Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கப் பிரேரணை தொடர்பிலான உபமாநாடு : இந்தியா மௌனம் - மேற்குலகம் விடாப்பிடி - சீனா, றஸ்யா, கியூபா கடும் எதிர்ப்பு !

Featured Replies

அமெரிக்கப் பிரேரணை தொடர்பிலான உபமாநாடு : இந்தியா மௌனம் - மேற்குலகம் விடாப்பிடி - சீனா, றஸ்யா, கியூபா கடும் எதிர்ப்பு !

- சிறிலங்கா எதற்கும் ஒத்துழைக்கவில்லை : அமெரிக்கா

- இன்னும் வலுவான பிரேரணை தேவை : கனடா

- இறுதிவரை மௌனம் காத்த இந்தியா



ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு
வரப்படவுள்ள பிரேரணனையின் இரண்டாம் நகல்வரைவு, உறுப்பு நாடுகளுக்கு
அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக
கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பிலான கருத்தறியும் உப மாநாடொன்று நேற்று வெள்ளிக்கிழமை (08-03-2013) இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும்13-13ம் திகதிகளில் இந்த பிரேரணை இறுதி வரைவினை சபையில் அமெரிக்காஉத்தியோகபூர்வமாக சமர்பிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது.


இந்நிலையில் பிரேரணை இறுதி வரைவினை மேற்கொள்வதற்காக, நாடுகளது கருத்துக்களைஉள்வாங்கும் பொருட்டு நேற்றைய உப மாநாட்டினை அமெரிக்கா ஏற்பாடுசெய்திருந்தது.

இந்த உப மாநாட்டில் பிரேரணை தொடர்பில் மேற்குலக
நாடுகள் இறுக்கமானவும் உறுதியானதுமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்க,சிறிலங்காவின் நேச நாடுகள் சில எதிர்ப்பினைத்
வெளிக்காட்டியிருந்தததாகவும், இந்தியா இறுதிவரை மௌனமாகவே இருந்ததாகவும்தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உபமாநாட்டில்சிறிலங்கா தரப்பும் தன்னுடைய கருத்துக்களை வழங்குவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இடம்பெற்றிருந்த இந்த உப மாநாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜெனீவாப் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் :

அமெரிக்காவின் ஐ.நா மனித உரிமைச் சபைப்பிரதிநிதி Eileen C. Donahoe அவர்கள் இந்த உப மாநாட்டினை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.


கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்திற்கு பின்னர் பரிந்துரைகளை
நிறைவேற்றுவதற்கு கூட்டாக தொழில்படுவதற்கு சிறிலங்கா ஒத்துழைக்க வில்லை
என்றும் கூட்டுப்பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கும் சிறிலங்கா
ஒத்துழைக்வில்லை எனவும் Eileen C. Donahoe அவர்கள் தெரிவித்திருந்தார்.


சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிசினைக்
அமெரிக்காவுக்கு அழைத்துப் பேசியும் பயன் ஏதும் எட்டவில்லை எனவும் அவர்
தெரிவித்தார்.

தொடாந்து சிறிலங்கா தரப்புக்கு வாய்ப்பு
அளிக்கப்பட்ட போது ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வதிவிடப்பிரதிநிதி ரவீநாத்
ஆரியசிங்க அவர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

நல்லிணக்கஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டது.இராணுவமயமாக்கல் இல்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் வெகுவாககுறைக்கப்பட்டுள்ளது.தமிழர்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களுக்குதிரும்பிவிட்டனர். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன என வழமையானபல்லவியைப்பாடிய சிறிலங்கா தரப்பு அமெரிக்காவின் பிரேரணை தேவையற்றது எனதெரிவித்திருந்தது.

தொடர்ந்து சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு
ஒத்துப்பாடுவது போல் கருத்துரைந்திருந்த ஜப்பான் சிறிலங்கா அனைத்துலக
நாடுகளுடன் ஒத்துழைக்கின்றது. வட கொரியாபோல் இல்லை.
ஆகையினால் இந்தப் பிரேரணை தேவையில்லை என தெரிவித்திருந்தது.


இதற்கு பதில் அளிப்பது போல் கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியம் இந்தப்
பிரேரணை அவசியம் தேவை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் ஒதுக்கி
கொடுக்க வேண்டும் என கருத்துரைந்திருந்தது.

தொடாந்து வந்த சீனாசிறிலங்காவில் முன்னேற்றம் கண்டுவரும் இனநல்லிணக்கத்துக்கு இந்த பிரேரணைகேடுவிளைவிக்கின்றது என கருத்துரைக் றஸ்யாவும் தன்பங்கிற்கு இந்தப் பிரேணைஅரசியல் உள்நோக்கம் கொண்டதென தெரிவித்தது.

இதேநிலைப்பாட்டில்பாகிஸ்தான் - தாய்லாந்து - வெனுசுவேலா - இந்தோனேசியா - ஈரான்- எக்குவாடர் ஆகிய நாடுகள் பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து
சிறிலங்காவுக்கான தங்களின் ஆதரவுத் தளத்தினை வெளிக்காட்டி நின்றனர்.


இதில் குறிப்பாக பாகிஸ்தான் அமெரிக்காவின் பிரேரணைக்கு மாறாக தான் ஒரு
புதிய பிரேணையினை சிறிலங்காவினை புகழ்ந்துபாடி அமர்வில் வாசித்த போது பல
நாடுகள் அதற்கு எதிர்பு தெரிவித்திருந்தன.

குறிப்பாகபாகிஸ்தானுக்கு தன்னுடைய வலுவான வலுவான எதிர்பினைக் காட்டியிருந்ததோடுசிறிலங்காவின் மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லைஇல்லை. அபிவிரித்தி என்பதுமக்களின் அடிப்படை விடயங்களில் மாற்றத்தினைக் கொண்டுவராது. இந்தபிரேரணையினை உள்ளடக்கதினை இன்னும் இறுக்கமானதாக வலுவுள்ளதாக மாற்ற வேண்டும்தெரிவித்தது.

ஜேர்மனி - பிரித்தானியா - பிரான்ஸ் - சுவிஸ் -ஒஸ்றியா போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஆபிரிக்க நாடுகளான சிறா லியோன் -பொஸ்ரவனா போன்ற சில நாடுகளும் பிரேரணையின் உள்ளடக்கில் உள்ள சிலவார்தைகளில் மாற்றம் வேண்டுமே அன்றி பிரேரணை சரி என்றேகருத்துரைத்திருந்தார்கள்.

இந்த உபமாநாட்டில் முக்கியமாகவாக்களிக்க தகுதியற்ற நாடுகளான சீனா - கியூபா - றஸ்யா ஆகியன அதிகம்பேசியிருந்தமை கவனிக்க கூடியதாக இருந்தது.

இறுதிவரை இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இந்தியான கருத்து ஏதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தது.


இவ்வாறு சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் நாடுகளதுநிலைப்பாட்டினை நாடிபிடித்துப் பார்கும் வகையில் இந்த உப மாநாடு
அமைந்திருந்து.

எதிர்வரும் 13-14ல் திகதிகளில் பிரேரணையின் இறுதி
வரைவினை அமெரிக்கா சபையில் சமர்பிக்கும் என எதிர்பார்கப்படுவதோடு 21-22ம்
திகதிகளில் வாக்கெடுப்புக்கு செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாதம் ஊடகசேவை

  • கருத்துக்கள உறவுகள்

US Resolution could revive separatism in Sri Lanka- Swamy warns Blake

 
Sat, 2013-03-09 12:29 — editor

Daya Gamage - US National Correspondent Asian Tribune
Washington, D.C. 10 March (Asiantribune.com):

India's Janatha Party leader Subramanian Swamy had a warning to the United States: "Your resolution against Sri Lanka in Geneva could be seen as a victory of the divisive forces close to the Tamil Tigers that could revive the separatist agenda of the LTTE".Swamy_Meets_Mahinda.pngJanatha Party leader Subramanian Swamy meets with President Rajapaksa

Mr. Swamy, who met Assistant Secretary of State for South and Central Asia Robert Blake, conveyed his point of view on the American move to introduce a resolution at the ongoing UN Human Rights Council session.

Noting that this is his personal initiative, Swamy, during his nearly hour long meeting with the State Department officials in Washington, cautioned the US that the resolution should not be seen as a victory of the “divisive” forces close to ‘Liberation Tigers of Tamil Eelam’ as that could result in revival of the LTTE, which is not in the interest of anyone.

He has asked the Obama Administration to undertake bilateral consultations with Colombo to work out a consensus on the draft of the alleged human rights violations in Sri Lanka proposed to be tabled in UNHRC in Geneva.

India's Janatha Party leader was apprising the media of his talks with Washington officials.

“Under no circumstances the resolution has any indication that President Rajapaksa and others are guilty of war crimes. Whatever has to be done has to be done by the Government of Sri Lanka and not by international agencies. The demand for international agencies essentially comes from supporters of LTTE'.

Swamy told US officials that there is no probability of setting up an internationally-appointed “intrusive” probe which Sri Lanka will be compelled to comply because Russia and China will veto such a move.

“Thus no resolution not acceptable to Sri Lanka can be ever enforced in the UN framework,” he said.

Mr. Swamy disclosed that the US resolution, according to the information he was given by State Department officials, will not urge for an international mechanism to scrutinize Sri Lanka. He said it is a big setback for the pro-LTTE forces.

Expressing satisfaction over his meeting with the US officials, Swamy argued that any investigation into the alleged human rights violations should be taken by the democratically elected government of Sri Lanka and not by any internationally appointed bodies.

"Because Sri Lanka, being a democratic country, stands on a totally different footing from Bosnia and Zaire," he said.

Meanwhile Indian Prime Minister Manmohan Singh told the Rajya Sabha on Friday that India is “worried” about the fate of Tamils in Sri Lanka and wants them to live with “dignity and self respect”

“There are problems in Sri Lanka; we have been worried about the fate of the Tamil population in Sri Lanka,” Dr. Singh told the Upper House of the Indian Parliament.

“It has been our effort to plead with the government of Sri Lanka that there must be political reconciliation, that without national reconciliation (the) situation cannot remain calm.”

Dr. Singh asked Colombo to take the initiative to talk to the “Tamil top leadership” in Sri Lanka.

“It has been our effort to work with the leadership in Sri Lanka and to ensure that Tamil people (there) do get a chance to live a life of dignity and self respect as equal citizens of the country.”

- Asian Tribune -

http://www.asiantribune.com/node/61912

  • கருத்துக்கள உறவுகள்

25723508215e16a4c-397c-4e86-b06e-285eb67

இந்தியாவின் வாக்கு முலாயம் சிங் யாதவ் கையில்!

ஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையின் விவாதத்தில் கலந்து கொள்வதற்கான இந்தியக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவிற்கு இந்திய சமாஜவாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமை வகிக்கிறார். 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இதனைத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட இந்த பிரரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகளும், இந்திய எதிர்கட்சிகளும் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. 

எனினும் தாம் தமிழர்களையோ, அல்லது இலங்கை அரசாங்கத்தையோ நேரடியாக பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில், முலாயம் சிங் யாதவ் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தாளுக்கு ஒரு 50 - 100 ஐ தள்ளினால், ஏதாவது நடக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளை மீறி உள்நாட்டு அழுத்தம் எவ்வளவு தூரம் செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது. கூட்டணிக் கட்சியின் முலாயம் சிங்கை அனுப்புவதன்மூலம் காங்கிரஸ் இலங்கையின் மிரட்டல் அரசியலில் இருந்து தப்பித்துக்கொள்ள எத்தனிக்கிறது.. அதே நேரம் உள்நாட்டு அழுத்தங்களில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.. எல்லாவற்றுக்கும் இனி யாதவ் தான் பொறுப்பு..

 

தமிழகம் ஒன்றுதிரண்டால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.. ஆனாலும் இப்போராட்டம் மழுங்கடிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அமெரிக்கப் பிரேரணையில் கடும் நிபந்தனைகள் அவசியம்! - கனேடிய, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்து!!

சிறிலங்கா மீதான அமெரிக்காவின் பிரேரணை வலிமையற்றது எனவும், இதனால் கடுமையான நிபந்தனைகளை உள்ளடக்கி இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சிறிலங்கா மீதான அமெரிக்காவின் பிரேரணையின் நகல் வரைபு ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தப் பிரேரணை தொடர்பில் விவாதிப்பதற்காக நேற்று ஜெனிவாவில் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. இக்கூட்டம் ஜெனிவா நேரப்படி நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.10 மணிவரை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா மீதான அமெரிக்காவின் பிரேரணை வலிமையற்றது என்றும், இதனால் கடுமையான நிபந்தனைகளை உள்ளடக்கி இப்பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=b01c5461-68e9-4a13-8f5e-78a67a6c543f

  • கருத்துக்கள உறவுகள்

9765060dcb0fcd03a6c1d753676b1768.jpg

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையின் விவாதத்தில் கலந்து கொள்வதற்கான இந்தியக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்திய சமாஸ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமையில் இக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்  தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான இந்தப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பில், முலாயம் சிங் யாதவ் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருப்பதாக குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் எனத் தமிழக கட்சிகளும், இந்திய எதிர்கட்சிகளும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள குர்ஷித்,

மத்திய அரசு தமிழர்களையோ, அல்லது இலங்கை அரசாங்கத்தையோ நேரடியாக பகைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=658921887309303826

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீதான இந்தப் பிரேரணை குறித்த
வாக்கெடுப்பில், முலாயம் சிங் யாதவ் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வார் என்ற
நம்பிக்கை இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருப்பதாக குர்ஷித்
குறிப்பிட்டுள்ளார்.

 

அர்த்த சாஸ்திரம் ( சாணக்கிய நீதி) புக்கு வாங்கி மேல இருந்து  மூன்று தடவை கீழ இருந்து மூன்று தடவை மொத்தம் ஒன்பது தடவை படித்தால்  எல்லாம் தெளிவாகிடும்

காங்கிரஸ் தான் போகப் போகிற கட்சி என்றது தெரிந்த பின்னர் கூட அமெரிக்காவிடம் ஒரு நல்ல முடிவை சொல்லி தமிழரை காப்பற்ற முன் வரவில்லை.

 

முயலாம் சிங் தனது முடிவை எடுக்கட்டும். ஆனால் தகவல்கள் அமெரிக்கா இந்தியாவின் முடிவை பார்த்துகொண்டிருப்பத்தாக சொல்கிறது. காங்கிரசின் நரி விளையாட்டுக்களை இந்த முறை சரியாகத்தான் தமிழகம் கையாள்கிறது. தமிழகத்தின் முடிவையும் காங்கிரஸ் காத்துக்கொண்டிருக்கிற நாள் வரும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.