்ரை கோஸ்டி. அவற்றை கதையிலேயே விளங்குது. கொஞ்ச நாளா நிகழ்சிகள் அது இது என்று அலைஞ்சவையள் ஆக்கள் தேறேல்ல போல அது தான். இஞ்ச வந்து குலைக்கீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலையும் பாலசிங்கத்தின் பேட்டியும்

விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் கடந்தவாரம் இந்தியத் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 15 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தெரிவித்த கருத்து இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் மாத்திரமல்ல, பிரதான சர்வதேச ஊடகங்களிலும் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இரு நாடுகளினதும் பிரதான பத்திரிகைகள் சகலதுமே அவரின் கருத்துக் குறித்து அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்ப ஆசிரிய தலையங்கங்களைத் தீட்டியிருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் அக்கருத்து பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கலாநிதி பாலசிங்கம் லண்டனில் வைத்து இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிச் சேவைக்கு அளித்த பேட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது. 1991 மே 21 இல் சென்னைக்கு சமீபமாகவுள்ள ஷ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், `அது ஒரு மிகப்பாரிய - வரலாற்று முக்கியத்துவ அனர்த்தம். நாம் அதற்காக மிகவும் வருந்துகின்றோம். கடந்த காலத்தைப் புறந்தள்ளி வைத்துவிட்டு இந்திய அரசாங்கமும் மக்களும் பெருமனதுடன் இலங்கை இனநெருக்கடியை வித்தியாசமான நோக்குடன் அணுக வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த காலத்தைப் போன்று கசப்பான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதிமொழியை விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு வழங்க முடியுமா என்று கலாநிதி பாலசிங்கத்திடம் கேட்கப்பட்டபோது, `எந்தவொரு சூழ்நிலையின் கீழும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் செயற்படமாட்டோம் என்ற உறுதிமொழியை இந்தியாவுக்கு தெரிவித்திருக்கின்றோம். ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் இலங்கைப் பிரச்சினையில் பற்று அறுந்த அணுகுமுறையையே இந்தியா கடைப்பிடித்து வருகிறது. சமாதான முயற்சிகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்' என்று பதிலளித்திருக்கிறார்.

கலாநிதி பாலசிங்கம் அளித்த பேட்டியை நாமெவரும் முழுமையாகப் பார்க்கவில்லை. அது முழுமையாக இன்னும் ஒளிபரப்பப்படவுமில்லை என்றே அறிய முடிகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட பேட்டியின் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து ஊடகங்களில் வெளியான செய்திகளையே நாம் அறிந்திருக்கிறோம். முன்னாள் இந்தியப் பிரதமரைக் கொலை செய்தமைக்காக விடுதலை புலிகள் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பதாகவே பெரும்பாலான ஊடகங்கள் கலாநிதி பாலசிங்கத்தின் பேட்டியை அர்த்தப்படுத்திக் கொண்டன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்பதை அவர்களின் அரசியல் ஆலோசகர் ஒத்துக் கொண்டிருப்பதாகவோ, அக் கொலைக்காக இந்தியாவிடம் மன்னிப்புக் கோருவதாகவோ கருதக் கூடியதாக கலாநிதி பாலசிங்கத்தின் வார்த்தைப் பிரயோகங்களில் இருந்து உறுதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது, `கலாநிதி பாலசிங்கத்தின் கூற்று குழப்பமானதாகவும் எதுவுமே தெளிவற்றதாகவும் இருக்கிறது' என்று பதிலளித்திருப்பதை இக்கட்டத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால், பேட்டி ஒளிபரப்பான மறுநாளே இந்திய வெளியுறவு இணையமைச்சர் ஆனந்த் சர்மா `ராஜீவ்காந்தி கொலையை இந்திய அரசாங்கம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை. இந்திய மக்களும் அக்கொலையை ஒரு போதும் மறந்து விடப் போவதில்லை' என்று அதே தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். விடுதலை புலிகளை ஒரு போதும் மன்னிக்கக் கூடாது என்று வலியுறுத்தியே இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளும் இந்தியாவின் பிரதான பத்திரிகைகளும் கருத்து வெளி யிட்டன. கருத்துகளைத் தான்தோன்றித்தனமாக வெளியிடுவதில் பெயரெடுத்த அரசியல்வாதிகளும் அவ்வாறே பேசினார்கள். ஆனால், கலாநிதி பாலசிங்கத்தை பேட்டிகண்ட இந்தியச் செய்தியாளர் தற்போதைய சூழ்நிலையில் எதற்காக முன்னாள் பிரதமரின் கொலை தொடர்பில் கேள்வியை எழுப்புவதில் அக்கறை காட்டினார் என்பதும் அக்கேள்விக்கு விடுதலை புலிகளின் ஆலோசகர் அளித்த பதிலுக்கு ஊடகங்கள் எதற்காக அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில் அக்கறை காட்டின என்பதும் இங்கு ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்பது எமது அபிப்பிராயம்.

உண்மையிலேயே, ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் விடுதலை புலிகள் தரப்பினால் வருத்தம் தெரிவிக்கப்பட்டிருப்பது இது தான் முதற்தடவையல்ல. இலங்கை அரசாங்கத்துடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்துகொண்ட பின்னர் 2002 ஏப்ரல் 10 இல் வன்னியில் நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ராஜீவ் காந்தி கொலை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், `அது ஒரு துன்பியல் நிகழ்வு' என்று தெரிவித்திருந்தார். கலாநிதி பாலசிங்கமும் பிரபாகரனின் அந்தப் பதிலின் தொனியிலேயே தொலைக்காட்சிப் பேட்டியில் இப்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான எந்தவொரு முயற்சியுமே இந்தியாவின் ஆதரவும் பங்கேற்பும் இன்றி பயனளிப்பதென்பது அறவே சாத்தியமில்லை என்று முழு உலகமுமே நம்புகின்ற நிலையில், சமாதான முயற்சிகளில் இந்தியாவின் தீவிர பங்கேற்பை நாடி விடுதலை புலிகளின் சார்பில் கலாநிதி பாலசிங்கம் கருத்துத் தெரிவித்திருப்பதில் தவறேதும் இருக்கமுடியாது. முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அவர் இந்தியா தொடர்பில் இத்தகைய கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை தமிழ் மக்களும் இனநெருக்கடிக்கு இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு மாத்திரமல்ல, தங்களுக்கு நேருகின்ற தற்போதைய அவலங்களுக்கு முடிவைக் காணவும் இந்தியாவின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாடி நிற்கிறார்கள். இலங்கையில் மீண்டும் போரையொத்த சூழ்நிலை தோன்றியிருக்கும் இவ் வேளையில், ஒரு தசாப்தத்துக்கும் கூடுதலான காலமாக இலங்கை நெருக்கடியில் தூரவிலகி நிற்கும் இந்தியா மீண்டும் அக்கறையைக் காண்பிக்க நிர்ப்பந்திக்கக் கூடியதாக தமிழ் நாட்டு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் தோன்றிவரும் உணர்வலைகளைத் திசை திருப்பி விடுவதற்கு ராஜீவ் காந்தி கொலை தொடர்பான கலாநிதி பாலசிங்கத்தின் கருத்தை இரு நாடுகளிலுமுள்ள சில சக்திகள் தாராளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனவா என்பதே எமக்குத் தோன்றும் வலுவான சந்தேகம்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்பத்திரிகையில் இருந்து

பிரபாகரனின் அனுமதியின்றி இந்தியாவிடம் மன்னிப்பு கோரினார் பாலசிங்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வாங்க அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமலே புலிகள் அமைப்பின் நியாயவாதி அல்லது பிரதம பேச்சாளராகிய அன்ரன் பாலசிங்கம் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது சம்பந்தமாக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் எனவும் இதனால் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்குமிடையே பாரதூரமான மோதல் நிலை உருவாகியுள்ளதாகவும் வடக்கிலிருந்து கிடைக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து பிரபாகரன் கடுமையான கோபத்துக்குள்ளாகியதாகவும் அவர் தனது செய்மதித் தொடர்பு மூலம் இயங்கும் தொலைபேசி மூலமாக லண்டனிலிருக்கும் அன்ரன் பாலசிங்கத்துடன் அவரசமாகத் தொடர்பு கொண்டு அவசியமில்லாத நேரத்தில் அவசியமில்லாத பிரச்சினைகளை உருவாக்குவதாக கடுமையாகப் பேசி பாலசிங்கத்தின் மீது குற்றம் சுமத்தியதாகவும் குறித்த வடபகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மேற்படி குற்றச்சாட்டுக்கு பாலசிங்கம் பதிலளித்திருப்பதாகவும் அப்பதிலில் அவர் தெரிவித்திருப்பதற்கேற்ப, இந்தியாவின் என்.டி.ரீ.வி. தொலைக்காட்சி சேவையின் ஜேர்மன் நாட்டு பெண் அறிவிப்பாளர் ஒருவரே தன்னுடன் குறித்த செவ்வியை நடத்தியதாகவும் அதன் பின்னர் அச்செவ்வி பற்றி தொகுப்புரையை மேற்படி பெண் அறிவிப்பாளர் வெளியிடும் போது அவரின் தேவைக்கேற்ப பேச்சுவார்த்தை விடயங்களைத் திரித்துக் கூறியிருப்பதாகவும் பாலசிங்கம் பிரபாகரனுக்கு அறிவித்துள்ளார் எனவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் பாலசிங்கத்துக்கு பிரபாகரன் அளித்த பதிலில் பாலசிங்கம் அவர்மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துவிட்டார் எனக் கூறியிருப்பதாகவும் மேலும் இது சம்பந்தமாக பாலசிங்கத்திடம் பிரபாகரன் சில முக்கிய விடயங்களைத் தெளிவாகத் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. பிரபாகரன் இவ்வாறு கூறியிருப்பதற்கேற்ப முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது அந்த காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மேற்படி இந்திய தொலைக்காட்சி சேவை தான் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்திருக்கும் விடயத்திலேயே பெரும் பிரச்சினை எழுந்திருப்பதாகவும் அந்தத் தகவலை தான் மறுப்பதாகவும் பிரபாகரன் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விடயத்தில் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்கும் இடையே பாரதூரமான கருத்துமோதல் நிலை உருவாகியுள்ள போதும் இறுதியில் இவ்விடயம் பற்றி புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரர் "ஹிந்து" பத்திரிகைக்குத் தெரிவிக்கையில், மேற்படி மன்னிப்புக் கோரல் விடயம்பற்றி புலிகள் இயக்கத் தலைவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்றும் மட்டுமே கூறியுள்ளார். -லங்காதீப 02.07.2006-

http://www.thinakkural.com/news/2006/7/4/s...ws_page5669.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.