Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க வெளியுறவுத் தூதர் எலீன் சாம்பர்ளின் டொனஹொ, ''இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. போர்க்குற்ற விசாரணை தேஷ்வை. இலங்கையில் விசாரணை நடத்த அமெரிக்கா தயாராக இருக்கிறது

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

திரு நல்லக்கண்ணு அவர்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார் ! மாணவர் போராட்டம் அதற்கு எதிரானது ! திசை திருப்ப வேண்டாம் தோழரே !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் -
8883170213, கருணாநிதி - 9176785058

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெயங்கொண்டம் , கமுதியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் ! சென்று ஆதரவு தாருங்கள் ! மாணவர் போராட்டம் விரிவடைகிறது

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர் !

 

- முகநூல் -

Posted

மு.யூ.மீரான் முகைதீன் முகவையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு 18.03.2013 திங்கள் கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி, அமைப்பு பேதமின்றி உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த அறநெறி போராட்டத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

இசுலாமிய அமைப்புகளில், பாப்புலர் ஃப்ரன்ட், கேம்பஸ் ஃபரன்ட்,எஸ்.டி.பி.ஐ , த.மு.மு.க , மனித நேய மக்கள் கட்சி, இன அழிப்பிற்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் என பல்வேறு பட்ட ஒத்த கருத்துடைய அமைப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதை பார்க்கும் தோழர்கள் இதையே அழைப்பக ஏற்று இந்த உணர்வு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம்.


இந்த போராட்டம் அனைத்து அமைப்பினராலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை முன்னின்று ம.தி.மு.க தோழர் சுப்பு (பஜாஜ்) ஒருங்கிணைத்து வருகிறார்.மேலதிக தகவல்களுக்கு தோழர் சுப்பு : 9786699060 அல்லது முகவைத்தமிழன் : 9047507665

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
இராமநாதபுரம் மாவட்டம்


- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அணைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களும் முற்றுகை இடப்படும் !

விரைவில் இடம் நேரம் நாள் அறிவிக்கப்படும் !  

- முகநூல் -

Posted

இலங்கைப் பிரச்னையை முன் வைத்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

ராமேஸ்வரம் வேர்க்கோடுப் பகுதியில் அமைந்துள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது, நடந்த இனப் படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

 

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனும், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் புகைப்படத்தை முகமூடியாக அணிந்திருந்தனர்.

 

- முகநூல் -

Posted

கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு எமது போராட்டத்தை நசுக்கிவிட முடியாது! கல்லூரிகளுக்கு வெளியில் ..எமது போராட்டம் முன்பைவிட தீவிரமாகும்..இருந்து பாருங்கள்! மாணவர் தலைவர்கள் சூளுரை.


"எமது போராட்டத்தில் நியாயம் உள்ளது , நீதி உள்ளது. நாம் எமது உறவுகளுக்காக உரத்து நீதி கேட்கிறோம். நாம் எம் இனத்தின் அழிவுக்காக உலகத்திடம் நீதி கேட்கிறோம். நாம் பாலச் சந்திரன் போன்ற ஆயிரக் கணக்கான குழந்தைகளை சுட்டு கொன்ற ராஜபக்சாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உரத்து கேட்கிறோம். இது தவறு என்றால்அந்த தவறை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். தமிழ் நாட்டு மக்கள் எம்மை புரிந்தகொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நாம் சிறிலங்காவின் இனப்படுகொலைக்காக நீதி கேட்கிறோம். நாம் தமிழ் நாட்டில் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. அகிம்சை வழியில் போராடுகிறோம். அப்படி இருக்கும்போது எமது போராட்டத்தை யாராவது நசுக்க முயன்றால், அதை நிச்சயம் நாம் அனுமதிக்க மாட்டோம். மாணவர் சக்தி மகத்தான சக்தி என்பதை சம்பந்தப் பட்டவர்களுக்கு புரியவைப்போம். தற்போது சகல கல்லூரிகளிலும் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அதே வேளை எதிர்வரும் திங்கள் முதல் எமது போராட்டம் புதிய பரிமாணம் பெறும் என்பதையும் கூறிக் கொள்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்"

 

இப்படி உணர்வு பொங்க கூறினார்கள் பொறுப்பு வாய்ந்த சில மாணவர்களும் அவர்களின் தலைவர்களும். அவர்களின் பணி தொய்வின்றி தொடர நாமும் வாழ்த்துகிறோம்.!


மாணவர்களின் போராட்டம் எரிமலையை விட உறுதியானது. அதன் வெக்கையில் அத்தனையும் பொசுங்கிவிடும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது!

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

thiiiiiiiiiiiiiii.jpg
 
 

 

லயோலா பற்றவைத்த லங்கா தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தணலாய் கொதிக்கிறது தமிழகம். 

ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்களை மிஞ்சிவிட்டது கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்கள். கோயம்பேடு பகுதியில் உள்ள செங்கொடி அரங்கத்தில், லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளில் வாபஸ் வாங்கப்பட்டாலும், அவர்கள் ஆரம்பித்துவைத்த தூண்டுதல் தமிழக மாணவர்கள் அனைவரையும் வீறுகொண்டு வீதிக்கு வரவைக்கக் காரணமாகிவிட்டது.

இதோ... தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் லைவ் ரிப்போர்ட்!

சென்னை: அப்புறப்படுத்த நினைத்த போலீஸ்!

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 11-ம் தேதி தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம், இன்னும் நீடிக்கிறது. மற்ற கல்லூரி மாணவர்களின் போராட்டத்தைவிட சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் அதிக ஆபத்து மிகுந்தது என்று காவல் துறை கருதியதோ என்னவோ... 'நீதிமன்ற வளாகத்தின் உள்ளே வெடிகுண்டு இருக்கிறது. அதனால், சோதனை நடத்த வேண்டும்’ என்று, நீதிமன்ற வளாகத்தைவிட்டு அவர்களை வெளியேற்றினர். அவர்களை வெளியேற்ற மட்டும்தான் காவல் துறையால் முடிந்தது. ஆனால், போராட்டம் தொடர்கிறது. சென்னை சட்டப் பல்கலைக்கழக மாணவர்களும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில், ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகிறார். சென்னைப் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி தங்களின் ஆதரவைப் பதிவுசெய்தனர்.

உண்ணாவிரத்தை நிறுத்தினாலும் லயோலா கல்லூரி மாணவர்கள், கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளனர். மாநிலக் கல்லூரி, மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரி என்று சென்னையில் உள்ள பல கல்லூரி மாணவர்களும் உணர்வுப்பூர்வமாகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

செங்கல்பட்டு: 'இதயத்துடிப்பு குறைந்தது’

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரி வாசலில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் பலரும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டும், மாணவர்கள் மசியவில்லை. 13-ம் தேதி... மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் சிலருக்கு உடல்நிலை மோசமானதை அறிந்த ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மருத்துவக் குழு ஒன்றை அழைத்துவந்தார். மாணவர்களை பரிசோதனை செய்த மருத்துவக் குழு, 'மாணவர்களின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை செய்தனர். கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் போலீஸார் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதை அடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட மூவரை மட்டும் மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள். மற்றவர்கள் தொடர்கின்றனர். 

கோவை: விமான நிலையத்துக்குள் நுழைந்தனர்

கடந்த 11-ம் தேதி முதல் கோவை சட்டக் கல்லூரி மற்றும் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 22 பேர், ம.தி.மு.க. அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர். கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கத் தயாராகி வருகின்றனர்.

13-ம் தேதி மதியம் சட்டக் கல்லூரி மாணவர்கள் 28 பேர் கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். காவல் துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசியும் கலைந்து செல்லாமல், மூன்று அடுக்குப் பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேறு வழி இல்லாமல் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதே போல், காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி, சேலம் சட்டக் கல்லூரி , தேனி கம்மவார் கல்வியியல் கல்லூரி, கடலூர் அரசுக் கலைக் கல்லூரி, செயின்ட் ஜோசப், கிருஷ்ணசாமி கல்லூரி, புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றிலும் மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது.

தமிழக மாணவர்களின் போராட்டங்களாவது மத்திய அரசை உலுக்குமா?

- ஜூ.வி. டீம்

மாணவர் போராட்டக்குழு அமைப்பு

இலங்கைக்கு எதிரான அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், 'தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 14-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர், ''ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை. வல்லாதிக்க நாடான அமெரிக்கா நினைத்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரத்தில் அதைத் தட்டிக் கேட்டு தடுத்திருக்கலாம். அப்போது சில லாபங்களுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்த அமெரிக்காவுக்கு, இப்போது அந்தக் கேள்வி கேட்கும் உரிமையே கிடையாது. எங்கள் போராட்டம் விடாது தொடரும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வரும் 18-ம் தேதி ஒரே நேரத்தில் ராஜபக்ஷே, மன்மோகன்சிங் உருவ பொம்மைகளை எரித்துப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்'’ என்று கொந்தளித்தனர்.

வேலூர்: 'டி.சியைக் கொடுத்திடுவோம்!’

வேலூர் ஊரீசு கல்லூரியில் கடந்த 11-ம் தேதி காலை 10 மணிக்கே 50 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார்கள். கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் கலைந்து செல்லவில்லை. வேலூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்விதான்.

'போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் டி.சி. தரப்படும்’ என்று மிரட்டியும் அவர்கள் மசியவில்லை. ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள், 3 மணி அளவில் கலைந்தனர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி மாணவர்கள் 12-ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி மாணவர்களும் அன்றைய தினம் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 14-ம் தேதியில் இருந்து வேலூர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

திருச்சி: தாக்கப்பட்ட போலீஸ் வாகனம்!

திருச்சியில் கடந்த 12-ம் தேதி முதல் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய உண்ணாவிரதத்தில், நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது.

13-ம் தேதி புரட்சிகர மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே ராஜபக்ஷே, மன்மோகன் சிங் ஆகியோரது கொடும்பாவியை எரித்தனர். அப்போது காவல் துறையினர் அவர்களில் எட்டு பேரை கைது செய்தனர். அதனைக் கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, எட்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த மாணவர் ஒருவர் போலீஸ் வாகனத்தை ஓங்கி அடித்தார். இதனால் கோபம் அடைந்த காவலர் ஒருவர் அந்த மாணவரை அடிக்க... மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், திருச்சியில் இருந்து செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சட்டக் கல்லூரி முதல்வர், ம.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் சீனியர் வழக்கறிஞர்கள், 'பொதுமக்களுக்கு இடையூறாக மாற்றிவிடாதீர்கள்’ என்று மாணவர்களிடம் எடுத்துச் சொன்ன பிறகே, அவர்கள் அமைதியானார்கள். இந்தப் போராட்டத்தால் மூன்று மணி நேரத்துக்கும் மேல் திருச்சி ஸ்தம்பித்தது.

மதுரை: பூட்டப்பட்ட தபால் நிலையம்!

மதுரையில் பெரும்பாலும் அனைத்து கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு, ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 11-ம் தேதி ஸ்டேட் பேங்க் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் தபால் நிலையத்தைப் பூட்டினர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட... காவல் துறையினர் 17 மாணவர்களை கைதுசெய்தது. 13-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் மூவர் கல்லூரி வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்!

நெல்லையில் கடந்த 11-ம் தேதியில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பல மாணவர்களின் பெற்றோர்கள் வந்து சமாதானப்படுத்தியதில் அவர்கள் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுக்கவே, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கடை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இருந்தும் கல்லூரி நிர்வாகமும் போலீஸ் தரப்பும் தொடர்ந்து மாணவர்களை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக ம.தி.தா. இந்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது என்றாலும், உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் பல்வேறு மாணவர்களின் உடல்நிலை மோசமான நிலையை எட்டி உள்ளது. காவல் துறையினால் மாணவர்கள் எப்போதும் கைது செய்யப்படலாம்.

விகடன்

Posted

விடுதியில் இருந்தும் மாணவர்களை வெளியேற்ற அரசு கூறியதாக கல்லூரிகள் அறிவிப்பு.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலூர் : சட்ட கல்லூரி மாணவர் போராட்டம் தொடர்கிறது ! முடங்காது மாணவர் போராட்டம் !

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தர்மபுரி : அரசு கலைகல்லூரி விடுதி மாணவர் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கும்பகோணத்தில் மாணவர்கள் போராட்டம் இன்றும் தொடர்கிறது ! கல்லூரிகளை மூடினாலும் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரியலூரிலும் அரசு கலைக் கல்லூரியில் தொடர்கிறது போராட்டம் !

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நெய்வேலியில் முன்னாள் மாணவர்களின் உண்ணாவிரதம் காவல் துறை அனுமதியுடன் தொடங்கியது !

 

- முகநூல் -

Posted

சென்னை 18 அன்று முற்றுகை !
அடையாறு சட்ட பல்கலைகழக போராட்ட குழு அறிவிப்பு !
மாறுகின்றது போராட்ட உத்தி
.

 

- முகநூல் -

Posted

முன்பு ஈழம் என்று சொன்னாலே உள்ளே தூக்கிப் போட்டார்கள்..! இன்று ஈழம் என்கிற சொல்தான் தமிழ்நாடு முழுமைக்குமாக நிறைந்துள்ளது. அடக்குமுறையின் கீழ் கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட உணர்ச்சிகள் வெடிக்கும்போது விளைவுகள் கனதியாகத்தான் இருக்கும்.

 

மாணவரின் அறப்போர் தேவையான விளைவுகளை வென்றெடுக்க வாழ்த்துக்கள்..!

Posted

மாற்றுவோம் போராட்ட உத்தியை !

 

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும். நம்மை நாமே வருத்திக்கொள்வதைப் பார்த்து இந்த மானங்கெட்ட அரசுகள் திருந்தப்போவதில்லை என்பதற்கு சாட்சியாய் இருக்கிறார் மணிப்பூர் போராளி இரோம் சர்மிளா.

இந்த உண்ணாவிரதம்.. மனு கொடுப்பது. உள்ளிட்ட அடையாளப்போராட்டமெல்லாம் வேலைக்காகாது. நம்மை துளியும் மதிக்க மாட்டார்கள். நாம் உண்ணாவிரதம் இருந்து செத்துப்போனால் அப்பாடா. ஒரு விக்கெட் காலி என்று தான் நினைப்பார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானின் குஜ்ஜார் இன மக்களின் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் நடந்தது. ரயில் தண்டவாளங்களை தகர்த்தெறிந்தார்கள். ஆடியது மத்திய அரசு. எதிரிக்கு வலிக்க வேண்டும். அதுதான் போராட்டம்.

அடையாளப்போராட்டங்களுக்கு முடிவு கட்டுவோம். நீங்கள் இருக்கும் உண்ணாவிரதத்தை விட காஷ்மீரில் சிறுவன் ஒருவன் ராணுவத்தை நோக்கி எறியும் ஒரு கல்லுக்கு அதிக வீரியம் உண்டு..

தமிழகத்திலிருக்கும் இலங்கைத்துதரகக் கண்ணாடியில் தமிழனின் `ஒரு கற்கள் கூட இன்னும் ஓவியம் தீட்டாமல்’ இருப்பதே தமிழர்கள் எவ்வளவு அமைதியானவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு..

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்பு ஈழம் என்று சொன்னாலே உள்ளே தூக்கிப் போட்டார்கள்..! இன்று ஈழம் என்கிற சொல்தான் தமிழ்நாடு முழுமைக்குமாக நிறைந்துள்ளது. அடக்குமுறையின் கீழ் கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட உணர்ச்சிகள் வெடிக்கும்போது விளைவுகள் கனதியாகத்தான் இருக்கும்.

 

மாணவரின் அறப்போர் தேவையான விளைவுகளை வென்றெடுக்க வாழ்த்துக்கள்..!

இனி அவர்களின் இறையான்மை கீச்சு மாச்சு பூச்சாண்டி விளையாடு எல்லாம் எடுபடாது..மாணவர்கள் தெளிவாய் தான் இருக்கினம் டங்கு...உங்களால் முடிந்தால் ஒரு சில மாணவர்களை தொடர்வு கொண்டு கதையுங்கோ 

Posted

போராட்டம் நடத்தும் அன்பு தம்பிகளுக்கு தயவு செய்து உங்களது போரட்டத்தில் எந்த ஒரு கட்சிகளையும் அனுமதித்து விட வேண்டாம்.ஒரே நாளில் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வர வைத்து போரட்டத்தை முடித்து விடுவார்கள் !

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழகத்தின் முதல் மருத்துவக்கல்லூரி களத்தில்

ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தும் மாணவர்களை வாழ்த்த குறளரசனை தொடர்பு கொள்ளுங்கள் 8489769794

வாழ்த்துங்கள் உறவுகளே !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
manamreporddam.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
saddddddddddddn.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

thinathanthiiiiiiiiii.jpg
 
 

 

இப்போராட்ட செய்தியினை பரப்புவது ,பகிர்வது நமது கடமை! ............................................................................................................................."போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் மிக முக்கிய முன்னெடுப்பாக வரும் 20/03/2013 புதன்கிழமை அன்று தமிழகம் தழுவிய "ஒரு கோடி மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம்" நேற்று (15/03/2013) அனைத்துக் கல்லூரி மாணவ பிரதிநிதிகளால் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் தமிழக அரசு காலவரையற்ற முறையில் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் 32 மாவட்டத்திலும் உள்ள தமிழீழ விடுதலைக்காக எழுச்சியுடன் போராடும் அனைத்து மாணவர்களும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் இப்போராட்டத்தினை முன்னெடுக்க உறுதி ஏற்பதுடன், ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மாணவர் போராட்டக்குழுக்கள் தாங்களாகவே நமது முதன்மை கோரிக்கைகளான....

1)இலங்கை அரசின்மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை...

2) ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு...

3) இலங்கைமீது பொருளாதாரத்தடை...

உள்ளிட்ட இக்கோரிக்கைகளை இந்தியாவே ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி "ஒரு கோடி மாணவர்கள் நாம் தொடர்முழக்கம்" இடுவோம் உலகத்தை நம் போராட்டத்தின் பக்கம் திருப்புவோம்..

மேலதிக தகவலுக்கு :9791162911

— ஒரு கோடி மாணர்கள் எழுக போராட்டம் (3 photos)

"போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" 1)இலங்கை அரசின்மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை... 2) ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு... 3) இலங்கைமீது பொருளாதாரத்தடை...

"போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் மிக முக்கிய முன்னெடுப்பாக வரும் 20/03/2013 புதன்கிழமை அன்று தமிழகம் தழுவிய "ஒரு கோடி மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம்" நேற்று (15/03/2013) அனைத்துக் கல்லூரி மாணவ பிரதிநிதிகளால் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் தமிழக அரசு காலவரையற்ற முறையில் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் 32 மாவட்டத்திலும் உள்ள தமிழீழ விடுதலைக்காக எழுச்சியுடன் போராடும் அனைத்து மாணவர்களும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் இப்போராட்டத்தினை முன்னெடுக்க உறுதி ஏற்பதுடன், ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மாணவர் போராட்டக்குழுக்கள் தாங்களாகவே நமது முதன்மை கோரிக்கைகளான.... 1)இலங்கை அரசின்மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை... 2) ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு... 3) இலங்கைமீது பொருளாதாரத்தடை... உள்ளிட்ட இக்கோரிக்கைகளை இந்தியாவே ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி "ஒரு கோடி மாணவர்கள் நாம் தொடர்முழக்கம்" இடுவோம் உலகத்தை நம் போராட்டத்தின் பக்கம் திருப்புவோம்.. மேலதிக தகவலுக்கு :9791162911

Posted

பாளை :

வட்டாச்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி !
மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது !
வெல்லட்டும் மாணவர் எழுச்சி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஓசூரில் போராட்டம் தொடங்கியாச்சு...!!! திரண்டு வாருங்கள் தோழர்களே.

தோழர்களே, நம் அனைவரின் போராட்டங்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று சட்ட கல்லூரி மாணவர் ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஓசூர் தாலுக்க அலுவலகம் அருகில் இறங்கியுள்ளனர்.

இங்கு மாணவர்கள் அனைவரின் ஆதரவை நாடியும் அவர்களுக்கு ஊக்கம் குடுக்கும் வகையில் அவர்கள் போட்ட விதையை விதைத்துள்ளனர். அவர்களுக்கு உங்கள் அனைவரின் ஆதரவை தாருங்கள்.

அவர்களோடு நாங்களும் அமர்ந்து ஆதரவளித்து வருகிறோம். நீங்கள் அனைவரும் அவர்களுக்கு தொலைபேசி மூலமாவது வாழ்த்துக்கள் தெரிவியுங்கள். சிலம்பரசன் -7639757374 வழக்கறிஞர் சண்முகம் - 9791271949 - 9443913770

இப்படிக்கு, என்றும், தோழமையுடன்,
தன்மானம் சக்ரவர்த்தி.

 

5392_445853225494956_1918086368_n.jpg

- முகநூல் -

Posted

மக்களே மிக அவசரம்.

நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்தில் உண்ணா விரதம் இருக்கும் நமது உறவுகளை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்குவதாக தகவல் வந்துள்ளது. மாணவர்களின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை முதல் உண்ணா விரதத்தில் சுமார் 15 முன்னாள் இந்நாள் மாணவர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர். உறவுகளே நமக்கான தனி தமிழ் ஈழத்தை பெற நடத்தம் படும் போரட்டங்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு விடாமல் இருக்க உடனே தொடர்பு கொண்டு பேசுங்கள்

04142-262258-rammamoorththy
நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர்
நாகரிகமாக பேசவும்

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted
tamilgirlsssss.jpg
 
 

கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபக்‌ஷே படத்தை எரித்த மாணவிகள்

அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேரள மாணவர்களும் போராட்டட்தில் குதிக்க வேண்டும் என சட்ட கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.


சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்

இந்நிலையில் சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்திபுரம் பகுதியில் தீடீர் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.அப்போது காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.அப்போது காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்..காவல் துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை நிறுவனம் முற்றுகை

இந்நிலையில் கோவை சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள 'டம்ரோ' என்ற இலங்கையை சேர்ந்த பர்னிச்சர் நிறுவனத்துக்குள் நுழைந்து அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக பர்னிச்சர் வாங்க வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.இதனையடுத்து போராடத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

களமிறங்கிய பள்ளி மாணவர்களும் கைது

இதே போன்று ஓண்டிபுதூர் பகுதியில் திருச்சி சலையில் இலங்கையில் தனி ஈழத்துக்கு பொது வாக்ககெடுப்பு நடத்த கோரி மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இதே போன்று கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 30க்கும் சட்ட கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதியார் பலகலை கழக மாணவர்கள் 25 பேர் ஐந்தாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அவர்களுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதே போன்று கோவை சக்தி சாலையில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களும்,இன்போ டெக் பொறியியல் கல்லூரி மாணவர்களும் சத்தியமங்கலம் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கோவையில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Posted



தமிழ்நாட்டில் நடக்கும் போராட்ட செய்திகளை உடனுக்குடன்
லோயலோ கல்லுரி மாணவர்கள் வழங்கி கொண்டு உள்ளனர்

.https://www.facebook.com/tamilnaduhungerstrike

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவர்கள் போராட்டத்தை முடக்க முயல்வதா? மக்கள் புரட்சி வெடிக்கும்! தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

 

ramadoss.jpg

 
 

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குகாலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரிநிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து  பன்னாட்டு போர்க்குற்றவிசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் - தனித் தமிழீழம்அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம்பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி  வரும் திங்கட்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தைநடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன. 

இந்த நிலையில், அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தான் இந்தநடவடிக்கையை மாநில அரசு எடுத்திருக்கிறது. 

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர்ஜெயலலிதா,‘‘இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம்புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த  ஐக்கிய நாடுகள் சபையைஇந்தியா வலியுறுத்த வேண்டும் - இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்’’ என்று வலியுறுத்தினார். 

இதே கோரிக்கையை வலியுறுத்திதான் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.முதலமைச்சரின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுவதற்காக, மாணவர்களுக்குதமிழக அரசு ஆதரவு அளித்திருக்கவேண்டும். 

மாறாக கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மாணவர்களின்  போராட்டத்தால் சிறுவன்முறையோ அல்லது பதற்றமோ ஏற்படாத நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்கநினைப்பது  கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

இதன்மூலம் இலங்கைப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மீது வைத்திருந்தசிறிதளவு நம்பிக்கையைக் கூட ஈழத்தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும்இழந்துவிட்டனர்.

இலங்கை பிரச்சனையில், இனப்படுகொலையாளர்களை தண்டிக்க வேண்டும் என்றஉன்னத நோக்கத்திற்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயத்தைஉணர்ந்து, அவர்களின் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்குஆதரவாக மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், கல்லூரிகளை மூடுவதன் மூலம்மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது சீறிவரும் சுனாமியை செங்கற்களைகாட்டி தடுக்க நினைப்பதற்கு சமமானதாகும். கல்லூரிகளை மூடுவதன் மூலம்

மாணவர்களின் போராட்டத்தை முடக்க முடியாது; மாறாக இப்போராட்டம் மக்கள்புரட்சியாக வெடிக்கும் என்று தமிழக அரசை எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94347

  • கருத்துக்கள உறவுகள்
Posted
ப.சிதம்பரத்துக்கு கறுப்புக் கொடி
28721187.jpg
Posted

மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமானால் என்ன செய்யலாம் என்றும் தமிழக உறவுகள் ஆலோசனை கூறிக்கொண்டு செல்கிறார்கள். அதில் ஒன்று இது.

1) ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு பத்து மாணவர்களை தயார் செய்து அந்தந்த கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரியை திறக்க சொல்லி e-mail அனுப்புங்கள், Cc இல் அதன் பல்கலைகழகத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.

2) குறைந்தது 10 தந்தி கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்புங்கள்.

3) மேற்கூறிய இரண்டின் நகலையும் வைத்து கல்லூரியை திறக்க சொல்லி நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை முறையிடுங்கள்.

4) உங்களின் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் எங்கோ பதிவு செய்யப்படலாம் கவனம். உங்களுக்கு வரும் எந்த தொலைபேசி அழைப்பையும் பதிவு செய்து வைப்பது நலம்.

4) நீங்கள் போராடும் ஒவ்வொரு இடத்திலும் ரகசிய camera இருக்கலாம். உங்கள் camera வை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருங்கள், முடிந்தால் பதிவு செய்துகொண்டே இருங்கள்.

வழக்கறிஞர்களுடன் கலந்து ஆவன செய்யுங்கள்.
 

- முகநூல் -

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…அது பாருங்கோ…உங்களுக்கும் எனக்கும் கதியால் சண்டை…. அதுதான்…உங்களோடு பொருதுகிறேன்….🤣 என்னை பொறுத்தமட்டில் அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள். அந்த அரசியலினை விமர்சிக்கும் போது நீங்கள் collateral damage. அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.
    • சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா?  ஏன் கேட்கிறேன்  என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து  இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து  கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.    இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து  அடுத்தவன் வீட்டுக்குள்  என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂   இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின்  தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு  தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.   
    • தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு,  சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை  உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,  அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும்,   மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம்  செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1412326
    • யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர். யாழ்  மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில்  அவர்  அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ‘தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும்,  அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1412323
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.