Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடுப்படிக்கிறாங்கையா......... கடுப்படிக்கிறாங்கையா ............................. :icon_mrgreen:

 

ஒரு குளத்தில இருபது எறும்புங்க குளிச்சிட்டு இருந்தது. அப்போ அங்கே ஒரு யானை வந்தது. (எறும்புன்னதும் யானை அங்கே வந்தாகணுமே!) 
யானை குளத்தில டைவ் அடிக்குது. ( இது கதை. யானை கூட டைவ் அடிக்கும். கண்டுக்கப்படாது!) 
உடனே பத்தொன்பது எறும்பு கரையில விழுந்தது. ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மேல விழுந்தது. ( அது எப்படின்னு கேட்கப்படாது)
அதைப்பார்த்த ஒரு எறும்பு கரையில இருந்து சொன்னது: "அவனை அப்படியே தண்ணியிலே போட்டு அமுக்கு மாப்பிளே!!" 
( கான்பிடன்ஸ் மச்சி... கான்பிடன்ஸ்!!) :lol: :lol: :lol: .
 
 
ஆட்டலில் நல்லாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்

ஓட்டலில் ஆட்டப் படும்.

 
இன்பத்துள் இன்பம் சொறியின்பம் அவ்வின்பம்

சொரிந்தபின் துன்பம் தரும்.

 
எல்லா விளக்கும் விளக்கல்ல எரியாத

Municipality விளக்கே விளக்கு.

 
போடுக தண்ணி போடுக போட்டபின்

ஆடுக அதற்கு தக.

 
:lol: :lol: :D :D 

 

 

 

பொழுது போகவில்லை என்பதற்காக இப்படியா ?????? :huh: :huh: :huh: :huh:

 

ஆட்டலில் நல்லாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்
ஓட்டலில் ஆட்டப் படும்.
 
பொருள்? :unsure: 

 

ஐயோ! எங்க போய் முட்டுறது. :( :( :(

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம் பற்றிய செய்திகளை இரவு பகல் பாராது யாழின் ஊடக எடுத்து வரும் துளசி, பையன், தமிழரசு அண்ணா , கறுப்பி, ஆகியோருக்கு பட்டி மன்ற ஒழுங்கமைப்பு குழு சார்பில் எமது மனமார்ந்த நன்றிகள்

  • தொடங்கியவர்

ஆட்டலில் நல்லாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்
ஓட்டலில் ஆட்டப் படும்.
 
பொருள்? :unsure: 

 

திணை : அறத்துப்பால்  , அதிகாரம் : இல்லறவியல் ,   இல 234 

 

ஆட்டலில் நல்லாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்
ஓட்டலில் ஆட்டப் படும்.

 

வீட்டில்  மனைவியின் தோசை சாப்பிடுவதற்கு பதிலாக றெஸ்ரோறன்ரில் காசு குடுக்காமல் தோசை சாப்பிட்டு மாவாட்டலே சிறந்தது :lol: :lol: :D :D  .

 

Edited by கோமகன்

ஐயோ! எங்க போய் முட்டுறது. :( :( :(

கேட்ட பொருள் எழுத்திவிட்டு போகிறார் கோ.

இதுகெல்லாம் போய் ஏன் இல்லாத கல்லெல்லாத்திலும் தலையை முட்டி உங்க தலையை நோக வைக்கிறிங்க சுமே அக்கா?

இந்த முறை பொருள் எழுதும் போதுதான் நன்னா இருந்து யோசிச்சுட்டு பதில் எழுதினார். அடுத்த தடவை குறள் எழுத்தும் பொதும் அதை செய்வார். நீங்க இனி தலையை முட்டி மோதவே வேண்டாம். :lol: :lol: :lol:

 

 

திணை : அறத்துப்பால் , அதிகாரம் : இல்லறவியல் , இல 234

ஆட்டலில் நல்லாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்

ஓட்டலில் ஆட்டப் படும்.

வீட்டில் மனைவியின் தோசை சாப்பிடுவதற்கு பதிலாக றெஸ்ரோறன்ரில் காசு குடுக்காமல் தோசை சாப்பிட்டு மாவாட்டலே சிறந்தது :lol: :lol: :D :D .

  • தொடங்கியவர்

பீடியால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

பிறன்டியால் வெந்த வயிறு

 

எப்பொருள் யார்யார் பையில் இருப்பினும்

அப்பொருள் அப்போதே சுடப்படும்

 

************************************

கோ சிந்தனை :

 

இட்டிலி மாவ வச்சி இட்டிலி சுடலாம்

ஆனா கடல மாவ வச்சி கடல சுட முடியுமா?

 

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்!
ஆனா நாம இல்லாம செருப்பு நடக்குமா?
 


:lol: :lol: :D :D .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே யாழ் வாலி அண்ணாவின் அணி சார்பாக யாழ் களத்தின் முது பெரும் உறுப்பினர் நல்ல எழுத்தாளர் சிறந்த நகைச்சுவையாளர் தமிழில் புகுந்து விளையாடக்கூடியவர்.... என்று சொல்லக்கூடிய கலைஞன் அண்ணாவின் வாதம் வருவதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கின்றது..... ஆவலுடன் எதிர் பாருங்கள்.....:D

கரும்பு நன்றாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள், பாராட்டுக்கள். உங்களிடம் கொஞ்சம் கூட ஏதிர்பார்த்தேன்

 

பலக்கொட்டைகள் யாருக்கென்று சொல்லாவிட்டால் நித்திரைவராது அதையும் சொல்லிவிடுங்கள்

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா பார்வையாளர் எல்லோருக்கும் பலாப்பழம் தீத்தி சென்ற கலைஞன் அண்ணாக்கு நன்றி நன்றி......

அடுத்து இசை அண்ணா யாரை களம் இறக்க போகின்றாரோ?

  • தொடங்கியவர்

கடலை போட்டோர் கண்டியே பழுப்பார் ;
கடலை போடாதோர் இருந்தும் பய
ன்இலர்

 

:lol:  :lol:  :D .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் தொல்லை தாங்க முடியவில்லை. ஏதாவது செய்யுங்கோ சுண்டல். :lol:

  • தொடங்கியவர்

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?


ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

 


நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

 

அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

 

 

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான். இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது.... ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?


ஒரு பொண்ணு நினைச்சா, எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!


:lol: :lol:  :D  :D .
 
 

கொடுத்த தலைப்பை விடுத்து, வேதாந்தம் பேசிவிட்டு யாழ்களத்திலுள்ளவர்களைச் சாமியார்களாக மாறும்படி சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார் எதிரணியைச் சேர்ந்த கரும்பு.  :lol:  :lol:  :lol:    தமிழ் நன்றாக எழுதுவார் என்பதற்காகப் பட்டிமன்றம் என்பதற்கு அர்த்தமே தெரியாமல் விவேகானந்தர் ரேஞ்சில் சொற்பொழிவாற்றிவிட்டுப் போய்விட்டார்.  ஆசையைத் துற என்று புத்தன் சொன்னார்.  அதைத்தான் கரும்பு அவர்களும் இச்சொற்nபொழிவில் சொல்லிவிட்டுப் போகிறார்.  கரும்பு தனது சொற்பொழிவின் மூலம் தனது அணியினருக்கு எதிராகவே கருத்துக்களை வைத்திருக்கிறார் என்பது ஆழமாக வாசித்து விளங்கிக் கொள்பவர்களுக்குப் புரியும்.  இரண்டு, மூன்று முறை இவரின் சொற்பொழிவை வாசித்துப் பாருங்கள்.  நான் சொல்ல வருவது விளங்கும்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

செந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்க ளீன்று

திருமாலின் நிறம்போலப் பசியதழை *பொதுளி

நந்தாத நெடுந்தெருப்போற் கிளைகள்பல வோச்சி

நடுக்கட்டி லோரிலவ மரம்வளர்ந்த தன்றே

மஞ்சுதொட வளர்ந்துவந்த விலவமர மதனில்

மரகதமா மணிபோலப் பசுமைநிறம் வாய்ந்த

கொஞ்சுமொழிக் கிஞ்சுகவா யஞ்சுகமொன் றினதே

குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்த தன்றே

அங்கொருநா ளிலவமர மரும்புகட்டக் கண்டே

அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும்

இங்கிதனைக் கவ்வியெடுத் தென்காலே கரமாய்

ஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னெனநினைந்த தன்றே

காலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே

கடவுளடி கைதொழுது கதிரெடுக்கப் போகும்

மாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்து

வாயூறிக் கனியாக வரட்டுமென மகிழும்

எண்ணுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க

இனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே

கண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் நம்பிக்

காத்துவந்த திரவுபகல் காதலித்துக் கிளியே

வறியதொரு மகன் குதிரைப் பந்தயத்திற் காசு

வந்துவிழும் வந்துவிழு மென்று மகிழ்வாக

பிறிதுநினை வொன்றுமின்றி யாசைமிகு கிள்ளைப்

பிள்ளைமகிழ்ந் திருந்ததங்கே பேணியதைப் பார்த்தே

நன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும்

நயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள்

என்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே

எண்ணியிருந் ததுமலடு கறக்கவெண்ணு வார்போல்

பச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது

பைந்தார்ச்செம் பவளவிதழ்ப் பசுங்கிளியும் பார்த்தே

இச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம்

என்வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி

துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து

சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது

பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்

பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே

  • கருத்துக்கள உறவுகள்

What is this mallai annaa huh :D

இங்க நடக்கிறது பட்டி மன்ற போட்டிப்பா..... தேவார போட்டியா மாத்திடாதிங்க.......:D

  • கருத்துக்கள உறவுகள்

மல்லைக்கு ஒருவரையும் திட்ட வழியில்லை. வேறென்ன செய்வது???? :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து இசை அண்ணா அனுப்ப இருப்பது.....கனடாவின் "கும்கி" அர்ஜுன் அண்ணாவா? இல்லை Australia வின் "சிறுத்தை" புங்க்ஸ் அண்ணாவா?

  • கருத்துக்கள உறவுகள்

"என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்.."

"இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?"

"நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!"

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர்.

இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.

முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம்,

அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது.

போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".

'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார்

"என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு

சொன்னேன்....அவ்வளவுதான்"

.இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..

ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது.

அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது.

துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன்,

அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன்,

அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன்,

அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."

:D:(:D:(:D :d :D

இப்பிடி கேட்டா அடிக்காமல் என்ன பண்ணுவாங்களாம்?

அதுவும் முதலாமவர் கேட்டது தான் செம காமடி.....:D

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள பந்தாவுக்கு,நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்......!

நீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார்.

புதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது, ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த சர்தார் இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம்.

ஏன்னா அவன் வீட்டு அட்ர¨¨ மாற்ற வேண்டாம் பாரு..இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது. ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது.

போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல.

கிளைமேட் ரொம்ப மோசமில்கை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்களும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது. நீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா? அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால், அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன்.

சுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது. இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள்.

மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப ககடமாக இருக்கும். உன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெறுமையாக எல்லோரிடமும் சொல்கிறார்.

முக்கியமான செய்தி,

உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை, அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல.

உன் மாமா ஜீதேந்தர் போன வாரம் தவறுதலா விஸ்கி வாட்டுக்குள்(பெரிய பாத்திரம்) விழுந்துவிட்டார். காப்பாற்றப் போன இரு நன்பரையும் போட்டு அடி அடின்னு அடித்துவிட்டு கடைசியில் மூழ்கி செத்து போனார், அவரை எரிச்சப்ப மூன்று நாள் முழுசா எரிஞ்சாராம். வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை.

மற்றவை அடுத்த மடலில்..அன்புடன் உன் அம்மா..

நல்ல செளிச்ச ஊர். அது எந்த பக்கம்மையா? :D

ஏய்யா நீங்களும் போய் அடி வாங்கிட்டு வரவா? :D

  • கருத்துக்கள உறவுகள்

பட்டி மன்றம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று சற்று உணர்ச்சிவசப்பட்டவரா இருந்த மல்லை அண்ணா பட்டி மன்ற மேடையில் ஏறி ......

கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு

என்ற வாறு எதோ பேச வெளிக்கிட.....

சற்று திடுகிட்ட நடுவர்கள் நந்தன் அண்ணாவை அனுப்பி அவரை கீழே கூட்டி போகுமாறு உத்தரவிட .....

மல்லை அண்ணாக்கு அருகில் வந்த நந்தன் அண்ணா

அய்யய்யோ இந்த மாதிரி ராணுவ ரகசியங்களையெல்லாம் uவெளியே சொல்லாதிங்க

என்று அவருடைய காதில் கூறிய வாறு அவரை கீழே அழைத்து செல்லுகின்றார்.......

இப்பொழுது மொத்த மக்களும் இசை அண்ணாவின் அணியில் இருந்து வாதாட வர இருக்கும் அர்ஜுன் அண்ணாவின் வாதத்திற்காக காத்து இருக்கின்றார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

நான் கலைஞனிடம் இன்னும் அதிகமாக எதிர் பார்த்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

புங்க்ஸ் அண்ணா:

ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை.

தும்ஸ்:

அமாவாசை அன்னிக்கு பாத்திருப்பீங்க.

செந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்க ளீன்று

திருமாலின் நிறம்போலப் பசியதழை *பொதுளி

நந்தாத நெடுந்தெருப்போற் கிளைகள்பல வோச்சி

நடுக்கட்டி லோரிலவ மரம்வளர்ந்த தன்றே

மஞ்சுதொட வளர்ந்துவந்த விலவமர மதனில்

மரகதமா மணிபோலப் பசுமைநிறம் வாய்ந்த

கொஞ்சுமொழிக் கிஞ்சுகவா யஞ்சுகமொன் றினதே

குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்த தன்றே

அங்கொருநா ளிலவமர மரும்புகட்டக் கண்டே

அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும்

இங்கிதனைக் கவ்வியெடுத் தென்காலே கரமாய்

ஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னெனநினைந்த தன்றே

காலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே

கடவுளடி கைதொழுது கதிரெடுக்கப் போகும்

மாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்து

வாயூறிக் கனியாக வரட்டுமென மகிழும்

எண்ணுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க

இனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே

கண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் நம்பிக்

காத்துவந்த திரவுபகல் காதலித்துக் கிளியே

வறியதொரு மகன் குதிரைப் பந்தயத்திற் காசு

வந்துவிழும் வந்துவிழு மென்று மகிழ்வாக

பிறிதுநினை வொன்றுமின்றி யாசைமிகு கிள்ளைப்

பிள்ளைமகிழ்ந் திருந்ததங்கே பேணியதைப் பார்த்தே

நன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும்

நயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள்

என்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே

எண்ணியிருந் ததுமலடு கறக்கவெண்ணு வார்போல்

பச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது

பைந்தார்ச்செம் பவளவிதழ்ப் பசுங்கிளியும் பார்த்தே

இச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம்

என்வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி

துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து

சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது

பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்

பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே

 

 

இலவு காத்த கிளிக்கு இத்தனை நடை தேவைதானா?  :lol:  :lol:  :lol:

 

உங்கள் வேதனை புரிகிறது மல்லை.  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டி மன்றம் எனும் பெயரில்
  பைந்தமிழில் பேசிவிட்டால்
கெட்டித்தனம் என நினைத்தார்
  கரு விளங்கா கரும்பு
ஒட்டி யாணம் கட்டும் நங்கை
  குதூகலமாய் கருத்துரைத்தால்
பட்டி மன்றம் ஆகிடுமோ
  பலாப்பழத்தின் பகுப்பாய்வு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.