Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு என்றொரு நாடு இது வரையில் எங்குமே இல்லை : கெஹெலிய

Featured Replies

தமிழர்களுக்கு என்றொரு நாடு இது வரையில் எங்குமே இல்லை : கெஹெலிய

 By   V.Priyatharshan

2013-02-28 20:10:46

உலகத்தில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கென்றொரு சொந்த நாடு இல்லையென ஊடகத்துறை அமைச்சரும்
அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு சொந்த நாடு
இல்லை. அதனை பெற்றுக் கொள்ளவே பிரபாகரன் போன்றவர்களை பயன்படுத்தி பெற
முயற்சித்தனர். இறுதியில் அது பயனற்றுப் போனது.

இந்நிலையில் தற்போது பிரபாகரனின் செயற்பாட்டையொத்த நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு சம்பந்தன்
செயற்படுகின்றார். அந்த வகையில் உலகத் தமிழர் பேரவையும் ஒன்று.
இதேவேளை, ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதா இல்லையாவென இந்தியா இன்னும்
இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை. இந்தியாவின் நிலைப்பாடுகள் இறுதி
நேரத்திலும் மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடும் தகவல்கள் மற்றும்
அதனுடைய செயற்பாடுகள் அனைத்தும் முற்றிலும் பெய்யானவை என அவர் மேலும்
தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=3251

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
70 மில்லியன் தமிழர்கள் இருப்பதால் தமிழர்கள் நாடு கேட்கவில்லை.எல்லா மக்களைக் போல் அவர்களும் உரிமையுடன் வாழ நினைப்பதில் தவறேதும் இல்லையே.அது தனி நாடாக கூட இருக்கலாம்.

தமிழரின் தாய் நாடு தமிழீழம்.இது வரலாற்று உண்மை.இந்த நாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் ஆழிப் பேரலையாலும் பல்வேறு இனங்களுடைய படை எடுப்புகளினாலும் நிர்மூலமக்கப்பட்டது .இதுவே உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமே அடிக்கடி பிரபாகரன் பயங்கரவாதியே அல்ல.. தமிழர்களுக்காக நாடு கேட்டுப் போராடின ஒரு விடுதலைப் போராளின்னு அடிக்கடி உணர்த்தச் செய்கிறது.

 

ஆனால் என்ன சிங்களம் அதைச் சொன்னாலும் நம்ம தமிழ் மாற்றுக் கருத்து.. காட்டிக்கொடுப்புக் கும்பல்களோ அதற்கு தலைகீழாத் தான் சிந்திக்குங்கள்.. செயற்படுங்கள்.

 

தமிழர்களிடம் நாடு இருந்தது.. அது ஒரு காக்கவன்னியனாலும் ஒரு எட்டப்பனாலும் காட்டிக்கொடுக்கப்பட்டு அந்நியரின் ஆயுத பலங்களால் ஆதிக்கத்துக்குள்.. இழக்கப்பட்டது போல.. இப்பவும் உள்ள அந்த காட்டிக்கொடுப்புப் பரம்பரைகளின் எச்சசொச்சங்களால் தொடர்ந்தும் அது காட்டிக்கொடுக்கப்பட்டு உலக ஆதிக்க சக்திகளின் ஆயுத பலத்தின் முன் இழக்கப்பட்டிருக்குது. நிச்சயம்.. வரலாறு திரும்பும். தமிழர்கள் தாம் ஆண்ட மண்ணை திரும்ப ஆள்வார்கள்.

 

அதற்காக சிங்களவர்களின் நாட்டை பறிக்கமாட்டார்கள்.. ஹெகலிய ரம்புக்வல.. நீங்க பயப்பிடாதீங்க..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

சிங்களவர்களுக்கு என ஒரு நாடு உள்ளது, அதை தமிழர்கள் ஏற்கிறார்கள்.

ஆனால், தமிழர்களுக்கு என இருந்த நாட்டையே நாம் இலங்கையில்  கேட்கின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.