Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் அடுத்தகட்ட போராட்டம் காங்கிரஸ்அரசிற்கு நெருக்கடிகொடுக்கும்!

 

 

தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட போராட்டம் மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழகத்தில் இருந்து எந்த விதவருமானமும் மத்திய அரசிற்கு கிடைக்காதவாறு போராட்டத்தை நடத்தவுள்ளதாக மாணவர் ஒருங்கிணைப்பாளர் சி.தினேஷ் தெரிவித்துள்ளார் (ஒலிவடிவம்)

மாணவர் போராட்டம் மிக எழுச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் சென்றுகொண்டிருக்கின்றது அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தாலும் தொடர்ந்தும் இந்தியா தமிழ்மக்களுக்கு எதிரான போக்கையே கொண்டுள்ளது.

இனப்படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சிதான் முழுக்கா காரணம் தெட்டத்தெளிவாகின்றது மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர் போராட்டமாக மாற்றியுள்ளார்கள்.

இன்றில் இருந்து தமிழகத்தில் இருந்து மத்திய அரசிற்கு செல்கின்ற எந்தவித வருமானமும் செல்லக்கூடாத வகையில் மாணவர்களும் பொதுமக்களும் தொழிலாளர்களும் அமைப்புக்களும் மத்தியஅரசிற்கு எந்திவித வரியினையும் செலுத்தவேண்டாம் என்று அறைகூவல் விடுக்கின்றோம் என்று மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இது காங்கிரஸ் அரசிற்கு மிகவம் நெருக்கடியினை உருவாக்கும் என்று நம்புகின்றோம் கடந்த நாட்களாக வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஒருகோடி மாணவர்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றோம் இதனை மத்தியஅரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது இது கண்டனத்துக்குரியதொன்று

புலம்பெயர் மாணவர்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆதரவினை தெரிவித்துக்கொள்கின்றார்கள் புலம்பெயர் மண்ணில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுங்கள் அரசியல்ரீயில் ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராடவேண்டும்

தமிழகத்தில் மாவட்டம்ரீதியில் ஒருங்கிணைத்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம் என்று தமிழக மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் சீ..தினேஷ் தெரிவித்துள்ளார்.

 

http://www.sankathi24.com/news/28265/64//d,fullart.aspx

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாலச்சந்திரன் அண்ணனை கொன்னுட்டாங்க, நாங்க ஏதாச்சும் செய்யனும்.. ஆவேசத்துடன் உருமிய சேலம் சிறார்கள்

சேலம்: சின்னப் பைன் என்றுகூட பாராமல், எங்க பாலச்சந்திரன் அண்ணனை கொன்று விட்டார்கள். எங்க அண்ணன் சாகும்போது வீரமாகத்தான் இறந்திருக்காரு. நாங்க ஏதாச்சும் செய்யனும் என்று ஆவேசத்துடன் கூறியபடி ராஜபக்சேவுக்கு எதிராக பாலச்சந்திரன் படம் பிடித்து போராட்டம் நடத்திய சிறார்களைப் பார்த்து சேலமே சிலிர்த்துப் போனது.

சலூன் கடை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தமிழகமே கொந்தளித்துப் போய் நிற்கிறது. ஐடி நிறுவனம் முதல் ஐடிஐ மாணவர்கள் வரை அத்தனை பேரும் தங்களது உணர்வுகளை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்தி நாங்கள் இருக்கிறோம் என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் சின்னஞ் சிறார்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட் சிறார்கள் திரண்டு நின்று தங்களது பிஞ்சுக் குரலில் வீராவேசமாக போட்ட கோஷத்தைப் பார்த்து சாலையில் சென்றோர் ஆச்சரியமடைந்து நின்று விட்டனர்.

 

22-idinthakarai-student-protest5-600.jpg

அனைவரும் பாலச்சந்திரன் படத்திற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு 'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள் என முழக்கமிட்டனர். இந்தக் குழந்தைகளை ஒருங்கிணைத்தவர் தமிழமுதன். இவரும் ஒரு சிறுவன்தான். அந்த உணர்ச்சிச் சிறுவன் கூறுகையில் எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது?

 

நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம் என்றார்.

இடிந்தகரையிலும் சிறார்கள் போராட்டம்

அதேபோல கூடங்குளம் அருகே இடிந்தகரையிலும் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான சிறார்கள் ,மாணவ மாணவியர் பாலச்சந்திரன் படத்தைத் தாங்கியும், முகமூடி அணிந்தபடியும் ஆவேசமாக கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினர்.

 

http://tamil.oneindia.in/news/2013/03/22/tamilnadu-kids-protest-against-rajapakse-salem-171997.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம்உருவாக்க பொது வாக்கெடுப்பு:மாணவர்கள் வலியுறுத்தல்

 

v-eelamanavarkuuddamaippu.jpg

 

மிழ் ஈழம் உருவாக்க பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகளை ஐ.நா. சபை மூலம் இந்தியா எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவ கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

மேலும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்றும் மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தள்ளது. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாணவ கூட்டமைப்பினர் இத்தகவல்களை தெரிவித்தனர்.

 

31ம் தேதி கெடு: இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31-ம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், தவறினால் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்றும் மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

 

பயனற்ற தீர்மானம் : மாணவர்கள் குற்றச்சாட்டு ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பயனற்றது, இலங்கை இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கான தனி நாடு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது.

 

அகதிகள் உண்ணாவிரதம்: இலங்கை அரசைக் கண்டித்து பல்வேறு அகதி முகாம்களை சேர்ந்தவர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். புழல், காவாங்கரை பகுதியில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்து வந்த அகதிகள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் 500க்கும் மேற்பட்ட அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

11வது நாளாக உண்ணாவிரதம்: இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் தொடர்ந்து 11-வது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக்கெடுப்பு நடைபெறவேண்டும், தனி ஈழம் அமைய வேண்டும், ராஜபக்ச போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த இலக்கை எட்டும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என உண்ணாவிரதப் பந்தலில் இருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

 

இளைஞர் தீக்குளிப்பு: தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னை நெற்குன்றத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்.

 

தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்றிரவு நெற்குன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட விக்ரம் என்ற இளைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபிடி, திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

 

இதையடுத்து கருத்தரங்கில் பங்கேற்ற அவரது நண்பர்கள் விக்ரமை உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

 

"தீக்குளிப்பு வேண்டாம்": வைகோ - தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த விக்ரம் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மதிமுக பொதுச் செயலாளார் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் யாரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.உயிரோடு இருந்து போராட வேண்டியவர்கள் இப்படி தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றும் வைகோ கூறியுள்ளார்.

 
 

தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு - அறிவிப்பு ;-
==================================


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஓன்று திரட்டி , தமிழீழ
பிரச்சினை உள்பட இனிவரும் அனைத்து வகையான சமுதாய பிரச்சினைகளுக்கும் தமிழக
மாணவர்கள் தங்கள் கையில் எடுத்து போராடுவார்கள்.. போராடுவோம்... இதை
கருத்தில் கொண்டு தான் - " தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு " என்ற மாபெரும்
அமைப்பு இன்று உருவாக்க பட்டுள்ளது... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம்
அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும்
அன்புடன் வரவேற்கிறோம்...

வருகிற
மார்ச் 31 -க்குள் தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா
விடில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து தமிழ் மாணவர்களையும் ஓன்று
திரட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவோம் என்பதை
தெரிவித்து கொள்கிறேன்... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம்
அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன்
வரவேற்கிறோம்...

தமது இரத்த சொந்தங்களுக்காக , அவர்களின்
இனபடுகொலைக்கு நியாயம் கேட்பதற்காக அறவழியில் போராடிய தமிழக மாணவர்களை -
"தமிழ் பொறுக்கிகள் " என்று கொச்சை படுத்திய சி . சுப்ரமணிய சுவாமியை மிக
கடுமையாக , வன்மையாக கண்டிக்கிறோம்... அவர் மன்னிப்பு கேட்காவிடில் , அவர்
தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக மிக பெரிய போராட்டம் மற்றும் கருப்பு
கொடி ஆர்பாட்டம் நடத்த படும்....

ஆசிய விளையாட்டு போட்டியில்
சிங்கள விளையாட்டு வீரர்கள் இடம்பெறுவதால் அந்த போட்டி தமிழகத்தில் நடை
பெறாது என்று தமிழக அரசு அறிவித்தது,

அதேபோல - சிங்கள விளையாட்டு
வீரர்கள் வருகிற IPL -2013, T20 விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் மட்டும்
அல்ல இந்தியாவில் எங்கு பங்கு கொண்டாலும் அவர்களுக்கு எதிராக மாபெரும்
கண்டன ஆர்பாட்டங்களும் , கருப்பு கொடி போராட்டங்களும் கட்டாயம் நடைபெறும்.

 

-------------------------

 

"உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம்"

--------

பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள் .


மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது
ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே
உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கட்சி விருப்பத்தை
மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா
புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே
.

மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும் .
அது
"அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்கம் " மாணவர் போராட்டம்
என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும்
முதலில் தூர விலக்கி வையுங்கள்.

போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது .


ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி அதை இப்போதைக்கு உலகத்தின்
அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு
வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு
மறுநாள் நடந்து விட கூடியது அல்ல.

இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் .

இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும்.

பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும் .

அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் .


எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை
எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் ,
உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை
பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே
!

நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் .
வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி
பெற்றான் என்று மாற்றுவோம் .

வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள்.

ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் .

உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் .

 

-----------------------------

 

தொடர்ச்சியாக
தமிழின விரோத போக்கை கடைபிடிக்கும்,மாணவர்கள் மற்றும் தமிழின
உணர்வாளர்களின் போராட்டங்களை கொச்சை படுத்தும் காங்கிரஸின் கைக்கூலி
மற்றும் சிங்களனின் கைக்கூலி ராமேஸ்வரத்தை திரு.தேவதாஸ் இன்று நடைபெற்ற
மீனவர் கூட்டத்தில் மாணவர் போராட்டத்தை மிக கேவலமாக
விமர்சித்துள்ளார்,மேலும் இந்த போராட்டங்கள் மற்றும் புத்த பிட்சுக்கள்
தாக்கப்பட்ட காரணத்தினால் தான் இன்னும் மீனவர்களை விடுவிக்கவில்லை என்றும்
மீனவர்களை திசை திருப்புகிறார்,எனவே அனைவரும் ஜனநாயக ரீதியில் தங்கள்
எதிர்ப்பை பதிவு செய்து இது போன்ற சமூக மற்றும் இனத்ரோகிகளை செயலிழக்க
செய்வோம்..அவருடைய தொடர்பு எண்-9443131101

 

--------------------------------

-முகநூல்-

Edited by சகானா

77285050.jpg28130047.jpg

  • கருத்துக்கள உறவுகள்
crickettttttttttt.jpg

நேற்றைய மதுரை மாணவர் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ்.

பெரியார் பேருந்து நிலையத்திற்கு ஒரு சவாரிக்காக வந்து இருந்தவர், மாணவர்

போராட்டத்தை கண்டவுடன் தன்னையும் அந்த போராட்ட்டத்தில் இணைத்து கொண்டார்.

ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கோஷங்களை கடுமையாக எழுப்பி வந்தார்.

உணர்ச்சி மேலிட அவர் கூறியது

"தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு

இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா

நிம்மதியா இருக்கு."

"என் மகன் காலேஜுல படிக்குறான்.... போடா போய் போராடு அப்படின்னு அனுப்பிட்டேன்.."

"இனிமேல் மதுரைல போராட்டம் நடக்கும் போது போன் போடுங்க .. நேரம் கிடைக்கும் போது கலந்துக்குறேன்."

"எப்பாடு பட்டாவது ஈழ மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்க வைக்கணும்யா"

அவரை பார்க்கும் போது இப்படி எத்தனை பேர் உலகமெங்கும் மனம் குமுறி கலங்கி உள்ளனரோ என தோன்றியது.

அந்த ஆட்டோ ஓட்டுனரின் மொபைல் எண் : 9894038560

அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.

44039276.jpg

  • கருத்துக்கள உறவுகள்
poraddammmmmmmmmmf.jpg
 
 
 
 

 

ராஜபக்சேவை தூக்கிலிடு! 

பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்! 

மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.

சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.

ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள்' என முழக்கமிட்டனர். 


 

 

குழந்தைகள் ஒருங்கினைப்பாளர் சிறுவன் 'தோழன் தமிழமுதன்' நம்மிடம் பேசியபோது, "எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது? 

நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமாய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.

கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்தி கழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=23319%3A2013-03-21-05-38-29&catid=1%3Aarticles&Itemid=264

 


 

இன்றைய நமது நிலைப்பாடுகள்:

தனித் தமிழீழம் என்பது மட்டுமே ஈழத் தமிழ் மக்களின் துயரற்ற, கண்ணியமான‌ எதிர்கால வாழ்விற்கான நிரந்தரத் தீர்வு. இந்த கருத்தைப் பரந்த அளவில் அனைத்து மக்களிடமும் கடந்த சில நாட்களில் நாம் கொண்டு சென்றிருக்கிறோம் – வெற்றிகரமாக.

ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனின் முன்பாக மார்ச் 21 ஆம் தேதியன்று ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வுரிமை குறித்து அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவரவுள்ளது. இந்தத் தீர்மானம் ஒன்றுபட்ட இலங்கை என்ற நியாயமற்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே அதனை நாம் நிராகரித்துள்ளோம்.

அமெரிக்க அரசினைப் போலவே இந்திய அரசும், தமிழக அரசும், தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளும், பல்வேறு ஊடகங்களும் ஒன்றுபட்ட இலங்கை என்பதன் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றன. எனவே அவற்றையும் தவறானவை என்று நாம் நிராகரித்துள்ளோம்.

நான்காம் ஈழப்போரின் போதும், அதன் முன்னரும், பின்பும் இலங்கையின் சிங்கள அரசால் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனை விசாரிக்கக் கால வரம்பிற்குட்பட்ட சார்பற்ற சர்வதேச விசாரணை அவசியம் என்பது நமது கோரிக்கை. நமது இந்தக் கோரிக்கையை இன்று தமிழக அரசும், தி.மு.க போன்ற அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஐ.நா.மனித உரிமைக் கமிஷன் முன்பாகக் கொண்டு வரப்படவுள்ள அமெரிக்க அரசின் தீர்மானமும், மத்திய அரசின் நிலைப்பாடும் சர்வதேச விசாரணை தேவையில்லை என்கின்றன. இனப்படுகொலை குறித்த விசாரணையை இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசே நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று அவை கூறி வருகின்றன. 2009 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த திரு.சரத் டி சில்வா அவர்கள் போருக்குப் பின்னர் தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட முள்வேலி முகாமைப் பார்வையிட்ட போது கூறிய உண்மையை அவர்கள் ஏனோ மறந்து போய்விட்டார்கள். “இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம்; இந்த நாட்டின் நீதி அமைப்பில் அவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை” என்பதுவே திரு.சில்வாவின் கூற்று.

ஐ.நா.சபை மற்றும் அமெரிக்க அரசின் மேற்பார்வையில் 2011 ஜனவரி 9-15 தேதிகளில் சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து செல்வதனைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தெற்கு சூடானைச் சேர்ந்த 98.83% மக்கள் பிரிந்து செல்வதுதான் தீர்வு என்று வாக்களித்தனர். 2011 ஜூலை 9 ஆம் தேதியன்று தெற்கு சூடான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதுபோலவே 1993 ஏப்ரலில் எத்தியோப்பியாவில் இருந்து எரிட்ரியா தனி நாடாகப் பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து சென்றது. இந்த முன்னுதாரணங்களின் அடிப்படையிலேயே இலங்கையில் இருந்து தமிழ் ஈழம் பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பை ஈழத் தமிழ் மக்களிடம் சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கையின் மீதான தமது கருத்துக்களை இன்றுவரை தமிழக அரசும், தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகளும் வெளிப்படையாக முன்வைக்க மறுத்து வருகின்றன.

இன்றைய சூழ்நிலை:

கல்லூரிகளுக்கும், விடுதிகளுக்கும் விடுமுறை அறிவித்து விட்டால் நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்ற தமிழக அரசின் கணக்கு தவறாகியுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்ட பின்னரே நமது போராட்டம் பரந்து விரிந்துள்ளது.

ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனில் மார்ச் 21 ஆம் தேதியன்று அமெரிக்க அரசின் தீர்மானத்தின் மீது நடக்க உள்ள வாக்கெடுப்பிற்குப் பிறகு நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்பதே அரசு மற்றும் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நமது போராட்டத்தினைக் கண்டு தமிழக அரசியல் கட்சிகள் பொதுவான அச்சத்தைக் கொண்டிருக்கின்றன. நமது கோரிக்கைகளுக்கு உடன்படாது போனால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமக்குப் பின்னடைவுகள் ஏற்படலாமோ என்ற அடிப்படை அச்சம் அவற்றிற்கு இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் கூட, அவை தனி ஈழம் தொடர்பான பொது வாக்கெடுப்பு குறித்த தமது நிலைப்பாட்டை இன்றளவும் மாற்றத் தயாராயில்லை. என்ன காரணத்திற்காகவோ, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினை முதலில் ஆதரித்ததைப் போலவே நமது போராட்டத்திற்கும் தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. மார்ச் 21-ற்குப் பிறகு இந்த நிலைப்பாடு தொடருமா என்பது தெரியாது.

காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் இடது கம்யூனிஸ்டு போன்ற தேசியக் கட்சிகளும் நமது கோரிக்கைகளை இன்றளவும் உதாசீனப்படுத்தி வருகின்றன. இந்து பத்திரிகையோ நமது நிலைப்பாடு தவறானது என்று தலையங்கம் எழுதியுள்ளது.

ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்க அரசிற்கு இன்றளவும் நாம் ஒரு பொருட்டாக இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை.

இனப்படுகொலைக்கான விசாரணை குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலேயே இலங்கைக் கடற்படையானது தமிழக மீனவர்களை அடித்து இழுத்து சென்றிருக்கிறது. இது குறித்து மத்திய அரசானது வழக்கம் போலவே எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை.

எனவே, சில அடிப்படைக் கேள்விகளை நாம் இங்கு நம்மிடமே எழுப்ப வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
லட்சக் கணக்கில் பெருந்திரளாக இன்று நாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தினை நம்மால் எவ்வளவு காலத்திற்குத் தொடர முடியும்?

நாம் முன் வைத்துள்ள கோரிக்கைகளை பரந்த அளவில் பிறருக்குத் தெரிவிப்பதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். ஆனால், அவற்றை நம்மால் நிறைவேற்றிட முடியுமா? போராடுவதற்கான சூழ்நிலையை அரசும், கல்வி நிறுவனங்களும் அடைத்திடும் பட்சத்தில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றிட நாம் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச நடவடிக்கைகள் யாவை?

அரசுகளின் செயல்பாடுகளும், நாமும்

இலங்கையின் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை மத்திய அரசு துரிதமாகப் பெற்றுத் தரவேண்டும் என்ற தீர்மானத்தைத் தமிழக சட்டசபை 2011 ஜூன் 8 ஆம் தேதியன்று இயற்றியது. மேலும், போர்க் குற்றங்களை செய்த குற்றவாளிகளின் பெயர்களை ஐ.நா.சபையை வெளியிட வைக்க வேண்டும் என்றும் அது மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு இன்றளவும் கண்டு கொள்ளவேயில்லை. மாறாக, இலங்கை அரசுக்கு உதவிடும் பல்வேறு நடவடிக்கைகளை அது பின்னர் மேற்கொண்டது.

மாநில மக்களவையின் தீர்மானத்திற்கே செவி சாய்க்காத மத்திய அரசு மாணவர்களான நமது (கால வரம்பிற்குட்பட்ட) போராட்டத்திற்கு எவ்வாறு செவி சாய்க்கும்?

2009 ஜனவரி 29 அன்று நெருப்பிட்டு வீர மரணமடைந்த முத்துக்குமாருக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியானது அரசு, கட்சிகள் மற்றும் ஊடகங்களின் தந்திரத்தால் நீர்த்துப்போன நிலையை அடைய நேரிட்டதைப் போல நமது போராட்டமும் நீர்த்துப் போகும் நிலையை எட்டாது என்பதற்கு உத்திரவாதம் உண்டா?

இதுபோன்ற தடைகளையும், இடர்பாடுகளையும் மீறி நம்மால் நமது கோரிக்கைகளை வெற்றி பெறச் செய்ய முடியுமா?

முடியும் என்றுதான் நம்மால் கருத முடிகிறது.

வெற்றிக்கான வழி என்ன?

அமெரிக்க அரசிற்கும் மத்திய அரசிற்கும் இடையில் உள்ள இன்றைய உறவைப் புரிந்து கொண்டால்தான் இதற்கான வழியினைக் கண்டறிய முடியும்.

2005 ஜூலை 18 ஆம் தேதியன்று இந்தியாவும் அமெரிக்காவும் 123 ஒப்பந்தம் எனப்படும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை முன் வைத்தன. இந்தியாவில் இயங்கிவந்த அணு மின் நிலையங்களை ராணுவ மற்றும் மின்சார மின் நிலையங்களாக வகைப்படுத்த இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இதன் பிறகு வந்த காலகட்டத்தில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்துமே அமெரிக்க அரசால் இயக்கப்படுபவையோ என்ற அளவிற்கு சந்தேகத்தை எழுப்பின. 1987 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கையின் துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் இந்திய அரசின் அனுமதியின்றி பிற நாடுகளின் இராணுவங்கள் உபயோகிக்க இலங்கை அரசு அனுமதி வழங்க முடியாது. ஆனால் 2007 மார்ச் 5 ஆம் தேதியன்று இலங்கை அரசும் அமெரிக்க அரசும் இதற்காக ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இதுகுறித்து இந்திய இராணுவ நிபுணர்கள் கவலை தெரிவித்தும் கூட ராஜீவ் வழி வந்த காங்கிரஸ் அரசு இதனைக் கண்டு கொள்ளவேயில்லை. இலங்கையின் மீது தனக்கிருந்த ஆளுமையை அமெரிக்க அரசிடம் முழுமையாக விட்டுக் கொடுப்பதில் அதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. இதுவே இலங்கையில் இந்திய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையில் ஏற்பட்ட கூட்டின் துவக்கம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பாராளுமன்ற ஒப்புதலை வாங்க 2008 ஜுலை 10 ஆம் தேதியன்று காங்கிரஸ் அரசு மேற்கொண்ட வரலாறு காணாத கேலிக்கூத்துகள் அமெரிக்க அரசினை மத்திய அரசு எவ்வாறு கருதுகிறது என்பதனைத் தெளிவு படுத்தியது. இந்திய மக்களின் நலனைக் காப்பதை விட அமெரிக்க அரசின் நலன்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுவே தனது கடமை என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்பதுபோல இதன்பின்னர் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஆக, அமெரிக்க அரசின் ஆளுமையின் கீழ் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இயங்குகிறதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.

2009 மே 13 ஆம் தேதியன்று பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடந்தது. மத்தியில் காங்கிரசுக்குப் பதில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திடும் பட்சத்தில் இதுகாறும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் காங்கிரஸ் அரசால் விட்டுக் கொடுக்கப்பட்ட இலங்கையின் மீதான தனது ஆளுமையை பா.ஜ.க. ஒருவேளை கோரினால் என்ன செய்வது? அப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக பா.ஜ.க.வை முன்கூட்டியே எச்சரிப்பதற்காக மே 15 ஆம் தேதியன்று அமெரிக்கக் கப்பற்படைத் தளபதி அட்மிரல் கீட்டிங் இந்தியா வந்தார். “இலங்கைக்குள் எவரும் வரலாம்; போகலாம். சீனா வரக் கூடாது என்று இந்தியா சொல்லக்கூடாது. அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகளை அது தனியாகவே சமாளித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் உதவி கிடைக்காது” என்று எச்சரித்தார். மே 17 ஆம் தேதியன்று மீண்டும் காங்கிரசே ஆட்சியைப் பிடித்ததனால் அந்த எச்சரிக்கைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

எனவேதான் அமெரிக்க அரசின் முழு ஆளுமையின் கீழ்தான் மத்திய அரசு இயங்கி வருகிறது என்று நாம் கருத வேண்டியுள்ளது.

அப்படிப்பட்ட மத்திய அரசிடம்தான் அமெரிக்க அரசின் தீர்மானத்தை மாற்றி அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவரும் மனு கொடுத்துள்ளார்கள். இந்த மனு வழக்கம்போல கண்டு கொள்ளப்பட மாட்டாது என்பது உறுதி.

எனவே, இப்படிப்பட்ட மத்திய அரசிடம் நமது கோரிக்கைகளை முன் வைப்பது என்பது நமது நேரத்தை விரையமாக்கும் செயலாக இருக்குமேயொழிய பயனுள்ள ஒன்றாக இருக்க முடியாது.

எனவே, நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசிடம் வைப்பது மட்டுமே நமக்குள்ள ஒரே வழியாக உள்ளது.

மத்திய அரசே நம்மைக் கண்டுகொள்ளாதபோது அமெரிக்க அரசா நம்மைக் கண்டுகொள்ளப் போகிறது என்ற கேள்வி எழும்.

மத்திய அரசையாவது தேர்தலின்போது மாற்றிட முடியும். அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை நமது பெருந்திரள் போராட்டங்களாலும், அர்ப்பணிப்புகளாலும் எவ்வாறு மாற்ற முடியும்? ஈராக் மீதான படையெடுப்பைக் கண்டித்து அமெரிக்காவில் நடந்த பெருந்திரள் மக்கள் போராட்டங்களையே கண்டு கொள்ளாத அமெரிக்க அரசா நமது போராட்டங்களைக் கண்டு கொள்ளப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது.

நமது போராட்டம் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கானது; அது தொடர்பான அமெரிக்க தீர்மானம் பற்றியது. எனவே அதனை எரிக்கின்ற, பாடையில் ஏற்றி புதைக்கின்ற சிம்பாலிக் போராட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். ஆனால், எரிக்கப்படுவது ஈழ மக்களின் வாழ்வுரிமைக்கான அமெரிக்கத் தீர்மானமாக இருக்கும்போது அதனை அமெரிக்கா கண்டுகொள்ளப் போவதில்லை. ஏனென்றால் இதில் அமெரிக்காவிற்கு இழக்க ஒன்றுமில்லை.

இந்தத் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக இந்தியாவைக் கட்டிப் போட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தக நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றை நாம் எதிர்க்கும் பட்சத்தில் அமெரிக்காவிற்கு அது இழப்புகளை – அதாவது சந்தை இழப்புகளை – கொண்டு வருவதாக அமையும்.

“தெற்கு சூடானை சூடானில் இருந்து பிரிப்பதற்கான பொது வாக்கெடுப்பினை நடத்தியதைப் போல தனித் தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவோம்; தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச அமைப்புகளின் மூலம் விசாரித்து தண்டனை அளிப்போம்” என்ற நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டு தனது பழைய தீர்மானத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றி அமைக்காவிட்டால் மாற்றி அமைக்கும் வரை நமது வாழ்விலிருந்து அமெரிக்க நிறுவனங்களைத் துடைத்து எறிவோம்.

கின்லே, அக்குவாபினா, ஸ்ப்ரைட், பெப்சி, கோக்கோ-கோலா, லேஸ் சிப்ஸ், ஃபோர்ட், செவர்லே கார்கள், வால்மார்ட் போன்றவற்றைப் புறக்கணிப்போம்.

அதுபோலவே நமது நாட்டையும், நமது வளங்களையும் கட்டிப்போட முனையும் அனைத்து அமெரிக்க ஒப்பந்தங்களுக்கும் பாடை கட்டுவோம்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான தீர்வு என்ற தீர்மானத்திற்குப் பாடை கட்டும்போது கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்க அரசானது இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தங்கள். கின் லே தண்ணீர் போன்ற பொருட்கள் ஆகியவற்றிற்குப் பாடை கட்டும்போது அதிர்ச்சி அடையும்.

இந்தப் போராட்டங்கள் அனைத்தையும் நாம் நம் கல்லூரிகளுக்குச் சென்றுகொண்டே மேற்கொள்ள முடியும் என்பதால், இவ்வகைப் போராட்டத்தினை மார்ச் 21 –ற்குப் பிறகும் கூட நம்மால் செவ்வனே நடத்திட முடியும்.

இந்த நடவடிக்கைகளே நம்மைச் சுற்றிப் படர்ந்துள்ள இருளை அகற்றும் தன்மையைக் கொண்டுள்ள முதல் நடவடிக்கைகளாம்.

இந்த நடவடிக்கைகளையே இனி நாம் கை கொள்வோம்.

நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

- கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள்

 

Edited by Queen

ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடுவோம் மத்திய அரசுக்கு மாணவர் கூட்டமைப்பு.

இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ஆம்

தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன்

பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜனாதிபதி மாளிகையை

முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும்தமிழீழ விடுதலைக்கான மாணவ

கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைக்கான

மாணவர் கூட்டமைப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்

சந்திப்பை நடத்தியது. அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்

பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

'எங்கள் கோரி்க்கைகள் எதுவுமே சாத்தியம் இல்லாதவை அல்ல. நிறைவேற்ற

முடியாதவையும் அல்ல. இன அழிப்பு, போர்க் குற்றம், சுதந்திரமான பன்னாட்டு

நீதி விசாரணை ஆகிவற்றை கொண்டுவரும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டிருந்தால்,

கண்ணிமைக்கும் நேரத்தில் அதனால் இந்தத் தீர்மானங்களைக் கொண்டு வந்திருக்க

முடியும்.

மாபெரும் எங்கள் போராட்டத்தை அற்பப் புழுவைப்போல மத்திய

அரசு நினைத்துவிட்டது. முள்ளிவாய்க்காலுக்கு முன் பல வாக்குறுதிகளைக்

கொடுத்து ஏமாற்றியதுபோல இப்போதும் ஏமாற்றிவிட்டது. தமிழக மக்களுக்கு

துரோகம் இழைத்துவிட்டது. இந்திய அரசை ஒதுபோதும் மன்னிக்க முடியாது.

எட்டு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசுக்கு

நாங்கள ஏன் மதிப்பளிக்க வேண்டும். உங்களுக்கு இனியும் நாங்கள

ஒத்துழைக்கப்போவது இல்லை.

இந்திய விடுதலைப் போரில் வெள்ளையர்

ஆட்சிக்கு எதிராக ஒத்துழைக்க முடியாது என்று காந்தியடிகள் தொடங்கிய

ஒத்துழையாமை இயக்கத்தைப்போல, ஒரு தீவிர இயக்கம் தொடங்க வேண்டிய கட்டாயத்தை

மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது.

இனி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய எந்த வரியையும் செலுத்த வேண்டும். எந்தக்

கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். செலுத்தவும் கூடாது என்பதை வலியுறுத்தி

மக்களிடம் பிரசாரம் செய்ய இருக்கிறோம். ஊடகங்களும் எங்கள் கோரிக்கைகளை

மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தப் போராட்டம்

தொடர் போராட்டமாக முன்னேறும். இதில் மாணவர்களின் ஒற்றுமைதான் மையம். ஈழத்

தமிழ் மக்களுக்கு தாயக அதிகாரம் பெற்றுத் தரும் வரையில் மாணவர் போராட்டம்

தொடரும்.

மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ஆம் தேதிக்குள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த

வேண்டும். தவறினால் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு

போராட்டம் நடைபெறும் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்

தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

599062_596922276986468_1061291000_n.jpg

 

150807_596908030321226_414219041_n.jpg

 

480766_596908076987888_1646591111_n.jpg

59444028.jpg

  • கருத்துக்கள உறவுகள்
mmmmmmmmmmmmmr.jpg
 
அன்று தமிழக மாணவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து போராடினார்கள் . அதனால் நம் மொழியை இன்றளவும் நம்மால் காக்க முடிந்தது . அந்த போராட்ட வரலாற்றை தமிழக பாட திட்டத்தில் இருந்து அடியோடு மறைத்தது தமிழக அரசு. அதனால் மாணவர் போராட்ட வரலாறே பல மாணவர்களுக்கு தெரியாமல் போனது . உயிர் நீத்த பல ஈகிகளை இன்றளவும் யாரும் நினைவு கூறவில்லை . 

ஆனால் அதையும் தாண்டி தமிழக மாணவர்களின் உணர்வு இன்று தட்டி எழுப்பப் பட்டு உள்ளது . இன்று வீழ்ந்த நமது இனத்தை காக்க மாணவர்கள் போராட தொடங்கி உள்ளனர் . நிச்சயம் இம்முறையும் மாணவர்கள் வெல்வார்கள் . 

நாளைய தமிழகமும் இனி மாணவர்கள் கைகளில் தான் உள்ளது . மாணவர்களுக்கு நாம் துணை நிற்போம் .
 
fb
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடை பெற்ற ஈழத் தமிழர் உண்ணாவிரத போராட்டம்

 
599667_596941223651240_1797065874_n.jpg


இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு.
 
74485_596955203649842_952026221_n.jpg


Loyolahungerstrike

கனடாவில் யோர்க் பல்கலைக்கழ மாணவர் உண்ணாவிரதம்
**********************************************************

தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கனடாவிலுள்ள யோர்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு (YUTSA) உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்படி பல்கலைக்கழகத்தில் நடத்திக்கொண்டிருக்கின்றது. இலங்கையில் நடைபெற்றுவரும் இன அழிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கு, தமிழ்நாட்டு மாணவர்களுடன் இணைந்து தாமும் சுதந்திர பன்னாட்டு விசாரணைக்கும், தமிழர் பகுதியில் இடைக்கால நிர்வாக அலகு ஒன்றினை அமைப்பதற்கும், தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கும் கோரிக்கை வைப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 

526920_596965093648853_519594433_n.jpg



  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துரை அனைத்து மாணவர்கள் சார்பாக நாளை வெற்று அமெரிக்க தீர்மான எரிப்பு போராட்டம்

இடம் - மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்

நேரம் - காலை 10 மணி

அனைத்து கல்லூரி மாணவர்களும் தமிழீழ ஆதரவாளர்களும் கலந்து கொண்டு ,தொடர்ந்து தமிழ் ஈழத்தில் சர்வேதேச நீதி விசாரணை நடத்தவும் , பொது வாக்கெடுப்பு நடத்தவும் ,தனி தமிழ் ஈழமே தீர்வு என்றும் ஆதரவளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்

தொடர்புக்கு

தோழர் - பகவான்தாஸ் 7200998864  

 

வணக்கம் நண்பர்களே,

திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு நகரில் அனைத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக இலங்கை மற்றும் இந்திய அரசைக் கண்டித்து வரும் 24ம் தேதி (ஞாயிற்றுகிழமை) மாலை 2.30மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

மாணவர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அனைவரும் தவறாமல் இப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: செய்யாறு, ஆரணி கூட்டு சாலை.

இப்படிக்கு: தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , செய்யாறு கிளை.

தொடர்புக்கு: முகிலவன் (8144953232), ரோகேஷ் (9710463579), செல்வகுமார் (9566765727)

உங்கள் நண்பர்கள் அனைவரையும் இப்பேரணிக்கு அழையுங்கள்.

http://www.facebook.com/events/354778847973676/?ref=25

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து தமிழ் மாணவர்களையும் ஓன்று திரட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவோம்

மார் 22, 2013
 
 
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஓன்று திரட்டி , தமிழீழ பிரச்சினை உள்பட இனிவரும் அனைத்து வகையான சமுதாய பிரச்சினைகளுக்கும் தமிழக மாணவர்கள் தங்கள் கையில் எடுத்து போராடுவார்கள்.. போராடுவோம்... இதை கருத்தில் கொண்டு தான் - " தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு " என்ற மாபெரும் அமைப்பு இன்று உருவாக்க பட்டுள்ளது... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்...

வருகிற மார்ச் 31 -க்குள் தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விடில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து தமிழ் மாணவர்களையும் ஓன்று திரட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்...

தமது இரத்த சொந்தங்களுக்காக , அவர்களின் இனபடுகொலைக்கு நியாயம் கேட்பதற்காக அறவழியில் போராடிய தமிழக மாணவர்களை - "தமிழ் பொறுக்கிகள் " என்று கொச்சை படுத்திய சி . சுப்ரமணிய சுவாமியை மிக கடுமையாக , வன்மையாக கண்டிக்கிறோம்... அவர் மன்னிப்பு கேட்காவிடில் , அவர் தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக மிக பெரிய போராட்டம் மற்றும் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்த படும்....

ஆசிய விளையாட்டு போட்டியில் சிங்கள விளையாட்டு வீரர்கள் இடம்பெறுவதால் அந்த போட்டி தமிழகத்தில் நடை பெறாது என்று தமிழக அரசு அறிவித்தது,

அதேபோல - சிங்கள விளையாட்டு வீரர்கள் வருகிற IPL -2013, T20 விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் எங்கு பங்கு கொண்டாலும் அவர்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டங்களும் , கருப்பு கொடி போராட்டங்களும் கட்டாயம் நடைபெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

p7a.jpg

 



p7.jpg
 

  • கருத்துக்கள உறவுகள்

Loyolahungerstrike

21 நிமிடங்களுக்கு முன்பு ·

முக்கிய செய்தி; தமிழீழ்ம் கோரியும் மாணவர் போரட்டத்தை வலுசேர்க்கவும் எத்திராஜ் கல்லுரி மாணவி தற்கொலை செய்து கொண்ட்தாகவும், இன்று மாலையே அடக்கம் செய்ய காவல் துறை வர்புறுத்துவதாகவும், மாணவர்கள் விரைந்து வருங்கள் என்றும் எனக்கு திரு மணி, தமிழ் உணர்வாளரிடம் இருந்து செய்தி வ்ந்துள்ளது. இடம் வியாசர்பாடி எண் 9840480273

  • கருத்துக்கள உறவுகள்

நீயா நானா கோபி கும், ஸ்டார் விஜய் தொலைகட்சிக்கும் ஒரு வேண்டுகோள் :

பல்வேறு சமூக பிரச்சனைகளையும் , துயர்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்த நீயா? நானா? நிகழ்ச்சியில் தமிழ் ஈழ விடுதலை மற்றும் அங்கு நிகழ்ந்த இனப்படுகொலை பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டுகிறேன். வழக்கம் போல் இல்லாமல் ஒரு மற்றுமுறையை நான் தங்களுக்கு சொல்ல விளைகிறேன். ஆய்ந்து பார்த்து ஆவன செய்யவும் வேண்டுகிறேன்.

ஒரு பக்கம் மாணவர்களையும், மறுபக்கம் நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைய ும் அழைத்து ஒரு வரலாற்று நிகழ்வை நாம் பதிவு செய்தாகும் தருணத்தில் இருப்பதாய் நான் உணர்கிறேன்.

சிலருக்கு ஐயம் எழக்கூடும் ! எப்படி பல்வேறு இயக்கங்களின் , கட்சிகளின் பிரதிநிதிகளை அழைப்பது என்று!

அண்ணாதுரை போன்றோரெல்லாம் மக்கள் மன்றத்தில் பலமுறை தங்கள் கருத்துக்களை, மாறுபட்ட நிலைபாட்டை எல்லாம் மக்களுக்கு தெளிவு செய்த வரலாறும் இங்குண்டு என்பதனை நினைவுபடுத்த கடமை பட்டுள்ளேன். இதற்கான அழைப்பை தனியே மட்டும் அறிவிக்காமல் பொதுவாக ஊடகம் வாயிலாக வெளியிடவும்.

மக்கள் நலம் நாடும்அரசியல்வாதிகள் தானாக முன் வந்து இந்த மக்கள்மன்றதில் தங்கள் குரலை பதிவுசெய்யட்டும ். மக்கள் நலம் எண்ணாதபோலி அரசியல்வாதிகள் பற்றி நமக்கு கவலை வேண்டாம். மன்றத்தில் மாணவர்கள் எல்லோரும் அரசியல் நிலை உணர்ந்து, அவை நாகரிகத்தை பின்பற்றி நடக்கவும் வேண்டுகிறேன். வழக்கம் போல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மனிதஉரிமை ஆர்வலர்கள்,சட்ட நிபுணர்களை அழைத்தாள் அது விவாதத்தை மேலும் வலு படுத்தும் என நம்புகிறேன்.

இதெல்லாம் சாத்தியம் தான? என எண்ணாமல் இதுவும் சாத்தியம் என ஒரு மாற்று புரட்சியை நாம் செய்து காட்டுவோம். எங்கோ உள்ள சேனல் 4 தொலைகாட்சிஎல்லா ம் எம் இனத்தை காக்க பல நிலைபாட்டை எடுத்துள்ளது. நம் பங்கிற்கு நாமும் களத்தில் பங்கெடுப்போம்.த மிழரை, மனிதனின் உரிமையை காப்போம்.

Fb

  • கருத்துக்கள உறவுகள்

:( கவலை தரும் செய்தி சுண்டல்

ஒரு யோசனை.

 

579930_548305251866795_1929396164_n.jpg

 

நம் கையில் இருக்கும் அனைத்து ரூபாய் நோட்டிலும் இதை போல “தமிழீழம் வேண்டும்” என்ற வாசகத்தை எழுதி பரவசெய்யலாம்...

அதுவே ஆங்கிலத்தில் “WE WANT TAMIL
EELAM BY TAMILAN” என்று எழுதிவிட்டால் அது நாடு முழுவதும் பரவும். செய்வது செய்யாதது உங்கள் விருப்பம். நான் செய்ய தொடங்கிவிட்டேன்.

இந்த யோசனையை தந்த நண்பர்க்கு மிக்க நன்றி.

 

(முகநூல்)

 

பி.கு: ஹிந்தி தெரிந்தவர்கள் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் எழுதலாம்.

 

இந்தியாவில் இவ்வாறு செய்யலாம். வெளிநாடுகளில் இவ்வாறான செயல்கள் செய்தால் பிரச்சினை என்று நினைக்கிறேன். :unsure:  யாரும் வெளிநாட்டு நிலவரம் தெரிந்தவர்கள் இதுபற்றி கூறுங்கள். :rolleyes:

Edited by துளசி

இந்த பதிவை கண்டும் காணாமல் செல்லும் சகோதர்களே கொஞ்சம் கவனியுங்கள் :

மாணவர்கள் நடத்தும் பட்டினி போராட்டம் அரசியலுக்காகவோ , பணத்திற்காகவோ இல்லை...! அவர்களிடம் இருக்கும் தமிழின உணர்வில் கொஞ்சமாவது வேண்டாமா நமக்கு....!

 

அவர்களுக்கு இணையத்தின் மூலமாவது உங்கள் ஆதரவை அளியுங்கள் .. எகிப்தில், துனுசியாவில் இணையத்தின் மூலமாக ஒரு மாற்றதை ஏற்படுத்தும் போது நம்மால் ஏற்படுத்த முடியாதா..? இன்னும் தூங்கினால் நம் மீனவர்கள் செத்துக்கொண்டும் , ஈழ தமிழர்கள் சித்ரவதைகளை அனுபவித்துக்கொண்டும் தான் இருப்பார்கள்......!

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள்...! முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்....! மாணவர் சக்தி வெற்றி பெற்றே தீரும்.....!

 

209013_443744892361209_1666581293_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

kanthinodduuuuuuuuu.jpg

fb

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.