Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரணியில் கலந்துகொள்வதற்கு கொழும்பு நோக்கி பயணித்த காணாமற்போனோரின் உறவினர்கள் பொலிசாரால் தடுத்து வைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பேரணியில் கலந்துகொள்வதற்கு கொழும்பு நோக்கி பயணித்த காணாமற்போனோரின் உறவினர்கள் பொலிசாரால் தடுத்து வைப்பு! 
[Tuesday, 2013-03-05 21:35:57]
 
கொழும்பில் புதன் கிழமை நடைபெறவுள்ள காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்குபெறவுள்ளவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து செல்லவிருந்த மக்களை பொலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். நாளை காலை 9 மணிக்கு கொழும்பில் ஒன்று கூடுவதற்காக இவர்கள் யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமட் எண்ணிக்கையிலான குடும்ப உறவினர்கள் கொழும்பு செல்வதற்காக இன்று மாலை வவுனியாவில் வந்து கூடியிருந்தனர். இங்கிருந்து 11 பஸ் வண்டிகளில் அவர்கள் மாலை 6 மணிக்குப் பயணமாக இருந்த வேளை, அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து வவுனியா பொலிசார் அவர்களைத் தடுத்து வைத்திருக்கின்றனர்.
 
11 பஸ் வண்டிகளில் அந்த மக்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்து காணமல்போனவர்கள், போரின் போதும் போதும் காணம் போனோர் என பல்வேறு கால கட்டங்களில் காணமல் போனோரை அவர்களின் உறவினர்கள் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். காணமல்போனோரை கண்டுபிடிக்க பல உதவிகளைச் செய்யப் போவதாக அரசு அவ்வப்போது கூறினாலும், இது குறித்த உண்மையான அக்கரையை அரசு காட்டவில்லை என்று நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

missing_people.jpg

கொழும்பில் இன்று புதன் கிழமை நடைபெறவுள்ள காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்குபெறவுள்ளவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து புறப்பட்ட மக்களை பொலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 
இன்று காலை 9 மணிக்கு கொழும்பில் ஒன்று கூடுவதற்காக இவர்கள் யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமளவு எண்ணிக்கையிலான குடும்ப உறவினர்கள் கொழும்பு செல்வதற்காக நேற்று மாலை வவுனியாவில் வந்து கூடியிருந்தனர்.
 
இங்கிருந்து 11 பஸ் வண்டிகளில் அவர்கள் மாலை 6.00 மணிக்குப் பயணமாக இருந்த வேளை, அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து வவுனியா பொலிசார் அவர்களைத் தடுத்து வைத்திருக்கின்றனர். 11 பஸ் வண்டிகளில் அந்த மக்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
 
பொலீசார் தடுத்து வைத்ததனைத் தொடர்ந்து வீதியில் மெழுவர்த்திகளை ஏந்தி மக்கள் இரவிரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மழைக்கு மத்தியிலும் இந்தப் போராட்டம் தொடர்ந்தது.
 
“எங்களிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்”, “ஏதுமறியா எங்கள் பாலகர்கள் எங்கே?”, “தவறு இருந்தால் நிரூபியுங்கள் இல்லையேல் விடுதலை செய்யுங்கள்” போன்ற கோசங்களை வானதிரக் கத்தியவாறு மழைக்கு மத்தியிலும் – நடுவீதியில் கண்ணீர்மல்க உறவுகளைத் தவறிவிட்டவர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
 
போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்து காணமல்போனவர்கள், போரின் போதும் போதும் காணம் போனோர் என பல்வேறு கால கட்டங்களில் காணமல் போனோரை அவர்களின் உறவினர்கள் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.
 

காணமல்போனோரை கண்டுபிடிக்க பல உதவிகளைச் செய்யப் போவதாக அரசு அவ்வப்போது கூறினாலும், இது குறித்த உண்மையான அக்கறையை அரசு காட்டவில்லை.

http://tamilleader.com/?p=6895

 

Edited by ஊர்பூராயம்

இலங்கையில் தமிழர்கள் இரவில் பயணிக்க முடியாது : கொட்டும் மழையில் வவுனியாவில் மக்கள் தடுத்து வைப்பு



photo%201.JPG



மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இரவில் பயணம் செய்ய முடியாது என நூற்றுக் கணக்கான பொது மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வவுனியாவில் பொலீசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.


வடக்கு - கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி கொழும்பில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் இலங்கை காவல் துறையினரால் அடை மழைக்கு மத்தியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்களை வீதியில் செல்ல அநுமதிக்க முடியாது என வவுனியா பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கிறார்.


வடக்கு -கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வு நாளை காலை 9 மணியளவில் கொழும்பு - விகாரமா தேவி பூங்காவில் நடாத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், கூட்டத்தின் மூடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த பொதுமக்களை தொடர்ந்து பயணிக்க அநுமதிக்க முடியாது எனத் தெரிவித்து - பொலீஸ் ட்ரக் வண்டியை வீதியின் குறுக்கே நிறுத்தி பொலீசார் தடுத்து வைத்துள்ளனர்.


இதனையடுத்து பொலிசாருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியிருக்கின்றது. அந்தப் பகுதியெங்கும் பதற்றம் பரவியிருக்கின்றது.

 



photo%204.JPG



ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காகத் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில் மக்கள் நடு வீதியில் மெழுகுவர்த்திகளை ஏந்திப் போராட்டமொன்றினை நடாத்துகின்றனர்.

வவுனியாவில் இருந்து பயணிக்கும் பொதுமக்கள் மீது  வழியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அதனால் பயணத்தை அநுமதிக்க முடியாது எனவும் வவுனியா மாவட்ட பொலீஸ் நிலையப் பொ றுப்பதிகாரி தெரிவி்த்திருக்கின்றார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=341411878206109136

  • கருத்துக்கள உறவுகள்
மனித உரிமைகள்,ஜனநாயகம் என வாய் கிழிய கத்தும் சர்வதேச நிறுவனங்கள் ஏன் பாராமுகமாக இருக்கின்றன??
 
ஏதோ தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல் யாருக்கு சிங்கள அரசு பம்மாத்து காட்டுகிறது??
 
டக்ளசுக்கு ஒன்றென்றால் பக்கம் பக்கமாக எழுதுபவர்கள் எங்கே போய் விட்டீர்கள்??

எம்மிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்

- மழைக்கு மத்தியில் மெழுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டம்

 

2.JPG

 

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் குழந்தைகளை எங்களிடம் தாருங்கள்" என்று கொட்டும் மழையில் மத்தியில் மெழுகு வர்த்தி ஏந்தி,  நெஞ்சம் கனக்க மக்கள் போராட்டம் ஒன்று வவுனியா நகர சபையின் வாசலில் இடம்பெற்றுக்  கொண்டிருக்கிறது.


வடக்கு -கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வு நாளை காலை 9 மணியளவில் கொழும்பு - விகாரமா தேவி பூங்காவில் நடாத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், கூட்டத்தின் மூடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த பொதுமக்களை தொடர்ந்து பயணிக்க அநுமதிக்க முடியாது எனத் தெரிவித்து - பொலீஸ் ட்ரக் வண்டியை வீதியின் குறுக்கே நிறுத்தி பொலீசார் தடுத்து வைத்ததனைத் தொடர்ந்து வீதியில் மெழுவர்த்திகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

4.JPG

 

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்", "ஏதுமறியா எங்கள் பாலகர்கள் எங்கே?", "கவறு இருந்தால் நிரூபியுங்கள் இல்லையேல் விடுதலை செய்யுங்கள்" போன்ற கோசங்களை வானதிரக் கத்தியவாறு மழைக்கு மத்தியிலும் - நடுவீதியில் கண்ணீர்மல்க உறவுகளைத் தவறிவிட்டவர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=268251878306856735

  • கருத்துக்கள உறவுகள்
காணாமல்போனோர் தொடர்பான போராட்டத்தை வவுனியவில் நடத்த முடிவு: பொலிஸ் தடுத்ததன் விளைவு!

— 

06/03/2013 at 7:02 am

 | no comments

 

Dissapear-300x225.jpgகொழும்பு நோக்கிச் சென்ற மக்கள் வவுனியாவில் தடுக்கப்பட்டதை அடுத்து காணாமல் போன தமிழ் உறவுகளை மீட்டுத்தரக்கோரி கொழும்பில் இன்று காலை நடாத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டத்தை வவுனியாவிலேயே நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

வடக்கு – கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வு  இன்று  காலை 9 மணியளவில் கொழும்பு – விகாரமா தேவி பூங்காவில் நடாத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், கூட்டத்தின் மூடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த நூற்றுக் கணக்கான பொதுமக்களையும், த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும்  நேற்று வவுனியாவில் பொலீசார் தடுத்து வைத்தததைத் தொடர்ந்து வீதியில் மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டம் செய்திருந்தனர்.

மக்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவனும், சிவசக்தி ஆனந்தனும் இரவு முழுவதும் அவ்விடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். தொடர்ந்து பயணிப்பதற்காக காவல் துறையின் பல மட்டங்களிலும் அவர்கள் தொடர்பு கொண்டு பேசிய போதும் – முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தடுத்துவைக்கப்பட்ட பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருந்ததனால், அவர்களை தேவாலயம் ஒன்றில் தங்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பொலீசார் அதனை அநுமதிக்கவில்லை. வாகனத்தில் தொடர்ந்து செல்ல முடியாது என மறுத்து விட்டனர். பலமான வாதாட்டங்களின் பின் ஒரு பஸ் வண்டியில் மட்டும் மக்களை ஏற்றிச் சென்று தேவாலயத்தில் இறக்குவதற்கு அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் குறிப்பிட்ட போராட்டத்தை வவுனியாவில் இன்று காலை வவுனியாவில் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்ின்றன.

http://tamilleader.com/?p=6912

'வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்..

 

எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில்தானா?,

 

அரசே காணாமல் போனது எங்கள் மகள்.. காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறும் அரசே..,

 

வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்தி செல்வதும் அரசாலே..,

 

குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகயை மீண்டும் எங்களிடம் தாருங்கள்,

 

தடுத்து வைத்திருப்போரின பட்டியலை வெளியீடு,

 

எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தாருங்கள்..,

 

தந்துவிடு அரசே தந்துவிடு எங்கள் பிள்ளைகளை தந்துவிடு...

 

இருக்கும் இடத்தை சொல்லிவிடு...

 

இனியும் எங்களை வாழவிடு

 

ன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3346

 

ஏன் தடுத்தோம்; பொலிஸ் விளக்கம்

 

கொழும்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக வவுனியாவிலிருந்து புறப்பட்ட பொதுமக்களின் பஸ்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே அவர்கள் கொழும்பு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

 

 

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட சில பஸ்கள் மீது இனந்தெரியாதோர் சிலர் கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.


அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிருந்தவர்கள் பயணிக்கும் பஸ்கள் மீதும் கல் வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படவிருந்ததாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

 

இந்நிலையில், அம்மக்களின் பாதுகாப்பு கருதியே அவர்களை கொழும்புக்கு செல்லவிடாது பொலிஸார் தடுத்தனர். தவிர, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பது பொலிஸாரின் நோக்கமல்ல என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/60136-2013-03-06-11-43-39.html

வடக்கிற்கு சமாதான பேரணி: ஜனாதிபதியும் பங்கேற்பு

 

தெற்கிலிருந்து வடக்கிற்கான சமாதான பேரணி இன்று ஆரம்பமானது. இந்த சமாதானப்பேரணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்துக்கொண்டார்.

 

 

வெற்றிக்கொண்ட சமாதானத்தை உறுத்திப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இந்த சமாதானப்பேரணி கதிர்காமத்தில் இன்று ஆரம்பமானது.


திபெத் ஆன்மீகத்தலைவர் சாகல்ய கியல்வங்கின் தலைமையில் ஆரம்பமான பேரணிக்கு ஜனாதிபதி செயலகம், இலங்கை இளைஞர் சமுதாய சம்மேளம், இளைஞர்களுக்கான நாளை மற்றும் ஊவா மாகாண சபை இதற்கு ஆதர்வு நல்கியுள்ளது.

 

இந்த பேரணியில் ஊவா மாகாண முதலமைச்சர்  சஷீந்திர ராஜபக்ஷவும் இணைந்துக்கொண்டார்.


அத்துடன் இந்தியா,நேபாளம்,இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச்சேர்ந்த மதத்தலைவர்களும் இந்த பேரணியில் இணைந்துகொண்டதுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தைச்சேர்ந்த 1500 இளைஞர் யுவதிகளும் இணைந்துக்கொண்டனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/60111-2013-03-06-07-43-23.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://srilanka.usembassy.gov/pr-6march2013.html

 

 

U.S. Alarmed by Peaceful Protestors’ Detention March 6, 2013

The U.S. Embassy is concerned about reports that hundreds of Sri Lankan family members of the disappeared were blocked in Vavuniya by Sri Lankan authorities while traveling to Colombo.  These family members are calling for information about their missing loved ones.  The Embassy calls upon Sri Lankan authorities to allow free movement of these citizens.  The right to freely express opinions is universal and protected under Sri Lankan and international law.   

The United States is constructively working with international partners to support of these basic freedoms through the United Nations Human Rights Council (UNHRC) resolution in Geneva.  We continue to urge the Government of Sri Lanka to follow through on its own commitments to its people by implementing recommendations made in their Lessons Learnt and Reconciliation Commission (LLRC) Report.  The LLRC recommends thorough investigations into disappearances as well an establishment of a mechanism to address cases of the missing and detained.  Since last year’s UNHRC resolution the United States has grown increasingly concerned by the lack of progress on these issues, as well as backsliding on other important areas of fundamental democratic rights.  All Sri Lankans should enjoy the same rights and live in dignity, sharing a democratic, secure, and prosperous future.

காணாமல் போனோர் குடும்பத்தவர் தமது உறவுகளை தேட முயலாமல் போடப்பட்ட இந்த
மறைமுக தடுப்பு காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அமெரிக்க தூதரக
அதிகாரிகளுக்கு நன்றி.

அமெரிக்காவின் இந்த அறிக்கை அது இலங்கை விடயத்தில் தனது தலையீட்டை அதிகரித்துள்ளதாகவே காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோரின்' உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
 
130306105743_vavuniadisappearedroadblock

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் தங்களது உறவுகளை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரியும், அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரியும், தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வடக்கிலிருந்து வந்த பலரை வவுனியாவில் போலிசார் தடுத்து நிறுத்திய நிலையில், கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

 

ஆனால் அரசுக்கு ஆதரவான மற்றொரு ஆர்ப்பாட்டத்துக்கு பொலிசார் அனுமதி கொடுத்திருந்தனர்.

வவுனியாவில் தடுத்து நிறுததப்பட்டோர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

காணாமல் போயுள்ள தமது பிள்ளைகள், கணவன்மாரை விடுதலை செய்யக் கோரியும், ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்ப்பதற்குமாக நேற்று புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக கொழும்பு செல்ல முயன்றபோது, வவுனியாவில் வைத்து செவ்வாய் இரவு தடுத்து வைக்கப்பட்ட வடபகுதி மக்கள் வவுனியாவில் அமைதிப் பேரணி நடத்தி, ஏ 9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து வவுனியா அரசாங்க அதிகாரிகளிடம் மகஜர் கையளித்துள்ளனர். 

பதினொரு பஸ் வண்டிகளில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட சுமார் 700 பேரைச் செல்லவிடாமல், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வவுனியா பொலிசார் செவ்வாய்க்கிழமை இரவு தடுத்து நிறுத்தினர். பஸ் வண்டிகளில் ஏறி புறப்படுவதற்கு ஆயத்தமாகிய அந்த மக்களை வவுனியா நகரசபைப் பகுதியில் வைத்து பொலிசார் வீதிகளின் முக்கிய சந்திகளில் தமது ட்ரக் வண்டிகளை வீதிக்குக் குறுக்காக நிறுத்தி தடை செய்தனர். சில பஸ் வண்டிகளின் டயர்களுக்கு முன்னால் கூரிய ஆணிகள் அடிக்கப்பட்ட பலகைகளைக் களவாக வைத்து பஸ் வண்டிகள் புறப்பட முடியாதவாறு தடுத்திருந்தனர். அத்துடன் பஸ் வண்டிகளின் சாரதிகள், நடத்துனர்களை மிரட்டி அச்சுறுத்தி மக்களை ஏற்றிச்செல்லாதவாறு தடையேற்படுத்தியிருந்தனர். 

இதனால் ஆத்திரமுற்ற மக்கள் பொலிசாருக்கு எதிராக வெகுண்டெழுந்து கூச்சலிட்டு கூக்குரல் எழுப்பினர் சிலர் தமது பிரயாணத்தைத் தடை செய்த பொலிசாருக்கு சாபமிட்டு அழுது அரற்றினர். சிலர் தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி மெழுகு திரிகளை ஏற்றி போராட்டம் நடத்தினர். நள்ளிரவு வரையிலும் சிலர் அழுது அரற்றி கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டமைக்காகத் துயருற்றிருந்தனர். இவர்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சரவணபவன் ஆகியோரும் நகரசபையிலேயே இரவைக் கழித்தனர். அவர்களுடன் இந்தப் பயண ஏற்பாட்டாளர்களும் தங்கியிருந்தனர். 

இந்த மக்கள் கொழும்பு செல்வது பாதுகாப்பற்றது என்றும், அது குறித்து தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், வவுனியா எல்லைக்கு அப்பால் அவர்களுக்குத் தம்மால் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும், எனவே அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதனால் இரவில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் புதன்கிழமை காலையில் பயணத்தை மேற்கொள்ளலாம் என பொலிசார் தெரிவித்திருந்தனர். 

ஆயினும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பஸ் வண்டிகளின் சாரதிகளை தொலைபேசி மூலமாகவும் தனித்தனியாகவும் நேரடியாகத் தொடர்பு கொண்ட பொலிசார் அங்கிருந்து பஸ் வண்டிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் திரும்பி வரக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அவர்களது வழிப்பாதை அனுமதி ரத்துச் செய்யப்படும் என்று பல வழிகளில் அவர்களை அச்சுறுத்தி பஸ் வண்டிகளை வவுனியா நகரசபை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியிருந்தனர்.

இதனால், இரவு முழுவதும் வவுனியா நகரசபை பகுதியில் தங்கியிருந்த மக்கள் பொலிசார் ஏற்கனவே உறுதியளித்திருந்தவாறு, அதிகாலையில் கொழும்பு நோக்கிப் புறப்படுவதற்கு எந்தவிதமான வாகனங்களும் இன்றி தடுக்கப்பட்டிருந்தனர். காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள் கொழும்பு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த காணாமல் வடக்கு கிழக்கு காணாமல் போன உறவுகளைத் தேடும் சங்கங்களின் ஒன்றியத்தினர் வவுனியா நகரசபைப் பகுதியில் இரவு தங்குவதற்கு அனைவருக்கும் வசதியில்லாத காரணத்தினால் சிலரை இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டிகளை ஓமந்தை சோதனைச்சாவடியில் தாமதப்படுத்திய படையினர், அவற்றை ஒவ்வொன்றாக தாமதித்துச் செல்லும் வகையில் அனுப்பி வைத்தனர். இந்த பஸ் வண்டிகள் வவுனியா நகர சபை அமைந்துள்ள ஏ9 வீதிவழியாகப் பிரயாணம் செய்யவிடாமல் தடுத்து மாற்று வழியின் ஊடாக அனுப்பி வைத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை காலையிலும் கொழும்பு செல்வதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் நகரசபை மைதானத்தில் கூட்டம் நடைபெற்றது. மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்திரு ஜெபமால அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், சரவணபவன் ஆகியோர் பொலிசாரின் நடவடிக்கையைக் கண்டித்து உரையாற்றினர் அத்துடன் காணாமல் போனவர்களின் கோரிக்கைகள் நான்கு வருடங்களுக்கு மேலாக அரசினால் உதாசீனம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இந்தப் பிரச்சி;னைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதேநேரம் ஜனநாயக ரீதியில் மக்கள் போராட்டம் நடத்துவதைத் தடுத்து நிறுத்தியிருந்த அரசின் நடவடிக்கை குறித்து ஐநாமனித உரிமைகள் பேரவைக்கு எட்டச் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூக முக்கியஸ்தர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உரையாற்றினர்.

பேரணி

இதனையடுத்து பொலிசாரின் அனுமதியுடன் வவுனியா நகரசபை மைதானத்தில் இருந்து ஏ9 வீதிவழியாக வவுனியா செயலகம் வரையில் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி நீதிமன்ற வளாகத்தைக் கடந்ததும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். கச்சேரி வாயிலைச் சென்றடைந்து வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. கச்சேரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்களைச் செல்லவிடாமல் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜரை அரசாங்க அதிபர் செலயக முன்வாயிலில் வந்து பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கோரினர். எனினும் அரசாங்க அதிபர் தமது ஆசனத்தில் இருந்து வெளியில் வரமுடியாது என்றும் பிரதிநிதிகள் ஐந்து பேர் மகஜரைக் கொண்டு வந்து தந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். 

இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள் கச்சேரிக்கு எதிரில் ஏ9 வீதியில் அமர்ந்து போக்குவரத்தக்களைத் தடைசெய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிகாரிகள் வெளியில் வந்து மகஜரைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பலத்த கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். கச்சேரியின் முன் வாயிலில் காவலுக்கு நின்றிருந்த பொலிசாரும் சிறிது நேரத்தின் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

மகஜர்

இதனையடுத்து மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்திரு ஜெபமாலை அடிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் சமாதான நீதவான் லெம்பட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வவனியா அரசாங்க அதிபரை அவரது அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்து மக்களின் நிலைமைகளை எடுத்துக் கூறி அரச அதிபர் வந்து மகஜரைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதைடுத்து மேலதிக அரசாங்க அதிபர் செயலக முன்வாயிலில் வந்து முக்கியஸ்தர்களிடம் இருந்து பொதுமக்களின் முன்னிலையில், வாயில் கதவு அரைவாசி திறக்கப்பட்ட நிலையில் மகஜரைப் பெற்றுக்கொண்டார். இந்த மகஜர் உரியவர்களுக்கு உடன் அனுப்பி வைக்கப்படும் என்று அவர் பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் சார்பில் உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

மகஜர் கையளிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் காணாமல் போனவர்களைத் தேடும் அமைப்பின் தலைவர் பிரிட்டோ உரையாற்றினார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதில் அசமந்தப் போக்கைக் காட்டி வருகின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்த அவர் செவ்வாய்க்கிழமை சம்பவம் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐநாவின் மனித உரிமைகள் பேரவை அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் தீர்வு கிட்டும் வரையில் வடக்கு மக்களுடன் தென்பகுதி மக்களும் இணைந்து போராட்டத்தில் ஒத்துழைப்பார்கள் என்றும் உறுதியளித்தார். 

செவ்வாய்க்கிழமை இரவு இந்த மக்களைக் கொழும்புக்குச் செல்லவிடாமல் பல்வேறு மறைமுக வழிகளில் முட்டுக்கட்டைகளைப் போட்டு மக்களின் சீற்றத்தையும் வெறுப்பையும் சம்பாதித்திருந்த பொலிசார் புதன்கிழமை காலை அவர்கள் பேரணி நடத்துவதற்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தனர். அத்துடன் அந்த மக்கள் கடும் சீற்றம் கொண்டு கோஷங்களை எழுப்பி ஆக்ரோஷத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் அமைதி காத்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130306_lankadisappearedrally.shtml

"கடத்தப்பட்ட எனது மகன் உயிருடன் இருக்கிறான்! மீட்டுத் தாருங்கள்! பேரணியில் கலந்துகொண்ட தாயின் புலம்பல்"

பூசா முகாமிலிருந்தும் வவுனியா முகாமிலிருந்தும் எனது பிள்ளை இருப்பதாக கடிதம் வந்தது. விசாரணைகள் முடிந்து விட்டன. ஆனால் 5 வருடமாகி விட்ட நிலையிலும் இதுவரை எனது பிள்ளையை காட்டவில்லை.


ஆனால் எனது பிள்ளை உயிருடன் இருக்கின்றது. எனது பிள்ளையை மீட்டுத் தாருங்கள்' என கடத்தப்பட்ட மகனின் தாயொருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

525461_346879502082635_428599076_n.jpg

தங்களுடைய கோரிக்கை அடங்கிய மகஜரை அரச அதிபர் வெளியே வந்து பெற்றுக் கொள்ளும் வரை தாம் இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறி ஏ 9 வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடைய எதிர்ப்பிற்குப் பணிந்து வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் மகஜரைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரி கொழும்பில் நடைபெற இருந்த போராட்டதில் கலந்து கொள்ளச் சென்ற மக்களை வவுனியாவில் வைத்து பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
 
போராட்டமும் வவுனியா நகர சபை மைதானத்தில் நடாத்தப்பட்டு மாவட்ட செயலகத்திற்கு மகஜர் கையளிக்க செல்லும் போது உள்ளே செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை. அதனால் வெளியே வந்து மகஜரைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொண்டும் அரச அதிபர் வர மறுத்துவிட்டார்.  அதற்கமைய யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாத மக்கள் மகஜரைக் பெற்றுக் கொள்ளும்வரை தாம் இடத்தை விட்டு நகர மாட்டோம் என வீதிகளில் அமர்ந்து தமது போராட்டத்தினை முன்னெடுத்தமையால் ஏ 9 வீதி முற்றாக தடைப்பட்டது.
 
இறுதியாக மக்களது கோரிக்கைக்கு அடிபணிந்த மாவட்ட செயலகம் மேலதிக அரச அதிபரை அனுப்பியது.அதற்கமைய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் , சிவசக்தி ஆனந்தன், விநோதரலிங்கம் ஆகியோருடனும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடனும் பேச்சுவார்ததையினை நடத்தியதுடன் மகஜரையும் பெற்றுக் கொண்டார்.  
SAM_9009-1024x768.jpgSAM_8997-1024x768.jpgSAM_8989-1024x768.jpg

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்த அமெரிக்கா இந்தச் சின்ன விடயத்திற்கே(அதனுடன் ஒப்பிடும் பொழது)கண்டனம் தெரிவித்திருப்பது அமெரிக்கா சிறிலங்காவை வெகு உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது என்றே பொருள் கொள்ள வேண்டும்.புலம் பெயரந்த தமிழர்களும் தமிழக உறவுகளும் இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி காரியத்தைச் சாதிக்க முயற்சிக்க வேண்டும்.

599015_420211141401981_1502593760_n.jpg



அப்பா (அம்மா) எங்கே? துணைவன் (துணைவி) எங்கே? காதலன் (காதலி) எங்கே? மகன் (ள்) எங்கே? அண்ணா (அக்கா) எங்கே? தம்பி, தங்கை எங்கே?

 

 

கொல்லப்படுவதிலும் கொடுமையானது... “காணாமற்போதல்“ தரும் வலி. பாதிக்கப்பட்டவா்கள் குடும்பத்தினரை அணு அணுவாய்க் கொன்று “வாழ்க்கை” என்ற ஒன்றை அவா்கள் “வாழாமலேயே“, இரவும் பொழுதும் ஏக்கத்துடனேயே முடித்துவிடும் இந்த “கைது செய்யப்பட்டுப் பின் காணாமல்போதல்”. தொடரும் இந்தக் கண்ணீரும் இவா்கள் ஏக்கப் பார்வைகளும் சொல்லும் வேதனை வார்த்தையிலடங்காது. இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார்கள், என்றாவது ஒருநாள் திரும்ப வருவார்கள் என்றே காத்திருக்கும் இவா்கள் வலி.. கொடுமையிலும் கொடுமை.

வவுனியாவில் போராட்டம் செய்த மக்களுக்கு உதவாத உள்ளூராட்சி சபை: அதிருப்தியில் கூட்டமைப்பு பா.உக்கள்!

 

 

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று மக்களுக்கு உதவாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீது ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்களும் வவுனியா மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 
கடந்த 6ம் திகதி கொழும்பில் நடைபெற்ற காணாமல் போன உறவுகளின் ஆர்ப்பாட்டத்திற்கு என வவுனியாவுக்கு வருகை தந்த 800க்கு மேற்பட்ட மக்களை கொழும்பு செல்லவிடாது பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
 
இதனால் 05ம் திகதி மதியம் தொடக்கம் வருகை தந்த மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் 06ம்திகதி மதியம் வரை வவுனியா நகரசபை மைதானத்திலேயே தங்கினர்.
 
மலசலகூடத்திற்கு நீர் இன்றி மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கியபோதும் அது தொடர்பாக தெரிந்தும் வவுனியா நகர சபையால் நீரை விநியோகிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் 5 கிலோமீற்றர் தொலைவில் இருந்த வவுனியா தமிழ் பிரதேச சபையிடம் இருந்தே நீரை பெற வேண்டி ஏற்பட்டது.
 
பம்பைமடுப் பிரதேசத்தில் தங்கியிருந்த மக்களை ஏற்றுவதற்கு நகர சபையிடம் வாகனம் கேட்கப்பட்டபோதும் அவர்கள் மாறிமாறி இழுத்தடிப்புக்களை செய்தனர்.  மக்களை அவசரமாக ஒன்றினைக்க வேண்டி ஏற்பட்டதனால் வாகனத்தை நகரசபையிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வன்னிமாவட்ட பாராழுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் ஆகியோர் வவுனியா நகர சபைத் தலைவர் ஜ.கனகையாவிடமும் நகரசபை செயலாளரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமுறை கேட்டும் இழுத்தடிப்பு செய்து இறுதியில் வாகனத்தை பயன்படுத்துவதற்கான பணத்தினை செலுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சென்ற போதே இரண்டு மணித்தியாலங்கள் கழித்து வாகனம் வழங்கப்பட்டது.
 
இதேவேளை மக்கள் தங்குவதற்கு உரிய முறையில் மண்டபம் உள்ளிட்ட எந்தவொரு ஒழுங்கையும் செய்வதற்கு வவுனியா நகர சபை உறுப்பினர்கள் தயக்கம் காட்டியமை உறவுகளை இழந்து துன்பத்தில் இருந்த மக்களுக்கு மேலும் துன்பத்தை தந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
இதேவேளை பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாது இரவு பகலாக இருந்த மக்களை வவுனியா நகர சபையைச் சேர்ந்த தலைவர், உபதலைவர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் வந்து பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நகரசபையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் அவ்வப்போது தலையை காட்டி விட்டு மாயமாகியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
நகரசபைத் தலைவர் நகருக்கு வந்து சென்றபோதும் சம்பவ இடமாகிய தனது அலுவலகத்துக்கு வரவில்லை. இதேபோன்று உபதலைவர் சம்பவ தினத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்துக்கொண்டு இருந்தார் என நேரில் கண்ட மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா பிரதேசபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட இதேநிலை தான் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச சபையைச் சேர்ந்த இருவர் அவ்வப்போது மதுபோதையில் வந்து  சென்றனர்.
 
பாராழுமன்ற உறுப்பினர்களது கருத்துக்களையும் கேட்காது தமது சபை மைதானத்தில் தங்கியிருந்த மக்கள் தொடர்பாக கவனம் செலுத்தாமை என்பன தொடர்பாகவும் அவர்களது அசமந்த போக்கு தொடர்பாகவும் வவுனியா உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மீது ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராழுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, காணாமல் போனஉறவுகளின் குடும்பங்களும் உறவினர்களும் வவுனியாவுக்கு வருகை தருவதால் அவர்கள் தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் இதனால் எல்லா உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு தான் தொலைபேசியில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியதாக தெரிவித்ததுடன், இந்த மாத இறுதிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள உள்ளுராட்சி சபைகளை கண்காணிப்பதற்கு ஒரு குழுவை அமைக்கவுள்ளதாகவும் அதன் மூலம் சிலர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.