Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு டெசோ அமைப்பு சென்றதால் தள்ளுமுள்ளு கைகலப்பு. [ Video & Photo ]

Featured Replies

தமிழ்நாட்டை விட்டு விட்டு எமது போராட்டம் நகர முடியாது. தமிழ்நாட்டின் முக்கிய சக்திகளை எமது பக்கம் வென்றெடுக்க வேண்டும். அவர்களாக ஆதரவு தருகின்ற பொழுது, அதை தட்டிக் கழித்து "துரோகி" என்று வசைபாடிக் கொண்டிருக்க முடியாது.

இன்றைக்கு உலகத்தில் லொபி செய்வதற்கு கூட எமக்கு யாரும் இல்லை. நாடு கடந்த அரசு, ஒருங்கிணைப்புக் குழு போன்றவைகள் செய்வதை விட பல மடங்கு அதிகமாக டெசோவால் செய்ய முடியும். ஆனால் நாம் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நெருங்கி வந்தாலும் நாம் விலகி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அவர்களை நெருங்க விடாமல் விரட்டுபவர்களின் அரசியலை கவனித்தால் நிறைய விடயங்கள் புரியும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவராக தீக்குளித்தால் இந்த போராட்டம் தமிழ்நாட்டு மக்களை மேலும் எழுசிக்குள்ளாக்கும்

  • தொடங்கியவர்

ஒரு கை தாட்டின சாத்தம் வரும் என்று நினைக்கிறார் போல   தட்டட்டும்.
தனி மரம் தோப்பாகாது என்று சொல்லுவினை இவர் தனி மரம்
தோப்பாகும் என்று சொலுரர் கேளுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி இப்ப ஆட்ச்சியில் இருந்து இருந்தா..இந்த மாணவர்கள் உண்ணாவிரத மேடையை காவல்துறையை வைது அடிச்சு துவைச்சு இருபார்..இது தான் உண்மை....

 அவர்களை நெருங்க விடாமல் விரட்டுபவர்களின் அரசியலை கவனித்தால் நிறைய விடயங்கள் புரியும்.

 

நெருங்காதவர்களை நெருங்க வைத்து அதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவே திமுக விரும்புகிறது. இம்மாதிரியான அரசியலிடமிருந்து தள்ளியிருத்தல் நலம்.

  • தொடங்கியவர்

சபேசன்  இண்டைக்கு  திருமாவளவன் சொன்னவர் வெளிநாட்டில தங்கள் ஒரு ஆளை வாங்கி இருக்கிறம் . புலத்தில இருக்கிற மக்களுக்கு டெசோவில  உள்ளவர்கள் நேர்மையானவர்கள் ஈழத்திற்கு

காலம் கடந்து செத்த வீட்டை வராட்டியும் நங்கள் ஆந்தியட்டிகு வந்து

இருக்கிறம் என்று விளங்க படுத்தா என்று அது நீங்கள் தானோ .

கருணாநிதி இப்ப ஆட்ச்சியில் இருந்து இருந்தா..இந்த மாணவர்கள் உண்ணாவிரத மேடையை காவல்துறையை வைது அடிச்சு துவைச்சு இருபார்..இது தான் உண்மை....

 

வெளிப்படையாகவே தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமென்று போலீசார் மூலமாக மிரட்டப்பட்டிருப்பார்கள்.

தனி மரம் தோப்பாகாது என்பதனாலேயே மரங்களை தறிக்க வேண்டாம் என்று இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன். தட்டுகின்ற கைகள் சேர்ந்து ஒலிக்கட்டும்.

ஜெயலலிதாவும் காவல்துறையை விரைவில் ஏவுவார். மாணவர்களை குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் போடுவார்கள். அப்பொழுது இவர்களுக்காக யார் போராடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

சீமானும், வைகோவும் அறிக்கையோடு நிற்பார்கள்.

அப்பொழுது இங்கே டெசொவை விரட்டிய அதே தரப்பினர் வந்து "கருணாநிதி ஏன் எங்களை ஆதரிக்கவில்லை" என்று கேட்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்  இண்டைக்கு  திருமாவளவன் சொன்னவர் வெளிநாட்டில தங்கள் ஒரு ஆளை வாங்கி இருக்கிறம் . புலத்தில இருக்கிற மக்களுக்கு டெசோவில  உள்ளவர்கள் நேர்மையானவர்கள் ஈழத்திற்கு

காலம் கடந்து செத்த வீட்டை வராட்டியும் நங்கள் ஆந்தியட்டிகு வந்து

இருக்கிறம் என்று விளங்க படுத்தா என்று அது நீங்கள் தானோ .

எப்ப இவர் மகிந்தாஜாகபக்சாவுக்கு கை குடுத்தாரோ அப்பவே எனக்கு இவர் மேல இருந்த நம்பிக்கை எல்லாம் போய் விட்டது...இவரும் கருணாநிதி போல முதுகு எலும்பு இல்லாதவர்ராய் போய் விட்டார்....இவங்கள் தமிழ் உனர்வு என்றால் என்ன என்று சீமான் அண்ணா போன்ர சூடு சுரணை உள்ள தமிழர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள‌னும் 

டெசோ வை யாரும் விரட்டவில்லை ( விரட்டினாலும் செய்ய வேண்டியது அவர்களின் கடைமை ) அனால் அதேநேரம் டெசோ இல்லாமல் ஒன்றுமே இல்லை என்பதைப்போல ஒரு மாயை ஏற்படுத்த முயல்பவர்களிடன் சாக்கிரதையாக இருங்கள் அவளோதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தனி மரம் தோப்பாகாது என்பதனாலேயே மரங்களை தறிக்க வேண்டாம் என்று இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன். தட்டுகின்ற கைகள் சேர்ந்து ஒலிக்கட்டும்.

ஜெயலலிதாவும் காவல்துறையை விரைவில் ஏவுவார். மாணவர்களை குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் போடுவார்கள். அப்பொழுது இவர்களுக்காக யார் போராடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

சீமானும், வைகோவும் அறிக்கையோடு நிற்பார்கள்.

அப்பொழுது இங்கே டெசொவை விரட்டிய அதே தரப்பினர் வந்து "கருணாநிதி ஏன் எங்களை ஆதரிக்கவில்லை" என்று கேட்பார்கள்.

 

அதையும் ஒருக்கா பாப்போம்....

மாணவ சமுதாயம் பொங்கி எழுந்தால் இந்த உலகில் அவர்களுக்கு இடையா யாரும் இல்லை......அண்ணா இப்ப காலம் மாரி போச்சு

தயவு செய்து மாணவர் போராட்டத்துக்குள் உங்கள் அரசியலை கலக்கவேண்டாம் மாணவர்களை அவர்கள் வழியிலையே விடுங்கள்

இப்பொழுது காலம் மாறி விட்டது என்பதையும் கருத்தில் கொண்டே அனைத்தையும் பேசுகிறேன். மாணவர் சமுதாயம் முன்பு போல இல்லை. பிச்சாவும், பேர்கரும், டிஸ்கோவும் என்று காப்பரேட் மயப்படுத்தப்பட்ட ஒரு புதிய மாணவர் சமுதாயத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடும் இதற்கு விதி விலக்கு இல்லை.

60களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், 80களின் ஈழ ஆதரவுப் போராட்டம் போன்றவைக்கே கட்சிகளின் பின்புலம் இருந்தது. இன்றைக்கு கட்டாயம் கட்சிகள், அமைப்புக்கள் போன்றவைகளின் ஆதரவு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

------

கலைஞருக்கு ஈழத்தின் மீது ஆதரவும் பற்றும் இருக்கிறதோ இல்லையோ, தன்னுடைய தொண்டர்களிடம் அதை சரியாகவே வளர்த்து விட்டிருக்கிறார்.

 

அ.தி.மு.க. தொண்டர்களை விட, தி.மு.க. தொண்டர்களுக்கு இயல்பாகவே ஈழப்பாசம் அதிகம் உள்ளது. அதனை கலைஞர் தான்... வளர்த்து விட்டார் என்பது சரியான கருத்து அல்ல சபேசன். :)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=JibIH7S0vqA

கருணாநிதி எப்படி பட்டவர் என்று தெரியாத ஆக்கள்..இந்தக் காணொளியையும் ஒருக்கா பாக்கட்டும்.....கருணாநிதியின்ட பெயர கேட்டாலே அருவருப்பு தான் வரும்....

Edited by நிழலி
ஒருமையில் எழுதப்பட்டது திருத்தப்பட்டது

மத்திய அரசின் பிரதிநிதிகள் நேரில் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும். 3 ஆவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் லயோலா கல்லூரி மாணவர்கள் திட்டவட்டம்.




மத்திய அரசின் பிரதிநிதிகள் நேரில் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று 3 ஆவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் லயோலா கல்லூரி மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

 

http://puthiyathalaimurai.tv/srilanka-issue-students-demand



Students.png

75030_536775013012438_1147585139_n.jpgஉண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 8 மாணவர்களோ ..இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் மாணவர்கள் யாருமே டெசோ உறுப்பினர்களை வெளியேறச் சொல்லவில்லை.. மாறாக அவர்களை வரவேற்றனர். 'நாம் தமிழர்' கும்பலே இவர்களுக்கு எதிராக கோஷமிட்டு தங்கள் சுய அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர்.. பின்னர் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கும் கும்பலுக்கு எதிராக கோஷமிட்டு வெளியேற சொன்னார்கள் . 


மற்றொன்று அண்ணன் திருமாவளவன் இரண்டு மணி நேரம் அங்கிருந்த மாணவர்களிடம் உரையாடி ஆதரவு தெரிவித்து உரை நிகழ்த்தினார். எங்குமே அவர் போராட்டத்தை கைவிடவோ , மாற்றி அமைக்கவோ சொல்லவில்லை பேசவுமில்லை (அவர் பேச்சின் வீடியோவை நாங்கள் போடத்தானே போகிறோம்).. ஆனால் இங்கு இணையத்தில் அமர்ந்து கொண்டு சிறுத்தைகள் மேல் காழ்புணர்ச்சி கொண்ட கும்பல் தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.. உடன் சில இணையதளங்களும் பங்குபெற்றுள்ளன (குறிப்பாக தங்கள் சுய நலன்களுக்கு ஏற்ப ஒரு வீடியோவை எடிட் செய்து தொடர்ச்சியான நிகழ்வுகளை முன்னுக்கு பின் மாற்றி வைத்து ஏமாற்று வேளையில் ஈடுபட்டுள்ளனர்).

(படத்தில் அண்ணன் தொல். திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களோடு) 

இந்த கும்பல்களுக்கு என் கடுமையான கண்டனங்கள்.

உண்மைய பேசுங்கடா !!!! 

மூலம்: முகநூல் 

இந்த செய்தியில் ஓரளவு உண்மை இருக்கிறது. என்னுடைய கருத்திலும் "சிலர்" மாணவர்களை டேசோவுடன் முரண்பட வைப்பதாக எழுதியிருந்தேன். சீமான் குழுவினர் நிலமையை சிக்கலாக்காமல் இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.